முதலில் தபஸ்ஸு செய்ததை 7 தசகம் –
இதில் ஒவ்வொரு இரவு பொழுதும் -1000 சதுர் யுகம் -மீண்டும் எழுந்து -நினைவு படுத்த –
கல்பம் தொடங்கும் போது தபஸ்ஸு இதில்-பிருத்வீ சந்தஸ்ஸூ பிருத்வீ ஸ்ருஷ்டி என்பதால் என்று ரசிக்கலாம்
இதே போல் ஸ்ரீ மத் பாகவதத்தில் உண்டே
—————
ஸிதிதஸ் ச கமலோத்பவஸ் தவ ஹி நாபி பங்கே ருஹே
குதஸ் விதிதம் அம்புதா வுதித மித்ய நா லோகயன்
ததீக்ஷண குதூ ஹலாத் பிரதி திஸம் விவ்ருத்த நநஸ்
சதுர் வதன தா மகாத் விகச தஷ்ட த்ருஷ்ட் யம்புஜம் -1-
தங்களுடைய திரு நாபிக் கமலத்தில் இருந்து உண்டான அந்த பிரமன் இந்தத் தாமரை எங்கு இருந்து
உண்டானது என்று எட்டுத் திசைகளிலும் தேடினார்
அப்போது விகாஸமான எட்டுக் கண்களுடன் கூடிய நான்கு முகங்களையும் பெற்றார்
ஐந்து தலைகள் -ஒரு கல்பத்தில் இருந்து -அத்தை ருத்ரன் கிள்ளி எறிந்தான்
———-
மஹார்ணவ வலி கூர்ணிதம் கமலமேவ தத் கேவலம்
வி லோக்ய தத் உபாஸ்ரயம் தவ தனும் து நா லோகயந்
க ஏஷ கமலோதரே மஹதி நிஸ் சஹாயோ ஹ்யஹம்
குதஸ் விதி தம்புஜம் சமஜ நீதி சிந்தா மகாத் –2-
கேவலம்-உந்தித் தாமரை மட்டுமே பார்த்தார் -மஹார்ணவ-பிரளய மஹா ஆர்ணவம்
அந்தத் தாமரை ஜலத்தில் அசைந்தது -அந்த மலருக்கு காரணமான உனது அழகிய திரு உருவத்தை
அவரால் காண முடியவில்லை
இந்தத் தாமரையில் துணை இல்லாமல் தனியாக இருக்கிறேனே -இந்தத் தாமரை எங்கு இருந்து
உண்டாயிற்று என்று யோசித்தார்-
ஒவ்வொரு இரவு முடிந்து -அவனுக்கு நினைவும் போய் அவன் அருளாலே நினைவு மீளும்
—————
அமுஷ்ய ஹி சரோ ருஹ கிமபி காரணம் சம்ப்வே
திதி ஸ்ம க்ருதி நிச்யஸ் ச கலு நால ரந்த்ராத்வநா
ஸ்வ யோக பல வித்யயா சம வரூடவான் ப்ரவ்டாதீ
ஸ்த்வ தீய மதி மோஹனம் ந து கலேவரம் த்ருஷ்ட்வான் –3-
சிறந்த புத்தி யுள்ள பிரமன் இந்த தாமரை உண்டான இடம் ஓன்று இருக்க வேண்டும் என்று தீர்மானித்து
தனது யோக சக்தியினால் அந்தத் தாமரைத் தண்டின் வழியே சென்று தேடினார்
ஆனாலும் தங்கள் உருவத்தைக் காண முடியவில்லை -தனது முயற்சியால் காண முடியாதே -தர்சனம் கிட்டவில்லை
————-
தத ஸகல நாலிகா விவர மார்ககோ மார்கயன்
ப்ரயஸ்ய சத வத்ஸரம் கிமபி நைவ சம் த்ருஷ்ட்வான்
நிவ்ருத்ய கமலோ தரே ஸூக நிஷண்ண ஏகாக்ரதீ
சமாதி பல மாததே பவத நுக்ரஹை காக்ரஹீ –4-
நூறு தேவ வருடங்கள் தாமரைத் தண்டின் துவாரங்களில் தேடியும் தங்களை எங்கும் காணவில்லை
உனது அருள் அன்றி வேறே உபாயம் இல்லை என்று உணர்ந்து பிறகு மனதை ஒரு நிலைப்படுத்தி தீவிர த்யானத்தைச் செய்தாராமே
————-
சதேந பரிவத்ச ரைர் த்ருட ஸமாதி பந்தோல்ல ஸத்
ப்ரபோத விச தீக்ருத ச கலு பத்மி நீ ஸம்பவ
அத்ருஷ்ட சர மத்புதம் தவ ஹி ரூபம் அந்தர் த்ருஸா
வ்யசஷ்ட பரி துஷ்ட தீர் புஜக போக பாகாஸ்ரயம் –5-
அவ்வாறு நூறு தேவ வருடங்கள் தவம் செய்து ஞானத்தை அடைந்தார்
ஆதி சேஷன் மேல் அமர்ந்த உமது திவ்ய அழகிய திவ்ய மங்கள விக்ரஹத்தை மனக் கண்ணால்-
ஞானக் கண்ணால் கண்டு ஆனந்தம் அடைந்தார்
—————–
கிரீட மகுட உல்லாசத் கடக ஹார கேயூர யுங்
மணி ஸ்புரத மேகலாம் ஸூ பரிவீத பீதாம்பரம்
கலாய குஸூம ப்ரபம் கலதலோல்ல ஸத் கௌஸ்துபம்
வபுஸ் ததயி பாவயே கமல ஜன்மே தர்சிதம்–6-
கிரீடம் மகுடம் இவைகளால் பிரகாசிக்கிறதும் -வளைகள் முத்து மாலைகள் தோள் வளைகள் இவற்றுடனும்
சிறந்த ரத்தினங்கள் இழைத்த ஒட்டியாணத்துடனமும் பீதாம்பரத்துடனும் காயம் பூ போன்ற நீல நிறத்துடன் விளங்கும்
ஸ்ரீ கௌஸ்துப மணியுடனும் திகழும் தங்கள் அழகிய திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்டார்
அவ்வாறு ப்ரம்ம தேவனுக்கு காட்சி அளித்து அருளிய உமது திவ்ய மங்கள விக்ரஹத்தை
அடியேன் த்யானம் செய்கிறேன்
—————
ஸ்ருதி ப்ரகர தர்சித ப்ரசுர வைபவ ஸ்ரீ பதே
ஹரே ஜய ஜய ப்ரபோ பதமுபைஷி திஷ்ட்யா த்ருஸோ
குருஷ்வ தியமா ஸூ மே புவ ந நிர்மிதவ் கர்மடா
மிதி த்ருஹிண வர்ணித ஸ்வ குண பம்ஹிமா பாஹி மாம் –7-ஜய ஜய ப்ரபோ -பல்லாண்டு பாடுகிறார்
ஓ விஷ்ணுவே தங்கள் பெருமைகளை வேதங்கள் கூறுகின்றன -ஸ்ரீ யபதியே -அடியேன் செய்த பாக்யத்தால் தங்களைக் காணப் பெற்றேன்
உலகை ஸ்ருஷ்டிக்கும் செயலில் எனக்கு நல்ல திறமையை தங்கள் அருள வேண்டும் என்று பிரமதேவன் ஸ்துதித்தார்
இப்படி ஸ்துதிக்கப்பட்ட உமது கல்யாண குணங்களை உடைய தங்கள் அடியேனை -பாஹி மாம் -ரஷித்து அருள வேண்டும் –
————-
லபஸ்வ புவன த்ரயீ ரசந தஷதா மஷதாம்
க்ருஹாண மத நுக்ரஹம் குரு தபஸ் ச பூயோ விதே
பவத் வகில சாதநீ மயி ச பக்தி ரத் யுத்கடே
த்யு தீர்ய கிரமாத தா முதித சேதஸம் வேதஸம்–8-
மூன்று உலகையும் படைக்கும் திறமையையும் அடைந்து எனது அருளையும் பெறுவாய்
மீண்டும் தவம் செய்து என்னிடத்தில் சிறந்த பக்தியையும் பெறுவாய் என்று அனுக்ரஹித்தீர்கள்
ஆழ்ந்த பக்தி வரவே தபஸ்ஸு செய்ய –
———————
சதம் க்ருத தபாஸ் தத ச கலு திவ்ய ஸம்வத்ஸரா
நவாப்ய ச தபோ பலம் மதி பலம் ச பூர்வாதிகம்
உதீஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுநா
பவத் பல விஜ்ரும்பித பவன பாதஸீ பீதவாந் –9-
பிரம தேவர் (திவ்ய-தேவ )நூறு வருடங்கள் தவம் செய்து தவ வலிமையையும் அதிக ஞானமும் பெற்றார்
தான் அமர்ந்து இருந்த தாமரை காற்றினில் அசைவதைக் கண்டார்
உனது அருளாலே -பலத்தாலேயே -அந்தக் காற்றையும் நீரையும் பருகினார்
பிரளய நீரைக் குடித்து உலகம் வெளிப்பட வைத்து அருளினீர்
————
ததைவ கிருபயா புனஸ் ஸரஸி ஜேன தேனைவ ச
பிரகல்ப்ய புவன த்ரயீம் ப்ரவவ்ருதே பிரஜா நிர்மிதவ்
ததா விதா கிருபா பரோ குரு மருத் புரா தீஸ்வர
த்வமா ஸூ பரிபாஹி மாம் குருத யோஷிதை ரீஷிதை –10-
தங்கள் கிருபா விசேஷத்தாலே பிரமதேவர் அந்த உந்தித் தாமரையிலேயே அமர்ந்து மூன்று உலகங்களையும் படைத்தார்
அப்பேர்க்கு ஒத்த ஓ குருவாயூரப்பா தங்கள் கருணை பொழியும் கடைக்கண் கடாக்ஷத்தாலே
அடியேனை ரஷித்து அருள வேண்டும்
——————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply