மஹா ப்ரளயத்திற்குப் பின் உலகைப் படைத்தல்
இதில் முதல்
இதில் 4-7- தசகங்கள் ஸ்ரீ மத் பாகவதம் 2 ஸ்கந்தம் அர்த்தங்கள்
8 தசகம் தொடங்கி -ஸ்ரீ மத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் அர்த்தங்கள்
நைமித்திக பிரளயம்,
ஆயிரம் சதுர் யுகம் பிரமனுக்கு ஒரு பகல்-பின்பு நைமித்திக பிரளயம் – -அதே அளவு ஒரு இரவு –
பிராகிருத பிரளயம் -பிரமனுக்கு 100 வயசு -மஹா பிரளயம் இதுவே
பின்பு புதிதாக நான்முகனைப் படைப்பான்
கீழே 5 தசகம் பார்த்தது பிராகிருத பிரளயம் –
முதல் ஸ்லோகம் சாலினி விருத்தம்
2-4-வசந்தா திலகம்
5 ஸ்லோகம் உபேந்திரா வஜ்ரா
6-13உப ஜாதி விருத்தம்
ஏவம் தாவத் ப்ராக்ருத ப்ரக்ஷய அந்தே
ப்₃ராஹ்மே கல்பே ஹ்யாதி₃மே லப்₃த₄ஜந்மா |
ப்₃ரஹ்மா பூ₄யஸ் த்வத்த வேதா₃ந்
ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வ கல்போபமாநாம் || 1||
இவ்வாறு மகா ப்ரளயத்தின் முடிவில் ப்ரும்ம கல்பத்தில் ப்ரும்ம தேவன் தோன்றி, -த்வத்த ஏவாப்ய வேதா -உன்னிடமிருந்தே
வேதங்களைப் பெற்று, முன் கல்பத்தில் இருந்தது போன்ற படைப்பைச் செய்தார்.
—————-
ஸோ(அ)யம் சதுர் யுக₃ஸஹஸ்ர மிதாந்யஹாநி
தாவந்மிதாஶ்ச ரஜநீர்ப₃ஹுஶோ நிநாய |
நித்₃ராத்யஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வ ஸ்ருஷ்டைர்
நைமித்திக ப்ரலயமாஹுரதோ (அ)ஸ்ய ராத்ரிம் || 2||
அவர், நான்காயிரம் யுகங்களான (432 கோடி மனுஷ்ய வருஷங்கள் )இரவு பகல்களைக் கழித்து, தன்னால் படைக்கப்பட்ட உலகங்களுடன் உன்னிடத்தில்
(தானும் தன்னால் படைக்கப்பட்ட உலகங்களும் உன்னில் லயம் அடைந்து )மறைந்து தூங்கினார். அவருடைய இந்த இரவை நைமித்திக ப்ரளயம் என்று கூறுகின்றனர்.
——————-
அஸ்மாத்₃ருஶாம் புநரஹர் முக₂க்ருத்ய துல்யாம்
ஸ்ருஷ்டிம் கரோத் யநுதி₃நம் ஸ ப₄வத் ப்ரஸாதா₃த் |
ப்ராக்₃ப்₃ராஹ்ம கல்ப ஜநுஷாம் ச பராயுஷாம் து
ஸுப்த ப்ரபோ₃த₄ந ஸமாஸ்தி ததா₃(அ)பி ஸ்ருஷ்டி: || 3||
எங்களைப் போன்றவர்களின் காலைக் கடன்களுக்கு ஒப்பான படைத்தலை உன்னுடைய அருளால் செய்கிறார்.
முந்தைய பிரம்மா கல்பத்தில் தோன்றிய சிரஞ்சீவிகளுடைய படைப்பு, தூங்கி விழிப்பதற்கு சமமாக இருக்கிறது.
————-
பஞ்சா ஶத₃ப்₃த₃மது₄நா ஸ்வ வயோர்த₄ரூப-
மேகம் பரார்த₄மதி வ்ருத்ய ஹி வர்ததே(அ)ஸௌ |
தத்ராந்த்ய ராத்ரி ஜநிதாந் கத₂யாமி பூ₄மந்
பஶ்சாத்₃தி₃நாவதரணே ச ப₄வத்₃விலாஸாந் || 4||–பூ மந்-மிகப்பெரியவனே
ப்ரும்மன் இப்போது தன்னுடைய ஆயுளான ஐம்பது வருஷங்கள் அடங்கிய ஒரு பரார்த்தத்தை(ஒரு கோடி ஆண்டுகள்)
தாண்டி இருக்கிறார் என்பது பிரசித்தம். எங்கும் நிறைந்தவனே! அதில், கடைசி இரவிலும், அடுத்த நாள்
ஆரம்பத்திலும் நிகழ்ந்த உங்கள் லீலைகளைச் சொல்கிறேன்.
த்வீத பரார்த்ததே ஸங்கல்பம் செய்து கொள்கிறோம்-
————————
தி₃நாவஸாநே(அ)த₂ ஸரோஜயோநி:
ஸுஷுப்திகாமஸ் த்வயி ஸந்நிலில்யே |
ஜக₃ந்தி ச த்வஜ் ஜட₂ரம் ஸமீயு-
ஸ்ததே₃த₃மேகார்ணவமாஸ விஶ்வம் || 5||
ப்ரும்மன், தன்னுடைய பகலின் முடிவில் நித்திரையை விரும்பி உன்னிடத்தில் ஐக்யமானார்.
மூவுலகங்களும் உன்னுடைய -ஜடரம்- வயிற்றில் அடங்கின. இந்த உலகம் சமுத்திரமாக ஆயிற்று.
————-
தவைவ வேஷே ப₂ணிராஜி ஶேஷே
ஜலைகஶேஷே பு₄வநே ஸ்ம ஶேஷே |
ஆநந்த₃ஸாந்த்₃ராநுப₄வஸ்வரூப:
ஸ்வ யோக₃நித்₃ரா பரிமுத்₃ரிதாத்மா || 6||
உலகமெங்கும் தண்ணீர் மட்டுமே மீதமாக இருந்தது. ஆனந்த வடிவமாகவும், ஞான வடிவமாகவும்
உள்ள தாங்கள், ஆதிசேஷன் மேல் நித்திரை கொண்டிருந்தீர்கள்.
அறி துயில் அமர்ந்த பரமா
உறங்குவான் போல் யோக நித்திரை
——————–
காலாக்₂ய ஶக்திம் ப்ரலயாவஸாநே
ப்ரபோ₃த₄யேத்யாதி₃ஶதா கிலாதௌ₃ |
த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்த ஶக்தி-
வ்ரஜேந தத்ர அகி₂ல ஜீவ தா₄ம்நா || 7||-தாம் நா -இளைப்பாறும் இடமாக
அந்த சமயத்தில் எல்லா சக்திகளும் உம்மிடத்தில் அடங்கியிருந்தன. அதில் கால சக்தியை பிரளய முடிவில்
தங்களை எழுப்புமாறு கட்டளை இட்டிருந்தீர்கள். பிறகு ஆதிசேஷன் மீது உறங்கினீர்களாமே?
காலத்துக்கு ஆள் பட்டவன் அல்லன் -அவன் ஸங்கல்பம் அடியாகவே இவை நடக்கின்றன –
—————
சதுர் யுகா₃ணாம் ச ஸஹஸ்ரமேவம்
த்வயி ப்ரஸுப்தே புநர் அத்₃விதீயே |
காலாக்₂ய ஶக்தி: ப்ரத₂ம ப்ரபு₃த்₃தா₄
ப்ராபோ₃த₄யத் த்வாம் கில விஶ்வநாத₂ || 8||
லோக நாதனே! இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் தூங்கினீர்கள். அப்போது,
கால சக்தி முதலில் எழுந்து, தங்களை எழுப்பியது அல்லவா?
————-
விபு₃த்₄ய ச த்வம் ஜல க₃ர்ப₄ஶாயிந்
விலோக்ய லோகாந் அகி₂லாந் ப்ரலீநாந் |
தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்ம தயா நிஜாந்த: –
ஸ்தி₂தேஷு விஶ்வேஷு த₃தா₃த₂ த்₃ருஷ்டிம் || 9||
பிரளய நீரில் படுத்திருந்த நீங்கள், விழித்ததும், அனைத்து உலகங்களும் உம்மிடத்தில் மறைந்திருக்கக் கண்டீர்.
ஸூக்ஷ்ம வடிவில் இருந்த அந்த உலகங்களின் மீது தங்களுடைய அருள் பார்வை விழுந்ததாமே?
—————-
ததஸ் த்வதீ₃யாத₃யி நாபி₄ரந்த்₄ரா-
து₃த₃ஞ்சிதம் கிம்சந தி₃வ்ய பத்₃மம் |
நிலீந நிஶ் ஶேஷ பதா₃ர்த₂மாலா-
ஸம்க்ஷேப ரூபம் முகுலாயமாநம் || 10||
உடனே, உம்முடைய நாபியிலிருந்து ஒரு அழகிய தாமரை மொட்டு உண்டானது.
அதில் உம்மிடம் ஐக்யமான எல்லா ஜீவன்களும், சாதனங்களும் அடங்கிருந்தன.
———————–
ததே₃தத₃ம்போ₄ருஹ குட்₃மலம் தே
கலேவராத் தோய பதே₂ ப்ரரூட₄ம் |
ப₃ஹிர் நிரீதம் பரித: ஸ்பு₂ரத்₃பி₄:
ஸ்வதா₄மபி₄ர் த்₄வாந்தமலம் ந்யக்ருʼந்தத் || 11||
அந்த மொட்டு, நீரினுள்ளே இருந்து நீருக்கு மேலே வளர்ந்தது.
அது, தன்னுடைய பிரகாசத்தால், பிரளய கால இருட்டை போக்கியது.
—————–
ஸம்பு₂ல்ல பத்ரே நிதராம் விசித்ரே
தஸ்மிந் ப₄வத்₃வீர்ய த்₄ருதே ஸரோஜே |
ஸ பத்₃ம ஜந்மா விதி₄ராவிராஸீத்
ஸ்வயம் ப்ரபு₃த்₃த் அகி₂ல வேத₃ராஶி: || 12||
அந்த மொட்டு நன்கு மலர்ந்தது. அதிலிருந்து பத்மஜன் என்ற ப்ரும்ம தேவன் உண்டானார்.
அவருக்கு முன்பு கற்ற வேதங்கள் நினைவுக்கு வந்தன.
—————-
இந்த ஸ்லோகத்தைப் படித்தால் ரோகங்கள் விலகும்.
அஸ்மிந் பராத்மந் நநு பாத்₃ம கல்பே
த்வமித்த₂முத்தா₂பிதபத்₃ம யோநி: |
அநந்த பூ₄மா மம ரோக₃ராஶிம்
நிருந்தி₄ வாதாலய வாஸ விஷ்ணோ || 13||
விஷ்ணுவே! -(வாதாலய வாஸ-)குருவாயூரில் வசிப்பவனே! எல்லை யில்லா மகிமை உடையவரும், பத்ம கல்பத்தில்
ப்ரும்ம தேவரைப் படைத்தவருமான தாங்கள் என்னுடைய (தேஹ ஆத்ம சகல )ரோகக் கூட்டங்களைப் போக்க வேண்டும்.
ஸ்வேத வராஹ கல்பம் -பத்மம் தாமரையில் தோன்றியதால் பத்ம கல்பம் என்றும் பெயர்
இதே கல்பத்தில் மஹா வராஹம் அவதரித்து ரக்ஷிப்பார்
—————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply