ஸ்ரீமந் நாராயணீயம் – – தசகம் – 07 -ப்ரம்மா ஜென்ம தபஸ் – ததா ஸ்ரீ வைகுண்ட தர்சனம் —

இத்துடன் ஸ்ரீ மத் பாகவதம் இரண்டாம் ஸ்கந்தம் அர்த்தம் நிறைவு அடைகிறது

நான்முகனுக்கு
ஒரு பகல்
4,320,000,000 (4.32 Billion)
ஒரு நாள்
8,640,000,000 (8.64 Billion)
ஒரு மாதம்
259,200,000,000 (259.2 Billion)
ஒரு வருஷம்
3,110,400,000,000 (3.1104 Trillion)
ஆயுஸ்ஸூ -100-வருஷங்கள்
311,040,000,000,000 (311.04 Trillion)
நான்முகன் 311.04 Trillion years இருந்தபின்பே வேறே ஒருவர் நான்முகன் ஆகிறார்

தசம் = 10;
பரிவ்ரதம் = 100;
ஸஹஸ்ரம் -பரி பத்மம் = 1,000;
ஆயுதம் = 10,000;
நியுதம் = 100,000;
ப்ரயுதம் = 1,000,000;
அருவுதம் அற்புதம் = 10,000,000;
ந்யற்புதம் = 100,000,000;
வரிதம் -கற்புதம் = 1,000,000,000;
பரம் = 10,000,000,000;
கர்வம் = 100,000,000,000;
நிகர்வம் = 1,000,000,000,000;
சங்கம் = 10,000,000,000,000;
பத்மம் = 100,000,000,000,000;
சமுத்திரம் = 1,000,000,000,000;
அந்த்யம் = 1,000,000,000,000,000;
மத்யமம் = 10,000,000,000,000,000;
பரார்த்தம் = 100,000,000,000,000,000;
பர = 2Xபரார்த்தம் = நான்முகனின் ஆயுஸ்ஸு = 311.04 Trillion மடங்கு மனிதனின் ஆயுஸ்ஸு

————-

ஏவம் தேவ சதுர் தசாத் மக ஜகத் ரூபேண ஜாத புனஸ்
தஸ் யோர்த் த்வம் கலு ஸத்ய லோக நிலைய ஜாதோ அஸி தாதா ஸ்வயம்
யம் சம் சந்தி ஹிரண்ய கர்ப மகில த்ரை லோக்ய ஜீவாத்மகம்
யோ அபூத் ஸ்பீத ரஜோ விகார விகஸந் நாநாஸிருஷா ரஸ –1-

ஏவம்-கீழே பார்த்த விராட் வடிவம் படி -தேவ -விளையாட்டு லீலா கார்யமாகச் செய்து அருளும் தேவா – பதினான்கு உலகங்களாகத் தோன்றிய நீ மறுபடியும் அந்த பதினான்கு உலகங்களுக்கு மேல் உள்ள
ஸத்ய லோகத்தில் பிரம தேவனாகத் தோன்றினாய்-ஆத்மாவை புத்ர நாம -உனது மகனாகத் தோன்றி என்றும் -அவனுக்கு அனைத்துமே சரீரமே என்றும் சொன்னபடி –
ரஜோ குண விகாரத்தால் தோன்றியவனும் பூமி சுவர்க்கம் பாதாளம் என்ற
மூன்று உலகங்களுக்கும் ஜீவ ஸ்வரூபமாய்
உள்ள உன்னை ஹிரண்ய கர்ப்பன் என்று முனிவர்கள் கூறுகிறார்கள்

பூ -மேல் -கீழ் -இப்படி மூன்று -அகில த்ரை லோக்யம் -14-
ஜீவாத்மாக்குள் உயிராக நாராயணனே
உயிர் கொடுப்பவன் நான்முகன் -ரஜோ குணம் பிரதானம் -படைக்க விருப்பம் வேண்டுமே –
அப்படி ஆக்கி அருளினாய் -அவனும் உனக்கு சரீரமே

—————

ஸோ அயம் விஸ்வ விஸர்க்க தத்த ஹ்ருதய சாம்பஸ்யமாந ஸ்வயம்
போதம் கல்வ நவாப்ய விஸ்வ விஷயம் சிந்தாகுலஸ் தஸ்தி வாந்
தாவத் த்வம் ஜகதாம் பதே தப தபேத் யேவம் ஹி வைஹாயஸீம்
வாணீ மே நமஸிஸ்ரவ ஸ்ருதி ஸூகம் குர்வம்ஸ் தபஸ் பிரேரணாம் –2–

சாம்பஸ்யமாந-ஆலோசனை செய்து –வைஹாயஸீம் வாணீ-ஆகாச வாணீ

அப்படிப்பட்ட இந்த பிரமதேவர் உலகைப் படைக்க நினைத்தார் படைப்பதைப் பற்றிய
ஞானம் இல்லாமல் கவலை அடைந்தார்
அப்போது தவம் செய் தவம் செய் என்ற அசரீரி வாக்கியம் கேட்டார் -தபஸ் செய்யத் தூண்டிற்று –

————-

கோ அசவ் மாமவதத் புமாநிதி ஜலா பூர்ணே ஜகன் மண்டலே
தி ஷுத் வீஷ்ய கிமப்ய நீஷீ தவதா வாக்யார்த்த முதபஸ்யதா
திவ்யம் வர்ஷ ஸஹஸ்ர மாத்த தபஸா தேந த்வம் ஆராதித
ஸ்தஸ்மை தர்சிதவா நஸி ஸ்வ நிலயம் வைகுண்ட மேகாத்புதம் –3-

பூமியானது நீரில் மூழ்கி இருக்கும் போது யார் இவ்வாறு சொல்கிறார்கள் என்று பிரம தேவன்
எல்லாத் திக்குகளிலும் தேடினாலும் ஒன்றும் புலப்பட வில்லை-பேசியவர் யார் என்று அறியாமல் வாக்யார்த்தம் என்ன என்று ஆராய்ந்து
உடனே அவர் ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்யத் தொடங்கினார்
அப்போது ப்ரம்ம தேவனுக்கு நீர் உம்முடைய இருப்பிடமான – ஏக அத்புதம் -ஸ்ரீ வைகுண்ட லோகத்தைக்
காட்டி அருளினீர் அல்லவா –

உன்னால் படைக்கப்பட்டவை எதுவும் இல்லை என்றாலும் உன்னைப் படைத்த நான் இருக்கிறேன் என்று காட்டி அருளினாய்

————–

மாயா யத்ர கதாபி நோ விகுருதே பாதே ஜகத்ப் யோ பஹி
சோக க்ரோத விமோஹ ஸாத் வச முகா பாவஸ்து தூரம் கதா
ஸாந்த்ரானந்த ஜரீ ச யத்ர பரம ஜ்யோதி ப்ரகாசாத் மகே
தத்தே தாம விபா விதம் விஜயதே வைகுண்ட ரூபம் விபோ –4-

விபோ-எங்கும் நிறைந்தவனே -ஈர் ஏழு உலகங்களிலும் பிரகாசிக்கின்றதும் துக்கம் கோபம் அஞ்ஞானம் பயம்
முதலிய உணர்ச்சிகள் ஏற்றதும் மாயை ஏற்றதும் பரமானந்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பதுமான
உம்முடைய லோகமான ஸ்ரீ வைகுண்டத்தை பிரமனுக்குக் காட்டி அருளினீர்

மாயா-மூல பிரகிருதி -ஸ்ரீ வைகுண்டம் அப்ராக்ருதம் -மாறுதல் இல்லாமல் -காலத்துக்கு வசம் இல்லாமல்
பஹி-இந்த லீலா விபூதிக்கு அப்பால் உள்ளது

விபு -கரந்து எங்கும் பரந்துளன் -அங்கு திவ்ய மங்கள விக்ரஹம் காட்டி அருளி கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்கிறான்

—————–

யஸ்மின் நாம சதுர் புஜா ஹரி மணி ஸ்யாமாவதா தத் விஷோ
நாநா பூஷண ரத்ன தீபித திஸோ ராஜத் விமாநாலயா
பக்தி ப்ராப்த ததா விதோந்நத பதா தீவ்யந்தி திவ்ய ஜனா
தத்தே தாம நிரஸ்த ஸர்வ சமலம் வைகுண்ட ரூபம் ஜயேத் –5-

ஸ்வாமி உம்முடைய ஸ்ரீ வைகுண்டத்தில் ஜனங்கள் பக்தியினால் கிடைத்த உயர்ந்த ஸ்தானத்தினால்
நான்கு கைகளுடனும் இந்திர நீலக்கல் போன்ற ஸ்யாமளமான நீல நிறத்துடனும்
பல ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டும் திவ்ய விமானங்களில் வாசித்தும் வாழ்கின்றனர்
அப்படிப்பட்ட பாபங்கள் அற்ற உம்முடைய ஸ்ரீ வைகுண்ட லோகமானது நன்கு சிறந்து விளங்கட்டும்

தீவ்யந்தி-ஒளி வீசிக் கொண்டு உள்ளார்
குண்டம் தடை -வைகுண்டம் -பகவத் அனுபவ தடைகள் அற்ற திவ்ய ஸ்தானம்

—————

நாநா திவ்ய வதூ ஜனைர் அபி வ்ருதா வித்யுல்லதா துல்யயா
விஸ்வோந் மாதந ஹ்ருத்ய காத்ரல தயா வித்யோதிதா சாந்தரா
த்வத் பாதாம் புஜ ஸுவ்ரபைக குதுகால் லஷ்மீ ஸ்வயம் லஷ்யதே
யஸ்மின் விஸ்மயநீய திவ்ய விபவம் தத்தே பதம் தேஹி மே –6-

அந்த ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹா லஷ்மீ யானவள் தேவப் பெண்களால் சூழப் பட்டு மின்னல் கொடி
போன்ற உடலால் திக்குகளைப் பிரகாசிக்கச் செய்கிறாள்
தங்கள் பாதத் தாமரையின் வாசனையை முகர்வதின் வாசனையால் அங்கு எப்போதும் காணப் படுகிறாள்
அத்தகைய தங்கள் ஸ்தானமான ஸ்ரீ வைகுந்தத்தை எனக்குத் தந்து அருள வேணும்

கைங்கர்யம் செய்து காட்டி அருளி -கைங்கர்ய வர்த்தகையாய் பிராட்டி -மின்னல் கொடி போல் ஒளி வீசிக் கொண்டு -லஷ்யதே-காணப் படுகிறாள்

——————–

தத்ரைவம் ப்ரதி தர்சிதே நிஜ பதே ரத்நாசநாத் யாஸிதம்
பாஸ்வத் கோடிலஸத் கிரீட கடகாத்யா கல்ப தீ ப்ராக்ருதி
ஸ்ரீ வத் சாங்கித மாத்த கௌஸ்துப மணிச் சாயா ருணம் காரணம்
விஸ்வேஷாம் தவ ரூப மைஷத விதிஸ் தத்தே விபோ பாதுமே –7-

அத் யாஸிதம்-வீற்று இருந்த திருக்கோலம் –விதிஸ்-நான்முகன்

அந்த ஸ்ரீ வைகுண்டத்தில் பிரமதேவன் ரத்ன மயமான இருக்கையில் கோடி ஸூர்ய ஒளியோடே பிரகாசிக்கும்
கிரீடம் தோள் வளை முதலிய ஆபரணங்களாலும் ஸ்ரீ கௌஸ்துப மணியின் காந்தியாலும்
ஸ்ரீ வத்ஸம் என்னும் மச்சத்துடன் உள்ள தங்களைக் கண்டார்
ஸர்வ காரணமான தங்களுடைய அந்த திவ்ய ரூபத்தை எனக்குக் காட்டி அருள வேணும் –

————–

காலாம்போத கலாய கோமல ருசீ சக்ரேண சக்ரம் திசா
மாவ் ருண் வாந முதார மந்த ஹஸி தஸ் யந்த பிரசந்நா நநம்
ராஜத் கம்பு கதாரி பங்கஜ தர ஸ்ரீ மத் புஜா மண்டலம்
ஸ்ரஷ்டுஸ் துஷ்டிகரம் வபுஸ் தவ விபோ மத் ரோக முத் வாசயேத் –8-சக்ரேண-ஒளி வட்டம்

விபோ-எங்கும் நிறைந்து இருப்பவனே கார்மேகம் காயாம்பூ போன்ற நிறத்துடன் திரு முகத்தில் அழகிய புன் சிரிப்புடன்
நான்கு கரங்களில் சங்கு சக்கரம் கதை தாமரை இவற்றுடன் -ஸ்ரஷ்டுஸ்-ப்ரம்ம தேவருக்குக் காட்சி கொடுத்து அருளி
மகிழ்ச்சி அளித்த தங்களது திவ்ய ரூபம் என்னுடைய சகல ரோகங்களையும் போக்கி அருள வேண்டும்

——————

த்ருஷ்ட்வா சம்ப்ருத ஸம்ப்ரம கமல பூஸ் த்வத் பாத பாதோ ருஹே
ஹர்ஷா வேச வஸம் வதோ நிபதித ப்ரீத்யா க்ருதார்த்தீ பவந்
ஜாநாஸ் யேவ மனீ ஷிதம் மம விபோ ஞானம் ததா பாதய
த்வைதாத் வைத பவத் ஸ்வரூப பரமித்யா சஷ்ட தம் த்வாம் பஜே –9–

பிரம தேவன் தங்கள் வடிவு அழகைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்து தங்கள் பாதக் கமலங்களில் விழுந்து
வணங்கி தன் கடமைகளை நிறைவேற்றினார்-க்ருதார்த்தீ பவந்-மன நிறைவும் பெற்றார்
என்னுடைய இஷ்டத்தை அறிந்து துவைதம் அத்வைதம் என்ற தங்கள் ஸ்வரூப ஞானத்தை எனக்கு
அளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் -அத்தகைய தங்களை அடியேன் பஜிக்கிறேன்

ஜகத் ஸர்வம் ப்ரஹ்மம் -ஸரீராத்மா பாவம் -நூல் மணிகள் -ஒரே மணி மாலை -பல மணிகள் –
அவனாலேயே தாங்கப்பட்டு -இயக்கப்பட்டு -தனியாக இருக்காமல்
அவன் மேன்மைக்காகவே செயல்படும் சரீரம் போல் ஜீவாத்மா பரமாத்மாவுக்கு இருக்குமே

——————

ஆதாம்ரே சரணே விநம் ரமத தம் ஹஸ்தேந ஹஸ்தே ஸ்ப்ருசன்
போதஸ்தே பவிதா ந சர்க விதிபிர் பந்தோ அபி சஞ்சாயதே
இத்யா பாஷ்ய கிரம் பிரதோஷ்ய நிதராம் தச் சித்த கூட ஸ்வயம்
ஸ்ருஷ்டவ் தம் சமுதைரய ச பகவன் நுல்லா ச யோல்லா கதாம் –10-

ஞானம் வரட்டும் என்று ஸங்கல்பம் ஒன்றே போதுமே -ஸத்ய ஸங்கல்பன் அன்றோ

கர்ம யோகம் -பந்தம் இருக்காதே -படைப்புத் தொழிலால் -நான்முகனுக்கு வராது –

பிறகு தங்கள் சிவந்த திருப் பாதங்களில் பணிந்த அந்த பிரம தேவனை தங்கள் கையாலே ஸ்பர்ஸித்து –
உமக்கு ஞானம் தோன்றப் போகிறது -எந்த பந்தமும் இல்லாமல் படைக்கும் கார்யத்தைச் செய்வாயாக என்று
அவருடைய மனத்தில் இருந்து தூண்டி அருளினீர்-அவனே அறியாமல் உள்ளேயும் புகுந்து அருளினாய் –
அத்தகைய ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனுக்கு ஆரோக்யத்தை அருள வேணும்

இத்துடன் ஸ்ரீ மத் பாகவதம் இரண்டாம் ஸ்கந்தம் அர்த்தம் நிறைவு அடைகிறது

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading