ஸ்ரீமந் நாராயணீயம் – – தசகம் – 06 -ஸ்ரீ விராட் ஸ்வரூப வர்ணனம் —

ஏவம் சதுர் தச ஜகன் மயதாம் கதஸ்ய பாதாளமீச தவ பாத தலம் வதந்தி
பாதோர்தவ தேசமபி தேவ ரஸாதலம் தே குல்ப த்வயம் கலு மஹாதல மத்புதாத்மந் –1-

அத்புதாத்மந்-வியப்பாய் வியப்பு அன்றோ உன்னது

ஓ குருவாயூரப்பா நீ ஈர் ஏழு உலகு வடிவமான விராட் ரூபத்தைத் தரித்தாய்
உன்னுடைய திருப் பாதங்களின் அடிப் பாகமே பாதாளம் என்றும் மேல் பாதங்களை ரஸா தலம் என்றும்
இரு கணுக் கால்களை மஹா தலம் என்றும் முனிவர்கள் கூறுகின்றனர் –

———-

ஐங்கே தலாதல மதோ ஸூ தலம் ச ஜானூ கிஞ்சோ ரூபாக யுகலம் விதாலதாலே த்வே
ஷோணீ தலம் ஜகந மம் பரங்க நாபிர் வக்ஷஸ் ச சக்ர நிலயஸ் தவ சக்ரபாணி –2-

பிரபோ சக்ரத்தைத் தரித்தவனே -உன் முழங்கால்கள் தலாதலம் என்றும் தொடைகள் ஸூதல லோகமாகவும்
இரு தொடைகளின் கீழ்ப் பகுதி விதலம் அதலம் என்ற இரண்டு லோகங்களாகவும் இடுப்பு பூ லோகமாகவும்
நாபி புவ லோகம் -ஆகாசமாகவும் மார்பு ஸ்வர்க்க -இந்த்ர லோகமாகவும் கூறுகின்றனர்-

—————–

க்ரீவா மஹஸ் தவ முகம் ச ஜனஸ் தபஸ் து பாலம் சிரஸ் தவ ஸமஸ்த மயஸ்த ஸத்வம்
ஏவம் ஜகன் மய தநோ ஜகதாஸ்ரிதைரபி யந்யைர் நிபத்த வபுஷே பகவன் நமஸ்தே –3-

கழுத்து மஹர் லோகம் முகம் ஜனோ லோகம் நெற்றி தபோ லோகம் தலை ப்ரம்ம லோகம் என்று கூறுகின்றனர்
இப்படி உலகமாகவும் உலகப் பொருள்களாகவும் சரீரத்தைக் கொண்ட உனக்கு நமஸ்காரம் –

——————–

த்வத் ப்ரஹ்மரந்தர பத மீஸ்வர விஸ்வ கந்த சந்தாம்ஸி கேசவ கநாஸ் தவ கேஸ பாஸா
உல்லாசி சில்லி யுகலம் த்ருஹி ணஸ்ய கேஹம் பஷ்மாணி ராத்ரி சிவசவ் சவிதா ச நேத்ரை–4-

உலகுக்கு காரணமானாவனே உனது தலையில் உள்ள ப்ரஹ்மரந்த்ர ஸ்தானமான தொறை வேதங்கள் –
கேசங்கள் கநாஸ்-மேகங்கள் -அழகியிரு புருவங்கள் ப்ரம்மாவின் வீடு-இமைகள் இரவு பகல் (சிவசவ்-பகல் ) கண்கள் ஸூர்யன்

—————-

நிஸ் சேஷ விஸ்வ ரஸநா ச கடாக்ஷ மோக்ஷ கர்ணவ் திசோ அஸ் வி யுகலம் தவ நாசிகே த்வே
லோப த்ரபே ச பகவன் நரோத்த ரோஷ்டவ் தாரா கணாஸ் ச தசநா சமநஸ் ச தம்ஷ்ட்ரா–5-

பகவானே உனது கடைக் கண் பார்வையாலேயே அனைத்து உலகங்களும் உண்டாகின்றன
காதுகள் திக்குகள் -மூக்கு அஸ்வினீ தேவர்கள் -கீழ் மேல் உதடுகள் ஆசையும் வெட்கமும் -(த்ரப-வெட்கமும்)
பற்கள் நக்ஷத்ரங்கள் -கோரைப்பல் யமன் –

பேராசை இத்யாதி தோஷங்கள் அவன் இடம் இல்லை -அனைத்தும் அவன் நியமனம் என்றபடி

—————-

பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி* பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா*
செவ்வி மாதிரம் எட்டும் தோளா* அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற* கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்*
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

த்யான ஸுகர்யத்துக்காக இப்படி அருளிச் செய்வார்
சரீரம் லக்ஷணம்
அவனுடைய மேன்மைக்காகவே -அவனாலே இயக்கப்பட்டு அவனாலே தாங்கப்பட்டு -அவன் இன்றி தரிக்க மாட்டாமல் இருக்கும் அன்றோ
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அவனுடையது –

————

மாயா விலாஸ ஹசிதம் ஸ்வ சிதம் சமீ ரோ ஜிஹ்வா ஜலம் வசனமீச சகுந்த பங்க்தி
சித்தா தய ஸ்வரகணா முகரந்த்ர மக்நிர் தேவா புஜா ஸ்தன யுகம் தவ தர்ம தேவ –6-

ஈசனே உன் புன்சிரிப்பு மாயை -உன் மூச்சு காற்று வாயு -நாக்கு தண்ணீர் -வருணன்
வாக்கு பறவைக் கூட்டம் -ஸ்வரக் கூட்டம் சித்தர் முதலியோர்
வாய் நெருப்பு அக்னி தேவதை -கைகள் தேவர்கள் -இரு ஸ்தனங்களும் தர்ம தேவதை-

—————-

ப்ருஷ்டம் த்வ அதர்ம இஹ தேவ மனஸ் ஸூதாம்ஸூர் அவ்யக்தமேவ ஹ்ருதயம் புஜமம் புஜாஷ
குஷி ஸமுத்ர நிவஹா வசனம் து சந்த்யே சேப ப்ரஜாபதிர் அசவ் வ்ருஷ்ணவ் ச மித்ர –7-

தேவா உனது பின் புறம் அதர்மம் -மனம் சந்திரன் -ஹ்ருதயத் தாமரை மூல பிரகிருதி –
வயறு-abdomen.- ஏழு கடல்கள் -வஸ்திரம் காலை மாலை சந்தி
ஆண் குறி பிரஜாபதி -இரு அண்டங்கள்-testicals – மித்ரன்-

————-

ஸ்ரோணீ ஸ்தலம் ம்ருக கணா பதயோர் நகாஸ்தே ஹஸ்த் யுஷ்ட்ர சைந்தவ முகா கமனம் து கால
விப்ராதி வர்ண பவனம் வதநாப் ஜபா ஹு சாரூ ரு யுக்ம சரணம் கருணாம்புதே தே –8-விப்ராதி-அந்தணர்களாதி –

கருணைக் கடலே உனது இடுப்பு மிருகக் கூட்டங்கள் -கால் நகங்கள் யானை யுஷ்ட்ர-ஒட்டகம் சைந்தவ-குதிரை முதலியவை –
நடை காலம் – உனது திரு முகம் கை தொடை கால்களில் இருந்து நான்கு வர்ணங்களும் உண்டாயிற்று
ப்ராஹ்மணர்கள் திரு முகத்தில் இருந்தும் -க்ஷத்ரியர் கைகளில் இருந்தும் – வைஸ்யர் தொடைகளில் இருந்தும் –
ஷூத்ரர் கால்களில் இருந்தும் என்றவாறு

வர்ணங்களில் -ஏற்றத் தாழ்வு இல்லை
அப்ராக்ருத திவ்ய மங்கள விகிரஹத்தில் அனைத்து உறுப்புக்களும் சமம்
வாசி பார்த்தால் திருவடியே ஸ்ரேஷ்டம்
அந்தணர் தலையில் இருந்து -வேதம் படிக்க ஞானம் -அவன் அருளால் பெற வேண்டும்
மன்னர் தோள் வலிமை நாட்டைக் காக்க வேண்டுமே
வணிகர் செல்வம் மடியில் காசு
உழைக்க ஓடி ஓடி சக்தி வர -திருவடி அருள் வேண்டுமே

————–

சம்சார சக்ரமபி சக்ர தர க்ரியாஸ்தே வீர்யம் மஹா ஸூர கனோ அஸ்தி குலாநி சைலா
நாட்யஸ் சரித்ச முதயஸ் தரவஸ் ச ரோம ஜீயாதி தம் வபுர நிர்வசநீயமீச –9-

சக்ரம் ஏந்தினவனே உனது செயல்கள் சக்ரம் போல் சுழலும் ஜனன மரணங்கள் -பராக்ரமம் அசுரர்கள் கூட்டம் –
எலும்புகள் மலைகள் -ரத்தக் குழாய்கள் நதிகள் -ரோமம் மரங்கள் -தரவஸ் மரங்கள் -தரு மரம்
இப்படிப்பட்ட விவரிக்க முடியாத இந்த விராட் ரூபமானது என்று என்றும் சிறப்பாக விளங்கட்டும் –

————————

ஈத்ருக் ஜகன் மய வபுஸ் தவ கர்ம பாஜாம் கர்மா வஸான ஸமயே ஸ்மாரணீய மாஹு
தஸ்யாந்தராத்ம வபுஷே விமலாத்ம நே தே வாதால யாதிப நமோ அஸ்து நிருந்தி ரோகாந் –10–

இத்தகைய உலக ரூபமான உனது சரீரம் கர்ம வழியில் செல்பவர்களுக்கு அந்த கர்மங்களின் முடிவில்
த்யானிக்கத் தகுந்தது என்று சொல்லுகிறார்கள் –
அந்த பிரபஞ்சத்துக்கு நிர்மலமான நீயே உயிர் -அந்தராத்மா வபுஷே –உனக்கு அடியேனது நமஸ்காரங்கள் –
(யாதும் ஓர் பற்று இல்லாத -அவனைக் கூடலாமே -விமலாத்மா -தூய்மையானவன் -)அனைத்து ரோகங்களையும் நீயே போக்கி அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading