ஸ்ரீமந் நாராயணீயம் – – தசகம் – 05 –ஸ்ரீ விராட் புருஷ உத்பத்தி —

வியக்த அவ்யக்த மிதம் ந கிஞ்சித பவத் ப்ராக் ப்ராக்ருத ப்ரஷயே
மாயாயாம் குண சாம்ய ருத்த விக்ருதவ் த்வய் யாக தாயாம் லயம்
நோ ம்ருத்யுஸ் ச ததா அம்ருதம் ச சம பூன் நாஹ்நோ ந ராத்ரே ஸ்திதி
ஸ்தத்ரை கஸ்த்வம சிஷ்யதா கில பரா நந்த ப்ரகாசாத்மநா–1-

ப்ராக்ருத ப்ரஷயே-பிராகிருத பிரளயம்
மாயாயாம்-மூல ப்ரக்ருதி
விக்ருத ருத்த -மாறுதல் தடைப்பட்ட

நோ ம்ருத்யுஸ் ச ததா அம்ருதம் ச -மரணமோ முக்தியோ இல்லாமல்

நாஹ்நோ ந ராத்ரே ஸ்திதி-பகலும் இரவும் இல்லாமல்

ப்ரகாசாத்மநா-ஞான ஆனந்த வடிவாய்

மகா பிரளயத்தில் மாயை-சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றும் சமமாக இருந்து -இரவு பகல் பிறப்பு இறப்பு ஒன்றுமே
இல்லாமல் அனைத்துமே தங்கள் இடம் மறைந்து விட்டதால் யாதும் யாவரும் இல்லா அன்று
தங்கள் ஒருவரே பரமானந்த ரூபியாக தனித்து இருந்தீர்

———————

கால கர்ம குணாஸ் ச ஜீவ நிவஹ விஸ்வம் ச கார்யம் விபோ
சில் லீலாரதி மே யுஷி த்வயி ததா நிர்லீ லதா மாயயு
தேஷாம் நைவ வதந்த்ய சத்த்வ மயி போ சக்த்யாத்ம நா திஷ்டதாம்
நோ சேத் கிம் ககந ப்ரஸூ ந ஸத்ருஸாம் பூயோ பவேத் சம்பவ –2-

காலம் குணங்கள் கர்மாக்கள் -சேதனங்களும் அசேதனங்களும் -அனைத்தும் அழிந்து போகவில்லை -நைவ அசத்யம்
அவஸ்த்தா வேறுபாடே -நிலை மாற்றமே –
ஸூஷ்ம அவஸ்தை -அவன் இடம் லயித்து
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம்
ககந ப்ரஸூந -ஆகாஸத் தாமரை
சம்பவ-தோற்றம்-

அப்போது தாங்கள் ஆத்ம ரூபமான லீலையில் ஈடுபட்டு இருந்தீர்கள் -முக்குணங்களும் ஜீவ ராசிகளும்
அவைகளின் செயல்களும் மறைந்து விட்டன
காரண ரூபமாக உள்ள அவை எல்லாவற்றையும் வேதங்கள் இல்லை என்று சொல்ல வில்லை
இல்லா விடில் ஆகாச புஷ்ப்பத்தைப் போன்று அவை மறுபடியும் உண்டாக வேணுமோ

——————

ஏவம் ச த்வி பரார்த்த கால விகதா வீக்ஷாம் சிஷ்ருஷாத் மிகாம்
பிப்ராணி த்வயி சு ஷுபே த்ரி புவநீ பாவாய மாயா ஸ்வயம்
மாயாத கலு கால சக்திர கிலா த்ருஷ்டம் ஸ்வ பாவோ அபி ச
ப்ராதுர் பூய குணாந் விகாஸ்ய விததுஸ் தஸ்யாஸ் ஸஹாய க்ரியாம் –3–

அகில அத்ருஷ்டம் -ஜீவாத்மாக்கள் கர்மங்கள் -அநாதி -தொடக்கம் இல்லை -அந்தம் உண்டு அவன் அருளால்

இவ்வாறு இரண்டு பரார்த்த காலம் (2000 கோடி வருஷங்கள்  )முடிந்ததும் தங்கள் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தீர்கள் –
மாயை ஸ்ருஷ்ட்டியை நினைத்து கலக்கம் அடைந்தது
மாயையில் இருந்து மஹா காலமும் ஜீவன்களின் கர்மம் அவற்றின் தன்மை முதலியவை தோன்றின
அவை முக் குணங்களையும் உண்டாக்கி ஸ்ருஷ்டியில் மாயைக்கு உதவி புரிந்தன

——————-

மாயா சந்நிஹிதோ அ ப்ரவிஷ்ட வபுஷா ஸா ஷீதி கீதோ பவாந்
பேதைஸ் தாம் ப்ரதி பிம்பதோ விவி ஸிவாந் ஜீவோ அபி நைவா பர
காலாதி பிரதிபோதிதா அ த பவதா சம் சோதிதா ச ஸ்வயம்
மாயா ச கலு புத்தி தத்த்வ மஸ்ரு ஜத் யோ அசவ் மஹா நுஸ்யதே–4-

மூல பிரக்ருதியும் அவனுக்கு சரீரம் -தானே -இருந்தாலும் எந்த மாறுதலும் ப்ரஹ்மத்துக்கு வராதே -அப்ரவிஷ்ட-வபுஷா
யாதும் ஓர் பற்று இல்லாத பாவனை அதனைக் கூட்டில் –அவனையும் கூடலாமே –
ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -அவர்களும் உனக்கு சரீரம்
நாம ரூப வியாக்ரவாணி -சாந்தோக்யம்
ஸம் சோதிதா-உன்னாலே தூண்டப்பட்டு
மஹான் -புத்தி தத்வம் உருவானது

நீ மாயைக்கு அருகில் இருந்தாலும் அதன் சம்பந்தம் இல்லாததால் உன்னை சாட்சி என்று சொல்கிறார்கள்
அந்த மாயையில் பல ரூபங்களுடன் இருக்கும் ஜீவனும் நீயே -அந்த மாயை காலம் கர்மம் அவற்றின் தன்மை
ஆகிய வற்றால் உணர்த்தப்பட்டும் உன்னால் ஏவப்பட்டும் புத்தி தத்துவத்தை உண்டாக்கியது
வந்த புத்தி தத்வம் மஹத் தத்வம் என்று சொல்லப் படுகிறது

—————–

தத்ராஸவ் த்ரி குணாத் மகோ அபி ச மஹான் சத்துவ ப்ரதான ஸ்வயம்
ஜீவே அஸ்மின் கலு நிர் விகல்ப மஹி மித்யுத் போத நிஷ் பாதக
சக்ரே அஸ்மின் ச விகல்போதக மஹந் தத்துவம் மஹான் கல்வசவ்
சம் புஷ்டம் த்ரி குணைஸ் தமோ அதி பஹூலம் விஷ்ணோ பவத் ப்ரேரணாத்–5-

நிர் விகல்பம் அஹம் -முழுமையான நான் –சாத்விக அஹங்காரம் -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
யானும் நீயே என்னுள் உறைவதால்

ப்ரேரணாத்-தூண்டுதலால் முன் செய்த கர்ம அனுகுணமாக-

இந்த மஹத் தத்வம் முக் குணங்களின் உருவமாக இருந்தாலும் சத்வ குணத்தையே பிரதானமாகக் கொண்டு
ஜீவன் இடத்தில் நான் என்னும் அறிவை உண்டாக்குகிறது –
இதுவே தமோ குணம் நிறைந்ததாக ஜீவன் இடத்தில் நான் மனிதன் என்ற அஹங்காரத்தையும் உண்டு பண்ணுகிறது

——————————–

ஸோ அஹம் ச த்ரி குண க்ரமாத் த்ரிவித தாமா ஸாத்ய வைகாரிகோ
பூயஸ் தைஜஸ தாமஸா விதி பவந் நாத்யே ந சத்த் வாத்ம நா
தேவா நிந்த்ரிய மாநி நோ அக்ருத திஸாவா தார்க பாஸ்யஸ் விநோ
வஹ் நீந்த்ராஸ் யுத மித்ரகான் விது விதி ஸ்ரீ ருத்ர சாரீர கான் –6-

புலன்களுக்கு அபிமான தேவதைகள் உண்டே -அவற்றை ஸ்ருஷ்டிப்பதைச் சொல்கிறது இதில்
அகங்காரமும் மூன்றாக வைகாரிகோ-சாத்விக -தைஜஸ-ராஜஸ -தாமச அஹங்காரம்

திசை -கேட்பது
வாயு -தொடுவது –
ஸூர்யன் -பார்க்க
வருணன் –
அஸ்வினி தேவர்கள் -நுகர்தல்
அக்னி
இந்திரன்-கைகளுக்கு
மித்ரன்-
விதி பிரஜாபதி -இனப் பெருக்கம்
விபு -சந்திரன்
ருத்ரன் -அஹங்காரம் அபிமானி தேவதை
சரீர தேவதை ஜீவர்களுக்கு அபிமானி தேவதை

இந்த அஹங்காரம் தோன்றிய உடன் சத்யம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று தன்மைகளை அடைகிறது
முதலாவதான சத்வ அஹங்காரம் ஞான இந்திரியங்களையும்-கர்ம இந்திரியங்களையும்-உள் இந்திரியங்களையும்
அவற்றுக்கு அபிமான தேவதைகளையும்
திசை வாயு ஸூர்யன் வருணன் அஸ்வினி தேவர்கள் அக்னி இந்திரன்
மித்ரன் பிரஜாபதி சந்திரன் ப்ரம்மா ருத்ரன் முதலியவர்களைப் படைத்தது
அக்னி வாய் /இந்திரன் கைகள் /விஷ்ணு கால்கள் /மித்ரன் மல ஜலம் கழிவு /பிரஜாபதி -பிரஜை உத்பத்தி /
மனஸ் புத்தி அஹங்காரம் சித்தம்-உள் இந்திரியங்கள்
மனஸ் -சந்திரன் /ப்ரம்மா புத்தி ஞானம் /ருத்ரன் அஹங்காரம் /ஷேத்ரஞ்ஞன்–சித்தம் நினைவு
திக்கு -கேள்விக்கு / வாயு -ஸ்பர்சதுக்கு / ஸூர்யன் பார்வைக்கு /வருணன் -ருசிக்கு /அஸ்வினி தேவதைகள் நுகர்ச்சிக்கு

——————

பூமன் மானஸ புத்த் யஹம் க்ருதி மிலச் சித்தாக்ய வ்ருத்த்யன்விதம்
தச் சாந்த கரணம் விபோ தவ பலாத் சத்தவாம்ச ஏவா ஸ்ரு ஜத்
ஜாதஸ் தைஜ சதோ தசேந்த்ரிய கணஸ் தத் தாம சாம்சாத் புன
ஸ்தன் மாத்திரம் நபசோ மருத் புரபதே சப்தோ அ ஜனி த்வத் பலாத் –7-

உணர்வு பூர்வகம் -மனஸ்ஸூ mind
அறிவு பூர்வகம் -புத்தி intellect
அஹங்காரம்
கூடி சித்தம் நினைவாற்றல்
உள் இந்திரியம் -இந்த நான்கும் சேர்ந்தது

ஆகாசம் ஒலி சப்தம் தன்மாத்திரை

ஓ குருவாயூரப்பா உலகு எங்கும் வியாபித்தவனே உனது வலிமையினால் ஸத்வ குணமானது
மனஸ் புத்தி அஹங்காரம் இவற்றோடு கூடிய சித்தம் என்கிற சாத்விக அகங்காரத்தை உண்டாக்கியது

தைஜ-ரஜோ குணமானது பத்து இந்திரியங்களை உண்டாக்கியது

தமோ குணமானது நபசோ-ஆகாசத்தில் ஸூஷ்ம-சப்தோ- -தன் மாத்ரை -சப்தத்தை உண்டாக்கியது

ஒலி -sound -ஸ்ருஷ்டிக்கு பிரதானம் -பிரணவம்

——————–

சப்தாத் வ்யோம தத ச சர்ஜித விபோ ஸ்பர்சம் ததோ மாருதம்
தஸ்மாத் ரூபமதோ மஹோ அத ச ரஸம் தோயம் ச கந்தம் மஹீம்
ஏவம் மாதவ பூர்வ பூர்வ கல நாத் ஆத்யாத்ய தர்மான்விதம்
பூத கிராமமிதம் த்வமேவ பகவன் ப்ரகாசாயஸ் தாமஸாத் –8-

ஓ குருவாயூரப்பா தங்கள் தாமச அஹங்கார அம்சத்தால் சப்தத்தில் இருந்து ஆகாசத்தையும் –
ஆகாசத்தில் இருந்து ஸ்பர்சமும் -ஸ்பர்சத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து ரூபம் -ரூபத்தில் இருந்து தேஜஸ் –
தேஜஸ்ஸில் இருந்து சுவை -சுவையில் இருந்து நீர் -நீரில் இருந்து மணம் -மணத்தில் இருந்து பூமி –
ஆகியவற்றைப் படைத்தீர்கள் -இப்படி உண்டானவைகளின் சேர்க்கையினால் அவற்றின்
தன்மைகளைக் கொண்ட பஞ்ச பூதங்களையும் படைத்தீர்கள்

ஆகாசம் ஒலி
வாயு ஸ்பர்சமும் -ஒலி சேர்ந்து
அக்னி -வடிவம் -ரூபமும் -ஸ்பர்சமும் ஒலியும்
நீர் -சுவையும் ரூபமும் ஸ்பர்சமும் ஒலியும்
பூமி -மண் வாசனை கந்தமும் -சுவையும் -ரூபமும் -ஸ்பர்சமும் -ஒலியும்
பூநிலா ஐந்துமாய் இத்யாதி

—————-

ஏதே பூத கணாஸ் ததேந்திரிய கணா தேவாஸ் ச ஜாதா ப்ருதங்
நோ ஸே குர் புவந அண்ட நிர் மிதி விதவ் தேவைரமீ பிஸ் ததா
த்வம் நாநா வித ஸூக்திபிர் நுத குணஸ் தத்த்வாந் யமூந் யாவிசம்
ஸ்சேஷ்டா சக்தி முதீர்ய தாநி கடயன் ஹைரண்ய மண்டம் வியதா–9-கடயன்-இணைத்து அருளி

இப்படித் தோன்றிய பஞ்ச பூதங்களும் பஞ்ச இந்திரியங்களும் -தேவாஸ்-அபிமான தேவதைகள் தனித் தனியே இருந்தால்
அவற்றால் ப்ரஹ்மாண்டத்தைப் படைக்கும் சக்தி இல்லை
அப்போது தேவர்கள் உம்மை ஸ்துதித்தார்கள் -உடனே நீர் அந்த மஹத் தத்வங்களுக்குள் பிரவேசித்து
அவற்றுக்கு கிரியா சக்தியை அளித்தீர்கள் -பிறகு ப்ரஹ்மாண்டத்தைப் படைத்தீர்கள்

—————-

அண்டம் தத் கலு பூர்வ ஸ்ருஷ்ட சலிலே அ திஷ்டத் ஸஹஸ்ரம் சமா
நிர்பிந்தந் ந க்ருதாஸ் சதுர் தச ஜகத் ரூபம் விராடா ஹ் யவம்
ஸாஹஸ்ரை கர பாத மூர்த நிவஹைர் நிஸ் சேஷ ஜீவாத்ம கோ
நிர் பாதோ அஸி மருத் புராதிப ச மாம் த்ராயஸ்ய சர்வாமயாத் –10-

ஓ குருவாயூரப்பா -நீ ஜலத்தை முதலில் உண்டாக்கினீர்கள் -ப்ரஹ்மாண்டம் அந்த நீரில் ஆயிரம் வருஷங்கள் மூழ்கி இருந்தது –
தங்கள் அதைப் பிளந்து கொண்டு ஈர் ஏழு லோக ரூபமான விராட் ரூபத்தைத் தரித்தீர்கள் –
ஆயிரக் கணக்கான தலைகள் கைகள் கால்களுடன் சகல விதமான ஜீவ ராசிகளின் வடிவமாகத் தோன்றினீர்கள்
அத்தகைய தங்கள் அடியேனை சகல விதமான ராகங்களில் இருந்தும் காத்து அருள வேண்டும்
என்று நம்பூதிரி வேண்ட அப்படியே ஆகட்டும் என்று அப்பனும் தலையை அசைத்து அங்கீ கரித்து அருளினார் –

தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேர்உதவிக் கைம்மாறாத்*
தோள்களை ஆரத் தழுவி என்உயிரை* அறவிலை செய்தனன் சோதீ,
தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்*
தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள் ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading