அஷ்டாங்க யோகங்களும் அதன் சித்திகளும் –
முதல் மூன்று தசகங்கள் ஸ்ரீ மத் பாகவதம் முதல் ஸ்கந்த அர்த்தங்கள்-
அடுத்த 4-5-6-7- தசகங்கள் இரண்டாம் ஸ்கந்த அர்த்தங்கள்-
————-
கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே பவ துபாஸனம் யயா
ஸ்பஷ்ட யஷ்ட வித யோக சர்யயா புஷ்டய ஆஸூ தவ துஷ்டி மாப் நு யாம் –1-
உன்னை ஆராதிக்கவும் தொழுவதற்கு ஏற்ற சக்தியைக் கொடுத்து அருள வேண்டும் –
அதனால் அஷ்டாங்க யோகத்தை அனுஷ்ட்டித்து உன் அருளை அடைவேன்
ஸ்ரவணம் கீர்த்தனம் போன்ற பக்தி யோகம் செய்ய உடல் ஆரோக்யமும் வேண்டுமே
அன்பு கிளர்ந்து இடைவிடாமல் பக்தி செய்வதே பக்தி யோகம்
உலகியல் சுகத்துக்காக அல்ல-புஷ்டய-முழுமையாக பக்தி யோகம் அனுஷ்ட்டித்து -உனது திரு உள்ளம் உகப்புக்காகவே –
—————
ப்ரஹ்ம சர்ய த்ரூடதாதி பிர்யமைர ஆப்லவாதி நியமைஸ் ச பாவிதா
குர்மஹே த்ருடம் அமீ ஸூகாசனம் பங்கஜாத்ய மபி வா பவத் பரா –2-
ஸ்நானம் ப்ரஹ்மசர்யம் காப்பது போன்றவற்றால் பக்தர்களாகிற நாம் பாவிதா -தூய்மை அடைகிறோம்
யம நியம ஆசன ப்ரத்யாஹார தாரணாதி அஷ்டாங்கங்களை செய்து
பத்மாஸனம் ஸூகாஸனம் முதலியவற்றை உறுதியாக செய்கிறோம்
யமம் நியமம் ஆசனம் -மூன்றும் இதில்
தீயன விளக்குதல் யமம்
நல்லன செய்தல் நியமம்
பவத் பரா-உன்னிடமே மனத்தைச் செலுத்தி
—————–
தார மந்த்ர அநு சிந்த்ய சந்ததம் பிராண வாயு மபியம்ய நிர்மலா
இந்திரியாணி விஷயா ததா பஹ்ருத்யாஸ் மஹே பவ துபாஸ நோந் முகா –3-
ஓங்காரத்தை ஜபித்தும் பிராணாயாமம் செய்தும் தூய்மை அடைகிறோம்
இந்திரியங்களை அடக்கித் தங்கள் உபாசனையில் ஈடுபடுகிறோம்
இதனால் உனது திவ்ய மங்கள விக்ரகத்தில் ஈடுபட்டு தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலை அடைந்து
ப்ரஹ்ம அனுபவத்தில் திளைத்து இருப்போம்
நாலாவது ஐந்தாவது அங்கங்களான பிராணாயாமம் ப்ரத்யாஹாரம்-வெளிப் புலன்களை அடக்குதல் இதில்
தாரம் -ஓங்காரம் -பிறவிக் கடல் கடக்க வைக்கும்
சந்ததம்-எப்பொழுதும்-
————-
அஸ்புடே வபுஷி தே ப்ரயத் நதோ தாரயேம திஷணாம் முஹுர் முஹு
தேந பக்தி ரஸ மந்தராத்ரதா முத் வஹேம பவதங்க்ரி சிந்தகா –4-
தங்கள் திவ்ய சரீரம் வேதங்களாலும் விளக்க முடியாதது -சாதாரண மானவர்களுக்குப் புலப்படாதது –
அத்தகைய திவ்ய மங்கள விக்ரஹத்தை மிகுந்த பிரயத்தனத்துடன் தியானித்து ஞானம் கனிந்த பக்தியை வளர்க்கிறோம்
தாரணம் -ஆறாவது அங்கம் -மனதை அடக்குதல் இதில்
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே என்னும் நிலை வர வேண்டுமே
முதலில் தெளிவாகத் தெரியாதே -அஸ்புடே வபு
நீராய் அலைந்து கரைந்து உருக வேண்டுமே -பக்தி ரசத்தால்
—————-
விஸ்புடா வயவபேத ஸூந்தரம் த்வத் வபுஸ் ஸூசிர சீல நாவசாத்
அஸ்ரமம் மனசி சிந்தயா மஹே த்யான யோக நிரதாஸ் த்வத்ஸரயா –5-
உன்னையே அண்டி இருக்கும் நாங்கள் த்யானத்தில் ஈடுபட்டு பலகாலம் பயின்றதனால் மிக அழகிய
திவ்ய மங்கள விக்ரஹத்தின் திவ்ய அங்கங்களை ஒவ் ஒன்றாக மனக் கண்ணால் எளிதாகக் காண்கிறோம்
ஏழாவது அங்கம் த்யானம் இதில் -ஸூசிர-நீண்ட நாள் த்யானம் செய்து -த்யான யோகத்தில் ஈடுபட்டு
விஸ்புடமாக தெளிவாக திரு மேனியைக் கண்டு விஸ்புடா
அவயவ சோபை –
—————-
த்யாயதாம் ஸகல மூர்தி மித்ருசீ முந் மிஷந் மது ரதா ஹ்ருதத் மநாம்
ஸாந்த்ர மோத ரஸ ரூப மாந்தரம் ப்ரஹ்ம ரூப மயி தே அவபாசதே –6-
ஓ குருவாயூரப்பா இப்படிப்பட்ட உன் பரிபூரணமான அழகு திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானிப்பதால்
ஆனந்தமான மனதை உடையவர்களாக இருக்கிறோம்
அதனால் உனது திவ்ய மங்கள விக்ரஹம் ஆனந்த ரூபமான பர ப்ரஹ்மமாகவே எங்கள் மனசில் விளங்குகிறது –
இதுவும் த்யானம் பற்றியே –
இனிமையான அனுபவம் -திருமேனி அனுபவிக்க அனுபவிக்க அப் பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
அபஹ்ருத மனம்
வஞ்சக் கள்வன் மா மாயன் கள்ளழகர்
கண்டவர் மனம் கவரும் கள்வன்
உபாஸகன் உள்ளத்தில் மிகவும் பிரகாசமாக தன்னைக் காட்டி அருளுவான்-
—————-
தத் ஸமாஸ் வதன ரூபிணீம் ஸ்திதம் த்வத் ஸமாதி மயி விஸ்வ நாயக
ஆஸ்ரிதா புனரதஸ் பரிஸ் யுதாவாரபே மஹிசா தாரணாதிகம் –7–
ஜகந்நாதா உன் வடிவு அழகில் லயித்த நாங்கள் தன்னை மறந்த நிலையான-
நிர் விகல்ப சமாதியை அடைந்துள்ளோம்
இதில் இருந்து நழுவினால் மறுபடியும் தாரணை முதலியவற்றைத் தொடங்குவோம் –
ஸமாதி-அவன் இடமே நிலை பெற்று இருக்கும் அவஸ்தை – -ப்ரஹ்மானந்தம் -எட்டாவது அங்கம்
இத்தகைய நிலையை அடைந்து -மீண்டும் இந்த சமாதி நிலையில் இருந்து ஒரு வேளை நழுவினால்
மறுபடியும் மீண்டும் யமம் தொடங்க வேண்டாம் -ஆறாவது அங்கமான தாரணையில் மனம் அடக்கி வைக்க வேண்டும்
———————-
இத்தம் அப்யசந நிர்பரோல்லசத் த்வத் பராத்ம ஸூக கல்பிதோத்சவா
முக்த பக்த குல மௌலிதாம் கதா சஞ்சரேம ஸூக நாரதாதிவத் -8-
நிர்பரோல்லசத்-நிர்பர உல்லச மலர்ந்து கொண்டே இருக்கும் பரமானந்தம் -இந்த பக்தி யோக பலன்
மௌலிதாம் கதா -விண்ணவருக்கும் முதல்வராக -அவர்களும் கொண்டாடும் படி
இத்தம்-இப்படிச் செய்வதால் எங்களுக்கு உன் அழகு திவ்ய மங்கள விக்ரஹ அதிசயம் தெரியத் தொடங்குகிறது –
இதுவே பரம புருஷார்த்தம்
அந்த பர ப்ரஹ்ம அனுபவத்தால் பக்த ஸ்ரேஷ்டர்களாக ஆவோம்
ஜீவன் முக்தர்களான ஸூகர் நாரதர் போல் நாங்களும் சஞ்சரிப்போம் –
உனது திவ்ய நாம குண கீர்த்தநம் செய்து கொண்டே வாழ்வோம்
————
த்வத் ஸமாதி விஜயே துய புனர் மங்ஷு மோக்ஷ ரசிக க்ரமேண வா
யோக வஸ்யம் அநிலம் ஷடாஸ்ரயைர் உந்நயத் யஜ ஸூஷும்நயா சனை –9-
பிறப்பு இல்லாதவனே -கிரம முக்தியையும் ஸமாதி நிலையையும் அடைய விரும்பும் யோகி
பிராணனை பிராணாயாமத்தால் அடக்குகிறான்
பின்பு மூலாதாரம் முதலிய ஆறு ஸ்தானங்களால் அப் பிராண வாயுவை மேலே கொண்டு செல்கிறான்
பக்தி யோக ஸித்தி -மோக்ஷம் அடையும் க்ரமம்
க்ரம முக்தி -மது வித்யை -தேவர்களாகி பின்பு ஸ்ரீ ஸ்ரீ வைகுண்டம் செல்வாராம் உண்டு
சிலர் நேராகவே -மங்ஷு-உடனே -அவர்கள் பக்குவ நிலையைப் பொறுத்து இரண்டு வகையும் உண்டே
லோகோ பின்ன ருசி அன்றோ
அநிலம்-காற்று -அநிலாத்மஜன் வாயு குமாரன்
யோக வஸ்யம் அநிலம் -யோகத்தால் வசப்படுத்தப் பட்ட காற்று -பிராணன்
ஷடாஸ்ரயைர்-ஆறு சக்கரங்கள் -மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம்–மணிப்பூரம் -அநாகதம் -விஸூத்தி -ஆஞ்ஞா
ஸூஷும்நயா-101 நாடி மூலம் உயர்த்தி -சனை-மெதுவாக-
——————
லிங்க தேஹமபி சந்த்யஜன் நதோ லீயதே த்வயி பரே நிராக்ரஹ
ஊர்த்வ லோக குதுகீது மூர்தத சார்த்தமேவ கரணைர் நிரீயதே –10-
பின்பு அவன் பூத உடலை விட்டு (லிங்க-ஸூஷ்ம ) (அப்ராக்ருத சரீரம் பெற்று )சரீரத்தை அடைந்து தங்கள் இடத்தில் மறைந்து விடுகிறான்
க்ரம முக்தி -படிப்படியாக விரும்புபவன் ஐந்து ப்ராணன்கள் மனம் புத்தி ஐந்து இந்திரியங்கள் உடன்
தலை வழியே உயர கிளம்புகிறான்-சார்த்தமேவ-இவற்றுடன் கூடவே -மற்ற லோகங்களுச் செல்பவன் ஸூஷ்ம சரீரத்துடன் செல்கிறான்
——————–
அக்னி வாஸர வலர்ஷ பஷைகர் உத்தராயண ஜூஷா ச தைவதை
ப்ராபிதோ ரவி பதம் பவத் பரோ மோதவான் த்ருவ பதான் தமியதே –11-
உன் பக்தன் அக்னி பகல் சுக்ல பக்ஷம் இவற்றுக்கு உரிய தேவதைகளால் உத்தராயண தேவதை –
ஸூர்ய லோகம் சொல்லுகிறான் -மிகவும் சந்தோஷம் அடைந்தவனாக த்ருவ பதமும் அடைகிறான்
அவன் உன்னையே அடைந்து மீண்டும் பிறப்பதே இல்லை-அர்ச்சிராதி மார்க்கம் –
—————–
ஆஸ்திதோ அர்த மஹாராலயே யதா சேஷ வக்த்ர தஹநோஷ் மணார்த்யதே
ஈயதே பவது பாஸ்ரயஸ் ததா வேதஸ பதமத புரைவ வா –12-
ஓ குருவாயூரப்பா துருவ பதம் அடைந்த பின்பு பிறகு மஹர் லோகத்தை அடைகிறான் –
தான் புண்யத்தால் ஆதிசேஷனின் மூச்சுக் காற்று உஷ்ணம் தாக்குவதற்கு முன்பே -வேதஸ-ப்ரம்ம லோகத்தை அடைகிறான் –
பிரளயம் வர அறிகுறியாக வெப்பக்காற்று ஆதி சேஷன் கக்க-
—————-
தத்ர வா தவ பதே அதவா வசந் ப்ராக்ருத பிரளய ஏதி முக்ததாம்
ஸ்வேச்சயா கலு புரா விமுச்யதே சம் விபத்ய ஜக தண்ட மோக்ஷஸா –13-
அந்த சத்ய லோகத்தில் அல்லது தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட ஏதாவது லோகத்தில் வாழ்ந்து கொண்டு பிரளயத்தின் போது மோக்ஷம் அடைகிறான்
மீண்டும் பிறவி சூழலில் சிக்காமல் -தனது யோக பலத்தால் ப்ரஹ்மாண்டம் சத்ய லோகத்தை விட்டு வெளியேறி ஜீவன் முக்தன் ஆகிறான்
———————–
தஸ்ய ச ஷிதி பயோ மஹா அநில த்யோ மஹத் பிரகிருதி சப்த காவ்ருதீ
தத் தத் ஆத்ம கதயா விசன் ஸூகி யாதி தே பதம் அநாவ்ருதம் விபோ –14-
ஓ குருவாயூரப்பா பூமி நீர் நெருப்பு காற்று ஆகாசம் மஹத் தத்வம் மாயை ஆகிய ஏழும் ப்ரஹ்மாண்டத்தை
-ஸப்த ஆவரணம் -மறைத்துக் கொண்டு இருக்கின்றன
உன் பக்தன் அவ் ஒவ் ஒன்றுக்கும் உள்ளும் அந்த அந்த உருவமாகவே பிரவேசிக்கிறான்
ஸுவ்க்யமாய் தங்களுடைய ஸ்தானத்தை-உமது திருவடித் தாமரையை அடைகிறான்
————-
அர்ச்சிராதி கதி பிரசந் –ஜகத் பதே ந பஜதே
தத் சித் ஆத்மக மங்கள குணங்களை உச்சரித்து இருக்கும் அடியேனை
குருவாயூரப்பா நீயே பாஹி மாம் –15——–
——–
நான்காவது தசகம் முற்றியது .
——
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply