ஸ்ரீமந் நாராயணீயம் – – தசகம் – 03 –உத்தம பக்திஸ்ய குண —

பக்தர்களின் தன்மையை அருளிச் செய்கிறார் இதில்-

படந்தோ நாமானி ப்ரமத பரஸிந்தௌ நிபதிதா :
ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா :
சரந்தோ யே பக்தாஸ் த்வயிகலு ரமந்தே பரம் அமூன்
அஹம் தந்யாந் மந்யே ஸமதிகத ஸர்வாபிலஷிதாந் !!–1-

வரத என்றே அழைக்கிறார் -வரங்களை அளிக்கும் ஸ்ரீ அப்பனே !! உனது நாமங்களை படித்து கொண்டும் , உன்னுடைய அழகான திருமேனியை
த்யானித்து கொண்டும் அமிர்தம் என்னும் கடலில் மூழ்கியுள்ளவர் யார் ?
உனது அடியார்கள். உனது திருக்கல்யாண குணங்களையும் அவற்றை விளக்கும் கதைகளையும் கூறிக் கொண்டுள்ளனர்.
அவர்கள் உன்னிடம் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் .சரந்தோ-க்ஷேத்ரங்களில்  சஞ்சாரம் செய்து
இத்தகைய உனது பக்தர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் என்று நான் கூறுகிறேன்.

அமூன் -இவர்களே -அவாப்த ஸமஸ்த காமர் -ஆவார்கள் -கரண த்ரயங்களாலும் ஸர்வவித ஒழிவில் காலம் உடனாய் மன்னி வழு விலா கைங்கர்யங்கள் பண்ணப் பெறுவார்கள் அன்றோ –

——

கதக்லிஷ்டம் கஷ்டம் தவ சரண சேவா ரஸபரேபி
அனாஸக்தம் சித்தம் பவதி பத விஷ்ணோ குரு தயாம்
பவத் பாதாம் போஜா ஸ்மரண ரசிகா நாம நிவஹான்
அஹம் காயம் காயம் குஹசன விவத்ஸ்யாமி விஜனே !!–2-

அனாஸக்தம்-ஈடுபாடு இல்லாமல் -ஆஸக்தம் -ஈடுபாடு/நாம நிவஹான்-திரு நாமங்களின் தொகுப்பு /குஹசன-சம்சாரிகள் இடம் கூடாமல் தனியாக

விஷ்ணுவே !! குருவாயுரப்பா !! வெளியுலும் உள்ளும் உண்டாகும் நோயினால் கஷ்டப்படும் மனமானது,
உன்னுடைய திருவடியில் நான் ஈடுபட்டாலும், அதனை திருப்தியுடன் ஈடுபடவிடாது தடுக்கிறது.
ஆகவே எனது பற்று குறைகிறது . இது கஷ்டம் அன்றோ ? கருணை காட்ட மாட்டாயா ?
சம்சாரிகள் மத்யம் இல்லாமல்- தனியான ஓர் இடத்தில் உனது திருவடித் தாமரைகளை த்யாநித்தும் அதனால் மனம் நெகிழ்ந்தும்
உனது திரு நாமங்களை கூறிக் கொண்டும் இருக்க விரும்புகிறேன்.

நைச்ய அனுசந்தானம் பண்ணுகிறார் –
வாதம் -மூட்டு வலி-மனம் வருந்தி -உனது மேல் விருப்பம் கொள்ளாமல் –

———

க்ருபா தே ஜாதா சேத் கிம் இவ நஹி லப்யம் தநு ப்ரதாம்
மதீய க்லேச வுக ப்ரசமன தசா நாம கியதீ
ந கே கே லோகே அஸ்மின் அநிசமயி சோகாபி ரஹிதா :
பவத் பக்தா முக்தா : ஸுக கதி மஸக்தா விதததே !!—3-

அயி-குருவாயுரப்பா !! உனது கிருபை மனிதனிடம் இருக்கும் என்றால் அவனால் அடைய முடியாதது என்ன உள்ளது ?
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனான உனக்கு இது போன்று என்னுடைய துன்பங்களை நீக்குவதும் உனக்கு மிகவும் சுலபமானதே !
இந்த உலகில் உனது அடியார்கள் எந்த நேரத்திலும் துன்பம் என்பதே இல்லாமல் பற்று இல்லாதவர்களாக இன்பமாக உள்ளனரே !!

அச்சுவை பெறினும் வேண்டாம் என்று உன்னையே இங்கேயே அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்களே –

உனது கிருபையின் மஹிமையை என் சொல்வேன் –

——–

முனி ப்ரவ்டா ரூடா ஜகதி கலு கூடாத்ம கதயோ
பவத் பாதாம் போஜ ஸ்மரண விருஜோ நாரத முகா
சரந்தீஸ ஸ்வைரம் ஸதத பரி நிர் பாத
சதா நந்தாத்வைத பிரஸர பரி மக்நா கிம் பரம் –4-

முனி -மனன சீலர்
ப்ரவ்டா -சிரேஷ்டர்
ரூடா ஜகதி -ஜகத்தில் புகழ் பெற்றவர்
கலு கூடாத்ம கதயோ -சஞ்சாரம் மறைத்து
பவத் பாதாம் போஜ ஸ்மரண விருஜோ நாரத முகா -நாரதாதிகள் -திருவடி இணை தியானித்து -பிறவித்துயர் -மோக்ஷ பிராப்தி
சரந்தீஸ ஸ்வைரம் -இஷ்டம் போல் சஞ்சாரம் செய்து
ஸதத பரி நிர் பாத -எப்போதும் எங்கும் ஒளி வீசும்
சதா நந்தாத்வைத பிரஸர பரி மக்நா – ஒப்பற்ற பேர் ஆனந்தமான பக்தி வெள்ளத்தில் மூழ்கி
கிம் அபரம் -வேறே என்ன வேண்டும்

நாரதர் முதலிய முனிவர்கள் ஞானத்தைப் பெற்று தங்கள் பாத சேவையினால் துன்பத்தில் இருந்து விடுபட்டவர்கள்
எப்போதும் பிரகாசிக்கும் பரமானந்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பார்கள்
அவர்கள் விரும்பியவாறு சஞ்சரிக்கின்றனர் -அவர்களுக்கு இதை விட வேறே அடைய வேண்டியது என்ன இருக்கிறது –

பக்தியே பேர் ஆனந்தம் என்கிறார் இதில்


பக்தியே எல்லாத் துன்பங்களையும் போக்கி அருளும் என்கிறார் இதில்

பவத் பக்தி ஸ்பீதா பவது மம ஸைவ பிரசமயேத்
அசேஷ கிலேசவ்கம் ந கலு ஹ்ருதி ஸந்தேஹ கணிகா
ந சேத் வியாஸஸ் யோக்திஸ் தவ ச வசனம் நைவ மவஸோ
பவேந் மித்யா ரத்யா புருஷ வசன ப்ராய மகிலம் –5-

ஓ குருவாயூரப்பா எனக்கு தங்கள் இடத்தில் அளவற்ற பக்தி உண்டாக வேண்டும்
அது எனது துன்பங்கள் யாவற்றையும் போக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை
அப்படி இல்லை என்னில் வியாஸர் வாக்கும் உன்னுடைய வாக்கும்  வேத வாக்கும் நாடோடி (ரத்யா புருஷ -தெருவில் போகும் புருஷர் )பேச்சைப் போலே பொய்யாகவே அமைந்து விடும்


பக்தி ஒவ்வொரு நிலையிலும் பேர் ஆனந்தம் கொடுக்குமே

பவத் பக்தி : தாவத் ப்ரமுக மதுரா த்வத் குண ரஸாத்
கிமபி ஆருடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
புன : அந்தே ஸ்வாந்தே விமல பரிபோதோ தயமிலன்
மஹானந்தாத்வைதம் திசதி கிமத : ப்ரார்த்யம் அபரம் !!–6-

தாவத்-உண்மையாகவே
குண ரஸாத்-குண அனுபவ ரஸம்
ப்ரமுக மதுரா-தொடக்கமே ஆனந்தமாக இருக்கிறது
ஆருடா-கொஞ்சம் வளர்ந்த நிலையிலே
கிமபி ஆருடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
-பிரதிபந்தங்கள் போக்கி
மேலே மலர்ந்த பக்தி பகவத் அனுபவ ஒப்பற்ற பேர் இன்பம் -பரிபூர்ண பகவத் அனுபவம் தருகிறது
இதற்கு மேல் என்ன பிரார்த்திக்க வேண்டும்

ஸ்ரீ அப்பனே !! உன்னிடம் கொள்ளும் பக்தியானது முதலே இனிமை அளிக்கிறது . அது மேலும் வளரும்போது
அனைத்து துயர்களையும் நீக்குகிறது . அது மேலும் முதிர்ச்சி அடையும் போது இதயத்தில் மிகுந்த ஞானம் ஏற்ப்படுத்தி
ப்ரஹ்ம ஐக்கியத்தையும் -சாம்யா பத்தி -அளிக்கிறது . இதனை விட வேறு எதுவும் வேண்டுமோ ?


அனைத்து கரணங்களும் -ஜிஹ்வே கீர்த்தனை -முகுந்த மாலை போல் -அவன் இடமே ஈடுபட பிரார்திக்கிறார்

விதூய க்லேசான் மே குரு சரண யுக்மம் த்ருத ரஸம்
பவத் ஷேத்ர ப்ராப்தௌ கரமபி ச தே பூஜன விதௌ
பவன் மூர்த்யா லோகே நயனம் அத தே பாத துலஸி
பரிக்ராணே க்ராணம் ச்ரவணம் அபி தே சாரு சரிதே–7-

குருவாயுரப்பா !! நீ என்னுடைய துயரம் அனைத்தையும் நீக்க வேண்டும். எனது கால்கள் உனது கிளை அடையும்படி செய்ய வேண்டும் .
எனது கைகள் உனக்கு பூஜை செய்ய வேண்டும். எனது கண்கள் உனது திருமேனியை மட்டுமே காண வேண்டும் .
எனது மூக்கு உனது திருவடிகளில் உள்ள துளசியை மட்டுமே நுகர வேண்டும்.
எனது காதுகள் உனது லீலைகள் அடங்கிய கதைகளை மட்டும்மே கேட்க வேண்டும் . இவற்றை நீ செய்வாயாக !!


நோய்களை நீக்கி அருள பிரார்த்தனை-(ஆதி நோயைக் குறித்த பயம் -நோய் -வியாதி )

ப்ரபூதாதி வ்யாதி ப்ரஸப சலிதே மாமக ஹ்ருதி
த்வதீயம் தத் ரூபம் பரம ரச ஸுக சித் ரூபம் உதியாத்
உதஞ்சத் ரோமாஞ்ஜோ கலித பஹு ஹர்ஷாஸ்ரு நிவாஹோ
யதா விஸ்மர்யாஸம் துருபசம பீடா பரிவான் !!–8–

குருவாயூரப்பனே !! என்னுடைய உள் மனமானது எனக்கு ஏற்பட்டுள்ள மிகுந்த துன்பங்களாலும் நோய்களாலும் கலக்கமுடன் உள்ளது .
அவை நீங்க வேண்டும் என்றால் அந்த உள்ளத்தில் உனது திருமேனி தெரிய வேண்டும். அப்படி தோன்றும் காலத்தில்
நாம் மயிர் கூச்சல் பெற்று கண்கள் ஆனந்த கண்ணீர் விடுத்து அதனால் இந்த துயரங்களை மறந்து விடுவேன் .
இதனை அருள வேண்டும் .(பாடிப் பாடி கண்ணீர் மல்கி வாடி வாடும் இவ் வாண் நுதலே )


பக்தியைத் தந்தே அருள வேணும் -(மருத்கேஹாதீச-குருவாயூரப்பனே )

மருத்கேஹாதீச த்வயி கலு பாரஞ்சோபி ஸுகினோ
பவத் ஸ்னேஹீ ஸ : அஹம் ஸுபஹு பரிதப்யே ச கிமிதம்
அகீர்த்திஸ்தே மாபூத் வரத கத பாரம் பிரச மயந்
பவத் பகதோத்கம்சம் ஜடிதி குரு மாம் கம்ஸ தமன !!–9-

குருவாயுரப்பா !! கம்சனை அழித்தவனே !! வரங்களை அளிப்பவனே !! உன்னிடம் பக்தி இல்லாதவர்கள் கவலை இன்றி உள்ளனர் .
உன்னிடம் மிகுந்த பக்தி உடைய நான் சிரமப்படுகிறேன். இது ஆச்சர்யமாக உள்ளது . இதனால் உன்னை அடைந்தவர்களை
நீ காப்பற்றுவதில்லை என்று அவப் பெயர் உனக்கு வரக் கூடாது.
என்னுடைய வியாதிகளை நீக்கி என்னை உனக்கு சிறந்த அடியேனாக ஏற்க வேண்டும் .

————

கி முக்தைர் பூயோ பிஸ்த்வ ஹி கருணா யாவதுதியா
தஹம் தாவத் தேவ ப்ரஹித விவிதார்தப்ரலபித
புரஸ் கில் ரூப்தே பாதே வரத தவ நேஷ்யாமி திவஸா
நியதா ஷக்தி வியக்தம் நதி நுதி நிஷேவா விரஸயன் –10-

தேவா அதிகமான சொற்கள் கூறி என்ன பயன் -உனக்கு என் மேல் எப்போது கருணை உண்டாகுமோ உண்டாகட்டும்
அழுது புலம்பல் என்னால் முடிந்த வரைக்கும் உன்னை ஸ்தோத்ரம் நமஸ்காரங்கள் செய்து
உனது திருவடித் தாமரைகளிலே பணிவேன் -இதுவே என் முடிவு –

மூன்றாவது தசகம் முற்றியது .

——

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading