ஸ்ரீ நாராயணீயமும் ஸ்ரீ நாராயண பட்டத்ரியும்–
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன், -திரு நாவாய் அருகில் -மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்த நாராயண பட்டத்ரி
அவர்களால் இயற்றப்பட்ட ஸ்லோகங்கள்.
ஸ்ரீ நாராயணீயம் என்ற . அற்புதமான, அழகான தொகுப்பு. ஸ்ரீமத் பாகவத ஸாராம்சம்.
பட்டத்ரி, தனது தந்தையிடத்திலும், அச்சுத பிஷாரடி என்ற குருவிடத்திலும்
தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம் போன்ற சாஸ்திரங்களைக் கற்றார்.
இதை எழுதிய மேல்புத்தூர் நாராயண பட்டதிரி பிறந்தது கி.பி.1560 வது ஆண்டு.
இவர் 106 வயது வரை வாழ்ந்ததாக சிலர் கூறுகின்றனர். பாரதப்புழை என்ற ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற
திருத்தலத்திற்கு அருகில் மேல்புத்தூர் இல்லம் உள்ளது. இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகாபண்டிதர்.
பட்டதிரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார். ரிக் வேதத்தை மாதவாசாரியார் என்பவரிடம் அத்யயனம் செய்தார்.
தர்க்க சாஸ்திரத்தை தாமோதராசாரியார் என்பவரிடம் கற்றார்.
வியாகரணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் கற்றுப் பதினாறு வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கினார்.
சிறிது காலத்திற்குப் பின் அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்திய பொழுது
பட்டதிரி அவருக்குச் சேவை புரிந்தது மட்டுமல்லாமல் அந்த நோயையும் யோக பலத்தால் தானே ஏற்றுக் கொண்டு
அங்கங்கள் முடங்கியவரானார். குருவாயூரில் போய்த் தவம் புரிய நிச்சயித்துத் தன்னை அங்கு எடுத்துப்போகச் செய்து
நாள்தோறும் பத்து ஸ்லோகம் பாடலானார்.
நூறு நாட்களில் பாடி முடித்தபொழுது (1587 வது வருஷம் விருச்சிகம் 28, 27.11.1587 ) நோயிலிருந்து விடுபட்டார்.
அப்போது அவர் வயது 27. அவர் பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம், வியாகரணம் முதலிய சாஸ்திரங்களில்
புகழ் மிக்க விற்பன்னராக விளங்கி நீண்டகாலம் வாழ்ந்தார்.
அச்சுத பிஷாரடி வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதைக் கண்ட பட்டத்ரி, குரு தக்ஷிணையாக,
அந்த வாத ரோகத்தை முன்வந்து ஏற்றுக்கொண்டார். உடனே, வாத ரோகம், பட்டத்ரியைப் பீடித்து அதனால் மிகவும் அவதிப்பட்டார்.
பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர் கவிஞர், பக்தர், ஜோசியர்.
அவர், பட்டத்ரியை குருவாயூருக்குச் சென்று “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார்.
அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள்.
ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.
உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து,
அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”.
மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது .
ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன.
ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பாராம்.
குருவாயூரப்பன் “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவாராம்.
ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் “ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்தி தான் எனக்குக் கதி,
என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்” என்ற வரிகளை நோக்கும்பொழுது, நாராயண பட்டத்ரி தன் ரோகத்தை மட்டுமின்றி
பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும் போக்கவே பிரார்த்தித்திருக்கிறார் என்று தெரிகிறது.
“என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்து,
தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விசாலமான எண்ணம் தெரிய வருகிறது.
இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் ஊகித்துக் கொள்ள வேண்டும். கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி.
நாராயணீயத்தில் பக்தியே பிரதானம். ஆகையால், இதைப் படிக்கும்போது பகவத் தியானமே சிறந்த வழி,
பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வருகிறது.
இதை எழுதி முடித்ததும், அவருடைய வாதரோகம் நீங்கிவிட்டது. ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய சரிதத்தைக் கூறுவதாலும்,
நாராயண பட்டத்ரி என்பவர் இயற்றியதாலும் , நாராயணீயம் என்று பெயர் பெற்றது.
நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும்,
கிரக பீடை நீங்கும். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி,
ஆரோக்யம் முதலியன கிடைக்கும், ராஸக்ரீடை, ருக்மிணி கல்யாணம் தசகங்களைப் படித்தால் ஆண்-பெண் இருபாலருக்கும்
விவாகம் கூடிவரும் என்று எத்தனையோ பலன்களைச் சொல்கிறது பலஸ்ருதி.
தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நமது, பிரச்னைகள் , இன்னல்கள், மன அழுத்தம் குறைந்து ,
நிம்மதியையும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
பட்டத்ரி, ஸ்ரீ நாராயணீயத்தை நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ம் நாள், நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது
இன்றும் குருவாயூர் குருவாயூரப்பன் கோவிலில், குருவாயூரப்பன் சந்நிதியின் உள்செல்லும் வழியில்
குருவாயூரப்பனுக்கு வலது புறத்தில் (உள்ளே செல்லும் பக்தர்களுக்கு இடது புறத்தில்)
மேல்புத்தூர் நாராயணபட்டதிரி அமர்ந்து ஸ்ரீமந்நாராயணீயம் ஸ்லோகங்களை எழுதிய இடம்
பித்தளை சாசனத்தில் குறிப்பிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அஸ்மின் எனத் துவங்கும் ஸ்லோக பலன்
குறிப்பாக அஸ்மின் எனத் தொடங்கும் 13 வது சுலோகம்
(எட்டாவது தசகம் – பிரளயமும் சிருஷ்டியும் 13வது சுலோகம் நோய்கள் தீர்வதற்கு பரிகார சுலோகமாகக் கருதப்படுகிறது.
அஸ்மின் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த-முத்தாபித-பத்மயோனி:|
அனந்த பூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலயவாஸ விஷ்ணோ ||
“பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம்
தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை யடக்கியருள வேண்டும்”
நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம் சதா
வதாமி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தாதமவ்யயம்
கண்டேன் நான் கண்ணனை கார்மேக வண்ணனைக் குருவாயூர் கோவில் நடையில்
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
( கண்டேன் நான் கண்ணனை )
விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள் அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
( கண்டேன் நான் கண்ணனை )
இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
( கண்டேன் நான் கண்ணனை )
சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
( கண்டேன் நான் கண்ணனை )
அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
( கண்டேன் நான் கண்ணனை )
உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
( கண்டேன் நான் கண்ணனை )
குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
( கண்டேன் நான் கண்ணனை.)
கோயில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாவம் தீர
குருவாயூரப்பா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
திருமேனி தரிசனம் நிர்மால்யமாகவே கண்டு
கிரிதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
சந்தனக் காப்பு கழற்றி தைலம் பூசிக் கொண்டு நிற்கும்
நந்த கோபாலனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
எண்ணெய் ஸ்நானம் செய்து கையில் வாழைப்பழத்தோடு நிற்கும்
கண்ணா உந்தன் பாதம் நமஸ்காரம் செய்கின்றோம்
குடம் குடமாக பாலை அபிஷேகம் செய்யும் வேளை
கோவிந்தனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
கொண்டை மயில் பீலிமின்ன மஞ்சள் பட்டு கட்டிக் கொண்டு
குழலூதும் கண்ணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
தெச்சி மந்தாரம் துளசி தாமரைப் பூமாலை சாற்றி
அச்சுதனே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
திவ்ய நாமம் சொல்லிக் கொண்டு ஸ்ரீ வேலியை சுற்றிக் கொண்டு
ஸ்ரீதரா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
தீரா வினை தீர்த்து வைத்து நான் கோரும்வரம் அளித்திடும்
நாராயணா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
கோயில் முன்னே கூடி நின்று கோடி ஜென்ம பாவம் தீர
குருவாயூரப்பா உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்.
குரு-வாயு இருவரால் இங்கே வந்திறங்கி
குருவாயூர் தலமதில் கோவில் கொண்டு
கலியுகத் துயர்தீர கருணைகொண்டான் கண்ணன்!
மணிகள் முழங்கட்டும்,
மங்களம் பெருகட்டும்,
கலியுக வரதன் கார்மேக வண்ணன்
கமலக் கண்ணன் புகழெங்கும் ஓங்குகவே!
——-
ஸ்ரீ நாராயணீய ஆரத்தி ஸ்துதி – பாடல்.
ஜய ஜகதீச ஹரே க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹiரே
ஜய குரு மாருத மந்திர நாதா ஜய ஜகதீச ஹரே
கிங்கிணி பதகமல க்ருஷ்ணா கங்கண காயுகளா
குங்கும பங்கில வக்ஷஸ்தல வர குவலயதளநீலா. (க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே).
ததி நவநீதஹரா க்ருஷ்ணா தருணீ சித்தஹரா
தயயா பாலய தாமோதர ஹரே துளஸீதாம தரா. ( க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே).
கோவர்த்தன தரணா க்ருஷ்ணா கோபீஜன ரமணா
கோமள பல்லவ சுந்தர சரணா கோகில மதுவசனா. (க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே).
நந்தகுமார ஹரே க்ருஷ்ணா நாரதகீதகுணா
நாராயணவர பட்டதிரி க்ருத ஸ்துதிவர சுபபலதா. (க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே).
பூந்தான பக்தப்ரியா க்ருஷ்ணா ப்ருந்தாவன ரஸிகா
ப்ரேமிக பாவுக மண்டல பூஜித பாதஸரோஜ யுகா. (க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே).
ஜய ஜகதீச ஹரே க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே
ஜய குரு மாருத மந்திர நாதா ஜய ஜகதீச ஹரே
க்ருஷ்ணா ஜய ஜகதீச ஹரே.
————–
1) பகவான் மகிமை
2) பகவத் ரூபம்
3) பக்தஸ்வரூபம்
4) அஷ் டாங்க யோகம்
5) விராட் புருஷோத்ப்பதி
6) விராட் ஸ்வரூபம்
7) ஹிரண்ய கர்ப உத்பத்தி
8) பிரளயம்
9) ஜகத் சிருஷ்டி
10) ஸ்ருஷ்டி பேதம்
11) சனாகாதீநாம் வைகுண்ட பிரவேசம்
12) வராஹ அவதாரம்
13) ஹிரண்யாக்ஷ வதம்
14) கபில அவதாரம்
15) கபில உபதேசம்
16) நாராயண அவதாரம்
17) துருவன் சரிதம்
18) ப்ருகு சரிதம்
19) தக்ஷ உத்பத்தி
20) ரிஷப யோகீஸ்வர சரிதம்
22 – அஜாமிள மோக்ஷம்
23 – தக்ஷ-சித்ரகேது சரித்திரம்
24- ப்ரஹ்லாத சரித்திரம்
25- நரசிம்ம அவதாரம்
26- கஜேந்திர மோக்ஷம்
27- கூர்மாவதாரம்
28- லட்சுமி ஸ்வயம்வரம்
29- மோஹினி அவதாரம்
30 – வாமன அவதாரம்
31- ஸ்ரீ திரி விக்ரம அவதாரம் -பலி தர்ப ஹரணம்
32- மத்ஸ்ய அவதாரம்
33- அம்பரீஷ சரிதம்
34- ராம அவதாரம் -1
35- ராம அவதாரம்-2
36- பரசுராம அவதாரம்
37- ஸ்ரீ க்ருஷ்ண அவதார ப்ரஸ்தாவம்
38- க்ருஷ்ண அவதாரம்
39- க்ருஷ்ண ஜன்ம உத்சவம்
40- பூதனை மோக்ஷம்
41- பூதனை தேஹ தகனம் -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உத்சவம்
42- சகடாசுர நிக்ரஹம்
43- த்ருணாவர்த்த வதம்
44- நாம கர்ணம்
45- பால லீலா
46- விஸ்வ ரூப பிரசர்த வர்ணனம்
47- உல்லுக லபந்தனம்
48- நள கூபுர மணி க்ரீப சாப விமோசனம் -மோக்ஷம்–
49- ஸ்ரீ பிருந்தாவன கமனம்
50- வத்ஸாசுர, பகாசுர வதம்
51 வன போஜனம் -அகாசுர வதம்-
52- ப்ரம்ம கர்வ ஸமனம்
53- தேனுக அசுர வதம்
54- யமுனா ஹ்ரதே காலியா
55- காளிய மர்தனம்
56- காளியன் அனுக்ரஹம்-காளிங்க நர்த்தனம் –
57- பிரலம்பாசுர வதம்
58- தாவாக்னி மோக்ஷம்-ஸ்ரீ ப்ருந்தா வனத்தில் பருவங்கள் –
59- திருக் குழல் ஓசை வர்ணனை -வேணு கானம்
60- கோபி வஸ்திர அபஹரணம்
61 ஸ்ரீ விப்ர பத்னி -ரிஷி பத்னிகளை பூதராக்கி -அனுக்ரஹம்
62 ஸ்ரீ கோவர்தன பலி
63- ஸ்ரீ கோவர்தன உத்தாரணம்
64- ஸ்ரீ கோவிந்தா அபிஷேகம்
65- ஸ்ரீ கோபீனாம் பகவத் சமீபம்
66- ஸ்ரீ கோபீ ஜன ஆஹ்லாதனம்
67 ஸ்ரீ கிருஷ்ண திரு தானம் -ததா புன ப்ரத்யஷீ பூய கோபிகா ப்ரீணனம்
68 ஸ்ரீ கோபிகானாம் ஆஹ்லாத பிரகடனம்
69 ஸ்ரீ ராஸ கிரீடா
70 ஸ்ரீ ஸூதர்சன சாப மோக்ஷம்-சங்க சூட அரிஷ்டாசுர வதம் —
71 கேசி வதம்
72 ஸ்ரீ அக்ரூர ஆகமனம்
73- ஸ்ரீ மதுராபுரி யாத்ரா
74- ஸ்ரீ மதுராபுரி பிரவேசம்
75- கம்ச வதம்
76- ஸ்ரீ கோபிமார்களுக்கு ஸ்ரீ உத்தவ தூது
77- ஸ்ரீ உபஸ் லோக உத்பத்தி -ஜரா சந்த யுத்தம்
78- ஸ்ரீ ருக்மிணி ஸந்தேசம்- ஸ்ரீ நம்பி மூத்த பிரான் விவாஹம்
79- ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம்
80- ஸமந்தபஞ்சக யாத்ரா உபாக்யானம்
81- நரகாசுர வதம்-பாரிஜாத ஹரணம் –
82- பாணாசூர யுத்தம் -ந்ருக மோக்ஷம் –
83- பௌண்ட்ரக வாஸுதேவன் முக்தி
84- சமந்தா பஞ்சக யாத்ரா
85- ஜராஸந்த , சிசுபால வதம்
86- சால்வ வதம் – ஸ்ரீ மஹா பாரத யுத்தம் –
87- ஸ்ரீ குசேல விருத்தாந்தம்
88- ஸ்ரீ சந்தான கோபாலம்-
89- வ்ருக அஸுர கதா
90- ஸ்ரீ விஷ்ணு மஹத்வ ஸ்தாபனம்-
91- பக்தி மஹத்வம்
92- கர்ம-மிஸ்ர பக்தி
93- சதுர்விம்சதி குரவ
94- தத்வ ஞான உத்பத்தி
95- தியான யோகம்
96- ஸ்ரீ பகவத் விபூதியம்
97- உத்தம பக்தி ப்ரார்த்தனா–ஸ்ரீ மார்க்கண்டேய கதை
98- நிஷ் கல ஸ்ரீ ப்ரஹ்ம உபாஸனம்
99- ஸ்ரீ வேத ஸ்வரூபம்-ஸ்ரீ வேத ஸ்துதி-
100-ஸ்ரீ கேசாதி பாத வர்ணனை
————————–
தியான ஸ்லோகம் (1)
சூர்யஸ்பர்தி4 கிரீடம் ஊர்த்4வதிலக –
ப்ரோத்3பா4ஸி ப2லாந்தரம்
காருண்யாகுல நேத்ரமாத்ர –
ஹஸித்தோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க3ண்டோ3த்3யன் மகராப4 குண்ட3லயுக3ம்
கண்டோ2ஜ்வலத் கௌஸ்துப4ம்
த்வத்3ரூபம் வனமால்ய ஹாரபடல-
ஸ்ரீவத்ஸ தீ3ப்தம் ப4ஜே||(2:1 )
சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கும் கிரீடத்தையும்; திலகத்தால் அழகூட்டபட்ட நெற்றியையும்;
கருணை வழியும் கண்களையும்; கனிந்த புன்னகையையும்;அழகிய நாசியையும்;
கன்னங்களில் பிரகாசிக்கும் இரு மகர குண்டலங்களையும்; வனமாலை, முத்து மலை, ஸ்ரீ வத்சம்
இவைகளுடன் விளங்கும் தங்கள் தோற்றத்தையும் நான் சேவிக்கின்றேன்.
தியான ஸ்லோகம் (2)
கேயூராங்க3த3 கங்கனோத்தம –
மஹாரத்னாங்கு3லி யாங்கித
ஸ்ரீமத்3பா3ஹு சதுஷ்க ஸங்க3த
க3தாச2ங்கா2ரி பங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித
லஸத் பீதாம்ப3ராலம்பி3னீம்
ஆலம்பே3 விமலாம்பு3ஜ த்3யுதிபதா3ம்
மூர்த்திம் த்வார்த்திச்சி2த3ம்||( 2:2)
தோள்வளைகள், கைக்கட்டு வளையல்கள், மணிக்கட்டு வளையல்கள், சிறந்த ரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்,
இவைகளால் அலங்கரிக்கப்பட்ட காந்தி பொருந்திய நான்கு கைகளில் இருக்கின்ற கதை, சங்கு, சக்கரம், தாமரைப் பூ
இவைகளையும்; தங்க அரை நாணால் அலங்கரிக்கப் பட்ட பிரகாசிக்கும் பட்டுப் பீதாம்பரத்தையும்;
நிர்மலமான தாமரைப்பூ போன்ற காந்தியுடைய திருப்பாதங்களையும்;
துக்கங்களைப் போக்கடிக்கும் திருமேனியையும் நான் வணங்குகிறேன்.
——————–
நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|
நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||
ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண ஸ்ரீ நாராயண
———————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply