ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ
ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:
ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு
——–
யாதவாப்யுதயம்
1. காவ்யாரம்பம்
2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்
3. கோகுல ப்ரவேசம்
4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்
5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்
6. கோவர்த்தந வர்ணநம்
7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்
8. வேணுகானம், ராஸக்க்ரீடா
9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி
10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்
11. த்வாரகா நிர்மாணம்
12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்
13. ருக்மிணி பரிணயம்
14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்
15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி
16. நரகாஸுர வதம்
17. பாரிஜாதாபஹரணம்
18. ப்ரதிமார்க்க வர்ணநம்
19. க்ருஷ்ண ப்ராபோதிகம்
20. பாணாசுர வதம், உஷா பரிணயம்
21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்
22. ஸாத்யகி திக்விஜயம்
23. குருக்ஷேத்ரம்
24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்
—————-
யாதவாப்யுதயம் ( சர்க்கம் 21) 2171 – 2240 = 70–
பெவ்ண்ட்ரக வாசுேதவன் வதம், காசி தஹநம், த்விவித வானர வதம், (நாராய- தசகம் 83)
1. வாஸுேதவ இதி நாம ததாந: பெவ்ண்ட்ரகஸ் ததநு பூ மதாந்த: மாநுஷத்வ
கவசாந்ததேந ஸ்பத த ஸ்ம ஹணா ஹத சித்த: ஸ்ரீமத் பாகவதம்(10/66/1-21)
பிறகு ஸ்ருகாலன் என்கிற பவ்ண்ட்ரகன் அதிக மதத்தால் அறிவற்று வாசுேதவன் என்ற பெயர் சூடி மானுட உருக் கொண்டதால்
ஹரி என்ற அறியவாகாது இருக்கும் கண்ணேனாடு கலஹம் செய்யலானான்
2. ஹேதி பஞ்சகம் அதாரயத ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முகாநி ச மூட:
ஐச்வராணி சrதாநி ச பூவாணி ஆத்மந: ஸ்வயம் அஜூகுஷத் ஆப்தை :
மூடன், பாஞ்ச சன்னியம், சார்ங்கம், கௌமோதகி, நந்தகம், ஸுதர்சனம் முதலான பஞ்சாயுதங்கைளயும்
ஸ்ரீவத்ஸ கௌஸ்துப லக்ஷணங்களை தரித்துத் தானே பண்டைய ஈஸ்வர சரித்திரங்களான பூமியை இடந்தது,
மது கடைப ஸம்ஹாரங்கைளச் செய்ததாய் பறை சாற்றி வந்தான்
3.இந்த்ரஜால குஹநாதிஷு தாக்ஷ்யாத் ஈஷ ஏஷ இதி மோஹிதேலாக:
அத்யேசத புஜேகச்வரசய்யாம் ஆருேராஹ விஹேகந்த்ர விவத்தம்
பிறரை மயக்கும் இந்த்ர ஜால வித்யை மாறு வேஷம், மற்றவர் களைக் கொண்டு தன்னைப் புகழச் செய்வது போன்ற
செயல்களிலுள்ள சாதுர் யத்தினால் கொண்டு தானே ஈச்வரன் என்று உலகத்தை நம்பச் செய்து
ஆதி சேஷனில் பள்ளி கொள்வது, கருடன் மேல் ஏறிச் செல்வது போன்றவற்றைச் செய்தான்
4. அந்வஹம் ச மஹத’ம் வநமாலாம் மால்யக்ருத்பி உபகல்ப்ய ப பார நாமேதயம்
அதிசத் ஸசிவாநாம் நாக நாயக விசேஷ நிரூடம் மாலையானே
மாலா காரனிடம் ஆணை யிட்டு தினம் மிக நீண்ட வன மாலையை அணிந்து வந்தான்.
தன் மந்திrகளு க்கு இந்திரன் சந்திரன் என்று பெயரிட்டு அழைத்தான்
5. பத்த க்ருத்ர்ம புஜாந்தர யுக்மம் சஸ்யமாநம் அநுஜ’வி ஜேநந விச்வகத்து
அவதார இதி ஸ்வம் பஹ்வமம்ஸ்த பதிரோ நிகமேஷு
இயற்கையான தன் இரு புஜங்களுக்கு மேலும் இரண்டு புஜங்கைள வைத்துக் கொண்டு தன்னை அண்டிப் பிழைப்பவர்களால்
தான் நாராயணன் அவதாரம் என புகழப்பட்டு அத்தை நம்பவும் செய்தான். மற்றபடிக்கு பகவான மஹிைமகள் என்ன என்பதே
வேதம் ஓதாத அவனுக்குச் சிறிதும் தெரியாது. வேறுபாட்டுக்கான அம்சங்கள் அவன் காதில் விழுவதுமில்லை –
6–இத்தம் ஈஸ்வர விடம்பந ரூபம் நாடகீ யம் அநுருத்ய விஹாரம் சோச்யதாம் அபி பராவரவித்பி:
ஹாஸ்யதாம் அபி ஜகாம ஜகத்பி: நடிககள் தைமேதவனாய்
நாடகத்தில் நடிப்பவர்கள் தன்னைத் தேவனாய் காட்டுவாகள். இவேனா நடிப்பில்லாமல் அப்படியே தன்னை ஈஸ்வரனாக
காண்பித்ததால் பெரியோர்கள் ஐயோ என்று சோகிக்கவும் உலகத்தினர் பரிஹஸிக்கவும் செய்யலானான்
7–மஸ்தகஸ்தித துரத்யய ம்ருத்யு: தஸ்ய தூத உபஸ்ருத்ய ஜகாத க்ருத்யேசஷ விநிேவஷித
சித்தம் நிபயோ ந்ருபதி ஸம்ஸதி நாதம்
தலைக்கு ஏறின மிருத்யுவிடமிருந்து தப்பிப் போகவாகாத நிலை வந்து விட்டபடியால் ஒரு தூதைன அவன் கண்ணனிடம் அனுப்ப,
அவனும் இவ்வுலகில் இன்னம் செய்ய வேண்டியது என்ன என்று ஆராய்ந்து வரும் லோக நாதைன நெருங்கி,
ராஜ சபையிலே அஞ்சாமல் பேசலானான்.
[பின்வரும் நான்கு பாசுரங்கள் தூதனுைடய சொந்த உபேதசம். அதற்கு மேல் வருவன பவ்ண்டிரகனின் ஆதேசம்]
8-க்ருஷ்ண க்ருஷ்ண கததோ கிரம் அத்யாம் ஸம்ச்ருணுஷ்வ மஹத’ம் இஹ மத்த:
அப்ரமத்த மதிபிஸ் ஸஹ மித்ரைஸ் ஆப்த வாக்யம் அவத’ய ந ஸித் தி:
கிருஷ்ணா! கவனமுள்ள புத்தியை யுடைய ஸ்நேகிதிகள் உடன் கூடின உண்மையான பொருள் பொதிந்து மதிப்பான
வார்த்தையைச் சொல்லும் என்னிடமிருந்து கேட்பாயாக.
ஹிதத்தை விரும்புகின்றவர்களின் வார்த்தையை அலட்சியம் செய்தால் பலன் பெறலாகாது.
தூதனுைடய சொந்த உபேதசம் – 4 ஸ்லோகங்கள்
9. அஸ்தி கஸ்சித் அவதாரத பூமா பூருஷ: ச்ருதிகணேஷு புராணா:
ஸ க்ஷிதிம் பரக்ருஹ’த விஹார: பவ்ண்டரகத்வம் அதிகம்ய புநக்தி
திரள் திரளான வேதங்களால் அறுதியிடப்பட்ட மேன்மைகளை யுடைய ஒப்பற்ற புருஷனே
பவ்ண்ட்ரகனாய் பூமிையக் காத்து வருகிறான்
10–தஸ்ய நித்ய நிருபாதிக பூம்நோ விச்வேபாக்து அதிகம்ய திதிக்ஷாம் புஜ்யேத
நியத கமவிபாைக: யுஷ்மதாதிபி இலா பஹுபாகா மறையாததாம்
அழியாததும் ரக்ஷகனுமான அனாதியானதுமான பவ்ண்டரக ராஜனின் மேன்மையை யுடையவனும்
பொறுமைக்குப் ஸ்வ பாத்திரமாகிய பல பாகம் கொண்ட பூமிையப் பல பேரான தங்கள் பாக்கியத்தின்
பல தசைகளுக்கு ஏற்ப அனுபவித்து வருகிறார்கள்.
11. அத்த தத்வம் இதம் அச்ருதபூவம் ச்ருண்வதாத்ர பவதா பவிதவ்யம் நிச்ச க்ருத
ஹிதாஹித ஸ்ம்நா ஜிஷ்ணுநா யதுகுலஸ்ய விபூத்யை
இது வரையில் கேட்காத இவ்வுண்மையை இங்கே கேட்கும் நாம் (யது குலத்தின் ஷேமத்திற்காக ஜெயம் பெறுபவனாகி)
இது ஹிதம் இது அஹிதம் என நன்மை தீமைகளின் வரம்பை அசைக்காமலிருக்க வேண்டும்.
(யதுக்களின் ஷேமத்திற்காக பவ்ண்டரகைன வெல்ல வேண்டும் என்ற பொருளும்
தூதனின் வாயில் இருந்து அவனறியாமல் வந்து விட்டது)
12–ஆதிசத்யகில லோக நியந்தா த்வாம் அஸவ் பஜநெஸௗ ஹ்ருத நிக்ந: ஈஷிதவ்ய கணநா
லிகிதஸ் த்வம் மா க்ருதா விததம் ஈஸ்வரமாநம்
ஸர்வ லாேகேஸ்வரனான பவ்ண்டரக மஹாராஜர் தம்மை பஜனம் பண்ணினால் ஸ்நேகம் கொண்டு ஆணை யிடுகிறார் .
என்ன வெனில் தம்மால் ஆளப்பட்டவரின் பட்டியிலே எழுதப் பட்டிருக்கும் நரனான உன்னை ஈஸ்வரன் என்று நினைக்காதே !
13. பாஹ்யவத்மநி பராவர தத்த்வ – வ்யத்யேயந விநிவ்ருத்தஸ தத்வே நித்தவ்ருத்திம்
அதிரோப்ய விமூட: ஸ்ரேயஸோ ஹி பஹி ஏவ பவந்தி “
மேல் கீழ் தத்துவத்தின் மாறாட்டத்தினாலே உண்மைக்கு விலக்கான வேத பாஹ்யரின் வழியிேல
மனதை வைத்து மூடர்களானவர்கள் நன்மைக்கு வெளியே அல்லவோ நிற்பர் –
14. ஈச்வரஸ்த்வம் அஸி சேத் குத ஏவம் ந த்வத் அக்ரஜ இதி ப்ரமிதி:
ஸ்யாத் த்வவ் யுவாம் பரம இத்யபி து:ஸ்தம் கஸ்தேதா விஷம ஏவ ந சாந்ய: “
நானே ஈஸ்வரன் என்கிறாயாகில், இவ்வாேற உன் அண்ணன் ஈஸ்வரனாகான் என்ற புத்தி எவ்வாறு உண்டாம்?
இருவரும் ஈஸ்வராகக் கூடாதே ! பரமனல்லவோ ஈஸ்வரனாவான்.
தன்னை விட்டு மற்று எல்லோராலும் சிறந்தவனே ஈஸ்வரன்.
ஆக உங்கைளக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் ஈஸ்வரனாக வேண்டும்.
15–அதவாத குஹநாபி அபி ஸ்வாந் ஈஸ்வராந் விகணயந்தி ஸுேரந்த்ரா:
நிஷ் ப்ரமாணஜநுேஷா ஜநவாதாத் க:ஸ்வித’ச இதி விச்வஸிதி ஸ்வம் “
உண்மையை மறைத்து ஸ்துதிக்கும் வேதங்களிலே பலவிடங்களில் அக்னி இந்திரன் போன்ற பலரை சர்வேஸ்வரனாக
வருணித்திருந்தும் தேவர்கள் அவர்களை ஈஸ்வரனாக எண்ணுவதில்லை , இப்படியிருக்க ப்ரமாணமில்லாமலே
பிறந்த ஊரைப் பேச்சைக் கேட்டுக் கொண்டு எவன் தன்னை ஈஸ்வரனாக எண்ணக்கூடும்.
16–கோபிகாபி அபி கமபி ஆஸ்தாம் பத்த ஏவ யதி முக்திவிதாதா அத்பு தஸ்திதி
அநாந்தரபாஹ்ய: ஸப்தமஸ் து ஸமேயாயம் அபூவ: “
புண்ய பாப கர்மங்களால் கண்டுண்டவன் என்பது இருக்கட்டும். இடைச்சிகளிடம் கட்டுண்டவன் வீடு பேறு பெறுவிப்பவன்
என்றால் இதற்கு முன் இல்லாத இந்த மதமானது, வைதிகம் அவைதிகம், ஒன்றிலும் சேராத ஏழாவது அற்புதமாய் இருக்கும்.
17–இஷ்ட ஏவ து மத’ஸ்வரபாவ: த்வத் முைக ந கலு சக்யநிரோத: மத்ஸுகாதிஷு
கதம் விஷயாைந: மத்பரத்வம் அபதம் ப்ரதிேஷத்யம்
நான் ஈஸ்வரன் என்பது முற்றிலும் இசைவானதே ! உன்னைப் போன்றவர்களால் இதை நிராகரிக்க முடியாது.
ஒரு ஆத்மாவிற்கு மற்ற ஓரு ஆத்மா புலப்படாமலிருப்பதால் என்னிடத்திலுள்ள ஸுகம் முதலிய குணங்கைளையே
நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள் கண்ணுக்குப் புலப்படாத என்னிடமுள்ள பரத்துவத்தை
எவ்வாறு மறுக்கக் கூடும். நான் பரமாத்மா! நானும் நீயும் வேறு!
18–நாமேதயம் அநபாயி மத’யம் த்யஜ்யதாம் ப்ரதய தாஸதயா வா சிஹ்நதாரணம்
அநேந கதாத்தம் கல்பேநந கதம் ஈஸ்வரபாவ: “
எனக்கே நிலையாய் இருக்கிற வாஸுேதவன் என்ற பெயரை நான் விட்டு விடவும். அல்லது எனக்கு அடிமை என்று
அறிவித்துக் கொள்ளவும் சங்கு சக்ராதி சின்னங்கைள தரிப்பதையும் விட்டு விடலாம்.
வேஷத்தினால் ஈஸ்வரத் தன்மை எப்படி உண்டாகும்?
19–தாதத’ந்ய நியமம் யதி புத்த்வா ஸோமித்யநுபுபூஷஸி தத் ஸ்யாத் அந்யதா து
நிக்ருஹ’தி: அலங்க்யா ராஜபாவத்ருஷிைத இவ ப்ருத்யை
வாஸு தேவனுக்கு எப் பொழுதும் பவ்யப் பட்டவன் என்கிற கருத்துடன் நான் ஈஸ்வரன் என்கிற விசிஷ்ட அத்வைத
நிலையில் பஜனம் பண்ண விரும்பினால் அது தகும். இல்லையேல் தம்மையே அரசராக எண்ணும்
வேலைக்காரர்களுக்கு கிட்டும் தண்டனையில் இருந்து மீளலாகாது!
20– பாப்மநாம் தமஸி பாதயித்ருணாம் ஆத்ம சவ்யம் அதிராஜ பதஸ்தம் சோதிசேந
நியேதாபி ஹ்ருதாத்மா ஸோரதண்டம் அவசாத் உபயாதி
இருளில் ஆழ்த்தும் வல் வினைகளுக்குள் ஆத்ம சவ்யம் என்பது தலைமையானதாம். சாஸ்திர வரம்புக்கு
உட்பட்டவனாயிருப்பினும் ஆத்ம சவ்யம் செய்பவனாகில் தண்டைனக்கு அவசியம் உட்பட்டவனாகிறான்.
21–அப்யுேபத படிசாமிஷ ந’ திம் ப்ராப்துமிச்சு அதிகாரம் அயோக்யம் இஷ்டம் அதம்
அநவாப்ய வராக: ப்ரத்யைவதி ஸஹஸா பரதந்த்ர:
தூண்டில் முள்ளில் செருகப்பட்ட மாமிசம் போலே இருக்கின்றதும், தனக்குத் தகாத அதிகாரங்கைளப் பெற
விரும்பும் மனிதன் தான் விரும்பிய பலைனப் பெறாததோடு பர ஆபன்னனாய் விரைவில்
அநர்த்தங்கைளயும் பெறுகிறான்.
22 –நாபராத்யதி க ஏவ நியத்யா பண்டிதஸ்து விநிவ்ருத்ய ஸமிந்தே அஸ்தி சாத்ய
சரணாகதி அத்யா மத்பரஸ்ய தவ ஜ’விதும் இச்சோ “
விதிக்கு வசப்பட்டிருப்பதால் குற்றம் செய்யாதவன் யாருண்டு? விவேகியானவன் பிறகாவது குற்றத்தினின்று விலகி
மேன்மையை அடைகிறான். என்னிடம் சரணாகதி செய்து பயன் பெறு என்ற பவ்ண்ட்ரனின் வாக்கை
பகவானிடம் தூதன் கூறினான்
23–இத்யுத’ரதவதி ப்ரணிெதௗ தம் ப்ரத்யுவாச விஹஸந் ப்ரபுராத்ய: பத்யம் அத்ய வசநம்
தவ மந்யே யத்ப்ரவஷி ‘ சிரலிப்ஸிதம் ஏதத் பவ்ண்டரக
தூதன் கூறியதைக் கேட்டதும் கண்ணன் சிரித்துக் கொண்டே கூறுவதாவது இப்பொழுது உமது பேச்சானது
முறை தவறு ஆனதே என்றே நினைக்கிறேன் –
நான் சொன்ன விஷயம் வெகு காலமாகப் பெற விரும்பப்பட்டதாகும்.
24–உக்ர ஸேந ப்ருதகா வயேமேத நேஷிதார இதி விப்ரமவந்த: ஸம்ப்ரதி த்வத்
உபேதச மஹிம்நா பாவேயமஹி தேவஸ்வரபாவம் –
உக்ரேசனருக்கு பணியாளாக உள்ள நாங்கள் ஈஸ்வரெனன்ற மனப் பிராந்தியை உடையோம் அல்லோம்
இப்பொழுது உமது வார்த்தைகளில் இருந்து உம்மை ஈஸ்வரராக பாவிப்பவர்கள் ஆனோம் .
மற்ற ஓரு பொருள்–
உக்கிரமான இந்திரயங்களாகிற சேனைகளை யுடைய எல்லா ஜீவர்களையும் அடிமையாக உடைய ஈஸ்வரரான நமக்கு
ஈஸ்வரன் என்கிற விபரீத ஞானத்திற்கு இடமில்லை –
இனி உனது பேச்சு காரணமாக எமது ஈஸ்வரத் தன்மையை அறிவிப்போம்.
25–த்வய்யந ஸ்வரமதிம் ந ச கும: த்வம் பேராஸி நியேமந பரஸ்மாத் த்வாம் தித்ருக்ஷவ
இமே வயமாசு த்வத்பதம் கதபிய: ப்ரதியாம: ஈஸ்வரரல
உம்மை அநீஸ்வராக நாங்கள் நினைக்கிறோம் அல்லோம் – நாம் பரனுக்கும் எப்பொழுதும் பரராகிற நாங்கள் உண்மை
அறிந்திருப்பதால் அச்சமின்றி உம்மைக் காண விரும்பி உம்முைடய பதத்தில் சேர்வோம் !
தனக்கு மேல் ஈஸ்வரனை பரனுக்கும் பரன் நானே இருப்பிடத்தை உடையாத பரனுக்கு நாம் அடைவதும்
ராெயண்ணிைல“ விரோதியாவர் ! அப்பதத்தைப் பறிப்பதுவாம் உன்னை அநீஸ்வரராக நான் நினைக்கவில்லை —
அதாவது பதம் என்பது !
நாமே பரனுக்குப் பரன் . .ஆகவே உம் பதத்தை அடைவோம் – பரமாத்மாவுக்கு விரோதி வாஸு தேவன் என்ற
பெயரைப் அவனிருப்பிடத்திற்குச் சேர்வதும் திருவடி யல்ல -பறிப்பதும் ஆகும்
26–த்வாத்ருசம் ப்ரமிதிமத்தம் அத்ருஷ்ட்வா த்வய்யநாத ரவதாம் அதேதிலாேக யாம் இமாம்
வதஸி வாசம் அநூசீம் பாகதே யம் இவ பக்கம் இதம் ந:
இப்படி அளாவுகின்ற உம்மைப் போன்றவரைக் காணாமல் லோக விலக்ஷணமான உம்மிடத்தில் அன்பில்லாதவர்கள்
விஷயமாக நாம் உபதேசித்த அனுகூலமான இவ்வார்த்தைகள் எங்களுக்கு பயன் தரும் உபாயமாகும்.
அற்பனாயிருந்தும் கொழுத்திருக்கும் உன்னை இது வரையில் காணாமல் உபேக்ஷித்த எமக்கு நான் ஆள் அனுப்பியது அனுகூலமே !
உன்னைப் போன்ற என்னைக் கண்டு உன்னை உபேக்ஷிக்கும் ஜனங்களுடைய உயர்ந்த உலகில் நான்
இவ்வாறு பேசியது இனி எமது பெருமையை உலகறிய அனுகூலமாகும்.
27–த்ரக்ஷ்யேத சரணேமத்ய விபுஸ்தே ஷேப்ய(பஸ்ய) தேச ந மையவ ந சக்ரம் கச்ச
சீக்ரம் அபிதத்ஸ்வ தம் ஈசம் த்வாம் உபைதி குகுரத்வஜிந’ தி
நான் உனது ப்ரபுவின் இடத்திற்கே வந்து பார்க்கிறேன். அதற்காக என்னுைடய திரு வாழியை விடுகிறேன்
என்கிறதில்லை — யாதவ சேனை வரப் போகிறது என்று உன் ப்ரபுவிடம் சொல்.
28–ஆத்த ஹேதி அபஸப நிவ்ருத்தவ் சிந்திதாப்தம் அதிருஹ்ய ஸுபணம் ப்ராஸ்தித
ப்ரதிபலாவஸதாய ப்ராணித த்ர்தசபூதி அநந்த:
தூதன் சென்ற பிறகு ப்ரபு தன் ஆயுதங்கொண்ட பவ்ண்டரகனிடம், தன் ஆயுதங்கைள எடுத்துக் கொண்டு
கருடன் மேல் ஏறி நினைத்த மாத்திரத்தில் பகைவர்களின் இடத்திற்கு புறப்பட்டான் –
29–ஸாஹைஸக ரஸிேகந தேதாெஸௗ பவ்ண்ட் ரேகண யுயுேத யதுவர: ‘
தத் ஸகித்வம் உபகம்ய ச பாஷ்ணிம் க்ருஹ்ணதா ஸபதி காசிந்ருபேண
பிறகு க்ருஷ்ணன் அவிவேகியாய் சாகஸத்திலே இழிந்த பவ்ண்டரக னோடும் அவனுடன் தோழமை கொண்டதால்
பின் பக்கமாக தொடர்ந்த அவன் தோழனான காசி ராஜனோடும் போர் புரிந்தான்
30–தத்ர வைர்ப்ருதேந ஸமகாலம் பூவ பஸ்சிமதயா ப்ரபதந்த்யவ் பாவயந்
உபயேதா முக பாவம் ப்ரத்யவித்யத் அதிஸாயக தந்வா
பெருமான் வில் வளைத்து ஒரே சமயத்தில், இரு முகம் கொண்டவன் போல் முன்னும் பின்னும்
அம்புகள் எய்து சேனைகளை அழித்து ஒழித்தான் [அம்பு — சல்லியம்]
31–வைர ஸைந்ய விதேதஷு ஸமந்தாத் திங்முேகஷு ஸமேமவ ப்ருஷத்கை :
தஸ்ய த’ப்தருசிபி : விநிபேத மத்யகஸ்ய கிரைண இவ பூஷ்ண:
கண்ணனின் அம்புகள் ஒரே சமயத்தில் சத்ரு ஸைந்யம் பரவி இருக்கும் திசையில் எல்லாம் விழுந்து
வானத்தில் நடு உச்சியில் இருக்கும் சூர்ய கிரணங்கள் போ லே ஒளி வீசின
32–வித்விஷவ் யுகபத் உத்திதவந்தவ் ஸாகரவ் இவ விலங்கித வேலவ் ரூபிண ‘
இவ ரஜஸ் தமஸி த்வே ஸத்த்வவருத்தி அநக: ஸ ஜகாந
அதே சமயத்தில் கரை கடந்த இரு கடல்கள் போல் எதிர்த்த, ரஜஸ் தமோ குணங்கள் போன்ற
காசி ராஜைனயும் பவ்ண்டரகனையும் ஸத்த்வ குணம் நிறைந்த கண்ணன் அழித்தான்
33–அஸ்தேமவமநயத் யதுபாஸ்வாந் தாவுபவ் ஜகத் உபத்ரவேஹதூ பூவதச்ச
பரதச்ச பவந்தவ் துக்ரஹவ் இவ துராஸத த’ப்தி:
கண்ணன் – கதிரவன் போல் நெருங்கவாகாத உத்தமமான ஒளி உடையவனாய், முன்னும் பின்னுமாக நெருங்கிய
துஷ்ட க்ரஹங்கள் போன்ற உலகின் உபத்ரவத்திற்கு காரணமான பவ்ண்ட்ரகன், காசிராஜன், அவகைள அஸ்தமிக்கச் செய்தான்
34–தஸ்ய தவ் உபயேதா நிபதந்தவ் பக்நபாஹு விடபாயுதபுஷ்பவ் ஜக்மது:
ப்ருதுகபாவ விஹார க்ஷிப்யமாண யமலார் ஜுந கக்ஷ்யாம்
கண்ணனின் இருபக்கங்களும் அவர்கள் இருவரும் கைகளும் முறியடிக்கப்பட்டு வீழ்ந்தது,
இளமையில் கண்ணன் முறித்த மருத மரங்களுக்கு ஒப்புமை யானது.
35–நாம சிஹ்ந வசநாபரணாத்ய: நாத ஸம்பத் அநுகார நிரூடை பவ்ண்ட்ரக ஸ்திதிம்
அவாப்ய ஸ்ருகாேலாபி அந்வபூத் கில கதிம் ச தத’யாம்
ஜகந் நாதனான கண்ணனுடை ய தன்மையைக் காட்டுவதற்கேற்ப பெயர் , மறு, ஆடை , ஆபரணம்
முதலியவைகளால் ஸ்ருகாலன் என்ற பவ்ண்டிரகன் கண்ணனுைடய ஸ்திதியை முன் ஒருவாறு அடைந்து
இப்போது கண்ணனுடைய கதியையும் அடைந்திட்டான்.
36–வித்.விஷாம் விஹித வரக ‘ த’நாம் த்வாரேகாபகமிதை த்விரதாத்யை :
கௌரவாத்யுஷித பாக விபக்தே : ஆஹித ப்ரதிபரா க்ஷிதி ஆஸ்த்
பவ்ண்டரகன் வரையிலானவர் ஸ்வர்க்கம் அனுப்பப்பட்ட விரோதிகளின் சதுரங்க சைன்யங்கள் துவாரகைக்கு
அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சைன்யம் நீங்கலாக கௌரவ ராஜ்ஜியம் எனப்படும் பெரும் பூ பாகத்தில்
அவர்களுக்காக வகுக்கப்பட்ட சைன்யம் அளவில் இந்த படையும் பூமியில் இருந்தனவாம்.
37–பாதிேதஷு விமேதஷ்விதி நாம ப்ராப்ய யாதவபுரம் பரேமஷ்டீ ப்ரயேபி4
அவிப4க்தரஸாபி4: வதராக ‘ 3ஸுப4 கோ 3 விஜஹார
இவ் வண்ணம் விரோதிகள் வதைக்கப்பட்ட பிறகு பரமபத நாதன் யாதவபுரம் சென்று அங்கு ஏற்றத்தாழ்வு
போன்ற வேறுபாடற்ற பரமானந்தமுற்ற தன் மனைவிமார்களோடு, வைராக்யம் நிறைந்த
யோகிகளுக்கு சுலபனாய், விளையாடி வந்தான்.
38–ஜ’வயுக்தம் இதரத் ச விசித்ரம் த்யூதம் அப்பித பணம் விததாந:
பாவிபாரத மஹாஹவ ஸித்தே : ஸூசநம் விதநுேத ஸ்ம சுபம்யு:
ஸூபங்களுக்கு எல்லாம் குடியிடமான கண்ணன் தன் ஆனந்தத்திற்குப் போக்குவீடாக ஆடு கோழி சண்டை
போன்றவையையும் சூதாட்டங்கைளயும் நடத்தி , .இது வரப் போகும் பாரதப் போருக்கு அறிகுறியாயிற்று .வந்தான்
39–தோஷித த்ர்நயநஸ்ய ந்ருசம்ஸ: காசிராஜ தநயஸ்ய புரோதா: கல்பிதாஹுதி அஜ’ஜநத்
உக்ராம் காலவஹ்நி பதவம் ‘ இவ க்ருத்யாம் (ஸ்ரீமத் பாகவதம் 10/66/26-43)
இத்தகைய சமயத்திலே பவ்ண்ட்ரகனுடன் உயிரை விட்ட காசி ராஜனின் புதல்வன் சிவனின் அருள் பெற்ற
புரோஹிதனை ஏவ அவன் தன் வர பலத்தாலே அபிசார ஹோமம் செய்து ப்ரளய நெருப்பின் ஜ்வாைல
போன்ற ஒரு பூதத்தை கண்ணன் மேல் ஏவினான்
40–ஸாபிபத்ய யதுவரஸகாசம் ‘ ஹேதிராஜ விபவநே ஹதாசா ஜந்மதாமநி
நிஜே நியமஸ்தம் ஜஞ்ஜபூகம் அபிஸ்ருத்ய ஜகாந
சூதாட்டத்தின் போது அப் பூதம் கண்ணனின் அருகில் வர, உடனே திருவாழி எழ, அதன் மஹிமையால்
அப் பூதம் தன்னைச் செகட்டு , தான் பிறந்த காசி யாக சாைலக்கு சென்று அங்கே விரதத்தில் ஆழ்ந்திருந்த
அப் புரோஹிதனைக் கொன்றது.
(பிறரைக் கொல்ல ஏவின பூதம் அங்கே கொல்ல மாட்டாத போது ஏவினவனைக் கொன்று விடும் என்பது அபிசார சாஸ்திர முறை )
41–நிததாஹ நகரம் அத காசீம் விஸ்புலிங்கம் இவ மாதவத’ப்தே : யாதவ க்ரஸந
கௌதுகவத்யா க்ருத்யயா ஸஹ ரதாங்க க்ருசாநு: மாதவனாம் நெருப்புக்கோ
கண்ணைன விழுங்கும் நோக்கத்தோடு இருந்த பூதத்தோடு சேர்த்து முழு காசி நகைரயும் எரித்து அழித்தது
42–ஸ்யந்தந த்விரதவாஜி பதாதி ப்ராஜ்ய சவ்த பrபாடி ஸம்ருத்த்யா சக்ரவஹ்நி
விபவனே ததாபூத் சந்த்ர சேகர விலேபந பூமா காசிநகரால் தே
ரத கஜ துரக பதாதிகள் பெரிய பெரிய மாட மாளிைககள் அனைத்தையும் திருவாழி அழித்தது.
இதனால் வரம் தந்த ருத்ரனுக்கு மேனியில் பூசிக் கொள்ள நிறைய பஸ்மம் கிடைத்தது
43–ஷேத்ரம் ஏதத் அவிமுக்த ஸமாக்யம் முக்தியோக்யம் உபஸ்ருஷ்டம் அயோக்யை :
இத்யேவக்ஷ்ய தஹநேந ததஹாம் ஸம்ஸ்க்ரயாம் இவ சகார ஸுத்ருஷ்டி:
இந்த வாரணாஸி ஷேத்ரத்திற்கு அவிமுக்தம் என்கிற பெயர் உபநிஷத்திலும் ப்ரஸித்தமானது. முக்தி ஷேத்ரமான இது
பக்தர்களால் விடப்படாதது போல், அயோக்யர் களாலும் ஆக்ரமிக்கப்பட்டு கெட்டது என்று கண்டு எம் பெருமானின்
ஸுதர்சனாழ்வான் அக்னியினால் சுட்டுச் சுத்தமாக்கினார் போலும்.
(ஸ்தலம் அசுத்தமாகிவிட்டால், அலம்புவது, சிறிது பெயர்த்து எறிவது சுடுவது, பசு மாடுகைள விட்டு மிதிக்கச் செய்வது
என்று சுத்திகள் செய்யப்பட்டுள்ளன. )
44–அப்ரசாந்தருஷம் அத்புத த’ப்தம் தக்தவைர புரம் ஆயுதராஜம் நிஜரா:
ப்ரதிநிசாமயமாநா: பிப்யதி ஸ்ம ஜகதுச்ச ஜேயாக்திம்
[அடங்காதனல் – அடங்காது அநல] காசியைக் கொளுத்தியும் கோபம் தீராமல் கனன்ற
திருவாழி யானைக் கண்டு அமரகள் அஞ்சி ஜய விஜயீபவ என்றனர்
45–தைவைத அபி சதுமுக முக்யை : தத்த ஸத்க்ருதி அஸவ் ஜிதகாசீ இஷ்ட
நிவஹண நிவ்ருத சித்தம் விஷ்டரச்ரவஸம் அப்யுபேபேத
காசியை – ஜெயித்தவன் என்ற பெயர் பெற்ற நான்முகன் முதலான தேவர்களால் நன்கு கௌரவிக்கப் பட்டு
வெற்றி பெற்றோம் என்பது வெளிப்படும்படி நடப்பதாய் திருவாழி மகிழ்ச்சியுற்ற மனத்துடன் இருக்கும்
கண்ணபிரானிடம் கூடியது. (ஜிதகாசி – காசியை ஜெயித்தவன்)
46–ஆஸுர ப்ரக்ருதிகேஷு நிரஸ்தேஷு ஏவம் ஏபி4: அநுபாலிதஸக்ய: வாநேரா புஜபலேந
பபாதே துமதி ஜகதிதம் த்விவிதாக்2ய: (ஸ்ரீமத் பாகவதம் (10/67/1-28)
அசுர அம்சங்களான ப்ரஜைகள் அழிக்கப்பட்ட பின் இவர்களுடன் தோழமை கொண்ட, ஸ்ரீ மத் ராமாயணத்தில்
ப்ரசித்தமான மைந்த த்விதகளில் ஒன்றான த்விவிதன் என்ற வானரம் புத்தி கெட்டு புஜ பலத்தால் பல தீமைகள் செய்து வந்தது
47–பூதராந் உதஹரத் புஜசாl ப்ரக்ஷிபம்ச்ச நகராணி மமத ஷோபயந்
ஜலநித’ந் அநுவேலம் ப்லாவயம்ச்ச வஸுதாம் ப்ரஜஹஷ
திரண்ட புஜங்கைளக் கொண்ட அவ்வானரம் மலைகளைப் பெயர்த்து நகரங்கைள அழித்தது.
கரை ஓரங்களில் உள்ள கடல்கைள கலக்கி பூமிைய இடித்து நீரைத் தள்ளியும் களித்தது.
48–அந்ய வரரஹிதாம் ‘ இவ மத்வா வாரி ராசிரசநாம் அவலிம்பந் ஆத்மந: ஸத்ருசம்
ஆத்ரியைதகம் தேநுக ப்ரமதேநந நியுத்தம் முந்நரைக் கவசமாயுை
முந்நீரை தன் மேகலை யாய் யுடைய வையகத்தில் எங்கும் வரன் வேறே ஓருவன் இல்லை என்று நினைத்து
கர்வமுற்று, தேனுகைன அழித்த பலராமனே தன் வலிமைக்கு ஈடாவான் என்று எண்ணி
கர்வமுற்று அவனுடன் போர் புரிய எண்ணியது
49–ஏகதா ஹலதரஸ்ய விஹாேர ஸம்பதந் அபிதசாபல சேஷ்ட:
த்வாரேகா பவந பாதபேபத’ விச்வத: கிலகிலாம் விததாந
ஒரு சமயம் பலராமன் விளையாடும் உத்யான வனங்களில் புகுந்து தன் சேஷ்டிதங்கைளச் செய்தபடி
மரங்கைள முறித்து கிலகில வென்று கத்துவதாயிற்று.
50–தாலேகது யுவத’ விஹரந்த’: த்ராஸயந் முக விகார விசைஷ:
க்ரீடநோ பகரணாநி விபிந்தந் க்ஷ்வேடி தாநி விததே விதிலூந:
கேடு பெறுவிக்கும் விதியினால் வதைக்கப்படும் அக்குரங்கு பனைமரத்தை கொடியாக உடைய பலராமனின்
மனைவிகள் விளையாடிக் கொண்டிருக்கையில் அக்குரங்கு தன் முக விகாரங்களால் பயமுறுத்தி
விளையாட்டுக் கருவிகைள உடைத்து அட்டஹாஸம் செய்தது
51–தம் ப்ரவ்ருத்த கபிக்ருத்யம் அதூராத் பாதித ப்ரதிபலோ பலதேவ:
ஜங்கம ஸ்படிக பூ தரகல்ப: ருக்மைசல ருசிரம் நிருேராத
குரங்குத் தன்மைக்கு ஏற்ற துஷ்டத் தனங்கைளச் செய்து வந்த அக்குரங்கின் சேஷ்டைகளைக் கண்டு,
பொன் மலை போன்ற அதை , பகைவர்கைள அழிக்கும் ஸ்படிக மலை போன்ற வெளுத்த பலதேவன்
எங்கும் செல்ல முடியாத படிக்கு தடுத்தான்
52–வாநேரண ஸுஹ்ருதா தநுஜாநாம் யாதுதாந ஸமர ப்ரதிதேந ப்ரேஷிதாம்
த்ருமசிேலாச்சய வ்ருஷ்டிம் நிஷ்பிபேஷ முஸேலந ஹலாஸ்த்ர:
முன்பு அசுரகைள அழித்ததாய், தற்போது அசுரர் களுக்கு மித்திரனான அவ் வானரம் பொழிந்த
மரம் பாறை எல்லாவற்றையும் பலராமன் உலக்கையினால் உடைத்து ஓழித்தார் .
53–ஆபதந் அபஸரந் அபி பேஜே க்ராஹ்யதாம் இவ ச துக்ரஹதாம் ச
அக்ரேதாபவத லக்ஷ்யத பஸ்சாத் அப்ரதக்யரபஸோ ஹரி வர: ‘
வர வானரம் ‘ அகப்படுவது போல் நெருங்கியும், பிடிக்க வரும் போது விலகியும்
நொடியில் முன்னும் பின்னுமாக மாறி வந்தது.
54–தவ் பரஸ்பர கவேஷித ரந்த்ரவ் காமபால கபி ஸைநிகபாலவ் யோஜிதோத்
தத கெரௗ யுயுதாதே தப தாருண திசாகஜ ஸத்வவ்
ஒருவரை யார் ஓருவர் தோற்கடிக்கும் தருணம் எது என்று நோக்கியபடி, பலராமனுக்கும் அவ்வானர தளபதிக்கும்
இடையே இரு பெரும் திக் கஜங்களின் வலிவுடன் கை கலந்து த்வந்த்வ யுத்தம் தொடங்கியது.
55–தம் ப்ரலம்ப தமந: ப்லவேகந்த்ரம் விப்லுதம் புநரபி ப்லவமாநம் காலபாச
நிக்ருஹ’தம் அராதிம் கல்பமாநம் அபவாய விவேத
பிரலம்பைன அழித்த பலராமன் ஒரு நிமிடம் நெருங்குவது போலவும் மறு நிமிடம்
தள்ளிப் போவதுமான வானரத்தை ஒழிக்கும் தருவாய் நெருங்குவதை உணந்தான்.
56–ஸவ்ய தக்ஷிண பரக்ரமணாப்யாம் த்ராக் அலாத மய சக்ர நிரிக்ஷ்ய:
ஆததாந ஹல பாணிம் அதூராத் அக்நிஸாலவலயஸ்தம் இவார் :
அவ் வானரம் இடமும் வலமும் சுற்றி கொள்ளி வட்டம் போல் தோன்றி பல ராமைன
நெருப்புக் கோட்டையில் நடுவில் அகப்பட்டவைன போலாக்கிற்று
57–தம் க்ருஹ’த கருடாநில வேகம் ஸவேதா யுகபேதவ ஸமீ க்ஷ்ய லாங்க
ஜல திலங்கந தக்ஷம் லாகவேந லகயந் விசசார
கடலைக் கடக்க வல்லதாய், வேகத்தில் கருடைனயும் காற்றையும் ஒத்ததான வேகத்தால் ஒரே சமயத்தில்
எங்கும் காண்கின்றதான அவ்வானரத்தை அடக்க பலராமன் அதற்கு மேலான விரைவினால் செய்ய சித்தம் கொண்டான்
58–அந்தகாரம் இவ தம் ப்ரதிருந்தந் அயேமவ முஸl நிஜத’ப்த்யா திங்முகாந்ய
கலுஷாணி விதந்வந் விச்வத்ருஷ்டி விபவாய பபூவ
எல்லாத் திக்குகளும் கலங்கி ஒன்றும் காண வாகாத காலத்திலே கதிரவன் தன் ஒளியினால் கார் இருளை
விலக்குவது போல் பலராமன் தன் தேஜஸ்ஸினால் அவ்வானரத்தை விலக்கி எல்லாரும் களித்துக் காணும்படியானான்.
59–கூணிதாகுலித கௌரவ தாம்நா லாங்கலேந லலிதோத்தத ல:
யூதநாதம் அவருத்ய கபீநாம் மௌலிகாதம் அவத’ந் முஸேலந
முன்பு ஹஸ்தினா புரத்தே கங்கையில் தள்ள தன் கலப்பையால் பெயர்த்த அழகும் அகங்காரமும் உடைய
பலராமன் அவ் வானரத்தை மண்டை உடையும்படி உலக்கையால் அடித்தான்
60–வஜ்ர பாணி மஹிதாத்பு த பூம்நா வாநேரண நிஹேதந ஸ ராம:
வ்யாசகார விநதாப யதாதா பூவராம சரிதம் புநருக்தம்
வணங்கினார்க்கு அபயம் அளிக்கும் ராமன் வச்சிராயுதம் ஏந்துகின்ற இந்திரனால் கொண்டாடப்பட்ட பெருமயை யுடைய
வானரத்தை வென்று பண்டைய இராம வரலாற்றை மீண்டும் உண்டாக்கினான்
அதாவது ராமன் இந்திரனால் மதிக்கப்பட்ட வாலியை இவ் வானரமும் ராவணேனாடு செய்த பெரும் போரிலே
பெருந்தொழில் . .கொன்றான் த்விவி) செய்திருப்பதால் இந்திரனால் மதிக்கப்பட்ட தேதன் தாரையின் உடன் பிறப்பாவான்
(வாலியின் மைத்துனன் ஆகையால் மிகவும் மதிக்கப்பட்டவன் )
இரு வானரங்களுக்கும் துர் குணம் ஒத்திருப்பது போல்
இரு ராமன்களுக்கும் அரணாகப் பற்றினார்க்கு அஞ்சேல் என்றருளுதல் ஒத்திருக்கும் –
61–தம மமபிதி தை வ விபாகாத் உத்ததே த்விவிதநாமநி சல்யே ரேவத’ரமண
ரேசித கே தா நாகிநச்ச முநயச்ச நநந்து:
சுகத்தைப் பெறுவிக்கும் ஸம்சாரமாம் தேகத்திற்கு தமமே மம ஸ்தானம் 0அதனைப் பிளந்து எறியும் சஸ்திரமாக
ஆயிற்று த்விவிதன் என்னும் அந்த வானரம்
பாக்கியம் பலிக்கும் தருணத்தால் அந்த சஸ்திரம் எடுத்து எறியப்பட்டது இப்படி ரேவதி காந்தனான பலராமனால்
கஷ்டங்கள் கழிக்கப் படவே தேவர்களும் முனிவர்களும் மகிழ்ச்சி யுற்றனர்
62–த்ராஸிேதஷு விபுதே ஷு ததக்ரே பீதவந்தம் அம்ருதம் பலபத்ர:
ப்ராபயத் ப்லவகமுக்யம் இத’வ ஸ்வகிபிஸ் ஸஹ ஸுதாசந பாவம் .
த்விவித வானரம் ஒரு முறை தேவர்களை விரட்டி அமுதத்தை விழுங்கிற்று . சேர்ந்தே உண்ணலாமே என்று
பலராமன் உதவினான் போலும் ஏன் அச்சமுறுத்தி உண்ண வேண்டும் —
போரால் மாண்டு அது வீர ஸ்வர்க்கத்தை அடைந்து விட்டதாம் —
63–பூதேல ஹலதராஹித குப்தவ் ஸாரபூத ஸுபட க்ரஹேணந உஞ்சவ்ருத்தி
உதரம்பர ஆஸ் த் தாத்ருேசந தபைஸவ க்ருதாந்த:
நமன் ஒரு ஏழை வைதிகன் -வயல்களில் அவன் உஞ்ச விருத்தி செய்து . அறுவடை யான பிறகு மீ தமுள்ள
சிதறியிருக்கும் நெல் மணிகைளக் கொணர்ந்து அவன் இப்படி தவம் புரிந்த .ஜீவித்து வந்தான்
(அரிசியைச் சமைத்து பகவானை ஆராதித்தல் காத்து வர (பலராமன்) மேன்மையால் கலப்பையை உடைய
குடியானவ னுடைய இடத்திேலேய ஸாரமான வஸ்து கிடைக்கலாயிற்று . பலராமன் முன்பு கொன்ற பிரலம்பன் போன்றோ –
உஞ்சம் போல அற்பம் த்விவிதன் (அன்னக் குவியல் போல் அபாரமானவன் )
64–ஏவம் ஈஷத் அவேராபித பாராம் பாவயந் புவம் அதோஷயத் ஆயாந் பூவ தேவே
ஜநிதாந் அபிநிக்நந் பூவேஜந ஸஹிேதா யதுநாத:
இவ்வாறு கண்ண பிரான் அண்ணனுடன் சேர்ந்து சில தேவர்களால் அசுராம்சமாக பிறப்பிக்கப்பட்ட
அசுரர்களைக் கொன்று பூமியின் பாரத்தைச் சிறிது குறைத்து நல்லோர்களைச் சந்தோஷிக்கச் செய்தான்
65–பாகவாதிபி: அவாதிதபூம்நாம் நிமேமஷ்வபி நிகாரபராணாம் சவ்ப ஹம்ஸ
டிபிக ப்ரப்ருத’நாம் ஸூதநை அலகயச்ச தரித்ரம்
முன்பு பரசு ராமருடன் சால்வன் போர் புரிந்த போது இவன் கண்ணனின் , திருவாழிக்கு இரையாக வேண்டியவன்
என தேவமகளிர் சொல்லக் கேட்டு விடப்பட்ட ,ஸால்வன் மமகாரமின்றி இருந்தது வாஸ மஹரிஷியை பரிபவித்த
ஹம்சன்திபிகன் மற்றும் பல மாற்றாரையும் மாள்வி ,என்ற இருவர்களையும் மாய்த்து பூமியை பாரமற்றதாக்கினான் .
66–உக்ரஸேந விநிவேசித ராஜ்யாம் உந்நமய்ய யதுவம்ச விபூதிம் தஸ்ய திக்விஜய
கௌதுகம் ஆத்ய: ஸப்தலோக திலேகா விததாந
[முதலடி கண்ணைனக் குறிக்கிறது] ஏழுலகுக்கும் திலகமான கண்ணன் உக்ரசேனனிடம் ராஜ்யத்தை வைத்து
யது வம்சத்திற்கு ஐஸ்வர்யத்தை வளர்த்து அவருக்கு திக் விஜயத்தில் ஆவலை அதிகப் படுத்தினான்
67–தந்நி யோகம் அத சேகரயித்வா ஸ்வப்ரசாஸந வசம்வத விச்வ:
யாவதுக்த நியதாகில வ்ருத்த’ந் யாதவாந் உபநிநாய ஸுதமாம்
உலகம் எல்லாம் தன் ஆஜ்ஜைக்கு வசமாகக் கொண்ட பெருமான் உக்ரசேனனின் ஆஜ்ஜைக்கு இணங்கி
மற்ற யாதவர்களை ஸுதமை என்ற சபைக்கு வருவித்தான்
68–ஆத்ம கல்பித த்ருதே அத ராஞ்ஜ: ஸந்நிதவ் ஸசிவபீ ட நிவிஷ்ட:
மந்த்ரணாய மஹேதா யது முக்யாந் ஸம்முகாந் ப்ரதிநநந்த முகுந்த:
மோக்ஷம் அளவிற்கு பலன்கைள அளிக்கும் பெருமான் தன்னால் ஸ்திரமாக ஆள்கையைப் பெற்றிருக்கும்
உக்ரசேனனின் ராஜ்ய சைபயில் மந்திரிகளின் இருக்கையில் அமர்ந்தவனாய் மந்த்ர ஆலோசனைக்காக
மற்ற யது ஸ்ரேஷ்டர்களைப் பார்த்தான் –
69–அபஜத நரபாலம் உக்ரஸே நம் பஹுமநுதே ஸ்ம யதூம்ஸ்ததாபி துங்க:
க்வசித் அபிலபேந விபக்தி சக்த்யா ஸ்வகுண விபூதி குண ‘பவந் இவைக:
உக்ரஸேனனுக்கு சேவை புரிபவன் ஆனாலும் யதுக்கைளத் தனக்கு மேலாக புகழ்பவன் ஆனாலும்
கண்ணனே மேம்பட்டவன்
70–அதிகுண ஹரி வம்சவர’ ஸங்காத் அபசித வாஸவ ஸங்கமாபிலாஷா அதிசய ருசிராம்
வஹந்த்யபிக்யாம் அசகமேதவ ஸபா (ஸதா?) தத்
ஸுதமை என்ற சபையையும் சிறந்த குணங்களை யுடைய ஹரி என்ற எம்பெருமானுடன் அவன் உதித்த
வம்சத்திலுள்ளவர்களின் சேர்க்கையால் இனிதான காந்தியுற்று, இந்திரன் என்ற ஹரி யுடனான சேர்க்கையில் விருப்பமற்று,
இந்த ராஜ்ஜியத்தில் தன் இருப்பின் நீட்டிப்பை விரும்பும் ஸபையைக் காணும் போதே திக் விஜயம் திண்ணம் என்று தெளியலாயிற்று
இதி ஸ்ரீ கவிதாக்கிக ஸிம்ஹஸ்ய ஸவதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஸ்ரீ மத் வேதாந்தாசார்யஸ்ய
க்ருத’ஷு யாதவாப்யுதய காவ்யம் ஏகவிம்ச: ஸர்க: பவ்ண்டரக வதத்தில் ஆரம்பித்து
திக் விஜய ஆலோசனையில் நிறை வுற்றது சுபம் (2171 – 2240 = 70 )
——————–
ஸ்ரீ கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:
———————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply