ஸ்ரீமந் நாராயணீயம் -ஸ்ரீ பகவத் ஸ்வரூபம் வர்ணனை —
ஸாந்த்ரானந்தாவ போதாத்மகம்
அனுபமிதம் கால தேசா வதிப்யாம்
நிர் முக்தம் நித்ய முக்தம் நிகம சத
சஹஸ்ரேண நிர்பாசஸ்ய மானம்
அஸ்பஷ்டம் த்ருஷ்ட மாத்ரே புனருரு
புருஷார்த்தாத்மகம் ப்ரஹ்ம தத்வம்
தத்தாவத் பாதி ஸாக்ஷாத் குரு பவன புரே
ஹந்த பாக்யம் ஜனானாம்—-1-
ஸாந்த்ர குருவாயூரப்பன் ஆரம்பித்துக் கொடுக்க-(ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் )
ஆனந்த-என்று இவர் சேர்த்து தொடக்கம்-ஆனந்த ரூபமான ஞானம் -திவ்யாத்மா ஸ்வரூபம் -ஆனந்த வல்லி -10 power 16-சொல்லி மீண்டு வந்ததே
பஸ்ய தே ருக்ம வர்ணம் -திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் –புண்ய பாப விதூய –நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் உபைதி -முண்டகம்
முழுமையான ஆனந்தமும் ஞானமும் தன்னுடைய வடிவமாகவே உடையது. எதனுடனும் ஒப்பிட முடியாதது.
கால தேச போன்ற எல்லைகளை கடந்து நிற்பது. ஆயிரக் கணக்கான வேத நூல்களாலும் விவரித்து கூறப்பட்டாலும் உணர்த்தப்பட முடியாதது .
அதனைக் கண்டவுடன் நமக்கு உயர்ந்த பலன்களை அளிக்க வல்லது. இப்படிப்பட்ட உயர்ந்த ஒரு ப்ரஹ்மம் குருவாயூரில் நின்று ஒளி வீசுகிறது.
இதனை அடைய செய்த புண்ணியம் என்னவோ ? ஆச்சரியமாக உள்ளதே !!
ஏவம் துர்லப்ய வஸ்துன்யபி
சுலபதாய ஹஸ்த லப்தே யதன்யத்
தன்வா வாசா தியா வா பஜதி பத ஜன :
க்ஷுத்ரதைவ ஸ்புடேயம் ஏதோ
தாவத் வயம் து ஸ்திரதர மனசா
விஸ்வ பீடாப ஹத்யை
நிச் சேஷத்மான மேனம் குரு பவன
புராதீசமேவ ஆச்ரயாம !!—- 2-
இப்படியாக கிடைப்பதற்கு மிக அரிய ஒரு பொருள் மிக எளிதாக கிடைக்கும்படி உள்ளது. நம்முடைய கைகளுக்கு எட்டும்படி உள்ளது.
இதனை உணராமல் மனிதர்கள் தங்கள் உடலாலும் மனதாலும் வாக்காலும் மற்ற தெய்வங்களை நாடுகின்றனர்.
இது அவர்கள் அறியாமையையே விளக்குகிறது . ஆனால் நாங்கள் உலகத்தில் உள்ளவர்களின் துன்பம் அனைத்தும் நீங்க
உறுதியான மனதுடன் அனைத்திற்கும் ஆத்மாவாக விளங்கும் இந்த குருவாயுரப்பனை மட்டுமே நாடி நிற்கிறோம்.
ஸ்த்த்வம் யத் தத் பராப்யாம் அபரி
கலநதோ நிர்மலம் தேந தாவத்
பூதைர் பூதேந்த்ரியை : தே வபுரிதி
பஹுச : ஸ்ருயதே வியாச வாக்யம்
தத் ஸவச் சத்வாத் அச்சாதித பர ஸுக
சித் கர்ப்ப நிர்ப்பாஸ ரூபம்
தஸ்மின் தன்யா ரமந்த்தே ஸ்ருதி மதி
மதுர ச ஸுக்ரஹே விக்ரஹே தே !!— 3
குருவாயுரப்பா ரஜோ மற்றும் தமஸ் குணங்கள் கலவாமல் சத்வ குணம் மட்டுமே உள்ளதால் தோஷம் இல்லாமல் விளங்கக் கூடிய
பஞ்ச பூதங்களாலும் பதினோரு இந்த்ரியங்களாலும் உனது திருமேனி ஆக்கப்பட்டது என்று வேத வ்யாசர் கூறுகிறார் .
இப்படியாக உனது திருமேனி உள்ளதால் அதற்குள் அடங்கிய பிரகாசமும் ஞானமும் ஆனந்தமும் மறையாமல் உள்ளது .
இத்தகைய உனது அர்ச்சாவதார விக்ரஹத்தைக் கண்டும் அதனைப் பற்றிக் கேட்டும் , அதனை த்யானித்தும்
உனது அடியார்கள் மிகுந்த ஆனந்தம் பெறுகின்றனர்
நிஷ் கம்பே நித்ய பூர்ணே நிரவதி
பரமானந்த பீயுஷ ரூபே
நிர் லீன அநேக முக்தா வளி ச ஸுப கதமே
நிர்மல ப்ரஹ்ம ஸிந்தௌ
கல்லோல உல்லாச துல்யம் கலு விமல தரம்
ஸ்த்வம் ஆஹு : ததாத்மா
கஸ்மன்நோ நிஷ் கலஸ் த்வம் சகல இதி
வசஸ்த்வத் கலாசஸ்வேவ பூமந் !!—- 4
குருவாயுரப்பனே நீ மாறுதல் அடையாமலும் எப்போதும் முழுமை பெற்றவனாகவும் ஆனந்தம் அளிக்கும் அமிர்தம் போன்றும் உள்ளாய்.
இத்தகைய அமிர்தம் உள்ள கடலில் உனது அடியார்கள் முத்துக்கள் போல் நிரம்ப உள்ளனர் .
இத்தகைய ப்ரஹ்மம் ஆகிய கடலில் வீசும் அலைகள் உனது சத்வ குணம் ஆகும் .
பரிபூர்ணமாக உள்ளவனே நீ நிஷ்கலன் (முழுமையானவன், பிரிக்க இயலாதவன் ) என்பது உண்மையே .
உன்னை சகலன் என்று கூறுவது நீ எடுத்த அவதாரங்கள் மூலமே பொருந்தும்.
பூமா -நின் ஒப்பார் இல்லா ஒப்பிலா அப்பன் நீயே
நிர் வ்யோ பாரோபி நிஷ் காரணம் அஜ பஜசே
வித் க்ரியா மீக்ஷணாக்யாம்
தேனைவோதைதி லீனா பிரக்ருதி ரஸதி
கல்பாபி கல்பாதி காலே
தஸ்யா : ஸம் சுத்தம் அம்சம் கம்பிதம்
அதிரோதாயகம் ஸத்வ ரூபம்
ஸத்வம் த்ருத்வா ததாஸி ஸ்வ மஹிம
விபவாகுண்ட வைகுண்ட ரூபம்– – 5
தோற்றம் என்பதே இல்லாமல் பிறப்பில்லாமல் எப்போதும் உள்ள குருவாயுரப்பா ! நீ செய்ய வேண்டும் என்று எந்த செயலும் இல்லை
( அனைத்திற்கும் உன்னால் ஏவப் பட்டவர்கள் உள்ளனர் ). இருந்தாலும் நீ பார்க்கும் பார்வையில் இருந்து உலகம் உண்டானது .
ஈஷணா -கடாக்ஷத்தாலே ஸூஷ்ம நிலை ஸ்தூல நிலையாக்கி ஸ்ருஷ்டித்து-
அது சிருஷ்டிக்கு முன்னர் உன்னிடம் மறைந்து இருந்தது . கல்பம் தொடங்கியபோது அது உன்னிடம் இருந்து தோன்றியது .
உனது மகிமையால் என்றும் குன்றாமல் உள்ள சக்தியை உடையவனே !! வைகுண்டத்தில் உள்ளவனே !!
உனது சக்தியின் மூலம் மாயையான ப்ருக்ருதியின் சத்வ அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நீ இந்த ஒப்பற்ற உருவம் கொண்டுள்ளாய் .
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு அர்ச்சையாகி -அப்ராப்ருத திவ்ய மங்கள விக்ரஹம்-இதம் பூர்ணம் பூர்ணஸ்ய இத்யாதி –
தத் தே பிரத்யக்ர தாரா தர லலித
கலாயவலீ கேலிகாரம்
லாவண்யஸ்ய ஏகஸாரம் ஸுக்ருதி ஜன:
த்ருசாம் பூர்ண புண்ய அவதாரம்
லக்ஷ்மி நிச் சங்க லீலா நிலயனம்
அம்ருதஸ் யந்த ஸந்தோஹ மந்த :
ஸிஞ்சத் ஸஞ்சிந்த கானாம்
வபுரனு கலயே மாருதா காரானாத !!– – 6–மாருத ஆகார நாதா
குருவாயுரப்பனே உன் திருமேனியானது எப்படி உள்ளது ? நீர்கொண்ட மேகம் போல் கருத்தும் அழகாகவும்
காயாம்பூ மலர் போன்று மனதிற்கு இன்பம் அளிப்பது போலவும் எல்லையற்ற அழகிற்கு இருப்பிடமாகவும் புண்ணியம் செய்த
மனிதர்களுக்கு முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் விளைவாகவும் மகாலட்சுமி மிகவும் விரும்பி விளையாடும் இடமாகவும்
த்யானம் செய்பவர்களின் மனதில் அமிர்தம் போன்ற இனிமை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
இந்த திருமேனியை நான் எப்போதும் தியானிக்கிறேன் .
கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா
பஹுதரபவ கே தாவஹா ஜீவபாஜாம்
இத் யேவம் பூர்வம் ஆலோசிதம் அஜித
மயா நைவமத்யாயி ஜானே
நோ சேஜ்ஜீவா : கதம் வா மதுர தரமிதம்
த்வத்வபு : சித்ர ஸார்த்ரம்
நேத்ரை : ச்ரோத்ரை : ச பீத்வா
பரம ரஸ ஸுதாம் போதி பூரே ரமேரந் !!— 7–
யாராலும் வெல்ல முடியாதவனே !! குருவாயூரப்பா !! நீ ஸிருஷ்டிப்பதால் மனிதர்கள் பிறக்கிறார்கள். அப்படி பிறந்த பின்னர்
பலவகையான துயரங்களை அனுபவிக்கின்றனர் . ஆக உன்னுடைய சிருஷ்டி என்பது மனிதர்களுக்கு துன்பம் அளிக்கவே உள்ளது
என்று ஒரு காலத்தில் நான் எண்ணியது உண்டு. உன்னைக் கண்ட பின்னர் என்னுடைய இந்த எண்ணம் தவறு என்று அறிந்தேன்.
நீ அப்படி எங்களை உருவாக்கவில்லை என்றால் பரமானந்தம் அளிக்கும் உனது இந்த திருமேனியை எப்படிக் காண இயலும் ?
காதுகளால் உனது பெருமைகளை எப்படிக் கேட்க இயலும் ? எப்படி ஆனந்த கடலில் மூழ்கவும் முடியும் ?-அச்சுவை பெறினும் வேண்டேன் என்னும்படி அன்றோ உனது அழகு –
நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததம் அபி
புரஸ் தைர் அநப்யர்த்திதானபி
அர்த்தான் காமாந் அஜஸ்ரம் விதரதி
பரமானந்த ஸாந்த்ராம் கதிம் ச
இத்தம் நி : சேஷ லப்யோ நிரவதிக பல :
பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷூத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி
வ்யர்த்தம் அர்த்தி வ்ரஜ : அயம்– – 8–
ஹரே குருவாயூரப்பா !! நீ எளிதாக அடைய கூடியவனாகவும் கேட்ட பலன்களை உடனே அளிப்பவனாகவும் பாரிஜாத மரம் போன்று உள்ளாய் .
உன்னை வழிபடுவோருக்கு அனைத்தையும் நிரம்ப வழங்குகிறாய் . என்ன கேட்பது என்று அறியாதவர்கள் மனதில் உள்ள விருப்பத்தையும்
புரிந்து அளிப்பவன் நீயே . அவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிப்பவனும் மோட்சம் அளிப்பவனும் நீயே .
இப்படி நீ எளிதாக அடைய உள்ளவனாக இருந்தும் மனிதர்கள் தேவ லோகத்தில் உள்ள கற்பக மரம் போன்ற அற்ப விஷயங்களையே விரும்புகின்றனரே !!
காருண்யாத் காமம் அன்யம் தததி கலு
பரே ஸ்வாத்மதஸ்த்வம் விசேஷாத்
ஐஸ்வர்யாத் ஈசதே அன்யே ஜகதி
பர ஜனே ஸ்வாத்மனோ அபீ ஈஸ்வர: த்வம்
த்வயி உச்சை : ஆரமந்தி பிரதி பத
மதுரே சேதனா : ஸ்பீத பாக்யா :
த்வம் ச ஆத்மாராமா ஏவ இதி அதுல
குண கணாதார சவுரே நமஸ்தே !!—- 9–
இனிமையான திருக் கல்யாண குணங்கள் கொண்ட வாசுதேவனே !! குருவாயூரப்பா !! இந்த உலகில் பல தெய்வங்கள்
தன்னை வணங்குபவர்களுக்கு தங்களை அல்லாமல் மற்றவற்றை மட்டுமே வழங்குகின்றன.
நீயோ உன்னை வணங்குபவர்களுக்கு உனது ஆத்மாவையே ( உன்னையே ) கொடுக்கிறாய் . மற்ற தெய்வங்கள் ஐஸ்வர்யத்தின்
மூலமும் அணிமா போன்ற சக்திகளின் மூலமாக தங்களது ஈஸ்வர தன்மையை விளக்குகின்றன .
நீயோ ஆத்மாவையே வென்று அதனை நிரூபிக்கின்றாய். புண்ணியம் செய்தவர்கள் உன்னையே அடைந்து உயர்ந்த
ஆனந்தம் அடைகின்றார்கள். யாரிடமும் எதையும் எதிர் பாராமல் உள்ளவனே !! ஆனந்த ரூபனே !! உனக்கு நமஸ்காரம்.
ஆத்மாராமா–தே மஹிமை -உனது பெருமையில் நிலை பெற்று உள்ளாய்
ஈஸ்வரோஹம் என்பாருக்கும் ரக்ஷகன் நீயே
நாள் திங்கள் ஊழி –அப்பொழுதும் அப்பொழுது ஆராவமுதன் நீயே-
ஐஸ்வர்யம் சங்கராதீச்வர வி நியமனம்
விஸ்வ தேஜோ ஹராணாம்
தேஜ : ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யசோ
நிஸ் ப்ருஹை : ச உபகீதம்
அங்கா ஸங்கா ஸதா ஸ்ரீ : அகில வித் அஸி
ந க்வாபி தே ஸங்க வார்த்தா
தத்வாதாகார வாஸின் முரஹர பகவச்
சப்த முக்யாஸ்ரய : அஸி– – 10-
முரன் என்ற அசுரனை கொன்றவனே !! ஹரியே குருவாயூரில் என்றும் வாசம் செய்பவனே !! உன்னுடைய செல்வம் எது ?
சங்கரன் போன்றவர்களை அவர்கள் கடமைகளில் அவர்களை ஈடுபட வைப்பது அன்றோ !! அனைவரின் சக்தியையும் அபகரிக்கும்
திறம் உடைய சங்கரனின் சக்தியையும் அபகரிக்கும் திறன் உடையவன் நீயே !! உன்னுடைய புகழை முற்றும் துறந்த முனிவர்கள் பாடுகிறார்கள்.
உன்னுடைய உடலில் எப்பொழுதும் மகாலட்சுமி வசித்து வருகிறாள் . நீ அனைத்தையும் அறிந்தவன் எதிலும் பற்று இல்லாமல் உள்ளாய்.
பகவான் என்ற பதத்திற்கு இலக்கணமாய் உள்ளாய்.
( பகவான் என்ற பதம் ஆறு குணங்களைக் குறிக்கும். அவை ஞானம் பலம் சக்தி தேஜஸ் வீர்யம் ஐஸ்வர்யம் .)
முதல் தசகம் முடிந்தது.
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply