முதல் சதகம் -ஸ்வரூபம் -வடிவு அழகு லாவண்யம் -சமுதாய சோபை –
இதில் ஸுந்தர்யம்-அவயவ சோபை – -ரூப மாதுர்யம் -திருமேனி அழகு இனிமை -பக்தி மஹத்மம்-இரண்டையும் சொல்லும் தசகம்
கீழ் ஸ்ராத்தரா-மீட்டர் – 21 அச்சு எழுத்துக்கள்-ஒவ்வொரு வரியிலும்
இதில் 19 அச்சு எழுத்துக்கள்
ஸுர்ய ஸ்பர்த்தி கிரீடம் ஊர்த்தவ திலக
ப்ரோத்பாஸி பாலாந்தரம்
காருண்யாகுல நேத்ரம் ஆர்த்ர
ஹலிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்
கண்டோத்யன் மகராப குண்டல யுகம்
கண்டோஜ்வலத் கௌஸ்துபம்
த்வத் ரூபம் வனமால்ய ஹார படல
ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே !—1-
குருவாயுரப்பனே ! உன் கிரீடம் சூரியனை விட பல மடங்கு ஒளி உள்ளதாய் இருக்கிறது . அழகான நெற்றியில் உள்ள திலகத்தால்
நெற்றி ஒளி வீசுகிறது . கண்களில் கருணை ததும்பி உள்ளது . அந்த கண்கள் புன்னகையை வீசி சிரிக்கின்றன .
மூக்கு எடுப்பாக உள்ளது. காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் மீன் போன்று கன்னங்களில் வந்து வந்து இடிக்கின்றன .
கன்னத்தில் ஓளியால் மகர குண்டலங்கள் ஒளி வீசுகின்றன -ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ
கழுத்தில் கௌஸ்துபம் என்ற மணி ஒளி வீசுகிறது . திருமார்பில் வைஜயந்தி என்ற மாலையும் முத்து மாலையும் உள்ளன .
மேலும் ஸ்ரீவத்சம் கொண்டதுமான உனது மார்பு உள்ளது . இத்தனை அழகான உனது உருவத்தை நான் தியானம் செய்கிறேன் .
திகழ்கின்ற திரு மார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மார்பு அன்றோ-
கேயுராங்கத கங்கனோத்தம
மஹாரத்ன அங்குலீயாங்கித
ஸ்ரீமத் பாஹு சதுஷ்க ஸங்க கதா
சங்க்காரி பங்கேருஹாம்
காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித
லஸத் பீதம்பராலம்பினிம்
ஆலம்பே விமலாம் புஜத் யுதிபதாம்
மூர்த்திக் தவ ஆர்த்திச்சிதம் !!—-2-
ஸ்ரீ அப்பனே !! உன்னுடைய நான்கு கைகளில் வளையல்கள், (கேயூர- தோள் வளையல்கள் )அங்கத ஆபரணம் ,கங்கணம் , ரத்னம் உள்ள மோதிரங்கள் உள்ளன .
அந்த கைகள் சங்கு சக்கரம் கதை மற்றும் தாமரை மலர் ஆகியவற்றை ஏந்தி உள்ளது . உனது இடுப்பில் அரைஞான் கயிறும்
(மையோ -ஒளி இல்லையே -மரகதமோ -குளிர்ச்சி இல்லையே -மறி கடலோ -மழை முகிலோ -ஐயோ -வர்ணிக்க முடியாத காஞ்சி)
பட்டு ஆடையான பீதாம்பரமும் உள்ளன. உனது திருவடிகள் தாமரை மலர் போன்று அழகாக சிவந்து தூய்மையாக உள்ளன .
உனது இத்தகைய திருமேனியை கண்டவர்களது துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன . இதனை நான் (ஆலம்பே)சரணடைகிறேன்.
யத் த்ரை லோக்ய மகியஸ: அபி
மஹிதம் சம்மோஹனம் மோஹனாத்
காந்தம் காந்தி நிதானத :
அபி மதுரம் மாதுர்ய துர்யாதபி
ஸௌந்தர்யோத்தரோபி ஸுந்தரதரம்
த்வத் ரூபம் ஆச்சர்யதோபி
ஆச்சர்யம் புவநே ந கஸ்ய குதுகம்
புஷ்ணாதி விஷ்ணோ விபோ !!–3-
அனைத்து இடங்களிலும் நிறைந்து உள்ளவனே !! விஷ்ணுவே !! உனது உருவம் எப்படிபட்டது ?
மூன்று உலகிலும் பெருமையும் சிறந்தும் உடைய பொருள் எது இருந்தாலும் அதை விட சிறந்ததாக உள்ளது .
எந்த பொருள் அனைவரது மனதையும் கவருமோ அந்த பொருளை விட உனது திருமேனி கவரக் கூடியது.
எந்த பொருள் கவர்ச்சியும் ஒளியும் கொண்டதோ அதை விட கவர்ச்சியும் ஒளியும் கொண்டது.
எது மிகவும் இனிமையாக உள்ளதோ அதனை விட இனிமையானது .
எது அழகாக உள்ளதோ அதனைவிட அழகு நிறைந்ததாக உள்ளது .
எது வியப்பை அளிக்கிறதோ அதனைவிட வியப்பை அளிப்பதாக உள்ளது .
இத்தனை சிறப்புடைய உனது திருமேனி யாருக்குத் தான் மன மகிழ்வை அளிக்காது ?
தத்தாத்ருங் மதுராத்மகம் தவ வபு :
ஸம் ப்ராப்ய ஸம்பந்மயி
ஸா தேவி பரமோத்ஸுகா சிரதரம்
ந ஆஸ்தே ஸ்வ பக்தேஷ்வபி
தேன அஸ்யா : பத கஷ்டம் அச்யுத விபோ
த்வத் ரூப மனோஜ்ஞக
ப்ரேமஸ் தைர்யமயாத் அசாபல பலா
பக்தேஷ்வபி சாபல்ய வார்த்தோதபூத் !!–4-
எங்கும் உள்ளவனே !! உனது அடியார்களை கைவிடாதவனே !! அனைத்து ஐஸ்வர்யங்களுக்கும் இருப்பிடமாக
உள்ளவள் மகாலட்சுமி, அவள் ஒப்பு இல்லாத உயர்ந்த உனது திருமேனியை அடைந்து அதனால் மிகவும்
மன மகிழ்வு அடைந்து தங்கிவிட்டாள். இதனால் அவள் தன்னுடைய அடியார்களிடம் கூட தங்கி இருப்பதில்லை .
இதனால் இவளுக்கு சபலம் உடையவள், நிலை அற்றவள் என்ற அவப் பெயர் அல்லவா உண்டானது .
பரமோத்ஸுகா-இறையும் அகலகில்லேன் என்று பற்று மிக்கு இருக்கிறாள் அன்றோ-
பக்தேஷ்வபி-செல்வம் மட்டும் வேண்டி வழி படும் பக்தர்கள் இடம் நீண்ட காலம் தங்காமல் -செல்வோம் என்று செல்வம் போகுமே –
ஹாஸ்யமாக -சாபல்ய-நிலை அற்றவள் என்கிறார்
லக்ஷ்மீஸ் தாவக ராமணீயக
ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்த்திரேதி
அஸ்மின் அந்யத் அபி ப்ரமண மதுநா
வக்ஷ்யாமி லக்ஷ்மிபதே
யே த்வத் த்யான குணானு கீர்த்தன
ரஸா ஸக்தா ஹி பக்த ஜனா :
தேஷ்வேஷா வஸதி ஸ்த்திரைவ தயித
ப்ரஸ்தாவ தத்தாதரா !!—5-
குருவாயுரப்பா !! மகாலக்ஷ்மியின் நாயகனே !! பதியே !! உன்னுடைய திருமேனி அழகில் மிகவும் கவரப்பட்டு
உன்னுடன் இருக்கும் மகாலட்சுமி பிறரிடம் இருப்பதில்லை என்பதற்கு இன்னொரு ஆதாரம் உள்ளது.
உன்னைப் பற்றியும் உன் திருக் கல்யாண குனங்களைப் பற்றியும் நாம சங்கீர்த்தனம் செய்யும் அடியார்கள் –
இவர்கள் எனது கணவரைப் பற்றி அன்றோ கூறுகிறார்கள் என்று மகிழ்ந்து அவர்களிடமும் வாசம் செய்கிறாள் அன்றோ !!
இதன் மூலம் உன்னைப் பற்றி கூறாதவர்களிடம் மட்டுமே இவள் நிலையாக இருப்பதில்லை என்று உணரலாம் .
யே த்வத் த்யான குணானு கீர்த்தன ரஸா ஸக்தா ஹி பக்த ஜனா :-உன்னைத் தியானித்து குண அனுசந்தானம் பண்ணி திரு நாமம் சங்கீர்த்தனத்தில் ஆழ்ந்த பக்தர்கள் இடம் ஆதரத்துடன் நிலையாக உள்ளாள்-நின்னையே தான் வேண்டி -நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே வேண்டிச் செல்லும் செல்வம் போல் –
ஏவம் பூத மனோஜ்ஞதா நவ ஸுதா
நிஷ்யந்த ஸந்தோஹனம்
த்வத் ரூபம் பர சித் ரஸாயன மயம்
சேதோஹரம் ச்ருண் வதாம்
ஸத்ய : ப்ரேரயதே மதிம் மதயதே
ரோமாஞ்சயதி அங்ககம்
வ்யாசிஞ்சத்யபி சீத பாஷ்ப விஸரை :
ஆனந்த மூர்ச்சோத்பவை :–6-
குருவாயுரப்பா !! கடந்த ஸ்லோகத்தில் கூறியது போல் உள்ள உனது அழகானது அமிர்தத்தை வழங்குவதாகவும் ,
ஆனந்த வடிவாகவும் , பார்ப்பவர்கள் உள்ளத்தை கவருவதாகவும் உள்ளது . (த்வத் ரூபம் பர சித் ரஸாயன மயம்-உயர்ந்த ஞான ஆனந்த மயம்)
உனது திருமேனி அழகை ஒருமுறை யாராவது கூறக் கேட்டால் அதனைத் திரும்ப திரும்ப கேட்க மனம் துள்ளுகிறது .
அப்படி கேட்டவுடன் மனதை பரவசம் நிரப்புகிறது. உடல் எங்கும் மயிர்க் கூச்சல் உண்டாகிறது .
ஆனந்த கண்ணீர் பெருகி உடல் முழுவதும் நனைந்து விடுகிறது .
மேல் பக்தி யோக சிறப்பை நான்கு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்-
ஏவம் பூத தயா ஹி பக்த்யபிஹிதோ
யோக : ஸ யோகத்வ்யாத்
கர்மஜ் ஞான மயாத ப்ருஷோத்தமதரோ
யோகீஸ்வரைர் கீயதே
சௌந்தர்யை க ரஸாத்மகே த்வயி
கலு பிரேம ப்ரகர்ஷாத்மிகா
பக்திர் நி : ச்ரமம் ஏவ விஸ்வ புருஷைர்
லப்ப்யா ரமா வல்லப !!—7-
லக்ஷ்மியின் நாயகனே !! குருவாயுரப்பா !! மேல் உள்ள ஸ்லோகத்தின் நிலை நமக்கு உண்டாவதால் தான் பக்தி யோகமே
சிறப்பானது என்று கூறப்பட்டது . இது கர்ம யோகம் ஞான யோகம் ஆகியவற்றை விட உயர்ந்தது என்று யோகிகள் கூறுகின்றனர் .
அழகின் இருப்பிடமாகவே உள்ள உன்னிடம் காதலின் விளைவால் உண்டாகும் பக்தி யோகம் மனிதர்களுக்கு எளிதில் கை கூடும் அல்லவா !!
நிஷ் காமம் நியத ஸ்வ தர்ம சரணம்
யத் கர்ம யோகா பிதம்
தத் தூரேத்ய பலம் யத் ஔபநிஷத
ஜ்ஞானோ பலப்யம் புன :
தத் அவ்யக்த தயா ஸுதர்க மதரம்
சித்தஸ்ய தஸ்மாத் விபோ
த்வத் பிரேமாத்மக பக்திரேவ ஸததம்
ஸ்வாதீயஸி ச்ரேயஸீ !! –8-
எங்கும் நிறைந்துள்ள குருவாயுரப்பா !! எந்த விதமான பலனையும் விரும்பாமல் தனக்கு விதிக்கப்பட்டுள்ள
கடமைகளை செய்வது கர்ம யோகம் , இது பலனால் கழித்தே பலன் அளிக்கும் .
உபநிசத்துகளை நன்கு கற்பதன் மூலம் ஞான யோகம் பலனளிக்கும் . ஞான யோகத்தின் பலன் இந்திரியங்களால்
அனுபவிக்கவோ உணரவோ இயலாது . ஆக கடினமானது -இந்த இரண்டை விட உன் மீது வைக்கும்
பக்தி மூலம் கிட்டும் பக்தி யோகமே இனிமையானதும் சிறப்பானதும் ஆகும் .
அத்யாயாஸ கராணி கர்ம படலான்
ஆசர்ய நிரயந் மலா :
போதே பக்தி பதேபி அதவாபி உசிததாம்
ஆயாந்தி கிம் தாவதா
க்லிஷ்ட்வா தர்க்க பதே பரம் தவ
வபுர் ப்ரஹ்மாக்யம் அந்யே புன :
சித்தார்த் ரத்வம் ருதே விசிந்த்ய பஹுபி :
சஸுத்யந்தி ஜன்மாந்தரை : —9–
ஸ்ரீ அப்பனே !! மிகுந்த கடினத்துடன் தங்கள் கடைமைகளை செய்து , அதன் மூலம் தங்கள் மன இருளை நீக்கி ,
இதனால் ஞான யோகத்திற்கும் உபாயாந்தர பக்தி யோகத்துக்கும் தங்களை தகுதி உடையவர்களாக சிலர் செய்து கொள்கின்றனர். இதனால் என்ன பயன் ?
உனது அழகால் உள்ளத்தில் நெகிழ்வு உண்டாகாமல் வேதாந்தம் தர்க்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு கஷ்டப்படுவதால் என்ன பயன்
பக்தி இல்லாமல் -ப்ரஹ்மம் என்று உன்னை தியானித்து பல பிறவிகள் கடந்து உன்னை அடைகின்றனர் .(ஆராவமுதே -உடலும் உருகி கரைய வேண்டுமே )
த்வத் பக்திஸ்து கதா ரஸாம்ருதஜரி
நிர்மஜ்ஜனேன ஸ்வயம்
ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம்
அக்லேசத : தன்வதீ
ஸத்ய : ஸித்திகரீ ஜயத்யிவிபோ
சைவாஸ்துமே த்வத் பத
பிரேம ப்ரௌடி ரஸார்த்ரதற த்ருத்தரம்
வாதால யாதீச்வர !!–10-
வாதால யாதீச்வர !!–பிரபுவான குருவாயுரப்பனே !! உன்னிடம் உள்ள பக்தி என்பது உனது லீலைகள் நிரம்பிய கதைகளில் அல்லவா உள்ளது ?
அவை அமிர்தம் போன்று உள்ளன -(அம்ருத வெள்ளத்தில் மூழ்கும் படி ). அவை (கதைகள்) எந்த சிரமமும் இன்றி உனது மார்கத்தை காண்பிக்கின்றன.
(தூய ஞானத்தையும் சிரமம் இல்லாமல் வழங்குமே )பிறவியின் பயனை உடனே அளிக்கின்றன .
உன்னுடைய திருவடிகளில் நான் பொதிந்து கிடக்கும் அந்த பக்தி சீக்கிரம் உண்டாக வேண்டும் .
இரண்டாவது தசகம் முற்றியது .
—————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply