ஸ்ரீ ஆராவமுதன் அனுபவம் –

ஸ்ரீ ஆராவமுதன் -மூலவர்
ஸ்ரீ அபர்யாப்த அமுதன்
குடம் எடுத்து ஆடிய எந்தை சொல் தொடரே சுருங்கி குடந்தை
இரண்டு திருக்கரங்கள் -வலது திருக்கரம் திரு முடியின் கீழ் அமர்த்தி -உத்தான சயனம்
உத்சவர் – ஸ்ரீ ஸாரங்க பாணி -ஸ்ரீ சார்ங்க ராஜா -ஸ்ரீ
சார்ங்க தரன் -ஸ்ரீ சார்ங்கேசன்
நான்கு திருக்கரங்கள்
சக்கரம் சங்கு கதை சார்ங்கம் உடை வாள் -பஞ்ச திவ்ய ஆயுதங்கள் உடன் அபய ஹஸ்தத்துடன் சேவை
ஸ்ரீ கோமள வல்லித் தாயார்
பாஞ்ச ராத்ர ஆகமம்

பூதத்தாழ்வார் பேயாழ்வார் திரு மழிசைப் பிரான் நம்மாழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள்
திரு மங்கை ஆழ்வார் =ஏழு ஆழ்வார்களால் மங்களா சாசனம்

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர்சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே

ஹ்ருத பூ பார தைதேய க்ருத விஸ்வ ஐநாவந
சார்ங்க பாணே சரணாம் தே லஷ்யம் பாபா நிமேது நா

இன் சொலால் ஈரம் அளை இப்படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச் சொல் –குறள்
ஆழ்வார்களும் திருவாய் மொழி ஈரச் சொற்களையும் சொல்லும்
ப்ரஹ்ம அனுபவ சாஹரத்திலே தாமும் ஆழ்ந்து நம்மையும் ஆழப் பண்ணுபவர்கள் அன்றோ

அமுதினும் ஆற்ற இன் சொல் -திவ்ய அம்ருதம் -பக்தாம்ருதம் -சர்வார்த்தம்-ஈரச் சொற்கள்
ஆராவமுதாழ்வார் -திரு மழிசைப் பிரான் -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு -வாழி -கேசனே
விபவம் -பெருமை -கோயிலிலே -திருவரங்கத்திலே
ஸுவ்ந்தர்யம்-எளிமையின் அழகு -குடமூக்கிலே -திருக் குடந்தையிலே –
திருவரங்கம் போலவே இதுவும் உபய பிரதான-மூலவருக்கு உத்சவருக்கும் பிரதானம்
ஆராவமுதே அடியேன் உடலம் என்றும்
ஆராவமுதே அடியேற்கு அருளாய் என்றும்
வில் குனித்த வில் காய் வீரனே -என்றும்
சாரங்க வில் சேவகனே -என்றும் மங்களா சாசனம் உண்டே –

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் -என்று ஹேம புஷ்கரணிக்கும்
தூ நிலா முற்றத்துக்கு போந்து விளையாடவா என்று கோயில் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி வடக்குப் பிரகாரத்துக்கும்
ஐவர்க்காய் சமரில் யுத்த -என்று திருத்தேர் எம்பிரானுக்கும் மங்களா சாசனம் உண்டே
தேர் -என்றது
கருவறை கல் தேரையும் -சித்திரத் திருத்தேர் இதுவே
திரு வெழு கூற்று இருக்கை இங்கு உள்ள மரத்தேரையும் -சித்திரைத் திருத்தேர் இதுவே –

வைகுண்ட நாத சார்ங்கேச ரங்க நாதோ மஹா பிரபு
ஏக ஏவ த்ரி ரூபோசவ் லோக ரக்ஷண ஹேதவே -என்று
ஸ்ரீ வைகுண்ட நாதனே அமுதன் -எனவே அமுதன் சந்நிதிக்கு திரு மா மணி மண்டபம் -என்ற திருப்பெயர் உண்டு

நாலாகப் பிரிந்த அருளிச் செயல்களை திருக்கை இட்டு அருளப் போகிறார் என்பதையே
நால் தோள் எந்தாய் -என்று மங்களா சாசனம்
ப்ராசீனானாம் ஸ்ருதி பரிஷதாம் பூர்வ கண்யர் -தேசிகன் -பழைய நான்மறைகளுக்கும் முந்தி நிற்பதாக அருளிச் செய்கிறார்

செழு மா மணிகள் சேரும் திருக் குடந்தை என்றது -அமுதனையும் திருமழிசைப் பிரானையுமே குறிக்கும்
சீரார் செந்நெல் -இந்த செழு மணிகளுக்கு அமுது படிக்கு உதவுவதாலேயே

320 வருஷங்களுக்கு முன்பு ரகுநாயக நாயக்கர் அரச ஆஸ்தான குரு ஐயா குமார தாத்தாச்சாரியார்
பல திருப்பணிகள் -இன்றும் தாயாரை சேவித்துக் கொண்டே இருக்கும் படி இவர் சேவை
இவரது அந்தரங்க சீடர் லஷ்மி நாராயண ஸ்வாமி -திருக்கோபுரம் -கைங்கர்யம்
இந்த பரமபக்தனுக்கு ஐப்பசி அமாவாசை திரு அத்யயனம் கோயிலுக்கு உள்ள இன்றும் நடக்கிறது
அமுதனை சேவிக்கவே ப்ரம்ஹத்யாதயோ கோரோ மஹா பாதக ஸஞ்சயா
கும்ப கோணே சயானஸ்ய விஷ்ணோ நஸ்யந்தி தர்சநாத் -அனைத்து பிரதிபந்தகங்களும் நசிக்கும்

நம்மாழ்வாரும் கலியனும் பல இடங்களிலும் அமுதனை மங்களா சாசனம் செய்து
விரஹ விடாயைத் தீர்த்துக் கொள்வதைக் காணலாம்
அமுதன் என்று மட்டும் இல்லாமல் அமுதே என்று நம்மாழ்வாரது ஈடுபாடு
அசைவிலுலகம் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே -என்றதும் வந்து சேவை சாதிக்க
வாரா வருவாய் வரும் என் மாயா -என்றும்
திரு நாட்டிலும் குடந்தை எம் கோவலன் குடி அடியார் என்று மடந்தையர் வாழ்த்துகிறார்கள் என்று அருளிச் செய்கிறார்
ஏத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம்
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே-திருப் பாண் ஆழ்வார்

தேவம் சார்ங்க தரம் விஷ்ணும் யே ப்ரபந்நா பிராயணம் ந தேஷாம்
யமஸா லோக்யம் நஸ்தே நர கௌகச வாமன புராணம்

குடந்தைக் கிடந்தானே தாலேலோ
குடந்தைக் கிடந்தாய் கொட்டாய் சப்பாணி -என்று பெரியாழ்வார்
எங்கள் பெருமான் –பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு -பூதத்தாழ்வார்
சேர்ந்த திருமால் கடல் குடந்தை-பேயாழ்வார்

கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே–13-2-
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–13-4-

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூடும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –கம்பநாட்டாழ்வார்

குறியும் நெறியும் -உபேயமும் உபாயமும் அமுதனே
ஸ்தல பெயர்கள்
பாஸ்கர க்ஷேத்ரம்
திருக் குடந்தை
குட மூக்கு
நடு வீடு -திருவரங்கம் மேல வீடு -திருக்கண்ண புரம் கீழை வீடு
பஞ்ச க்ரோச யாத்ரை ஸ்தலம்

திருவரங்கத்தில் -அணி அரங்கன் திரு முற்றம் -குலசேகரப் பெருமாள்
திருக்கண்ண புரத்தில் -நீணிலா முற்றம் -என்று கலியனும் போல்
ஸ்ரீ ஆண்டாள் சந்நிதிக்கு எதிரில் பரந்து காணப்படும் வடக்குச் சுற்றை பெரியாழ்வார்
தூ நிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா அம்புலீ சந்த்ரா வா என்று -மங்களா சாசனம்
இந்த வடக்குச் சுற்றில் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதிக்கு நேர் எதிர் புறம் கிழக்குக் கோடியில் ஸ்ரீ பெரியாழ்வார் சந்நிதி உண்டு

பிருகு மகரிஷியே ஹேம ரிஷியாக தவம் செய்து பொற்றாமரையாள் ஆகிய ஸ்ரீ கோமள வல்லித் தாயாரை
அமுதனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்
ஒரு காலத்தில் திருக் கோஷ்ட்டியூர் பெருமாள் கல் திரை இட்டு ரஷித்து அருளியதால்
அருளிச் செயல் கோஷ்ட்டியில் திருக் கோஷ்ட்டியூர் பாசுரம் சேர்த்து இங்கே ஓதுகிறார்கள்
அக்ஷய த்ருதியை அன்று 12கருட சேவை பிரசித்தம் இங்கு

மார்கழி முதல் பத்து நாள் பகல் பத்து
10 நாள் திரு மங்கை மன்னன் திருவடி தொடுதல்
மார்கழி 19 நாள் பெருமாள் நாச்சியார் இருவருக்கும் மாற்றி திருக்கோலம் பிரசித்தம்
அடுத்த பத்து நாள் இராப்பத்து
20 தேதி ஆழ்வார் திருவடி தொடுதல்

கோமள ஸ்வர்ண வல்லீவ த்ருச்யதே மனுஜைர் அபி
தஸ்மாத் கோமள வல்லீதி சர்வ லோகேஷு கேஷு விஸ்ருதா —
திராவிட ஸ்ருதி தர்சகாய நம –
கும்பஸ்ய கோண தோ யஸ்மின் ஸூ தா பூரம் விநிஸ்ருதம்
தஸ்மாத்து தத் பதம் லோகே கும்ப கோணம் வதந்தி ஹி

கல்யாண புரம் என்ற பெயரும் உண்டு திருக் கல்யாணம் நடந்த க்ஷேத்ரம் என்பதால்

தானே படைத்து உலகைத் தானே அளித்து நீ
தானே அழிக்கும் தளர்ச்சியோ -வானில்
திரு மகுடம் தைக்க சிறு குறளாய் நீண்ட
பெரும குடந்தைக் கிடந்தாய் பேசு -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

ஸ்ரீ சார்ங்க பாணே விபவம் சுபாஸ்பதம் யேஸ்ரா வயந்தீஹ கலவ் யுகே பரம்
ஸ்ருண்வந்தி தேஷாம் அகிலேஷ்டதாயீ பவத் யசவ் சார்ங்க தர பிரியாயுத

————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading