ஸ்ரீ மத் பாகவதம் -முதல் ஸ்கந்தம் -ஆறாவது அத்யாயம் –ஸ்ரீ நாரத -ஸ்ரீ வியாச பகவான் சம்வாதம்–

ஸூ த உவாச
ஏவம் நிஸம்சய பகவான் தேவர்சேர் ஜென்ம கர்ம ச வ்யாஸ சத்யவதி ஸூ தா-1-6-1-

வியாச உவாச
பிக்ஷுபிர் விப்ர வசிதே விஞ்ஞான அதேஷ்த்ரிபிஸ் தவ வர்த்தமானோ வியசதி ஆத்யே ததா கிம் அகரோத் பவன் -1-6-2-
அவர்கள் சென்றபின் நீர் செய்தது என்

ஸ்வயம் புவ கய வ்ருத்ய வர்த்திதம் தே பரம் வய கதம் சேதம் உதஸ்ரஷி காலே ப்ராப்தே களேவரம் -1-6-3-

ப்ராக் கல்ப விஷயம் ஏதம் ஸ்மர்த்திம் தே முனி சத்தமே ந ஹி ஏச வியவதத் கால ஏச சர்வ நிரக்ர்த்தி -1-6-4-

நாரத உவாச
பிஷுபிர் விப்ர வசிதே விஞ்ஞான அதேஷ்ட்ர்பிர் மம வர்த்தமான வயசே அத்யே தத ஏதத் அகர்சம் -1-6-5-

ஏகாத்மஜ மே ஜனனி யோசின் முத ச கிங்கரி மய்ய ஆத்மஜே அநன்ய கதவ் சக்ரே ஸ்னேக அனு பந்தனம் -1-6-6-

ச அஸ்வந்தர ந கல்ப அசித் யோக க்ஷேமம் மம இச்சதி இஸஸ்ய ஹி வசே லோகோ யோச தருமயி யத -1-6-7-
அனைத்தும் அவன் அதீனம் -பொம்மை போல் ஆட்டி வைக்கிறான்

அஹம் ச தத் ப்ரஹ்ம குலே உசிவம்ஸ் தத் உபேஷயா திக் தேச கால வ்யுத்பன்ன பால பஞ்ச ஹயன -1-6-8-

ஏகத நிர்கதம் கேஹத் துஹந்திம் நிசி கம் பதி சர்ப்ப அடஷத் பாத ஸ்பர்ச க்ர்பணம் கால சோதித -1-6-9-
பாம்பால் கடி பட்டாள் -இறந்தாள் –

ததா தத் அஹம் ஈசாய பக்தானாம் சம் அபிப்சதா அனுக்ரஹம் மன்ய மன பிரதிஸ்தம் திசம் உத்தரம் -1-6-10-

ஸ்பிதன் ஜன பதன் தத்ர புரா கிராம வ்ரஜ அகரன் ஷேத்ர கர்வத வதி ச வனானி உப வனானி ச -1-6-11-

சித்ர தாது விசித்ர அத்ரின் இப பஃன புஜ த்ருமன் ஜலசயன் சிவ ஜலன் நளினி ஸூர சேவித
சித்ர ஸ்வநை பத்ர விப்ரமத் ப்ரஹ்ம ஆஸ்ரய –1-6-12-

நள வேணு சர தன்ப குச கிஸக கஹ்வரம் ஏக அதியத அத்ராக்ஷம் விபினம் மஹத் கோரம் பிரதி பயாகரம்
வ்யால உலுக சிவ அஜிரம் -1-6-13-

பரிஸ்ராந்த இந்திரிய ஆத்ம அஹம் த்ரித்பரித புபுக்ஷித ஸ்நாத்வா பித்வா ஹ்ரதே நத்யா உப ஸ்பர்ச கத ஸ்ரம -1-6-14-

தஸ்மின் நிர் மனுஷே ஆரண்யே பிப்பல உபஸ்த்தே அஸ்ரித ஆத்மன ஆத்மாநம் ஆத்மஸ்தம் யதா ஸ்ருதம் அசிந்தயம் -1-6-15-

த்யாயேத் சரண அம்புஜம் பாவ நிர்ஜித சேதஸ ஓவுத்காந்த்ய அஸ்ரு கல அக்ஷய ஹ்ருதி ஆஸீத் மே க்ஷண ஹரிஹி -1-6-16-

பிரேம அதிபார நிர்பின்ன புலக அங்க அதி நிர்வ்ருத்த ஆனந்த சம்ப்லவ லின ந அப்சயம் உபயம் முனே ஓ வ்யாஸ தேவ -1-6-17-

ரூபம் பகவத யத் தத் மன காந்தம் சுச அபஹம் அபஸ்யன் சஹச உதஸ்தே வைக்லவியத் துர் மன இவ -1-6-18-

திதர்ஷு தத் அஹம் புவ ப்ரணிதய மன ஹ்ருதி விஷமன அபி ந அபஸ்யம் அவிதிருப்த் இவ அதுர -1-6-19-
மீண்டும் காண முடியாமல் மனம் கலங்கினேன்

ஏவம் ஏதந்தம் விஜனே மாம் அஹா அஹோசர ஜிரம் கம்பீர ஸ்லாக்ஸ்நய வாசா துக் பிரசமயன் இவ -1-6-20-

ஹந்த அஸ்மின் ஜன்மனி பவன் ந மாம் இஹ அர்ஹதி அவிபாக கசயனம் துர் தர்ஷ அஹம் குயோகிநம்–1-6-21-

ஸக்ருத் யத் தர்சிதம் ரூபம் ஏதத் காமய தே அநக மத் காம சநகைஹ் சாது சர்வான் முஞ்சதி ஹ்ருத்சயன் -1-6-22-

சத் சேவையா அதிர்கய அபி ஜத மயி த்ருத மதி ஹித்வ அவத்யம் இமாம் லோகம் கந்த மத் ஜனதாம் அஸி –1-6-23-

மதி மயி நிபத இயம் ந விபத்யேத கர்ஹிசித் பிரஜ சர்க்க நிரோத அபி ஸ்ம்ர்தித் ச மத் அனுக்ரஹாத்-1-6-24-

ஏதவத் உக்த்வா உபரரம தத் மஹத் பூதம் நப லிங்கம் அலிங்கம் ஈஸ்வரம் அஹம் ச தஸ்மை
மஹதம் மஹியசே சிரஸ்ன அவனமம் விததே அனுகம்பித -1-6-25-

நாமானி அந்நதஸ்ய ஹதத்ரப படன் குஹ்யானி பத்ராணி க்ருதானி ச ஸ்மரன் கம் பர்யதன் துஸ்த மன கத ஸ்ப்ரஹ
காலம் ப்ரதிக்ஷன் விமத விமத்ஸர -1-6-26-

ஏவம் கிருஷ்ண மதே ப்ரஹ்மன் ந அசக்தஸ்ய அமல ஆத்மன கால ப்ரதுரபுத் காலே ஸுவ்தாமனி ததித் யதா -1-6-27-

ப்ரயுஜ்ய மனே மயி தம் ஸூ த்தம் பகவதிம் தநும்ஆரப்த கர்ம நிர்வாண நியபதத் பாஞ்ச பவ்திக -1-6-28-

கல்ப அந்தே இதம் அதய சயனே அம்பசி உதந்வத சிஸேயிசோ அனு ப்ரணாம் விவிசே அந்த அஹம் விபோ -1-6-29-
கல்பம் முடிவில் பிரளயம் -நாராயணன் திரு வயிற்றில் அனைவரும் -நுழைந்தனர்

சஹஸ்ர யுக –4,300,000-வருஷங்கள் பர்யந்தே உதய இதம் சிஸ்ர்க்ஷத மரீசி மிஸ்ர ருஷய ப்ராணேப்ய அஹம் ச ஜஜ்னீரே -1-6-30-

—————–

நாரதர் பூர்வஜன்மத்தில் ஒரு பணிப்பெண்ணின் மைந்தராக இருந்தார். அவர் தாய் யோகிகளுக்கு சேவை செய்து வந்தாள்.
நாரதர் சிறு வயதிலேயே அடக்கம் உடையவராகவும் கைங்கர்யத்தில் ஈடுபாடுடனும் இருந்ததால் அந்த யோகிகள்
அவரிடம் திருப்தியடைந்து ஞானத்தையும் பக்தியையும் அவருக்கு போதித்தனர்.,
அதனால் அவருக்கு உலகப்பற்று நீங்கியது.
ஆனால் அவர் தாய் அவரிடம் உயிரையே வைத்திருந்ததால் அவளை விட்டுச்செல்ல முடியவில்லை.
பிறகு அவர் தாய் விதிவசமாக பாம்பு கடித்து இறந்தவுடன் அவர் கால் போன வழியே போய் மனித சஞ்சாரமில்லாத
ஒரு இடத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். பரமாத்மாவை முழுமனதுடன் தியானித்து பக்தியால் பரவசமான சித்தத்துடன்
பகவானைக் காணும் பேராவலுடன் இருந்தவரின் இதயத்தில் மெள்ள மெள்ள பகவான் தோன்றினார்.
பேரானந்தத்தில் மூழ்கி கண்ணீர் பெருக அவர் பகவானை தரிசிக்கையில் ஸ்ரீஹரியானவ்ர் மறைந்து விட்டார்.

மறுபடி இந்த உலக நினைவு வந்தவுடன் மறைந்து விட்ட பகவானைக் காண மறுபடி த்யானத்தில் ஆழ்ந்தார்.
ஆனால் தர்சனம் கிடைக்காமல் வருந்தியபோது பகவானின் கம்பீரமான அன்போடு கூடிய வார்த்தைகளைக் கேட்டார்.
பகவான் கூறினதாவது,

“வாசனாமலங்கள் நீங்காதவர்க்கும் யோகத்தில் பக்குவம் அடையாதவர்க்கும் நன் காண்பதற்கரியவன் .
உனக்கு என்னிடம் பற்றை உண்டாக்குவதற்காக இந்த தரிசனம் காண்பிக்கப்பட்டது .
இந்த தேகம் போன பிறகு நீ எனது பரிஜனங்களுள் ஒருவனாகப் போகிறாய். “

மதிர்மயி நிபத்தேயம் ந விபத்யேத கர்ஹிசித்
ப்ரஜாஸர்க நிரோதே அபி ஸ்ம்ருதிஸ்ச மதனுக்ரஹாத் (பாகவதம்.1.6.25)

“என்னிடம் நிலைத்த இந்த மதியானது ஒருபோதும் இனி அழிவுறாது. ப்ராஜைகளின் சிருஷ்டியிலும் ப்ரளயத்திலும் கூட
இந்த நினைவு என் அனுக்ரஹத்தால் அழியாது.”

பிறகு தன் வாழ்நாளை பகவானின் நாமத்தை பாடிவதிலும் அவனைப்பற்றிய சிந்தையிலும் கழித்து தன் வாழ்நாள் முடியும்
தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
கல்பத்தின் முடிவில் பிரம்மா நாராயணனிடத்தில் ஒடுங்கின போது நாரதரும் பிரமனின் மூச்சுக்காற்றோடு உட்புகுந்தார்.
ஆயிரம் சதுர்யுகங்களுக்குப் பிறகு மீண்டும் பரமன் இவ்வுலகை சிருஷ்டிக்க எழுந்த போது பிரமனிடம் இருந்து
மரீசி முதலிய ரிஷிகளுடன் நாரதரும் தோன்றினார்.
நாராயணனின் அனுக்ரஹத்தால் த்ரிலோக சஞ்சாரியாகி பகவானின் மகிமையை பரப்ப பகவானாலேயே கொடுக்கப்பட்ட
வீணையை மீட்டிக்கொண்டு சஞ்சாரம் செய்து வருவதாக நாரதர் வ்யாஸருக்குத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, ஹரிலீலை என்பது சம்சார சாகரத்தில் மூழ்கி தத்தளிப்பவர்க்கு ஒரு கப்பல் போன்றதாகும்.
முகுந்த சேவையால் அன்றி காமத்தாலும் பேராசையாலும் கெடுக்கப்பட்ட மனது யோகவழிகளால் சாந்தியடையாது.
இங்கனம் கூறிவிட்டு நாரதர் வியாசரிடம் விடைபெற்று வீணையை மீட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading