ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –
எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –
———————————————————————
ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி
நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்
தனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-
நற்குரோதன வருட மகரமாத
நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
விக்கிரம வற்சரக்கில் வீட்டிருந்து
வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று
புவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-
செய நாமமான திருவாண்டு தன்னில்
ஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாணைனார்
தன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-
வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-
சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–
நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–
ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–
தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–
அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-
நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-
சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply