ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————–
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் ஹேதுவான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்தித்தவர்
மீளவும்
பத த்ரய நிஷ்டா விரோதிகளாய் அநாதி காலமே பிடித்துப் பண்ணிப் போந்த
அக்ருத்ய கரண பகவத் பாகவத அபராதிகளையும் –
இப்போது பண்ணிப் போகும் ஸூத்ர மந்த்ர ஸூத்ர தேவாந்தர பஜனாதிகளையும் -(பரிபவாதிகளையும் )
இவை தொடக்கமானவற்றையும் அனுசந்தித்து –
இப்படி தோஷ பூயிஷ்டமான நான் தேவரீர் முன்னே கூசாதே நின்று இதை விண்ணப்பம் செய்கிறேன் என்று பீதராய்
தம்முடைய முஃயத்தை அனுசந்தித்து அருளுகிறார்
மேல் நான்கு ஸ்லோகங்களால் –(7-10)
கீழ் இவர் இப்படி நிர்பந்திக்கையாலே-நீர் மனுஷ்யர் அல்லீரோ –
ஆஸ்திக்யாதிகளை உண்டாக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேன் சரீர மாத்ரத்தாலே மனுஷ்யன் –
வ்ருத்தியாலே பஸூ சஜாதீயனும் பஸூ வ்யாவ்ருத்தனும் -என்கிறார் –
வ்ருத்த்யா பஸூர்-இத்யாதியாலே
வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம்
இத் யாதரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ –7-
ஸ்ரீ யதிகட்க்கு இறைவரே நான் நடைத்தையால் சீலத்தால் மிருகம் போலும்
சரீரத்தால் மனுஷ்ய ஜந்து போலும் இருந்தும்
என்னை ஆஸ்ரயித்து பக்தியோடும் அன்போடும் விஸ்தாரமாய் புகழ்ந்து
இந்த பாவன புண்ய ஸ்ரீ அரங்க ஷேத்ரத்தில் உம்முடைய ஆச்சர்ய பீட ஸ்தானத்தில் இப்பொழுதும் நடந்து வருகிறேன்–(சூதனாயக் கள்வனாய் -திருமாலை )
பதவுரை:-
ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
வஞ்சந பர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான,
அஹம் – அடியேன்,
நர வபு: – மனித வுடல் கொண்ட,
பஷு:து – ஜன்ய ஜனக விபாகம் அற வர்த்திக்கும் விலங்காகவே (விலங்கென்றே)
வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே,
(ஜ்ஞாயே – அறியப் படுகிறேன்.)
(உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக் கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.)
ஈத்ருஸ: அபி – இப்படிப் பட்டவனாக இருந்த போதிலும்,
ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்ம குண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்ம குணங்களுக்கும் இருப்பிடமானவன்,
அயம் – இந்த மணவாளமாமுனிவன்’
இதி – என்றிவ்வாறாக,
க்ருதிந: அபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட,
ஆதரேண – ப்ரீதிக்குப் போக்குவிட்டு மனமார்ந்த அன்போடு,
மித: – தங்களில் ஒருவர்க்கொருவர்,
ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்ல வேண்டிய நல் வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்க படியாக,
அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும்,
அத்ய – இப்போது,
வர்த்தே – இருக்கிறேன்.
தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கி யருள வேணும்.
——
ஸாஸ்த்ர அப்யாசிகளுக்கு யோக்கியமான மனுஷ்ய ஜென்மத்தில் பிறக்கையாலும்
தத் விருத்தமான க்ருத்யாதிகளிலே தடையற நடக்கையாலும்
நர சாம்யமும் பசு சாம்யமும் தமக்கு உண்டாக அனுசந்திக்கிறார்
வ்ருத்தயா பஸூர்
என்னுடைய விருத்தியைப் பார்த்தால் ஜன்ய ஜனக விபாகமற வர்த்திக்கும் பஸூ விருத்தியோடே ஒக்கும்
நர வபு
எடுத்த உடம்பைப் பார்த்தால் ஸாஸ்த்ர வஸ்யமான மனுஷ்ய சரீரமாய் இருக்கும்
து சப்தத்தால்
மனுஷ்ய சரீர பரிக்ரஹம் பண்ணி வர்த்திக்கிற அல்லாதாரில் தமக்கு உண்டான
வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார்
மீத் ருஸோ அபி
கீழ்ச் சொன்னபடியே யுடையனாய் இருக்கச் செய்தேயும் -தம்முடைய தோஷ பரப்புக்கு பாசுரம் இடப் போகாமையாலே –
இப்படிப்பட்டவன் என்கிறார் –
நம்முடைய தோஷம் இதுவான பின்பு நாம் இவ்விஷயத்தை கிட்டுகை அயுக்தம் என்று கை வாங்க வேண்டி இருக்க
அது செய்யாத அளவன்றிக்கே-இவனைப் போலே ஆத்ம குண பூர்ணன் இல்லை –
ஆகையால் இவ் விஷயத்தை கிட்டிப் பரிமாறுகைக்கு இவன் அத்தனை அதிகாரிகள் இல்லை -என்று
அறிவில் தலை நின்றார்கள் எல்லாரும் தங்களில் ஏக கண்டராய் ப்ரீதிக்குப் போக்கு வீடு இட்டுப் புகழும் படி அன்றோ
இப்போதும் வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் கொண்டு-வஞ்சன பரனாய்க் கொண்டு -வர்த்தியா நின்றேன்(யசோதை போல் நடித்து -பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன் -ஆழ்வார் பிரதம பர்வத்தில் )
யதீந்திர –
ரோக நிவர்த்தகனான பிஷக்கைப் பற்றி இருக்கச் செய்தேயும் நோயின் கையிலே துகை யுண்ணும் வியாதி க்ரஸ்தனைப் போலே
ஆஸ்ரித தோஷங்களைக் கழிக்கைக்கு சக்தரான தேவரீரைப் பற்றி இருக்கிற அடியேன்
இத் தோஷ சாகரத்தில் கிடந்து அழுந்துகை பிராப்தமோ பிரானே என்கிறார்-
(கருணைக் கடல் இருக்க அநந்த கிலேச பாஜன ஸம்ஸார சாஹரத்தில் அழுந்த ப்ரஸக்தி தான் உண்டோ)
தாத்பர்யம்
சாஸ்திரங்களில் விதித்த படியே சத்துக்களாய் வாழ மனுஷ்ய சரீரத்தைப் பரிக்ரஹித்த போதிலும் அவற்றில் லவ கேசமும் அனுஷ்டியாமல் -பகவத் பாகவத அஸஹ்ய அபசாராதிகளான அக்ருத்யாதிகளில் தடையற நடக்கையால் ஜன்ய ஜனன விபாகம் அற வர்த்திக்கும் பசுக்களோடு ஓக்க தோஷ பூயிஷ்டனாய் இருந்தாலும்
மஹாத்மாக்கள் கூட அடியேனுடைய வஞ்சன வ்யாபாரங்களைக் கண்டு இவன் அத்தனை அதிகாரி இல்லை என்று பரஸ்பரம் புகழும் படி அன்றோ வர்த்தியா நின்றேன் -கருணைக் கடலான தேவரீரே பாபங்களையும் அப்ராப்த விஷயாந்தர ப்ராவண்யத்தை அடியோடு போக்கி -ப்ராப்த விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி வளர்த்து அருள வேணும் என்கிறார்
——-
வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
து சப்தம் -வ்யாவ்ருத்யர்த்தமாய் –
அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது தம்முடைய மனுஷ்யத்வம் லோக விலஷணம் என்கை-அத்தை விவரிக்கிறார் –
அடியேன் வ்ருத்தியாலே பஸூ என்னவுமாய் -சரீரத்தாலே மனுஷ்யன் என்னவுமாய் இருப்பான் ஒருவன் என்கிறார் –(மனுஷ்யத்தவே பரத்வம் அவனுக்கு பஸூத்வே மனுஷ்யன் நாம் )பஸூத்வே நரத்வம் லோக விலஷணம் இறே –
இத்தால் அடியேனுக்கு உள்ளது பஸூவுக்கு போலே 1-ஆஹார 2-நித்ரா 3-பய 4-மைதுந நிமித்தமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஒழிய
ஸ்வ ஆத்ம உஜ்ஜீவன ரூபமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் இல்லை -என்கிறது
ஆகில் உமக்கு வ்ருத்தி யன்றோ சிஷணீயை-அத்தை சத்துக்களை அனுவர்த்தித்து சிஷித்துக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது அவர்கள் என் பக்கல் தாங்கள் வ்ருத்தி சிஷை பண்ணி
வைத்துக் கொள்ளும் படி காணும் என்கிறார் –
ஈத்ருசோ அபி –
இப்படி நர பஸூவாய் இருந்தேனே யாகிலும் -பிறர் அடியேனைக் கண்டால்
ஐயோ -இவன் மனுஷ்யனாய் இருந்து வைத்து தத் அநு ரூபமான சாஸ்திர வஸ்யதா ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிவது என்று
தயை பண்ணும்படி வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
அவர்கள் இவன் சர்வஜ்ஞன் என்னும் படி காணும் என்னும் படி வர்த்தித்தது -என்கிறார்
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம் -இத் யாதரேண க்ருதிநோ அபி மித ப்ரவக்தும் -அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ
நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமாய் -என்றும்
ஒக்க -குரு முக ஸ்ரவண சித்தமான ஸ்ருதியாலும்-
தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரங்களாலும்-
சாந்தோ தாந்தோ -ப்ருஹத -6-4-23-இத்யாதிப்படியே
சம்சய விபர்யயம் (ஐயம் திரிபு )அற பிரதிபாதிக்கப் படா நின்றுள்ள சமஸ்த ஆத்ம குணங்களுக்கும் வகுத்த இடம் இவன் என்று அறுதி இட்டு
இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே இப்படி இருப்பான் ஒருவன் உண்டாவதே என்று
ப்ரீதியுடனே அல்பஜ்ஞ்ஞர் அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஸ்ருத்யாதிகள் அடைய அர்த்தங்களை யாதாவாக அறியும்படியான
ஜ்ஞான சக்த்யாதிகளை யுடையவர்களும் தங்களிலே தாங்கள் விஸ்வாச பூர்வகமாகச் சொல்லுகையே பிரயோஜனமாக
ஸ்வ வ்ருத்தியை தேவரீர் சந்நிதியிலே விண்ணப்பம் செய்யும் தசையிலும் பர வஞ்சனத்திலே
அத்யாதர விசிஷ்டனாய்க் கொண்டு இவ் விபூதியில் வர்த்தியா நின்றேன் –
வஞ்சன பர –
அவர்கள் அடியேனுடைய பாஹ்யாகாரத்தில் ஆதாரத்தைப் பண்ணுமா போலே யாய்த்து அடியேன் அவர்களை
வஞ்சிக்கையில் பண்ணும் ஆதாரமும் -என்கிறார் –
அத்யாபி வஞ்சன பர –
இப்படி விண்ணப்பம் செய்கிறதும் ஒரு வஞ்சனா விசேஷம் என்கிறார்
வஞ்சன பர –
இது வாய்த்து வ்ருத்தியால் யுண்டான பஸூவில் வ்யாவ்ருத்தி -இதுக்கு ஹேது ஏது என்ன
அத்ர –
இவ் விபூதியில் இருப்பாய்த்து -என்கிறார் –
யதீந்திர –
ஜிதேந்த்ரியரில் தலைவராகைக்கும் அடியேன் பர வஞ்சன பரனாகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு என்கிறார்(என்னையும் பார்த்து என் இயல்பையும் பார்த்து எண்ணில் பல் குணத்து உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் )
அன்றிக்கே –
இத்தால் பெற்ற பலம் ஏது என்ன
அத்ர வர்த்தே –
பத்தும் பத்தாக சம்சாரத்துக்கு ஆளானேன்
யதீந்திர வர்த்தே-
தார்மிகர் கரையில் இருக்க பெருக்காற்றில் மூழ்கிப் போவார் கூவுமா போலே
தாம் சம்சார ஆர்ணவ நிமக்னராய் -தத் உத்த்ரண ரக்ஷகரான – ஸ்ரீ எம்பெருமானாரைக் கண்டு –
தேவரீர் சந்நிஹதராய் இருக்க அடியேன் இப்படி சம்சார சாகர நிமக்னன் ஆவதே என்று கூப்பிடுகிறார் –
ப்ரவக்தும் வஞ்சன பர –
சாஸ்த்ரார்த்தங்களை அறிந்து வைத்து -அனுஷ்டியாமல் பர வஞ்சனம் பண்ணுகிற அடியேன் நாஸ்திகன் ஆகையாலே
அடியேனை ஒரு நாளும் திருத்தலாகாது -என்று கருத்து –
அன்றிக்கே –
து -சப்தம் –
வ்யாவ்ருத்யர்த்தமாய் –அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது மனுஷ்யன் என்கிற பிராந்தி விஷயனான அடியேன் மனுஷ்யன் அன்று என்கை –
ஆனால் பின்னை யார் என்னில்
பஸூ –
பஸூ என்கிறார்
உம்மிடத்தில் தத் வ்யாவ்ருத்தி தோற்றா நின்றதே என்ன
நர வபு பஸூ
அது தன்னிலும் விஜாதீய பஸூ என்கிறார் –
அதாவது பாஹ்யமான சதுஷ் பாதத்வம் இல்லை யாகிலும் ஆந்தரமான அஜ்ஞ்ஞானம் உண்டு என்கை –
ஜ்ஞா நேன ஹீன பஸூபிஸ் சமான -என்கிறபடியே த்விபாத்வ பஸூவும் உண்டு என்கிறார் ஆகவுமாம் –
இத்தால் பிரயோஜக ஜ்ஞான அபாவ நிபந்தன பஸூத்வம் அடியேன் இடத்தில் உண்டு என்கிறார் –
அஹம் நர வபு பஸூ –
பஸூவான வடியேன் த்விபாத் பஸூ வாகையாலே –
கேவல நரனும் அன்று -கேவல பஸூவும் அன்று -உபய வ்யாவ்ருத்தன் என்கிறார்
இத்தால் கேவல நரனைப் போலே சாஸ்திர வஸ்யனும் அன்றிக்கே
கேவல பஸூவைப் போலே கட்டவும் விடவுமாம் படி பர வஸ்யனும் அன்றிக்கே –
ஸ்வ இச்சாரியாய் இருப்பான் ஒருவன் என்கிறது
இத்தால் சாத்ய சித்த உபாயங்களுக்கு அநதிகாரி என்கிறது (சித்த உபாயம் கண்ணன் -அத்வேஷம் மாத்திரமே பற்றாசாகக் கொண்டு உகந்து ரஷிப்பான்)-
ஆகில் உமக்கு ஜ்ஞானம் அன்றோ வேண்டுவது –
அத்தை சத்துக்களை அநு வர்த்தித்து உண்டாக்கிக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் வ்ருத்தியாலே அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது
அவர்கள் தாங்கள் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி அடியேன் பக்கல் பண்ணி வைத்துக் கொள்ளலாம் படி காணும் என்கிறார் மேல்
ஈத்ருசோ அபி
இப்படி நர பஸூ வ்யாவ்ருத்தனாய் ஜ்ஞான அபாவ நிபந்தனமான பஸூத்வம் உடையேனாய் இருந்தேனே யாகிலும்
தத் அநு ரூபமான பாஹ்ய ஆகாரத்தோடு வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
தத் விருத்தமாய்க் காணும் வர்த்தித்தேன் என்கிறார் –
வ்ருத்த்யா
கேவல பாஹ்ய ஆகாரத்தாலே கிடீர் அவர்கள் இப்படி சாரஜ்ஞ்ஞர் என்று தாங்கள் விஸ்வாச பூர்வகமாக சொல்லும் படி
காணும் அவர்களை வஞ்சித்தேன் -என்கிறார் –
வ்ருத்த்யா அத்யாபி வஞ்சன பர –
இப்படி தேவரீரை அனுவர்த்தித்துப் போருகிறதும் வஞ்சனா விசேஷம் என்கிறார்
அத்ர யதீந்திர வர்த்தே –
தேவரீர் இவ் விபூதியிலே ஜிதேந்த்ரியரில் தலைவராய் வர்த்திக்குமா போலே
அடியேன் வஞ்சகரில் தலைவனாய் வர்த்திக்கும் படி என்கிறார் –
யதீந்திர வர்த்தே –
தேவரீருக்கு இந்த்ரிய ஜயத்தால் பிறந்த ஐஸ்வர்யம் தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இருக்க
அடியேன் இந்த்ரிய பரவசனாய் சம்சாரத்துக்கு ஆளாவதே என்கிறார் –
———
தாஸ்யம் செய்யாமல் இருப்பது மாட்டும் அன்றி
அப்ராப்த விஷயங்களில் போக்கிக்கொடும் என்று விண்ணப்பமும் செய்யாத படி வஞ்சிக்கும் படி உள்ளேனே-நர பஸூத்வான் அஹம் -குணவான் போல் இதுவே நிரூபகம்
ஸ்வத ஸர்வஞ்ஞரான எம்பெருமானாரும் பிரமிக்கக் கூடாது என்று உண்மையைக் கூறுகிறேன் -வ்ருத்யா நர பஸூ என்கிறார்
அஹிம்ஸை -மெய் பேசுதல்- கொடுமை யில்லாமை -தூய்மை- பொறி யடக்கம் -கொடைத் தன்மை -மன வடக்கம் -பொறுமை -அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப் படுகின்ற ஆத்ம குணங்கள் (உயிரின் நற் பண்புகள்) ஆகும்.
‘இவன் ஆத்ம குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால் மற்றும் சிலரும் ஆத்ம குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத் தோன்றக் கூடுமென்று நினைத்து அப்படிச் சொல்லாமல், ‘ஆத்ம குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால், ‘அத் தகையவன் இம் மணவாள மா முனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப் பற்றி -(உத்தேச்ய தம -விதேய -பதம் -ஆதாரத்துடன் )மகிழ்ந்து பேசுமளவிற்குத் தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க.-அவசியம் தர்ம பிரசாரம் பேசுவது போல் பரஸ்பரம் பேசிக் கொள்ளுகிறார்கள்
அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத நாத யாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின (அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கத்திலேயே )மிகப் புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே, இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.
இவற்றை மாற்றி அருள வேணும் -நிவர்த்தய ஆர்ய முன்பே அருளிச் செய்தார் அன்றோ-
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –
Leave a Reply