ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–5- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்/ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

—————–

ஸ்ரீ எம்பெருமானே சேஷியும் உபாயமும் உபேயமும் என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க –
நீர் நம்மையும் நம் உடையாரையும் சேஷிகளும் உபாய பூதராகவும் சொல்லா நின்றீர்-
அது என் கொண்டு நீர் சொல்லுகிறது என்று ஸ்ரீ எம்பெருமானார் நினைவாக
சகல ஸாஸ்த்ர ரூபமான ஸ்ரீ திருமந்திரம் இதுக்கு மூல பிரமாணம் –
அதில் பிரதிபாதிக்கிற அர்த்தத்துக்கு அனுரூபமான நிஷ்டையையும்
தத் பலமான தேவரீர் திருவடிகளில் அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று அபேக்ஷிக்கிறார் –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்களுக்கு பிரமாணமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை ப்ரசக்தி பண்ணி-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்கள் ஸ்ரீ திரு அஷ்டாஷரத்தின் பத த்ரயார்த்தங்கள் யாகையாலே –தந் நிஷ்டையை அடியேனுக்கு பிரசாதித்து அருளி
அடியேன் புத்தியானது தேவரீர் திருவடிகளை அனுபவித்து ஹ்ருஷ்டமாம் படி செய்து அருள வேணும் என்கிறார் –

கீழ் ஸ்லோகத்தாலே
பிரதம பாதத்தாலே -(யதீந்த்ர தவ -ஸ்வரூபம் )ப்ரணவார்த்தமும் –
வாக் குண கீரத்தநே அசௌ -என்றத்தாலே வாத்சல்யாதி குண கீர்த்தனத்திலே என்ற போதே –
அக் குணங்கள் உபாய குணங்கள் ஆகையாலே மத்யம (நமஸ் )பதார்த்தமும்
த்ருதீய பாதத்தாலே -(நாராயணாயா )சரம பதார்த்தமும் –
சதுர்த்த பாதத்தாலே -பிரதம சரம பத ஸ்தான அந்வித நமஸ்(ஓம் நம – -நாராயண நம )சப்தார்த்தமும் சொல்லப் பட்டது இறே(அவனுக்கே கைங்கர்யம் -அவன் உகப்புக்காக -ஸ்வரூப புருஷார்த்த தீக்ஷை )

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த
நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே
ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –5-

ஸ்வரூப உபாய உபேயங்கள் -தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள் -திரு மந்த்ரம் -பத த்ரய -ஆந்தர அர்த்தம் ததீய பர்யந்தம் -பாகவத ஆச்சார்ய கைங்கர்யமே ப்ராப்யம்–மற்று எல்லாம் பேசினும் திரு எட்டு எழுத்தும் கற்று நான் –கண்ணபுரத்து உறை அம்மானே உற்றதும் உன் அடியாருக்கு அடிமை –குறையல் பிரான் அடிக்கீழ் -ஸ்வாமி இன்றும் சேவிக்கிறோமே ஆங்கு அப்பொழுதே -அத்ர அத்ய –

ஸ்ரீ யதிகளுக்குள் ஸ்ரேஷ்டரே –ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்கு ஸ்வாமியே
ஸ்ரீ திரு மந்தர பொருள்களில் வழுவாத நிஷ்டையை எனக்கு இப்பொழுதே தானம் செய்ய வேண்டும்
என்னுடைய புத்தி சிஷ்டர்களால் நெருங்கி சேவிக்க தக்க உம்முடைய திருவடி இணையை
எக்காலமும் அனுபவித்து ஓயாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்..

பதவுரை:-

நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய,

யதீந்த்ர – யதிராஜரே,

அத்ர – சரமபர்வம் ருசி அறியாத -இருள் தரு மா ஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில்,

அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில்,

மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு,

அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்தி பெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள,-மந்த்ர ராஜா திருமந்திரம் -மந்த்ர ரத்னம் த்வயம்

பத த்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய-அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய ஸரணத்வம், அநந்ய போக்யத்வம்-(எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,-எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.)என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை,

விதர – தந்தருள வேணும்.

ஸிஷ்ட அக்ர கண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில் திரிபுணர்ச்சி யில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று நினைப்பதனாலே முதலில் எண்ணத் தக்க முற்கூறிய கூரத்தாழ்வான் திருக் குருகைப் பிரான்பிள்ளான் முதலான ஸஜ் ஜநங்களாலே அடிமை செய்யத் தக்க தேவரீருடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை,

நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,

அஸ்ய மம புத்தி: – மிகத் தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது,(சம்பந்த சாமான்ய சஷ்ட்டி -என் பொருட்டு -எனக்கு நாலாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை அர்த்தம் )இந்த ப்ராப்யம் கிட்டாவிடில் தரிக்காத என்னுடைய புத்தி-

ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக,

அஸ்து – ஆயிடுக.

———

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
ஸ்ரீ திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –

மனு சப்தம் -மந்த்ர வாசி
மனு ராஜம் -என்றது மந்த்ர ராஜம் என்றபடி –(மந்த்ர ராஜம் உக்ரம் வீரம் இத்யாதி வியாவர்த்திக்க அஷ்டாக்ஷர விசேஷணம் )
ஸ்ரீ திரு மந்திரத்துக்கு ராஜாவாகையாவது –
1-வேதங்களும் ரிஷிகளும் வைதிக புருஷர்களும் ஏக கண்டமாக பரிக்ரஹிக்கையாலும் –
2-அர்த்த பூர்த்தியாலும் –
3-தானே ஸ்வ தந்திரமாய்க் கொண்டு சகல பலன்களையும் கொடுக்க வற்றாகையாலும் –
4-உபாயாந்தார சஹகாரியாகையாலும் –
5-தன்னை ஒழிந்த வியாபக அவியாபக சகல பகவன்-மந்திரங்களிலும்
உத்க்ருஷ்டமாய் இருக்கை–

பத த்ரயங்களின் அர்த்தமாவது –
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -இவைகளும்
தத் பிரதிகோடியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் –

அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ஆகாரத் த்ரயமும் தத் விஷயத்தில் போலே ததீய விஷயத்திலும் உண்டாய் இறே இருப்பது
ஆகை இறே ஸ்ரீ திருமந்திரம் கற்ற ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -(8-10-3)என்று அருளிச் செய்தது –

இப்படி சாமான்யேன ததீயருக்கு எல்லாம் தத் சம்பந்தம் மூலமாக சேஷித்வாதிகள் உண்டாகையாலே
ததீய விஷயமாக நிர்ஹேதுகமாக அடியிலே தன்னை அங்கீ கரித்து அருளி
இவ் வவஸ்யாபன்னனான ஸ்வாச்சார்ய விஷயத்திலும் சேஷித்வாதிகள் அனுசந்திக்கக் குறையில்லை –

நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஆகையால் பத த்ரயத்திலும் சொல்லுகிற அர்த்தங்களில் சரம பர்வ பர்யந்தமான நிஷ்டையை –
இதில் அபேக்ஷை உடைய அடியேனுக்கு
இவ்வர்த்தத்தில் ருசி உடையாரைக் கிடையாத இவ் விபூதியிலே இப்பொழுதே(அத்ர அப்ய )தந்து அருள வேணும் –
பெரு விடாய்ப் பட்டு -தண்ணீர் தண்ணீர் -என்று துடிக்கிறவனுக்கு இவ்விடத்தில் இப்பொழுதே விடாய் தீர்க்க வேணும் இறே –
நீர் நம்மை அபேக்ஷித்தால் இப்படி உமது அபேக்ஷை செய்ய வேணும் ஹேது என் என்ன சொல்கிறது மேல்

நாத – என்று –
இத் தலையில் சொல்லலாவதொரு ஹேது இல்லை -இவ் வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவர் –
இது நம்முடைமை அன்றோ -என்று இச் சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் -என்கை

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –
சிஷ்டர் ஆகிறார் –
ஞான அனுஷ்டான பூர்ணராய் -கண்ணழிவு அற்ற ப்ராப்ய ருசியை உடையவர்கள் –
அவர்களுக்கு அக்ர சரண்யர் ஆகிறார்
ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் -இப்படி இருந்தவர்களால் நிரந்தரம்
அனுபவிக்கப்படா நிற்பதாய் இருக்கிற வகுத்த சேஷியான தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளை –
இந்த ப்ராப்யம் பெறா விடில் தரியாத படியான இந்த என்னுடைய சிந்தையானது
யதா மநோ ரதம் அனுபவித்துக் களிப்பதாக
உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பால் அதுவே போந்தது
என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு– என்ற ஐஸ்வர்யத்தைப் பிரார்த்தித்த படி –

(போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்  ஒண் சீ
ராம்  தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- உனதடிப் போதில்-பவத் பதாப்ஜே-ப்ராப்யமும் போக்யமும் )
தாத்பர்யம் -50

——–

அஷ்டாஷராக்ய –
ஏதத்வை நாராயணஸ் யஷ்டாஷரம் பதம் -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார் (திருச்சந்த விருத்தம் -77)-என்றும்
கதிர் அஷ்டாஷரோ ந்ரூணாம்-என்றும்
மந்த்ரம் அஷ்டாஷரம் வித்யாத் -என்னும் இத்யாதி பிரமாணங்களாலே-
ஸ்ரீ அஷ்டாஷரம் -என்று பிரசித்தமான -என்னுதல்-
ஸ்ரீ அஷ்டாஷரம் என்ற திரு நாமம் உடைய என்னுதல்

மநு ராஜ –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
ராஜாதி ராஜ சர்வேஷாம் -என்றும்
வானோர் இறை -(1-5)என்றும்
அமரர்கள் அதி பதி -என்றும்
தேவ தேவேச -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வாச்யனான ஸ்ரீ ஈஸ்வரன்
ஸ்வ அபேஷயா நியாமக அந்தர ஸூந்யனாய்-தான் சர்வ நியந்தாவாய் இருக்குமா போலே வாய்த்து
வாசகமான ஸ்ரீ திரு அஷ்டாஷரமும்

மந்த்ராணாம் பரமோ மந்திர -என்றும்
ந மந்த்ரோ அஷ்டாஷராத் பர -என்றும் சொல்லுகிறபடியே
பகவன் மந்த்ரங்களில் ஸ்வ அபேஷயா அதிசயித மந்த்ராந்திர ரஹீதமாய்
தான் பிரதானமான படியும்
ஈஸ்வரனை ஒழிந்தவர்களுக்கு ரஷகத்வம் உண்டாம் போதாய்த்து மந்த்ராந்தங்களுக்கு மந்த்ரத்வம் உள்ளதும் –
ஆக இப்படி
பகவத் மந்த்ரங்களில் பிரதானமான ஸ்ரீ திரு மந்த்ரத்தினுடைய –
அவனுடைய பிரதாந்யம்-குண பௌஷ்கல்யாதி நிபந்தனம்-
இதனுடைய பிரதானம் அர்த்த பௌஷ்கல்யாதி நிபந்தனம்-

பத த்ரயார்த்த –
பத த்ரய-பிரணவ -நமோ -நாராயணாய -என்கிற பத த்ரயத்தினுடைய
யர்த்த-அனந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வங்கள் ஆகிற அர்த்தங்களிலே

நிஷ்டாம்
அவிசால்யமான இருப்பை –
அர்த்த ஸ்திதியில் அவிசால்யத்வமாவது –
விரோத் யுதய அஸஹிஷ்ணுத்வம் -அதாவது –
அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான அந்ய சேஷத்வத்தினுடையவும் –
அநந்ய சரணத்வ விரோதியான உபாயாந்தர சம்பந்தத்தினுடையவும் –
அநந்ய போக்யத்வ விரோதியான உபேயாந்தரங்களுடையவும் உதயத்தை பொறாது ஒழிகை
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ஸ்வார்த்ததா புத்தி தவிர்கை யாக்கவுமாம் –
இது இறே நமஸ் சப்தத்தாலே
பூர்வ உத்தர பதங்களோடு காகாஷி ந்யாயத்தாலே அன்வயித்து (ஸ்வார்த்ததா புத்தி )கழி யுண்கிறது

அஸ்ய மம-
உண்டியே உடையே உகந்தோடும் (பெருமாள் திருமொழி -3-பகவத் -விஷயம் முதல் பதிகம் -பாகவத விஷயம் அடுத்து -விஷயாந்தர ப்ராவண்யம் மூன்றாவது -அதே போல் இங்கும் )-என்கிறபடியே அன்ன வஸ்த்ராதி விஷயார்ஜன லோலனான அடியேனுக்கு என்னுதல்-
அதில் ஆசா லேசம் இல்லாத அடியேனுக்கு என்னுதல் –

மேலே –விதர -என்றதுக்கு அனுகுணமாக மஹ்யம் -என்ன வேண்டி இருக்க
மம -என்கிறது சம்பந்த சாமான்ய அபிப்ப்ராயத்தாலே
அன்றிக்கே –
அஸ்ய மம -அதில் ஆசை உடைய அடியேனுக்கு -என்னுதல்

விதர
பிராசாதித்து அருள வேணும் -என்கிறார் –
தேவரீர் தரப் பார்க்கில் அத்தை இப்போதே தர வேணும் என்ன –
தேச விசேஷத்திலே யாகிறது -என்ன

அத்ர
இருள் தரு மா ஞாலமான இத் தேசத்திலேயாக வேணும் என்கிறார் –
தேவரீர் சம்பந்திகளுக்கு இதுவன்றோ அசாதாரண லஷணம்-
ஆகில் தருகிறோம் –பொறுத்து இரும் என்ன

அத்ய
அபேஷையுடைய இக் காலத்திலேயாக வேணும் -என்கிறார் –
நின்றவா நில்லா நெஞ்சு-(க்ஷிப்ரம் நிவேதயத மாம் விபீஷணன் )இறே
அன்றிக்கே –
உமக்கு இப்படி ஸ்வரூப அனுரூபங்களான அர்த்தங்களில் ஆசை இல்லாமைக்கு அடி என் என்ன

அத்ராத்ய –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசமும் –
சத் அனுஷ்டான விரோதியான இக் காலமும் -என்கிறார்
காலம் கலி இறே –
தேச கால -பாத்ரங்களைப் பாராமல் தேவரீர் இந்த சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் என்கிறார்
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டுவது -(ஆர்த்தி பிரபந்தம் =14)
ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் -(உபதேசரத்னமாலை -37)-என்று
அத் தலையில் நினைவு அறிந்து இறே இவர் அருளிச் செய்தது
இப்படி அநதிகாரயாய் இருந்து வைத்து நம்மை நிர்பந்திக்கிறது என் என்ன

யதீந்திர –
நம் குறை ஆராயும்படி யன்றோ தேவரீர் பூர்த்தி –
தேவரீருக்கு உள்ள சம தம யாத்ம குணங்கள்
தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இறே தேவரீர் மதிப்பு –
ஆகில் உமக்கு என் என்ன –

நாத
தேவரீர் இத்தலைக்கு ஸ்வாமி யன்றோ நாம் கார்யம் செய்யாமைக்கு என்கிறார் –
யாசித்தும் பிறர் கார்யம் செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார் –(வாமனன் சீலன் -அனைத்துலகும் வாழப்பிறந்த எதிராசா -நீ வேண்டாம் என்றாலும் விடேன் )
ஸ்வாமி யானமையை நீ என் கொண்டு அறிந்தீர் என்ன –

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய
பிரமாணங்களில் பிரதானமான சிஷ்டாசாரம் கொண்டு அறிந்தேன் -என்கிறார் –
தர்மஜ்ஞ சமய பிரமாண-இறே –
வேத பிரமாண்ய வாதிகளிலே முதல் எண்ணத் தக்கவர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான்-ஸ்ரீ முதலி யாண்டான் –
முதலான சிஷ்ட ஜனங்களாலே சேவிக்கத் தகுதி யானவரே என்று சம்போதிக்கிறார்-
இவர்கள் ஆஸ்ரயிக்கும் போது-பிராப்த விஷயமாக வேணும் என்று அறிந்தேன் என்று கருத்து –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்யருடைய சம்பந்தி ஜனங்களால் சேவிக்கத் தகுந்தவரே என்னவுமாம் –
அப்போது அவர்கள் தந்தாமைப் பற்றினவர்களுக்கு ப்ராப்த விஷயம் என்று உபதேசித்துக் காட்ட –
அவர்களும் கண்டு ஆஸ்ரயிக்கை யாலே தேவரீர் ஸ்வாமி யானயமையை அறிந்தேன் என்று கருத்து

ஆகில் தருகிறோம் என்று இவர் பிரார்த்தித்த படியே பிரதம பர்வதத்தை வெளிச் சிறப்பிக்க –
அடியேனுக்கு இவ்வளவால் போராது-
இதினுடைய எல்லை நிலமான தேவரீர் திருவடிகளை அனுபவித்து
அடியேனுடைய புத்தியானது ஹ்ருஷ்டமாக வேணும் என்கிறார் –

ஆசார்ய கைங்கர்யம் பகவத் கைங்கர்யத்தினுடைய சரம அவதி யானமை எங்கனே என்னில்
ப்ராப்யத்துக்கு பிரதம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் -என்று தொடங்கி-(412)
சரம பர்வம் பாகவத கைங்கர்யம் -என்று அருளிச் செய்து
அதுக்கு அர்த்தம் ஆசார்யன் உகப்புக்காக பண்ணும் பகவத் கைங்கர்யம் ஆசார்ய கைங்கர்யம் என்று தொடங்கி –
பாகவதர்கள் உகப்புக்காக பண்ணும் ஆசார்ய கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் -என்று ஆசார்ய கைங்கர்யத்தை
சரம பர்வமாக அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –

ஸ்ரீ ஆசார்யன் ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபதேசித்து அதுக்கு அர்த்தமாக ஸ்ரீ பகவத் தாதர்த்தமாக உபதேசிக்க
ஸ்ரீ பகவானும் –மத் பக்த ஜன வாத்சல்யம் -என்று தொடங்கி -ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் என்றும்
தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் -(போனகம் தருவரேல் புனிதம் அன்றே )என்று பாகவத தாதர்யத்தை உபதேசிக்கையாலே
அவர்களுடைய ஆசார்ய சம்பந்தத்தை யிட்டு இவனை அங்கீ கரித்து
பதி வ்ரதைகள் பதி வ்ரதைக்கு பாதி வ்ரத்யத்தை உபதேசிக்குமா போலே
குருரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிகளாலே ஆசார்ய தாதர்யத்தை உபதேசிக்கையாலே ப்ராப்யத்தில்
சரம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் என்கிறது –
இத்தை இறே-திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்று
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தது

(ம்லேச்சனும் பக்தன் ஆனால் சதுர் வேதிகள் அனுவர்த்திக்க அறிவு கொடுத்து -குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
அதாவது –
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –
மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா ,
ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே –( கருட புராணம்- மத்ஸ்ய புராணம் ஸ்லோகம் )– என்கிற படியே
(என்னை பூஜிக்கும் அளவாவது செய்ய வேண்டும் )
ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்
1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –
2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்
3-தானே ஆராதிக்கையும்
4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –
5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –
6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –
7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –
8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –
அஷ்ட விதயாக அருளிச் செய்த பக்தி உடையவன் ஆனால்-)

ஸ்ரீ பகவத் கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்யன் உகப்புண்டு —
ஸ்ரீ பாகவத கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்ரீ பகவத் ப்ரீதி உண்டு
ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவதர்கள் உகப்பு உண்டு –
ஆகையால் ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யம் ததீய கைங்கர்ய கர்ப்பமாய் இருக்கும்
ஆகையால் ஸ்ரீ ஆசார்ய கைங்கர்யமே ஸ்ரீ திரு அஷ்டாஷரத்துக்கு பிரதான ப்ரமேயமாகக் கடவது

அன்றிக்கே
சிஷ்டேத்யாதி-க்கு
இப்படி சம்பந்த மாத்ரம் கொண்டு நாம் ஆருக்கு அதிகாரம் உண்டாக்கி உதவினோம் என்ன
சிஷ்டேத்யாதி –
சாஸ்திர விஸ்வாச சாலிகளான ஜனங்கள் உண்டு -ஸ்ரீ யாதவ பிரகாச -ஸ்ரீ யஜ்ஞ மூர்த்தி யாதிகள் -அவர்களாலே
சேவ்யர் ஆனவரே -என்றுமாம் –
அவர்களை அதிகாரிகள் ஆக்கி யன்றோ தேவரீர் ஸ்ரீ திரு மந்த்ரார்த்தை உதவி யருளிற்று –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய- ஜன சேவ்ய -என்று இரண்டும் சம்போதனம் ஆகவுமாம் —
அப்போது நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -என்றும்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம(ஸூந்தர காண்டம் )-என்றும் சொல்லுகிறபடியே
சகல சாஸ்திர தாத்பர்யமான ஆன்ரு சம்சய பிரதானரில் முதல் எண்ணத் தக்கவர்
ஆகையாலே சர்வ ஜனங்களாலும் சேவிக்கத் தக்கவர் என்று பொருள் –

இவருக்கு ஆன்ரு சம்சய பிரதானரில் அக்ர கண்யத்வம் ஆவது –
முன்புள்ள முதலிகள் க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-ஆன்ரு சம்சய பிரதானராய்
பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதே- ஆஸ்திக்யாதி பரிஷை பண்ணி ஹிதம் அருளிச் செய்வார்கள் ஆகில் –
இவர் அங்கன் அன்றிக்கே
பர அனர்த்தமே பற்றாசாக ஆஸ்திக்யாதர பரிஷை பண்ணாமல் ஹிதம் அருளிச் செய்து போருகை
ஸ்ரீ ஆழ்வானை மாச உபவாசம் கொண்டது ஸ்ரீ நம்பி நியமனத்துக்காக –

அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய -என்கிறது பதாப்ஜ விசேஷணம் ஆகவுமாம் -அப்போது
ஸ்ரீ ராமானுஸ்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிந -என்றும்
ஸ்ரீ இராமானுசன் தன் இணை யடியே –உதிப்பன உத்தமர் சிந்தையுள் (50)-என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வான் முதலான சிஷ்ட ஜனங்களால் சேவிக்கத் தகுதியான பதாப்ஜங்கள் -என்கிறது –
இத்தால் தாம் அயோக்யர் என்கிறது –

(உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே.–50)

பவத் பதாப்ஜே-
பரம பிராப்யரான தேவரீருடைய பரம போக்யங்களான திருவடித் தாமரைகளை –

அனுபூய ஹ்ருஷ்டாஸ்து-என்ன வேண்டி இருக்க முதலில் ஹ்ருஷ்டாஸ்து என்றது திருவடிகளுடைய போக்யதாதிசயம்
அனுபவ உன்முகமாகும் தசையிலும் அனுபவ ஜனித ஆனந்தத்தை உண்டாக்கவற்று என்னும் அபிப்ராயத்தாலே

நித்யம் –
அனுபாவ்ய வஸ்துவோபாதி-அனுபவமும் ரசித்து இருக்கையாலே இது நித்யமாக வேணும் என்கிறார் –
அன்றிக்கே –
ஹ்ருஷ்டா அனுபூயாஸ்து-
திருவடிகளினுடைய போக்யாதிசயத்தைக் கண்டு அலப்யங்களான இத் திருவடிகள் நமக்கு
அனுபாவ்யங்களாகக் கடவது என்று ஹ்ருஷ்டமாய் அனுபவித்து தான் சத்தை பெறக் கடவது (ஸ்து)-என்கிறார் ஆகவுமாம் —
முன்பு அசந்நேவ -இறே-

அன்றிக்கே –
அனுபூயாஸ்து ஹ்ருஷ்டஸ்து-அனுபவித்து தான் உளதான மாத்ரம் அன்றிக்கே –
ஸ்வ தர்மமான ஆனந்த ரூபத்தையும் அடைந்ததாக வேணும் என்கிறார்
நித்யம் அனுபூய ஹ்ருஷ்டஸ்து –
இவ் வனுபவம் போக்யமாய் இருக்கையாலே கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து அனுபவ ஜனிதமான ஹர்ஷம்
புறம்பு ஒசிந்து காட்டும்படியாக வேணும் என்கிறார்

ஏன் தான் என்னில் –
மமாஸ்து புத்தி –
நிரூபகம் முன்னாக நிரூப்ய சித்தி யாகையாலே நிரூபகமான அனுபவத்தை முன்னே சொல்லி
அநந்தரம் நிரூப்யமான தம்மை அனுசந்திக்கிறார்

மமாஸ்ய
தேவரீருடைய திருவடிகளை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகனாம் படியான அடியேன் இப்படி ஸ்வரூப நாசகங்களான
விஷயங்களிலே சபலன் ஆவதே என்கிறார் –
இப்படி விஷய சாபல்யனான அடியேனுடைய -என்னுதல்-
இவ்வளவான மனஸ் ஸ்வ பாவம் உடைய அடியேனுடைய -என்னுதல்

புத்தி
ஞானமாதல்
மனஸ் ஆதல்

மமாஸ்ய புத்தி –
ஜ்ஞானமாகில் தேவரீரை ஒழிய மற்று ஒன்றில் புகாது –
அது விஷயாந்தரத்தில் புகுருகைக்கு அடி அடியேனுடைய சம்பந்தம் யாய்த்து
இப்படி இருந்துள்ள அடியேனுடைய புத்தி -என்னவுமாம்

(மே ராம -சக்ரவர்த்தி -மம ஸூதா ஜனகராஜன்)

அன்றிக்கே –
மமாஸ்ய புத்தி –
தேவரீராலே கொடுக்கப் பட்ட அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டையை யுடையனாய்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய புத்தியானது -என்னவுமாம்

(உடையவர் சம்பந்த ஞானம் பெறுவதற்கு முன்னும் பின்னும் மம புத்தி மாறும் அன்றோ -இந்த இரண்டையும் அருளிச் செய்கிறார்-நான் என்னுடைய -முன்பு அடியேன் தாஸ்ய ரஸம் அறிந்த என்றபடி )

இத்தால் பிரதம பர்வம் அதி விலஷணமாய் இருந்ததே யாகிலும் அதில்
சரம பர்வ நிஷ்டனுடைய புத்தியானது புகாது என்கிறார்

சிஷ்டேத்யாதி–பதாப்ஜ விசேஷணம் ஆன போது-நாத -என்ற அநந்தரம் —
ஆகில் செய்கிறோம் இத்யாதி சங்கதி கண்டு கொள்வது –

————-

இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும், ‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன. ‘ஸ்ரீமந் யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் யதீந்த்ர தாஸ கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உப ஸம்ஹாரமாக அமைந்துள்ளது. ‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோ வென்னில் முதல் முடிவு நடுப் பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித் திடப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கலியும் கெடும் கண்டு கொண்மின் -கலி ஸாம்ராஜ்யம் பண்ணும் இக்காலத்தில் இங்கேயே கொடுத்த அருள வேண்டும்

அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது – ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும்.

நடு வெல்லையோ வெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத் தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே. முதல் பர்வம் எம்பெருமான், மத்யம பர்வம் – பாகவதர்கள், சரம பர்வம் – ஆசார்யன். ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும் நேரான பதப் பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து, பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து, அதற்குப் பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே தெரியப் படுத்தி நின்று விடுகின்றன. ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம பர்வம் பகவான், மத்யம பர்வம் – பாகவதர், சரம பர்வம் – ஆசார்யன்.

ஆக இந்த ஸ்லோகத்தில் முற் பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து, யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப் பொருள்களின் முடிவெல்லையை (உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை, தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி க்ருபை செய்தருள வேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று.

நின் திரு எட்டு எழுத்தும் கற்று உன் அடியாருக்கு அடிமை -நின்னும் உன்னும் -இதுவே உனக்கே ஆனந்தம் அளிக்கும் அடியாருக்கு அடிமை

மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால் அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார். திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது.

இவனுக்கே சேஷ பூதன் ஆகவே இவனே புருஷார்த்தமும் சாதனமும் உபேயமும் உபாயமும் –சேர்ந்தே -அர்த்தம்-நிஷ்டை -வேறே ஒன்றையும் ஸஹிக்காமல் இருப்பது –
பர்யவஸான நிவ்ருத்தியைக் கொள்ள வேண்டும் -எம்பெருமான் எம்பருமானார் அளவும் யாவதாத்மா பாவி செல்ல வேண்டுமே

இதில் பிற்பகுதியினால், (இந்த சரம பர்வ தத்வ ஹித புருஷார்த்தம் பிரமம் இல்லாத -யாதாத்ம்யம் அறிந்துள்ள )ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சி யடைவதற்குக் காரணமான தேவரீருடைய திருவடித் தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக் கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள் புரிய வேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று.-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் அடியாகவே ஹர்ஷ ப்ரகர்ஷ -வளரும்படி அருள வேண்டும் –

——————–————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading