சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார்-1-4-3-
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத் தனியொரு தேர் கடவித்தாய் -1-5-7-
துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட -மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவ்வுலகினில்
பேர் இருள் நீங்க அன்று அன்னமதானானே –1-8-10-
ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5-
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே —2-3-3-
கதிர் ஆயிரம் இரவி கலந்து ஏறித்தால் ஒத்த நீண் முடியன் -4-1-1-
அலம்பா வெருட்டாகக் கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை -4-2-1-
முடி யாயிரம் மின் இலக ஆயிரம் பைந்தலைய அநந்த சயனன் ஆளும் மலை -4-3-10–
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு -பெரியாழ்வார் 4-3-11-
வெங்கதிர் அஞ்ச மலர்ந்து எழுந்து அணவு மணி வண்ண யுருவின் மால் புருடோத்தமன் -4-7-2-
அன்று முதல் இன்று அறுதியா ஆதி யம் சோதி மறந்து அறியேன் -4-10-9-
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே-5-2-9-
தனிக்கடலே தனிச்சுடரே தனி யுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு உரித்து ஆக்கினையே -5-4-9-
——————————-
கதிர் மதியம் போல் முகத்தான் –திருப்பாவை -1-
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை-திருப்பாவை-5-
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும் மாமன் மகளே-திருப்பாவை-9-
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் -17-
குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி-திருப்பாவை-19-
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்-21-
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் -22-
கோல விளக்கே கோடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய் -திருப்பாவை–26-
——————————-
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே –நாச்சியார்-1-3-
கதிர் ஒளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-6-5-
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காயத் தோன்றி -பெருமாள் -10-1-
மேல் தோன்றிப் பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே -10-2 —
————————————————-
அரவரசப் பெரும் சோதி யநந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணையை மேவி –பெருமாள் -1-1-
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை சேரும் நெஞ்சினராகி -2-7-
எந்தையே என் தன் குலப்பெரும் சுடரே -7-2-
அம் கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உய்யக்கொண்ட வீரன் -10-1-
———————————————–
தோன்று சோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய் -திருச்சந்த -4-
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ -11-
தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் -16-
விடத்த வாய் ஓர் ஆயிரம் ஈராயிரம் கண் வெந்தழல் விடுத்து வீழ்வில்லாத போகம் மிக்க சோதி
தொக்க சீர் தொடுத்து மேல் விதானமாய் -18-
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேச மேவு பாவ நாச நாதனே -27-
ஆதியாதி யாதி நீ ஓர் அண்ட மாதி யாதலால் சோதியாத சோதி நீ அதுண்மையில் விளங்கினாய் -34-
இயக்கறாத பல் பிறவியில் என்னை மாற்றி இன்று வந்து உயக்கொள் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என்னாவி தான் இயக்கெலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே -120-
———————-
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி வலவன்—பெரிய திருமொழி-1-5-3–
விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் -1-5-5–
ஒருவன் தானே இரு சுடராய் வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீருலகு அனைத்தும் தானாய் -1-5-7-
பார்த்தற்காய் அன்று பாரதம் காய் செய்திட்டு வென்ற பரஞ்சுடர் -1-8-4-
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ -1-10-9-
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறைய பணி கொண்டு -2-4-3-
கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3–
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவரார் கொல்-2-8-4-
நந்தா விளக்கே – – 3-8-1–அணையாதே விளக்கே –
ஸ்வயம் பிரகாசகமான ஜ்ஞானத்தை குணமாக யுடையவன் -ஜ்ஞான ஸ்வரூபத்தை யுடையவன் –
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் -4-7-4-
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா நிலவும் ஆழிப் படையணி என்றும் -4-8-2–
பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கைப் பெருமான் -6-8-9–
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -7-1-9–
அடியேனுக்காகி நின்ற நன்மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ -8-2-3–
பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய் நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும் -7-5-5-
பேரானைக் குடந்தைப் பெருமானை இலங்கு ஒளி சேர் வாரார் வன முலையாள் மலர் மங்கை நாயகனை -7-6-9–
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே -7-7-1–
நிலத்திகழும் மலர்ச் சுடர்ச் சுடரேய் சோதீ -என்ன நெஞ்சு இடர் தீர்த்து அருளிய என் நிமலன் -7-8-3-
தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை -7-10-7—
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை
விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை -7-10-9-
அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவும் ஓர் ஆமையாய் 8-8-2–
விடை எழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுற படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி -8-9-3-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை -8-9-4–
பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதி யகலத்து ஆரம் மின் -9-2-1-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டு உகந்த பங்கய மா மலர்க்கண் பரனை எம் பரஞ்சுடரை -10-9-4-
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனை பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே -10-1-4-
——————————
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் –திரு நெடும் தாண்டகம் -1-
மூவுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகளுருவம் தானே -2-
இமையோர்க்கு என்றும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தானாய் முதலானாயே -10-
அந்தணர் தம் சிந்தையானை விளக்கு ஒளியை மரகதத்தைத் திருத் தண்காவில் வெஃகாவில் திருமாலை -14-
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் -30-
———————————————
வையம் தகளியாக வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக –முதல் திருவந்தாதி -1-
தொழுவார் வினைச்சுடரை நந்துவுக்கும் வேங்கடமே வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை -26-
நாளும் புகை விளக்கும் பூம்புனலும் ஏந்தி திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே -37-
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது -49-
சென்றால் குடையும் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள்
என்றும் புணையாம் மணி விளக்கம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -53-
தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும் எழு வாழி நெஞ்சே -58-
பைம் பூந்தொடையலோடு ஏந்திய தூபம் இடையிடையில் மீன் மாய மாஸூணும் வேங்கடமே -83-
ஊனக் குரம்பையின் உள்புக்கு இருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள் தோறும்
ஏனத்துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் -91-
————————————————-
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் –இரண்டாம் திருவந்தாதி -1-
துலங்கு ஒளி சேர் தோற்றத்து நல்லமரர் கோமான் நகர் -3-
—————————————-
முடி வண்ணம் ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃதன்றே -மூன்றாம் திருவந்தாதி -5-
வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம் அந்தி விளக்கு மணி விளக்காம் எந்தை
ஒரு வல்லித்தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக்கேணியான் சென்று -16-
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் -50-
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திரு விருந்த மார்வன் -57-
அங்கு மலரும் குவியுமால் உந்தி வாய் ஓங்கு கமலத்தின் ஒண் போது அங்கைத் திகிரி
சுடர் என்றும் வெண் சங்கம் வானில் பகரு மதி என்றும் பார்த்து -67-
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் -94-
———————————————–
நீயே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடருமாய விவை –நான்முகன் -20-
இவையா பிலவாய் திறந்து எரி கான்ற இவையா எரி வட்டக் கண்கள்
இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -21-
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -46-
—————————————————–
பேர் ஒளியே சோர்வன நீலச் சுடர் விடு மேனியம்மான் விசும்பூர் தேர்வன
தெய்வ மன்னீர கண்ணோ இச் செழும் கயலே –திரு விருத்தம் -14-
விண்ணோர்கள் நன்னீர் ஆட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -21-
அங்கு அங்கு எல்லாம் உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் பெற முயன்றார் இல்லையால் -44-
நீண்ட அண்டத்து உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா அழறலர் தாமரைக் கண்ணன் -58-
பரதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழு அளிக்கும் -73-
எரி கொள் செந்நாயிறு இரண்டுடன் உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் -82-
திருமாலுரு ஒக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக்கரம் ஒக்கும் -88-
——————————-
செக்கர் மா முகில் எடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி -அஞ்சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த
பவளச் செவ்வாய் திகழ் பசுஞ்சோதி மரகத்தைக் குன்றம் –திருவாசிரியம் -1-
சோதி வாயுவும் கண்ணவும் சிவப்ப -1-
ஒண் சுடர் அடிப் போது ஓன்று விண் செலீஇ -5-
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா -7-
———————————————
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று –பெரிய திருவந்தாதி -4-
நீல் ஆழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும் நீதியாய் -34-
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும் மாதா பிதுவாக வைத்தேன் -70-
உள்நாட்டுத் தேசு அன்றே ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே -79-
————————————————–
ஆயிர வாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வத் சுடர் நடுவுள் மன்னிய நாகத்தணை மேல்
ஓர் மா மலை போல் மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீச துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர்
ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை மன்னும் விளக்கா வேற்றி–பெரிய திருமடல்
பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து அம்மலர் மேல் முன்னம் திசைமுகனைப் படைக்க —
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்படுத்த மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள்-
மின்னின ஒளி சேர் விசிம்பூரும் மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி —
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் முன்னவனை மூழிக் களத்து விளக்கினை-
——————————————————
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன் பால்
மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் ஆர்ந்த ஞானச் சுடராகி -1-5-10-
அமுதம் அமரர் கட்க்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால் மதிலும் ஆற்ற இனியன் -1-6-6–
பிறவித துயர் அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்-1-7-1–
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை -1-7-3–
மயர்வற மனத்தே மன்னினான் தன்னை உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை -1-7-4–
விடுவேனோ என் விளக்கை என்னாவியை-1-7-5-
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி -1-9-7–
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே -2-1-11–
தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி மேல் அறிவார் யவரே -2-2-5-
ஞான வெள்ளச்சுடர் மூர்த்தி அவர் எம்மாழி அம்புள்ளியாரே -2-2-6-
தீர்ந்தார் தம் மனைத்துப் பிரியாத வருயிரை சோர்ந்தே போகல் கொடாச் சுடரை –2-3-6-
பிறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ துளிக்கின்ற
வானும் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-
திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம் -2-5-2-
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம் -2-5-3-
என் ஆவி யாவிதனை எல்லையில் சீர் என் கரு மாணிக்கச் சுடரை -2-5-9-
மிக்க ஞானச் சுடர் விளக்காயத் துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே -திருவாய்-2-6-2-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு -2-7-5-
என் மை தோய் சோதி மணி வண்ணன் எந்தாய் -2-9-2-
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடுஞ்சுடர் சோதி -2-9-10-
முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையோடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே -3-1-1-
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே–3-1-3-
வருந்தாதே வரும் தவத்தை மலர்க்கதிரின் சுடருடம்பாய் வருந்தாத ஞானமாய் -3-1-5-
மாசூணாச் சுடருடம்பாய் —மாசூணா வுன பாத மலர்ச்சோதி மழுங்காதே -3-1-8-
மலருலகில் தொழும் பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே -3-1-9–
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே -3-1-10-
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும் ஏழ்ச்சிக் கேடின்றி எங்கனும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –3-2-4-
ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே -3-2-7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே -3-2-8-
திரு வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -3-3-1-
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே -3-3-4-
சோதியாகி எல்லா வுலகும் தொழும் ஆதி மூர்த்தி -3-3-5-
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு -3-1-7–
திகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ -3-4-1-
ஆதி யஞ்சோதி என்கோ -3-4-4-
கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வனை -3-5-5-
பார்மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி -3-5-7-
வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும் மொய் கொள் சோதியோடாயினான் ஒரு மூவராகிய மூர்த்தியே -3-6-1-
பரமனைப் பரஞ்சோதியை குரவை கோத்த குழகனை -3-6-3-
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் -3-6-5-
எனதாருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை -3-6-7-
உயர நின்றதோர் சோதியாய் -3-6-8-
படவரவினணைக் கிடந்த பரஞ்சுடர் -3-6-10-
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை -3-7-1-
தூ மணி வண்ணன் எம்மான் தன்னை ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் -3-7-6-
திண் தேர் கடவி சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை -3-10-4-
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலோடும்
கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே-3-10-5-
அழகு அமர் சூழ் ஒளியன் அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -3-10-8-
தூக்கமின்மை ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -3-10-9-
தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாய் அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால்
அருவாகி நிற்கும் வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இரு சுடரை கிளர் ஒளி மாயனைக்
கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே -3-10-10-
கண்ணி எனதுயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல்கலன்களும் -4-3-5-
முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8-
புரைப்பிலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன் -4-3-9-
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே-4-7-10-
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளிய இரணியன் அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன் மணி நீல வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவிலமே -4-8-7-
இமையோர் வாழ் தனி முட்டை கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி
யுயரத்து கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே-4-9-8-
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதிச் செழும் குருகூர்ச் சடகோபன் 4-9-11-
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நேமி யங்கை யுளதே -5-5-7-
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் வறிவரிதே-5-5-10-
என் கள்ள மாயவன் கரு மாணிக்கச் சுடரே -5-7-9-
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே -5-10-1-
ஒண் சுடரோடு இருளுமாய் நின்றவாறும் -5-10-7-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின் தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே -6-2-10-
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே -6-3-6-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் கரந்து தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் -6-3-7-
புகர் கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன் -6-4-10-
தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர் -6-5-5-
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு –6-8-8-
நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனாய் -6-9-1-
உலகம் உண்ட பெறுவாயா உழைப்பில் கீர்த்தி அம்மானே நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே -6-10-1-
பொருள் பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே -7-1-9-
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரை கட்கு அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10–
உலகமவை மூன்றும் பரந்து உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கொண்டிட்டு -7-6-5-
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்ப செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேல் செம்பட்டோடு அடியுந்தி கை மார்வு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விடவுறை என் திரு மார்பனையே -7-6-6-
மீண்டு அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே -7-6-9-
ஐவர்க்காய்க் கொடும் சேனை தடிந்து ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே-7-6-10–
சுடர்ச் சோதி மணி நிறமாய் முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் -7-7-10-
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுடராய் இருளாய் -7-8-2-
சுடர் நீள் முடியாய் அருளாய் -7-8-7-
இன் தமிழ் பாடிய வீசனை ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ-7-9-1-
நன்கு உணர்வாருக்கும் உணரால் ஆகா சூழலுடைய சுடர் கொள் ஆதித் தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே -8-2 -5–
தொல்லை யஞ்சோதி நினைக்கும் கால் என் சொல் அளவன்று -8-2-6-
நேமியும் சங்கும் இரு கைக் கொண்டு பன்னெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி
ஓர் கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஓப்பான் நாள் மலர்ப்பாதம் அடைந்ததுவே -8-2-10–
கண் கை கால் தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதா-8-5-1-
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கரு மாணிக்க நாள் நல் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே -8-5-2-
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும் தே நீர்க் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்த வா -8-5-4-
உன் துளங்கு சோதித் திருப்பாதம் எல்லையில் சீர் இள ஞாயிறு இரண்டு போல் என்னுள்ள வா –8-5-5-
மாய மயக்கு மாயக்கண்ணன் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன் திருவருள் செய்தே -8-7-4-
மாயன் கோல மலரடிக் கீழ் சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் -8-10-5-
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கு ஏந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –9-4-1-
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்க்கு -9-7-5-
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துரந்த படர் புகழான் -9-7-7-
திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை ஒழி வில்லா வணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல் -9-7-11-
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர 10-1-4–
அநந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே-10 -2 -10—-
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விழாக்கால புது மலரால் நீரால் -10-4 -10—
விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10–
அம் பர நற்சோதி -10-10-4–
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து முடிவில் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என்னவா அறச் சூழ்ந்தாயே -10-10-10–
——————————————————–
வருத்தும் புறவிருள் மாற்ற எம் பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
இராமானுசன் எம் இறையவனே –இராமானுச நூற்றந்தாதி -8-
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடித் தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்னா வைப்பவர் -9-
கொள்ளக் குறைவற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே -32-
—————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply