சக்தி பஞ்சமய விக்ரஹ ஆத்மநே ஸூக்திகா ரஜத சித்த ஹாரிணே
முக்தி நாயக முராரி பாதயோர் முனியே நமோ நம–
உபாய பிரபத்தி -ந்யாஸ வித்யை -நிரபேஷ ரக்ஷகத்வம் –
அங்கம் -ஆனுகூல்ய சங்கல்பம் -ப்ராதிகூல்ய வர்ஜனம் -மஹா விசுவாசம் -கோப்த்ருத்வ வரணம் -கார்ப்பண்யம் –
விதி-ஓம் இத்யாத்மநம் யுஞ்சித / மந்த்ரம் -திருமந்தம் /ஸ்வரூபம்-ஆத்ம சமர்ப்பணம் /
லக்ஷணம் -அத்யவசாயம்/ அதிகாரம் -ஸ்வாரத்த பலத்தில் இச்சை /பலம் ஸ்வாரத்த அனுபவ கைங்கர்யங்கள்
அநுபாய பிரபத்தி -சரணாகதி வித்யை -நிராங்குச ஸ்வா தந்தர்யம் –
அங்கம் – சாதன ரூப பிரவ்ருத்திகளுடைய சவாசன தியாகம்
விதி -மாம் ஏகம் சரணம் வ்ரஜ / மந்த்ரம் -த்வயம் /ஸ்வரூபம் உபாய வரணம் /
லக்ஷணம் -பிரார்த்தனை /அதிகாரம் பரார்த்த பலத்தில் இச்சை / பலம் -பரார்த்த அனுபவ கைங்கர்யங்கள் –
அநந்ய சாத்யே மஹா விசுவாச பூர்வகம் ததேக உபாயதாயாஞ்ச பிரபத்தி சரணாகதி
ஐயத்தின் நீக்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து –திருக்குறள் -353-
சம்சயம் விபர்யயம் விஸ்மிருதிகள் அற்ற தெளிந்த ஞானிக்கு தெளி விசும்புத் திருநாடு அருகாமை உள்ளதால் நிச்சயம் அது கிட்டும் –
கத்யர்த்தம் புத்த்யர்த்தம் -வ்ரஜ -உபாய ஸ்வீ காரம் –
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு –திருக்குறள் -358
செம்பொருள் -மோக்ஷம் /
ஞானி தரிசனத்துக்கு இச்சை – பிரபன்னன் -கைங்கர்யத்துக்கு இச்சை –
பர கத ஸ்வீ காரம் -மார்ஜால விசுவாச நியாயம் -தாய்ப்பூனை குட்டிப்பூனையைக் கவ்விக் கொள்ளுமா போலே -ஆழ்வார்கள் நிஷ்டை
ஸ்வ கத ஸ்வீகாரம் -மரக்கடை விசுவாச நியாயம் -குட்டிக்குரங்கு தாய்க்குரங்கைப் பிடித்து கொள்ளுமா போலே -நழுவ வாய்ப்புண்டு -ரிஷிகள் நிஷ்டை
மஹாத்மா ராகவாய –பரத்வமும் ஸுலபயமும் சரண்யனுக்கு வேண்டுமே –
ஆலின் இலையாய்-பரத்வம் மாலே மணி வண்ணா-ஸுலப்யம் போலே
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -பரத்வம்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸுலப்யம்
கீழை மேலை வடக்கில் அவை புறம்பானது தன் பற்றுள்ள அசல் -அயல் -அசல் -பகை –ஆச்சார்ய ஹிருதயம்
கிழக்கு -சந்த்யா வந்தனம் -கர்மம்/ மேற்கு ஞான யோகம் /வடக்கு -பரமபதம் /தெற்கு -பிரபத்தி உட்பகை
பரகத ஸ்வீ காரமே பிரபத்தி நிஷ்டருக்கு ரேசகம் –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தைப் பிரானே–திருவரங்கத்தாய் -இவள் திறத்து என் செய்கின்றாய் –
நீ சிற்ற வேண்டா -அவன் சிந்திப்பே அமையும்
ஆரூட ஸ்ரீ -ஏறு திருவுடையான் -ஸ்ரீயப்பத்தி -அவாப்த ஸமஸ்த காமன்
இன்று வந்து -இன்று உவந்து -இத்தனையும் அமுது செய்திடப்பெறில்-பகவான் முகோல்லாசமே நமக்கு பிரயோஜனம் –
நம்மாழ்வார் -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் / குலசேகராழ்வார் -ஸ்ரீ ராம த்ருஷ்ணா தத்வம் /
திருமங்கை யாள்வார் -அர்ச்சா த்ருஷ்ணா தத்வம் /தொண்டர் அடிப்பொடி யாழ்வார் -ஸ்ரீ ரெங்கநாத த்ருஷ்ணா தத்வம்
துயர் அறு சுடரடி-பொது நின்ற பொன் அம் கழல் -கோயில் -ஸ்வரூப ஞானம்
மதி நலம் அருளினான் -திருமலை -பூவார் கழல்கள் -உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -பெருமாள் கோயில் -பொற்றாமரை அடி-உபேயம் –
ஸ்ரீ ரெங்கன் நடை அழகு / ஸ்ரீநிவாசன் -வடிவு அழகு / வரதன் -குடை கொடை அழகு /
திரு நாராயணபுரம் -முடி அழகு -வைர முடி சேவை /ஆராவமுதன் -கிடை அழகு /
ரெங்கமன்னார் -தொடை அழகு -சூடிக்கொடுத்த மலர் மாலை -தொடை /
அழகர் -படை அழகு -படை -அடியார் குழாம்-சித்ரா பவுர்ணமி படையல் தோசை -தேவாம்ருதம் –
1-கண்ணன் -நிர்வாஹகன் -மண்ணும் விண்ணும் எல்லாம் உடனுண்ட நம் கண்ணன் கண்ணல்லது இல்லை ஓர் கண்ணே
2-கண் -இடம் -எங்கும் உளன் கண்ணன்
3-கண்ணன் -கமலத்தடம் பெரும் கண்ணன் -கண் அழகன்
4-கண்ணன்-கண்ணோட்டம் உடையவன் -காக்கும் இயல்வினன் கண்ணன்
5-கண்ணன் -கையாள -ஸூலபன்
6-கண்ணன் -கரிய மேனியன் -காரமர் மேனி நம் கண்ணன்
7-கண்ணன் -களிக்கச் செய்பவன்
8-கண்ணன் -ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் மாயப்பிரான் கண்ணன்
9-கண்ணன் -மெய்ஞ்ஞானக் கண் அருள் செய் கண்ணன் -மயர்வற மதி நலம் அருளுபவன்
10- கண்ணன் -கண்ணாக இருப்பவன் –கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே –
கண்ணாவான் என்றும் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –
———————————
யதோவா விமானி பூதாநி ஜாயந்தே
யேன ஜாதானி ஜீவந்தி
யத் பிரயந்த்யபி
சம்விசந்தி
தத் விஜிஜ்ஞா சஸ்வ தத் ப்ரஹ்மேதி —
ஏக விஜ்ஞாநேந சர்வ விஞ்ஞானம் –
சத் ஏவ சோம்யேதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் —
தத் தவம் அஸி
ஐததாத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ச ஆத்மா
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மா
யோ வேத நிஹிதம் –பரமே வ்யோமன்
ப்ரஹ்ம விதாப்னோதி பரம்
ஏகோ ஹைவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசான
நேமே த்யாவா ப்ருத்வீ ந நக்ஷத்ராணி ச ஏகாகீ ந ரமேத
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே
நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ய ஏஷோ அந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே
ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ
தஸ்ய உதிதி நாம
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸ நேதி
யோ ப்ரஹ்மாணீ விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை
தம் ஹதேவமாத்ம புத்தி பிரசாதம் முமுஷூர்வை சரணம் அஹம் பிரபத்யே
ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்-
ஸ்ரீ யம் இச்சேத் ஹுதா சநாத் –
ஈஸ்வராத் ஞானம் இச்சேத்
மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத்
சூர்யா பக்த சப்த ஜன்மாந்தரம் -ருத்ர பக்த ப்ரஜாயதே
சங்கர பக்த சப்த ஜன்மாந்தரம் விஷ்ணு பக்த ப்ரஜாயதே
ததா வித்வான் புண்ய பாபே வித்தூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பாரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர
பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம்
நாராயணம் மஹாஜ் ஜேயம் விஸ்வாத்மா நம் பாராயணம்
நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ நமேதயா ந பஹு நாஸ்ருதேந
யமேவைஷ வ்ருணுதே தேந லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –கட வல்லி
————————-
ஒண் தாமரையாள் கேள்வன் -அகார வாஸ்யன்-ஒருவனையே நோக்கும் உணர்வு
மயர்வற மதிநலம் -ஞான சூன்யம் -ஞானம் உதயம் இல்லாமையைப் போக்கி –சம்சய விபர்யய விஸ்ம்ருதிகள் அற்று-
அறிவின்மையை அடியோடு போக்கி பக்தி ரூபாபன்ன ஞானத்தை விசேஷ கிருபா கடாக்ஷத்தால் அருளுகிறான்
மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்–
வ்யாப்ய வியாபக பாவம்/ சரீராத்ம பாவம் /சேஷ சேஷி பாவம் /நியந்தரு நியாம்ய பாவம் /
ஆதார ஆதேய பாவம் /அவிநாபூத சம்பந்தம்
அவனும் அவனும் அவனும் அவனே –ச ப்ரஹ்மா ச சிவஸ் சோஷர பரமஸ் ஸ்வராட் —
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ் நுதே
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத்தேஜ
அபங்கா பூயாம்சோ யது பரி பரம் ப்ரஹ்ம தத பூத்
ஸ்ரீ –ஸ்ரயதே–ஸ் ரீயதே–/ ஸ்ருணோதி–ஸ்ராவயதி /
ஹ்ரீஸ்ச தே லஷ்மீஸ்ச பத்நயவ் –சர்வம் மனிஷாண
தைவாதீனம் ஜகாத் சர்வம் -மந்திர அதீனம் து தைவதம் –
தன் மந்திரம் ப்ராஹ்மண அதீனம் –தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம் —
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபா நாம் கிருஷ்ணே பக்தி பிரஜாயதே –
அர்வாஞ்சோ யத்பத சரஸிஜ த்வந்த்வம் ஆசிரித்வ பூர்வே
மூர்த்னா யஸ்யான் வயமுபக்தா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் சம்பந்தாத் அமனுத கதம் வர்ண்யதே கூர நாத —
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ–சிவா புராணம் –
ஷரம் த்வ் அவித்யா ஹ்ய்அம்ருதம் து வித்யா
வித்யா வித்யே ஈஸதே யஸ்து சோ அந்நிய-
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால உபநிஷத்
ஆகார ஸூத்தவ் சத்வ ஸூத்தி சத்வ ஸூத்தவ் த்ருவா ஸ்ம்ருதி
ஸ்ம்ருதி லம்பே சர்வ க்ரந்தீ நாம் விப்ர மோக்ஷ –சாந்தோக்யம்
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வபாவன அஸ்து ஹ்ருஷீ கேச மஹா புருஷ பூர்வஜ–
ஐப்பசி மூலம் -ஆனி மூலம் /சித்திரை திருவாதிரை குரு புஷ்யம் /வைகாசி விசாகம் மாசி விசாகம் –
சுருதி -வேதம் / மிகு சுருதி உபநிஷத் -சுடர் மிகு சுருதி நாராயண அநுவாகம்-
—————————————–
ஸமாஸ்ரராயணம் -உபாய வாரணம்
அநிஷ்ட நிவ்ருத்தி -சாலோக்யம் -பரம பக்தி தசை -விராஜா நதி தீரம் –
ஸாரூப்யம் -சாம்யா பத்தி -விஸ்லேஷத்தில் தறியாமை -சாமீப்யம் —
சாயுஜ்யம் -திருமுடியில் முகத்தனை வைத்து தாயன்பு காட்டி அருளி –
பரத அக்ரூர மாருதிகள் பரிஷுவாங்கித்த தனது அணி மணி மிகு திரு மார்பில் குரு மா மணியாய்
அணையும் வஸ்துவான முகத்தனை ஆலிங்கனம் செய்து பேரானந்தம் அடைவதை
படியாய் கிடந்து பவளவாய் கண்டு மகிழ்வோம் –
சாயை போலே அவன் புக்க இடத்தே புக்கு புறப்பட்ட இடத்தே புறப்பட்டு
தங்களுக்கு என்று தனியாக பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் இன்றிக்கே -அந்தரங்கராக ஆவோம் –
வேதியர் முழு வேதத்து அமுதனை -அந்தணர் தம் அமுதனை பல்லாண்டு பாடும் பலன் அன்றோ இது –
1-தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் –ஸமாஸ்ரயணம்
2-சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையா -புஷ்ப மண்டபமே உபாயம்
3-பறைவையேறு பரம் புருடன் -ஸ்ரீ காஞ்சி வரதர் -தியாக மண்டபம் –
4-எம்மனா என் குலதெய்வமே என்னுடை நாயகனே -போக மண்டபம் –
உபாயம் மம குல நாதன் ஸ்ரீ ரெங்க நாதன் -குலதனம் -அநிஷ்ட நிவ்ருத்தியுடன் இஷ்ட பிராப்தி
5-சக்கர பாணீ -சாரங்க வில் சேவகன் -ஆராவமுதாழ்வார் -பரம பக்தி தசை சாலோக்யம் –
6-என் அப்பா என் இருடீ கேசா என்னுயிர்க் காவலன் -சாம்யா பத்தி -சாரூப்பியம் -பொன் அப்பன் மணி அப்பன் முத்தப்பன்
என்னப்பன் தன் ஒப்பார் இல்லப்பன் -திரு விண்ணகர் ஒப்பிலியப்பன்
7-ஸ்ரீ இராம நம்பீ -திரு அயோத்யை -விஸ்லேஷத்தில் தரியாமை
8-திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –பீதகவாடைப் பிரானார்–
ஸ்ரீ கூடல் அழகர் ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாள் -சாமீப்யம்
9-நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -நேமி நெடியவன் -பரமபத நாதனே -சாயுக்யம்
10-பனிக்கடலில் பள்ளிகோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வந்த மாய மணாளா நம்பீ-
திருப் பாற் கடல் வியூஹ வாசு தேவன் -திருமுடியில் வைத்து தாயன்பு காட்டி அருளி
11-வடதடமும் வைகுண்டமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டானே
ஸ்ரீ துவாரகா தீசன் -அங்குத்தை வாசம் சாதனம் -இங்குத்தை வாசம் சாத்தியம் -அதனில் பெரிய அவா அறச் சூழ்ந்தானே –
12-விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் –
கீழே உபக்ரமத்தில் நம்பீ தாமோதரன் சந்திரன் என்ற ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ ரெங்க நாதனே –
முகில் வண்ணன் ஆயர் ஏறு அமரர் கோ அமரர்கள் அதிபதி அந்தணர் தம் அமுதம் –
——————————
ஸ்ருங்கார ஹாஸ்ய கருணை வீர ரௌத்ர பயாநகா பீபத்ச அத்புத சாந்தாஸ் நவநாட்ய ரசா ஸ்ம்ருதா –
நவ ரசங்கள் -சிருங்காரம் -கருணை -அற்புதம் -வெறுப்பு -பயம் -வீரம் -ரௌத்ரம் -ஹாஸ்யம் -சாந்தம்
1-ஆகியும் –சம்ஹாரம்
2-ஆக்கியும்-ஸ்ருஷ்ட்டி
3-காக்கும் –ஸ்திதி
4-அவையில் தனி முதல் -அந்தர்யாமித்வம்
5-எம்மான் -ஸுலப்யம்
6-கண்ணபிரான் -உபகாரகன் –
7-என்னமுதம் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்
8-சுவையன் -பரம ரசிகன்
9-திருவின் மணாளன் -ஸ்ரீ யபதித்தவம்-இவை அனைத்துக்கும் அடி
———————————–
சம்சார விஷவ்ருஷேஸ் யத்வே பலேஹி அம்ருதோப மே
கதாசித் கேஸவே பக்தி தத் பக்தைரவா சமாகம —
அரியணை அனுமன் தங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண் குடை தவிக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி குழலி ஒங்க விரிக்கடல் உலகம் ஏத்தும் சடையன் தன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி —
————————————–
தொண்டர் –பிரயோஜனாந்தர பரர்
சீர்த் தொண்டர் –மோஷார்த்தி
மிக்க சீர்த் தொண்டர் –மங்களாசாசன பரர் –
————————————————–
திருமங்கை ஆழ்வாருக்கு
1–தானான உத்சவம் -திருமந்திர உபதேசம் பெரும் வேடுபறி உத்சவம் —
2–தான் உகந்த உத்சவம் -பதினோரு கருட உத்சவம் –
3–தமர் உகந்த உத்சவம் -திருக்கார்த்திகை திரு நக்ஷத்ர உத்சவம்
தெய்வத்துக்கு அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு அரச மரத்தடியில் மந்த்ர அரசை அளித்து அருளினான்
ஆராதனம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதனம் பரம் –
—————————————-
பதினாறு சம்ஸ்காரங்கள்
1-கர்ப்பாதானம்–கர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான பிரயத்தனம் -ஆதானம்
2-பும்ஸவனம் -கர்ப்பத்தை துரிதப் படுத்தவும் ஸூக பிரவசத்துக்கும் –ஆலமரத்தின் துளிர் ரசம் வலது மூக்கில் பிழிதல்
3-சீமந்தம் –வகிடு பிரித்தல்–ஜாயமான கடாக்ஷத்தை பிரார்த்தித்து
4-ஜாத கர்மா -பத்தாம் நாளில் ஜாதகம் கணித்து
5-நாமகரணம் -பதினோராம் நாள்
6-நிஷ் க்ரமணம்–ப்ரஸூதிகா அறையில் இருந்து வெளியே வருதல்
7-அன்னப்பிராசனம் –ஐந்தாம் ஆறாம் மாதத்தில்
8-சூடாகாரணம் -குடுமி வைத்தல்
9-கர்ண வேதனம்–காத்து குத்துதல்
10-வித்யாரம்பம்
11-உப நயனம்
12-வேதாரம்பம்
13-கேசாந்தம் -தீக்ஷை தாடி மீசை எடுத்தல்-அகங்கார மமகாரங்களை தொலைத்தால்
14-சமர்த்தன ஹோமம் -வேத அத்யயனம் முடிந்த பின்பு செய்யும் ஹோமம் -பிரம்மச்சரியம் முடித்தல்
15-விவாஹம்
16-அந்தியஷ்டி
————————————————————-
பதினாறும் பெற்று பெருவாழ்வு
1-கல்வி -வித்யா -ப்ரஹ்ம வித்யை அறிந்தவனே சத்தாக இருப்பவன் -32-வித்யைகள் –
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனுடைய திருக் கோலங்கள்
2-பலம் -வலிமை -ஜிதேந்திரனாக இருக்க வேண்டுமே
3-புகழ் -யசஸ் -கீர்த்தி -சாத்வீகமான புகழ்
4-வெற்றி ஜெயம் -காம க்ரோதாதிகளை வென்று
5-நன்மக்கள் -கைங்கர்ய சிரத்தையுடன் -வழி வழி ஆ ட் செய்ய வேண்டுமே
6-பொன்-ஸ்வர்ணம் -யோ நித்யம் அச்சுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே-
ஆத்மபூஷணம் -ஹிரண்யமய ஹரண்ய கேச ஹரண்ய மஸ்ரு ஹரண்ய புருஷ
7-தான்யம் -நெல் -தானம் தான்யம் பசும் பஹு புத்ர லாபம்-அஹம் அன்னம் –அஹம் அந்நாத-ததீயாராதனம் –
யோகி ஒரு வேலை உண்பவன் -போகி-இருமுறை உண்பவன் –
ரோகி -மூன்று வேலை உண்பவன் -துரோகி -பல தடவை உண்டு மற்றவர் உணவை பிடுங்குபவன்
8-புண்யம் -நல்லூழி -சத்யம் வத தர்மம் சர-அனந்தன் மேல் கிடந்த புண்ணியம் மூல ஸூஹ் ருதம் –
ஸ்ரீ கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம –
9-நுகர்ச்சி -ஆனந்தம் -உண்ணும் சோறு இத்யாதி சர்வ கந்த சர்வ ரஸ-ப்ரீத்தி காரித கைங்கர்யமே மீளா பேரின்பம்
10-புத்தி -அர்த்த பஞ்சக ஞானம் –
11-அழகு -ஸுந்தர்யம் -லாவண்யம் -சேஷத்வ பாரதந்தர்யமே ஆத்மாவுக்கு அழகு -திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
12-பெருமை -பகவத் பாகவத வைபவம் பேசுவதால் பெரும் பெருமை
13-இனிமை -ஸுலப்யம் -பேச்சினிமை -பழகுவதில் இனிமை மாதுர்யம் -பக்தபக்தனானால் தானே வரும் மதுரகவி நிஷ்டை
14-துணிவு -தைர்யம் -உபாயத்தில் அத்யாவசிய
15-ஆரோக்யம் -களிப்பும் கவர்வும் அற்று பிணி மூப்பு இன்றி -அஷ்டாக்ஷர சித்தி
யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹியதோ
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்ப்பிஷ தஸ்கரா
16-நீண்ட ஆயுள் -அருளிச் செயல் அனுபவமே காலக்ஷேபமாக பெற்று –
————————-
அஹல்யா திரௌபதி சீதா தாரா மந்தோதரி ததா
பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் பஞ்ச பாதக நாசினி –
தெளியத் தெளிய ஞானம் வளரும் -கலங்க கலங்க பக்தி வளரும் -ஆருத்ரா -நனைந்து இருத்தல் -திருவாதிரை
ஷாட் குன்ய பிரபாவானான எம்பெருமானின் மீது பக்தி கொண்டு அறுசுவை உணவு போலே ருசித்து சுவைத்து ஆழ்ந்து இருத்தல் –
வாஸூ தேவ தருச்சாயா நாதி சீதா ந கர்மாதா
நர கங்கார சமநீ சா கிமர்த்தம் ந ஸேவ்யதே –கருட புராணம்
செல்வம்
தக்க செல்வம் -ஸ்வரூப அனுரூப நிரந்தர செல்வம்
திருத் தக்க செல்வம் -நற்செல்வன் – ரதி மதி சரஸ்வதி த்ருதி ஸம்ருத்தி சித்தி ஸ்ரீ ஏழும்
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply