சரணவ் -சப்தார்த்தம் ..
சரணவ் -என்று பிராட்டியும் எம்பெருமானும் விடிலும் விடாத திண் கழலாய் (திரு வாய் மொழி 1-2-10 )
முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி ( பெரிய திருமொழி 5-8-5)
மென் தளிர் போல் அடியாய் ( திரு வாய் மொழி 7-4-8) வந்து வந்து இறைஞ்ச இராதே –
கமல பாதம் வந்து (அமலன் -1 ) என்னும் படி நீள் கழலாய் (திரு வாய் மொழி 1-9-1 )
சாடு உதைத்த ஒண் மலர் சேவடி (முதல் திரு வந்தாதி -100 ) ஆகையாலே யாவர்க்கும் வண் சரணாய் ( )
அழும் குழவிக்கும் ( பெருமாள் திரு மொழி 5-1) பேதைக் குழவிக்கும் ( பெரியாழ்வார் திரு மொழி 1-2-1)
தாரகமுமாய் போக்யமுமாய் ,
இணைத் தாமரை அடி (பெரிய திருமொழி 1-8-3 ) என்னும் படி சேர்த்தி அழகை உடைத்தான திரு வடிகளைச் சொல்லுகிறது ..
அவன் -மாம் -என்று தன்னைப் பற்றச் சொன்னாலும்
சேஷபூதர் கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் (திரு வாய் மொழி 10-5-1 ) என்றும்
எந்தை கழல் இணை பணிமின் ( திரு மாலை -9) என்றும்
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே ( பெரிய திருமொழி 1-10-8) என்றும்
நின் அடி அன்றி மற்று அறியேன் ( பெரிய திரு மொழி 7-7-2/3-5-6) என்றும்
கண்ணனைத் தாள் ( திருவாய் மொழி 3-10-10) பற்றக் கடவர்கள் இறே ..
இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்கும் (திரு வாய் மொழி 7-1-10 ) அது நிற்க
சிலம்படியிலே (பெரிய திரு மொழி 1-6-2 ) மண்டுகிறவனுக்கு
அன்ன மென் நடையை (பெரிய திரு மொழி 9-7-2 ) அறுவருக்கும் படி
சேவடிக்கே ( பெரிய திரு மொழி 3-5-4) மறவாமையை உண்டாக்கி அன்பு சொட்டப் பண்ணி ( திரு விருத்தம் -2 )
பாதமே சரணாகக் கொடுத்து ( திரு வாய் மொழி 5-7-10 )
கழல் காண்டும் கொல் ( திரு வாய் மொழி 9-2-2) என்றும் –
தலைக்கு அணியாய் ( திரு வாய் மொழி 9-2-2 )-என்றும் –
சரணம் தந்து என் சன்மம் களையாய் (திரு வாய் மொழி 5-8-7 ) என்றும் இருக்கிற அபேக்ஷைகளை உண்டாக்கி
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் ( திரு வாய் மொழி 10-4-3) என்றும்
காண்டலுமே விண்டே ஒழிந்த (திரு வாய் மொழி 10-4-9 ) என்ற பேறுகளைக் கொடுத்து
அங்கு ஓர் நிழல் இல்லை நீரும் இல்லை உன் பாத நிழல் அல்லால் (பெரியாழ்வார் திரு மொழி 5-3-4 ) என்கிற விடாயை
அடி நிழல் தடத்தாலே (திரு வாய் மொழி 10-1-2 ) ஆற்றி
பாத போதை உன்னி (திருச் சந்த விருத்தம் -66 ) வழி நடத்தி
தாள் இணைக் கீழ் புகும் (திரு வாய் மொழி 3-9-8 ) காதலுக்கு ஈடாக
தாளின் கீழ் சேர்த்து (திரு வாய் மொழி 7-5-10 )
வேறே போக விடாதே (திரு வாய் மொழி 2-9-10 ) அடிக் கீழ் இருத்தி (திரு வாய் மொழி 5-1-11 ) ,
திரு அடியே சுமந்து உழலப் பண்ணி (திரு வாய் மொழி 4-9-9 )
அடிக் கீழ் குற்றேவலில் மூட்டி (திரு வாய் மொழி 1-4-2 )
ருசி ஜனகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் எல்லையாக நடத்துவது திருவடிகளைக் கொண்டு இறே ..
இத்தால் புருஷகாரமான பனி மா மலராள் (பெரிய திருமொழி 2-2-9 ) வந்து இருக்கும் இடமாய்
சுடர் வான் கலன் பெய்த ( பெரிய திரு மொழி 7-10-6 ) மாணிக்கச் செப்பு போல
ஸ்வரூப குண்ங்கள் நிழல் எழும்படியாய் திரு மேனி கிடந்ததுவே -என்னும் படி
அவை ஒழியவும் தானே காரியம் செய்ய வற்றாய் -சிசுபாலனோடு சிந்தயந்தியோடு வாசி அற
சித்த ஸாத்ய ரூபமான உபாயங்களால் செய்யும் காரியத்தையும் தானே செய்து
அலை வலைமை தவிர்த்த ( பெரியாழ்வார் திரு மொழி 4-3-5)
காதல் கடல் புரைய விளைவித்த ( திரு வாய் மொழி 5-3-4) என்னும் படி
அத்வேஷத்தையும் பர பக்தியையும் உண்டாக்கி தன்னோடே சேர்த்துக் கொள்ளும் திரு மேனியை நினைக்கிறது ..
சரண -சப்தார்த்தம்
சரணம் -என்று திரு வடிகளைப் பற்றும் படியைச் சொல்லுகிறது ..
அவித்யை முதலாக தாப த்ரயம் முடிவாக நடு உள்ள அநிஷ்டங்களையும் போக்கி
பிணி வளர் ஆக்கை நீங்குகை ( பெரிய திருமொழி 9-8-3) முதலாக
நின்றே ஆட் செய்கை (திரு வாய் மொழி 8-3-8 ) முடிவாக நடு உள்ள இஷ்டங்களையும் தரும் உபாயமாக ..
சரணவ் சரணம் -என்று
மருந்தும் பொருளும் அமுதமும் தானே ( மூன்றாம் திருவந்தாதி -4) என்கிற படியே
அமிர்தமே ஒளஷதமாம் போல ,
அம் கண் ஞாலத்து அமுதமாய் ( ) அமிர்தத்துக்கு ஊற்றுவாயான அடி இணையை
அமிர்த சஞ்ஜீவினியாக கல்லும் கரி கொள்ளியும் பெண்ணும் ஆணும் ஆம்படி விரோதியைப் போக்கும் என்கிறது ..
இத்தால் பொற்றாமரை ( திருப் பாவை -29) அடி தாமரை (முன்றாம் திரு வந்தாதி -96)
தாமரை அன்ன பொன்னார் அடி ( பெரிய திரு மொழி 7-3-5) என்கிற படியே
பிராப்யமே சாதனம் என்று உபாயாந்தரங்களில் வ்யாவ்ருத்தியை தெரிவிக்கிறது ..
பிரபத்யே – சப்தார்த்தம் ..
பிரபத்யே -என்று அணையை உடைத்து ஆன ஆற்றுக் கால் போலே உபாயமான மதுர வாறுகள் (திரு மாலை -36)
போகத்தை விளைக்கைக்கு உறுப்பான சேதனனுடைய விலக்காமையைத் தெரிவிக்கிறது ..
இவன் நெஞ்சாலே துணிந்தால் இறே உபாயம் தான் கார்யம் செய்வது வ்யசனங்கள் வருதல் –
பேறு தாழ்த்தல் ஈஸ்வரனைச் சோதித்தல் செய்தாலும் துணிந்த சிந்தை குலையாமல்
சரண் அல்லால் சரண் இல்லை (பெருமாள் திருமொழி 5-1 ) என்று இருக்கல் இறே பேறு உள்ளது ..
மனமது ஒன்றி துணிவினால் வாழ ( திரு மாலை -21) என்கிற படியே –
இந் நினைவு நெஞ்சாலே அமையுமே ஆகிலும்
உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன் (பெரிய திரு மொழி 1-6-9 )
திரு வடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் ( பெரிய திரு மொழி 7-4-6)
அடி இணை பணிவன் ( திரு எழுக் கூற்று இருக்கை ) என்ற மூன்றும் நடவா நின்றது இறே .
உபாய ஸ்வரூபம் புருஷகார குண விக்ரஹங்களோடே கூடி பூர்ணம் ஆகிறாப் போல
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் ( திரு வாய் மொழி 6-5-11),
ஸ்வீகாரம் உண்டானால் அதிகாரி பூர்த்தி உண்டாகக் கடவது ..
ஸ்வ ஸ்வரூப ஞானமும் -பிராப்ய ருசியும் உபாயாந்தர நிவ்ருத்தியும் பிறந்தாருடைய
உலகம் அளந்த பொன் அடிக்கு ( ) ஆள் ஆகையாலே பற்றும் அதிகாரியை காட்டிற்று இல்லை .
பற்று கிறேன் என்கிற இது –
வாணாள் செந் நாள் என் நாள் அந் நாள் ( திரு வாய் மொழி 5-8-3) என்று
சரீர அவசானத்து அளவும் உபாயாந்தரங்கள் கலசாமைக்கும் –
நாள் கடலைக் கழிக்கைக்கும் ( திரு வாய் மொழி 1-6-7)
சோம்பரை யுகத்தி (திரு மாலை -38 ) என்கிற உகப்புக்கும்
நிரந்தரம் (திருச் சந்த விருத்தம் -101 ) நினைக்கை ஆகிற பேற்றுக்கு
மாக நாள் தோறும் ஏக சிந்தையனாய் ( திரு வாய் மொழி 5-10-11) செல்லும் இடத்தை வெளி இடுகிறது ..
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply