ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-9– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-

பிரதம பதார்த்தம் ..
ஆறு பதமான இதில் முதல் பதத்திலே – இரண்டாம் பதத்தால் வெளி இடுகிற மூன்றாம் பதத்தில்
உபாயத்துக்கு அபேக்ஷிதமான- புருஷகார – குண விக்ரஹங்கள் மூன்றும் தோன்றும் –

ஸ்ரீ சப்தார்த்தம் ..
ஸ்ரீ -என்கிற இது புருஷகாரமான விஷ்ணு பத்னியினுடைய ஸ்வரூப நிரூபகமான முதல் திரு நாமம் ..
சேவையைக் காட்டுகிற தாதுவிலே ஆன இப்பதம் –
ஸ்ரீயதே – ஸ்ரேயதே –என்று இரண்டு படியாக மூன்று வகைப் பட்ட ஆத்ம கோடியாலும் சேவிக்கப் படுகிறமையும்
தான் நிழல் போல எம்பெருமானை சேவிக்கும் படியையும் காட்டக் கடவது ..
சேரவிடுவாருக்கு இரண்டு இடத்திலும் உறவு வேண்டுகையாலே சேதனருக்கு தாயாய்
முன் நிலை தேடாமல் பற்றி ஸ்வரூபம் பெறலாய் ,
அவனுக்கு திவ்ய மகிஷியாய் , கிட்டி தன் ஸ்வரூபம் பெறலாய் ,
நங்கள் திரு (ராமாநுச நூற்று அந்தாதி -56 ) என்றும்
உன் திரு (திரு வாய் மொழி 10-10-2 ) -என்னலாம் படி இரண்டு இடத்திலும் விட ஒண்ணாத பந்தம் உண்டு ..

செல்வர் பெரியர் (நாய்ச்சியார் திருமொழி 10-10 )
அவன் எவ் இடத்தான் நான் யார் ( திரு வாய் மொழி 5-1-7 ) என்றும் –
செய் வினையோ பெரிதால் (திரு வாய் மொழி 4-7-1 ) என்று
அவன் பெருமையையும் , தங்கள் தண்மையையும் அபராதத்தின் கனத்தையும் நினைத்து அஞ்சினவர்கள்
இலக்குமணனோடு மைதிலியும் ( பெரிய திரு மொழி 2-3-7 ) என்னும் படி ,
தன்னோடு ஒரு கோவையான இளைய பெருமாளோ பாதி  
கீழ் மகன் மற்றோரு சாதி ( பெரிய திருமொழி 5-8-1 ) பிரதம பதார்த்தம் ..

சிறு காக்கை ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-6 ) 
புன்மையாளன் (பெரிய திரு மொழி 10-2-8 )
அடியார் ( பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) என்று தண்மை பாராமல்
நாடும் காடும் மேடும்   கல்லும் கடலும் ஒரு வெளுப்பாம் படி ,
பங்கயத்தாள் திரு வருள் (திரு வாய் மொழி 9-2-1 ) என்கிற தன்னுடைய காருண்ய வர்ஷத்தைச் சொல்லுகிற  
மழைக் கண்களுடைய ( திரு விருத்தம் -52 )
பார் வண்ண மட மங்கையாய் ( ) அசரண்ய சரண்யையான இவளே நமக்கு புகல் என்று
புகுந்து கைங்கர்ய பிராப்த உபாயத்தில் அபேக்ஷிக்கல் தோற்ற விண்ணப்பம் செய்யும்   வார்த்தைகளைக் கேட்டு –

அஸ்து தே என்று தொடங்கி இவர்கள் வினைகள் தீர்த்து
தூவி சேர் அன்னமான   (பெரிய திருமொழி 3-7-9 ) தன் சிறகிலே இட்டுக் கொண்டு ,
ஈஸ்வரன் இத்தலையிலே பிழைகளை நினைத்து
எரி பொங்கி (நான்முகன் திருவந்தாதி -21 ) அழல விழித்து (பெரியாழ்வார் திருமொழி 1-8-5 ) 
சலம் புரிந்து ( திரு நெடும் தாண்டகம் -6 ) அங்கு அருள் இன்றிக்கே சீறி – கலங்கின அளவிலே
நன் நெஞ்சவன்ன மன்னமை தோற்ற (பெரிய திருமொழி 7-2-7 ) கால் வாங்கி கடக்க நின்று இரண்டு   தலையும் பட்டது பட
நம் கோலரியான குடி இருப்பை   முதல் திருத்த வேணும் என்று பார்த்து
ஹிரண்ய வர்ணனையான தன்னுடைய பாண் மொழிகளாலே (பெரியாழ்வார் திரு மொழி 3-10-5 )
பிரிய ஹிதங்கள் குலையாதபடி இடம் அற வார்த்தை சொல்லி ஆர விட்டு
வடி கோல வாள் நெடும் கண்களாலே ( ) தேற்றி
திரு மகட்கே   தீர்ந்த வாறு ( முதல் திரு வந்தாதி -42 )  என்னும் படி
திரு உள்ளம்   மாறாடின அளவிலே ஓடம் ஏற்றி கூலி கொள்வாரைப் போல அபராதங்களைப் பொறுப்பித்து
பொன் பாவை ஆனமை (நான் முகன் திருவந்தாதி -59 ) தோற்றும் படி விளக்குப் பொன் போல
இரண்டு தலையையும் பொருந்த விட்டு
நமக்கும் பூவின் மிசை   நங்கைக்கும் இன்பன்   (திரு வாய் மொழி 4-5-8  )  என்னும் படி ஏக ரசமாக்கி பின்பு
அந்தப்புரத்தில் ஆளாய் நின்று
இரந்து உரைப்பது உண்டு (திருச்சந்த விருத்தம்-101 )
வேறே கூறுவது உண்டு ( பெரிய திரு மொழி 6-3-7 )
நின்று கேட்டு அருளாய் (திரு விருத்தம் -1  )
போற்றும் பொருள் கேளாய்   (திருப் பாவை -29  )  என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை
திரு மங்கை தங்கிய (நாய்ச்சியார் திரு மொழி -84) என்   திரு மார்வற்கு (திரு வாய் மொழி 6-8-10 ) 
ஒரு வாய் சொல் (திரு வாய் மொழி 1-4-7 )  என் வாய் மாற்றம் ( திரு வாய் மொழி 9-7-6)  என்னும் படி சேர இருந்து
திருச் செவி சாத்துகையாலே ஸ் ருணோதி /ஸ்ரா வயதி -என்கிற இரண்டாலும்
புருஷகாரமான இவளுடைய   செயல்களைச் சொல்லுகிறது ..

செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு ( பெரிய திருமொழி 5-8-2 ) என்று இரண்டு தலைக்கும் தலை தடுமாறாக உபகரித்து  
தன் சொல் வழி போக வேண்டும் படியான   திருவடியோடே   மறுதலிக்கும் அவள்
தான் முயங்கும் படியான   போக்கியதைக்குத் தோற்று (மூன்றாம் திருவந்தாதி -100 )  எத்தைச் செய்வோம் என்று தலை தடுமாறி
நின் அன்பின் வழி நின்று ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-7)
அதனின் பின்னே   படர்ந்தான் ( பெரிய திரு மொழி 2-5-6 ) என்னும் படி ,
விளைவது அறியாதே முறுவலுக்குத் தோற்று தன் சொல் வழி வரும் அவனைப் பொறுப்பிக்கும்
என்னும் இடம்   சொல்ல வேண்டா இறே ..

மதுப் -பதார்த்தம் ..
மதுப் -இவனும் அவளுமான சேர்த்தி எப்போதும் உண்டு என்கிறது ..
ஒருவரை ஒருவர் பிரிந்த போது நீரைப் பிரிந்த மீனும் தாமரையும் போல –
சத்தை அழிவது -முகம் வாடுவது ஆகையாலே –
அவனும் இவளோடு அன்பாளவி (பெரிய திரு மொழி 2-4-1 )
இவளும் செவ்விப் படும் கோலம் ( ) அகலகில்லேன் ( திரு வாய் மொழி 6-10-10 ) என்று   இருக்கையாலே
என்றும்   திரு   இருந்த மார்வன் ஸ்ரீ தரன் (நான்முகன் திருவந்தாதி -92 ) என்னும் படி நித்ய யோகம் குலையாது ..
பிரிந்த போது ஜகத்தை பரவர்திப்பன் .. யுகாந்த அக்னி கூற்று அறுத்தோ சுடுவது என்னும் படி நாடு குடி கிடவாதே
கூடின போது -ஏழு உலகை இன்பம் பயக்க (திரு வாய் மொழி 7-10-1 ) என்னும் படி நாடு வாழ்கையாலே
இச் சேர்த்தி தானே ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாய் இருக்கும் ..

அபராதம் கனத்து இருக்க இவள் சன்னதியாலே   காக சூர்ப்பணகைகளுக்கு தலை பெறலாயிற்று ..
அபராதம் மட்டாய் இருக்க இவள் அருகு இல்லாமையாலே -ராவண தாடகைகள் முடித்தார்கள் .
சேர்ந்த திரு மால் ( மூன்றாம் திரு வந்தாதி -30 ) என்கிற படியே
பரத்வம் முதலாக ஈஸ்வர கந்தம் உள்ள இடம் எல்லாம் விடாதே
சேர்த்தியும் , அனுபவமும் , உகப்பும் மாறாமையாலே – காலம் பாராதே – ருசி பிறந்த போதே
திரு மாலை விரைந்து அடி சேர (திரு வாய் மொழி 4-1-2) குறை இல்லை ..
இவள் சேர நிற்கையாலே -ஸ்வதந்த்ரனுக்கும் பிழை   நினைந்து கை விட ஒண்ணாது ..
சாபராதனுக்கும் உடன் இருக்குமையை நினைத்து கால் வாங்க வேண்டா ..

நாராயண -பதார்த்தம் ..
அபராததாலே அழுக்குண்டு புருஷகாரத்தாலே தலை எடுத்து
சேர்ப்பாரே சிதை குரைக்கிலும் ( பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) மறுதலித்து ,
கை விடாதே நோக்கும்படியான வாத்சல்யாதிகளை சொல்லுகிறது -நாராயண பதம் ..
விட்ட போது கைக் கொண்டு விடுவிக்க ஒண்ணாதபடி காட்டிக் கொடுத்தவள் தன்னையும்  
விட்டுப் பற்றும் படி இறே ஈஸ்வரனுடைய குணாதிக்யம் இருப்பது
ஈறிலா வண் புகழ் (திரு வாய் மொழி 1-2-10 ) என்கிற
எண்ணில் ( பெரிய திரு மொழி 5-7-2 )  பல் குணங்களும் இதுக்கு அர்த்தமே ஆகிலும்
உபாய பிரகரணத்திலே நிகரில் புகழாய் (திரு வாய் மொழி 6-10-10 ) என்று தொடங்கி
ஆழ்வார் அருளிச் செய்த நாலு குணங்களும் இதற்குப் பிரதான அர்த்தமாகக் கடவது ..

அதில் வாத்சல்யம் ஆவது –
அன்று ஈன்ற கன்றின் உடம்பில் அழுக்கை போக்யமாக கொண்டு பாலைச் சுரந்து கொடுத்து வளர்த்து
வேறு ஒன்றை நினையாதே தன்னையே நினைத்து குமுறும் படி பண்ணி
முன் அணைக் கன்றையும் புல் இட வந்தவர்களையும் விட்டு கட்டுவாரையும் நலியத் தேடுகிற வர்களையும்
உதைத்து நோக்குகிற தேனு குணம் இறே ..
அப்படியே இவனும் இன்று ஞானம்   பிறந்தவனுடைய அழுக்கு உடம்பை –
உருவமும் ஆர் உயிரும் உடனே ( ) என்னும் படி போக்கியமாய்க் கொண்டு
பாலே போல் சீரில் (  )  இன் அருள் சுரந்து (பெரிய திருமொழி 5-8-1) கொடுத்து வளர்த்து
தாய் நாடு கன்றே போல் ( முதல் திரு வந்தாதி -30) தன்னையே (பெரிய திருமொழி 7-3-2 ) நினைக்கச் செய்து
மறவாது அழைக்கப் பண்ணி ( பெரிய திருமொழி 7-1-1)
ஸூரிகளையும்   அனந்தன் பாலும் கருடன் பாலும் (பெரியாழ்வார் திரு மொழி 5-4-8 )
தவம் செய்தார் வெள்கி நிற்ப (திரு மாலை -44 )  என்கிற படியே
திரு மகளையும் உபேக்ஷித்து இவனை நோக்கக் கடவனாய் இருக்கும் ..

இப்படி செய்கைக்கு அடியான   குடல்   துடக்கு -ஸ்வாமித்வம் -ஆவது ..
இவன் யாதானும் பற்றி (திரு விருத்தம் -95 ) ஓடும் போது விடாதே (நான் முகன் திருவந்தாதி -88 )
உரு அழியாமே ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ( திரு வாய் மொழி 10-7-6) நோக்கி –
அத்வேஷம்   தொடங்கி அடிமை எல்லையாக தானே உண்டாக்கி
இழவு /பேறு தன்னதாம்படி உடையவனாய் இருக்கும் உறவை -ஸ்வாமித்வம் -என்கிறது ..

இந்த குணத்தைக் கண்டு   வானவர் சிந்தையுள் ( திரு வாய் மொழி 1-10-7 ) வைத்துச் சொல்லும்
வானோர் இறையை (திருவாயமொழி 1-5-1 )
கள்ளத்தேன் நானும் ( திரு மாலை -34)
எச்சில் வாயால் (திரு விருத்தம் -95 )
வாய்க் கொள்ள மாட்டேன் என்று ( திரு வாய் மொழி 7-7-11)
அகல்வார் அளவில்   பெருமை சிறுமைகள் பாராதே இவர்கள் நினைவை தன் பேறாக
மேல் விழுந்து   ஒரு நீராகக் கலக்கை -சௌசீல்யம் ..

கட்கரிய திரு மேனியை ( திருச் சந்த விருத்தம் -16)  நிலை கண்ணங்களும் காணும் படி
கண்ணுக்கு இலக்கு ஆக்குகை -சௌலப்யம் ..
சன்மம் பல பல செய்து (திரு வாய் மொழி 3-10-1  )
கண் காண வந்து (  திரு வாய் மொழி 3-10-6) 
ஓர் ஓர் ஒருத்தருக்கு ஓர் ஒரு தேச காலங்களிலே வடிவைக் காட்டின சௌலப்யம்   பரத்வம் என்னலாம்படி
எல்லா தேச காலங்களிலும் இம் மட உலகர் காணலாம்   படி (திரு வாய் மொழி 9-2-7 ) பண்ணின
அர்ச்சா அவதார சௌலப்யம் விஞ்சி இருக்கும் .

தோஷம் பாராதே கார்யம் செய்யும் என்று வெருவாதே கண்டு பற்றினவர்களுக்கு காரியம்   செய்கைக்கு உறுப்பான
ஞான சக்தி க்ருபைகளும் இதிலே அனுசந்திக்கப் படும் ..

நல்கித் தான் காத்து அளிக்கும் ( திரு வாய் மொழி 1-4-5  ) என்று வாத்சல்யமும்
முழு ஏழ் உலகுக்கும் நாதன் (திரு வாய் மொழி 2-7-2 ) என்ற ஸ்வாமித்வமும்
நங்கள் பிரான் (திரு வாய் மொழி 9-3-1) என்று சௌசீல்யமும்
நாவாய் உறைகின்ற   ( திரு வாய் மொழி 9-8-7) என்ற சௌலப்யமும்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி ( திரு வாய் மொழி 4-7-1) என்று ஞான சக்திகளும்
நல் அருள் நம்   பெருமான் (திரு வாய் மொழி 5-9-10 ) என்ற கிருபையும்  
நாராயண சப்தத்துக்கு   அர்த்தமாக ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் ..

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading