ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-8– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் –

ஸ்ரீ த்வய பிரகரணம்
அவதாரிகை ..
பிரியமும் பிரிய தரமுமான ஐஸ்வர்ய கைவல்யங்களைக் காட்டில்
பிரிய தமமாக திருமந்திரத்தில் அறுதி இட்ட கைங்கர்யம் ஆகிற உத்தம புருஷார்த்தத்திலும் –
ஹிதமும் ஹித தரமுமமான பக்தி பிரபத்திகளில் காட்டில்
ஹித தமமாக சரம ஸ்லோகத்தில் அறுதி இட்ட சித்த ஸ்வரூபமான   சரம உபாயத்திலும்
ஆசையும் துணிவும் பிறக்கையாலே
பிரயோஜனாந்தர பரரிலும் -சாதனாந்தர   நிஷ்டரிலும் வ்யாவிருத்தனான  
அதிகாரி   உபாயத்தைப் பற்றும் படியையும்
கைங்கர்யத்தை இரக்கும் படியையும் அறிவிக்கிறது த்வயம் ..

த்வய -நிர்தேச ஹேது ..
இரண்டு அர்த்தத்தையும் இரண்டு இடத்திலே ஓதுகிற இரண்டு வாக்யத்தையும் சேர்த்து அனுசந்தித்த வாறே -த்வயம் -ஆயிற்று ..

ரஹஸ்ய த்ரய ஸம்ப்ரதாய   பவ்ரவா பார்ய நிரூபணம் ..
மூன்று ரஹஸ்யமும் உபநிஷத்திலும் , கீதா உபநிஷத்திலும் கடவல்லியிலும் ஓதப் பட்டு
மூன்று சிஷ்யர்களுக்கும் எம்பெருமான் தானே வெளி யிட்டதாய் இருக்கும் ..
பிராப்யா பிராபக ஞானம்   அனுஷ்டான சேஷம் ஆகையாலே
மந்த்ரமும் விதியுமான இரண்டு ரஹஸ்யத்திலும் அனுஷ்டான ரூபமான -த்வயம் -பிற்பட்டது
உபாய வரணம் பிராப்யத்துக்கு முற்பட வேண்டுகையாலே-
பிராபகத்தில் நோக்கான   மத்யம ரஹஸ்யத்தை   வெளி ஆக்குகிற பூர்வ   வாக்கியம் முற்பட்டு
பிராப்யத்தில் நோக்கான பிரதம ரஹஸ்யத்தினுடைய விசத அனுசந்தமான   உத்தர வாக்கியம் பிற்பட்டது ..

த்வய பஷதம்பக   பிராமண நிரூபணம் ..
மேம் பொருளிலே (திரு மாலை -38 ) விசதமாகிற இரண்டு அர்த்தத்தையும்
புலன் ஐந்து மேயும் ( திரு வாய் மொழி 2-8-4)  என்று உபதேசிக்க கேட்டவர்கள்
அனுஷ்டான ரூபமான திருப் பாவையிலும் –
தாயே தந்தையிலும் (பெரிய திருமொழி -1-9 ) ஸ்தோத்ர கத்யங்களிலும் — த்வயத்தில் அடைவு காணலாம் ..

த்வயத்தின் உடைய வைதிக   பரிக்ரஹம்
திரு மந்த்ரத்தை    சாஸ்திரங்கள் அங்கீகரித்தது .
சரம ஸ்லோகத்தை சாஸ்த்ரங்களுக்குள் ஈடானவன் ஆதரித்தான் ..
த்வயத்தை அவன் தனக்கும் உள்ளீடான   ஞானிகள் பரிக்ரஹித்தார்கள் ..
பிரமாண பிரமேயங்களின் உடைய அங்கீ காரங்கள் போல் அன்று இறே பிரமாணிகரான பிரமாதாக்களுடைய அங்கீ பரிக்ரஹம் ..

த்வயத்தின் பரம குஹ்யத்வம் ..
பூர்வ ஆச்சார்யர்கள் இரண்டு ரஹஸ்யத்திலும் அர்த்தத்தை மறைத்து சப்தத்தை வெளியிடுவார்கள் ..
இதில் அர்த்தத்தைப் போலவே சப்தத்தையும் மறைப்பார்கள் ..
இப்படி செய்கைக்கு அடி அதிக்ருத அதிகாரம் ஆகை இறே —

த்வய வைபவம் ..
வலம் கொள் மந்த்ரமும் ( பெரிய திருமொழி 5-8-9 )
மெய்மை பெரு வார்த்தையும் ( நாய்ச்சியார் திருமொழி 11-9)
அருளிச் செய்த வாயாலே த்வய வக்தா என்றும் -த்வயம் அர்த்த அனுசந்தானே -என்று இரண்டின் ஏற்றமும் வெளி இடப் பட்டது இறே —
கற்றவர்கள் சொல்லக் கேட்டலும்
கற்பித்தவர்கள் கை கூப்பி காலிலே வணங்கும் படி   ( திரு நெடும் தாண்டகம் -14 )இறே  
இச் சொல்லில் ஏற்றம் செல்வ நாரணன் ( திரு வாய் மொழி 1-10-8 )  சொல் வழிப் போக்கர் சொல்லிலும் அகலாதே
உள்ளே புகுரும் படி பண்ணுமதாய்
எஙகும் திரு வருள் பெற்று (திருப் பாவை -30 ) என்னும் படி தோல் கன்றுக்கு இரங்கி
சுரக்கும் சுரபியைப் போல –
நம்மைப் பாராதே முன்பு சொன்னவர்களைப் பார்த்து இரங்கும் படி அவன் தன்னையும் பண்ணுமது இறே —

நம் முதலிகள் மூன்று ரஹஸ்யங்களையும் தங்களுக்கு தஞ்சமாக நினைத்து இருக்கச் செய்தேயும் ,-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் ( திரு வாய் மொழி 5-7-10 ) என்று இருக்கிற தம்மோடு
ஓக்க விமுகரையும் திரு நாரணன்   தாள் காலம் பெறச் சிந்தித்து   உய்ம்மினோ (திரு வாய் மொழி 4-1-1 )
என்னலாம் படி சர்வ அதிகாரம்   ஆகையாலும்
உம்மை யான் கற்ப்பியா வைத்த மாற்றம் ( திரு வாய் மொழி 6-8-6 ) 
என்னும் படி ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலும் ,
மாதவன் என்று ஓத வல்லீரேல் ( திரு வாய் மொழி 10-5-7 )  என்னும் படி
புத்தி பூர்வகமான அபச்சாரத்துக்கும் பரிகாரம் ஆகையாலும்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் ( திரு வாய் மொழி 9-10-5 )  என்னும் படி
சரீர அவசான காலத்திலே மோஷமாககை யாலும் ,
த்வயத்தையே தஞ்சமாக நினைப்பார்கள் –

சம்வாதங்களும் ,வ்யாக்யானங்களும் , ஆச்சார்ய வசநங்களும் , ருசி விசுவாசங்களுக்கு   உறுப்பாக
இவ் இடத்திலே   அனுசந்திக்கப் படும் ..

சாஸ்த்ர சாஸ்த்ர -சார   தாத்பர்ய நிரூபணம் ..
சாஸ்திரங்களும் சரம ஸ்லோகமும் ஆதமேஸ்வரர்களுடைய   ஸ்வா தந்த்ரயத்தைக் காட்டும் ..
திரு மந்த்ரமும் த்வயமும் ஆத்ம பரமாத்ம பாரதந்த்ரயத்தை வெளி இடும்
சாஸ்த்ரங்களுக்கு ஆத்மாவினுடைய தேஹ பாரதந்த்ரியத்திலே நோக்கு ..
திரு மந்திரத்துக்கு ஆத்மாவினுடைய தேஹி -பாரதந்த்ரிய ததீய பாரதந்த்ரயத்திலே   உறைப்பு ..
சரம ஸ்லோகத்துக்கு கர்மங்களினுடைய ஈஸ்வர -பாரதந்த்ரயத்திலே   நினைவு ..
த்வயத்துக்கு   ஈஸ்வரனுடைய ஆஸ்ரித -பாரதந்த்ரியத்திலே கருத்து ..

வாக்யார்த்த நிரூபணம் ..
இதில் முற்கூறு மறுக்க ஒண்ணாத புருஷகாரத்தை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை
உபாயமாகப் பற்றும் படியை அறிவிக்கிறது ..
பிற்கூறு -சேர்வாரேட்டை சேர்த்தியிலே அவனுக்குச் செய்யும் அடிமையிலே இரப்பை வெளி இடுகிறது ..

அவதாரிகை ஸமாப்த்தி ..

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading