ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-5– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் –

சரம ஸ்லோக பிரகரணம் ..
அவதாரிகை
மூல மந்த்ர   சரம ஸ்லோக பவ்ரவபர்யம்..
திரு மந்த்ரத்தை நரனுக்கு உபதேசித்து –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன் (நாச்சியார் திருமொழி 2-1 )
பாரோர் புகழும் வதரியில் ( சிறிய திரு மடல் -74)  நின்றும் ,
வட மதுரை ஏற ( பெரியாழ்வார் திருமொழி 1-9-4 ) வந்து ஸ்ரீ கிருஷ்ணனான நிலையிலே நரனுடைய அம்சமாய் ,
நம்பி சரண் ( பெரியாழ்வார் திரு மொழி 2-1-2 )  என்று சிஷ்யனான அர்ஜுனனைக் குறித்து ,
திரு மந்திரத்தில் ஸ்வரூபத்துக்குச் சேர அறுதி இட்ட புருஷார்த்தத்துக்கு ,தகுதியான சாதனத்தை ,
சரம ஸ்லோக முகத்தாலே ,வெளி இட்டு அருளினான் ..

பரம பிராப்ய பிராபக நிர்ணயம் ..
ஆத்ம பரமாத்ம சம்பந்தத்தை உணராதே உடம்பையே தானாக நினைத்து
அதைப் பற்றி வருகிற பந்துக்களுக்கு சந்தேகித்து அவர்கள் ஸ்நேஹம் பொறுக்க மாட்டாதே
தன்னுடைய தர்மத்தைப் பாபம் என்று கலங்கின அர்ஜுனனை —
செம் கண் அலவலையான ( பெரியாழ்வார் திரு மொழி 2-1-2 ) கிருஷ்ணன்
அமலங்களாக விழிக்கிற ( திரு வாய் மொழி 1-9-9) நோக்காலும் ,தூ ஒளிகளாலும் (திரு வாய் மொழி 9-9-9  )
உறும் ஆகாதே (பெரியாழ்வார் திருமொழி 4-8-3 ) விழாமே
குரு முகமாய் , அறியாதன அறிவித்து ( திரு வாய் மொழி 2-3-2 ) ,
உடம்பையும் ஆத்மாவையும் பற்றி வருகிற
ஐம் கருவி கண்ட இன்பம் தெரி வரிய அளவிலா சிற்று இன்பம் ( திரு வாய் மொழி 4-9-10 )  என்கிற
ஐஸ்வர்ய கைவல்யங்கள் வுடைய பொல்லாங்கையும் ,
இன்ப கவி செய்து (திரு வாய் மொழி 7-5-11 ),
தொல்லை இன்பத்து இறுதி   ( பெருமாள் திருமொழி 7-8 ) காட்டுகிற தன்னை மேவுகை ஆகிற
மோஷத்தினுடைய தன்மையும் அறிவித்து
பெறுகைக்கு வழியாக கர்ம ஞான பக்திகளை அருளச் செய்யக் கேட்ட அர்ஜுனன்
ஊன் வாட (பெரிய திருமொழி 3-2-1 ) நீடு கனி உண்டு (பெரிய திருமொழி 3-2-2 )
பொருப்பு இடையே நின்று ( மூன்றாம் திருவந்தாதி -76)
இளைப்பினை இயக்கம் நீக்கி விளக்கினை விதியில் கண்டு   (திருக் குறும் தாண்டகம் -18 )
குறிக்கோள் ஞானங்களால் (திரு வாய் மொழி 2-3-8 )
ஊழி ஊழி தோறு எல்லாம் (திருச் சந்த விருத்தம் -75 )
யோக நீதி நண்ணி (திருச் சந்த விருத்தம் – 63 )
என்பில் எள்கி நெஞ்சு உருகி (திருச் சந்த விருத்தம் -76 ) உள் கனிந்து –
ஜன்மாந்தர சகஸ்ராந்தங்களிலே செய்து முடிக்க வேண்டின அந்த உபாயங்களின் உடைய அருமையும் ,

மெய் குடியேறி குமைத்து (பெரிய திருமொழி 7-7-9 ) ,
வலித்து எற்றுகிற (திரு வாய் மொழி 7-1-10 ) இந்த்ரியங்களுடைய கொடுமையும்

ஐம்புலன் கருதும்   கருத்துள்ளே மூட்டப் பட்டு நின்றவாது நில்லா நெஞ்சின் (பெரிய திருமொழி 1-1-4 ) திண்மையும்

செடியார் ( திருவாய் மொழி 2-3-9) ,கொடு வினை (திருவாய் மொழி 3-2-9 ) ,
தூற்றுள் நின்று ,வழி திகைத்து அலமருகின்ற தன்னால்
அறுக்கல் அறாத பழ வினையின் கனத்தையும் (திரு வாய் மொழி 3-2-4 )

தன் உள் கலவாதது (திருவாய் மொழி 2-5-3 ) ஒன்றும் இல்லை என்னும் படி ,
முற்றுமாய் நின்று ( திரு வாய் மொழி 7-6-2) ,சர்வ பூதங்களையும் மரப்பாவை போல , ஆட்டுகின்றவன் ,
வேறு வேறு ஞானமாய் (திருச் சந்த விருத்தம் -2 ) உபாயாந்தரங்களுக்கு உள்ளீடாய் ,நிற்கிற நிலையையும் ,

என் ஆர் யுயிர் நீ ( திரு வாய் மொழி 7-6-3) என்னும் படி தன் காரியத்தில் தான் இழிய ஒண்ணாத படி உபதேசித்த
ஸ்வரூப பர தந்தர்யத்தையும் ,அனுசந்தித்து –
நாம் இவ் உபாயங்களைக் கொண்டு நம் விரோதிகளைக் கழித்து அவனை   கிட்டுகை கூடாது ,
உனக்கு ருசித்த ஒன்றைச் செய் என்ற போதே -தமயந்திக்கு அல் வழி காட்டிய நளனைப் போல ,
இவனும் நம்மை நெறி காட்டி நீக்கினான் அத்தனை ( பெரிய திரு வந்தாதி -6)  என்று வெறுத்து  

என் உடைக் கோவலனே   என் உடைய ஆர் வுயிராய் எங்கனே கொல் வந்து எய்துவர் ( திரு வாய் மொழி 7-6-5 ) -என்றும் –
என்னை நீ புறம் போக்கல் உற்றால் (திரு வாய் மொழி 10-10-5 ) என்   நான்   செய்கேன் ( திரு வாய் மொழி 5-8-3) என்று
கண்ணும் கண்ணீருமாய் ,கையிலே வில்லோடு சோர்ந்து விழ
மண்ணின் பாரம் நீக்குதற்கு தான் (திரு வாய் மொழி 9-1-10 )
இருள் நாள் பிறந்த காரியம் (பெரியாழ்வார் திருமொழி 8-8-9 ) இவனைக் கொண்டு தலைக் கட்டவும் ,

பரிபவ காலத்தில் ,தூர வாசியான தன்னை நினைத்த மைத்துனமார் (பெரியாழ்வார் திருமொழி 4-9-6 ) காதலியை
மயிர் முடிக்கும் படி பாரதப் போர் முடித்து ( ) திரௌபதியின் உடைய ,
அலக்கண்   நூற்றுவர் தம் ( பெரிய திரு மொழி 2-3-6) பெண்டிறும் ,எய்தி நூல் இழப்ப ,
வென்ற பரஞ்சுடராய் ( பெரிய திரு மொழி 1-8-4) தன் ஸ்வரூபம் பெறவும் இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணன்

இவனுக்கு இவ் வளவும் பிறக்கப் பெற்றோமே என்று   உகந்து அர்ஜுனனைப் பார்த்து –
கீழ் சொன்ன உபாயங்களை விட்டு ,என்னையே உபாயமாகப் பற்று ,
நான் உன்னை விரோதிகளில் நின்றும் விடுவிக்கிறேன் ,
நீ சோகியாதே கொள் -என்று ஸ்வரூப அனுரூபமான   உபாயத்தை வெளி இடுகிறான் ..

சரம உபாயம் ..
இது ஒழிந்த உபாயங்களிலே பரந்தது ,இப் பாகம் பிறந்தால் அல்லது இவ் உபாயம் வெளி இடல் ஆகாமையாலே
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றி வழி கெட   நடக்கிறவர்களையும் வாத்சல்யத்தின் மிகுதியாலே ( திருச் சந்த விருத்தம் -68) ,
பித்தனைத் தொடரும் மாதா பிதாக்களைப் போல ,மீட்கவும் பார்க்கிற சாஸ்திரம் ,
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிகிற (பெரிய திரு மொழி 1-6-5 ) நாஸ்திகனுக்கும் ,சத்ருவை அழிக்கைக்கு ,
அபி சாரமாகிற வழியைக் காட்டி ,தன்னை விஸ்வசிப்பித்து ,த்ருஷ்ட போகத்துக்கு ,வழிகளை இட்டு ,தன்னோடு இணைக்கி
ஸ்வர்காதி பலன்களுக்கு வழி காட்டி ,தேக ஆத்ம அபிமானத்தைக் குலைத்து ,ஆத்ம போகத்துக்கு வழி காட்டி ,
அந்நிய சேஷத்வத்தை அறுத்து ,பரமாத்ம போகத்துக்கு   வழி காட்டி ஸ்வாதந்த்ரயத்தைப் போக்கி ,
ஸ்வரூப பாரதந்த்ரயத்தை உணர்த்தி சித்தோ உபாயத்தில் மூட்டுமா போலே – 

முந்தை தாய் தந்தை (திரு வாய் மொழி 5-7-7 ) யான இவனும்
நெறி உள்ளி   ( திரு வாய் மொழி 1-3-5 ) எல்லா பொருளும் விரிக்கிறான் ( திரு வாய் மொழி 4-5-5 ) ஆகையாலே
பூசலுக்கு எறிகொலைக்கு அஞ்சி ,வில் பொகட்ட வனுக்கு தன்னைப் பெறுகைக்கு தானே உபாயம் என்கை சேராது என்று
புறம்பே பரந்து மோஷ அதிகாரி ஆக்கி , உபாயங்களை கேட்டு கலங்கின அளவிலே
இவனை உளன் ஆக்குகைக்காக பரம ரஹஸ்யத்தை வெளி இட்டு அருளினான் ..

சரம ஸ்லோகார்த்தம் பரம ரஹஸ்யம் ..
ஐந்தாம் வேதத்துக்கு உபநிஷத்தான   ஸ்ரீ கீதையிலே பரக்கச் சொல்லி குஹ்ய தமம் -என்று
தலைக் கட்டின பக்தி யோகத்துக்கு மேலாக ஒரு வார்த்தையாகச் சொல்லி ,
ஒருத்தியுடைய சரணாகதி நம்மை நெஞ்சை அழித்தது என்கிற துணுக்கத்தோடே
இது ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று   மறைத்தபோதே   இது பரம குஹ்ய தமம் -என்று தோன்றும் ..

சரம ஸ்லோகார்த்த வைபவஞ்ஞர் ..
இதன் ஏற்றம் அறிவார் -பரமன் பணித்த வகை (திரு வாய் மொழி 10-4-9) -என்றும் –
பொன் ஆழிக் கையன் திறன் உரையே (முதல் திருவந்தாதி -41 ) -என்றும் –
மெய்ம்மைப் பெரும் வார்த்தை ( நாய்ச்சியார் திருமொழி 11-10) -என்றும் –
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளது எனக்கு (நான் முன் திருவந்தாதி -50 ) -என்றும்
இருக்கும் வார்த்தை ( திருவாய் மொழி 7-5-10) அறிபவர் இறே –

சரம ஸ்லோகார்த்த கெளரவம் ..
இதுக்கு அதிகாரிகள் கிடையாமையாலே தேர் தட்டினையும் /சேர பாண்டியனையும் சீர் தூக்கி
செய்ய அடுப்பதென் என்று பல கால் நொந்து துவளப் பண்ணி சூழ் அரவு கொண்டு
மாச உபவாசம் கொண்டு மூன்று தத்துக்கு பிழைத்தல் சொல்லுகிறோம் என்றும்
இவனுக்குச் சொல்ல இழிந்தது காண் என்றும் நம் முதலிகள் பேணிக் கொண்டு போருவார்கள் ..

சரம ஸ்லோக அதிகாரிகள் ..
இதில் சொல்லுகிற அர்த்தம் எவ் வுயிர்க்குமாய் இருந்ததே ஆகிலும்
முக் குணத்து இரண்டு அவை அகற்றி (திரு எழு கூற்று இருக்கை –9 )
பரம சாத்விகனாய் மால் பால் மனம் சுழிப்ப (மூன்றாம் திருவந்தாதி -14 ) சம்சாரத்தில் அருசியை உடையனாய்
திரு அரங்கர் தாம் பணித்தது என்றால் (நாய்ச்சியார் திருமொழி 11-30 )
துணியேன் இனி ( பெரிய திருமொழி 11-8-8) என்னும் படி வியவசாயம் உடையவனாய்
நாஸ்திகனும் ஆஸ்திக நாஸ்திகனும் அன்றிக்கே ஒள் வாள் உருவி எறியும் படி (பெரிய திருமொழி 6-2-4 ) 
ஆஸ்திகர்க்கே சரண் ஆவான்   இதுக்கு அதிகாரி யாம்படியாய் இருக்கும் —

சரம ஸ்லோக வாக்யார்த்தம்
கீழே உபாயங்களை வெளி இட்டு அவற்றுக்கு உள்ளீடாய் நின்று காரியம் செய்கிற தன்னை உபாயமாகச் சொல்லி
மேலே ஒரு உபாயம் சொல்லாமையாலே சரம ஸ்லோகம் என்று பேரான இது
இந்த உபாயத்துக்கு இவன் செய்ய வேண்டும் அவற்றையும் ,
இவ் உபாயம் இவனுக்கு   செய்யும் அவற்றையே சொல்லுகிறது ..

சரண்ய சரணாகத க்ருத்யம் ..
விடுவித்துப் பற்று வித்து , விலக்கடி அறுக்கை உபாய க்ருத்யம் ..
விட்டுப் பற்றி தேறி இருக்கை அதிகாரி க்ருத்யம் –

அவதாரிகை முற்றிற்று ..

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading