ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-4–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் .

நமஸ் – சப்தார்த்தம் ..
சர்வ ரக்ஷகனான ஸ்ரீயபதிக்கு அநந்யார்ஹ சேஷமாகை யாகிற நிலை நின்ற உறவை
ஆத்மாவை அறிய ஒட்டாத விரோதியை -நம -என்று கழிக்கிறது ..
நமஸ் ஸூ -ந என்றும் ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் ..
ம -என்கிற இத்தை ந – என்று கழித்து – வீடுமின் முற்ற த்தின் ( திரு வாய் மொழி 1-2 )  -போல
கழித்துக் கொண்டு ..கழிக்கப் படும் அத்தைக் காட்டுகிறது ..
அவன் உடையவனாய் , தான் உடமை -யானமை நிலை நிற்பது -தனக்குத் தான் கடவ னாகவும் ,
தான் அல்லாத ஆத்மாத்மீயங்களை -என்னது -என்று நினைக்கிற   அகங்கார மமகாரங்களை
வேர் முதல் மாய்த்தல் ( திரு வாய் மொழி 1-2-3 ) ஆகையாலே
உ -காரத்திலே கழிவுண்ட பிறரிலே சொருகின தன்னை -நம -என்று   வெளியாக கழிக்கிறது ..
சம்சாரத்துக்கு விதையாய் ,காட்டுத் தீயும் மிருத்யுவும் போல , ஸ்வரூபத்தை சுட்டு உரு அழிக்கிற –
நான்- எனது -என்கிற கழித்தல் இறே   ஸ்வரூப சித்தி உள்ளது ..

தனக்கும் , பிறர்க்கும் ஆளானானால் ,அவனுக்கும் அவன் வுடையார்க்குமாக வேண்டுகையாலே ,
பகவத் சேஷத்வம் ,பிராட்டி அளவும் சென்றார் போல ,மிதுன சேஷத்வமும் ,
திரு மாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் ( திரு வாய் மொழி 6-9-11 ) ஓடி ,
மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமையையும் ( பெருமாள் திரு மொழி 2-10 )  இது காட்டக் கடவது .
ஒருவன் தனக்கு என்று எழுதிக் கொண்ட அடிமையும் , காணியும் , பார்யா புத்ராதிகளுக்கும்   விற்று விலை செல்லும் படி ஆக்கினால் ,
அவனுக்கு நிலை நின்றதாம் போலே ,
அற விலை செய்த ( திரு வாய் மொழி   8-1-10 ) 
அடிமை அறக் கொண்ட ( திரு வாய் மொழி 4-9-6 )
ஆத்ம ஆத்மீயங்களை   எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் ( பெரியாழ்வார் திருமொழி 4-4-10 )..
ஈது எல்லாம் உனதே ஆக ( திரு நெடும் தாண்டகம் -27 ) என்னும் படி அடியார்க்கு ஆட்படுத்தால் இ றே   ( திருப் பள்ளி எழுச்சி ) 
அவன் நிலை ஆளாக ( பெரிய திரு மொழி 3-6-9 )  உகந்தான் ஆவது ..

எல்லாரும் தாச பூதராய் இருக்க ,
அவர்கட்கு அஙகு அருள் இல்லா ( பெரிய திரு மொழி 5-6-8 ) என்னும் படி சிலரை   த்விஷத்துக்கள் என்று  
அழல விழித்து ( பெரியாழ்வார் திரு மொழி 1-8-5 ) 
சிலர் பக்கலிலே   என்றும் அருள் நடந்து ( பெரிய திரு மொழி 3-10-1 ) 
என் தமர் ( பெரிய திரு மொழி 10-6-5 ) 
என் அடியார் (பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) என் வுடைய பிராணங்கள் ,
என் வுடைய ஆத்மா ,இரண்டாம் அந்தராத்மா , என்று அவன் விரும்புகையாலே
அவனை உள்ளத்து ( பெரிய திரு மொழி 11-6-7 )  எண்ணாதே இருப்பாரோடு ( பெரிய திரு மொழி 2-6-1 ) 
உறவு அறவும் என்னும் நெஞ்சு வுடையாருக்கு ( பெரிய திரு மொழி 2-6-2 ) அடிமைப் படுகையும்
ஸ்வரூபம் என்னும் இடத்தை உ -காரமும் நமஸ் ஸூம்   அறிவிக்கிறது என்று இறே ..

திரு எட்டு எழுத்தும் கற்ற ஆழ்வார் -மற்று ஓர் தெய்வம் உள்ளது   என்று இருப்பாரோடு வுற்றிலேன்  
வுற்றதும் உன் அடியார்க்கு அடிமை ( திரு வாய் மொழி ( பெரிய திரு மொழி 8-10-3 ) என்றது ..
ஆத்மாவின் வுடைய சேஷத்வம் இவ்வளவும் சென்று நிலை   நின்றால் போல ,
அவன் வுடைய ரஷகத்வமும் நிலை நிற்பது ..ஸ்வ ரஷணத்திலே தான் அந்வயியாது ஒழிந்தால் ஆகையாலே
இந்த ஸ்வாதந்த்ரயத்தை அறுத்து ,அவனே உபாயம் என்னும் இடத்தையும் ,வெளி இடுகிறது -நமஸூ ..
சரணம் புகச் சொல்ல -நமஸ்ஸைப் பண்ணினார்கள் -என்கிற வழியாலே உபாயத்தைக் காட்டு கிறதாகவும் சொல்லு வார்கள் ..

நடுவே கிடந்து ,ஸ்வரூபத்துக்கும் ,உபாயத்துக்கும் ,பிராப்யத்துக்கும் , களை அறுத்து ,
நல் வகையால் ( திருப் பல்லாண்டு -11 )
வேம்கடத்து உறைவார்க்கு   ( திரு வாய் மொழி 3-3-6 ) 
மேலைத் தொண்டு களித்து ( திரு வாய் மொழி 10-8-7 ) என்று
ஸ்வரூபமும் ,உபாயமும் , பிராப்யமும் தானாய்
உற்று எண்ணில் ( திரு வாய் மொழி 7-9-10 )  ஆத்ம சமர்பணத்துக்கும் தான் வுரியன் அல்லாத
பார தந்த்ரியத்தின் மிகுதியை எனது ஆவியும் உனதே (திரு வாய் மொழி 5-7-10 )
என் உடைமையும் நீயே (திரு வாய் மொழி 2-9-9 )  என்கிற படியே காட்டி ,
ஸ்வரூபத்தோடே வைக்கையாலே இத்தை ஆந்தராளிக வைஷணவ பதம் என்று பூர்வாசார்யர்கள் விரும்புவார்கள் ..

———————————————

நாராயண –
பதம் தன்னை அடியானாக உணர்ந்தவன்   சேஷி பக்கல் அடிமையை இரக்கும் படியைச் சொல்லுகிறது ..
நாராயணன்   என்றது அ – காரத்தில் சொன்ன சேஷியை வெளி இடுகிறது –
நர /நாரா நாராக / என்றும் அழியாத சேஷ வஸ்துக்களின் திரளைக் காட்டுகிறது –
நரன் என்று சொல்லப் படுகிறவன் பக்கல்   நின்றும் பிறந்த வற்றையும் ,
தத்வங்களிலே முற்பட்ட பிரதானமான அப்புக்களையும் நாரங்கள் என்னக் கடவது
என்றும் உண்டாய் ,ஒரு படிப் பட்டு ஆவது அழிவது ஆக நிற்க ,ஸ்வரூப நாசம் இன்றிக்கே இருக்கிற  
இரண்டு விபூதியில் உள்ள வற்றை எல்லாம் சொன்ன படி –

உணர் முழு நலம் ( திரு வாய் மொழி )  என்கிற ஞான ஆனந்தாதிகளும் ,
மழுங்காத (திரு வாய் மொழி 10-8-11 ) உயர்வற உயரும் (திரு வாய் மொழி 1-1-8 )  என்கிற ஞான சக்தி யாதிகளும்
ஆசறு சீலாதிகளும் ( திரு வாய் மொழி 8-1-6 )
இவற்றை வெளி இடுகிற மணி உருவில் (திரு வாய் மொழி 4-3-5 )பூதம் ஐந்தான   நல்ல சுடர்   விடு மேனியும் (திரு வாய் மொழி 10-7-10 )
வெறி கொள் சோதி (திருச் சந்த விருத்தம் -79 ) மலர் புரையும் ( திரு வாய் மொழி 4-9-8 ) என்கிற சௌகந்த்ய சௌகுமார்யாதி களும்  
முகச் சோதி மலர்ந்ததுவோ ( திரு வாய் மொழி 3-6-1 ) என்னும் படியாய் இருக்கிற
சென்னி நீண்   முடி ஆதியாய ( திரு வாய் மொழி 6-9-5 ) பூஷணங்களும்
அம் தாம வாள் முடி சங்காழி நூலாரம் ( திரு வாய் மொழி )என்கிற ஆபரணங்களோடு ஒரு கோவையான ஆயுதங்களும்
பார் மகள் பூ மங்கையோடு   சுடர் ஆழி சஙகு இருப்பள் ( திரு வாய் மொழி 1-2-10 ) என்னும் படி
ஆழ்வார்களோடு ஓக்க அனுபவிக்கிற நாய்ச்சிமார்களும் , திரு மகள் பூமி ( திரு வாய் மொழி 10-9-1 ) என்ற
சேர்த்தியிலே ஏவிற்றுச் செய்கிற நித்ய ஸூரிகளும் திருவாய் மொழி ( 9-3-1 )
அடியோரோடு இருந்தமை ( திரு வாய் மொழி 3-7-4 )  என்னும் படி இவர்களோடு சாம்யம் பெற்ற முக்தரும் ,
சென்றால் குடையாம் ( திருவாய் மொழி 5-7-1 )  என்று அவர்கள் உபகரண ரூபமாகக் கொண்ட சத்ர சாமராதிகளும் ,
தேவர் குழாத்துக்கு இருப்பிடமான ( பெரியாழ்வார் திரு மொழி 3-7-11 ) திரு மா மணி மண்டபமும்
அத்தைச் சூழ்ந்த கொடி அணி நீடு மதிள் கோபுரமும் ( திரு வாய் மொழி 4-3-3 ) 
அதில் வாசலில் வானவரும் ( திரு வாய் மொழி 1-3-3 ) 
வைகுந்த மா நகரும் ( திரு வாய் மொழி 10-5-2 )
கோவில் கொள் தெய்வங்களின் வுடைய திவ்ய விமானங்களும் ( திரு வாய் மொழி 8-6-5 )
மாட மாளிகை (நாச்சியார் திருமொழி 4-5)நல் வேதியர் ( திரு வாய் மொழி 10-9-10 )
பதிகளைச் சூழ்ந்த ஆராமங்களும் (சிறிய திரு மடல் -71 )
அந்த பூ இயல் பொழிலைச் சூழ்ந்து (திரு வாய் மொழி 6-7-5 ) வளர்கிற ஒத்த   நெடும் தடங்களும் ( திருவாய் மொழி 5-9-7 )
அவற்றுக்கு அடியான விரஜையும் ,
வைகுந்த வானாடும் ( பெரிய திருவந்தாதி -68 ) 
சூழ் பொன் விசும்பான பரம ஆகாசமும் ( திரு வாய் மொழி 10-8-11 )
சுரர் அறிவரு   நிலையான ( திருவாய் மொழி 1-1-8 ) மூல பிரக்ருதியும் ,
மங்கியவருமான ( திருவாய் மொழி 8-1-6 ) பக்த வர்க்கமும் ,கால சக்கரமும் (திரு வாய் மொழி 4-3-5 ) ,
மானாங்காரம் ( திரு வாய் மொழி 10-7-10)  முதலான தத்துவங்களும் ,
அவற்றாலே சமைந்த பதினான்கு திசைக் கண் நின்ற ( திரு சந்த விருத்தம் -79)
புற இமையோர் ( திருவாய்மொழி 4-9-8 ) வாழ் தனி முட்டை கோட்டையும்  
மனிசர்   தெய்வம் மற்றும் மற்றும்   மற்றும் முற்றுமான பதார்த்தங்களும் ( திருவாய்மொழி 3-6-1 ),
எண் மீது இயன்ற   ( திருவாய் மொழி 6-9-5 ) புற அண்டங்களுமாக சொல்லப் படுகிற இவை   நாரங்கள் ஆகின்றன ..

நலம் திகழ் நாரணன் ( பெருமாள் திரு மொழி 1-11 )
வண் புகழ் நாரணன் ( திரு வாய் மொழி 1-2-10 )
நன் மேனியினன்   நாராயணன் ( திருவாய்மொழி 10-9-1 )
பல் கலன் நடையா உடை திரு நாரணன் (திருவாய் மொழி 9-3-1 )
தெய்வ நாயகன் நாரணன் (திருவாய்மொழி 5-7-4 )
நாராயணனுக்கு (திருவாய்மொழி 5-7-1 ) நாராயணனுக்கு ( பெரியாழ்வார் திருமொழி 3-7-11 ) 
ஏக மூர்த்தி இரு மூர்த்தி ( திருவாய் மொழி 5-3-3 )  என்று தொடங்கி ,
நடுக் கடலுள் துயின்ற நாராயணன் (திருவாய் மொழி 4-3-3 )
தானாம் அமைவுடை நாரணன் ( திருவாய் மொழி 1-3-3 ) 
நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் (  திருவாய் மொழி 10-5-2 ) 
நாராயணன் நங்கள் பிரான் (திரு வாய் மொழி 9-3-1  ) 
நீரார் பேரான் ( பெரிய திருமொழி 2-4-6 )  என்று பல இடங்களிலும் நாரங்களாக   தோற்றுகிறவற்றை
பொங்கு புணரி கடல்   சூழ் ஆடை (பெரிய திருமொழி 6-10-9 )  என்கிற பாட்டிலே   திரள அருளிச் செய்து அருளினார் –

————————–

அயன சப்தார்த்தம் ..
அயனம் -என்று இருப்பிடமாய் , நாரங்களுக்கு இருப்பிடம் என்றும் ,
நாரங்களை இருப்பிடமாக உடையவன் என்றும்   சொல்லக் கடவது ..
நான் உன்னை அன்றி இலேன் – நீ என்னை அன்றி இல்லை ( நான்முகன் திருவந்தாதி -7 ) என்று
ஒன்றை ஓன்று குலையில்   இரண்டு தலையும் இல்லை யாம்படி இருக்கையாலே ,
தன் உள் அனைத்து உலகும் நிற்க நீர்மையால் , தானும் அவற்றுள் நிற்கும் ( திரு வாய் மொழி 9-6-4 )
என்கிற மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று ஆயிற்று ..
எல்லா வற்றுக்கும் காரணமாய் , அந்தராத்மாவாய் , அவற்றின் தோஷம் தட்டாமே நின்று ,நியமித்து ,
தான் ஒளியை வுடையானாய் ,ஸ்வாமியாய் , எல்லா உறவுமாய் , உபாயமுமாய் ,  உபேயமுமுமாய் ,
இருக்கும் அது எல்லாம் இதிலே தோற்றும்..

—————————————-

வ்யக்த சதுர்த்தி அர்த்தம் ..
ஆய -என்ற ம -காரத்தில் சொன்ன ஆத்மாவுக்கு அ -காரத்தில் சொன்ன சேஷத்வம்
நிலை நிற்பது கைங்கர்யத்தில் தான் அந்வயித்தால் ஆகையாலே ,அடிமையில் இரப்பைக் காட்டுகிறது ..
தொடர்ந்து குற்றேவல் ( திரு வாய் மொழி 9-2-3) ஆட் செய் எக்காலத்தும் (திரு வாய் மொழி 2-9-4 ) –
சென்றால்   இருந்தால் நின்றால் (முதல் திரு வந்தாதி -53 )
ஊரும் புள் கொடியும் அஃதே ( திரு வாய் மொழி 10-2-3) என்கிற படியே
எல்லா தேசங்களிலும் திரைக்குள்ளோடு   புறம்பற வாசி அற  எல்லா அடிமைகளையும்  
முகப்பே கூவி பணி   கொண்டு அருள ( திருவாய் மொழி 8-5-7) வேணும் என்கிற   இரப்பை
ஒழிவில் காலத்தில் (திரு வாய் மொழி 3-3-1 ) படியே காட்டக் கடவது ..

——————————————-

மூல மந்த்ர ஸங்க்ரஹம் ..
ஆக , இந்த திரு மந்த்ரம் ,
சர்வ ரக்ஷகனான ஸ்ரீய பதிக்கு ,அநந்யார்ஹ சேஷ பூதனாய் ,
சரீர இந்திரயாதிகளில் வேறு பட்டு ,ஞான ஆனந்த மயனாய்
ஸ்வதந்த்ரன் இன்றிக்கே , சர்வ பிரகார பர தந்த்ரனான ,நான் ,
உபய விபூதி நாராயணனுக்கு   சர்வ வித கைங்கர்யங்களிலும் ,அந்வயிக்க பெறுவேனாக ,வேணும் என்று இருக்கை ,
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்கிறது ..

திரு மந்திரத்தின் ஆபத்   நிவர்த்தன பிரகாரம் ..
எம்பெருமானை ஒழிந்த பிறரை ரஷகர் என்று இருந்தால் ,
தேக ஆத்ம அபிமானம் ,
அந்நிய சேஷத்வம் ,
ஸ்வ ஸ்வா தந்தர்யம் –
மமகாராம் நடத்தல் ,
ஸ்ரீ வைஷ்ணவர்களை சஜாதியர் என்று இருத்தல் ,
தன் பேற்றுக்கு தான் யத்தனித்தல்
பகவத் விபூதியில் சிலரோடு வெறுப்பு நடத்துதல் ,
சம்சாரிகளை உறவு என்று இருத்தல் ,
ஷூத்ர போகங்களிலே நெஞ்சு கிடத்தல் ,-செய்யில் திரு மந்திரத்தில் – அன்வயம் இல்லையாகக் கடவது ..

மூல மந்த்ர அர்த்த நிகமனம் ..
மூன்று எழுத்து (பெரியாழ்வார் திருமொழி )
விடை ஏழ் அன்று அடர்த்து ( திரு வாய் மொழி 8-9-3 )
யானே என்னை ( திரு வாய் மொழி 2-9-9 ) 
எண் பெருக்கு அந் நலம் ( திரு வாய் மொழி 1-6-10)
எம்பிரான் எந்தை (பெரிய திருவந்தாதி 1-1-2 )
ஒழிவில் காலம் ( திரு வாய் மொழி 3-3-1 )
வேங்கடங்கள் (  திரு வாய் மொழி 3-3-6)
நாட்டினாய் என்னை (  பெரிய திரு மொழி 8-10-9) என்கிற பாட்டுக்களை
திரு மந்த்ர அர்த்தமாக பூர்வர்கள் அனுசந்திப்பார்கள் ..

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading