ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-6– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் —

பத விபாவம்
பதினோரு பதமான இதில் முதல் பதம்   விடப் படுகிற   உபாயங்களைச் சொல்லுகிறது–

சர்வ தர்ம சப்தார்த்தம் ..
சர்வ தர்மான் -எல்லா தர்மங்களையும் –,
தர்மம் என்கிறது , ஆசைப் பட்டவை கை புகுகைக்கு
நல் வழியாக சாஸ்திரங்கள் சொல்லுமத்தை ..இவ் இடத்தில் தர்மம் என்கிறது –
மோஷம் ஆகிற பெரிய பேறு ,பெருகைக்கு ,சாஸ்த்ரங்களிலும் , பதினெட்டு ஒத்திலும் ,சொல்லப் பட்ட
கர்ம ஞானங்களை பரிகரமாக உடைய ,பக்தி ஆகிற சாதனத்தை
தர்மான் -என்கிற பஹு வசனம் ,
அற முயல் ஞான சமயிகள் பேசும்   ( திரு விருத்தம் -44 ) வித்யா பேதங்களான –
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை ( பெரியாழ்வார் திருமொழி 1-1-3 ) என்கிற புருஷோத்தம வித்யை –
பிறவி அம் சிறை அறுக்கும் ( ) நிலை வரம்பு இல்லாத ( திரு வாய் மொழி 1-3-11) அவதார ரஹஸ்ய ஞானம்
நற்பால் அயோத்யை ( திரு வாய் மொழி 1-3-2) தொடக்கமான க்ஷேத்ர வாசம்
பாடீர் அவன் நாமம் (திரு வாய் மொழி 7-5-1 ) என்கிற திரு நாம சங்கீர்த்தனம்
கடைத்தலை சீய்க்கை (திரு வாய் மொழி 10-5-5 ) 
மா கந்த நீர் கொண்டு (திரு வாய் மொழி 10-2-7 )
தூவி வலம் செய்கை -( திருவாய் மொழி 7-10-2 )
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் கொண்டு (திரு வாய் மொழி 5-2-9 )
பூசனை செய்கை (திரு வாய் மொழி 10-2-4 ) தொடக்கமாக சாதன புத்தியோடே செய்யும் அவற்றைக் காட்டுகிறது ..
நெறி எல்லாம் எடுத்து உரைத்த (திரு வாய் மொழி 4-8-6 ) -என்கையாலே அவையும் தனித் தனியே   ஸாதனமாய் இருக்கும் இறே ..

சர்வ சப்தம் –
யஜ்ஞம் /தானம் /தபஸ் /தீர்த்த சேவை முதலானவை கர்ம யோக்கியதை உண்டாகும் படி சித்தியை விளைவிக்கும்
ஓதி உரு எண்ணும் அந்தி (முதல் திரு வந்தாதி -33 )
ஐந்து வேள்வி (திருச் சந்த விருத்தம் -90 ) தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது –

தர்மத்திலே சொருகாமல் , இவற்றை சர்வ சப்தத்துக்கு பொருளாக தனித்து சொல்லுகிறது –
பிரபத்திக்கு யோக்யதை தேட வேண்டாம் ..இவனையும் இவன் உடைய ஸ்த்ரீ யையும் போல ,
நீசர் நடுவே கேட்கவும் -அநுஷ்டிக்கவுமாய்
குலங்கள் ஆய ஈர் இரண்டில் ( திருச் சந்த விருத்தம் -90) பிறவாதாரும் இதிலே   அந்வயிக்கலாம்   என்று தேறுகைக்காக ..
முது விளக்கி ,முழி , மூக்கு புதைத்து கிழக்கு நோக்கி கும்பிட்டு ,கீழ் மேலாக புற படுத்து ,
நாள் எண்ணி ,குரு விழி கொண்டு ,சாதனாந்தரங்களிலே நினைவாய் கிடந்ததிறே ..

இவை ஒன்றும் செய்யாதே சரணா கதனாய்
இக் கரை ஏறினவன் (பெரியாழ்வார் திருமொழி 5-3-7 ) உபதேசிக்கக் கேட்டு
சரணாகத ரக்ஷணம்   பண்ணின குலத்தில் பிறந்து , உறவை உட்பட கொண்டாடுகிறவர்க்கு ,
பிரபத்தி பழுத்துப் போய் ,அக்கரைப் பட ஒண்ணாது ஒழிந்தது ..நன்மை தீமைகள் தேடவும்   பொகடவும் வேண்டா ..
இவை விலக்கும் பற்றாசுமாய் இருக்கும் என்று இருக்கையே அதிகாரம் ..

பரித்யஜ்ய பதார்த்தம் –
பரித்யஜ்ய -என்று இந்த உபாயங்களை விடும் படியைச் சொல்லுகிறது-
த்யாகமாவது -விடுகை ..பரி த்யாகமாவாது -பற்று அற   விடுகை
உபாயம் அல்லாதவற்றை   உபாயமாக நினைத்தோம் என்று -சிப்பியை வெள்ளி என்று எடுத்தவன் லஜ்ஜித்து
பொகடுமாப் போல புகுந்து போனமை தெரியாத படி விட வேணும் ..
பித்தேறி னாலும் அவற்றில் நினைவு செல்லாத படி -விட்டோம் என்கிற நினைவையும் கூட   விடச் சொன்ன படி –

தர்மதாவதை பாதகம் என்பது -ஆழ்வார் – எய்தக் கூவுதல் ஆவதே ( ) -என்று புலை அறங்களோ பாதியாகிற ( ) 
இதை தர்மம் என்று விடச் சொல்லுகிறது -பூசலை அதர்மம் என்றும்   இவற்றை தர்மம் என்றும் பிரமித்த அர்ஜுனன் நினைவாலே ..
நிஷித்தம் செய்கை அசக்தியால் அன்றிக்கே ஆகாதே என்று விடுமா போல உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தம் என்று இ றே –
தபோதனரான ரிஷிகளும் நெருப்பை நீராக்குகிற
தேஜஸ்ஸை உடைய பிராட்டியும் -ஸ்வ ரக்ஷணத்திலே இழியாதே கர்ப்பத்தில் இருப்பாரைப் போலே இருந்தது –
நாத்தழும்பால் தீ விளையாத   விட வாயும் வல் வாயும் ஏறி பர லோகங்களிலே சென்று
படை துணை செய்து அரிய தபசுக்களைச் செய்து வெறுத்துவர் சபையிலே வில் இட்டு அடித்து ஊர் வாசியை முறை கூறுகிறவன்
கர்ம ஞானங்களில்   இழிய மாட்டாமை அன்றோ -கலங்குகிறது ..
ஸ்வரூப பாரதந்த்ரயத்தைக் கேட்ட படியாலே இறே –
தன்னை ராஜ மகிஷி என்று அறிந்தவள் உதிர் நெல் பொருக்கவும் ,கோட்டை நூற்கவும் ,குடம் சுமக்கவும் ,லஜ்ஜிக்கும் இறே ..
இவன் தான் சுமப்பேன் என்றான – இவனை எடுத்தினான் இத்தனை இறே
இவ் உபாயத்தில் ,இழியும் போது உபாயாந்தரங்களை அதர்மம் என்று விட வேண்டும் என்று சாஸ்திரங்கள் பலவும் சொல்லுகையாலும்
உத்தம ஆஸ்ரமத்தில் புகும் அவனுக்கு முன்பில் ஆஸ்ரம தர்மங்களை விடுகை குறை   இல்லாமை யாலும்
தர்மங்களை விடச் சொல்லுகை தப்பு அல்ல ..

மாம் -சப்தார்த்தம் ..
மாம் -என்று பற்றப் படும்   உபாயத்தைச் சொல்லுகிறது ..
மாம் -என்னை — அறம் அல் அல்லாவும்   சொல் அல்ல ( ) -என்னும் கழிப்பனான தர்மங்கள் போல் அன்றிக்கே
கைக் கொள்ளப்படும் நல் அறத்தைக் காட்டுகிறான்
வேதத்தில் இரண்டு கூற்றிலும் அறிவுடை யார்க்கும் நல் அறமாக சொல்லுவது
பறை தரும் புண்ணியனான ( திருப் பாவை -10 ) கிருஷ்ணனை இ றே-
தர்மங்களை நிலை நிறுத்தப் பிறந்தவன் தானே தர்மங்களை   விடுவித்து ,  அவற்றின் நிலையிலே  
தன்னை நிறுத்துகையாலே நேரே தர்மம் தான் என்னும் இடத்தை வெளி இட்டான் ஆயிற்று ..

அல்லாத தர்மங்கள் சேதனனாலே செய்யப் பட்டு ,பல கூடி ஒன்றாய் ,நிலை நில்லாதே ,
அறிவும் மிடுக்கும் அற்று , இவன் கை பார்த்து தாழ்ந்து பலிக்க கடவனாய் இருக்கும் ..

இந்த தர்மம் – அறம் சுவராக நின்ற (திரு மாலை -6) என்று படி எடுத்தார் போல கோயிலாம் படி   சித்த ரூபமாய் ,
ஒன்றாய் , நிலை நின்று , ஞான சக்திகளோடு கூடி ,ஒன்றால் அபேக்ஷை அற்று , தாழாமல் பலிக்குமதாய் இருக்கும்

என்னை என்று   வைகுந்தம் கோவில் கொண்ட ( திரு வாய் மொழி 8-6-5 ) என்றும் –
வலை வாய் கண் வளரும் (பெரிய திரு வந்தாதி -85 ) என்றும் –
ஒழிவற நிறைந்து நின்ற (திரு வாய் மொழி 3-2-7 ) என்றும் –
எம் மாண்பும் ஆனான் ( திரு வாய் மொழி 1-8-2 ) என்கிற தன்னுடைய  
பரத்வாதிகளை கழித்து ,கிருஷ்ணனான நிலையைக் காட்டுகிறான் ..

பால பிராயத்தே இவனைக் கைக் கொண்டு (பெரியாழ்வார் திரு மொழி 2-6-6 )
ஓக்க விளையாடி ஒரு படுக்கையிலே கிடந்து ஓர் ஆஸனத்திலே கால் மேல் கால் ஏறிட்டு இருந்து
ஓர் கலத்திலே உண்டு ,காட்டுக்கு துணையாக கார்ய விசாரங்களைப் பண்ணி
ஆபத்துக்களிலே உதவி நன்மைகளைச் சிந்தித்து மன்னகலம் கூறிடுவான் (பெரிய திருமொழி 11-5-7)
ஓலை கட்டி தூது சென்று ஊர் ஓன்று வேண்டி பெறாத உரோடத்தால் (பெரியாழ்வார் திரு மொழி 2-6-5 ),
பாரதம் கை செய்து , தேசம் அறிய ஓர் சாரதியாய் ( திரு வாய் மொழி 7-5-9 ) அவர்களையே   என்னும் படியான ,
இவனுடைய குற்றங்களைக் காணாக் கண்ணிட்டு நலமான வாத்சல்யத்துக்கு இறை ஆக்கி
சீரிய அர்த்தங்களை வெளி இட்டு
தேவர் தலை மன்னர் தாமே (நான்முகன் திரு வந்தாதி -16) என்னும் படியான ஸ்வாமித்வத்தை பின்
விஸ்வ ரூப முகத்தாலே காட்டி பாங்காக   முன் ஐவரோடு அன்பளாவி ( பெரிய திருமொழி 2-4-4 ) 
என்னும் படி சௌசீல்யம்   தோற்றும் படி புரை அறக் கலந்து
பக்கமே கண்டார் உள்ளார் (பெரியாழ்வார் திருமொழி 4-1-8 ) என்னும் படி சுலபனாய்
கார் ஒக்கும் மேனியைக் ( திரு வாய் மொழி 9-9-7 ) கண்ணுக்கு இலக்கு ஆக்கிக் கொண்டு போருகிறவன் —

சேனா தூளியாலே புழுதி படிந்த கோதார் கரும் குழலும் (பெரியாழ்வார் திரு மொழி 2-1-7 )
குறு வேர்ப்பு அரும்பின கோள் இழையாயுடை கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன் கோள் இழை வாள் முகமாய் ( திரு வாய் மொழி 7-7-8 )
குரு மா மணிப்   பூண் குலாவித் திகழும்   ( பெரியாழ்வார் திருமொழி 1-2-10 )
திரு   மார்வணிந்த வன மாலையும் ( நாய்ச்சியார் திரு மொழி 13-3 ) 
இடுக்கின மெச்சூது சங்கமும் (பெரியாழ்வார் திரு மொழி 2-1-1 )
அணி மிகு தாமரைக் கையாலே ( திரு வாய் மொழி 10-3-5) கோத்த சிறு வாய்க் கயிறும்
முடை கோலும் அர்த்த பிரகாசமான ஞான முத்திரையும் ,
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடையும் (பெரியாழ்வார் திரு மொழி 3-6-10 ) 
சிலம்பும் செறி கழலும் ( -மூன்றாம் திரு வந்தாதி -90 ) 
வெள்ளித் தளையும் (பெரியாழ்வார் திரு மொழி 1-2-3 )  சதங்கையும் (பெரியாழ்வார் திரு மொழி 1-2-20  )
கலந்து ஆர்ப்ப தேருக்குக் கீழே நாட்டின கனை கழலுமாய் (  திரு வாய் மொழி 3-6-10 )
நிற்கிற நிலையை -மாம் -என்று காட்டுகிறான் ..

ஏக சப்தார்த்தம் ..
புற பகை அறுத்துக் காட்டின உபாயத்துக்கு -ஏகம் – என்று உட்பகை அறுக்கிறது ..
இந்த உபாயத்தை சொல்லும் இடங்களிலே -களை கண் நீயே (பெரிய திரு மொழி 4-6-1 ) என்றும்
சரணே சரண் ( திரு வாய் மொழி 5-10-11 ) என்பதொரு நிர்பந்தம் உண்டு ஆகையாலே
என்னையே என்று -விரஜ -என்று சொல்லப் படுகிற   ஸ் வீகாரத்தில் உபாய புத்தியைத் துடைத்து உபாயத்தை ஓட வைக்கிறது ..

அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் (திரு வாய் மொழி 9-3-2 ) என்றும்
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் (மூன்றாம் திரு வந்தாதி -51 ) என்னும் படி
ஒன்றிலும் ஒரு சகாயம் பொறாதே -வேறு ஒன்றை காணில் சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம்   போலே
தன்னைக் கொண்டு நழுவும் படி இறே   உபாயத்தின் சுணை உடைமை ..
அதுவும் அவனது இன் அருளே -என்று இத்தலையில் நினைவுக்கும் அடி அவன் ஆகையாலே
நீ என்னைக் கைக்   கொண்ட பின் ( பெரிய திருமொழி 5-4-2 ) என்னும் படியான
அவனுடைய ஸ்வீகாரம் ஒழிய தன் நினைவாலே பெற இருக்கை ….
என் நினைந்து இருந்தாய் (பெரிய திரு மொழி 2-7-1 ) என்கிற அதிகாரிக்கு கொத்தை இறே ..
விட்டோம் பற்றினோம்   விடுவித்து பற்று விக்கப் பெற்றோம் என்கிற நினை
வுகளும் உபாயத்துக்கு விலக்கு இறே –

சரண -சப்தார்த்தம் ..
சரணம் -என்று பற்றும் படியைச் சொல்லுகிறது ..
சரணம் -உபாயமாக ..இதுக்கு பல பொருள்களும் உண்டே ஆகிலும் இவ் விடத்தில் -விரோதியைக் கழித்து பலத்தைத் தரும்
உபாயத்தைக் காட்டக் கடவது ..
மாம் ஏகம் சரணம் -என்கையாலே உபேயமே உபாயம் என்னும் இடம் தோற்றும் ..

விரஜ – சப்தார்த்தம் .. விரஜ -என்று ஸ்வீ காரத்தைச் சொல்லுகிறது ..
விரஜ -அடை ..புத்தியாலே அத்யவசி   என்ற படி ..
என் மனத்து அகத்தே   திறம்பாமல் கொண்டேன் (பெரிய திரு மொழி 6-3-2 ) என்கிறபடியே
இவ் உபாயத்துக்கு   இவன் செய்ய வேண்டியது நெஞ்சாலே துணிகை இறே ..

பூர்வ வார்த்த அர்த்த ஸங்க்ரஹம்..
ஆக முற்கூற்றால் –
தவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி 3-2-1 ) -என்றும் –
சிந்திப்பே அமையும் ( திரு வாய் மொழி 9-1-7 )-என்கிற படியே உன் தலையால் உள்ள வற்றை உதறி என்னையே தஞ்சமாக நினை ..
விரகு தலையரைப் போலே அலமாவாதே மாணிக்கம் பார்ப்பாரைப் போல உன் கண்ணை கூர்க்க விட்டு இரு ..
பதர் கூட்டை விட்டு பர்வதத்தைப் பற்று வாரைப் போல -அசேதன கிரியா -கலாபங்களை விட்டு –
தேர் முன் நின்று காக்கிற , கரு மாணிக்க மா மலை யான தம்மைப் பற்று என்று
அதிகாரி தொழிலை சொன்னான் ஆயிற்று ..

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading