திருவாய் மொழி –அவதாரிகை தொகுப்புக்கள் –1-1–7-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

ஆறாயிரப்படி
கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்னும் இடத்தை சாமா நாதி கரண்யத்தாலே சொல்லிற்று –
இப்படி ஸ்ருதி ப்ரசித்தனாகிற சர்வேஸ்வரன் ஆகிறான் ப்ரஹ்மாவாக அடுக்கும் ஜகத் ஸ்ருஷ்ட்டி ஷமன் ஆகையாலே என்றாதல் –
ருத்ரனாக அடுக்கும் சம்ஹார ஷமன் ஆகையாலே என்றாதல் சொல்லுகிற குத்ருஷ்டிகளை நிராகரிக்கிறது –

ஒன்பதினாயிரப்படி–
ஏழாம் பாட்டில் -கீழ் மூன்று பாட்டிலாக –
சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்று சாமா நாதி கரண்யத்தாலும்–வையதி கரண்யத்தாலும் பேசி
அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனமான ஜகத் -ஈச்வரகளுக்கு உண்டான சரீர சரீரி பாவ சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
ஜகத்தின் உடைய ஸ்வரூப ஸ்திதி த்யாதிகள் பகவத் அதீனம் ஆகையால் இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்கிறது என்றும் சொல்வர்-

பன்னீராயிரப்படி-
அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார் –

ஈடு —
கீழே -4/6-சாமா நாதி கரண்யம் சொன்ன இது பாவி பிரதி சந்தான நியாயத்தாலேயாய் –அத்தாலே பலித்த சம்பந்தம் சரீராத்ம பாவம் என்கிறார் ஆதல்
அன்றிக்கே
கீழே சாமா நாதி கரண்யத்தாலும்-வையதி கரண்யத்தாலும் சொன்னார் –அப்படி சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் ஆதல்

அபேத சுருதி -சாமா நாதி கரண்யம் -தத் த்வம் அஸி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –நாம் -நின்றவர் –ஆமவையாய் நின்ற அவரே
பேத சுருதி -வையதி கரண்யம் -போக்தா போக்யம் ப்ரேரிதா–ஷரம் அஷரம் -நித்யோ நித்யானம் -பதிம் விச்வச்ய –நினைவரியன் -வேறே வேறே
கடக சுருதி -சரீர ஆத்மா பாவம் என்பதால் ஓன்று –பேத ஏவச -ஆறு வார்த்தைகளில் ஓன்று -தத்வங்கள் மூன்று தான் –
ஒன்றே என்னில் ஒன்றேயாம் -பல வென்று உரைக்கில் பலவேயாம் –
அத்யாகாரம் -சொல்லைத் தவிர்த்து அப்படி –சாமா நாதி கரண்யத்தால் சொன்ன ஐக்யத்துக்கும்-—
வையதி கரண்யத்தால் சொன்ன பேதத்துக்கும் நிபந்தனம் சரீராத்மா பாவம்
ஆதௌ பேத சுருதினாம் -நடதூர் அம்மாள் -தத்வ சாரம் -இந்த கருத்தையே அருளிச் செய்கிறார் -லஷ்மணாசார்யார் இளையாழ்வார் -என்கிறார்

அநேன ஜீவே நாத்ம நா நு பிரவேச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -என்கிறபடியே
த்ரிவ்ருத்க்ருதமான அசித்திலே ஜீவத்வாரா அநு பிரவேசித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் உண்டாம்படி
பண்ணி இவை-தான் -என்னலாம் படி இருந்தால் -ம்ருதாத்மகோ கட -என்னும்படி இருக்கை யன்றிக்கே
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா நாம் -என்கிறபடி-சர்வேஷாமாத்மாவாய் -இவற்றை நியமிக்கும் இடத்தில்
இந்த சரீரத்துக்கு இந்த ஆத்மா தாரகனாய் நியாமகனாய் சேஷியாய் இருக்கிறாப் போலே
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் என்கிறபடியே –
தான் இரண்டுக்கும் தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் -நின்று நடத்திக் கொண்டு போரும் என்று கீழ்ச் சொன்ன
சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் –

பஹூஸ்யாம் -பலவாக ஆகப் போகிறேன் வ்யஷ்டி சிருஷ்டி சங்கல்ப்பம் -அத்வாரகம் –
ப்ரஹ்மமே மாறி -சமஷ்டி சிருஷ்டி -பிரஜாயேய-ஒரு சிறு பகுதி பிரகிருதி -இத்யாதி
ஹந்த –அநேன ஜீவேன -ஆத்மாநா -அனுப்ரவேச்ய -நாம ரூப -வியாகரவாணி –
கரணே த்ரிருதீயா கத்தியால் திருத்தி –ஜீவனால் புகுகிறேன் -ஜீவன் கருவி இல்லை –
ஜீவனை சரீரமாக கொண்டு நான் புகுகிறேன் கர்த்தரு த்ரிருதீயா -ஸ்ருஷ்டிக்கும் பொழுதே அந்தர்யாமி -தனியாக ஸ்திதி இல்லையே –
கத்தியால் நிறுத்தினேன் கரணே மூன்றாம் வேற்றுமை -ஜீவனால் புகுகிறேன் -அசேதனத்துக்குள் –
கருவி ஜீவன் இல்லை -கரணே த்ருதியா இல்லை -ஜீவனை சத்வாராகக் கொண்டு நான் புகுகிறேன் -சத்வாரக அனு பிரவேசம் -என்றவாறு –
புகுவதும் சத்வாரகம் -அத்வாரகம் இரண்டு வகை ––
மகான் -அஹங்காரம் -நேரே புகுகிறார் -மற்றவற்றுள் ஜீவனே -ஜீவனை சரீரமாகக் கொண்டு புகுகிறேன் -என்றவாறு
24 தத்வங்கள் -பஞ்சீ கரணம் -செய்து – -தேஜோபன்னங்கள் -தேஜஸ் அப்பு பிரத்வி -த்ரிவிக்ரணம் –
அண்டகடாகம் இமையோர் வாழ் தனி முட்டை –மகிமையில் நின்று ஸ்ருஷ்டிகிறார் –
சத்வாரக -இங்கும் ப்ரஹ்மமே மாறி -பிரமனை இடையில் கொண்டு சிருஷ்டி -வியஷ்டி சிருஷ்டி -அந்தராத்மதயா நின்று சக்தி கொடுக்க வேண்டுமே –

வ்ருஷத்தில் தேவதத்தன் நின்றான் என்றால் அங்கே சரீராத்மா பாவம் இல்லை-விட்டு பிரிக்க முடியும் இங்கு –
ஜாதி குணங்கள் வ்யக்தியிலே கிடந்தது என்றால் அங்கு சரீராத்மா பாவம் இல்லை-
விசிஷ்டத்திலே இறே சரீராத்மா பாவம் கொள்ளலாவது
1-அப்ருதக் சித்த விசேஷணமாகவும் –2-தாரகமாயும் -3–நியந்தாவாயும் –4-சேஷியாகவும் இருந்தால் தான்
சரீராத்மா பாவம் வரும் என்றவாறு –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading