சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-
ஆறாயிரப்படி
இப்படி வேதாவலம்பி குத்ருஷ்டிகளை நிராகரித்து பிரமாணமும் இல்லை ப்ரமேயமும் இல்லை சர்வமும் ஸூந்யம் –
ஆகையாலே வேதமும் வேத வேத்யனான ஈஸ்வரனும் அவனுடைய ஐஸ்வர்யமான ஜகத்தும் இல்லை என்கிற ஸூந்யவாதியை நிராகரிக்கிறது –
ஒன்பதினாயிரப்படி–
எட்டாம் பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான
ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்-
பன்னீராயிரப்படி-
அநந்தரம் வ்யஷ்டி ஸ்ரஷ்ட்ரு சம்ஹர்த்தாக்களான ப்ரஹ்ம ருத்ர்களும் தத் அதீனர் என்கிறார் –
இருபத்து நாலாயிரப்படி-
எட்டாம் பாட்டில் – இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான
ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்
ஈடு –
சுருதி சித்தன் அவனே -என்றும்
சர்வ சரீரியாய் நிற்கிறான் அவனே என்றும் -சொல்லா நின்றீர்
அல்லாதாரும் ஒரோ கார்யங்களில் அதிகரித்து -அவையும் நடத்தி யன்றோ போருகிறது –
ப்ரஹ்மா சிருஷ்டிக்கு கடவனாய் -ருத்ரன் சம்ஹாரத்துக்கு கடவனாய் அன்றோ போருகிறது –
இவற்றை ஒரு ஒரு வ்யக்தியிலே ஏறிட்டால்-நீர் பஷ பாதத்தால் சொன்னீர் ஆகீரோ என்ன –
ஒரு வ்யக்தியில் பஷ பாதத்தாலே சொல்லுகிறேன் அல்லேன் -பிரமாண கதிகளை ஆராய்ந்தால் –
அவை அவர்கள் பக்கலிலே கிடவாமையாலே சொல்லுகிறேன் -என்கிறார் –
சமஷ்டி சிருஷ்டிக்கு பின் வியஷ்டி சிருஷ்டி பண்ணும் பிரமனும் ருத்ரனும் இவன் அதீனம்
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply