திருவாய் மொழி –அவதாரிகை தொகுப்புக்கள் –1-1–10-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

ஆறாயிரப்படி
லீலா உபகரண போக உபகரண உபயவித விபூதி விசிஷ்டனான எம்பெருமானை ப்ரதிபாதிக்கிறது

ஒன்பதினாயிரப்படி–
பத்தாம் பாட்டில் – கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் –

பன்னீராயிரப்படி-
அநந்தரம் கீழ்ச் சொன்ன வியாப்தியினுடைய ஸுகர்யத்தை அருளிச் செய்கிறார் –

இருபத்து நாலாயிரப்படி-
பத்தாம் பாட்டில் -கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது-

ஈடு —
ஜலத்தை சரீரதயா சேஷமாக உடையனாய் -எங்கும் வியாபித்து -தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் இருக்கும் என்று கீழே சொன்னார் –
இப்படி வியாபித்து நின்றால்-அசித் சம்வர்க்கத்தாலே சேதனனுக்கு ஒரு சங்கோசம் பிறவாது நின்றது இ றே
அப்படியே அவனுக்கும் இவற்றோட்டை சம்வர்க்கத்தாலே சங்கோசம் பிறக்குமோ என்னில் -அது செய்யாது
அசங்குசிதமாக வியாபித்து நிற்கும் என்று வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் –
ஆத்மாவுக்கு -ஸ்வாபவ அந்யதா பாவம் என்றபடி -ஜீவ பரமாத்மா சாம்யம் -சாதர்மம் -சங்கோச ரூப விவஷிதம்
தர்ம பூத ஞானம் தான் சங்கோசம் -அடையும் –
ஆத்மாவுக்கு ஸ்வரூப சங்கோசம் இல்லை
வியாப்தி -பூர்த்தி சுருங்காமல் வியாப்தி – -வியாப்தி சௌகர்யம் -மூன்றும் அருளிச் செய்கிறார் –

சிறியதில் இருந்து பெரியது ஆகுமா -பெரியதில் இருந்து சிறியது உண்டாகுமா -ப்ரஹ்மம்-விபு -அன்றோ –
ஒளி உள்ளே வருவதை ஒளி தடுக்காதே -த்ரவ்யத்வ ஆகாரம் தான் தடுக்கும் –
த்ரவ்யமாகவும் ஞானமாகவும் உள்ளதால் -சங்கோசம் இல்லாமல் உள்ளே செல்லும் –
கீழ் சொன்ன வியாப்தியை -விஸ்தரிக்கிறார்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading