திருவாய் மொழி –அவதாரிகை தொகுப்புக்கள் –1-1–9-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

ஆறாயிரப்படி
சமுத்திர ஜல பரமாணுக்களிலும் ப்ருத்வ்யந்தரிஷாதி லோகாந்தர வர்த்திகளாய் அதி ஸூஷ்மமாய் இருந்த அசித் வஸ்துக்களிலும் வியாபித்து
அவற்றுன் உள்ளே பிரகாசிக்கிற சித் வஸ்துக்களிலும் ஸ்தூலமான அண்டத்தில் வியாபித்தால் போலே அநாயாசத்தாலே அசங்குசிதனாய்
அந்யைரத்ருஷ்டனாய்க் கொண்டு ஜகத் சம்ஹர்த்தாவுமாய்
ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது ஏழு ஏன் மனனே -என்கிறார் –

ஒன்பதினாயிரப்படி–
ஒன்பதாம் பாட்டில்- இப்படி பிரமாணமும் பிரமேயமும் ஒருபடி உளவாகக் கொண்டு ஈஸ்வர ஸ்வரூபத்திலும்-ஈஸ்வர விசேஷணத்திலும்
விபிரதிபத்தி பண்ணின வாதிகளை எல்லாம் நிராகரித்து
பிரமாணமும் இல்லை பிரமேயமும் இல்லை -சர்வமும் சூன்யம் -ஆதலால் வேதமும் இல்லை -வேத ப்ரமேயமாயும் யுள்ள ஈஸ்வரனும்
அவனுடைய விபூதியையும் உள்ள ஜகத்தும் இல்லை -என்கிற சூன்யவாதியை நிராகரிக்கிறது-

பன்னீராயிரப்படி-
அநந்தரம் ஈஸ்வர தத்துவத்தை இசையாதே வேத பாஹ்யரில் பிரதம கண்யராய்-சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார் —

இருபத்து நாலாயிரப்படி-
ஒரு படியாலே பிரமாண பிரமேயங்களைக் கொண்டு ஈஸ்வர ஸ்வரூபத்திலும் ஈஸ்வர விசேஷணத்திலும்
விப்ரதிபத்தி பண்ணினவர்களை நிராகரித்தது கீழ் –
ஒன்பதாம் பாட்டில் பிரமாண பிரமேயங்கள் இரண்டும் இல்லை என்கிற சூன்யவாதியை நிராகரிக்கிறது
சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –

ஈடு
ஸூந்யவாதியை நிரசிக்கிறார் -நிரசிக்கிறபடி தான் என் என்னில் பாஷ்யத்தில் ஸூந்யவாதியை நிரசித்த க்ரமத்திலே –சர்வதா அனுபபத்தே ச –
இவ்வாழ்வார் தாம் அடியாக பாஷ்யகாரர்க்கு அவனை நிரசிக்கலாம் -இது கொண்டு சூத்திர வாக்கியம் ஒருங்க விடுவர் -ஸ்ரீ பாஷ்யகாரர் –
இவர் தாம் அவனை நிரசிக்கைக்கு அடி என் என்னில் அதுவும் இவ்வாழ்வார் பக்கலிலே உண்டு
புறம்பே சிலர் ப்ரஹ்மாதிகள் பக்கலிலே ஈச்வரத்வ பிரதிபத்தியைப் பண்ணி -பிரமாணங்களையும் அதுக்கு ஈடாக நியமித்துக் கொண்டு
வந்து தோற்ற தாம் அங்கீ கரித்தவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும்
ஜகத் அவனுக்கு சரீரதயா சேஷம் என்றும்
தத் பிரதிபாதிக பிரமாணம் வேதம் என்றும்
தம்முடைய மதத்தை உபன்யாசித்து நின்றார் கீழ் –
இவை இத்தனையும் இல்லை என்னும் போது-பூர்வ பஷமாக இவற்றை அங்கீ கரித்து-அநு பாஷித்து கழிக்க வேணும் இறே
அதில் இவற்றை அங்கீ கரித்து அநு பாஷித்து அவனால் இல்லை என்னப் போகாது
முதலிலே ஸூந்யம் என்னில் சர்வ ஸூந்யவாதம் சித்தியாது -இனி உன்னைக் கேட்போம் –
நீ தான் ஈஸ்வரன் உளன் என்கிற சொல்லாலே அவன் இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா
இல்லை என்கிற சொல்லாலே இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா -என்ன –
இங்கன் விகல்பிக்கைக்கு கருத்து என் -என்ன -உளன் என்கிற சொல்லாலே சொன்னால் உனக்கு அபிமதமான அபாவம் சித்தியாதோபாதி
இல்லை என்கிற சொல்லாலே உனக்கு அநபிமாதார்த்தமே காண் சித்திப்பது –
இங்கே உள்ளது இப்போது உள்ளது இப்படியாக உள்ளது -பாவம்
இங்கே இல்லை இப்போது இல்லை இப்படியாக இல்லை -அபாவம் என்றபடி
ஆனபின்பு நீ இல்லை என்கிற சொல் கொண்டே அவன் உண்மையை சாதிப்பான்
லோகத்தில் பாவ அபாவ சப்தங்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம்
அப்படி கொள்ளில் நீ நினைக்கிற அர்த்தம் உன்னால் சாதிக்கப் போகாது –
அங்கனே கொள்ளாயாகில் வாதம் தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை – முயல் கொம்பு இல்லை போலே நிருபாதிக நிஷேதம் செய்தாயாகில்
நிஷேதிக்கிற வசனமும் இல்லை என்றதாகுமே –தெள்ளியதாம் நம்பிள்ளை செப்பு நெறி -வாசித்தாலே புரிந்து கொள்ளலாம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading