திருவாய் மொழி –அவதாரிகை தொகுப்புக்கள் –1-1–3-

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

ஆறாயிரப்படி
இப்படி ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகத் ஐஸ்வர்யம் சொல்லுகிறது –

ஒன்பதினாயிரப்படி–
மூன்றாம் பாட்டில் முதல் பாட்டில் சொன்ன -நித்ய விபூதி உக்தனான எம்பெருமானுக்கு லீலார்த்தமான ஜகத் விபூதி யோகத்தை சொல்லுகிறது
இத் திருவாய் மொழியில் -சேஷித்த பாட்டுக்களால் இம் மூன்றாம் பாட்டில் பொருளே விஸ்தரிக்கப் படுகிறது-

பன்னீராயிரப்படி-
அநந்தரம் வஸ்து பரிச்சேத ராஹித்யத்துக்கும் தேச பரிச்சேத ராஹித்யத்துக்கும் உப பாதகமான லீலா விபூதி யோகத்தை அருளிச் செய்கிறார் –

இருபத்து நாலாயிரப்படி-
முதல் பாட்டில் சொன்ன -நித்ய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு லீலார்த்தமான ஜகத் விபூதி யோகம் சொல்லுகிறது –

ஈடு —
முதல் பாட்டிலே –
பிரதான்யேன –கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வைலஷண்யத்தையும் அனுபவித்து –
மயர்வற மதி நலம் அருளினான் -தொழுது ஏழு -இரண்டையும் சொன்னாரே -இவை தம்மைப் பற்றி -அதனாலே அவை பிரதான்யம் என்கிறார் –
அவனைப் பேச பெற்ற நாக்கு என்று ஆழ்வார் அபிப்ராயத்தால் இவற்றை பிரதானம் என்கிறார் –
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சித் அசித் விலஷணமுமாய்-உபமான ரஹிதமுமாய் இருக்கும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார் –
அவற்றோடு சேர் ஓர் கோவையாய்த் தோற்றும் இ றே –ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவர்க்கு –
நோ பஜநம் ஸ்மரன் நிதம் சரீரம் என்னா நிற்கச் செய்தே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேச்யம் ஆகா நின்றது இறே முக்தனுக்கு-
சர்வம் க பஸ்யதி-என்றும் சுருதி சொல்லுமே –
இவருக்கும் கர்ம நிபந்தனமான ஆகாரம் கிடக்கச் செய்தே -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையால் ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார் –
ராஜாக்களுக்கு நாடு எங்கும் செல்லா நிற்கச் செய்தே மகிஷிகளும் தாங்களுமாக சில பூம் தோட்டங்களுக்கு குடிநீர் வார்த்து
-ஆக்குவது அழிப்பதுமாய் -லீலா ரசம் அனுபவிக்குமா போலே
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெரும்தேவுடை மூவுலகு -6-3-5- என்கிறபடியே
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாய் கடாஷித்த போது வுண்டாய்-இல்லையாகில் இல்லையாய்-
அவர்களுக்கு லீலா ரச விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading