திருவாய் மொழி –அவதாரிகை தொகுப்புக்கள் –1-1–4-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

ஆறாயிரப்படி
இனி இத்திருவாய்மொழி குறையும் இப்பாட்டை விஸ்தரிக்கிறது –

ஒன்பதினாயிரப்படி–
நாநா விதமான சொற்களாலே சொல்லப்படுகிற எல்லாப் பதார்த்தங்களின் உடைய
ஸ்வரூப ஸ்வ பாவம் பகவத் அதீநம் என்று சாமாநாதி கரண்யத்தாலே சொல்லுகிறது-

பன்னீராயிரப்படி-
அநந்தரம் மூன்று பாட்டுக்களாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப -ஸ்திதி -ப்ரவ்ருத்த்யாதிகள் பகவத் அதீனங்கள் என்கிறார் –
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தத் அதீனம் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார் –

இருபத்து நாலாயிரப்படி-
சகல சேதன அசேதனங்களையும் சங்க்ரஹித்து -அவற்றின் உடைய ஸ்வரூபம் பகவத் அதீநம் என்றதாயிற்று

ஈடு —
கீழில் பாட்டிலே -ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குணங்களோபாதி உத்தேச்யமாகத் தோற்றுகையாலே-லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
இனி மேலில் பாட்டுக்கள் எல்லாம் லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது –
நித்ய விபூதியில் வந்தால் -அவ்விபூதி பாவஜ்ஞமாய் -அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுமதாய் இருக்கும் –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -4-9-10–என்னும்படி யாய் இறே இருப்பது
கர்ம நிபந்தனமான அசித் சம்சர்க்கத்தோடே கூடி -ஈஸ்வர சங்கல்பத்தை பின் செல்லுமதாய் இருக்கும் இந்த விபூதி –
அந்த விபூதியில் வந்தால் அவ்விருப்பு கண்டு உகக்கும் அதுக்கு அவ்வருகு ஒன்றும் இல்லை –
அந்ய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்த்ர்யங்கள் நடையாடுகிறது இவ்விபூதியில் ஆகையாலே -இரண்டையும் தவிர்த்து –
பகவத் அதீநம் என்று சொல்ல வேண்டுவது இங்கேயாய் இருந்தது –

நீதி வானவர் -சேஷி சேஷ பாவம் அறிந்தவர் –
கீழ் பர உபதேச கர்ப்ப ஸ்வ அனுபவம் -எனன் உயிர் –
இது ஸ்வ அனுபவ கர்ப்ப பர உபதேசம் -விலகாமல் சரீரதையா சேஷங்கள் என்று உபதேசம் பிரதானம் –
இங்கு தாததீன்யம் புரியாமல் இருக்க -இங்கே –முதலில் உதாசீனன் அவன் -அனுமதி அப்புறம் -தூண்டியும் விடுவார் -நல்ல வழியில் -தீயதாக இருந்தால் உதாசீனர்
த்வம் மே -என்றால் அஹம் தே ஒத்துக் கொள்வார் அங்கே -அஹம் மே இங்கே

இனி ஒரு மூன்று பாட்டாலே -4/5/6-
இதினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் இருக்கும் என்று
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் சரீராத்மா பாவம் என்று -7-
குத்ருஷ்டிகளை நிரசித்து -8-
சூன்ய வாதியை நிரசித்து -9-
வ்யாப்தி சௌகர்யத்தைச் சொல்லி -10-
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் -11-
அதில் ஸ்வரூபம் அவன் அதீநம் என்றார் -இப்பாட்டில் -அது ஆகிறபடி -எங்கனே என்னில் –

சிருஷ்டி காலத்தில் வந்தவாறே இவற்றை உண்டாக்கி –ஜீவத்வாரா அனுப்ரவேசித்து -வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் உண்டாம் படி பண்ணியும்
இது அடங்கலும் அழிந்த வன்று சத்யவச்த பிரபை–நீர் பூத்த நெருப்பு- போலே தன பக்கலிலே ஸூஷ்ம ரூபேண கிடக்கும் படி ஏறிட்டுக் கொண்டு தரித்தும்
காரண தசையோடு கார்ய தசையோடு வாசி அற தன்னைப் பற்றி ஸ்வரூப ஸ்தித்யாதிகளாம் படி
இருக்கையாலே ஸ்வரூபம் அவன் அதீநம் என்கிறது –

சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ஆகாரம் ப்ரஹ்மம் -பிரளயம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ஆகாரம் ப்ரஹ்மம் -சிருஷ்டிக்கு பின்பு -நாமம் ரூபம் கொண்டவை
சிறிது அளவு திருமேனி மாறி -விஸ்வரூபம் -விச்வமே ரூபம் யாருக்கோ -பல பரிமாணங்கள் -முன்னால் நின்று வளர வில்லை –
காரண தசை பிரளயம் -ஆகாசாத் வாயு -ஆகாச சாரீரக ப்ரஹ்மம் -வாயுவை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் ஆகும்-

அதில் -லோகத்தில் சகல பதார்த்தங்களையும் தனித் தனியே சொல்லி
-இதனுடைய ஸ்வரூபம் அவனாலே -இதனுடைய ஸ்வரூபம் அதனாலே -என்னில் பணிப்படும் -பிரயாசை படும் -இறே ஜீவா அனந்த்யத்தாலே-
இனி பிரயோஜகத்தில் சொல்லிவிடும் அன்று பிரதிபத்திக்கு விஷயம் ஆகாது –
ஆகையாலே –தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்து அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீநம் -என்கிறார் –
பெண்பால் -3-ஆண்பால் -3-பலவின்பால் -3-ஒன்றன்பால் –
பூஜ்ய வாசி –1-
அழியக் கூடியவை -1-நன்மை தீமை -1-கால பேதம் -1- ஆக 7-என்பதால் நான்கு மூன்று வகையாகச் சேர்த்து என்கிறார்

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading