மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–
ஆறாயிரப்படி –
இந்த குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபத்தினுடைய ஹேய ப்ரத்ய நீகதயா கல்யாணை கதாநதயா உள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது —
ஒன்பதினாயிரப்படி–
இரண்டாம் பாட்டில்
அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்
ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆஸ்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபன க்ரமத்தாலே அனுபவிக்கிறார்-
பன்னீராயிரப்படி-
அநந்தரம் -யவன் என்று சொன்ன ஸ்வரூபத்தினுடைய ஸ்வேதர ஸமஸ்த வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –
இருபத்து நாலாயிரப்படி-
கீழ் யவன் என்று ப்ரஸ்துதமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை
அகில ஹேய ப்ரத்ய நீதையாலும்-கல்யாணைகதா நதையாலும்
சேதன அசேதன விலஷணமாய்-ஜ்ஞான ஆனந்தமே ஸ்வரூபமாய் இருக்கும் என்று சோபன க்ரமத்தாலே அனுபவிக்கிறார்
ஈடு
யதோ வா இமானி -இத்யாதி ஸ்ருதி பிரக்ரியையாலே –தைத்ரியம் -கார்ய ஆகாரமான ஜகத்தை பிடித்து -ஜகத் காரண வஸ்து உபாஸ்யம் -என்னுதல் –
அன்றிக்கே –
ஸ்வரூபத்தை முற்படச் சொல்லி -பின்னை விபூதியில் போருதல் செய்யாதே முற்படக் குணங்களிலே இழிவான் என் என்னில்
சர்வேஸ்வரன் தம்மை வசீகரித்தது குணங்களைக் காட்டி ஆகையாலே தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார் —யோகி வியாவ்ருத்தி ஆழ்வாருக்கு –
அக்குணங்கள் தான் ஸ்வரூபத்தைப் பற்றி யல்லது இராமையாலே -அவற்றுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை –
அவன் –என்று பிரசங்கித்தார் -முதல் பாட்டில் —அங்கு பிரஸ்துதமான-திவ்யாத்ம ஸ்வரூபம் –
ஹேய பிரத்ய நீகதையாலும் -கல்யாணகுணகதா நதையாலும் சேதன அசேதன விலஷணமாய் இருக்கும் என்று
அந்த ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் இப்பாட்டில் –
குணம் -ஸ்வரூபம் -விபூதி -இவர் அருளிச் செய்த வரிசை -அனுபவத்தின் படி –
வேதம் ஸ்வரூபம் சொல்லி -பாடம் படிக்கும் படி அது சொல்ல -காரண ரூபமான ப்ரஹ்மத்தை தெரிய வைக்க கார்யங்களை விளக்க வேதம்
புத்தி ஆரோஹன க்ரமம்–ஆத்மாவை விளக்கி ஸ்ரீ கீதை -போலே
ப்ரஹ்மவிதப் ஆப்யோனி -ஸ்வரூபம் –ஆகாசாத் வாயு –விபூதி -ஆனந்த மயன் -குணம் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply