ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

த்விரத சிகாரி சிம்னா சத்மவான் பத்ம யோனே
துரக சவனண் வேத்யாம் ஸ்யாமளா ஹவ்யவாஹா
கலச ஜலதி கன்யா வல்லரி கல்ப சாகி
கலயது குசலாம் நஹா கோபி காருண்ய ராசிஹா -1-

ஹஸ்தகிரியின் மேற்பகுதியில் உறைவிடம் உடையவனாய் ப்ரம்மாவின் அசுவமேத யாகத்தில்
கருமை நிறம் கொண்டவனாய் அக்நியாய் நிற்பவனே!
பாற்கடலில் தோன்றிய பிராட்டியோடு கல்பவிருக்ஷமாய் நிற்பவனே! எங்களுக்கு க்ஷேமத்தை அருள வேண்டும்.

த்விரத சிகாரி சிம்னா சத்மவான்-ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு மேலே -அத்தியூரான் கேசவனும் இவனே
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற மாயவன் நாராயணனும் இவனே
தொல் அத்திகிரி சுடர் மாதவனும் இவனே
அத்திமலை மேல் நின்ற புண்ணியன் கோவிந்தனும் இவனே
கார்கிரி மேல் நின்ற கற்பகம் விஷ்ணுவும் இவனே
வாரண வெற்பில் மழை முகில் மது சூதனனும் இவனே
கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் த்ரிவிக்ரமனும் இவனே
அத்திகிரி மேல் தன்னையே தந்திடும் வள்ளல் வாமனனும் இவனே
அத்தி மா மலை மேல் நின்ற அச்யுதன் ஸ்ரீ தரனும் இவனே
சிந்துராகலா சேவகன் பத்மநாபனும் இவனே
அத்தியூரான் மரகதம் தாமோதரனும் இவனே
கலியுகம் ஆதிசேஷனுக்கு பிரத்யக்ஷம் –
பத்ம யோனே துரக சவனண் வேத்யாம் ஸ்யாமளா ஹவ்யவாஹா –உத்தர வேதியில் புண்ய கோடி விமானத்துடன்
சகல மனுஷய நயன விஷயமாக பூர்ணாஹுதி பொழுது நீல மேக ஸ்யாமள வர்ணனாக உதித்து அருளிய வள்ளல் அன்றோ
கலச ஜலதி கன்யா வல்லரி கல்ப சாகி –கற்பக வ்ருக்ஷம் -மின்னல் கோடி –பெரும் தேவி தாயார் உடன் அன்றோ சேவை –
த்வயார்த்தம் -ஏக சேஷி சம்பந்தி -நித்ய அநபாயினி-ஸஹ தர்ம சாரிணி அன்றோ
கோபி காருண்ய ராசிஹா–சர்வ சேஷி -சர்வ ஆதாரம் -சர்வ நியாந்தா -/ பரம காருண்யம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -வாத்சல்யம் -க்ருதக்நத்வம் –
சர்வ ஞானத்தவம் -சர்வ சக்தித்வம் -ஸத்யஸங்கல்பம் -சத்யகாமத்வம் -அவாப்த ஸமஸ்த காமத்வம் -பிராப்தி -பரி பூர்ணன் -கோதிலா வள்ளல்
கலயது குசலாம் நஹா-சகல பல பிரதன்-சகல கல்யாண குண
திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் -ஸ்ரீ யபதி-

—————-

யஸ்ய அனுபவம் அதிக அந்துமசாக்னு வந்தோ
முக்யந்தி அபாங்குரா தியோ முனி ஸார்வ பவ்மா
தஸ்யைவ தே ஸ்துதிஷு சாஹசம் ஆஸ்னு வானா
ஷந்தவ்ய ஏஷ பவதா கரி சைல நாத -2-

பராசராதிகளாலும் ஸ்தோத்ரம் பண்ணி முடிக்க முடியாத உன்னை அல்பனான அடியேன் முயல்வது சாஹாஸ செயல் தானே
ஷாமா நிதியே – உனது அபராத ஷாமண குணம் அறிவேன் –

———-

ஞானான் அநாதி விஹிதான் அபராத வர்கான்
ஸ்வாமின் பயத் கிம் அபி வக்தும் அஹம் ந சக்த
அவ்யாஜ வத்ஸல ததா அபி நிரங்குசம் மாம்
வாத்சல்யம் ஏவ பவதோ முகாரி கரோதி -3-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி அன்றோ நீ —

———

கிம் வ்யாஹராமி வரத ஸ்துதயே கதம் வா
கத்யோதவத் ப்ரலகு சங்குசதா ப்ரகாசா
தன்மே சமர்ப்பயே மதிம் ச சரஸ்வதிம் ச
த்வம் அஞ்சஸ ஸ்துதி பதைர்யதஹம் திநோமி–4-

சர்வ பல பிரதன் அன்றோ -மதியையும் வாக்கையும் -ஆத்மீக
அங்குச பரிபூர்ண ஞானமும் கவித்துவமும் -நீயே அருள வேண்டும்
அடியேன் ஞானம் மின்மினி பூச்சி ஒளி போலவே -நீயோ ஸ்தவ பிரியன்

———–

மச் சக்தி மாத்ர ஞானேந கிமி ஹஸ்தி சக்யம்
சக்யேன வா தவ கரீச கிம் அஸ்தி ஸாத்யம்
யத் யஸ்தி சாதய மயா தத் அபி த்வயா வா
கிம் வா பவேத் பவதி கிஞ்சித நிஹமநே-5-

ஸ்வஸ்மை ஸ்வயமேவ காரிதவான் -உன் இச்சையே கார்ய கரமாகும் -இரக்கமே உபாயம் –

————

ஸ்தோத்ரம் மயா விரசிதம் த்வத் அதீன வாஸா
த்வத் ப்ரீதவே வரத யத் ததிதம் ந சித்ரம்
ஆவர்ஜயந்தி ஹ்ருதயம் கலு சிக்ஷ கானம்
மஞ்சுநீ பஞ்சர சகுந்த விஜல்பிதானி -6-

கூண்டுக் கிளியின் மழலைப் பேச்சு கற்ப்பித்து வைத்த பிரபுவின் மனத்தையே கவர்வது போலே அடியேனது ஸ்தோத்ரம்
ஸ்வ தத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் ந்யஸ்தி மாம் ஸ்வயம் –கர்த்ருத்வ மமதா பல-த்ரிவித தியாகம் –

வரதனான பேரளுளானே! எப்படி கூட்டில் அடைபட்டிருக்கும் கிளியின் மழலை சொற்களை கேட்டு
மடந்தை ஆனந்திப்பாளோ அப்படி உன் குழந்தையாகிய, உன்னாலேயே பேச்சு திறன் அடைந்த என் ஸ்தோத்திரம்
உனக்கு மழலை போல் தோன்றுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ?

———————-

இந்த ஸ்துதியில் ஆதிம ஸ்லோகம் -தவி ரத சிகரி ஸீம்நா -என்பது ஸ்வாமி திருக்கோவலூரில் எழுந்து அருளி இருந்து தேஹளீசனை மங்களா ஸாஸனம் செய்து அங்கு நின்றும் காஞ்சிக்கு எழுந்து அருளுகிறார்
வரும் வழியில் தேவராஜன் கல்யாண குண கீர்த்தனம் -பாதேயம் புண்டரீகாக்ஷ திருநாம சங்கீர்தன அம்ருதம் –
தான் உகந்த வூர் எல்லாம் தன் தாள் பாடி -என்னக் கடவது இறே
கோ அபி காருண்ய ராசி ந குசலம் கவயது -என்று பரோக்ஷ நிர்தேசமே இப்படிக் கூறக் காரணம் ஆகிறது
இரண்டாம் ஸ்லோகம் தொடங்கி அபரோக்ஷ நிர்த்தேசம் -ஆறாவது ஸ்லோகம் வரை உபோத்காதம்
ஸ்துதிக்க இழிந்த சாஹாசத்தை க்ஷமித்து அருள வேணும் -ஸ்துதிக்கைக்கு ஈடான ஞான சக்திகளைத் தந்து அருள வேணும்
அடியேனுடைய இந்த ஜல்பனத்தை ஸூக பாஷணமாகக் கொண்டு கடாக்ஷிக்கப் பிரார்திக்கிறார்

ஏழாவது ஸ்லோகம் தொடங்கி ஸ்துதி முகேந தத்வ ஹித புருஷார்த்தங்களை வெளியிடுகிறார் –

————–

யம் சஷூசாம் அவிஷயம் ஹயமேத யஜ்வ
த்ராஹி யஸா ஸுகரிதேந ததர்ச பரிணாம தஸ்தே
தம் த்வாம் கரீச காருண்ய பரிணாமாஸ்தே
பூதாநி ஹந்த நிகிலானி நிசாம்யந்தி -7-

ஸத்ய வ்ரத ஷேத்ரத்தில் சகல மனுஷ நயன விஷயமாக்கிக் கொண்டு -தன்னுடைய ஆராதனத்திலே ஸந்துஷ்டானாய்
ஆவிர் பூத ஸ்வரூபியாய் -ஹிதார்த்தமாக -சர்வ பிராணி சம்பூஜிதனாய்-சர்வ அபீஷ்ட பிரதனாய் –
சர்வ யஞ்ஞந சமாராதனாய் -நித்ய வாசம் பண்ணி அருளுகிறார்

அத்தகிரி பெருமாளே! புறக்கண்களுக்கு புலனாகாத உன்னை ப்ரம்மன் அசுவமேத யாகம் செய்து,
பெரிய புண்யத்திலால் கண்டானோ அத்தகைய உன்னை உன்னுடைய கருணையிலால்
ஸகல பிராணிகளும் காண்கின்றன! என்ன ஆச்சர்யம்.

கேவல கருணாதி ரேகத்தாலே- ஸகல மனுஷ நயன விஷயதாம் கதன் அன்றோ இவன் -பேர் அருளாளன் தானே –

————

ததத் பதைருபஹிதே அபி துரங்க மேதே
சக்ரதயோ வரத பூர்வம் அலாப்த பாகக
அத்யாக்க்ஷிதே மகபதவ் த்வயி சக்க்ஷு ஷைவ
ஹிரண்ய கர்ப்ப ஹவிஷாம் ரசம் அந்வ புவன் -8-

அஸ்வமேத யாக ஹவிஸை நீயே ஏற்றுக் கொண்டு யுனது திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தை முற்றூட்டாக
அன்றோ அனைத்து தேவர்களும் ஸாஷாத்தாக கண்டு அனுபவிக்கும் படி ஆவிர்பவித்து அருளினாய்

———

சர்க்க ஸ்திதி பிரளய விப்ரம நாதிகாயம்
சைலூஷவத் விவித வேஷ பரிக்ரஹம் த்வாம்
சம்பா வயந்தி ஹ்ருதயேந கரீச தன்யா
சம்சார வாரி நிதி சந்தரநைக போதம் -9-

லீலா விபூதியை உனது நாடக அரங்கம் -விவித வேஷ பரிக்ரஹமே ப்ரஹ்ம ருத்ராதிகள் –
விஷ்ணு போதம் ஒன்றே சம்சாரம் தாண்டுவிக்கும் –
பாக்ய சாலிகள் மட்டுமே இதற்காகவே நீ ஹ்ருதய கமல வாசியாக இருப்பதை அறிந்து உஜ்ஜீவிக்கிறார்கள் –

—————-

ப்ராப்தோ தயேஷு வரத த்வத் அநு பிரவேசாத்
பத்மாஸனாதிஷூ சிவதிஷூ கணசுகேஷூ
தன் மாத்ர தரஸன விலோபித சேமுஷிகா
ததாத்ம்ய மூடா மதயோ நிபந்தன் யதீரா –10-

உனது அநு பிரவேசத்தாலே ப்ரஹ்மாதி தேவ கணங்கள் தங்கள் தங்களுக்கு இட்ட கார்யங்களை செய்யும் ஆற்றல் பெறுகிறார்கள்-
இத்தை அறியாத மூடர்கள் தானே த்ரிவித ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரத்துக்கு மூவர் என்று தப்பாக அறிந்து சம்சாரத்திலே உழன்று போகிறார்கள்
இவர்களும் கர்ம வஸ்யர்கள் -மோக்ஷ பிரதன் நீ ஒருவனே என்று உணர்ந்த பரமை காந்திகளே –
நின்னையே தான் வேண்டி நிற்பனே அடியேனே-என்று இருப்பர்
ஆர்த்தி ஜிஜ்ஜாசூ அர்த்தார்த்தி மோக்ஷ ப்ராப்தர் -நான்கு வகை அதிகாரிகள் உண்டே –
ஞானா து ஆத்மைவ மே மதம் -என்பானே

—————–

மத்யே விரிஞ்சி சிவயோர் விஹித அவதாரா
க்யாதோ அஸி தத் சமதய ததிதம் ந சித்ரம்
மாயா வாசநே மகராதி சரீரினம் த்வம்
தேநேவ பஸ்யதி கரீச யதேஷ லோகா –11-

மத்ஸ்யாதி சரீரீ போலே அன்றோ ப்ரஹ்மா ருத்ராதிகளுக்குள்ளும் அந்தராத்மதயா இருந்தும்
ஸ்வயமேவ விஷ்ணுவாயும் திரு அவதாரங்கள்
உனது ஸுசீல்ய சீமா பூமியை அறியாத சம்சாரிகள் இழந்தே போகிறார்களே –

தேவாதிராஜனே! பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவில் அவதாரம் செய்த நீ அவர்களுக்கும் மேலாக அழைக்கப்படுகிறாய்.
இது ஒரு ஆச்சர்யம் இல்லை. உன் சங்கல்பத்தால் நீ பல அவதாரம் செய்ததை பக்தர்கள்
அந்த அவதாரமாகவே கொண்டாடுகிறார்கள்-உதாரணம்-மச்ச, கூர்மம்.

————-

ப்ரஹ்மேதி சங்கர இதீந்த்ர இதி ஸவாராதிதி
ஆத்மேதி ஸர்வமிதி சர்வ சர அசராத்மன்
ஹஸ்தீஸ சர்வ வச சாம வசனா சீமாம்
த்வாம் சர்வ காரணம் உசந்தி அநபாய வாகா –12-

சர்வ அந்தராத்மத்வம் -சர்வ காரணத்வம் -சர்வ சப்த வாச்யத்வம் -வாக்யத்வம் –
அனைத்தும் அநபாய வாக்கான வேதங்கள் கோஷிக்குமே

ஆஸாதி பேஷு கிரி ஸேஷு சதுர் முகேஷ் வபி
அவ்யாஹதா விதி நிஷேத மயி தவ ஜனா
ஹஸ்தீஸ நித்ய மனு பாலான லங்காநாப்யாம்
பும்ஸாம் சுப அசுப மயாநி பலானி ஸூதே –13-

விதி நிஷேத சாஸ்த்ர ஆஜ்ஜைப் படியே ப்ரஹ்மாதி களுடைய -க்ருத்ய கரணங்களும் அக்ருத்ய அகரணங்களும் –
நிக்ரஹத்துக்கு இலக்காகாமல் அனுக்ரஹத்துக்கு பாத்ரமாவதற்காகவே

த்ராதா ஆபாதி ஸ்திதி பதம் பரணம் பிரரோஹா
சாயா கரீச சரசாநி பலாநி ச த்வம்
சாகாகத த்ரிதச பிருந்தா சாகுந்த கானம்
கிம் நாம நாசி மஹதாம் நிகம துருமாநாம் –14-

பாந்தவன்- அநாத ரக்ஷகன் -ஆதாரங -நியாந்தா -பலமும் நீயே சர்வருக்கு சர்வத்துக்கும் –
பறவைகளுக்கு வ்ருக்ஷம் போலே அன்றோ -வேத வ்ருஷத்துக்கும் சர்வமும் நீயே
ஜகதாதாரனாக இருந்து வேதங்களையும் ரஷித்து ஸ்வரம் தப்பாமல் ஆச்சார்யர் சிஷ்யர் க்ரமங்களையும்-
அங்கங்களையும் உப அங்கங்களையும் உண்டாக்கி அருளுபவர் அன்றோ

சாமான்ய புத்தி ஜனகாஸ் ச ஸதாதி சப்தாத்
தத்வாந்தர ப்ரஹ்ம க்ருதாஸ் ச ஸிவாதி வாகா
நாராயணே த்வயி கரீச வஹந்தி அநந்யம்
அன்வர்த்த வ்ருத்தி பரி கல்பிதம் ஐக காந்தியம் -15-

சத் -ப்ரஹ்மம் -ஆத்மா -சிவா -ஜிரண்ய கர்ப்ப -இந்திரா -அனைத்து சப்தங்களும் நாராயணன் இடமே பர்யவசிக்கும்
மங்கள பரம் -ஐஸ்வர்ய பரம் -உபய விபூதி நாதத்வம் -ஆதி –
வேத ப்ரதிபாத்யன் இவனே -ஐக காந்தியம் -சர்வ சப்த வாச்யன் -சர்வ லோக சரண்யன்

சஞ்சிந்தயந்தி அகில ஹேய விபக்க்ஷ பூதம்
சந்தோதிதம் ஸமவதா ஹ்ருதயேந தன்யா
நித்யம் பரம் வரத சர்வகதம் ஸூ ஷூம்மம்
நிஷ் பந்த நந்தது மயம் பவதா ஸ்வரூபம் –16-

1-அகில ஹேய ப்ரத்ய நீகன்–கல்யாண யாக குண ஆகாரத்வம் –
2- சாந்தோதிகன் -சங்கல்பத்தாலே விபூதி நிர்வாஹகன்–நித்யோதிதன் பர வா ஸூ தேவன் -சாந்தோதிதன் -வ்யூஹ வாஸூ தேவன் –
3-நித்யன் 4–சர்வகதன் –5-பராத்பரன் ஸ்ரீ யபதி -ஒப்பார் மிக்கார் இலையாய தனி அப்பன் -மிதுனம் உத்தேச்யம் -6-சர்வ ஸூஷ்மம் —
7-நிஷ் பந்த நந்தது மயம்-நிரவதிக ஆனந்த மயன்-கொள்ளக் குறைவில்லா ஆராவமுதம் – –
இப்படிப்பட்ட ஏழு வித திவ்யாத்மா ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து அன்றோ சாத்விக அக்ரேஸர்கள் உபாசிக்கிறார்கள்
அகாரமும் -ஸ்ரீமத் -சப்தமும் -மாம் -ஏகம் -அஹம் –சர்வ ஆதாரத்வம் – -சத்யத்வம் -ஞானத்தவம் -அனந்தத்வம் –
நந்தா விளக்கே -அளத்தற்கு அரியாய்-உணர் முழு நலம் -சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் -அமலன் –

விஸ்வ அதிஸாயி ஸூக ரூப யத் ஆத்மகஸ் த்வம்
வ்யக்திம் கரீச கதயந்தி தத் ஆத்மிகாம் தே
யேநா திரோஹதி மதித் த்வத் உபாஸகாநாம்
ச கிம் த்வமேவ தவ வேதி விதாகர டோலாம் -17-

திவ்ய மங்கள விக்ரஹமும்-திவ்யாத்மா ஸ்வரூபம் போலே அன்றோ –
விஸ்வ அதிஸாயி ஸூக ரூப-நிரதிசய ஆராவமுதம் அன்றோ
தே வ்யக்திம் த்வ யத் ஆத்மகஸ் தத் ஆத்மிகாம் கதயந்தி -ஸ்ருதி வாக்கியம் –

மோஹ அந்தகார விநிவர்த்தன ஜாகரூகே
தோஷா திவா அபி நிர்வக்ரஹ மேத மநே
த்வ தேஜஸ் ஸி த்வி ரத சைலபதே விம்ர்ஷ்தே
ஸ்லாக்யேத சந்தமச பர்வ சஹஸ்ர பாநோவ் -18-

ஆதி அம் ஜோதி அனுபவம் -ஹஸ்திகிரி மேல் உள்ள தேஜஸ் அன்றோ -பகலோன் பகல் விளக்கு படும் படி அன்றோ உனது தேஜஸ்

ரூதஸ்ய சின் மயத்ய ஹ்ருதயே கரீச
ஸ்தம்ப அநு காரி பரிணாம விசேஷ பாஜா
ஸ்தாநேஷூ ஜக்ராதி சதுர்ஷ்வபி ஸாத்வந்த
சாக விபாக சதுரே சதுராத்மய-19-

விசாக யூபம்-வ்யூஹ மூர்த்தி – -உப வ்யூஹ மூர்த்திகள் –
கிழக்கு வ்யூஹ வாஸூ தேவன் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -கேசவ நாராயண மாதவன் –
தெற்கே சங்கர்ஷணன்-ஞானம் பலம் -சம்ஹார உபயுக்த குணங்கள் -சாஸ்த்ர ப்ரவசன உபயுக்த குணங்களும் ஆகும் -கோவிந்த விஷ்ணு மது ஸூதனன் –
மேற்கே ப்ரத்யும்னன்-ஐஸ்வர்யம் வீர்யம் -ஸ்ருஷ்டிக்கு உபயுக்த குணங்கள் -தத்வ உபதேசமும் -த்ரிவிக்ரமன் வாமனன் ஸ்ரீ தரன்
வடக்கே -அநிருத்தன் -சக்தி தேஜஸ் -பாலனத்துக்கு உபயுக்த குணங்கள் -ஹ்ருஷீகேசன் பத்ம நாபன் தாமோதரன்
ஜாக்ரத -ஸ்வப்னம் – ஸூ ஷூப்தி -அத்யாலசம் –துரியம் -நான்கும் உபாசன அவஸ்தைகள் போலே

நாகாகலேச நிகில உபநிஷான் மனிஷா
மஞ்சுஷிகா மரகதம் பரிசின்வதாம் த்வாம்
தன்வி ஹ்ருதி ஸ்புரதி கா அபி சிகா முனி நாம்
ஸுதா மனிவா நிப்ருதா நவ மேஹ கர்பா -20-

அந்தர்யாமி அனுபவம் இதுவும் அடுத்த ஸ்லோகமும் –
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே-
தஹராகாச புண்டரீகத்தில் ஸ்வ இதர விலக்ஷணன்-அநந்த -ஞான ஆனந்த -ஏக ஸ்வரூபன் –

——————

ஓவ்தன்வதே மதி சத்மநி பாசமாநே
ஸ்லாக்யே ச திவ்ய சதநே தமஸா பரஸ்மின்
அந்த காலே பரம் இதம் ஸூஷிரம் ஸூஷூஷ்மம்
ஜாதம் கரீச கதம் ஆதாரண ஆஸ்பதம் தே -21-

அப்ராக்ருத நித்ய விபூதி திரு மா மணி மண்டபம் -திருப் பாற் கடல் -ஸ்ரீ தாயார் திருவவதார ஸ்தானங்களை எல்லாம் விட்டு
கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும் புல் என்று ஒழியும் படி அன்றோ வாத்சல்யம் அடியாக மனத்துள்ளான்

பேராளபெருமானே! உனக்கு உறைவிடங்கள் பல உள்ளன. பாற்கடல் உள்ளது,
ஸ்ரீவைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை உனக்கு.
நீயோ மனித இதயமே மிக உயர்ந்ததாய் அதனுள் உறைகின்றாய்.
மிக இழிவான இந்த மனித உடலில் இதயத்தில் உறைந்து அவனை கடை தேற எவ்வளவு பாடு படுகிறாய்.
அதற்கு ஒரே காரணம் அவனிடம் நீ காட்டும் இரக்கம், அன்பு.

————

பாலாக்ரே தேர் வட பலாசா மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டலம் அப்ஹுது த்ரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வராஹம் ஆஸ்தி தவதோ வபுர் அத்புதம் தே -22-

ஆலிலை பாலகன் அத்புதம் -கோலா வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்டது அதி அத்புதம் –
ப்ரஹ்மாண்டம் அதி அல்பம் என்று காட்டி அருளிய அவதாரங்களை சேர்த்து அனுபவிக்கிறார் –

அருளாள பெருமானே! நீ சிறு குழந்தையாக ஆலிலை மேல் சயனித்து உன் வயிற்றில் சிறு பகுதியில்
ப்ரமாண்டம் அனைத்தையும் அடக்கிக்கொண்டாய். இது ஒரு பெரிய அற்புதம்.
நீ வராஹ அவதாரம் எடுத்த போது அந்த திருமேனி ப்ரஹ்மாண்டத்தில் அடங்கி இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று?
இது உன்னால் மட்டும் தான் முடியும். உன்னுடைய அற்புத திருவிளையாடல்களை என்னவென்று வர்ணிப்பது?

————

பக்தஸ்ய தானவ சிசோவ் பரிபாலனாய
பத்ராம் நரஸிம்ஹ குஹனாம் அதி ஜக்முஷா தே
ஸ்தம்பைக வர்ஜமதுநா அபி கரீச நூனம்
தரை லோக்யம் ஏதத் அகிலம் நரஸிம்ஹ கர்ப்பம் -23-

சகலத்திலும் அந்தராத்மா ஆனதே பக்த பிரகாலனது பரிபாலனத்துக்காகவே -என்கிறார் –

க்ராமன் ஜகத் கபட வாமனாதாம் உபேத்
த்ரேதா கரீச ச பவான் நிததே பதானி
அத்யபி ஜந்தவ இமே விமலேன யஸ்ய
பாதோத கேந விதர்த்தேன சிவ பவந்தி -24-

ஸ்ரீ பாத தீர்த்த மகிமையால் அன்றோ குரு பாதக ருத்ரன் சிவன் ஆனான் –

ஏனா கால ப்ரக்ருதிந ரிபு சம்ஷயார்த்தி
வாராம் நிதிம் வரத பூர்வம் அலங்காயஸ் த்வம்
தம் விஷய ஸேதும் அதுனா அபி சரீரவந்தா
சர்வே ஷடூரமி பஹுளாம் ஜலதிம் தரந்தி-25-

சேது தரிசன மாத்திரத்தாலே சம்சாரிக ஆர்ணவம் தாண்டி -ஷடூரமி -பசி தாகம் மனச்சோர்வு ஆசை மூப்பு மரணம் -இல்லாமல்
பெருமாள் இலங்கேஸ்வரனை நிரசித்தால் போலே -இந்திரியங்களை வென்று-பரம புருஷார்த்தம் அடைவோமே –

இதிஹம் கரீச துரபஹ்நவ திவ்ய பாவ்ய
ரூபான் விதஸ்ய விபுதாதி விபூதி சாம்யாத்
கேசித் விசித்ர சரிதான் பவத அவதாரான்
சத்யான் தயா பரவசாஸ்ய விதந்தி சந்த -26-

அவதார ரஹஸ்யம் அறிந்து அதே சரீராவசனத்தாலே பரம புருஷார்த்தம் பெறலாமே –
சுத்த சத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்தவன் அன்றோ –

ஸுசீல்ய பாவித திவ்ய பாவித கதநாசித்
சஞ்சதிதான் அபி குணான் வரத த்வதியான்
ப்ரத்யக்ஷ யந்தி அவிகலம் தவ சந்நிக்ருஷ்டா
பத்யு த்விஷம் இவ பயோத வ்ரதான் மயூகான்–27-

அருணனுக்கு தானே ஆதித்யனின் மஹிமை தெரியும் -உன் பரத்வம் அறிபவர் மஹ ரிஷிகள் –
ஸுசீல்யம் அன்றோ நீசரான நம் போல்வார் பற்றும் படி –
அம்மான் ஆழிப் பிரான் எவ்விடத்தான் -யான் யார் -ஆழ்வார் விலக யத்தனிக்க
இப்படி கூடாதவரையும் வென்று சேர்க்க -ஸுசீல்யம் காட்டி அன்றோ –

நித்யம் கரீச திமிராவில த்ரஷ்டய அபி
சித்தாஞ்சநேந பவதைவ விபூஷிதாக்க்ஷ
பஸ்யந்தி உபரி உபரி சஞ்சரதாமத்ர ஸ்யம்
மாயா நிகுத்தம் அநபாய மஹா நிதிம் த்வாம் -28-

அர்ச்சா மூர்த்தி யுடைய -திவ்ய மங்கள விக்ரஹம்-தானே சித்தாஞ்சனம் -உன்னுடைய திவ்யாத்மா ஸ்வரூபம் முழுவதும் அறிந்து கொள்ள –
மாயா பிரகிருதி திரோதானமாக இருந்தாலும் உன் புறப்பாடு அலகால் மஹா நீதியான உன்னையே நீயே காட்டி கொடுத்து அருளுகிறாய் –

சத்யா த்யஜந்தி வரத த்வயி பத்த பாவ
பைதாமகாதிஷு பதேஷ்வபி பாவா பந்தம்
கஸ்மை ஸ்வேதேத ஸூக்த சஞ்சாரன உத்ஸுகாய
காரா க்ருஹே கனக ஸ்ருங்கலயா அபி பந்தா -29-

திவ்ய மங்கள விக்ரஹ அனுபவம் பெற்றவர்கள் ப்ரஹ்ம லோகாதிகளையும் புல்லை போலே துச்சமாக அன்றோ தள்ளுவார்கள் –
பரமாத்மனி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மனி -என்று இருப்பவர் இங்கேயே முக்த பிராயர்-
புண்யமான கனக விலங்காலும் சம்சார சுழலில் கட்டுப் படாமல் ஸூக மயமாகவே உத்ஸாகமாக சஞ்சாரம் செய்வர் –

ஹஸ்தீஸ துக்க விஷ திக்த பல அநு பந்தினி
அப்ரஹ்ம கிதம பராஹதா ஸம்ப்ரயோகே
துஷ் கர்ம சஞ்சய வஸாத் துரதிக்ரமே நா
பிரதி அஸ்ரம் அஞ்சலி அசவ் தவ நிக்ரஹ அஸ்த்ரே–30-

அஞ்சலி பரமாம் முத்திரை அன்றோ -நிக்ரஹ சங்கல்பம் மாற்றி மோக்ஷ பர்யந்தம் அளிக்கச் செய்யுமே –

த்வத் பக்தி போதம் அவலம்பிதம் அக்ஷமாநாம்
பாரம் பரம் வரத கந்துமணீஸ் வரானாம்
ஸ்வைரம் லிலாங்கயிஷாதாம் பவ வாரி ராஸீம்
த்வாமேவ கந்தும் அஸி சேது அபாங்குரா த்வம் –31-

நீயே உன்னை பெற உபாயமாகிறாய் அபாங்குர-சேதுவை போலே சம்சார ஆர்ணவம் கடக்க –

ஆஸ்ராந்த சம்சரண கர்ம நிபீதிதஸ்ய
ப்ராந்த்ஸ்ய மே வரத போக மரீசிகாசு
ஜீவாது அஸ்து நிரவக்ரஹ மேதா மான
தேவ த்வதீய கருணாம்ருத த்ரஷ்ட்டி பாதா-32-

லோக ஸூகங்களான கானல் நீரிலே அல்லாடி திரியும் அடியேனுடைய தாப த்ரயங்கள் தீர
தேவரீருடைய கடாக்ஷ கருணாம்ருதமே ஒரே மருந்து -ஜீவாது –

அந்த ப்ரவிஷ்ய பகவான் அகிலஸ்ய ஐந்தோ
ஆ ஸேதுஷ தவ கரீச ப்ர்ஸாம் தவியான்
சத்யம் பவேயம் அதுனா அபி ச ஏவ பூயக
ஸ்வாபாவிக தவ தயா யதி ந அந்தராயா -33-

ஸ்வாபாவிக தயை அடியாகவே தானே மனத்துள்ளானை அறியலாம் –
அத்தை கொண்டாடுகிறார் இதில் –

அஞ்ஞானதா நிர்கமம் அநாகம வேதினாம் மாம்
அந்தம் ந கிஞ்சித் அவலம்பனம் ஆஸ்னு வானம்
எதாவாதிம் கமயிது பதாவிம் தயாளு
சேஷாத்வ லேசா நயனே க இவ அதி பார -34-

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்–இது வரை சதாசார்யர் மூலம் அஞ்ஞானம் போக்கி
யாதாத்ம்ய ஞானம் உண்டாக்கி பர ந்யாஸம் பண்ணுவித்து அருளினாய்
அழியாத அருள் ஆழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவி எல்லாம் அளப்பார் யாரே –
இன்னும் சேஷமாக உள்ள சரீர சம்பந்தத்தையும் ஒழித்து பரம புருஷார்த்தமாகிய
ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கொடுத்து அருளுவது உனக்கு பரமோ –

பூயா அபி ஹந்த வசதி யதி மே பவித்ரி
யாமயாசு துர் விஷக வ்ரத்திஷூ யாதனாஸு
சம்யக் பவிஷ்யதி ததா சரணாகதானாம்
சம்ரஷிதேதி பிருதம் வரத த்வதீயம் –35-

-சரணாகத ரக்ஷகனை அண்டி –ஆத்ம சமர்ப்பணம் செய்த பின் -சரணாகதன்-நிர்பயம் -நிர்பரம்–
அனுஷ்டான பூர்த்தி அடைந்து க்ருதக்ருத்யன் -ஆகிறான்
இனி அர்ச்சிராதி கதி வழிய பரம புருஷார்த்தம் -நித்ய -நிரவதிக ப்ரீதி காரித கைங்கர்யம் –
நமன் தமர்களுக்கு அஞ்ச வேண்டாமே –

பரே ஆகுலம் மஹதி துக்க பயோநிதவ் மாம்
பஸ்யன் கரீச யதி ஜோஷம் அவஸ்தித த்வம்
ஸ்பார ஈஷணே அபி மிஷதி த்வயி நிர் நிமேஷம்
பரே கரிஷ்யதி தயா தவ துர் நிவார -36-

தயா தேவி -காருண்யமே வடிவாக கொண்டவள் அன்றோ –
வாதார்ஹம் அபி காகுஸ்த கிருபயா பரிபாலயத் -மதியைவ தயையா -ஸ்ரீ கத்யத்தில் –
ஆகவே பாபிஷ்டனான அடியேனும் உன் நிக்ரஹத்துக்கு ஆளாகாமல் ரக்ஷிக்கப் பண்ணுவாள் என்ற மஹா விசுவாசம் உண்டே

கிம் வா கரீச க்ருபணே மயி ரக்ஷணீயே
தர்மாதி பாஹ்ய சஹகாரி கவேஷநேந
நான்வஸ்தி விஸ்வ பரிபாலன ஜாகரூக
சங்கல்ப ஏவ பவதோ நிபுநக ஸஹாய–37-

பக்தியில் அசக்தனான அடியேன் சரணாகதன் –உன் சங்கல்பம் அடியாகவே ரக்ஷணம் பண்ணி அருள இருக்க
தர்ம அனுஷ்டானம் – -நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம அனுஷ்டானங்களை உன் ஆஞ்ஞா ரூபமான சாஸ்திரம் படி
அனுஷ்ட்டித்து இருப்பதை பார்க்கவும் வேண்டுமோ
ஆகிஞ்சன்யன் -அநந்யகதியான பின்பு வேத சாஸ்திரம் படி உள்ளதை பார்த்து தான் அனுக்ரஹிக்க வேண்டுமோ என்றவாறு

நிர்யந்த்ரனாம் பரிணாமந்தி ந யாவதேதே
நிரந்தர துஷ்க்ருத பாவ துரித பிரரோஹா
தாவன்ன சேத் த்வம் உபகச்சசி சார்ங்க தன்வா
சக்யம் த்வயாபி ந ஹி வாரயிதும் கரீச -38-

நைச்யஅனுசந்தானம் -பல விளம்ப அஸஹிஷ்ணுத்வம் -காலஷேப அஷமத்வம்-நமக்காக த்வரித்து பல அபேக்ஷை –
உன் சார்ங்கம் ஒன்றையே விசுவாசித்து உள்ளேன் -என்கிறார் சீதா பிராட்டியைப் போலே –

யாவத் ந பஸ்யதி நிகாமம் அமர்ஷா மாம்
ப்ரூ பங்க பீஷண கரால முக க்ர்தாந்த
தாவத் பதந்து மயி தே பகவான் தயாளு
உந் நித்ர பத்ம கலிகா மதுரா கடாஷா-39-

பாபிஷ்டனான அடியேனுக்கு யம தர்ம ராஜன் பார்வைக்கு முன்னே உன் கருணா கடாக்ஷம் ரஷித்து அருள வேணும் –

பேரருளாளனே! நீயோ கருணை கடல். மற்ற எல்லா குணங்களும் அதற்கு துணை நிற்கின்றன.
ஆகையால் நீ நிச்சியம் என் வேண்டுகோளை நிறை செய்வாய். மரண காலத்தில் என் உயிரை கவர யமன் வருவான்.
அவனை பார்க்க எனக்கு பயம். அதை நினைத்தால் எப்போதே என் உடம்பு நடுங்குகிறது.
அவன் பார்வை என் மீது விழுவதற்கு முன்பே-உன் பார்வை என் மீது விழுந்து என்னை கண் குளிர கடாக்ஷிக்க வேண்டும்.
அப்போது என் பயம் நீங்கிவிடும், அவனும் என்பக்கம் வரமாட்டான்.

—————–

ச த்வம் ச ஏவ ரபஸோ பவ தவ்ப வாஹ்ய
சக்ரம் ததேவ சிததாரம் அஹம் ச பாலயா
சாதாரணே த்வயி கரீச ஸமஸ்த ஐந்தோ
மதங்க மாநுஷாபீத ந விசேஷ ஹேது -40-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு த்வரித்து வந்து ரஷித்து அருளினாயே-உன் கருணைக்கு குறையும் இன்றிக்கே இருக்க
உன் வாகனமான ஸ்ரீ கருடாழ்வான் உன்னை வேகமாக கூட்டி வரும் சக்தியும் குறைவற்று இருக்க
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானும் அப்படியே சித்தமாக இருக்க
அடியேனும் சம்சாரத்தில் உழன்று இருக்க -சர்வ ஐந்து ரக்ஷகனான நீ த்வரித்து வந்து ரஷிக்காததன் காரணம் என்னவோ –
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டனை தேனமர் சோலை மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே
திரு வைகாசி ப்ரஹ்மோத்சவம் மூன்றாம் திரு நாள் இன்றும் ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் ஸ்ரீ வரதன் காட்டி அருளுகிறார் –

அத்தகிரி அருளாளனே! அன்று கஜேந்திரனை காக்க கருடன் மேல் பறந்து வந்தாய்.
உன் கூரிய சக்ராயுதத்தால் முதலையின் வாயை பிளந்தாய்.
அதே பெருமாள் இன்று அருளாளனாக என் முன் நிற்கின்றாய்.
ஏன் இன்னும் என் சம்சார பந்தத்தில் உழலும் என்னை காக்க வரவில்லை.
ஒரு வேளை அது யானை, நான் மனுஷன் என்று பார்கிறாயோ! உனக்கு அந்த பேதமே கிடையாதே.
யானையை காத்த வரதனே என்னையும் காத்து அருளவேண்டும் –

—————

நிர்வா பயிஷ்யதி கத கரி சைல தாமன்
துர்வார கர்ம பரிபாக மஹாதவாக்னிம்
ப்ராசீன துக்கம் அபி மே சுக யன்னைவ த்வத்
பாதாரவிந்த பரிசார ரஸா ப்ரவாஹ -41-

பாப ஸமூஹம் அடியேனை கொளுத்துவதில் இருந்து தப்ப உன் திருவடிகளில் வழு இல்லா அடிமை செய்ய வேண்டுமே –
என்றே என்னை உன் ஏரார் கோலத் திருவடிக்கீழ் நின்று ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் –
திருவரங்கப் பெரு நகரில் தென்னீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்
கரு மணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே –

முக்த ஸ்வயம் ஸூக்ருத துஷ்க்ருதா ஸ்ருங்கலாப்யாம்
அர்ச்சிர் முகை அதிக்ரதை ஆதி வாஹிக அத்வா
ஸ்வ சந்த கிங்கரதயா பவத கரீச
ஸ்வாபாவிகம் பிரதி லபேய மஹாதிகாரம் -42-

இரு விலங்கு விடுத்து -இருந்த சிறை விடுத்து -ஓர் நாடியினால் கரு நிலங்கள் கடக்கும் —-
தம் திரு மாதுடனே தாம் தனி அரசாய் உறைகின்ற அந்தமில் பேரின்பத்தில் அடியவரோடு எமைச் சேர்த்து
முந்தி இழந்தன எல்லாம் முகிழ்க்கத் தந்து ஆட் கொள்ளும் அந்தமிலா அருளாழி அத்திகிரித் திரு மாலே

த்வம் சேத் ப்ரஸீதசி தவாம்ஸி சமீபதஸ் சேத்
த்வயாஸ்தி பக்தி அநக கரீசைல நாத
சம்ஸ்ர்ஜயதே யதி ச தாஸ ஜன த்வதீய
சம்சார ஏஷ பகவான் அபவர்க ஏவ –43-

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
இச்சுவை தவிர யான் போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
த்வம் சேத் ப்ரஸீதசி-உனது அனுக்ரஹ சங்கல்பமும் –தவாம்ஸி சமீபதஸ் சேத் -உன்னை விட்டு பிரியாத நித்ய வாசமும் –
த்வயாஸ்தி பக்தி அநக -வழு விலா அடிமை செய்யும் படி நீ கடாக்ஷித்து அருளின பின்பும்
சம்ஸ்ர்ஜயதே யதி ச தாஸ ஜன த்வதீய -உன் அடியார் குளங்கள் உடன் கொடியே இறுக்கப் பெற்ற பின்பும்
சம்சார ஏஷ பகவான் அபவர்க ஏவ —சம்சாரமே பரமபதம் ஆகுமே நாமங்களுடைய நம்பி –
அத்திகிரி பேர் அருளாளன் கிருபையால் இங்கேயே அடியார்கள் உடன் கூடி
கைங்கர்ய அனுபவம் பெறலாய் இருக்க மற்று ஓன்று வேண்டுவனோ -முக்த அனுபவம் இஹ தாஸ்யதி மே முகுந்தா –

—————

ஆஹுயமானம் அநபாய விபூதி காமை
ஆலோக லுப்தா ஜெகதாந்த்யம் அநுஸ்மரேயம்
ஆலோஹித அம்ஸூகம் அநாகுல ஹேதி ஜாலம்
ஹிரண்ய கர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம்-44-

விஷ்ணு சிந்தனம் மனசா ஸ்நானம் -ஆஹுயமானம் அநபாய விபூதி காமை –மோக்ஷ பிரதன் என்றும் –
ஆலோக லுப்தா ஜெகதாந்த்யம் அநுஸ்மரேயம் –அஞ்ஞானாதிகளை போக்கி அருளுபவர் என்றும்
ஆலோஹித அம்ஸூகம் –திருப் பீதாம்பரம் தரித்தவன் என்றும்
அநாகுல ஹேதி ஜாலம் –திவ்யாயுதங்களை சதா தரித்து ரஷிப்பவன் என்றும்
ஹிரண்ய கர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம் -அஸ்வமேத யாகத்தில் தேவரீர் பரிமள வாசிதா வதன அரவிந்த வனம் போலே
திருப் பீதாம்பரம் திவ்ய ஆயுதங்கள் உடன் ஆவிர்பவித்ததை -நித்தியமாக நினைந்தே கால ஷேபம்-

அருளாள பெருமானே! பிரமன் கெய்த அசுவமேத யாகத்தில் அவன் தந்த ஹவிஸ்ஸை அமுது செய்தாய்-
அப்படி செய்து யாக குண்டத்தில் அக்னி போல் காட்சி தந்தாய்.
எந்நாளும் அழியாத மோட்சத்தை விரும்புபவர்கள் உன்னிடம் சரணாகதி அடைந்து ஆத்மாவை சமர்ப்பிவிப்பார்கள்.
நீ உன் கடாக்ஷத்தால் உலகில் இருளை போக்குகின்றாய்.அக்னிபோல் செம்மை நிறமாக காணுகின்றாய்.
உன் திருவாயுதங்களோ மிக சாந்தமாக இருக்கின்றது.
இப்படி அக்னி போல் உன்னை நான் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பேன்.

——————–

பூயோ பூய புலக நிசிதை அங்ககை ஏத மான
ஸ்தூல ஸ்தூலான் நயன முகுலை பிப்ரதோ பாஷ்ப பிந்தூன்
தன்யா கேசித் வரத பாவத சமஸ்தானம் பூஷயந்தா
ஸ்வாந்தை அந்த வினய நிபர்த்தை ஸ்வாதயந்தே பதம் தே –45-

தொண்டர் குழாம் -அருளிச் செயல் கோஷ்டியும் வேத கோஷ்டியும் -ஸ்வர -நேத்ர -அங்க -விகாரங்களுடன் —
பாகவத சரணாரவிந்த போக்யதா அதிசயத்துக்கு மங்களா சாசனம் -இவை தான் எனக்கு தேனே கன்னலே அமுதே நெய்யே –
ஆறு சுவை உண்டி -பெற்ற பின்பு கதம் அந்யத் இச்சதி –

————-

வரத தவ விலோகயந்தி தன்யா
மரகத பூதர மாத்திரகாயமானம்
வியாபகத பரிகர்ம வாரவானம்
ம்ர்கமத பங்க விசேஷ நீல மஞ்சம் –46-

அந்தரங்க அணுக்கர்கள் என்ன பாக்ய சாலிகள் -உனது ஏகாந்த திருமஞ்சன சேவையிலும் –
ஜ்யேஷ்டா அபிஷேகமும் சேவையிலும் முற்றூட்டாக அவர்களுக்கு காட்டி அருளுகிறாயே –
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே –
மின்னும் நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே –

வரம் தரும் வரதனே! திருவாபரணங்கள், கவசம் இவற்றை கழற்றிய நிலையிலும்,
மரகத மலைக்கு ஒப்பாக மூலவடிவம் போன்றதாய் கஸ்தூரி குழம்பினால் மிக நீல நிறம் உள்ளதான
உனது திருமேனியை காண்பவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்.

வரம்தரும் பேரருளாளப்பெருமானே! உன்னை சேவிக்க ஏகாந்த சமயங்கள் உண்டு.
அப்போது திருவாபரணம், மாலைகள் எல்லாம் கழற்றி வைக்க நேரிடும்.
அப்போது உன் இயற்கை அழகை சேவிக்க- அநுபவிக்க இயலும்.
அப்போது இதை பார்த்த்துதான் மரகத் மலை படைக்கப்பட்டதோ என்று தோன்றும்.
கஸ்தூரியை குழம்பாக்கி அதை உன் நீல திருமேனியில் சாத்துவதால் அந்த நீல நிறம் மேலும் சிறப்பாகி ஜ்வலிக்கும்.
இதை எல்லோராலும் காணமுடியாது. சிலபேர்-உன் அந்தரங்க கைங்கர்யம் சில புண்யசாலிகள் மட்டும் தான் காணமுடிகிறது.

—————-

அநிப்ர்த பரிரம்பை ஆஹிதம் இந்திராயா
கனக வலய முத்ராம் கண்டதேச ததான
பணிபதி சயனியாத் உத்தித த்வம் ப்ரபாதே
வரத சததம் அந்தர் மானஸம் சந்நிதேய–47-

சயன பேர மணவாள பெருமாள் உடன் நித்ய சேர்த்தி சேவை பெரும் தேவி தாயார் –
பங்குனி உத்தரம் மட்டும் பேர் அருளாள உத்சவர் உடன் சேர்த்தி சேவை –
உபய நாச்சியார் -ஆண்டாள் -மலையாள நாச்சியார்களுடனும் அன்று சேவை உண்டு
நவராத்ரி உத்சவத்தில் கண்ணாடி அறையிலே சுப்ரபாத சேவை உண்டே
சயன பேரர் ஸ்ரீ ஹஸ்திகிரி படி ஏரி மணவாளன் முற்றம் திரு மஞ்சனம் சேவை நித்யம் உண்டே
காலை விஸ்வரூப சேவையில் தானே பெரிய பிராட்டியாருடைய கனக திரு வளைகளுடைய தழும்பை சேவிக்க முடியும் –

துரக விஹகராஜா ஸ்யந்தனா ஆந்தோலிகா ஆதிஷு
அதிகம் அதிகம் அந்யாம் ஆத்ம சோபாம் ததானம்
அநவதிக விபூதிம் ஹஸ்தி சைலேசேஸ்வரம் த்வாம்
அநு தினம் அநிமேஷை லோஷனை நிர்விஸேயம் -48-

திருக்குடை -திரு சின்னம் -திருச் சாமரங்களுடன் -ராஜ வீதியில் திருக் கருட உத்சவம் -ஒய்யாளி –
திருத் தேர் -உத்சவங்கள் கண்டு அருளுவதை
அநிமேஷை லோஷனை நிர்விஸேயம் -கண் இமைக்காமல் அநு தினம் சேவிக்கப் பெரும் பாக்யசாலிக்குக்கு
உன்னுடைய சௌந்தர்யத்தை முற்றூட்டாக காட்டி -கோடாலி முடிச்சு -தொப்ப ஹாரா கிரீடம் -நவரத்ன மாலைகள்
மகர கொண்டை சிகப்பு சிக்கு கொண்டைகள் -பல சாத்தி சேவை அருளுவதை அனுபவிக்கிறார்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே –

நிரந்தரம் நிர்விசாதா த்வதீயம்
அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம்
சத்யம் சபே வாரண சைல நாத
வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா-49-

த்வதீயம் அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம் -மனசுக்கும் எட்டாத உன்னுடைய ஸுந்தர்ய திவ்ய மங்கள விக்ரஹத்தை
யாதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹா –
அடியேனுடைய ஊனக் கண்-மாம்ச சஷூஸ் – கொண்டே -நிரந்தரம் பருகும்படி அருளிச் செய்த பின்பு
சத்யம் சபே வாரண சைல நாத வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா –மோக்ஷ அனுபவ ஆசை அற்றதே -இது சத்யம் –
இன்று வந்து உன்னைக் கண்டு கொண்டேன் -உனக்குப் பனி செய்து இருக்கும் தவம் உடையேன் -இனிப் போக விடுவதுண்டே-

வ்யாதன்வன தருண துளசி தாமபி ஸ்வாமபிக்யாம்
மாதங்காத்ரவ் மரகத ருசிம் பூஷணாதி மானஸே நா
போக ஐஸ்வர்ய ப்ரிய ஸஹசரை கா அபி லஷ்மி கடாஷை
பூய ஸ்யாம புவன ஜனனி தேவதா சந்நி தத்தாம்-50-

மரகத மணி குன்றமான பேர் அருளாளனை பெரும் தேவி தாயார் உடன்
மானஸ சாஷாத்கார சேவை தந்து அருள நமக்காக பிரார்த்தித்து அருளுகிறார் –

———————

இதி விகிதம் உதாரம் வேங்கடேசந பக்த்யா
ஸ்ருதி சுபகமிதாம் ய ஸ்தோத்ரம் அங்கீ கரோதி
கரி சிகரி விதாங்க ஸ்தாயின கல்ப வ்ருஷாத்
பவதி பலம் அசேஷம் தஸ்ய ஹஸ்த அபஷேயம் -51-

பல ஸ்ருதியுடன் நிகமித்து அருளுகிறார் –
தமது அனைத்தையும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்க அமையுடைய பேர் அருளாளர் அன்றோ –

இவ்வாறு வேங்கடேசனால் பக்தியோடு இயற்றப்பட்டதாய் கருத்துக்கள் நிறைந்ததாய்
செவிக்கும் இனியதான இந்த ஸ்தோத்திரத்தை எவன் ஏற்று பயிகின்றானோ
அவனுக்கு அத்தகிரியான மாளிகையில் புறாக்கூண்டு போல மேல்பாகத்தில் நிற்கின்ற
கற்பக மரத்திலிருந்து எல்லா பலனும் கையால் பறிக்க ஏற்றதாய் ஆகின்றது.

————————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading