ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
ஸ்ரீ தத்வ நவநீதம்
1-உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் -பயிரில்
களை போல் அசுரரைக் காய்ந்தான் தன் கையில்
வளை போல் எம் ஆசிரியர் வாக்கு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ஹஸ்த ஆபரணம் போல் அன்றோ நம் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள்
2-சம்ஸ்க்ருத திராவிட -ஸ்ருதி ஸ்ம்ருதி -இதிஹாச -புராணங்களில் -சொல்லுகிற
தத்வ ஞான பூர்வகமாக மோக்ஷ உபாய அனுஷ்டானம் வேண்டுகையாலே
முமுஷுவுக்கு விசேஷித்து அறிய வேணும் -சித் அசித் ஈஸ்வர தத்துவங்களை –
போக்தா என்றும் -போக்யம் என்றும் -ப்ரேரிதா என்றும் உபநிஷத் சொல்லுகிறது
தேகாத்மா பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர பிரமமும்-அந்நிய சேஷத்வ பிரமமும் – போக்க வேண்டுமே
ஜீவனுடைய போக்த்ருத்வம் -பரி பூர்ண நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் சங்கல்பம் அடியாகவே –
ஆகவே நியாந்தா ப்ரேரிதா -சர்வேஸ்வரன்
3-த்ரி குணமாவது –பிரகிருதி -ஸூகத்துக்கும் -துக்கத்துக்கும் -மோஹத்துக்கும் -விசேஷ காரணங்களான
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களாகிற குணங்களுக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம் –
இது கேவல பிரகிருதி என்றும் -பிரகிருதி விக்ருதி என்றும் –
கேவல விக்ருதி -என்றும் மூன்று வகையாய் -24- தத்வ ரூபமாய் இருக்கும்
மகான் அஹங்காரம் தன்மாத்திரைகள் -ஆகிய ஏழும் பிரகிருதி விக்ருதிகள்
பஞ்ச பூதங்களும் கர்ம ஞான பஞ்ச இந்திரியங்களும் மனஸ் ஆகிய இவை -16-கேவல விக்ருதிகள்
இவற்றில் ஸ்வ பாவத்தாலும் பஞ்சீ கரணாதிகளாலும் தேச கால பேதத்தாலே யுண்டாம் விக்ருதிகளுக்கு எல்லையில்லை –
4-சுத்த சத்வமாவது -ரஜஸ் தமஸ்ஸூக்கள் இன்றிக்கே -பிராகிருத சத்வ -விலக்ஷண சத்வத்துக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம்
இது ச பரிகாரனான ஸ்ரீ யபதிக்கு போக்ய-போக உபகரண -போக ஸ்தான ரூபமாய்க் கொண்டு
அனந்த ஆச்சர்யமாய் ஹிரண்ய கர்ப்பாதி ஸ்தலங்கள் எல்லாம் நரகமாய்த் தோற்றும்படியான
ஆனுகூல்ய ப்ரகர்ஷத்தாலே பரமபத சப்த வாஸ்யமாய் இருக்கும்
5-ஈஸ்வரன் -சர்வ சரீரி -சர்வ அந்தர்யாமி -சத்ய சங்கல்பம் -சர்வ நியாமகன் -சர்வ காரணத்வம் -மூன்று காலங்களிலும் ஏக ஸ்வரூபன் /
மூன்று யுகங்களிலும் விசேஷித்து பிரகாசிப்பவன் /
மூன்று குண யோகத்தாலும் -த்ரை யுகானாய் மூன்று வ்யூஹங்களாலே மூவிரண்டு பிரகாரங்களைப் பண்ணுமவனாய் –
மூன்று புருஷார்த்தங்களுக்கும் மூலமாய் மூன்று பிரமாணங்களாலும் ப்ரதிஷேதம் இல்லாதவனாய்
மூன்று மாத்ரையான ஒற்றை எழுத்துக்கு முக்யார்த்தமாய் மூன்று ரகஸ்யங்களில் சிஷையாலே விசேஷித்து அறியப்படும் –
6-ப்ரஹ்மத்துக்கு உபநிஷத்துக்களில் சொன்ன -த்ரை வித்யம் -போக்த்ரு விசிஷ்ட ரூபத்தாலும் -போக்ய விசிஷ்ட ரூபத்தாலும் –
பிரேரகத்வ விசிஷ்ட ரூபத்தாலும் உப பன்னம்-
தன்னையும் ப்ரேரி தாவையும் பிரிய அறிந்து பற்றினவனுக்கு அவன் பிரசாதத்தாலே மோக்ஷம் என்று இறே இங்கு ஓதுகிறது
7-அலையற்ற வாரமுதக் கடல் அக்கடலுண்ட முகில்
விலையற்ற நன் மணி வெற்பு வெயில் நிலவு ஓங்கு பகல்
துலை யுற்றன வென்பர் தூ மறை சூடும் துழாய் முடியாற்கு
இலை ஒத்தன அவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே–பாகவத பிரபாவம் சொல்லும் பாசுரம் –
8-சத் சம்பிரதாய ததின சமுத்ர்தம் வேங்கடேசன்
தத்வ நவநீதம் ஏதத் தநுதே நவநீதம் நர்த்தன ப்ரீதம்-சத் சம்ப்ரதாயம் தயிர் கடைந்த நவநீதம் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை உகப்பானே –
9-வரத வ்ரசய த்வம் வாரித அசேஷ தோஷம்
புனருபாஸித்த புண்யம் பூஷிதம் புண்ய கோட்ய
சீத முதித மனோபி த்வம் ஏவ நித்ய சேவ்யாம்
ஹத ரிபுஜன யோகம் ஹஸ்தி தாம்னா சம்ரிதம்
வரத த்வம் ஏவ தவ ஹஸ்தி தாம்நா வ்ரசய –நீ ஒருவனே உனது ஸ்ரீ ஹஸ்திகிரியை ரஷித்து போஷித்து அருள வேண்டும் –
வாரித அசேஷ தோஷம் புனருபாஸித்த புண்யம் புண்ய கோட்ய பூஷிதம்–தர்சன மாத்திரத்தாலே
அசேஷ தோஷங்களை போக்கி புண்யங்களை வர்த்திப்பிக்குமே
சீத முதித மனோபி நித்ய சேவ்யாம் ஹத ரிபுஜன யோகம் –பாகவத கோஷ்ட்டியையும் -ஹஸ்தி கிரி போலே –
ரஷித்து போஷித்து அருளுவாய்
—————————————–
ஸ்ரீ தத்வ சந்தேசம் –
இது அம்ருதரஞ்ஜனீரஹஸ்யத்தில்எட்டாவது.
ஸ்ரீரங்கத்தில் அருளிச்செய்யப்பட்டது]
ஸ்வா தீன த்ரிவித த்யேத அபிப்ராய பிரகாசயதே-கசியச்சித் தத்வநிஷ் தஸ்ய காங்ஷித பிரதிபதயே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
அந்தராத்மா தயா -சங்கல்பம் மூலமும் அவன் ஆதீனமே -ஆதாரம் அனைத்துக்கும் –
ஸர்வமந்த்ர ப்ரதாநங்களான வ்யாபக மந்த்ரங்கள் மூன்றி லும் சேர ஸர்வாதார பூதனாய் ஸர்வ பரீரியாய் நிற்கிற நிலை-என்று ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தார்கள்.
இதில் ஸ்வ அதீன -என்கிற சப்தத்தாலே-ஸ்வரூப அதீனத்வமும்–இச்சா அதீனதவமும் –
இவை இரண்டும் -சரீர ஆத்ம பாவ ஸ்ருதியாதி சித்தம்
இவற்றில் ஸ்வரூப அதீனத்வம்-ஈஸ்வர ஸ்வரூப -வ்யதிரிக்த -சர்வ வஸ்துக்களையும் யதா சம்பவம் -வியவஹித
அவ்யவஹித பேதவத்தாய் இருக்கும்
ஸ்வரூபத்தால் ஆதேயனாகவும் சங்கல்பத்தால் விதேயனாகவும் –
ஈர்வரேச்சா தீநத்வம் ஜீவேச்சாதீநங்களிலும் ஏகரூபம். இவற்றில் வைத்துக் கொண்டு நித்யங்கள் நித்யேச்சாஸித்தங்களாயிருக்கும். அநித்யங்கள் காலாவச்சிநங்களாகையாலே அநித்யேச்சா ஸித்தங்களாயிருக்கும். நித்யங்களுக்குநித்யேச்சாஸித்தத்வமாவது – இவனுடைய இச்சை இல்லாதபோது அநித்யம்போலே இல்லையாக ப்ரஸங்கிக்கும் என்னும்படி நிற்கை.
பத்த சேதனர் தங்களுக்கே முக்த தசை யாகையாலே -தர்மி பேதம் இல்லையாய் இருக்க -நித்யருக்குப் போலே
முக்தருக்கும் பத்தரைக் காட்டில் அத்யந்த வைஷம்யம் தோற்றுகைக்காக ஜீவ த்ரை வித்யம் சொல்லப்படுகிறது –
பிரதான பிரதிதந்தரம் -சரீரீ சரீர பாவம்
பேத அபேத கடக ஸ்ருதிகள்
ஸ்வரூப ரக்ஷ பல சமர்ப்பணங்கள்
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னித் தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே – என்கிறபடியே
அவன் பிரயோஜன விசேஷத்தாலே தனக்கு பிரயோஜன விசேஷம் என்று தெளிந்து –
ஸ்வ அதிகார அனுகுணமாக ஸ்வரூப பர பல சமர்ப்பணத்தாலே இவை மூன்றிலும் நிர்மமனாய் வர்த்திக்கும்
சத்வஸ்தன் நிபிரதம் பிரஸாதய சதாம் வ்ருத்திம் வ்யவஸ்தபய
த்ர ஸ்ய ப்ரஹ்மவித் அஹஸ்த்ருணமிவ த்ரை வர்க்கான் பாவய
நித்யே சேஷினி நிக்ஷிப்பான் நிஜ பாரம் சர்வம் சஹே ஸ்ரீ சஹே
தர்மம் தாரய சாதகஸ்ய குஸலின் தாரா தாரை காந்தின –சாதக பஷி போலே அருளை மட்டுமே எதிர்பார்த்து எல்லாம்-ஸ்ரீ யபதி இடம் சமர்ப்பித்து -நிரபரமாய் இருக்கலாம் –
நிப்ரு தம் – அவதானத்துடன், (நிப்ருத அவதாநத்துடன்கூடினவனாய்), ஸத்த்வஸ்தாந்- பாகவதர்களை, ப்ரஸாதய – க்ருபையுடையவர்களாகச் செய்து கொள், ஸதாம் – ஸத்துக்களின், வ்ருத்திம் -அநுஷ்ட்டானத்தை, யவஸ்த்தாபய – நிலை நிற்கும்படி செய்,ப்ரஹ்மவிதாகஸ: – ப்ரஹ்ம வித்துக்களுடைய அபரசாரத்திலிருந்து, த்ரஸ்ய -பயப்படு (நடுங்கு), த்ரைவர்க்கிகாந்- தர்மம், அர்த்தம், காமம் எனப்படும் மூன்று பலன்களில் ஆசையுடையவர்களை, தருணமிவ – புல்லைப்போல, பாவய – எண்ணியிரு, நித்யே- நித்யனாயும், சேஷிணி – ஸ்வாமியாயும், ஸர்வம் ஸஹே – எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளுமவனாயுமிருக்கிற, ஸ்ரீஸகே – ச்ரிய:பதியினிடத்தில், நிஜபரம்- த(உ)ன்னுடைய ஆத்மரக்ஷணபரத்தை, நிக்ஷிபந் – ஸமர்ப்பித்துவிட்டு, குசலிங் – க்ஷேமத்தை அடையக்கூடியவனே! தாராதரைகாந்தி : – மேகம்ஒன்றையே எதிர் பார்த்திருக்கும், சாதகஸ்ய – சாதக பக்ஷியின், தர்மம் -ஸ்வபாவத்தை, தாரய – தரித்துக்கொண்டிரு.
—————————————————
ஸ்ரீ தத்வ மாத்ருகை –
இது அம்ருதரஞ்ஜனீ ரஹஸ்யத்தில் ஆறாவது–ஸ்ரீரங்கத்தில் அருளிச்செய்யப்பட்டது
மாத்ருகாக்ஷரங்கள் 51 என்று ஸ்ரீந்யாய ஸித்தாஞ்ஜநத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தத்த்வ மாத்ருகையில் 51 வாக்யங்கள் அருளிச்செய்யப்பட்டிருப்பதினால் எப்படி மாத்ருகாக்ஷரங்கள் மற்றெல்லா சப்தங்களுக்கும் மூலமோ, அதைப்போலவே இங்கு அருளிச்செய்யப்பட்டிருக்கும் 51 அர்த்தங்களும் தத்த்வ விஷயமான மற்றெல்லா அர்த்தங்களின் ஸங்க்ரஹம் என அறியவும். இப்படியே மேலுள்ள ரஹஸ்ய மாத்ருகையிலும் கண்டு கொள்ளவும்.
1. பர அவர தத்த்வ விபாகம்-2 – 14. பர தத்த்வ நிரூபணம்-15. அவரதத்த்வ விபாகம் 16 -29.ஜீவதத்த்வ நிரூபணம்-30,31.-அசேதந விபாகம்-32 – 39. த்ரிகுண நிரூபணம்-40, 41. கால நிரூபணம்- 42-45. சுத்த ஸத்த்வ நிரூபணம்-46. முக்த தசையில் நித்யாநுபவ ப்ர காரம்-47 – 50. பராவர தத்த்வ விஷயத்தில் ஸாதர்ம் யாதி நிரூபணம்-51. தத்த்வ விவேக ப்ரயோஜநம்.
இந்த ஸ்ரீ ஸூக்தியில் ஒரு விசேஷம்-மூன்று இடங்களில் தவிர சுலோகங்கள் ப்ரமாணமாக உதாஹரிக்கப்படாமல் திவ்ய ப்ரபந்தப்பாசுரங்களையே ஸ்வ வாக்யச் சாயையாக அனுஸந்தித்திருப்பது.
தத்துவங்கள் எல்லாம் தகவால் அறிவித்து
முத்தி வழி தந்தார் மொய் கழலே –அத்திவத்தில்
ஆர் அமுதம் ஆறாம் இரு நிலத்தில் என்று உரைத்தார்
தாரம் முதல் ஓதுவித்தார் தாம்
ப்ரணவம் முதலான, அதாவது திருமந்திரம் முதலிய ரஹஸ்யங்களை உபதேசித்த ஆசார்யர்கள் தாங்களே க்ருபையினால் பராவர தத்துவங்கள் எல்லாவற்றையும் தெரிவித்து, மோக்ஷத்திற்கு உபாயங்களான பக்தி ப்ரபத்தி வித்யைகளை உபதேசித்தவர்களின் மொய்த்துக் கொண்டிருக்கிற (சேர்ந்துகொண்டிருக்கிற) திருவடிளே அந்த திவம் என்று சொல்லப்படுகிற பரமபதத்தில் பூர்ணமான அம்ருதமும்.
அதாவது அமருதத்தைப்போல் போக்யமானதும், விஸ்தாரமான பூமியில் உபாயமுமாகும் என்று உபதேசித்தார்கள்.
ஈஸ்வர தத்வம்
1-சதாசார்ய உபதேசத்தாலே சாரீரிக மூல மந்த்ராதிகளைக் கொண்டு சாத்விகருக்கு அறிய வேண்டும் தத்வம்
பரம் என்றும் அவரம் என்றும் இரண்டு வகையாய் இருக்கும்
2-பரதத்வமாவது
நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் -சர்வ வஸ்துக்களிலும் உடன் மிசை உயிர் எனக் கரந்து
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -பெரிய திருமொழி-3-8-1.-என்றும் –
உணர் முழு நலம் -திருவாய்–1-1-2.என்றும் –
அளப்பரிய வாரமுதை — திருநெடுந்தாண்டகம்- 14.என்றும்
அமலன் – அமலனாதிபிரான்-1-என்றும் சொல்லுகிறபடியே
அத்யபூதமாய் -குணங்களுக்கும் அதிசயாவஹமாய்த் திருவுக்கும் திருவாம் படி நிருபாதிக மங்களமான ஸ்வரூபத்தை யுடையவனாய் –
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -திருவாய்மொழி-1-1-1-என்னும்படி அனவதிக அதிசய ஆனந்தம் முதலான அனந்த கல்யாண குணங்களை உடையனாய்
ஆஸ்ரிதர் பல பிறப்பும் பிறவாதபடி தான் என் நின்ற யோனியுமாய் பிறக்கக் கடவனாய்
அவர்கள் நாட்டில் பிறந்து படுமவை படாமைக்காகத் தான் பிறந்து படாதன படக் கடவனாய்
தான் சொல்லிற்றுச் செய்யும் தேவ பிரக்ருதிகளுக்கு தானும் சொல்லிற்றுச் செய்யக் கடவனாய்
விபரீத ஆகாரம் பண்ணும் ஆசூர ப்ரக்ருதிகளுக்கு தானும் விபரீத ஆகரணம் பண்ணக் கடவனாய்
தன்னை அந்தராத்மா என்று நினைத்து இருப்பாரைத் தானும் தனக்கு அந்தராத்மா வென்று நினைத்து இருக்குமவனாய்
தனக்கு ஆத்ம ஆத்மீய சமர்ப்பணம் பண்ணப் படக் கடவனான ஸ்ரீ யபதி புருஷோத்தமன் –
3– இவன் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச்சியார்திருமொழி – 11-3 -என்கிறபடியே
உபய விபூதி நிர்வாஹகனாய் -தன் ஒப்பார் இல்லப்பன்-திருவாய்மொழி-6-3-9 -என்றும் –
இனன் இலன் எனன் உயிர் மிகு நிரை இலனே -திருவாய்மொழி-1-1-2–என்றும்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா-திருவாய்மொழி-2-3-2- -என்றும் சொல்லுகிறபடியே சம அதிக தரித்ரனாய் இருக்கும் –
4—அப்ராக்ருதமாய் பஞ்ச உபநிஷத் ப்ரதிபாத்ய சுத்த சத்வ பஞ்ச சக்தி மயமாய்-
அஸ்வ பூஷண ரூப விசித்திர தத்வ ஆஸ்ரயமான
திவ்ய மங்கள விக்ரஹ விசேஷத்தாலே விசிஷ்டானாய்க் கொண்டு
பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரனாய் இருக்கும் –
5-பர ரூபமாவது -நித்தியமாய் ஏக ரூபமாய் நித்யருக்கும் முக்தருக்கும் ஸேவ்யமாய் –
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு – திருவாய்மொழி-5-5-10-என்றும்
ஆதியஞ்சோதி யுரு –3-5-5-என்றும் சொல்லுகிறபடியே வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்த ரூபம்-
6—வ்யூஹங்கள் ஆவன இப்பர ரூபம் அடியாக பூர்வ பூர்வத்துக்கு உத்தர உத்தரம் கார்யமாகக் கொண்டு பிரிந்து
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்–பெரியதிருமொழி-4-9-8– பாலின் நீர்மை செம்பொன் நீர்மை–திருச்சந்தவிருத்தம்-44-. இத்யாதிகள் படியே
க்ருத த்ரேதா யுகங்கள் தோறும் மாறி மாறி வரும் நிறங்களுடைய ரூபங்கள்-
7—அபிமான விசேஷத்தாலே ஜீவ மஹான் அகங்கார சப்த வாஸ்யங்களான-சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்த ரூபங்களில்
ஞான பலாதிகளில் இவ்விரண்டு குணங்களும்
சம்ஹார -சாஸ்த்ர ப்ரவர்த்த நாதிகளில் இவ்விரண்டு தொழில்களும் உடையவனாய் இருக்கும்
சங்கர்ஷணன் -ஜீவ அபிமான தேவதை –ஞான பலம் -சம்ஹாரம் -சாஸ்திரம்
ப்ரத்யும்னன் -மஹான் அபிமான தேவதை -ஐஸ்வர்யம் வீர்யம்-ஸ்ருஷ்ட்டி -சாஸ்த்ர தர்ம ப்ரவர்த்தகம்
அநிருத்தன் -அகங்கார அபிமான தேவதை — சக்தி தேஜஸ் -பாலனம் -தத்வ ஞானம் பிரதம்-
8—வாசுதேவாதிகளான நாலு வ்யூஹங்களிலும் ஒவ் ஒரு வ்யூஹத்திலே மூன்று மூன்றாக பிரிந்து கேசவன் தமரில்-திருவாய்மொழி-2-7- சொல்லுகிற
ரூபங்கள் பன்னிரண்டும் வ்யூஹாந்தரங்கள்-
9—விபவங்கள் ஆவன -மீனாய் ஆமையாய் இத்யாதிகளில் படியே விபூதிகளோடு ஸஜாதீயங்களாகத் தோன்றும் ரூபங்கள்-
10—அவை தம்மிலே தோன்றுவன சில ரூபங்கள் விபவாந்தரங்கள்-
11—அந்தர்யாமி ரூபமாவது கண்கள் சிவந்து -திருவாய்மொழி- 8-8-1-இத்யாதிகளில் படியே உள்ளே யோகிகளுக்கு காணலாவதொரு ஸூஷ்ம ரூப விசேஷம்
12-அர்ச்சாவதாரமாவது -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் மற்றப் பேர் -முதல் திருவந்தாதி-44-
நெஞ்சினால் நினைப்பான் யவனாகும் நீள் கடல் வண்ணனே -திருவாய்மொழி-3-6-9–என்னும்படி
ஸ்வயம் வ்யக்த -திவ்ய ஆர்ஷ –மானுஷ -வைஷ்ணவ -ஸ்தானங்களிலே சர்வ ஸஹிஷ்ணுவாய் அர்ச்சக பரதந்தர்யத்துக்கு எல்லை நிலமாய்
சேஷ சேஷி பாவ சாபலமாய் –பவ்ம கதம் -புஜ யாதாம் ப்ரமேயம்-பூமௌ கதம் பூஜயதாம் ப்ரமேயம்- பாரதம் – மௌ ல – 5-35 பூமௌ – பூமியில், கதம்- அவதரித்
திருக்கிற, ப்ரமேயம் -நம்மால் அளவிட்டறியப்படுகிற அர்ச்சாரூபத்தை,பூஜயதாம் பூஜைசெய்பவர்களுக்கு) என்று -தானே அருளிச் செய்த ரூபம் –
13—தன்னுள்ளே திரைத்து எழுந்து-திருச்சந்தவிருத்தம் – 10- இத்யாதிகளில் படியே நிற்கிற இவ்வஞ்சு ரூபமும் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறையும் படியான ஸூபாஸ்ரயமாய் இருக்கும்-
14—திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன்-மூன்றாம்திருவந்த- என்கிறபடியே ச லஷ்மீகமாக இப்பரதத்வத்தைக் கண்டவன்
மற்று இங்கோர் திரு வில்லாப் புதுத் தெய்வம் தேறான்
————–
15–இப்படி சுடர் மிகு ஸ்ருதியுள் உளனான ஸ்ரீ யபதிக்கு சரீரம் என்று பிரமாணமான அவர தத்வம்
சேதனம் என்றும் அசேதனம் என்றும் இரண்டு வகையாய் இருக்கும்
16-சேதனமான அவர தத்வமாவது ஜீவ சப்த வாஸ்யமாய் ஸ்வரூபத்தாலும் சக்தியாதி குணங்களாலும் பரிச்சேதமான அஹம் அர்த்தம்
17—இது ஸ்வயம் பிரகாசதையாலும்-ஞான குண ஆஸ்ரயம் ஆகையால் ஞானம் என்று பேர் பெற்று –
இரண்டு படியாலும் தனக்குத் தான் தோன்றுமதாய்
அனுகூல ஸ்வ பாவமாய் அதி ஸூஷ்மமாய் –
திலத்தில் தைலம் போலேவும் தாருவில் அக்னி போலவும்
சர்வ அசேதனங்களிலும் அநு பிரவேசிக்கவற்றாய்
நிர்விகாரமாய் குண த்ரயாத்மகமாய் –
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவிகளுக்கும் விஷயம் இன்றிக்கே
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் தேவத்வ மனுஷ்யாதி பேதங்கள் இல்லாமையாலே தேவ மனுஷ்யாதி சப்த கோசாரம் அன்றிக்கே
சர்வ ஆத்ம சாதாரணங்களான அஹம் புத்தி சப்தங்களாலே தம் தாமுக்கு அநு பாவ்யமாய் இருக்கும்-
18—நான் என்கிற அர்த்தம் தானே பர புத்தி விஷயமாம் போது -அவன் -இவன் -யுவன் -என்றும் நீ என்றும் தோற்றும்-
19—இஜ் ஜீவ தத்வம் பத்தன் என்றும் பந்த ரஹிதர் என்றும் இரண்டு படியாய் இருக்கும்-
20—பத்தராவார் -பல செய்வினை வன் கயிற்றால் திண்ணம் அழுந்தக் கட்டுண்டு பெரும் துயர் இடும்பையிலே
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கையின் வழி உழன்று
நாநா வித நரகம் புகும் பாவம் செய்து
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழிலே-
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை என்னும்படி
தன்னுருக்கொடுத்து வேற்றுருக் கொண்டு ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
பிறவிக் கடலுள் நின்று துளங்குகின்ற சேதனர்-
21—இவர்களுக்கு அநாதியான கர்ம ப்ரவாஹ வைஷம்யத்தாலே அவ்வோ போகங்களுக்குப் போலே
அவசர பிரதீஷா பகவத் க்ருபா மூலமான மோக்ஷத்துக்கு முற்பாடு பிற்பாடுகள் உண்டாம்-
22—பந்த ரஹிதர் முக்தர் என்றும் நித்யர் என்றும் இரண்டு வகை –
23—முக்தராவார் எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் -என்னும்படி
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் திருவருளாலே-
கருவிலே திரு யுடையராய் பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து பாத இலச்சினை வைத்து ஞானக் கை தர
யானே என் தனதே என்கிற அஹங்கார மமகாரங்கள் ஆகிற படு குழியினின்றும் ஏறி
ஓண் டொடியாள் திரு மகளும் திருமகள் சேர் மார்பனுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு
ஐங்கருவி கண்ட இன்பம் தெளிவரிய அளவில்லாச் சிற்றின்பம் ஒழிந்து-
களை கண் மற்று இன்றி
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று-
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –என்றும்
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டும் -என்றும்
தொன் மா வல் வினைத் தொடர்களை முதல் அரிந்து
மங்க ஒட்டு உன் மா மாயை
மாயம் செய்யேல் என்னை என்றும் வளைத்து
ஆக்கை விடும் பொழுது எண்ணி
பாவம் எல்லாம் சும் எனாதே கை விட்டோடித் தூறுகள் பாய அமரரோடு உயர்வில் சென்று
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர்
இல்லியனூடு போய் இமையோர் வாழ் தனி முட்டிடக் கோட்டையினைக் கழித்து
வாட்டாற்றான் பணி வகையை வானேறப் பெற்று
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஓண் கண் மடந்தையர் வாழ்த்த
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகி
வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்ன விதி வகை புகுந்தனர் என்று
நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவ
நிதியும் நற் சுண்ணமும் நிறை கூட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்த-
வந்து அவர் எதிர் கொள்ள தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பன்
கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிகள் கூட்ட அவன் தாளிணைக் கீழ் வாழ்ச்சி பெற்று
அடியார்கள் குழாங்கள் உடன் கூடி
திரு மா மணி மண்டபத்தில் அந்தமில் பேரின்பத்து அடியரான நித்ய ஸூ ரிகளோடு நிரை ஓக்க இருந்து
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனைத் தினைத்தனையும் விடாதே அனுபவித்து
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்து வாழும்படி
வீடு திருத்துவான் பக்கல் வீடு பெற்றவர்கள் –
24—நித்யராவர் -நித்தியமான பரிபூர்ண பகவத் அனுபவத்தை யுடையராய் —
வடிவுடை வானவர் என்றும் —
முடியுடை வானவர் என்றும்–
வைகுந்தத்து அமரர் என்றும் —
ஸூ ரிகள் என்றும்–
ஸாத்ய தேவர்கள் என்றும் சொல்லப்பட்ட அனந்த கருட விஷ்வக் சேநாதிகளான அயர்வறும் அமரர்கள் –
25—பத்தருக்கு கர்ம பிரவாஹம்-அநாதியாய்-அனந்த வத்தாய் இருக்கும் –
26—முக்தருக்கு கைங்கர்ய பிரவாஹம் அதிமத்தாய் அந்த ரஹிதமாய் இருக்கும்-
27—நித்தியருக்கு பகவத் அபிமத விபரீத ருசி இல்லாமையாலே ஒரு காலத்திலும் கர்ம பந்தம் இன்றிக்கே
அதிகார நியமத்தோடே கூடின கைங்கர்ய பிரவாகம் அநாதி அந்தமாய் இருக்கும்-
28—இப்படி ஷட்விம்சிகன் என்றும் பஞ்ச விம்சிகன் என்றும்
( ஜீவனை அவன் சரீரமாக கொண்டு பஞ்ச விம்சிகன் ) பிரிக்கப்பட்ட பரமாத்மாவுக்கு சர்வ அவஸ்தையிலும்
( பரத்வாதி பஞ்சகங்களிலும் ) ஸ்வாஸ்ரித விஷயத்தில் உள்ள பரதந்தர்ய சேஷத்வங்கள் ஸ்வ தந்தர்ய நிபந்தகளாய் இருக்கும் –
( சொன்ன வண்ணம் செய்வானாய் ஏறிட்டுக் கொண்ட ஆஸ்ரித பரதந்தர்யம் )
29—ஜீவாத்மாக்களுக்கு சர்வ அவஸ்தையிலும் ஸ்வ வியாபாராதிகளில் உள்ள ஸ்வ தந்த்ர சேஷித்வங்கள்
பரதந்த்ர நிபந்தங்களாய் இருக்கும்
( அவன் சங்கல்பம் அடியாகவே ஜீவனுக்கு ஸ்வ தந்திரம் என்றவாறு )
——————–
30—இப்படி பரம சேஷியாயும் த்வார சேஷியாயும் உள்ள -பர -அவர -ஆத்மாக்கள் -இருவரில் வேறுபட்ட அசேதன தத்வம்
த்ரை குணம் என்றும் -அத்ரை குணம் என்றும் -இரண்டு வகையாகவும் –
அத்ரை குணம் காலம் என்றும் சுத்த சத்வம் என்றும் இரண்டு வகையாகவும் இருக்கும் –
31—அசேதன த்ரவ்யமான தர்ம பூத ஞானத்தோடு கூட நாலு வகை என்று எண்ணலாய் இருக்க
இத்தைச் சரீரமாகக் கொள்ளாமையாலும்
பிரயோஜன விசேஷத்தாலும் இவை-பிரகிருதி காலம் -சுத்த சத்வம் -என்ற இவை – மூன்றையும் வகுத்து அனுசந்தித்தார்கள் –
32–த்ரை குணமாவது சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம் –
33—சத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாவன -அடைவே ஞான சுகாதிகளுக்கும் -ராக துக்காதிகளுக்கும்-
பிரமாத மோஹாதிகளுக்கும் ஹேதுக்களான குண விசேஷங்கள்-
34— இத் த்ரை குணத்தினுடைய காரண தசையும் கார்ய தசையையும் கூடப் ப்ரக்ருதி மானங்கார மனங்கள் –
பொங்கைம் புலனும் பொறி யைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் -என்று பிரித்து சாஸ்திரம் சொல்லா நிற்கும்–
35—இவற்றில் குண சாம்யத்தை யுடைய மூல ப்ரக்ருதியில் ஒரு பிரதேசத்தில்
பகவத் -சங்கல்ப -நியத-காலமான குண வைஷம்யம் அடியாக –
சாத்விக ராஜஸ -தாமஸங்கள் என்று பிரிவுடைத்தான மஹான் பிறக்கும் –
36— -இதினின்றும் இவ்வடைவே சாத்விக ராஜஸ தாமச -அஹங்காரங்கள் யுண்டாம் –
37—ராஜஸ அஹங்காரம் துணையாக சாத்விக அஹங்காரத்தினிற்று தன்மாத்திரைகளை இடையிட்டுக் கொண்டு
பஞ்ச பூதங்களும் உத்பன்னங்களாம் –
தாமச அஹங்காரம் -சப்த தன்மாத்ரம் –ஆகாசம் -ஸ்பர்ச தன்மாத்ரம் –
வாயு -ரூப தன்மாத்ரம் -தேஜஸ் -ஜலம் -கந்தம் -பூமி -இவ்வாறு உண்டே-
38—பூதங்களுக்கு உபாதானங்களான சப்தாதி தன்மாத்திரைகளும் பூதங்களுக்கு குணங்களான சப்தாதிகளும் வேறுபட்டவை-
39—இப்பூதங்கள் ஐந்திலும் குணங்கள் ஐந்தும் நிற்கும் அடைவைப் பூநிலாய ஐந்துமாய்-ருச்சந்த-1- என்கிற பாட்டின் படியே அனுசந்திப்பது-
40—இப்படி மஹதாதிகளான தத்துவங்களும் இவற்றின் கலசுதல் அடியாக பிறக்கும் அனந்தங்களான
ப்ரஹ்மாண்டங்கள் முதலான காரியங்களும் எல்லாம்
த்ரை குண த்ரவ்யம் ஆகிற பெரும் கடலிலே அலைகளும் நுரைகளும் குமுழிகளும் போலேவே
ஆவது அழிவதாய் வருகிற ப்ரவாஹம் அநாதியாக
விச்சேதம் அறப் போருகைக்கு அடி -பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு யுடையாமுடைய
இச்சா அனுவர்த்தியான காலம் -காலம் –
காலம் அநாதியாய் அநந்தமாய் நடக்கும் என்னும் இடத்தை –அநாதிர் பகவான் கால- விஷ்ணுபுராணம்–1-2-26-பகவாக் -பகவானாகிய, கால: – காலமானது. அநாதி: ஆதியில்லை(இதற்கு முடிவும்இல்லை). -இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
41—காலமாவது -எதிர் நிகழ் கழிவு / முன்பு பின்பு / ஒரு காலம் பல காலம் -என்றால் போலே சொல்லுகிற
பாசுரங்களுக்கு இலக்காய் இருபத்தொரு த்ரவ்ய விசேஷம் –
42—இதில் இறைப் பொழுது முதலாக -நாள் திங்கள் -ஆண்டு ஊழி கல்பம் -பரார்த்தம் -த்வி பரார்த்தம் -மகா கல்பம் –
என்றால் போலே சொல்லுகிற எல்லைகள் எல்லாம்
ஸ்வ தந்த்ர சங்கல்பம் ஆகிற சூறாவளிக் காற்றாலே சுழன்று வாரா நின்றால் கழிந்த க்ஷணங்களும் கல்பங்களும் அனந்தங்களாய்
இவற்றால் லீலா விபூதியில் உள்ள காரியங்களுக்கு உத்பத்தி -ஸ்திதி -நாச-வியவஸ்த்தை யுண்டாய் இருக்கும்-
43—சுத்த சத்வத்தில் இக்கால தத்வம் உண்டேயாகிலும் அங்குள்ள கார்யங்களினுடைய உத்பாதியாதிகளுக்கு
இங்கு அடைத்த கால விசேஷம் நியாமாகம் அன்று-
44—சுத்த சத்வமாவது குண த்ரய ரஹிதமாயும் குண த்ரய ஆஸ்ரயமாயும் உள்ள த்ரவ்யங்களில் காட்டில்
வேறுபட்ட விலக்ஷணமான சத்வ குணத்துக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம்-
45—இதன் படியைப் பார்த்தால் -பரமயோகி வாக் மனஸ் அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வ பாவமாய் –
சேணுயர் வானம் -என்றும்
தெளி விசும்பு என்றும்
பொன்னுலகு -என்றும் –
கலங்காப் பெரு நகரம் -என்றும்
மா வைகுந்தம் -என்றும் சொல்லப்பட்ட வேறுபாட்டை யுடையதாய்
ப்ரஹ்மாதி பதங்களும் எல்லாம் நரக துல்யங்களாய்த் தோற்றும்படி
அபரிமித ஆச்சர்யங்களான போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை யுடைத்ததாய்
சர்வேஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும்
விக்ரகாதி ரூபேண விசித்திர ப்ரவாஹமாய் இருக்கும் –
46—இப்படி அனந்தங்களான -ஜன பத -நகர -விமான -மண்டப -கோபுராதி -விபவங்களை-யுடைத்தான-திவ்ய லோகத்தில்
பிரதானமான திரு மா மணி மண்டபத்திலே –
அனந்த தேவாத்மகமான திவ்ய யோக பரியங்க விசேஷத்திலே த்ரிவித சேதனரையும் த்ரிவித அசேதனங்களையும்
ஸ்வ அதீனங்கள் ஆக்கிக் கொண்டு –
வைகுண்ட து பரே லோகே-ஸ்காந்தபுராணவாக்யம். வைகுண்டே து – வைகுண்டம் என்
னப்படும், பரேலோகே- உத்தமமான லோகத்தில், ( பெரிய பிராட்டியாருடன் கூடிய பகவான் தன்னிடத்தில் மிகுந்த ப்ரீதியையுடையநித் களுடனும் முக்தர்களுடனும் எழுந்தருளியிருக்கிறான்.- -இத்யாதிகளில் படியே சர்வ சேஷியான ஸ்ரீ யபதி எழுந்து அருளி இருக்கும் படி
முமுஷு தசையில் நித்ய அனுசந்தேயமாய்
முக்த தசையில் நித்ய அனுபாவ்யமாய் இருக்கும்
———–
47—இப்பர அவர தத்வங்கள் இரண்டுக்கும் ஓரோர் ஆகாரங்களாலே சாதார்ம்யம் உண்டேயாகிலும்
விசேஷ ஆகாரங்களாலே வேறுபட்டு
சேஷ சேஷி பாவ நியந்தரு நியாம்ய பாவ -வியாப்ய வியாபக பாவங்களால் இவை ஒன்றி நிற்கும் நிலை
பிரணவத்திலும்
சத்ய சப்தத்திலும் –
புருஷ -சப்தத்திலும் –
நாராயண -சப்தத்திலும் –
புருஷோத்தம சப்தத்திலும்
கறந்த பாலுள் நெய்யே போல் — திருவாய்-8-5-10-அடியேன் உள்ளான்-திருவாய்- 8-8-2—ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை-திருவாய்- 8-8-4-
உலகு உன்னோடு ஒன்றி நின்று நிற்க வேறு நிற்றி- திருச்சந்த-12 -இத்யாதிகளிலும் சுருங்க அனுசந்திக்கலாம் –
48—ஒன்றை அறிகையும் அதன் அடியாக வியாபரிக்கையும் ஒரு பலத்தை புஜிக்கையும்
தனக்குத் தான் தோன்றுகையும் இல்லாத த்ரவ்யம் அசேதன தத்வம்-
49—இவற்றை- இந்த நான்கையும் – பராதீனமாக -பகவத் சங்கல்பம் அடியாக -யுடையது ஜீவ தத்வம்-
50—த்ரைவித சேதன அசேதனங்களுடைய -ஸ்வரூப ஸ்திதி-ப்ரவ்ருத்திகள் மூன்றும் தான் இட்ட வழக்காம் படி நிற்கிறது பர தத்வம்-
51—இத் தத்வ விவேகத்துக்கு பிரயோஜனம்
தன் விசேஷணங்களை அறியாமையால் வருகிற ப்ரக்ருதி -ஆத்ம பிரமமும்
தன் விசேஷ்யத்தை அறியாமையால் வருகிற ஸ்வ தந்த்ர -ஆத்ம பிரமமும் -கழிந்து
தன் ஸ்வரூபத்துக்கு த்யாஜ்ய உபாதேய புருஷார்த்தங்களைத் தெளிந்து
விபரீத அபிசந்தி நிவ்ருத்தியும் ப்ராப்ய ருசியும் பிறந்து
ப்ராபக சாபேஷனாகை-ஆகிய இவ்வைந்தும் பிரயோஜனங்கள்
திரு நாராயணன் எனும் தெய்வமும் சித்தும் அசித்தும் என்று
பெரு நான்மறை முடி பேசிய தத்வ மூன்றிவைக் கேட்டு
ஒருநாள் யுணர்ந்தவர் உய்யும் வகை அன்றி ஓன்று உகவார்
இரு நால் எழுத்தின் இதயங்கள் ஓதின எண் குணரே
லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன் என்று சொல்லப்படுகிற பர தேவதையும், சேதனமும், அசேதனமும், என்று இப்படி பெரிதான நான்கு வேதங்களின் முடியான உபநிஷத் கூறிய மூன்றாகிய இத்த்த்வங் களை ஒருகாலத்தில் ஆசார்யர்களிடமிருந்து கேட்டறிந்தவர்களான எட்டெழுத்தின் தாத்பர்யங்களில் சொல்லப்பட்ட, அன்றிக்கே திருவஷ்டாக்ஷரத்திற்கு ஹ்ருதயம் என்று சொல்லப்பட்ட நமஸ்ஸில் கூறப்பட்டதான விலக்ஷணமான (பரதந்த்ர்யாதி ) குணங்களையுடையவர்கள் உஜ்ஜீவிக்கும் ப்ரகாரத்தைத் தவிர வேறொன்றையும் தங்களுக்கு உபாதேயமாக அங்கீகரிக்கமாட்டார்கள்.
காரணமாய் யுயிராகி அனைத்தும் காக்கும் கருணை முகில் கமலையுடன் இலங்குமாறும்
நாரணனார் வடிவான யுயிர்கள் எல்லாம் நாம் என்று நல்லடிமைக்கு ஏற்குமாறும்
தாரணி நீர் முதலான மாயை காலம் தனி வான் என்று இறை யுருவாம் தன்மை தானும்
கூரணி சீர் மதியுடைய குருக்கள் காட்டக் குறிப்புடன் நாம் கண்டவை கூறினோமே
எல்லா வஸ்துக்களுக்கும் காரணமாய், அவைகளுக்கு அந்தர்யாமியாய் எல்லா வஸ்துக்களையும் ரக்ஷிக்கிற கருணையாகிற ஜலத்தை உள்ளேயடக்கிக்கொண்டிருக்கிற மேகம் போன்ற பகவான் ல மி யுடன் ப்ரகாசிக்கும் ப்ரகாரத்தையும், காராயணனுக்குச் சரீரமானஎல் லா ஜீவாத்மாக்களும் ‘ நாம் ‘ என்கிற அஹங்காரத்தை ஜயித்து, நல்ல கைங்கர்யத்திற்கு யோக்யர்கள்ஆகிறபடியையும்,பூமிஜலம்இவை முதலான ப்ரக்ருதியின் பரிணாமங்கள், காலம் சுத்த ஸத்த்வம் என்று சொல்லப்பட்ட இவைகள் சரீரமாக இருக்கும் ஸ்வபாவத்தையும், கூர்மையினால் அலங்கரிக்கப்பட்ட குணங்களையுடையபுத்தியுடைய ஆசார்யர்கள் காட்ட அவதானத்துடன் நாம் தெரிந்துகொண்ட விதமாக இங்கு ப்ரதிபாதித்தோம்.
ஸ்தநந்தையர் அபி சக சைவ ஸூஹ்ரஹ சமுத்தித நிதிரிவ வேங்கடேச வராத்
பர அவர ஸ்திதிமிக தத்வ மாத்ருகா கரதோத்யசவ் கரதல மவ்க்தி கோபமாம் —
ஸ்தநந்தயை பரிபக்வமடையாத புத்தியுடையவர்களினாலும்
ஸைவ – சீக்கிரத்திலேயே. ஸக்ரஹா – ஸுலபமாக அறியக்கூ
இதம், வேங்கடேச்வராத் – வேங்கடேசன் என்கிற திருநாமத்தையுடைய ஆசார்யனிடமிருந்து, நிதி: இவ – புதையல் போல, ஸழுத்திதா -உண்டாயிருக்கிறதுமான,அஸௌ – இந்த, தத்த்வமாத்ருகா – ஸ்ரீதத்த்வமாதருகை என்கிற ரஹஸ்யம், பராவர ஸ்த்திதிம் – பரம் அவரம் என்னப்படும் இரண்டு வகையான தத்த்வங்களின் நிலையை, இஹ-இங்கே,க தல மௌக்திகோபமாம்-உள்ளங்கையில் முத்துப்போலே ஸ்பஷ்டமாகத் தெரியும்படி, கரோதி – செய்கிறது.
அக்ஷயஸ் அந்தி மகரந்த ரஸ ப்ரஸக்தான் அபியார்த்தயே முரபிதாங்க்ரி சரோஜப்ரங்கான்
காமம் ப்ரஸீதத யதா அஹம் அநந்ய பாவ கர்ணாம்ருதானி பவதா மாதாரேயம்
அக்ஷய்ய – அழிவில்லாத,சாந்தி -சாந்தியாகிற, மகரந்த ரஸதேனின்ருசியில், ப்ரஸக்தாங்- மிகவும் ஆசையுடையவர்களாயும்,முர பித்- பகவானுடைய, ஸரோஜ – தாமரைப்பூப்போன்ற, அங்க்ரி- திருவடிகளில் பருங்காந் – வண்டுகளைப் போலேயிருக்கிற பாகவதோத்தமார்களை, அப்பர்த்தயே – ப்ரார்த்திக்கிறேன்,
யதா – எப்படி, அஹம் -நான், அநந்யபாவ: – வேறொரு யோஜனத்திலும் செல்லாத மனத்தை யுடையவனாய், அநந்ய புரவா-என்கிற பாடத்தில் பகவானைத் தவிர வேறு ஒரு இடத்திலும் மனதைச் செலுத்தாத நீங்கள், பவதாம் – உங்களுக்கு, கணாம்ருதாநி – கேட்ப
தற்கு மிகவும் இனிதான சப்தங்களை, அவதாரயேயம் – உண்டாக்கக் கடவேனோ (அப்படி), காமம் – மிகவும், ப்ரஸீதத – அனுக்ரஹத்தைச் செய்யவேண்டும்.
இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீதத்த்வமாத்ருகை முற்றிற்று.
—————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply