ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
ஸ்ரீ தத்வ ரத்னாவளி –
இது அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் பதினோராவது ஸ்ரீரங்கத்தில் அருளிச்செய்யப்பட்டது )
வண்மை யுகந்த வருளால் வரம் தரு மாதவனார்
உண்மை வுணர்ந்தவர் ஓதுவிக்கின்ற வுரை வழியே
திண்மை தரும் தெளிவு ஒன்றால் திணி இருள் நீங்கிய நம்
தண்மை கழிந்தனம் தத்துவம் காணும் தரத்தினமே –
ஜீவ தத்த்வம்
ஸதாசார்யோபதே பூர்வகமாக அறியவேண்டிய தத்த்வ த்ரயத்தில் ஜீவதத்த்வமாவது-
1-ஜீவாத்மா வாவது -ஸ்வரூபத்தாலும் ஸாமர்த்யத்தாலும் பரிச்சின்னமான அஹம் அர்த்தம்
2-த்ரிவித ஜீவ வர்க்கத்தினுடைய ஸ்வரூபாதிகள் சர்வ ரக்ஷகனான ஸ்ரீ யபதிக்கு-அநந்யார்ஹ நிருபாதிக சேஷபூதங்கள்
என்று நிகமாந்தங்களில் நிர்ணிதம் ஆகையாலே
இஜ் ஜீவன் தன் ஸ்வரூபத்திலும் தனக்கு உள்ள அதிசயங்களிலும் தான் செய்யும் சேஷ விருத்திகளிலும்
தனக்கு பிரதான சேஷித்வமும் உபகார பிரதியுபகார பிரசங்கமும் அற சர்வ அவஸ்தையிலும் நிர்மமனாய் இருக்க ப்ராப்தன்-
3–இவனுடைய ஸ்வரூப ஸ்திதி யாதிகள் எல்லாம் பர தந்த்ரங்களாக இருக்கையாலே
தன்னையும் பிறரையும் பற்ற இவன் நிரபேஷ ரக்ஷகன் அல்லன்-
4–சேஷத்வத்தாலே ஸ்வாமிக்கு இஷ்ட விநியோக அர்ஹனாம்
5–பார தந்திரத்தால் யதேஷ்ட வினியுக்தனாம்-
6–அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறதுக்கு ஸ்வாரத்த ப்ர வ்ருத்தனான ஸ்வாமியினுடைய க்ருதக்ருதையிலும்
அவனுடைய விநியோக விவேஷத்தாலே க்ருதார்த்தனான தாச பூதனுடைய க்ருதஞ்ஞதையிலும் தாத்பர்யம்-
7–இச் சேஷத்வ பாரதந்தர்யங்களும் நித்ய சித்த ஞான அனுஷ்டான சாமர்த்யங்களும் கூட
ஸ்வ தந்த்ர ஸ்வாமி சம்மதங்களான உபாய பல விசேஷங்களுக்கு உப யுக்தங்களாம்-
8—இஜ் ஜீவ தத்வம் அதேயத்வ விதேயத்வ-சேஷத்வ நியமத்தாலே உடன் மிசை உயிர் எனக் கரந்து நிற்கிற
உயர்வற உயர்நலம் உடையவனுடைய தன் உடம்பும் தானும் உடைமாபாய் இருக்கும்
அதேயத்வம் -ஸ்வரூபம் ஸ்திதி -இவன் அதீனம்
விதேயம் -என்றது இவன் சங்கல்ப அதீனம் –
9—இப்படி சரீரத்திய பரதந்த்ரமாய்ச் சரீரங்களையும் எடுத்து ஞாத்ருத்வ கர்த்ருத்வாதிகளை உடைத்தாய் இருந்தாலும் ஸ்வரூபத்தில்
நாமாந்தரம் வரும்படியான அவஸ்தா விசேஷங்கள் இல்லாமையால் ஜீவனுக்கு விசேஷத்து நித்யத்வ நிர்வாகதவாதிகளைச் சொல்கிறது
நாம ரூபங்கள் சரீரத்தின் அடிப்படையிலே தானே –
10—ஸ்வரூப நித்யத்வம் சேதன அசேதனங்கள் எல்லா வற்றுக்கும் துல்யம்
————-
அசேதந தத்த்வம்--11–அசேதனம் -ஆவது அறிவில்லாத வஸ்து-
12—இது ஸ்வ ப்ரகாசத்துக்கும் பர ப்ரகாசத்திற்கும் பலியாமையாலே இதற்கு பிரதியகத்வ போக்த்ருத்வங்கள் இல்லை-
13—தன்னையும் பிறரையும் காட்டுகிற ஞானத்துக்கு ஆஸ்ரயம் அல்லாமையாலே ஸ்வ புத்தி பூர்வ ப்ரவ்ருத்தி லக்ஷண கர்த்ருத்வம் இல்லை
14—அசேதன த்ரவ்யங்களில் த்ரை குணம் சர்வேஸ்வரனுக்கு லீலா விபூதியாய் –
சம்சாரிகளுக்குக் கரண களேபராதி ரூபமாய்க் கொண்டு பரிணமித்துக் கர்ம அனுகுண வைஷம்யத்தாலே
விஷமங்களான அனுகூல ப்ரத்யகூலங்களை உடைத்தாய் இருக்கும்-
15—இது தானே இவர்கள் முக்தரானால் ஸ்வாமி விபூதியான வேஷத்தாலே ஸ்வ பாவிகமான அனுகூல அதிசயத்தை உடைத்தாம் –
16—பூர்வ அவஸ்தையில் தன்னைப் பற்ற உண்டான பிரதிகூல்யமும் பர பிரதிகூலமான ஆகாரமும் முக்தனுக்குத் தோன்றா நின்றாலும்
ஈஸ்வரனுக்குப் போலே இவனுக்கும் பிரதிகூலமாய் இராது
முக்தனுக்கு சர்வ சாம்யா புத்தி உண்டே -பரிபூர்ண ப்ரஹ்மானந்தம் உண்டே-
17—சத்வ மாத்ர ஆஸ்ரயமான த்ரவ்யம் போக விபூதியில் ஸூரி ஸேவ்யமான ஸ்ரீ யபதிக்கும் ஸூரிகளுக்கும்
ஸூரி துல்ய ஞான விகாசம் பெற்ற முக்தருக்கும்
ஸ்வ சந்தா தேகாதி ரூபமாய் ஸர்வதா அத்யந்த அனுகூல ரூபமாய் இருக்கும்-
18—சத்வாதி குண த்ரயம் இல்லாத கால த்ரவ்யம் விபூதி த்வயத்தையும் வியாபித்து நின்றாலும் கல்பாதி விபாகத்தாலே
லீலா விபூதியில் விகார விசேஷங்களுக்கு நியாமகமாக இருக்கும் –
19-ஜீவாத்ம பரமாத்மாக்களுடைய ஞானமும் குண த்ரய ரஹிதமான அசேதன த்ரவ்யமாய் தன்னையும் தான் அல்லாதவற்றையும்
தன் ஆஸ்ரயத்துக்கு பிரகாசிப்பிக்க வற்றாகையாலே-சித் சப்த வாஸ்யமாய் தான் ஒரு ஞானத்திற்கு
தான் ஒரு ஆஸ்ரயம் அல்லாமையாலே அசித் சப்த வாஸ்யமுமாய் இருக்கும்-
20– யுக்தமான சேதன த்ரவ்யம் ஈஸ்வரனைப் போலே ஆத்மா என்றும்
அசேதன த்ரவ்யம் கேவல குணங்களைப் போலே அநாத்மா வென்றும் பிரிக்கப்படும்-
———–
ஈச்வர தத்த்வம்--21—ஈஸ்வரனானவன் -சர்வ நியாந்தாவான -நாராயணன்-
22—நித்ய அநித்ய சர்வ வஸ்துக்களும் இவனுடைய நித்ய அநித்ய இச்சா சித்தங்களாய் — இவனால் வியாப்தங்களாய் –
இவனுக்கு அப்ருதக் சித்த பிரகாரங்களாக இருக்கும்-
23—இவன் சர்வ காரணங்களுக்கும் காரணமாம் போது -உபாதான பூத -சர்வ தத்துவங்களுக்கும் அந்தராத்மாவாய் நின்று
வாமன -த்ரிவிக்ரம நியாயத்தாலே -விசிஷ்ட வேஷத்தாலே உபாதானுமாய் உபேதேயனுமாய்–காரண கார்ய வஸ்துமாய்- இருக்கும்-
24—சங்கல்ப விசேஷங்களாலும் நிமித்த பூத சர்வ வஸ்துக்களாலும் விசிஷ்டானாய்க் கொண்டு நிமித்தமுமாம் –
25—இவனுக்கு அந்தர் வியாப்தியாவது-சர்வ வஸ்துக்களிலும் தான் இல்லாத இடம் இல்லாத படி நிற்கை-
26—பஹிர் வியாப்தியாவது பரிச்சின்ன வஸ்துக்களுக்குப் புறம்பும் உண்டாகை-
27—சர்வ சரண்யனான இவனுக்கு ஸ்வரூப குண விபூதிகள் எல்லாவற்றாலும் உள்ள நித்ய பரத்வம் உத்தர அவதி ரஹிதமாய் இருக்கும்-
28—அதில் சீலாதிகளால் வந்த பரத்வம் தானே ஸுலப்ய பர்யந்தமாய் இருக்கும்-
29—அது அடியாக சாஸ்த்ர விஹித ஸாத்ய உபாய வசீகரணான இவன் சித்த உபாயமாம்-
30—ஸாத்ய ப்ராப்யமான கைங்கர்யத்துக்குப் பிரதி சம்பந்தியாய்க் கொண்டு சித்த ப்ராப்யனாம் –
இந்த தத்வ ரத்னாவளியிலே ஏதேனும் ஒன்றையும் -எல்லா பிரகாரத்தாலும் -தெளிகை சர்வஞ்ஞனுக்கு அல்லது கூடாமையாலே
உபயுக்த தமமான இவ்வளவு தெளிந்தாலும் உபாய பல சித்தி உண்டாகும் –
நாராயணன் பரன் நாம் அவனுக்கு நிலையடியோம்
சோராது அனைத்தும் அவன் உடம்பு என்னும் ஸ்ருதிகளால்
சீரார் பெரும் தகைத் தேசிகர் எம்மைத் திருத்துதலால்
தீரா மயல் அகற்றும் திறம்பாத் தெளிவுற்றனமே
மானாத சம்மிதத்வே அபி மஹதி பரமார்த்தா
தத்வ ரத்னாவளிரியம் சத்பிர் தார்யம் தமோ அபஹ –
மாநத:- அளவினால், ஸம்மிதத்வேபி -அளவிடப்பட்டிருந்தபோதிலும், பரமார்த்தத:- உத்க்கஷ்டங்களான அர்த்தங்களை ப்ரதிபாதிப்பதினால். அன்றிக்கே உண்மையான அர்த்தங்களைச் சொல்லுகிறபடியினால், அன்றிக்கே மோக்ஷமாகிற பரம ப்ரயோஜனத்தை உண்டாக்கு கிறபடியினால் அதுவுமன்றிக்கேஅ திகமான த்ரவ்யத்தினால்அடையக்
கூடியதாகையினால், ம ஹ தீ- பெரியதாயிருக்கிற, தமோபஹா – அஜ்ஞாநத் தைப்போக்கடிக்கக்கூடிய, இயம் – இந்த தத்த்வரத்னாவளி:- தத்த்வரத்னாவளீ என்னும் கரந்தமானது அன்றிக்கே ரத்னமயமான ஹாரமானது, ஸத் -ஸத்துக்களினால் தார்பா – மார்பில் தரிக்கத் தக்கது, எப்பொழுதும் த்யானம் செய்யத்தக்கது
ஸ்ரீ தத்வ ரத்னாவளி சம்பூர்ணம் –
————————————————-
ஸ்ரீ தத்வ ரத்னாவளி பிரதிபாத்ய சங்க்ரஹம்
இது அம்ருத ரஞ்ஜன் ரஹஸ்யங்களிவ்பன்னிரண்டாவது
ஸ்ரீரங்கத்தில் அருளிச்ெய்யப்பட்டது
தத்த்வரத்னாவளியில் முதல் கவியாலும் முடிவில் கவியாலும் ஆசார்யன் பண்ணின க்ருஷி பலித்தபடியைச் சொல்லுகிறது. நடுவுள்ள வாக்யங்களாலே ஒவ்வோர் குழி + முதலாக
எட்டுக்குழி விளைந்தபடியைச் சொல்லுகிறது.
“ஒவ்வோர் குழி முதலாக’ என்றது. ஜீ தத்த்வத்தை நிருபிக்கும் முதல்வாக்யம் ஒருகுழி, எட்டுக்குழியாக விளைந்தபடி பாவது எட்டு வாக்கியங்களினால் மேல் ஜீவாத்ம ஸவருபத்தை நிருபிரகாரம்.
இப்படியே மேல் பதினோராவது வாக்யம் ஒரு குழி. அப்பயே இருபத் தோராவது வாக்யம் ஒரு குழி பத்தாவது இருபதாவது ப்பதாவது வாக்யங்கள் பொதுவான அம்சத்தை நிரூபிக்கிறபடியில்அவைகள் ஒரு குழியாக எடுக்கப்படவில்லை என்று அறிய தக்கது.
ஜீவவிஷயமான பத்து வாக்யத்திலே ஜீவனுடைய லக்ஷணமும், இவனுடைய மேஷத்வ ப்ரகாரமும், பாரதந்த்ர்ய ப்ரகாரமும், பேஷதவோபயோகமும், பாரதந்த்ர்யோபயோகமும்,
உபயஸித்தமானஉசிதஉபயோகவியேஷமும்,ஜ்ஞாநாதிஸஹிதோபயோகமும், ஆதேயத்வ விதேயதவ ஸஹித உபயபலமும்,உக்தப்ரகாரங்களாலே ஸங்கித அநித்யத்வாதி பரி.ஹாரமும், ஸர்வ த்ரவ்யஸாதாரண ஸ்வரூபநித்யத்வமும் என்றிவை பத்தும் ப்ரதி
பாத்யம்.
1-ஜீவாத்மா வாவது -ஸ்வரூபத்தாலும் ஸாமர்த்யத்தாலும் பரிச்சின்னமான அஹம் அர்த்தம் —
ஜீவனுடைய லக்ஷணம் –
2-த்ரிவித ஜீவ வர்க்கத்தினுடைய ஸ்வரூபாதிகள் சர்வ ரக்ஷகனான ஸ்ரீ யபதிக்கு-அநந்யார்ஹ நிருபாதிக சேஷபூதங்கள் என்று
நிகமாந்தங்களில் நிர்ணிதம் ஆகையாலே
இஜ் ஜீவன் தம் ஸ்வரூபத்திலும் தனக்கு உள்ள அதிசயங்களிலும் தான் செய்யும் சேஷ விருத்திகளிலும்
தனக்கு பிரதான சேஷித்வமும் உபகார பிரதியுபகார பிரசங்கமும் அற சர்வ அவஸ்தையிலும் நிர்மமனாய் இருக்க ப்ராப்தன் –
ஜீவனுடைய -ஸ்வ பாவிக -சேஷத்வ பிரகாரம் -சேஷத்வமே ஜீவனுடைய நிரூபக தர்மம்
3–இவனுடைய ஸ்வரூப ஸ்திதி யாதிகள் எல்லாம் பர தந்த்ரங்களாக இருக்கையாலே
தன்னையும் பிறரையும் பற்ற இவன் நிரபேஷ ரக்ஷகன் அல்லன்-
ஜீவனுடைய பாரதந்த்ர பிரகாரம்
4–சேஷத்வத்தாலே ஸ்வாமிக்கு இஷ்ட விநியோக அர்ஹனாம்–
ஜீவனுடைய சேஷத்வ பிரயோகம்
5–பார தந்திரத்தால் யதேஷ்ட வினியுக்தனாம் —
ஜீவனுடைய பர தந்த்ரய உபயோகம்
6–அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறதுக்கு ஸ்வாரத்த ப்ர வ்ருத்தனான ஸ்வாமியினுடைய க்ருதக்ருதையிலும்
அவனுடைய விநியோக விவேஷத்தாலே க்ருதார்த்தனான தாச பூதனுடைய க்ருதஞ்ஞதையிலும் தாத்பர்யம் –
உபய சித்தமான-நித்ய தாஸ்ய பார தந்தர்ய – உசித உபயோக விசேஷம்
7–இச் சேஷத்வ பாரதந்தர்யங்களும் நித்ய சித்த ஞான அனுஷ்டான சாமர்த்யங்களும் கூட ஸ்வ தந்த்ர ஸ்வாமி சம்மதங்களான
உபாய பல விசேஷங்களுக்கு உப யுக்தங்களாம்-
ஜீவனுடைய ஞானாதி ஸஹித உபயோகம்
8—இஜ் ஜீவ தத்வம் அதேயத்வ விதேயத்வ-சேஷத்வ நியமத்தாலே உடன் மிசை உயிர் எனக் கரந்து நிற்கிற
உயர்வற உயர்நலம் உடையவனுடையத் தன் உடம்பும் தானும் உடைமையாய் இருக்கும்
அதேயத்வம் -ஸ்வரூபம் ஸ்திதி -இவன் அதீனம்-
விதேயம் -என்றது இவன் சங்கல்ப அதீனம் –
அதேயத்வ விதேயத்வ ஸஹித உபய பலன்
9—இப்படி சரீரத்திய பரதந்த்ரமாய்ச் சரீரங்களையும் எடுத்து ஞாத்ருத்வ கர்த்ருத்வாதிகளை உடைத்தாய் இருந்தாலும் ஸ்வரூபத்தில்
நாமாந்தரம் வரும்படியான அவஸ்தா விசேஷங்கள் இல்லாமையால் ஜீவனுக்கு விசேஷத்து நித்யத்வ நிர்வாகதவாதிகளைச் சொல்கிறது
நாம ரூபங்கள் சரீரத்தின் அடிப்படையிலே தானே
யுக்த பிரகாரங்களாலே சங்கீத அநித்யவாதி பரிக்ரஹம்-
10—ஸ்வரூப நித்யத்வம் சேதன அசேதனங்கள் எல்லா வற்றுக்கும் துல்யம்-
சர்வ த்ரவ்ய சாதாரண ஸ்வரூப நித்யத்வம்-
அசேத விஷயமான பத்து வாக்யத்தில் அசேதநத்தி னுடைய லக்ஷணமும், அதனுடைய ப்ரத்யக்த்வ போகத்ருத்வ அபாவமும், புத்திபூர்வ கர்த்ருத்வ அபாவமும், அசேத த்ரவ்
யங்களில் த்ரிகுணத்திற்கு கர்மவஸ்யரைப் பற்ற (உண்டான) ப்ராதிகூல்யாதி ப்ரகாரமும், அகர்மவயரைப்பற்ற இதனுடைய ஆநுகூல்யாதிலயமும்ப்ராதிகூல்யஸங்காபரிஹாரமும், பரமபதத் தினுடைய போக்யதாதியைமும், காலத்தின் ப்ரகாரமும், தர்மபூத ஜ்ஞாநத்தின்ப்ரகாரமும், இவற்றினுடைய அநாத்மத்வமும் என்றிவை பத்தும் ப்ரதிபாத்யம்.
11–அசேதனம் -ஆவது அறிவில்லாத வஸ்து
அசித்தினுடைய லக்ஷணம்
12—இது ஸ்வ ப்ரகாசத்துக்கும் பர ப்ரகாசத்திற்கும் பலியாமையாலே இதற்கு பிரதியகத்வ போக்த்ருத்வங்கள் இல்லை
அசித்தினுடைய ப்ரத்யக்த்வ போத்ருத்வ அபாவம்-
13—தன்னையும் பிறரையும் காட்டுகிற ஞானத்துக்கு ஆஸ்ரயம் அல்லாமையாலே
ஸ்வ புத்தி பூர்வ ப்ரவ்ருத்தி லக்ஷண கர்த்ருத்வம் இல்லை-
புத்தி பூர்வ கர்த்ருத்வ அபாவம்-
14—அசேதன த்ரவ்யங்களில் த்ரை குணம் சர்வேஸ்வரனுக்கு லீலா விபூதியாய் -சம்சாரிகளுக்குக் கரண களேபராதி ரூபமாய்க் கொண்டு
பரிணமித்துக் கர்ம அனுகுண வைஷம்யத்தாலே விஷமங்களான அனுகூல ப்ரத்யகூலங்களை உடைத்தாய் இருக்கும்
அசேதன த்ரவ்யங்களில் த்ரை குணத்துக்கு கர்ம வஸ்யரை பற்றி உண்டான பிரதிகூலாதி பிரகாரம்
15—இது தானே இவர்கள் முக்தரானால் ஸ்வாமி விபூதியான வேஷத்தாலே ஸ்வ பாவிகமான அனுகூல அதிசயத்தை உடைத்தாம் –
அகர்ம வஸ்யரைப் பற்ற இதனுடைய ஆனுகூல்ய அதிசயம்
16—பூர்வ அவஸ்தையில் தன்னைப் பற்ற உண்டான பிரதிகூல்யமும் பர பிரதிகூலமான ஆகாரமும் முக்தனுக்குத் தோன்றா நின்றாலும்
ஈஸ்வரனுக்குப் போலே இவனுக்கும் பிரதிகூலமாய் இராது
முக்தனுக்கு சர்வ சாம்யா புத்தி உண்டே -பரிபூர்ண ப்ரஹ்மானந்தம் உண்டே-
பிரதிகூல சங்க பரிஹாரம்
17—சத்வ மாத்ர ஆஸ்ரயமான த்ரவ்யம் போக விபூதியில் ஸூரி ஸேவ்யமான ஸ்ரீ யபதிக்கும் ஸூரிகளுக்கும்
ஸூரி துல்ய ஞான விகாசம் பெற்ற முக்தருக்கும்
ஸ்வ சந்தா தேகாதி ரூபமாய் ஸர்வதா அத்யந்த அனுகூல ரூபமாய் இருக்கும்-
பரமபத்தினுடைய போக்யதா அதிசயம்
18—சத்வாதி குண த்ரயம் இல்லாத கால த்ரவ்யம் விபூதி த்வயத்தையும் வியாபித்து நின்றாலும் கல்பாதி விபாகத்தாலே
லீலா விபூதியில் விகார விசேஷங்களுக்கு நியாமகமாக இருக்கும் –
காலத்தின் பிரகாரம்
19-ஜீவாத்மா பரமாத்மாக்களுடைய ஞானமும் குண த்ரய ரஹிதமான அசேதன த்ரவ்யமாய்
தன்னையும் தான் அல்லாதவற்றையும் தன் ஆஸ்ரயத்துக்கு பிரகாசிப்பிக்க வற்றாகையாலே-
சித் சப்த வாஸ்யமாய் தான் ஒரு ஞானத்திற்கு தான் ஒரு ஆஸ்ரயம் அல்லாமையாலே அசித் சப்த வாஸ்யமுமாய் இருக்கும்
தர்ம பூத ஞானத்தின் பிரகாரம்-
20– யுக்தமான சேதன த்ரவ்யம் ஈஸ்வரனைப் போலே ஆத்மா என்றும்
அசேதன த்ரவ்யம் கேவல குணங்களைப் போலே அநாத்மா வென்றும் பிரிக்கப்படும்-
இவற்றினுடைய அநாத்மத்வம்
————-
பர தத்த்வ விஷயமான பத்து வாக்யத்தில் ஈ வரனுடைய லக்ஷணமும், இவனுடைய நிரங்கு ஸ்வாதந்த்ர்யாதிகளும், உபாதாநகாரணத்வ ப்ரகாரமும், நிமித்த காரணத்வ ப்ரகாரமும்,
அந்தர்வ்யாப்தி ஸ்வரூபமும், பஹிர் வ்யாப்தி நியமமும், ஸர்வ ப்ரகார பாரம்யமும், ஸௌலப்ய வினேஷமும் ஸித்தோபாயத்வமும் ஸித்த ப்பாரயத்வமும் என்றிவை பத்தும் ப்ரதிபாத்யம்.
21—ஈஸ்வரனானவன் -சர்வ நியாந்தாவான -நாராயணன் –
ஈசுவரனுடைய லக்ஷணம்
22—நித்ய அநித்ய சர்வ வஸ்துக்களும் இவனுடைய நித்ய அநித்ய இச்சா சித்தங்களாய் — இவனால் வியாப்தங்களாய் –
இவனுக்கு அப்ருதக் சித்த பிரகாரங்களாக இருக்கும்-
இவனுடைய நிரங்குச ஸ்வ தந்த்ராதிகள்
23—இவன் சர்வ காரணங்களுக்கும் காரணமாம் போது -உபாதான பூத -சர்வ தத்துவங்களுக்கும் அந்தராத்மாவாய் நின்று
வாமன -த்ரிவிக்ரம நியாயத்தாலே -விசிஷ்ட வேஷத்தாலே உபாதானுமாய் உபேதேயனுமாய்–காரண கார்ய வஸ்துமாய்- இருக்கும்
உபாதான காரணத்வ பிரகாரம்
24—சங்கல்ப விசேஷங்களாலும் நிமித்த பூத சர்வ வஸ்துக்களாலும் விசிஷ்டானாய்க் கொண்டு நிமித்தமுமாம் –
நிமித்த காரணத்வ பிரகாரம்
25—இவனுக்கு அந்தர் வியாப்தியாவது-சர்வ வஸ்துக்களிலும் தான் இல்லாத இடம் இல்லாத படி நிற்கை-
அந்தர் வியாப்தி ஸ்வரூபம்
26—பஹிர் வியாப்தியாவது பரிச்சின்ன வஸ்துக்களுக்குப் புறம்பும் உண்டாகை-
பஹிர் வியாப்தி நியமம்
27—சர்வ சரண்யனான இவனுக்கு ஸ்வரூப குண விபூதிகள் எல்லாவற்றாலும் உள்ள நித்ய பரத்வம் உத்தர அவதி ரஹிதமாய் இருக்கும்
சர்வ பிரகார பாரம்யம்
28—அதில் சீலாதிகளால் வந்த பரத்வம் தானே ஸுலப்ய பர்யந்தமாய் இருக்கும்
ஸுலப்ய விசேஷம்
29—அது அடியாக சாஸ்த்ர விஹித ஸாத்ய உபாய வசீகரணான இவன் சித்த உபாயமாம்
சித்த உபாயத்வம்
30—ஸாத்ய ப்ராப்யமான கைங்கர்யத்துக்குப் பிரதி சம்பந்தியாய்க் கொண்டு சித்த ப்ராப்யனாம் –
சித்த ப்ராப்யத்வம்
நிகமந வாக்யத்தில் இவ்வளவு தெளிவு கொண்டும் ஈடேற லாம் என்று சேதநரைத் தேற்றுகிறது.
மேல் அநுஷ்டுப்பில் இதின் சிறுமை கண்டு இகழாதே சீர்மையைக் கண்டு சிந்தாமல் கொள்ளச் சொல்லுகிறது.
இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்டஸ்ரீஸூக்திகளுள் தத்த்வரத்னாவளி ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம் முற்றிற்று
ஸ்ரீ தத்வ ரத்னாவளி பிரதிபாத்ய சங்க்ரஹம் சம்பூர்ணம்
—————————————–
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply