ஸ்ரீ பாஷ்யம் சாரம் –சாரீரகத்தில் பேடிகா விபாகம் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

வேதாபா ஹாரிணம் தைத்யம் மீநரூபி நிராகரோத்
ததர்த்த அபஹாரிண சர்வான் வ்யாஸ ரூபி மஹேஸ்வர
சம்யங்நியாய கலாபேந மஹதா பாரதேநச
உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே —

தஸ்யைஷா ஏவ சாரீர ஆத்மா -சாரீரனை பற்றி கூறும் சாஸ்திரம் சாரீரகம் -சம்ஹிதம் ஏதத் சாரீரகம் -என்பர் பகவத் போதாயனரும் –
சாரீரகம் -ப்ரஹ்ம மீமாம்சை உத்தர மீமாம்சை /சதுஸ் ஸூத்ரி –உபோத்காதம் /
அடுத்து ஈஷத் அதிகரணம் -அசித் விலக்ஷணன் -தன் நிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் -அவனே உபாய பூதன் -/
ஆனந்தமய அதிகரணத்தில் -சம்சாரி விலக்ஷணன் -பரம ப்ராப்ய பூதன் -முக்த விலக்ஷணன் என்பதை
ஆனந்தமய அப்யாசாத் –காமாச்ச நாநுமா நாபேஷா –நேதரோ அநுபபத்தே –பேத வ்யபதேச்சா -என்று அறுதி இட்டு
மேலே அந்த அதிகரணத்திலே அவன் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் என்று அறுதி இட்டார் -இவற்றின் விவரணம் மேலே -149-அதிகாரணங்கள் ஆகும் –

—————————————————————
முதல் அத்யாயம் –முதல் பாதம் -11- / இரண்டாம் -6- / மூன்றாம் -10-/ -நான்காம் பாதம் -8- ஆக -35-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம்- முதல் பாதம் -10-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -7-/ நான்காம் -8- /-ஆக-33-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம்- முதல் பாதம் -6-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -26-/ நான்காம் -15- /-ஆக-55-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் -முதல் பாதம் -11-/ இரண்டாம் –11-/ மூன்றாம் -5-/ நான்காம் –6–ஆக-33-அதிகரணங்கள்
-மொத்தம் -156-அஷோர்மி-அதிகாரண சாராவளீ ஸ்லோகம் –

——————-

பூர்வத்விகம்–விஷய த்விகம் –சித்த த்விகம் –/ உத்தர த்விகம் –விஷயி த்விகம் -ஸாத்ய த்விகம்
சமன்வய அத்யாயம் / அவிரோத அத்யாயம் /சாதன அத்யாயம் /பல அத்யாயம் –

பூர்வ த்விகம்
ப்ரேம யத்வ–வ்யாபக –கார்யதா -நிரூபித -காரணத்வம் -ப்ரஹ்ம லக்ஷணம் –
அதி அசம்பவ -அதி வியாப்தி ரூப -தோஷ ரஹிதமாய் -ஸல் லக்ஷணமாய் -இருக்கும்-
அசம்பவ சங்கை -சித் அசித் விலக்ஷண ப்ரஹ்ம வஸ்துவே இல்லை – என்றும்
லஷ்ய அசம்பவ ப்ரயுக்த லக்ஷணா சங்கைகளுக்கு பரிஹாரம் முதல் பாதத்தில் செய்கிறார் –
ஸ்ருதி விப்ரதிபத்தி ப்ரயுக்த அதி வ்யாப்த சங்கை -ப்ரஹ்மம் ஜகத் காரணமாய் இருக்கட்டும் -சேதன அசேதனங்களும் அங்கனம் ஆயிடுக -போல்வன
இதனைப் பரிஹரிக்கிறார் மேல் மூன்று பாதங்களால் –
வாதி விப்ரதிபத்தி ப்ரயுக்த அசம்பவ அதி வியாப்தி சங்கை ஏற்பட -அதனை நிரசிக்கிறார் இரண்டாம் அத்யாயம் பூர்வ பாத த்வயத்தால்
கார்யத்வம் ப்ரேமயத்வ வியாபகம் -எந்த ப்ரமேயமும் ப்ரஹ்ம காரியமே -என்று ஸ்தாபிக்கிறார் உத்தர பாத த்வயத்தால்
இப்படி -சித் அசித் விலக்ஷண ப்ரஹ்மம் ஜகத் ஏக காரணம் என்று அறுதி இட்டார் பூர்வ த்விகத்தாலே –

முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் –
ஜகத் காரண வஸ்து பற்றிய வேதாந்த வாக்கியங்கள் –
-இந்த காரண வாக்ய விசாரம் செய்து அவை சித் அசித் விலக்ஷண ப்ரஹ்மத்தையே கூறும்
-சேதன வஸ்துக்களையோ அசேதன வஸ்துக்களையோ கூறாது என்று அறுதியிடுகிறார் –
முதல் பாதம் -அயோக வியவச்சேத பரம் / மேல் மூன்று பாதங்கள் அந்நிய யோக வியவச்சேத பரங்கள்
யோகம் -சம்பந்தம் -காரணத்வ சம்பந்தம் -/ அயோகம் -காரணத்வ அசம்பந்தம் -அதனை வ்யவச்சேதம் செய்கிறது முதல் பாதம் –
அதாவது ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் இல்லை என்பது இல்லை என்றபடி -ப்ரஹ்மம் ஜகத் காரணமே என்று முதல் பாதத்தில் ஸ்தாபிக்கப் படுகிறது என்றபடி –
ஜகத் காரணமாக ப்ரஹ்மம் என்ற ஒரு வஸ்து உண்டு என்று ஸ்தாபிக்கப் படுகிறது -என்றவாறு
ப்ரஹ்ம பின்னத்துக்கு காரணத்வம் இல்லை என்ற அர்த்தம் த்ரிபாதீ சாரமாகும் -அந்யத்ர யோகத்தை வ்யவச்சேதம் செய்கிறது த்ரிபாதீ என்றபடி
-ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்றபடி -இதனால் ஜகத் காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்துக்கு அதி வ்யாப்தி ரூப தோஷமின்மை கூறப்படுகிறது –
முதல் அத்யாயம் நான்காம் பாதம் முதல் அதிகாணத்தில் ஆனுமாநிகம் அபி -என்று
-ஆனுமாநிகம் -ப்ரக்ருதி ஜகத் காரணமாகட்டும் -என்று ஆஷேபம் விளைய அதனை நிரசிக்கிறார் –
ஜீவாதி லிங்கங்கள் -அஸ்பஷ்ட தரங்களாக உள்ள காரண காரண வாக்கியங்களை முதல் அத்யாயம் முதல் பாதத்தில் விசாரித்து
அஸ்பஷ்டங்களாக உள்ள காரண வாக்கியங்களை -இரண்டாம் பாதத்தில் விசாரித்து –
ஸ்பஷ்டங்களாக உள்ள காரண வாக்கியங்களை மூன்றாம் பாதத்தில் விசாரித்து
ஸ்பஷ்ட தரங்களாக உள்ள காரண வாக்கியங்களை நான்காம் பாதத்தில் விசாரித்து
அவை சித் அசித் பரங்கள் இல்லை -சித் அசித் விலக்ஷண ப்ரஹ்ம பரங்களே -என்று சித்தாந்தீ கரிக்கிறார் –

-35-அதிகாரணங்களில் முதல் -4-அதிகாரணங்கள் உபோத்காதம் -மேல் ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்ற நிரூபணம்
இரண்டாம் பாதம் -ஜகத் ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்று கூறும் வாக்கியங்களும்
மூன்றாம் பாதம் -ஜகத்துக்கு ப்ரஹ்மம் ஆத்மா என்று கூறும் வாக்கியங்களும்
நான்காம் பாதத்தில் சாங்க்யாந்தி பக்ஷ பிராந்தி ஜனக வாக்கியங்களும்
விசாரித்து ப்ரஹ்ம பரத்வ ஸ்தாபனம் செய்கிறார் –
முதல் பாதம் -சித் அசித் விலக்ஷண பரம காரண பூத பரம புருஷ நிர்ணயம்
இரண்டாம் பாதம் ஜகத் சரீரகத்வம்
மூன்றாம் பாதம் ஜகத் ஆத்மத்வம்
நான்காம் பாதம் அதத்கார்யமாய் -அதச் சரீரமாய் -அததாத்மகமாய் -ஒரு வஸ்துவும் இல்லை
-ப்ரஹ்ம ஏக காரணத்வம் ஸ்த்திரீ கரணம் செய்யப் படுகிறது
இப்படி பாத -த்ரீபாதீ பேடிகா விபாகம் –

———————-

முதல் அத்யாயம் -முதல் பாதம் -11-அதிகரணங்கள்
-4-+-7-/ என்று பிரித்து –ஜிஞ்ஞாச அதிகரணம் –ஜந்மாதிகரணம் -சாஸ்திர யோநித்வாதி கரணம் –சமன்வயாதி கரணம் நான்கும் உபோத்காதம் –
இந்த நான்கையும் -முதல் -2-வேதாந்தங்கள் ப்ரஹ்ம விஷயக ப்ரதீதியை பிறப்பியாது-என்ற சங்கை பரிஹரித்து
மேல் -2-ப்ரஹ்ம ப்ரதீதி ஏற்பட்டாலும் வேதாந்தங்களுக்கு ப்ரஹ்ம விஷய தாத்பர்யம் இல்லை என்ற சங்கா பரிக்ரஹம்
மேலும் முதல் அதிகரணத்தில் லஷ்ய விசார ப்ரதிஞ்ஞஜை செய்து –
அடுத்ததில் லஷ்யத்துக்கு லக்ஷணத்தை விசாரித்து
மூன்றாவதில் லக்ஷண விஷய சங்கையை பரிஹரித்து
நான்காவதில் லஷ்ய விஷயக சங்கையை பரிஹரித்து
இப்படி லஷ்ய விசார ப்ரதிஞ்ஞஜை செய்த அனந்தரம் லஷ்யமான ப்ரஹ்ம விசாரம் –

மேல் -7-அதிகரணம் ப்ரஹ்மம் ஜகத் காரண ஸ்தாபனம்
இந்த ஏழையும் முதல் இரண்டால் -ஈஷத் -ஆனந்தமய -அதிகரணங்களால் -ப்ரஹ்மம் பிரகிருதி புருஷ விலக்ஷணம் என்று ஸ்தாபித்து
மேல் ஐந்தால் ப்ரஹ்ம வைலக்ஷண்யம் ஸ்தாபிக்கப் படுகிறது –

அன்றிக்கே -முதல் மூன்றால் -ஈஷத்- ஆனந்தமய -அந்தர் -அதிகரணங்களால் -சதாதி சாமான்ய சப்தா கடிதங்களான காரண வாக்கியங்கள்
ப்ரக்ருதி புருஷ விலக்ஷண காரண ப்ரஹ்ம பரங்களாக அறுதியிடப் பட்டு
மேலே ஆகாசாதி அதிகரணம் தொடங்கி -4-ஆகாச ப்ராணாதி விசேஷ சப்த கடித வாக்கியங்கள் சித் அசித் விலக்ஷண ப்ரஹ்ம பரங்கள் –

அதவா-முதல் மூன்றால் காரண வாக்கியங்களில் -சம்சய ஜனக வாக்யங்களுக்கு -அர்த்த நிர்ணயம் செய்து
மேலே நான்கில் காரண வாக்யங்களால் ஏற்படும் விபரீத ஞானம் அதாவது விபர்ய ஜன்ய வாக்யங்களுக்கு –பரிக்ரஹம் -ஸதர்த்த ஸ்தாபனம் –

ஈஷத்தில் -அசித் விலக்ஷண ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்றும் –
ஆனந்தமயத்தில் சித் விலக்ஷண ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்றும்
அந்தர் அதிகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டம் ப்ரஹ்மம் என்று நிர்ணயம்
ஆனந்தமயத்தில் முதல் ஸூத்ரத்தில்-ப்ரஹ்மம் ஜீவ சாமான்ய விலக்ஷணம் என்றும் –
ஐந்தாவது ஸூத்ரத்தால் ப்ரஹ்மம் முக்த ஜீவ விலக்ஷணம் என்றும்
ஈஷத்தில் -ப்ரஹ்மத்தை தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் -என்று மோக்ஷ உபாயமாகவும்
ஆனந்த மயத்தில் ப்ரஹ்மம் முக்த ப்ராப்யம் -பரம ஆனந்த மயம் -என்றும் ஸ்தாபிக்கிறார்
ஈஷத் அதிகரண பூர்வ பஷிகளை -காரணத்வ அதிகரணத்திலும் –1–4–4–
ஆனந்தமய பூர்வ பஷிகளை ஜகத்வாசித்வத்திலும் -1–4–5-நிரசிக்கிறார் –
ஈஷத்தில் ப்ரஹ்மம் சர்வஞ்ஞம் என்றும் / ஆனந்த மயத்தில் பிரசுர ஆனந்த விசிஷ்டம் என்றும் / அந்தரத்தில் அமலம் என்றும் ஸ்தாபித்த வியாசர்
ப்ரஹ்மம் உபய லிங்க விசிஷ்டம் என்று ஸ்தாபித்து அருளுகிறார்
பரமாத்மா அசாதாரணம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணைகதா நத்வங்கள் -இவை ப்ரஹ்மத்துக்கு அசாதாரணங்கள்
-சேதன அசேதனங்களுக்கு அசம்பாவிதங்கள் -ஆகை இறே ப்ரஹ்மம் நிகில சேதன அசேதன விலக்ஷணம் எனப் படுகிறது-

மேலே ஆகாச -பிராண -அதிகரணங்களில் -ஆகாச பிராண சப்தங்களுக்கு ரூட் யர்த்தத்தை விட்டு ஓவ்க்கிகார்த்தத்தைக் கொண்டு
தத் தத் சப்தங்கள் விலக்ஷண ப்ரஹ்ம பரங்களாக நிர்ணீதங்கள்
அடுத்து ஜ்யோதிர் இந்த்ரப்ராண அதிகரணங்களில் -தத்தத் சப்தங்களுக்கு ரூடி பங்கம் இல்லாமலே தத்தத் ரூடார்த்த விசிஷ்ட ப்ரஹ்ம பரங்களான நிர்ணீயம் –

அதவா -ஆகாச பிராண -அதிகரணங்களில் -காரண வாக்ய கத ஆகாச பிராண சப்தங்களுக்கு விலக்ஷண ப்ரஹ்ம பரத்வம் ஸ்தாபிதம் –
மேலே ஜ்யோதிர் இந்த்ர -ப்ராண அதிகரணங்ககளில் அப்படி அன்று -சாஷாத் காரண வாக்கியங்கள் இங்கு விசாரிக்கப் படவில்லை –
காரணத்வ வ்யாப்த லிங்கங்கள் நிரதிசய தீப்திமத்வம் முமுஷூ உபாஸ்யத்வம் -இவை உள்ள இடத்தேயே காரணத்வம் உள்ளது –
தாத்ருஸ லிங்க ப்ரதிபாதக வாக்கியங்களில் உள்ள ஜ்யோதிர் இந்திர சப்தங்கள் விலக்ஷண ப்ரஹ்ம பரங்களாக ஸ்தாபிக்கப் படுகின்றன –
இங்கே இந்திர சப்தம் என்றது இந்திரன் தன்னைச் சொன்ன -மாம் -என்ற சப்தம் -என்றபடி –

அதவா -ஆகாசாதிகரணத்தில் வஸ்த்வந்த்ர பிரசித்தமான ஆகாச சப்தத்தைக் கொண்டு -சப்த விசேஷத்தைக் கொண்டு –
அசேதனமே ஜகத் காரணம் என்று ஆஷேபம் விளைய அர்த்த விரோதத்தைக் காட்டி ஆகாச சப்தம் அசித் விலக்ஷண ப்ரஹ்ம பரம் என்கிறார் –
பிராண அதிகரணத்தில் அர்த்த விரோதம் இன்மையைக் காட்டி அசேதனமே ஜகத் காரணம் என்கிறார்கள் பூர்வ பக்ஷிகள்
அதனையும் அர்த்த விரோத ஸத்பாவத்தைக் காட்டி பரிஹரித்தார் –
ஜ்யோதிகரணத்தில் விரோதி லிங்கமின்மை -அல்ப அநு கூல லிங்க ஸத்பாவம் இவற்றைக் கொண்டு ஆஷேபம் விளைந்தது
அதனை ஸ்வ வாக்கியத்தில் விரோதம் இல்லாவிடினும் உபக்ரம வாக்கியத்தில் விரோதம் உள்ளது என்று கூறிப் பரிஹரித்தார்
இந்திர பிராணாதிகரணத்தில் உபக்ரமத்திலேயே விரோதி இல்லாமையைக் கூறும் பூர்வ பஷி ஆக்ஷேபிக்க அதனை அர்த்த விரோதத்தை கூறிப் பரிஹரிக்கிறார்

இப்படி சித் அசித் விலக்ஷண ஸத்பாவத்தை ஸ்தாபித்து முதல் பாவத்தில் லஷ்யா சம்பவ ப்ரயுக்த லக்ஷணா சம்பவ சங்கையைப் பரிஹரித்தார் -என்றதாயிற்று

———————-

முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம் -6-அதிகரணங்கள் –இவற்றை -3-+-3-என்று கொண்டு
முதல் மூன்றில் உபாஸக ஹிருதய ரூப பரிமித தேச பரிச்சின்ன பரமாத்ம விசாரமும்
மேல் மூன்றில் விபுல தேசஸ்த்தித பரமாத்ம விசாரமும் செய்கிறார்
ஆறு அதிகரணங்களுக்கும் சாதாரண அர்த்தம் -ப்ரஹ்ம ஆத்ம புருஷ சப்தங்கள் சித் அசித் விலக்ஷண பரமாத்ம பரங்கள் -என்று ஸ்தாபிப்பதே யாகும்-

————————

முதல் அத்யாயம் –மூன்றாம் பாதம் —10-/ -7-+-3-/-7-சாஷாத் சங்கதங்கள்
-இடையில் மூன்றும்–/-7-8-9–இவை -தேவத -மத்வ –அப ஸூத்ர -அதிகரணங்கள் ப்ராசங்கிகள்-
ஆறாவதான-பிரமிதாதிகரணத்தில் கூறப்பட்ட சர்வேஸ்வரத்வத்தை உபபாதிக்கிறது -மோக்ஷ பிரதத்வத்தைக் கூறும் முகத்தால்
-10-வதான அர்த்தாந்தரத்வ வ்யபதேச அதிகரணத்தில் -இப்படி ஆறாவதுக்கும் பத்துக்கும் நேராக சங்கதம் –
-10-வதில் மூன்றாவது ஸூத்ரத்தால் பரமாத்மா ஜீவ சாமான்ய விலக்ஷணன் என்றும்
நான்காவது ஸூத்ரத்தில் பரமாத்மா முக்த ஜீவ விலக்ஷணன் என்று கூறப்பட்டுள்ளன
ப்ராசங்கிகளான மூன்றிலும் பகவத் குணங்களே கூறப்பட்டுள்ளன -சாரீரகமே ப்ரஹ்ம மீமாம்சை அன்றோ –
ஆகையால் எவ்விடத்திலும் அவன் குணம் கூறப்பட்டதே யாகும்
தேவதாதிகரணத்தில் -தேவாதீனாம் அபி யுபாஸ்த்வம் / -தேவாதிகளுக்கு உபாஸ்யன் -ஆதி -சாக்தம் ஆதி பத க்ராஹ்யர்கள் /
அசுர ராக்ஷஸ கந்தர்வ பிசாசங்கள் -ஸ்ரீ ப்ரஹ்லாதிகள் அசுரர்கள் -ஸ்ரீ விபீஷணாதிகள் ராக்ஷஸர்கள் -சித்ரசேனாதிகள் கந்தர்வர்கள் /
கண்டாகரணாதிகள் பிசாசங்கள் -இவர்களுக்கும் உபாஸ்யன் என்றபடி
மத்வதிகரணத்தில் -வஸூ முக தேவானாம் அபி ஸ்வாத்மத்வேந உபாஸ்யத்வம் –
அப சூத்ராதி கரணத்தில் -ஸூத்ர அதீனாம் அனுபாஸ்யத்வம்-கூறப்பட்டுள்ளன –

———————————-

முதல் அத்யாயம் -நான்காவது பாதம் –8- அதிகரணங்கள் ஆறும் -இரண்டும் –
முதல் ஆறில் சாங்க்ய பக்ஷ ப்ரதிக்ஷேபமும் / மேல் இரண்டில் யோக பக்ஷ பிரதி ஷேபமும்-என்று பேடிகா விபாகம் –

காரண விஷயத்தில் பரோக்த தோஷங்களை முதல் இரண்டு பாதங்களால் பரிஹரித்து -கார்ய விஷயத்தில் பரோக்த தோஷங்களை பரிஹரிக்கிறார் –

——————————–

இரண்டாம் அத்யாயம் -முதல் இரண்டு பாதங்கள் –
ஸ்வ பக்ஷத்தில் பரர்களால் கூறப்பட்ட தோஷங்களை பரிஹரிக்கிறார் முதல் பாதத்தில் –
பர பக்ஷங்களுக்கு தான் தோஷம் கூறுகிறார் இரண்டாம் பாதத்தில்
ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் -முதல் பாதம் / பர பக்ஷ நிராகரணம் -இரண்டாம் பாதத்தில் -என்றபடி
முதல் பாதத்தில் ஸ்ம்ருதி யுக்த விரோத பரிஹாரமும் -இரண்டாம் பாதத்தில் -சாஸ்த்ராந்தர விரோத பரிஹாரமும் செய்யப்படுகின்றன –
முதல் பாதத்தில் ஸ்ம்ருதி நியாயங்களால் வேதாந்தங்களுக்கு ஏற்படும் பாதம் தவிர்க்கப் படுகிறது
இரண்டாம் பாதத்தில் சாரீரிக நியாயத்தாலே பர பக்ஷங்களுக்கு பாதம் கூறப்படுகின்றது –

——————

இரண்டாம் அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள் -இரண்டும் எட்டும் –
முதல் இரண்டில் ஸ்ம்ருதி விசாரம் -மேல் எட்டில் யுக்தி விசாரம் -ஸ்ம்ருதி உபக்ரமம் என்பதால் ஸ்ம்ருதி பாதமானது
ஜகத் உபாதானத்வமும்-ஜகத் நிமித்தத்வமும் பலித்தன
-1-/-2-/-3-/6 -/-7-/-9-அதிகரணங்கள் உபாதாளத்வ ஸ்தாபனம்
–8–/-10-நிமித்தத்வ ஸ்தாபனம்
–4-சிஷ்ட பரிக்ரஹ /-5-போக்த்ராபாத்த்யதிகரணங்கள் உபய ஸ்தாபனம்

அதவா –
முதல் ஆறில் உபாதானத்வத்தில் விரோதி பரிக்ரஹம் என்றும்
மேல் நான்கில் நிமித்தத்வத்தில் விரோதி பரிஹாரம் என்றும் கொள்ளலாம்

———————–

இரண்டாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் -ஓன்று -ஆறு -ஓன்று- பேடிகா விபாகம் -பர பக்ஷ ப்ரதிஷேப பாதம்
முதலில் பிரதான காரண வாதி -சாங்க்யன் நிரஸனம்
மேல் ஆறில் பரமாணு காரண வாதிகள் -வைசேஷிக புத்த -ஜைன -சைவர்கள் நிரஸனம்
எட்டாவதில் -ப்ரஹ்மத்தின் ஜகத் ஏக காரணத்வத்தை ப்ரதிபாதிக்கும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் பிரமாணம் என்று ஸ்தாபனம்
ஏழில் பரமத கண்டனம் -எட்டாவதில் ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ராமாண்ய ஸ்தாபனம் பண்ணி பூஷணம் –

ஈஸ்வர அநிஷ்டித பிரதான காரண வாதி சாங்க்யர் -த்ரவ்யம் அவஸ்தை இரண்டும் நித்யங்கள் என்பர் -இதன் கண்டனம் முதலில்
த்ரவ்யம் அவஸ்தை இரண்டும் அநித்யங்கள் என்பர் வைசேஷிகர் -நிமித்த மாத்ர ஈஸ்வர அதிஷ்டித பரமாணு காரண வாதி –இரண்டாவது அதிகரணத்தில் கண்டனம் –
புத்தாதிகளும் பரமாணு காரண வாதிகளே யாயினும் அவர்களுக்கு முன் வைசேஷிகர்களை நிர்த்தேசித்து
இவன் வேத குத்ருஷ்ட்டி அவர்கள் வேத பாஹ்யர்கள் என்று கொண்டு
பாசுபதாதிகளில் பரமாணு காரண வாதிகள் பிரதான காரண வாதிகள் என்று விபாகம் இருந்தாலும் அவர்கள் எல்லாருமே வேத பாஹ்யர்களே –
பாசுபத அதிகரணம் முதல் ஸூத்ரத்தால் அந்த மதத்துக்கு ஸ்ருதி மூலம் இல்லை என்றும் -மேல் மூன்று ஸூத்ரங்களால்-
புத்த நிராகரண பிரகரணத்தில் -நா பாவ உப லப்தே –2–2—27 –என்று ஜகத் இல்லை என்பது இல்லை என்று கூறும் முகத்தால்
பிரசன்ன புத்தர்களை -அத்வைதிகளை -யும் நிரசிக்கிறார் –
இதே போன்று -வைதர்ம்யாச்ச ந ஸ்வப்நாதிவத்–2–2-28– என்று ஸ்வப்னார்த்த வைஷம்ய பிரதர்சன முகத்தால்
ஜகத் சத்யத்வத்தை கூறி ம்ருஷாவாதி மத கண்டனம் –

இப்பாதத்தில் சாங்க்யாதி மாதங்களுக்கு வேத ப்ரத்யர்தித்தவம் இல்லை என்கிறார் –
இவை வேத விருத்தார்த்த ப்ரதிபாதங்கள் ஆகையால் வேதத்துக்கு எதிரே நிற்க இயலா என்றும்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் வேத அநு வசனம் ஆகையால் வேத விரோதித்வம் அதுக்கு இல்லை —
இப்படி ப்ரஹ்மம் ஜகத் ஏக காரணம் என்று ஸ்தாபித்த படி –

————————

இரண்டாம் அத்யாயம் – மூன்றாம் பாதம் -வியத்பாதம் –
கீழே ஆறு பாதங்களால் ப்ரஹ்மத்தின் காரணத்வம் உக்தம் -இனி மேல் இரண்டு பாதங்களால் கார்யத்வம் உச்யதே –
-ப்ரஹ்ம கார்யத்வம் இதிலும் அடுத்த பாதத்திலும் ஸ்திரீகரிக்கப் படுகிறது –

சர்வம் நித்யம் என்கிறான் சாங்க்யன் / சர்வம் அநித்தியம் என்கிறான் புத்தன் / சர்வம் நித்யாநித்யம் என்றான் ஜைனம் /
நித்யா நித்யங்களை மாறாடிக் கூறுகிறான் வைசேஷியன் -இந்த நான்கு பக்ஷங்களையும் நிரசித்து ப்ரஹ்மம் காரணமே என்றும்
-ஜகத்து தத் காரியமே என்றும் -ஸ்தாபிக்கிறார் -இதுவே வைதிக மதம் –
அசித்துக்கு ப்ரஹ்ம கார்யத்வம் ஸ்வரூப அந்யதா பாவம்
சித்துக்கு ப்ரஹ்ம கார்யத்வம் ஸ்வபாவ அந்யதா பாவம் என்று கொள்ள வேண்டும் –

இப்பாதத்தில் ஏழு அதிகரணங்கள் -மூன்றும் நான்கும் -முதல் மூன்றால் ஆகாசாதிகளுக்கும் ஜீவர்களுக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் சொல்லி
-இதுவே பாத -பிரதான அர்த்தம் -மேலே நான்கால் ஜீவ ஸ்வரூப சாதனம் செய்கிறார்
-இந்த நான்கும் பிராசங்கிகம்-இங்கே ஜீவனை ஞாதா என்று கூறும் வியாசர்
அவனுடைய ஞாத்ருத்வத்தை இசையாத மாயாவாதிகளையும் நித்ய ஞாத்ருத்வத்தை இசையாத நையாயிகர்களையும் நிரசித்தார் –

———————————

இரண்டாம் அத்யாயம் –நான்காம் பாதம் –பிராண பாதம் —
இதில் இந்திரியங்கள் ப்ரஹ்ம கார்யங்கள் -என்று அறுதிப்படுகிறது
இதில் எட்டு அதிகரணங்கள் — ஓன்று -ஆறு -எட்டு -/ முதலும் இறுதி அதிகரணங்களும் சாஷாத் சங்கதங்கள் -நடுவில் ஆறும் ப்ரசங்கிகங்கள் –
வியததிகரண நியாயப்படி பிராண உத்பத்தி அதிகரணத்திலும்
தேஜோ அதிகரண நியாயப்படி சம்ஜஞ்ஞா மூர்த்திக்லுப்த் யதிகரணத்திலும் -அர்த்த நிர்ணயம்
வியததிகரணம் தொடங்கி -சமஷ்டி ஸ்ருஷ்ட்டியைக் கூறி -சம்ஜஞ்ஞா மூர்த்தி அதிகரணத்தில் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கூறி
இரண்டுக்கும் ஸ்ரீ மன் நாராயணனே காரண பூதன் –

முதல் அத்தியாயத்தில் கூறப்பட்ட சர்வ காரணத்வம்
இரண்டாம் அத்தியாயத்தில் ஸ்த்திரீ கரணம் -என்று தேறிய பொருள்
முதல் அத்யாயம் சமன்வய அத்யாயம் -இரண்டாம் அத்யாயம் -அவிரோதத்யாயம் –

—————————-

உத்தர த்வீகம்
ப்ரஹ்ம உபாசனத்தையும் -அது அடியாக விளையும் மோக்ஷ ஆனந்தத்தையும் இந்த உத்தர த்வீகத்தில் கூறுகிறார் –
மூன்றாம் அத்யாயம் —உபாசனத்தை விசாரிக்கப் புக்கு -முதலில் இதர வைராக்யம் ஏற்பட – ஜீவ தோஷங்களையும் –
பகவத் திருஷ்ணை ஏற்பட- அவன் குணங்களை இரண்டாம் பாதத்தாலும் -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமான கர்மத்தை நான்காம் பாதத்திலும் கூறுகிறார் –

———————–

மூன்றாம் அத்யாயம் –முதல் பாதம் -வைராக்ய பாதம் –
ஜாக்ரதாதி தசைகளில் உள்ள தோஷங்களை பூர்ணமாக கூறுகிறார் -தோஷ தர்சனம் ஏற்பட வைராக்யம் பிறக்கும் இறே
ஜீவனுக்கு சம்சார சம்பந்தத்தையும் -சம்சார பாரமார்த்த்யத்தையும் சொல்லி –சாங்க்ய மாயா வாதிகளை நிரசித்தார்
இதில் -6-அதிகரணங்கள் –ஒன்றும் ஐந்தும் -முதலில் ஆரோஹணாவச்சேதன தோஷங்களையும் -மேல் அவரோஹணாவச்சேதன தோஷங்களையும் கூறுகிறார்
இப்பாதம் சம்சாரி ஜீவ தோஷ பரம் –

—————————-

மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -உபய லிங்க பாதம் -பரமாத்மா குணங்களை பூர்ணமாக கூறுகிறார்
நிர்தோஷம் -கல்யாண குணகரம் -/நிர் தோஷம் நிர்குணம் -நிர் விசேஷம் -கூற்றை அடி அறுக்கிறார்
இதில் -8- அதிகரணங்கள் –நான்கும் நான்கும்
முதல் நான்கில் ஸ்வப்ன ஸூஷூபித்யாதி தசைகளில் தோஷங்களையும் -அடுத்த நான்கில் கல்யாண குணங்களையும்
-தோஷங்கள் கூறுவது பிரதானம் அன்று -முந்தைய நான்கிலும் பரமாத்மாவின் குணங்களையே கூறப்பட்டன என்றும் சொல்வர்
-ஸ்வப்ன பதார்த்த ஸ்ருஷ்ட்ருத்வ அநு குண குணங்களை கூறுவதாக கொள்வதே உக்தம்
இறுதி நான்கையும் இரண்டு இரண்டாக கொண்டு -முதல் இரண்டால் -தத் தத் ஸ்தான சம்பந்தத்தால் தோஷம் தட்டாது
-ஸமஸ்த கல்யாண குண பரிபூர்ணமே என்றும் -ஜகத் ப்ரஹ்ம ஐக்கிய வசன சங்கத்தை தோஷமும் இல்லை -என்றும் கூறுகிறபடி
இறுதி இரண்டால் சர்வ ஸ்மாத் பரத்வத்தையும் பர உதார குணத்தையும் கூறி ஸ்த்த்ரீ கரிக்கிறார் -இவை இருந்தால் தானே உபாயஸ்வ பூர்த்தி –
உபய லிங்க அதிகரணத்தில் முதல் ஸூத்ரத்தால் ப்ரஹ்மம் உபய லிங்க விசிஷ்டம் என்றும் –11-ஸூத்ரத்தால் ப்ரஹ்மம் உபய விபூதி விசிஷ்டம் என்றும் -சொல்லி
இந்த உபய லிங்க -உபய விபூதி விசிஷ்ட- ப்ரஹ்மமே வேதாந்த பக்ஷம் என்று ஸ்தாபிக்கிறார் வேத வியாசர்
பராதிகரணத்தில் பரத்வமும் -பலாதிகரணத்தில் உதார குணமும் கூறப்பட்டது -சகல அதிகாரிகளுக்கும் பிரயோஜனத்தை உத்தேசித்தே பிரவ்ருத்தி யுள்ளது
-பிரயோஜனமும் பல பிரதனை ஒழியப் பெற விரகு இல்லை -பல பிரதனுக்கு பல பிரதத்வம் பரத்வ உதார குணங்கள் இல்லையேல் கூடாதே
-பரத்வமும் உதார குணமும் உபயலிங்க விசிஷ்டனான நாராயணனுக்கே யன்றி மற்று ஒருவருக்கு இல்லை இறே —

கர்ம காண்ட யுக்த சர்வ கர்ம சமாராத்யனாய் –
தேவதா காண்ட யுக்த சர்வ தேவதா அந்தராத்மாவாய் =
ப்ரஹ்ம சப்த வாச்யனான ஸ்ரீ மன் நாராயணன் -சித் அசித் விலக்ஷண
ஜகத் ஏக காரண பூதன்
உபாய பூதன்
உபேய பூதன்
பரன்
என்று இவ்வளவால் ஸ்தாபித்து
பலாதிகரணத்தில்
அவனே சகல பல பிரதன் என்று ஸ்தாபித்து அருளுகிறார் ஸ்ரீ வேத வியாச பகவான் –

—————————–

மூன்றாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் –
கீழே பத்து பாதங்களால் தத்வ நிரூபணம் செய்தார் –
இனி மேலே ஆறு பாதங்களால் அனுஷ்டான நிரூபணம் செய்கிறார் –
தத்வ விவேக ஞானத்தை பிறப்பித்த வியாசர் இனி தத்வ ஞான அநு குண ஹிதா சரணத்தை கூறுகிறார் என்றபடி –
இவ்வாறு -முதல் பத்து பாதங்களுக்கும் மேல் உள்ள ஆறு பாதங்களுக்கும் பேடிகா விபாகம் –
இந்த ஆறிலும் -முதல் இரண்டால் ஹிதத்தையும் -தத் பலத்தை மேல் நான்கு பாதங்களாலும் கூறுகிறார்
அந்த இரண்டில் இந்த பாதத்தில் உபாயத்தையும் -தத் அங்கமான கர்மத்தை அடுத்த பாதத்திலும் அருளிச் செய்கிறார் –

குண உப சம்ஹார பாதம் என்றே இந்த மூன்றாம் பாதத்துக்கு வ்யவஹாரம்
-ப்ரஹ்மம் நிர்குணம் என்று கூறும் குண தஸ்கரர்களுக்கு இப்பாதம் சர்வாத்மநா துர்க் கடம்
-ஸ்ரீ பராசர ஸ்ரீ பராசர்ய ஸ்ரீ பராங்குச ஸ்ரீ ராமாநுஜாதிகள் -குண பக்ஷபாதிகள் இறே
பல உபநிஷத்துக்கள் -கூறப்பட்ட பல ப்ரஹ்ம வித்யைகள் –இவற்றுக்கு ஐக்கியம் தேறுமானால்
-ஓர் இடத்தில் கூறப்படாத -மற்று ஓர் இடத்தில் கூறப்பட்ட குணங்களை உப சம்ஹரிக்க வேணும் என்று ஸ்தாபிக்கிறார் இப்பாதத்தில் –
குண உப சம்ஹார பாதம் அன்றி -குண சம்ஹார பாதம் அன்று இறே இது
இப்பாதத்தில் –26- அதிகரணங்கள் -/ -19-வது அதிகரணத்தில் சர்வ பர வித்யா உபாஸ்யன் நாராயணனே என்று ஸ்தாபிக்கிறார்
ஸ்ரீ வைஷ்ணவ அக்ரேஸரான ஸ்ரீ வேத வியாசர் –

—————————-

மூன்றாம் அத்யாயம் –நான்காம் பாதம் –அங்க பாதம் —
இந்த அத்யாயம் முதல் பாதத்தில் -பல த்வாரா கர்மம் த்யாஜ்யம் -என்றது –
ஸ்வரூபேண கர்மம் உத்தேச்யம் என்று இப்பாதத்தில் கூறப்படுகிறது
இந்த அங்க பாதத்தில் -உபாயமான உபாசனத்துக்கு அங்கமான -கர்மம் விசாரிக்கப் படுகிறது –
கர்ம காண்டத்தில் கர்மம் விசாரிக்கப் பட்டதாயினும் அது பல சங்க யுக்தமாயின் அது கேவல கர்மமாகும்-பகவத் கைங்கர்யத்வ விதுரம் என்றபடி
-அது அநித்ய பலகம்-அது த்யாஜ்யமாம் -இங்கே கூறப்பட்ட கர்மம் உத்தேச்யமானது-உபாசன அங்கமானது
-கர்ம காண்டத்தில் ஸ்வர்க்காதி சாதனமாக கூறப்பட்ட கர்மங்கள் இங்கு உபாசன அங்கமாக கூறப்படுகின்றன -இதுவே விநியோக ப்ருதக்த்வ நியாமமாகும்
இப்பாதத்தில் -15-அதிகரணங்கள் –
முதல் அதிகரணத்தில் -கர்மங்களின் அங்கத்துவ சித்திக்காக வித்யையின் அங்கித்வத்தை ஸ்த்திரீக்கிறார்
—2-/-3- /–11-/ மூன்றும் ப்ராசங்கிகள்
மேல் அங்க விசாரம்
கர்மங்களும் சமதாதிகளும் பாண்டித்ய பால்ய மௌனங்களும் அங்கம் என அறுதியிடுகிறார் இந்த அங்க பாதத்தில்
இப்படி அங்க சிந்தை செய்த வியாசர் -14-/-15-/ அதிகரணங்களில் அங்க நிஷ்பத்தி சமய சிந்தை செய்கிறார் -என்று பேடிகா விபாகம்
ப்ரஹ்ம வித்யைக்கு கர்மம் அங்கம் என்று இப்பாதத்தில் கூறும் வியாசர் -வாக்யார்த்த ஞான மாத்திரம் சாதனம் என்று கூறும் சங்கர மதத்தையும்
ஞான கர்ம சமசமுச்சயவாதி யாதவ பிரகாச மதத்தையும்
ஞானமே கர்மத்துக்கு அங்கம் என்று கூறும் நிரீஸ்வர மீமாம்ச மதத்தையும்
ஜீவர்கள் நித்ய முக்தர் -மோக்ஷம் சாத்தியம் அன்று என்று கூறும் சாங்க்ய மதத்தையும் நிரசித்தார் இறே –

ப்ரஹ்ம வித்யை மோக்ஷ சாதனம் –அங்கி / கர்ம -தத் அங்கம் -என்று சித்தாந்த ஸ்தாபனம் செய்கிறார் வியாசர் –

———————————–

நான்காம் அத்யாயம் –பல அத்யாயம் –
முதல் இரண்டு பாதங்களால் –உத்தர பூர்வாக அஸ்லேஷ விநாசங்கள் –உத்க்ராந்தி-இவை இரண்டினையும் ப்ரஹ்ம வித்யா -இவை இரண்டும்
ஸ்தூல தேக யுக்த காலத்தில் ஏற்படும் பலங்கள்- பலங்களாக–அருளிச் செய்து
மேல் இரு பாதங்களில் அர்ச்சிராதி கமனமம் பகவத் பிராப்தியும் -ஸ்தூல தேகத்தை துரந்தவனுக்கு ஏற்படும் -பலங்களை-அருளிச் செய்கிறார் –

———————————-

சாரீரகத்தில் –156-அதிகரணங்கள்
முதல் நான்கும் உபோத்காதம் –
மேல் -125-அதிகரணங்கள் -ப்ரஹ்மமும் -ப்ரஹ்ம வித்யையும் நிரூபணம்
மேல் –27-ப்ரஹ்ம வித்யா பலம் நிரூபணம்
ஆக சாரீரகம் –156-அதிகாரணங்களும் -உபோத்காதமும் -ப்ரஹ்ம -ப்ரஹ்ம வித்யா -பல ப்ரதிபாதக பாதங்கள் -என்று பேடிகா விபாகம்

———————-

நான்காம் அத்யாயம் -முதல் பாதம் –ஆவ்ருத்தி பாதம்
-11-அதிகரணங்கள் –ஆறும் ஐந்தும் –
முதல் ஆறால்-வித்யா ஸ்வரூப சோதனம் / மேல் ஐந்தால் வித்யா பலத்தை கூறுகிறார் -என்றபடி –
ப்ரஹ்ம வித்யை மோக்ஷ சாதனமே யாயினும் அதனை இந்த பல அத்தியாயத்தில் வியாசர் விசாரிப்பது கொண்டு நாம் அறியலாம் –
அதற்கு சாதனத்வம் இது சிவப்பு -பலத்வமே ஸ்வாபாவிக ஆகாரம் என்று –

—————————

நான்காம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -உத்க்ராந்தி பாதம் –
ஸ்த்தூல தேக ஸ்திதி காலத்தில் ஏற்படும் பலமான உத்தர பூர்வாக அஸ்லேஷா விநாசங்களை முதல் பாதத்தில் கூறிய வியாசர்
மரண காலத்தில் ஏற்படும் பலத்தை இப்பாதத்தில் கூறுகிறார் –
இப்பாதமே சாங்க்யருக்கும் மாயா வாதிகளுக்கும் அஸங்கதம் -மோக்ஷத்தை அசாத்திய -சித்தமாக -கூறும் சாங்க்யனும்
இங்கேயே மோக்ஷம் என்று கூறும் மாயாவாதியில் இப்பாதத்தில் நிரஸ்தர்கள் –

———————–

நான்காம் அத்யாயம் –மூன்றாம் பாதம் –கதி பாதம் —
அநாதிகாலம் சம்சரித்து கிடக்கும் சம்சாரி ஜீவன் அஞ்ஞாத ஸூஹ்ருதம் அடியாக மோக்ஷ மார்க்க ப்ரவ்ருத்தனாவதும்
கர்ம ஞான பக்தி நிஷ்டையும் -வித்யா பேதங்களும் -தத் தத் அதிகாரங்களும் -பரமாத்மா உபாசனத்தால் விரோதி பாப நிவ்ருத்தியும்
அர்ச்சிராதி மார்க்க கமனமும் -என்று இவை முதலான சகல அர்த்தங்களையும் நிர்விசேஷ ப்ரஹ்ம வாதிகளும் இசைந்துள்ளார்கள் –
இவை இத்தனையும் வ்யாவஹாரிகங்கள் -நிர் விசேஷ ப்ரஹ்ம தாதாதம்ய ப்ராப்தியே பரம மோக்ஷம் என்று கூறும் கூற்று
கேவலம் கோஷம் ஆகலாம் அத்தனை -சாரீரிகத்தில் அது கூறப்பட்டது அன்று -பஞ்சம அத்யாய ம்ருக்யமாம்-உத் ஸூ த்ரம் என்றபடி –
வியாசர் தாத்பர்யம் இவ்வளவே -இதுவே ஸ்ரீ ராமானுஜ மதம் – –

—————————————

நான்காம் அத்யாயம் -நான்காம் பாதம் –முக்தி பாதம் —
முக்தி நிர்ணயம் செய்கிறார் இதில்
ஆறு அதிகரணங்கள் –ஸ்வரூப ஆவிர்பாவ மோக்ஷம் என்பதனை சொல்லி மேல் மூன்றால் தத் அநு குண வ்ருத்தி விசேஷத்தை கூறுகிறார்
கர்ம அங்கமான பக்தி யோகத்தில் பகவானை ஆஸ்ரயித்த ஜீவன் அவன் அருளால்
நிர்த்தூத பாபனாய்-ஸூஷ்ம நாடீ விசேஷத்தால் சரீரத்தின் நின்றும் நிர் கதனாய் அர்ச்சிராதி மார்க்கத்தால் பரமபதத்தை ப்ராபித்து
ஆவிர்பாவ ஸ்வரூபனாய் பரமனை பரி பூர்ணமாக அனுபவித்து அபுநா வ்ருத்தனாய் வாழ்கின்றான் என்று அறுதியிட்டார் ஸ்ரீ வேத வியாசர்

மீமாம்ஸா கண்ட த்ரயத்திலும் மாயாவாத கந்த பிரசங்கம் இல்லை என்பர் பரம வைதிக ஸார்வ பவ்ம்யர்கள்-

———————————

சித்தாந்தத்தில் இசைந்த சங்கதிகள் -8-
சாஸ்திர / காண்ட / த்விக / அத்யாய / பாத / பேடிகா / அதிகரண / ஸூத்ர -சங்கதிகள் —
சங்கதி யாவது -அபிதாந ப்ரயோஜக சம்பந்தம்
அனந்தர அபிதான பிரயோஜக சம்பந்தம் சங்கதி என்பர் தார்கிகர் -அதி சாஸ்திர சங்கதிக்கு சேராது –
சாஸ்த்ரத்திலே சங்கதியே யன்றி சாஸ்திரத்துக்கு பிறகு என்று பொருள் கூடாது இ றே
காண்ட சங்கதி முதலாக அனந்த அபிதானம் கூடும் -அவற்றிலும் காண்டத்தில் சங்கதி ./ த்விகத்தில் சங்கதி /
அத்தியாயத்தில் சங்கதி /என்று சங்கதிகள் இருப்பதால் அனந்தர அபிதானம் என்பதே சங்கதி ஆக மாட்டாதே
ஸூத்ர சங்கதியை ப்ரக்ருதி அதிகரணம் முதலியவற்றில் ஸ்ருத பிரகாசிக ஆச்சார்யர் நிரூபித்து உள்ளார்
ஆகவே அதிகரண சிந்தாமணியில் ஸூத்ர சங்கதி உள்பட எட்டு சங்கதிகள் நிரூபித்து அருளினார் குமார குரு வரதாச்சார்யர் –

மற்று ஒரு வித ஆறுவித சங்கதிகளும் உண்டு
ஆக்ஷேப சங்கதி
த்ருஷ்டாந்த சங்கதி
ப்ரத்யுதாஹரண சங்கதி
உபோத்காத சங்கதி
அபவாத சங்கதி
பிரசங்க சங்கதி –

பூர்வ அதிகரண சித்தாந்தம் அநுபபன்னம் -என்று மேல் அதிகரண பூர்வ பக்ஷம் ஏற்படும் இடத்தில் ஆக்ஷேப சங்கதி
பூர்வ அதிகரண சித்தாந்த நியாயத்தை த்ருஷ்டாந்தம் ஆக்கி உத்தர அதிகரணம் பூர்வ பக்ஷம் ஏற்படும் இடத்தில் த்ருஷ்டாந்த சங்கதி
பூர்வாதி கரண நியாய விஷயம் அன்று இது என்று பூர்வ பக்ஷம் ப்ரவ்ருத்தமாகில் ப்ரத்யுதாஹரண சங்கதி
ப்ரக்ருதி சித்திக்காக முன் அதிகரணம் உபோகாதம்
பூர்வ அதிகரண சித்தாந்தத்தை நியாயத்தை அவலம்பித்து உத்தர அதிகரணம் பூர்வ பக்ஷம் ஆகில் அபவாத சங்கதி
முன் கூறியவற்றை விட வேறுபட்டதாய் உப சதிதமானது பிரசங்கம்
இவ்வாறு சங்கதி நிரூபணம் –

அதிகரணமாவது –
விஷயோ விசயஸ்சைவை பூர்வ பக்ஷஸ் ததோத்தரம்
சங்கதிச் சேதி பஞ்சை தான் ப்ராஞ்சோதி கரணம் விது
பிரயோஜனம் ஸ பஞ்சாங்கம் பிராஞ்சோதி கரணம் விது -பாட பேதம்
சிலர் விஷயம் -சங்கதி -சம்சயம் -சம்சயத்துக்கு காரணம்
அதிகரண சிந்தாமணி ஆரம்பத்தில் இவற்றை சேவிக்கலாம் –

————————————–

முதல் அத்யாயம் –முதல் பாதம் —–11-அதிகரணங்கள் –32-ஸூத்ரங்கள்
முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம் –6-அதிகரணங்கள் –33–ஸூத்ரங்கள்
முதல் அத்யாயம் -மூன்றாம் பாதம் –10–அதிகரணங்கள் -44–ஸூத்ரங்கள்
முதல் அத்யாயம் -நான்காம் பாதம் —8-அதிகரணங்கள் –29–ஸூத்ரங்கள்
முதல் அத்யாயம் ——————-35-அதிகரணங்கள் -138–ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -முதல் பாதம் ——10–அதிகரணங்கள் -36–ஸூத்ரங்கள்
இரண்டாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் —8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
இரண்டாம் அத்யாயம் -மூன்றாம் பாதம் —7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்
இரண்டாம் அத்யாயம் -நான்காம் பாதம் —8-அதிகரணங்கள் –19–ஸூத்ரங்கள்
இரண்டாம் அத்யாயம் ————— —33-அதிகரணங்கள் -149–ஸூ த்ரங்கள்

மூன்றாம் அத்யாயம் -முதல் பாதம்——-6-அதிகரணங்கள் -27–ஸூத்ரங்கள்
மூன்றாம் அத்யாயம் இரண்டாம் பாதம் —8-அதிகரணங்கள் -40–ஸூத்ரங்கள்
மூன்றாம் அத்யாயம் -மூன்றாம் பாதம் —26-அதிகரணங்கள்- 64–ஸூத்ரங்கள்
மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதம் —15-அதிகரணங்கள்- 51—ஸூத்ரங்கள்
மூன்றாம் அத்யாயம் ——————-55–அதிகரணங்கள் -182–ஸூத்ரங்கள்

நான்காம் அத்யாயம் -முதல் -பாதம் ——11-அதிகரணங்கள் -19–ஸூத்ரங்கள்
நான்காம் அத்யாயம் -இரண்டாம் பாதம் —11–அதிகரணங்கள் -20—ஸூத்ரங்கள்
நான்காம் அத்யாயம் -மூன்றாம் பாதம் —-5-அதிகரணங்கள் –15-ஸூத்ரங்கள்
நான்காம் அத்யாயம் -நான்காம் பாதம் —-6–அதிகரணங்கள் -22—ஸூத்ரங்கள்
நான்காம் அத்யாயம் ——————–33–அதிகரணங்கள் -76–ஸூத்ரங்கள்

ஆக மொத்தம் ————————–156-அதிகரணங்கள் —545-ஸூத்ரங்கள் –

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading