ஸ்ரீ பாஷ்யம் சாரம் -இறுதி இரண்டு அத்தியாயங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

முதல் அத்யாயம் –முதல் பாதம் -11- / இரண்டாம் -6- / மூன்றாம் -10-/ -நான்காம் பாதம் -8- ஆக -35-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம்- முதல் பாதம் -10-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -7-/ நான்காம் -8- /-ஆக-33-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம்- முதல் பாதம் -6-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -26-/ நான்காம் -15- /-ஆக-55-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் -முதல் பாதம் -11-/ இரண்டாம் –11-/ மூன்றாம் -5-/ நான்காம் –6–ஆக-33-அதிகரணங்கள்
-மொத்தம் -156-அஷோர்மி-அதிகாரண சாராவளீ ஸ்லோகம் –

——————————

ஆக இவ்வளவால் பிராணவார்த்தம் -நிரூபிதம்-அசேஷ சித்அசித் வஸ்து சேஷித்வம் –
அகில புவன ஜென்ம -என்று அகாரத்தில் உபக்ரமித்தும்
ஆனுமாநிகாதிகரணத்தில் -உக்தம் -என்று உகாரத்தையும்
இறுதியில் சர்வம் சமஞ்ஜசம் -மகாரத்தையும் கொண்டு பிராணவாகாரமாகவே தோற்றுமே –
முதல் இரண்டு அத்யாயங்களால் ப்ரணவார்த்த நிரூபணம் -மேல் இரண்டு அத்தியாயங்கள் மந்த்ர சேஷார்த்தம்
-மூன்றாம் அத்யாயம்–சாதன அத்யாயம் – நமஸ் சப்தார்த்த நிரூபண பரம்
நான்காம் அத்யாய-பலாத்யாயம் – த்ருதீய பதார்த்த நிரூபண பரம்
நமஸ் சப்தார்த்தம் உபாயம் இ றே -சர்வ சேஷியான நாராயணனே பரம உபாயம் என்று இ றே சம்பிரதாய நிஷ்கர்ஷம்

—————————-

-3-அத்யாயம் –வைராக்ய பாதம் /-உபய லிங்க பாதம் / குண உப சம்ஹார பாதம் / அங்க பாதம்
பக்தியை அனுஷ்ட்டிக்க பரம அவசியக்கம் -ப்ராப்யாந்தர வைராக்கியமும் -ப்ராப்ய திருஷ்ணையும் -இந்த இரண்டும் சித்திக்க இரண்டு பாதங்கள் –
முதல் பாதம் அனுசந்திக்க இதர விஷய வைராக்கியமும் -இரண்டாம் பாதம் அனுபவிக்க பகவத் விஷய திருஷ்ணையும் -பிறக்கும் படி
இதர விஷய தோஷங்களையும் பரமாத்மாவின் கல்யாண குணங்களையும் நிரூபிக்கிறார் –
ப்ரஹ்ம அனுபவ முக்தி -ஞான சங்கோச நிவ்ருத்தி ரூபம் -ஞான சங்கோச த்வம்சம்–த்வம்ச ரூப அபாவம் உண்டாவதானாலும் அனந்தமாகையாலே அழிவற்றது –
இப்படிச் சொல்லுகிறது பர பஷத்தை அனுசரித்ததே யாகும் -வஸ்துதஸ்து ஸ்ரீ ராமானுஜ மதத்தில் பாவாந்தரம் அபாவம் -என்று அங்கீ கரிக்கப் பட்டுள்ளது ஆகையால்
ஞான சங்கோச நிவ்ருத்தி என்கிற அபாவம் ஞான விகாச ரூப பாவமே யாகும் –
அது நித்யம் என்று -நச புனராவர்த்ததே -இத்யாதி ஸ்ருதி சித்தம் -ஞானத்துக்கு விகாசம் ஸ்வாபாவிகம் என்பது வேதாந்த சித்தம் –
அது கர்மம் அடியாக சுருக்கம் -ஞான சங்கோசமே சம்சாரம் -பகவத் அனுக்ரஹ விசேஷத்தால் கர்மம் ஆகிற உபாதிக்கு நிவ்ருத்தி ஏற்பட
ஸ்வாபாவிகமான விகாசமே அமையும் –ச நந்த்யாய கற்பதே ஸ்ருதியாலே ஸ்பஷ்டம் உக்தம்-
ப்ரஹ்ம அனுபவ ரூப பலம் நான்காம் அத்தியாயத்தில் நிரூபிக்க போகிறவராய் -தத் உபாயத்தை மூன்றாம் அத்தியாயத்தில் நிரூபிக்கிறவராய்
விஷயாந்தர வைராக்யம் விளைந்து -பகவத் விஷய திருஷ்ணை விளைய விஷயாந்தர தோஷங்களையும்
பகவத் விஷய குணங்களையும் முதல் இரண்டு பாதங்களால் நிரூபிக்கிறார் –

வைராக்ய பாதம்
விரக்தன் தானே வேதாந்த ஸ்ரவணத்துக்கு அதிகாரி -வேதாந்த ஸ்ரவண காலத்திலேயே வைராக்யம் ஏற்பட்டு இருக்கிறபடியால்
இங்கு வைராக்யம் விளைவிக்கிறது என் என்ற சங்கை வருமே என்னில்
வைராக்யம் இரண்டு வகை -சாஸ்திர ஸ்ரவண உபயுக்த வைராக்யம் -உபாசன அனுஷ்டான உபயுக்த வைராக்யம் –
முதல் வகை வைராக்யம் இவ்வதிகாரிக்கு ஏற்கனவே சித்தமானாலும் இரண்டாவது வைராக்யம் விளையவே இந்த பாதத்தை அருளுகிறார் ஸ்ரீ வியாசர்
சம்சார தோஷங்களைக் காட்டும் இத்தால் -பழகிப் போகும் சம்சார யாத்திரையிலும் ஜூகுப்சை பிறக்கும் படி பகவத் விஷயம் இனியது
-கல்யாண குணாகரம் -நிர்மலம் என்கிற இத்தால் அதனுடைய போக்யதா பிரகர்ஷத்தைச் சொல்லுகிறது
ஜீவனுடைய தோஷங்களை நிரூபிக்கிறார் வைராக்ய பாதத்தில் -இதனால் ஜாக்ரதாதி அவஸ்த்தா தோஷங்கள் பலிதங்கள் என்றபடி
சாந்தோக்ய உபநிஷத் -பாஞ்சாக்கினி வித்யா பிரகரணம் ஸ்பஷ்டமாக வைராக்யம் விளைவதற்காக –
த்யவ் / பர்ஜன்ய / ப்ருத்வீ / புருஷன் / யோஷித் — இவை ஐந்தும் அக்னிகள்
ஸ்ரத்தா / சோமம் / வர்ஷம் / அன்னம் / ரேதஸ் ஸூ /இவை ஐந்தும் ஹோதவ்யங்கள்
பித்ரு தேஹ தாரக மருத்துக்கள் ஹோதாக்கள் என்றபடி
பஞ்சம ஆஹூத்ய பேஷா வசனம் ப்ராயிகம் எனக் கொள்ளாத தக்கது
ஸ்ரத்தை என்கிற ச ஜீவ பூத ஸூஷ்மம் ஸ்வர்க்க ரூபமான அக்னியில் ஹுதமாய் -சோமம் என்கிற அம்ருத தேஹமாய் பரிணமித்து
பர்ஜன்ய ரூப அக்னியில் ஹுதமாகிறது -அந்த சோமம் வருஷமாக பரிணமித்து ப்ருத்வீ ரூப அக்னியில் ஹுதமாகிறது
வர்ஷம் அன்னமாக பரிணமித்து புருஷ அக்னியில் ஹுதமாகிறது -அன்னம் ரேதா ரூபமாகப் பரிணமித்து யோஷித் அக்னியில் ஹுதமாகிறது –
இப்படி க்ரமமாக ரேத பர்யந்தமாக பரிணதமான ஜீவ ஸஹித ஹோதவ்ய வஸ்துக்களை ஹோதாக்களான தேஹ தாரக மருத்துக்கள்
ஹோமம் பண்ணுகிறார்கள் -யோஷித அக்னியில் ஹுதமானதே புருஷன் என்று வழங்க தக்கதாகிறது என்றபடி –
ஜீவர்களுக்கு வ்ரீஹ்யாதி பாவம் ஓதப்பட்டுள்ளது -அந்த தானியத்தை சரீரம் என்று அபிமானித்து அபிமானித்து இருக்கும் ஜீவாத்மா வேறு பட்டவன்
தூமாதி மார்க்கத்தாலே அவரோஹணம் செய்யும் இந்த ஜீவனுக்கு அந்த வ்ரீஹியில் சம்ச்லேஷ மாத்திரமே கொள்ளத் தகும்
அறுவடை காலத்தில் தானியத்தை அறுக்கும் போதே அவனை சரீரமாக அபிமானித்த ஜீவனுக்கு வியோகம் –
இவன் மட்டும் அறுக்கும் காலத்தோடு -உரலில் குத்தும் காலத்தோடு -புடைத்து பிசைந்து தளிகை பண்ணும் காலத்தோடு
வாசி அற ஒட்டிக் கொண்டே புருஷ கர்ப்பத்தை அடைகிறான் என்று கொள்ள வேண்டும்
ஆக வ்ரீஹ்யாதி பாவேந ஜனனம் ஓவ்பசாரிகம் என்றபடி
இப்படி சம்சாரி ஜீவக தோஷங்களை வைராக்ய பாதத்தில் வியாசர் நிரூபிக்கிறார் –
இந்த வைராக்ய பாதம் சாங்க்யர்களுக்கும் மாயாவாதிகளுக்கும் அசங்கதம் என்பர் நம் பெரியோர்
-சாங்யாதிகள் -ஆகாசம் உலக்கை அடியால் எப்படி பாதிக்கப் படாதோ அப்படியே தேஹாதிகளால் ஆத்மா பாதிக்கப் படான்
-இவனுக்கு பல போக்த்ருத்வம் இல்லாதாப் போலே கர்த்ருத்வமும் இல்லை
-ஆகையால் பலம் ஜீவ உபாதியான அஹங்காரத்துக்கே -மோக்ஷமும் பிரக்ருதிக்கே என்பர்
வியாசர் ஜீவனுக்கு சம்சார பந்தத்தையும் தோஷ சாஹித்யத்தையும் சொல்லி அவர்கள் பஷத்தை நிரசித்தார்
சாங்க்யன் பிரகிருதி சத்ய பதார்த்தம் -தத் ப்ரயுக்த ஸூக துக்காதி தோஷங்கள் பொய் என்றான் / மாயாவதி மாயையும் பொய் என்றான் –
வியாசர் பாரமார்த்திக சம்சார சம்பந்தத்தை ஜீவனுக்குச் சொல்லி அவ்விரு பக்ஷங்களையும் நிரசித்தார் என்றபடி
————————
உபய லிங்க பாதம்
அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணை கதா நத்வமும் -பரமாத்மாவுக்கு அசாதாரணங்கள்
ப்ருஹத்வ பிரும்ஹணத்வங்கள் ஆகிற ப்ரஹ்ம சப் தார்த்தமும் இவ் உபய லிங்கம் எனக் கொள்ளலாம்
உபாயத்வ அனுகுணமான ஹேய ப்ரத்ய நீகத்வமும் -உபேயத்வ அனுகுணமான கல்யாண குணை கதா நத்வமும்
-உபாய உபேயத்வ ஸ்வ பாவமான ப்ரஹ்மத்துக்கு அசாதாரணங்கள் –
சாதன அத்யாயம் ஆதலால் சாதனத்தை நிரூபணம் செய்வது உக்தமே -சாஷாத் சாதனம் ப்ரஹ்மம் இ றே
-சேஷியாக பிரணவத்தில் நிரூபிதம் -பிரப்யமாக த்ருதீய பத்தில் -உபாயம் என்று நமஸ்ஸில் –
ஆகையால் இப்பாதத்தில் பரமாத்மாவை உபாயமாகவும் உபேயமாகவும் சகல பல பிரதனாகவும் அறுதி இடுகிறார் வியாசர்
இவ்விஷயங்களை பராதிகரணத்திலும் பலாதிகரணத்திலும் காணலாம் -ப்ரஹ்மம் ச குணம் நிர்தோஷம் என்று நிரூபிக்கிறார்
அசேஷ விசேஷ ப்ரத்ய நீக சின் மாத்திரமே ப்ரஹ்மம் -அதற்கு பாரமார்த்திக குணங்கள் கிடையாது -ப்ரஹ்மம் உண்மையான நிர்குணமே-என்பற்கு
இப்பாதமும் மேல் பாதமான குண உப சம்ஹார பாதமும் எல்லாப் படியாலும் அசங்கமாகும்
ச குணத்தை இதில் நிரூபித்து உபாஸ்ய குண பேதத்தால் வித்யா பேதத்தை மேல் ஸ்தாபிக்கிறார்
குணங்கள் சைத்யங்கள் என்று சொல்லப் பார்க்கில் தங்கள் ஒப்புக் கொண்டுள்ள ஸ்வயம் பிரகாசத்வம் ஆனந்தத்வம் இவை இல்லையாய் விடுமே
இவையும் இல்லை என்றால் புத்த மத பிரவேச பிரசங்கம் ஏற்படும்
கல்யாண குண விசிஷ்டன் -ச குண வாக்கியம் சொல்லி -அபகுண ரஹிதன் -நிர்குண வாக்யத்துக்கு விஷயம்
கல்யாண குண பிரகரணங்களில் -குணங்களுக்கு ஒரு உபாதி -ஹேது -சொல்ல வில்லை
-ஆகையால் கல்யாண குண யோகம் நிருபாதிகம் ஸ்வா பாவிகம் என்று தேறும்
ப்ரஹ்ம ஸ்வரூபம் போலே கல்யாண குணங்களும் நித்யம் -ப்ரஹ்ம ஸ்வரூபத்தை காட்டிலும்
ப்ரஹ்ம கல்யாண குணங்களில் அத்யாதாரத்தை பூர்வர்கள் காட்டுவார்கள்
உபாஸனார்த்தம் குணம் கல்பிதம் என்ன ஒண்ணாது-
யாவதாத்ம பாவித்வாத் -2–3–30-என்று குண குணிகளுக்கு பேதத்தை ஸ்பஷ்டமாக சொல்லி அபேத வாதம் அயுக்தம்
ப்ரஹ்மம் ஆனந்த ஸ்வரூபமாயும் ஆனந்த குணகமாயும் இருக்குமே
குண குணிகளுக்கு அபேதம் கொள்ளில் அருணாதிகரண விரோதம் பிரசங்கிக்கும்
அவ்வதிகரணத்தில் ஆருண்ய குணத்துக்கு த்ரவ்ய த்வாரா க்ரய சாதனத்வம் சித்தாந்தம் -சாமா நாதி கரண்ய நிர்வாகமும் சம்பவியாது
இதில் -8- அதிகரணங்கள் /முதல் நான்கில் ஜீவ தோஷங்களை மறுபடியும் சொல்லி -ஜீவ ஸ்வப்னாதி தோஷ நிரூபண முகேன
ஸ்வப்னா பதார்த்தங்களை ஸ்ருஷ்டிப்பதாய் இருக்கும் பரமாத்மா மஹாத்ம்ய ப்ரதிபாதமே பலிக்கிற படியால் இவை சங்கதமே
சர்வ அவஸ்தைகளிலும் ஜீவன் பரதந்த்ரனே -ஏகி பூதன் அல்லன்-
விசித்திர பதார்த்த ஸ்ருஷ்ட்டிக்கும் தண்மை ஸூ ஷூ ப்தி ஸ்தானமாய் இருக்கும் தன்மை-ஆகிய இரண்டு ஆகாரங்களை
பரப்ரஹ்மத்துக்கு மஹிமையாக பிரதிபாதிக்கப் படுகிறது இந்த பாதத்தில்

இப்பாதத்தில் முதல் அதிகரணம் -ஸந்த்யாதிகாரணம் -சந்தயே-என்று தொடங்கி
இரண்டு ஸூத்ரங்களாலே -ஜீவனே ஸ்வப்னா பதார்த்த ஸ்ரஷ்டா -பூர்வ பக்ஷம் காட்டி
மேலே -மாயா மாத்திரம் என்று தொடங்கி -நான்கு ஸூ த்ரங்களால் பரமாத்மாவே ஸ்வப்னா விசித்திர பதார்த்த ஸ்ரஷ்டா என்று சித்தாந்தீ கரிக்கிறார்
மாயா -மித்யார்த்தம் இல்லை –சாத்தியமே –ஆச்சர்யத்வமே மாயா சப்த ப்ரவ்ருத்தி நிமித்தம்

இரண்டாம் அதிகரணம் -ததபாவாதி கரணம் -ஸூ ஷூப்தி ஸ்தானம் பகவான் என்று அறுதி இடுகிறார் –
உறங்கும் சம்சாரி ஜீவர்களுக்கு நாடிகள் மாளிகை ஸ்தானத்திலும் -புரீதத் என்னும் நாடி காட்டில் ஸ்தானத்திலும்
-பரமாத்மா படுக்கை ஸ்தானத்திலும் அமைகின்றன என்கிறார் இந்த அதிகாரணத்தில் -இதுவே ப்ரசாத கட்வா பரியங்க நியாயம்
-இம்மூன்றும் கூடியே ஸூ ஷூப்தி ஸ்தானம்
-தூ மணி மாடத்து –கோட்டுக்கு கால் காட்டில் –மெத்தென்ற பஞ்ச சயனம் -என்றால் போலே இங்கே கொள்ளத் தகும்

மூன்றாவது அதிகரணத்தில் ஆத்ம நித்யத்வம் கூறப்படுகிறது -முன்பே ஜீவ நித்யத்வம் -நாத்மா ஸ்ருதே-நித்யத்வாச்ச தாப்ய –என்று முன்னமே கூறப்பட்டு உள்ளதே –
மோக்ஷ காலத்தில் ஜீவன் பாஷாண துல்யன் என்கிற பஷத்தை ப்ராஹ்மணே ஜைமினி என்று வியாசர் நிரசிக்கப் போகிறார் –
பூர்வ மீமாம்சையில் கூறப்பட்டுள்ளது –அநு ஸ்ம் ருதே –2–2–24-என்று க்ஷணிக விஞ்ஞான வாத பங்கை பிரகாணத்தில் ஆத்ம நித்யத்வம் கூறப்பட்டுள்ளது
கல்பாந்தத்திலே -ஏகமேவ என்று ஓதப்படும் ஐக்கியம் ஸ்வரூப ஐக்கியம் அன்று நாம ரூப பிரஹாணமேயாகும் -என்றும் சித்தாந்தம் –
ஆக இப்படி அநேக ஸ்தலங்களில் நித்யத்வம் ஸித்தமாய் இருக்க இங்கே சொல்வது பிரளய சமமான இந்த ஸூஷூப்தி பரம ஹேயம் என்று
இதன் தோஷத்தைக் காட்டவே இந்த பிரசங்கம்
ஸூஷூப்தி தசையில் சர்வ ப்ரவ்ருத்தி ஸூ ந்யதவமும் தர்ம பூத ஞான அத்யந்த சங்கோசமும் அமையும்
மோக்ஷ தசையில் பகவத் கைங்கர்ய ரூப பிரவ்ருத்தியும் தர்ம பூத ஞான அத்யந்த விகாசமும் அமையும் என்று பேதம் காட்டி
அருளிச் செய்கிறார் இவ்வதிகரண பாஷ்யத்தில் எம்பெருமானார்

நான்காவது அதிகரணம் மோர்ச்சா அவஸ்தை விசார பரம் -பூர்வ பாதத்தில் ஜாக்ரத அவஸ்தையும் மரண அவஸ்தையும் விசாரிக்கப் பட்டன
இப்பாதத்தில் ஸ்வப்ன அவஸ்தையும் ஸூஷூப்த அவஸ்தையும் விசாரிக்கப் படுகின்றன
மூர்ச்சை ஸூஷூப்தாதிகளில் ஒன்றே -பூர்வ பக்ஷம் -அது ஸூஷூப்த்யாதி பின்னம் -சித்தாந்தம் –
இந்த அதிகரணம் பகவத் கல்யாண குண அதிசய ஸ்தாபகம் அன்று
மூர்ச்சை ஸூஷூப்தியிலும் சேராது -மரணத்திலும் சேராது -நிமித்த வைரூப்யத்தையும் ஆகார வைரூப்யத்தையும்
இதுக்கு காரணமாக எம்பெருமானார் அருளிச் செய்கிறார்
ஸூஷூப்திக்கு நிமித்தம் இந்திரிய சிரமம் -மூர்ச்சைக்கு நிமித்தம் உலக்கை இவற்றால் அடிபடுதல் –

மேல் நான்கு அதிகரணங்களால் -நிர் தோஷத்வத்தையும் – கல்யாண குணாகாரத்வத்தையும் நிரூபிக்கிறார் -அமலன் -ஆதி போலே
தோஷமுடைய வஸ்துவினுடைய சம்சர்க்கத்தாலே சங்கிக்கப்படும் தோஷங்களை சுருதியில் கூறும் பகவத் ஸ்வ பாவங்களை கொண்டு நிரசித்து
மேலே ஜகத் ப்ரஹ்ம மூல ஐக்கியமாக கூறப்படும் தோஷங்களை பர ப்ரஹ்ம ஸ்வபாவ கதன முகத்தால் நிரசிக்கிறார்
ப்ரஹ்மம் உபாஸ்யம் இல்லை உதாரன் இல்லை என்கிற பக்ஷங்களை -பராதிகரணத்தால் பரத்வ பூர்த்தியையும் –
பலாதி கரணத்தால்- நிரதிசய உதார குணத்தையும் உபபாதிக்கிறார் -பர ப்ரஹ்மமே உபாஸ்யம் -என்று அறுதி இடுகிறார் –
பரசமயிகள் ஜீவ ஈச ஸ்வ பாவங்களை அழிக்கப் பார்க்கிறார்கள் -அத்தை நிரசிக்கவே -ந ஸ்த்தானதோ அபி -என்று
வேத வியாசர் அதிகரண ஆரம்பம் செய்கிறார் -உபய லிங்கத்பவம் —ந ஸ்த்தானதோ அபி -என்கிற ஸூத்ரத்தாலும்-
உபய விபூதித்வம்-ப்ரக்ருத்தை தாவத்த்வம் -என்கிற ஸூ த்ரத்தாலும் அறுதியிடப் படுகிறது
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –ய ஆத்மநி திஷ்டன் –சுருதியில் பிரதி பர்யாயம் அந்தர்யாமி அம்ருத
அம்ருத -சப்தம் தத் தத் வஸ்து கத தோஷ விசேஷ சம்பந்தம் இல்லாமையைக் காட்டும்
அதாத ஆதே ஸோ நேதி நேதி -ஸ்ருதி வாக்கியம் விபூதி நிஷேத பரம் அன்று
ப்ரஹ்மத்துக்கு ரூபங்கள் நிஷேதம் -பூர்வ பக்ஷம் -ரூப இயத்தா நிஷேத பரம் -சித்தாந்தம் -முன் சொல்லப் பட்ட அளவே உடையதோ- இல்லை என்கிறது-

பராதிகரணம் –பிரமேயம் பார்ப்போம் -அவைதிக விப்ரபத்தி மூன்று விதம் –
1-ப்ரக்ருதி உபாதான காரணம் ருத்ரன் நிமித்த காரணம் /நாராயணன் ஜகத் காரண பூதன் என்ற ஸ்ருதிகளால் இது கழியும் –
-2-நாராயணன் உபாதான காரணன் -ருத்ரன் நிமித்த காரணம் -நிமித்த உபாதானங்களுக்கு ஐக்யமே பேதம் இல்லை என்ற ஸ்ருதி வாக்யங்களால் கழியும்
-3-நிமித்த உபாதான காரணமாயும் முக்திதமாயும் உள்ள பர ப்ரஹ்மம் நாராயணன் ஆயினும் முக்தர்களுக்கு ப்ராப்ய பூதன் வேறு ஒருவன் என்பர்
இத்தை ஒழித்து பரம காரணமான பர ப்ரஹ்மமே பரம பிராப்யம் என்று அறுதியிடுகிறார் பராதிகரணத்தில்
முதல் ஸூ த்ரம் -பூர்வ பாஷா சங்கா பரம்–நான்கு ஹேத்வ ஆபாசங்களைக் காட்டி – மேல் நான்கு ஸூத்ரங்களால்
இவற்றை நிரசித்து வேதாந்த சித்தாந்த ஸ்தாபனம் செய்கிறார்
ஸ்தான விசேஷாத் -3–2–33-என்ற ஸூ த்ரம் பூர்வ ஸூத்ர சேஷம் -பூர்வ ஸூ த்ரங்களால் அதிக வஸ்து வாதத்தில் தூஷணம் கூறிய வியாசர்
-அநேக சர்வ கதத்வம் -என்கிற அந்திம ஸூ த்ரத்தால் ஸ்வ பக்ஷ பிராமண பிரதர்சனம் -இவ்வாறு -7-ஸூத்ரங்கள்
நான்கு ஹேது ஆபாசங்களில் மூன்றாவது -சம்பந்த வ்யபதேசம் —ப்ரஹ்மம் ஹேதுவாய் -ப்ராபகமாய் -மற்ற ஓன்று இந்த பிராப்பகத்தால்
அடையப்படும் ப்ராப்யம் -அம்ருதஸ்ய ஏஷ சேது -ஸ்ருதி வாக்கியம் -உபபத்தேஸ்ச -என்ற ஸூத்ரத்தால் உபாயத்துக்கே உபேயத்வ சாதன பரம் -இந்த ஸூத்ரம் என்றபடி
அநந்ய உபாயத்வ சிரவணாத்–ப்ராப்யத்துக்கே உபாயத்வம் -ப்ரஹ்மத்தின் ஸ்வரூபமே ப்ராப்யத்வமும் ப்ராபகத்வமும் –
பகவான் சேதனனை வரிப்பது மூன்று வகை -1- நிராங்குச ஸ்வா தந்திரத்தால் உண்டான பாரதந்தர்யத்தால் செய்யப்படும் வரணம்-
-2-கிருபையால் உண்டான பாரதந்தர்யத்தால் செய்யப்படும் வரணம்
புள்ளைக காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை
பிரசாத விசிஷ்ட ப்ரஹ்மம் உபாயம் -போக்யதா விசிஷ்ட ப்ரஹ்மம் உபேயம்
இத்தையே இரக்கம் உபாயம் இனிமை உபேயம் -ஆக பகவத் உபாயத்வ உபேயத்வங்கள் பராதிகரண சித்தாந்திதங்கள்-
கடைசி அதிகரணம் பலாதிகரணம் பிரமேயம் –பத்து பாதங்களால் காரணத்வ ப்ராப்யத்வ ப்ராபகத்வ விசிஷ்டமாக அறுதியிடப்பட்ட ப்ரஹ்மமே
ஐஹிக ஆமுஷ் மிக போக மோக்ஷ ரூப சகல பல ப்ரதம்-பரம உதாரன் -என்று அறுதியிடுகிறார் –
கீழே ப்ரஹ்மம் ஹேய ரஹிதம் என்றார் –பலத்வம் உக்தம் -அங்கு -இதில் ஹேய நிவர்த்தகம் என்கிறார் -பல தத்வம் உக்தம் இங்கு
தத்வ ஞானம் மித்யா நிவர்த்தகம் என்பதால் மோக்ஷம் ப்ரஹ்ம அதீனம் அல்ல என்கிற மாயாவதி நிரஸனம்
பகவத் அனுக்ரஹத்தை முண்ணிடாதே கேவல தத்வ ஞானத்தால் மோக்ஷம் தார்கிகர் வாதம் நிரஸனம்
ஜைமினி மத அநு யாயி கண்டனம்
மேலே புருஷார்த்ததிகரணத்திலும் –3–4–1-இதே போலே -பூர்வ மீமாம்சையில் அபூர்வாதிகாரணம் அபூர்வம் துவாரம் தேவதா அனுக்ரஹம்
-கர்மமே காலாந்தரபாவி பலத்தை கொடுக்கும் பூர்வ பக்ஷம் -கர்மம் நசித்து பிரத்யக்ஷம் என்பதால் அபூர்வம் கல்பம்
-ச ஏனம் ப்ரீத ப்ரீணாதி -ப்ரீதி அடைந்த தேவதையே இவனை உகப்பிக்கிறது -போக்தா -ஆராத்யன் -பிரபு பல ப்ரதன்-சாஸ்திர விதிகள் அவன் கட்டளைகள் –
வீடு முதல் முழுவதுமாய் –2–2–1-என்றும் வீடு முதலாம் –2–8–1-போலே அகில பல ப்ரதன் என்றவாறு –

————————

இனி மேல் ஆறு பாதங்களால் சாத்தியமான பரமாத்மா உபாசனத்தையும் சாத்தியமான பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்தையும் விவரித்து அருளுகிறார்
-3–3-குண உபஸம்ஹார பாதம் –
அநேக சாகைகளில் ஓதியுள்ள வைஸ்வநராதி வித்யை -அபேதமா பேதமா என்கிற விசாரம் -அபேதமானால் குண உப சம்ஹாரம் -பேதமானால் விகல்பம் –
வேத்ய அநு ரூபமாக வித்யா நியமம் -வேத்ய பேதம் குண பேதத்தால் அல்லது ப்ரஹ்ம பேதத்தால் அல்ல
நிர்விசேஷ வஸ்துவை தெரிவிப்பதில் தாத்பர்யம் சொல்லுபவர்களுக்கு இந்த பாதம் அங்கதமாம் –
குண விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனமான தஹர வித்யையினால் பரஞ்சோதி பிராப்தியும் -பரஞ்சோதிஸான பர ப்ரஹ்மத்தை அடைந்தவனுக்கு
நிராங்குச ஐச்வர்ய பிராப்தியும் அன்றோ ஸ்ருதி ஓதிற்று -பரம ப்ராப்திக்கு மேற்பட்ட மற்று ஒரு மோக்ஷம் இல்லையே
-ஆகையால் க்ர்ம முக்தி நிரூபணம் அயுக்தம்-ச குண உபாசனத்தாலே நிர் குண வித்யா பிராப்தி -நிர் குண வித்யா ப்ராப்தியால்
மோக்ஷ பிராப்தி -இங்கனே க்ரம முக்தியாகவும் என்ன ஒண்ணாதே
ஆனந்தாதய பிரதானஸ்ய –3- 3–11-என்று பர வித்யா சாமான்யத்துக்கு ச குண விஷய கத்வத்தை அறுதியிட்டு -நிர் குண வித்யை என்பது ஒன்றே கிடையாதே
இப்பாதத்தில் -26-அதிகாரணங்கள்
சில -வித்யா பேத அபேத விசார பரங்கள்
சில பர வித்யைக்கு அநு பந்திகளான அர்த்தங்கள் விசாரம்
சில த்ருஷ்ட்டி உபாசன பாரங்கள்
-19th -அதிகரணம் லிங்க பூயஸ்த்வாதி கரணம் -சகல பர வித்யா உபாஸ்யம் -ஸ்ரீ மன் நாராயணா தேவதா விசேஷம் –
ஆனந்தாதிகரணம் -பகவத் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் உபாஸ்யங்கள் -ஸ்ரீ யபதித்தவம் அருளிச் செய்யாமல் -அதி பிரசித்தம் என்பதால் -அதி ரகஸ்யம் என்பதாலுமாம்
சத்யம் ஞானம் அநந்தம்–நிர்விகாரத்வ -ஞான ஸ்வரூபத்வம் ஞான குணகத்வம் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன்
காரணத்வ சங்கித தோஷ பரிஹார்த்தம் சத்யதவாதிகள் -ஸ்ரீ பாஷ்ய சாரம் –
லிங்க பூயஸ்த்வாதி கரணம் -தர்மியான பர ப்ரஹ்மம் நாராயண தத்வம் சகல பர வித்யா உபாஸ்யம்
ஹான்யதிகரணம் தொடக்கமான மூன்று அதிகரணங்கள் வித்யைக்கு அங்கமான சிந்தனை விசேஷ விசார பரங்கள் –
இவற்றுள் முதலில் -ஹான்யதிகரணம்-ஹானி சித்தனமும் -உபாயன சந்தனமும் -/ ஹாநாமாவது கர்ம விமோசனம் -உபாயனம்-அந்யத்ர பிரவேசம்
-அதாவது கர்மாதிகள் மற்றோர் இடத்தில் சம்பந்திப்பது –
இந்த சிந்தனம் அங்கமானாலும் ஞான ஸ்வரூபம் ஆகையால் வித்யா துல்யமாக இங்கே விசாரிக்கப் படுகிறது –
ஆகையால் க்ரியா ஸ்வரூபங்களான அங்கங்களை விசாரிக்கும் நான்காம் பாதம் -அங்க பாதத்தில் -இது விசாரிக்கப் படுவது இல்லை
அமூர்த்தங்களான புண்ய பாபங்களுக்கு கணமும் உபாயனமும் கூடுமோ -மற்றொருவர் கர்மம் மற்றொருவர் பலத்துக்கு ஹேது வாகுமோ என்னில்
வித்யா நிஷ்டன் இடம் உள்ள ப்ரீதியால் சர்வேஸ்வரன் அனுகூலர் பிரதிகூலர் இடம் புண்ய அபுண்ய பல துல்யம் கொடுக்கிறான் –
சாம்பராயாதி காரணத்தில் தேகம் பிரிந்த பின்னை கர்ம ஷயம் என்னப்படுகிறது -தததிகமாதி கரணத்தில்–4–1–13–தேகம் இருக்கும் காலத்தில் கர்ம ஷயம் கூறப்படுகிறது
இரண்டும் பொருந்தும் -உபாசன ஆரம்ப காலத்தில் கர்ம ஷயம் -ஷமிஷ்யாமி -பொறுப்பேன் -என்னும் அவன் சங்கல்பம் /
தேக வியாக சமயத்தில் கூறப்படும் கர்ம ஷயம் -ஷாந்தம் -பொறுத்தேன் -என்கிற அவன் சங்கல்பம் –
இந்த அதிகரணத்தில் முதல் இரண்டு ஸூத்ரங்கள் சித்தாந்தம் -மேலே பூர்வ பக்ஷ அனுவாதம் –கதேரர்த்தவதத்வம்
-அதுக்கு மேலே சித்தாந்தம் -உப பன்ன–வித்யா மஹாத்ம்யத்தாலே ஸூஷ்ம சரீர ஸ்திதி
அக்ஷரத்யதி கரணத்தில் அமலத்வம் சர்வ பர வித்யா உபாஸ்ய குணமாக நிரூபிக்கப் படுகிறது -அமலத்வம் நித்ய ஸூ ரி வியாவர்த்தகம்
லிங்க பூயஸ்த்வாதி கரணத்தில் சகல பர வித்யா உபாஸ்யம் நாராயண தத்துவமே –
அக்ஷர சிவ சம்பு பர ப்ரஹ்ம பரஞ்சோதி பரதத்வ பரமாத்மா சப்தங்கள் நாராயணனே
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா நிகர் இலகு காருருவா நின்னகத்தன்றே புகர் இலகு தாமரையின் பூ –
சப் தாதி பேதாதி கரணத்தில் சத் வித்யா தஹர வித்யாதிகளுக்கு பேதம் சமர்ப்பிக்கப் படுகிறது -இதிலும் நிர் விசேஷ ஞானவாதி நிரஸனம்
விகல்பாதி கரணத்தில் சகல பர வித்யைகளுக்கும் மோக்ஷ ரூப ஏக பலம்
கூடியே மோக்ஷ ஹேது பூர்வ பக்ஷம் -தனித்தனியே மோக்ஷ ஹேது சித்தாந்தம் -உபாயம் பல விதம் -அவற்றுக்கு விகல்பம் என்று அறுதியிடுகிறார் வியாசர் –
-3–4-அங்க பாதம் –வித்யா அங்கமான கர்மாதிகள் விசாரம் -வர்ணாஸ்ரம தர்மம் -சம தமாதிகள் -பாண்டித்யம் -பால்யம்
-மௌனம்–த்யானம் அர்ச்சனை -பிரணாமாதிகள் போல்வன
-1-ஞான மாத்திரம் உபாயம் இல்லை –அது உபாஸனாத்மகம் –2-அது பக்தி ரூபம் -3-அது நாராயண விஷயகம் -4-அதுவும் கர்மாங்ககம்
மூன்று உபநிஷத் வாக்கியங்கள் உதாகரிக்கப் படுகின்றன -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று ப்ரஹ்ம வித்யையினால் புருஷார்த்த பிராப்தி
வேதாஹமேதம் -பிரதி பந்தக நிவ்ருத்தமும் திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் உபாயாந்தர நிஷேதமும்
யதா நத்ய-வாக்யத்தால் ப்ராப்ய லாபமும் பிரதிபந்தக நிவ்ருத்தியும்
-15-அதிகரணங்கள் இந்த பாதத்தில் /
முதல் அதிகரணம் முதல் ஸூ த்ரம் -வித்யையினாலே ப்ராப்ய லாபம் என்று காட்டி -மேலே ஆறு ஸூ த்ரங்களால் பூர்வ பக்ஷம் –மேலே பல ஸூ த்ரங்களால் சித்தாந்தம் –
ஜைமினி மகரிஷி -இவர் சிஷ்யர் பூர்வ பஷி இங்கு / பர ப்ரஹ்ம அங்கீகாரம் செய்தவர் தானே இவரும்-சரஷாதப்ய விரோதம் ஜைமினி /
பரம் ஜைமினிர் முக்யத்வாத்-இத்யாதி ஸூ த்ரங்களில் ஸ்பஷ்டம் –
அவர் பூர்வ பஷி ஆவாரோ என்னில் வியாசரை ஆச்ரயிப்பதற்கு முன் உபநிஷத் துக்களுக்கு செய்த நிர்வாகங்கள் பூர்வ பக்ஷம் என்றபடி –
சர்வ உபேஷாதி கரணத்தில் -வித்யைக்கு அங்கம் கர்மம் என்னும் விஷயத்தில் அஸ்வத்வத் த்ருஷ்டாந்தம் காட்டப் பட்டு /
அஸிநாஜிகாம்சதி -கத்தி ஹனன சாதனம் அல்லது ஹனன இச்சா சாதனம் இல்லை –
இதே போலே யஜ்ஜேன விவிதி ஷந்தி -சுருதியில் – யஞ்ஞாதிகள் வேதன சாதனம் அல்லது வேதன இச்சா சாதனம் இல்லை என்று சித்தாந்தம்
-ஞான இச்சைக்கு கர்மம் சாதனம் என்னவும் ஒண்ணாது -கர்மம் இச்சையை உண்டாக்காதே இ றே
-விஷய வை லக்ஷண்ய ஞானத்தை பிறப்பிக்கவும் ஒண்ணாதே -ஞானத்துக்காக கர்மம் என்னுமது பர சமயிகளுக்கு அபசித்தாந்தம் இ றே
கமன சாதன பூதமான குதிரை பரிகரங்களை அபேக்ஷிக்குமா போலே மோக்ஷ சாதனமான ப்ரஹ்ம வித்யையும் கர்மங்களை அபேக்ஷித்து இருக்கும் –
பல உத்பத்தியில் கர்ம அபேக்ஷை இன்றிக்கே ஒழிந்தாலும் ப்ரஹ்ம வித்யை உத்பத்தியில் கர்ம அபேக்ஷை உண்டு என்பதை
சர்வ அபேக்ஷை என்று ஸூத்ரகாரர் சொல்லி உள்ளார் –
முன்னமே யஞ்ஞாதிகளை யும் சமாதிகளும் வித்யா அங்கமாக நிரூபித்த வியாசர் -ஸஹ கார்யந்த்ர வித்யதிகரணத்தில்
-பாண்டித்ய பால்ய மௌனங்களை வித்யா அங்கமாக நிரூபிக்கிறார் -இந்த த்ரயமும் வித்யா அங்கம் சித்தாந்தம் -பாண்டித்யம் மட்டுமே பூர்வ பக்ஷம் \
ஸ்ரவண மனன லப்த ஞான விலக்ஷணம் ஞானம் பாண்டித்யம் -வேதாந்திகள் தங்கள் பெருமைகளை மறைத்து கொண்டு இருப்பார்களே -இதுவே பால்யம் –
-இப்படி இருப்பதும் லோகத்தார் செய்யும் சம்மானத்தை இல்லை செய்கைய்க்காகவும்-பரம ஞானிகளுக்கு ஸம்மாஆக மூன்றுமே வித்யா அங்கங்கள் -என்பர் வியாசர்
மேலே வித்யா நிஷ்பத்திக்கு தடையை தெரிவிக்கிறார் அதிமாதி கரணத்தில்
-பிரதிபந்தக அபாயமும் ஸாமக்ரியை அந்தர்பூதம் ஆகையால் -பாகவத அபசாரம் இல்லையாகில் வித்யா நிஷ்பத்தியாம் -பாகவத
பேற்றுக்கு பாகவத சம்பந்தம் போலே இழவுக்கு அபசாரம் அன்றோ
வாக்யார்த்த ஞான மாத்திரம் உபாயம் என்பர் ம்ருஷாவாதிகள் –/ கர்ம ஞான சமுச்சயம் என்பர் யாதவர்கள் -/
கர்ம பிரதான வாதிகள் நிரீஸ்வர மீமாம்சகர்கள் /ஜீவன் நித்ய முதன் ஆகையால் -முக்தி ஸாத்யை அல்ல என்பர் சாங்க்யர்/
இந்த நான்கு பக்ஷங்களையும் கண்டித்து கர்ம அங்கமான உபாசனம் மோக்ஷ ஹேது -சித்தாந்தீ கரிக்கிறார் –

—————————-

பல அத்யாயம் -ப்ரஹ்ம வித்யா பலம் -த்ருதீய நாராயணாய -பதார்த்தம் –
ஆவ்ருத்தி பாதம் –கர்ம நிவ்ருத்தி பலம் / உதக்ராந்தி பாதம் -ஸ்தூல தேஹ நிவ்ருத்தி / கதி பாதம் -ஸூஷ்ம தேஹ நிவ்ருத்தி பலம்
பிராப்தி பாதம் -பர ப்ரஹ்ம பிராப்தி -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் -அபு நா வ்ருத்தி -இத்யாதி பலம் –

முதல் பாதம் -11-அதிகரணங்கள் –முதல் -6-வித்யா ஸ்வரூப விசாரம் /மேல் -5-வித்யா பல விசாரம்
உபாசனமும் கர்ம யோகத்துக்கு சாத்தியம் ஆகையால் ஸாத்ய பரமான இந்த அத்தியாயத்தில் உபாசன விசாரம் உக்தமே
புல்கு பற்று அற்றே என்று பக்தியை அங்கநா பரிஷ்வங்கம் போலே ஸ்வயம் பிரயோஜனம் அன்றோ –
ஆவ்ருத்தி -அஸக்ருத் உபதேசாத் –4–1–1-மோக்ஷ சாதனமான ஞானம் அஸக்ருத் ஆவ்ருத்தம் -புன புன சிந்தனம் -ஸ்ம்ருதி சந்ததி ரூபம்
. த்ருவா ஸ்ம்ருதி -நிதித்யாஸிதவ்ய . தைலதாரை போலே அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபம் -/ ப்ரீதி ரூபா பன்னம்-
இரண்டாவது அதிகரணம் -ஆத்மத்வ உபாசநாதி கரணம் –ப்ரஹ்மம் நானே என்றே உபாஸிக்க வேணும் -அந்தராத்மாவாக உணர்ந்து -என்றபடி
-ஐக்கிய ஞான பிரமம் கொண்டு அல்ல -பர ப்ரஹ்மத்துக்கு அத்யந்த பரதந்த்ரன் என்ற ஞான லாபத்தால் –ஆக்ருத்யதிகரண நியாயம்
அஹம் க்ரஹ உபாசனம் ஜீவ பர அத்வைத ஞானம் –என்பர் ம்ருஷ வாதிகள் -அது அயுக்தம்
சாஸ்திர த்ருஷ்ட்யா / ஆத்மேதி து / அவிபாகேன/ஸூ த்ர த்ரயத்திலும் சரீராத்மா பாவத்தால் வந்த ஜீவ பர ஆத்மத்தையே
ஆகிருதி நியாயத்தாலே திரு உள்ளம் பற்றி -இதை சர்வம் சமஞ்ஜஸம் -என்பர் நம் ஸ்ரீ பாஷ்யகாரர்
இப்படி வித்யா ஸ்வரூப விசோதனம் செய்து தததிகமாதி கரணம் தொடங்கி -5-அதிகரணங்களால் வித்யா பலத்தை நிரூபிக்கிறார் –

ததிதகமே –சாஷாத்கார தசா பன்ன ப்ரஹ்ம வித்யா பிராப்தி ஏற்படும் போது -உத்தர பூர்வாகயோ –அஸ்லேஷ விநாஸவ் /
நா புக்தம் ஷீயதே -கர்ம பல ஜனக சக்தி பல அனுபவ பர்யந்தம் நிலை நிற்கும் -என்றதே
ப்ரஹ்ம வித்யை கர்மங்களுக்கு பல ஜனன சக்தியை உண்டாகாமல் தடுத்து விடும்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே –10–5–7-
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுடைய கர்மங்களுக்கு நான்கு அவஸ்தா விசேஷங்கள் –விநாசம் -அஸ்லேஷம் -தூநநம் -உபாயநம் —
க்ரியா சாமான்யம் அழிவது ப்ரத்யக்ஷம் / எனவே இந்த அவஸ்தா விசேஷங்களை கிரியைக்கு சொல்லாமல் கிரியா சக்திக்கு
-அந்த சக்தியும் பகவத் ப்ரீதி அப்ரீதி ரூபையாம் –
புண்யமும் மோக்ஷ விரோதி என்பதால் அவற்றுக்கும் அஸ்லேஷ விநாசங்கள் என்பதை இதராதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார் –
ஸூபாஹுவுக்கு நாசமும் மாரீசனுக்கு அஸ்லேஷம் போலே /
வித்யா நிஷ்டனுடைய புண்யம் தத் அனுகூலம் இடத்தும் -பாபம் தத் பிரதிகூலன் இடத்தும் சங்க்ரமிக்கும்

உத்தர பூர்வாகயோ –4–1–13-பாப பரம் / இதரஸ்யாபி-4–1–14-புண்ய பரம் / அநாரப்த கார்யே –4–1–15-புண்ய பாப பரம்
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் -பிரகார பூதரான நீங்கள் பிரகாரியான அவன் பக்கல் சென்று சேர
-பிராப்தத்தைச் செய்யவே அப்ராப்தம் எல்லாம் விடும்
ஸ்வரூப அனுரூபத்தைச் செய்யவே ஸ்வரூப விரோதிகள் அடங்க விட்டுப் போகும்
ஒடுங்க -என்று வித்யையும் விடும் என்று வித்யா பலமும் கூறப்பட்டது இ றே –

உத்க்ராந்தி பாதம் -ஸ் தூல தேஹ நிவ்ருத்தி -வித்யா பலம் –
ப்ரஹ்ம வித்துக்களை மரணம் ஸூக ரூபம் -மஹாநுபாவர்கள் இருந்தால் மரணம் இல்லை என்னும் பிராந்தியை போக்க
பிராரப்த அவசானத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனான உபாசகனுக்கு மரணம் என்று நிரூபிக்கிறார்
ஜீவன் முக்திவாதிகள் சாங்க்யர் -ஜீவன் முக்தி வாதம் அஸங்கதம் -பிரத்யக்ஷ விரோதம் -சாஸ்திர விரோதம் –
ஜீவன் முக்தி வாதத்தை சாஷாத்தாக நிரசிக்கும் ஸூத்ரம்-நோப மர்தே நாத –4–2–10-
ஜீவன் முக்தி மதம் நஜீவதி யத சஸ்த்ரேன சாஸ்திராத்மநா லுநம் லோக விருத்த சித்தி ஸ யதஸ்தேநேத மாதாவபி
ஆபஸ்தம்ப நிரஸ்தம் உபநிஷத பிரஸ்தானமா தஸ்து ஷாம் ஆச்சாரயோ அபி நிராசகார கலு தத்வைபாய நாக்யோ முனி -என்று
ஸ்ரீ வாத்ஸ்ய வரத குரு -ஸ்ரீ நடாதூர் அம்மாள் -அருளிச் செய்த தத்வ சார ஸ்லோகம் –
அத்ர ப்ரஹ்ம சமஸ் நுதே –சுருதியில் வித்யா நிஷ்டனுக்கு இங்கேயே ப்ரஹ்ம அனுபவம் -என்பதால்
உக்ராந்தி இல்லை என்பர் பூர்வ பஷி -வாத நிரஸனம் -ஆஸ்ருத்யதி கரணத்தில்
வித்வான் அவித்வான் வாசி இன்றிக்கே சர்வருக்கும் உதக்ராந்தி சமானை
-மேலே ததோகோ அதிகரணத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அசாதாரணமான நாடீ விசேஷ பிராப்தி உண்டு என்பர்
கார்த அனுக்ரஹ லப்த மத்யதம நித்வாரா பஹிர் நிர்கத-என்பர் ஸ்ரீ நடாதூர் அம்மாள்
அத்ர ப்ரஹ்ம சமஸ் நுதே -ஸ்ருதிக்கு வியாசர் -அம்ருதத்வம் ஸ அநு போஷ்ய—4–2–7-என்று
அநு போஷ்ய ஏவ அம்ருதத்வம் -உபாசன காலத்தில் உள்ளதொரு ப்ரஹ்ம அனுபவத்தை சொன்ன படி –
தஷிணாயநாதி கரணத்தில் -தஷிணாயணத்தில் மரித்தவனுக்கு மோக்ஷ பிராப்தி இல்லை என்னும் பக்ஷம் -நிரஸனம்-
நர ராத்திரி -இரவிலும் /பித்ரு ராத்திரி -கிருஷ்ண பக்ஷம் /தேவ ராத்திரி -தஷிணாயம் -மரித்தவராயினும் வித்வான்கள் ப்ரஹ்ம பிராப்தி உள்ளவரே
யோக யுக்த -மார்க்க சிந்தனை -தஸ்மாத் அஹரஹ அர்ச்சிராதிகதி சிந்தனாக்ய யோக யுக்தோ பவ – / பின்னும் ஆகை விடும் பொழுது எண்ணே –

கதி பாதம் –
அர்ச்சிர் அஹஸ் சீதா பாஷாந் உதகய நாப்த மருதர்க் கேந்தூன்
அபி வைத்யுத வருண இந்திர ப்ரஜாபாதீன் ஆதி வாஹிகான் ஆஹூ –ஸ்ரீ வரத குரு ஸ்லோகம் -ஸ்ருதி பிரகாசிகை –

சத் சங்காத் பவநிஸ்ப்ருஹ குரு முகாத் ஸ்ரீ சம் பிரபத்யாத்மவான்
ப்ராரப்தம் பரி புஜ்ய கர்ம சகலம் ப்ரஷீண கர்மாந்தர
ந்யாஸா தேவ நிரங்குசேஸ்வர தயா நிர் லூன மயான்வய-ஸ்ரீ வாத்ஸ்ய வரத குரு ஸ்லோகம்

முக்தோ அர்ச்சிர் தின பூர்வ பக்ஷ ஷடுதங்மாஸாப் தவா தாம் ஸூ மத்
க்லவ் வித்யுத் வருண இந்திர தாத்ரு மஹித சீமாந்த சிந்த்வாப் லுத
ஸ்ரீ வைகுண்டம் உபேத்யே நித்யமஜடம் தஸ்மிந் பர ப்ரஹ்மண
சாயுஜ்யம் சமவாப்ய நந்ததி சமம் தேநைவ தன்ய புமான்–ஸ்ரீ வாத்ஸ்ய வரத குரு ஸ்லோகம் –

அர்ச்சிராதி கதி -விவரணம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்து உள்ளார் –

—————————–

பிராப்தி பாதம் –
அனைத்து உலகம் யுடைய அரவிந்த லோசனனைத் தினத்தனையும் விடாள்-பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவம் –பரம ப்ராப்யம் -சர்வோத்தர ஸ்தானம் -பரம பதம் –
சர்வ பிரகார விசிஷ்ட நாராயணன் ப்ராப்யன்
ஜகத் வியாபார வர்ஜம் / போக மாத்ர சாம்ய லிங்காச்ச –/
முகத்தனை ஸ்வ தந்த்ரன் என்கிறது கர்ம வஸ்யம் அல்ல என்றபடி
அத ஏவ ஸ அநந்யா திபதி –4–4–9-
அத்ர அநதிபதி இதை நோக்தம்-கிந்து அநந்யாதி பதிரிதி அத்ராயம் அபிப்ராய ஸ்வாபாவிக சேஷிண
பரம புருஷா தன்யோ நாதிபதி முக்தஸ்ய இதி–ஸ்ருதி பிரகாசர் ஸ்ரீ ஸூக்திகள் –
போக ஸாம்யமே ஐக்கியம் -முதனுக்கு ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் பலம் என்று முதல் அதிகரணத்திலும்
பரமாத்வா உடன் ஆனந்தத்தில் பரம ஸாம்யாப்பத்தி பலத்தை அந்திம அதிகரணத்திலும் நிரூபிக்கிறார்
அபுநரா வ்ருத்தியை அந்திம ஸூத்ரத்தால் நிரூபிக்கிறார்
மீட்சியின்றி வைகுண்ட மா நகர் / நாரணன் திண் கழல் / அநா வ்ருத்தி சப்தாத் / ஸ கலு ஸ்ருதி / மாம் உபேத்ய ஸ்ம்ருதி வசனம் /
அத்யர்த்த பிரியம் ஞானிநம் லப்த்வா / சேதன லாபம் ஈஸ்வரனுக்கு –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading