ஸ்ரீ எறும்பியப்பா ஸ்வாமிகள் -அருளிச் செய்த விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் –
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே-தனியன்
ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றியவரும் எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம்–தனியன்
அழகிய மணவள மா முனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும், தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டாணத்தாலும் சோபிப்பவருமான தேவராஜகுரு என்னும் எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.
திருநட்சத்திரம் : ஐப்பசி, ரேவதி
சிஷ்யங்கள் : பெரியவாப்பா (அவரது சொந்த மகன்), சேனாபதி ஆழ்வான்
படைப்புகள் : பூர்வ தினச்சாரியாய், உத்திர தினச்சார்யாயி, வரவரமுனி சதகம், விலாக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்தின மலையின் கடைசி பாசுரம்
இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில் ஸ்ரீ பெரியசரண்யாச்சார்யார் என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் தேவராஜன்.
ஸ்வாமி எம்பெருமானாருக்கு வடுகநம்பியைப் போலே ஸ்ரீ மணவாளமாமுநிகளையொழிய தேவுமற்றறியாதே மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.
ஸ்ரீ மணவளமாமுனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார். நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர். ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான். ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.
(விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்” என்பது அவரது முக்கிய க்ரந்தமாகும். ஸ்ரீ எறும்பியப்பாவிற்கும் ஸ்ரீ சேனாபதியாழ்வான் போன்ற அவரது சிஷ்யர்களுக்கும் நடக்கும் உரையாடல்களின் தொகுப்பாகும் இந்த க்ரந்தம். இந்த க்ரந்தம் நாம் ஆழ்வார் ஆசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளைப் படித்துத் தவறாக புரிந்து கொள்வதால் வரும் குழப்பங்களை நீக்க வல்லது.)
——–
சதா பர குண ஆவிஷுடனாய் மநோ புத்திகள் இரண்டும் அவனிடத்தில் பர்யவசித்து மெய் மறந்து புத்தி பூர்வக ப்ரவ்ருத்திகள் ஒன்றும் இன்றிக்கே
யஸ்ய நாஹங்க்ருதோ பாவ -ஸ்ரீ கீதை –18–7-என்கிறபடியே ப்ரவ்ருத்தனாகில் அவனுக்கு வாராது -இந்த ஞான மாத்திரம்
வேதாந்த ஞான வாசனை உடையார் எல்லாருக்கும் உண்டு –
தத் அனுரூப அனுஷ்டானம் உண்டானால் இறே அனுபவிப்பது –
இந்த ஞானம் இராவணனுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்-
பர ஹிம்ஸா பர தார பரிக்ரஹ பர த்ரவ்ய அபஹார அபேய பான அபாஷ்ய பாஷணாதிகள் மாறாதே நடக்கும் படியான
அனுஷ்டானம் இதிஹாசாதிகளிலே காணா நின்றோம் இறே
ஆதேயத்தவ விதே யத்வ சேஷத்வ ராசதாஸ்ரயா ஸ்ரீ பதேர் முக்ய தநவ பரமை காந்தி ந ஸ்ம்ருதா-என்று
ததேக சேஷமாய் ததேக பரதந்த்ரமாய் ததேக தாரகமாய் இருக்கிற சரீர லக்ஷணங்கள் உண்டான பரமை காந்திகளை இறே அவனுக்கு சரீர பூதராகச் சொல்லுவது –
ராகாதி தூஷிதே சித்தே நரஸ்பதி மது ஸூதநந நபத்ராதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்தம அம்பசி-என்று ராகாதி தூஷித சித்தன் சரீர பூதன் ஆக மாட்டானே
சரீர பூதனான பரமை காந்தி —போகா புரந்தராதீனம் தே சர்வே நிரயோபமா-என்று இஹ லோகாத் விலக்ஷணமான
ஸூவர்க்காதி போகங்களும் -ஸ்வ ஆத்ம அனுபவ ஸூகமும் நரகோபமாக நினைத்து இருக்குமே –
அமேத்ய பூர்ணம் க்ரிமிஜால சங்குலம் ஸ்வ பாவ துர்கந்தம் அசவ் சுமத்ருவம் களேபரம் மூத்ர புரீஷ பாஜநம் நமந்தி மூடா நரமந்தி பண்டிதர் –என்று
மூடரைப் போலே ஹேயா துர்விஷய ப்ரவணனாய் சம்சாரிகளும் த்யாஜ்யமாக நினைத்து இருக்கிற நிஷித்த வியாபாரத்தை பண்ணினான் இறே
அக்ருத்யம் வைஷ்ணவ பாப புத்யா சாஸ்த்ர விரோதத -ஏகாந்தி பரமைகாந்தி ருஸ்ய பாவாச்ச சந்த்யஜேத்-என்று
அக்ருதய கரணாதி நிஷித்த அனுஷ்டானம் ப்ராப்ய பிரதிபந்தகம் என்கிற பயத்தாலே வைஷ்ணவனும்
சாஸ்த்ர விரோதம் ஆகையாலே பகவத் ஆஞ்ஞாதிக்ரமணம் வரும் என்கிற பயத்தாலே ஏகாங்கியும்
ஹேயமாய்த் தோற்றி ருஸ்யபாவத்தாலே பரமைகாந்தியும் த்யஜிப்பர் என்று சொல்லா நின்றது இறே
இருவரும் ருசி செல்லா நிற்கச் செய்தே விரோத பயத்தாலே த்யஜிப்பார்கள் –
சரம அதிகாரிக்கு ப்ராப்ய ருசி கண்ணழிவு அற
யுண்டாய் இருக்கையாலே பீத்யா விடுகை அன்றிக்கே ருஸ்ய பாவத்தால் விடும்
இப்படியான அதிகாரியினுடைய க்ருத்யங்கள் இறே அவன் தன்னதாக அபிமானித்து இருக்கிறது –
இது பொருள் அல்லவாகில்-
சகல சேதன அசேதனங்களும் அவனுக்கு சரீரமேயாய் இவர்கள் எல்லாருடைய க்ருத்யங்களும் அவனதேயாய் விடும் –
அது போல் அன்றிக்கே ஞானம் உண்டு இறே இவர்களுக்கு என்னில் -அந்த பக்ஷத்தில் வேதாந்த ஞானமுடைய
ராவணாதிகளுடைய ஆசூர க்ருத்யங்களும் அவனதேயாய் விடும் –
ஆகையால் சம்பந்தம் மாத்திரம் போராது–ஞானமும் போராது –தத் அநு ரூப அனுஷ்டானம் உண்டாக வேணும் –
சரம ஸ்லோகத்தில் சர்வ தர்ம பரித்யாக பூர்வக ததேக உபயாதயா அத்யவசாயமே அதிகாரி க்ருத்யம் —
விரோதி நிவர்த்தகத்வம் உபாய பூதனுடைய க்ருத்யம் என்று சொல்லா நிற்க அத்யவசாயம் உண்டானாலும் ஆர்த்தி இல்லாத போது
பிராபிக்கைக்கு யோக்கியன் அன்று என்று சொல்லுவான் என் என்னில்-உபாய அதிகாரிக்கு அத்யவசாயமே போருமே
-உபேய அதிகாரிக்கு ஐஹிக ஆமுஷ்மிகாதி சகல போக விரக்தியும் வேணும் –
உபாயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தைப் பற்றினால் போலே உபேயாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான
ப்ராப்யத்தை ஆர்த்திக்கிறது –முமுஷுப்படி -த்வய பிரகரணம் –162-என்று உபேய ப்ரதிபாதகமான உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் சொல்லப் பட்டது இறே
த்வய பூர்வ உத்தர வாக்கியங்களில் சொல்லுகிற உபாய அதிகாரங்கள் உண்டானால் இறே உத்தேச்யன் ஆவது
இவ் வுபாயம் ப்ராப்யாந்தரங்களுக்கும் ஒக்கும் ஆகையாலே -அத்யவசாயம் பிரயோஜனாந்தர பரர்க்கும் உண்டே –
அத்யாவசிய மாத்திரத்தாலே பகவத் போகத்துக்கு அர்ஹனாக மாட்டான் –
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடான்–திருவாய் —8–2- -8-என்று சகல இதர பாஹ்ய விஷய பரித்யாக
அந்தரத்தில் ஒழிய முக்தி பூமியை காணவும் கொடான் என்று ஆழ்வார் தாமும் அருளிச் செய்தார் இறே
ஆகையால் அங்குச் சொல்லுகிறது உபாய அதிகார மாத்திரம் என்று கொள்ள வேணும் -அந்த ஸ்லோகத்தில் இது சொல்லாது ஒழிகிறது என் என்னில்
இந்த ஸ்லோகத்துக்கு உபாயத்துக்கு அபேக்ஷிதமான தியாக ஸ்வீகாரங்கள் பூர்வார்த்தத்தாலே சொல்லி -உத்தரார்த்தாலே அதுக்கு பலமாக
பிராப்தி பிரதிபந்தக சகல பாப நிவ்ருத்தி மாத்திரம் சொல்லி ப்ராப்தியைச் சொல்லாது ஒழிந்தாலும்
கீழ் ஸ்லோகத்தில் –மாமேவைஷ்யஸி –18–65-என்று சொல்லுமது இதுக்கு அர்த்தமாக கொள்ளுமா போலே
பலம் சொல்லுகிற இந்த ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தாலே சொல்லுகிற உபாய அதிகாரத்தை கொள்ள வேணும்
மன் மநாபவ மத் பக்தோ மத் யாஜீநாம் நமஸ்குரு மாமே வைஷ்யஸி –சத்யந்தே பிரதிஜாநே ப்ரியோசிமே –18–65-என்று
மத் ஏக மனசனாய் –மத் அந்நிய ப்ரீதி வியுக்தனாய் -மத் கைங்கர்ய நிரதனாய் –மத் ஏக சரணனாய் -இருந்தாயாகில் உன்னுடைய
பாப நிவ்ருத்திக்கு நீ யத்னம் பண்ண வேண்டா -என்னைப் பெருகிறாய் -என்று என்று சத்தியமாக அருளிச் செய்து இந்த ஸ்லோகத்தில் சொன்ன
தத் ஏக சரணத்வ ரூப உபாய அதிகாரிக்கு அபேக்ஷிதமாய் இருந்ததாய் –
இதில் சொல்லாத உபாயாந்தர ச வாசனா தியாகத்தை
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ –என்று விதித்து
அதில் உத்தரார்த்தத்தில் மாமேவைஷ்யஸி என்று சொன்ன பலத்துக்கு அபேக்ஷிதமாய் இதில் சொல்லாத பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தியை –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று அருளிச் செய்கையாலே இவ்விரண்டு ஸ்லோகங்களும் பரஸ்பர அபேக்ஷிதங்களாக ஏகார்த்தமாய் இருக்கும் –
யதேச்சசி ததா குரு —18–63-என்ன -அனந்தரம் -காய கிலேசங்களுமாய் ஸ்வரூப விருத்தங்களுமான கர்மா யோகாதி யுபாயங்களுக்கு
நான் அசக்தன் என்று சோகித்த பின்பு –சர்வ குஹ்ய தமம் பூய–ச்ருணு மே பரமம் வச –18–64-என்று உபதேசித்தவை யாகையாலே
இவ் விரண்டு ஸ்லோகங்களும் விவரிய விவரண ரூபங்களாய் ஏகார்த்தங்களாய் இருக்கும்
ஆகையால் கீழ் ஸ்லோகத்தில் பலமே இதுக்கு பலம் ஆகையாலே அதில் சொன்ன உபேய அதிகாரமும் இதில் சொல்லிற்றாகக் கொள்ள வேணும்
-இதில் மத் பக்த என்றது தத் சாதன பக்தி யன்று – கைங்கர்யோ உபகரண சாத்ய பக்தியை —
இன்னமும் உபாய அதிகாரிக்கு சுஷுகாத்யவசாய மாத்ரமே போராதே-பிராதி கூல்ய தியாகமும் வேணுமே
பிரபத்தி ஸ்வரூபம் சொல்லுகிற இடங்களில் –உபாய உபாய நிர்முக்தா மத்யமாம் ஸ்திமாஸ்திதா-என்றும்
உபாய உபாய சம்யோக நிஷ்டயா ஹீயதேநயா -என்றும் புண்ய பாப ரூப உபாய கர்மங்களும் த்யாஜ்யமாக சொல்லா நின்றது இறே
இவற்றை த்யஜித்து அவனை ஸ்வீகரித்த வனந்தரத்திலே பிராப்தி தசை அளவும் உபாய அதிகார பிரஸ்யுதி வராதபடி ப்ரவ்ருத்தானாகில்
சரம காலத்தில் அதிகார அனுகுணமாக பிரதிபந்தகங்களை நிவர்ப்பித்து முக்தனாம் படி பண்ணும்-தெளிவுற்று வீவின்றி நின்றவற்கு இன்ப கதி செய்யும் —திருவாய் –7–5–11-
அதிகாரி அனுகுணமாக நிவர்த்திப்பிக்கை யாவது அப்யுபகத பிராரப்த அம்சத்தை கிருபையால் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் விரக்தியை ஜெனிப்பைக்காக அனுபவிப்பித்து
தத் வ்யதிரிக்த ஸமஸ்த பூர்வாகங்களும் நசித்துப் போம்படி பண்ணி பிராமாதிக உத்தராகங்களை கிருபையால் பொறுத்து
இவன் பாடு சாராதபடி பண்ணி புத்தி பூர்வக ப்ரவ்ருத்திகளில் ச அனுதாபங்களை ராஜ புத்ர அபராதவத் லகுவாக அனுபவிப்பித்து
நிர் அனுதாபம் ஆனால் யதோசித தண்டங்களையும் பண்ணிப் போக்குகை –
இவன் உஜ்ஜீவிக்க வேணும் என்று தானும் கடாக்ஷித்து
-இவன் உபாய வரணம் பண்ணி ப்ரக்ருதி வாசனையால் சில ஸ்காலித்தியங்கள் யுண்டானால் லீலைக்கு விஷயம் ஆகுமோ என்னில்
முடிய நடத்த மாட்டானே யாகிலும் இவன் பக்கல் அபேத ப்ரவ்ருத்தி ரூப அபராத அவகாசம் பெற்றால் சில காலம் லீலையில் விநியோகம் கொள்ளக் குறையில்லை
அபராதம் அற ப்ரவ்ருத்திக்கும் அதிகாரிகள் விஷயத்திலும் விநியோகம் கொள்ளும் ஸ்வ தந்த்ரன் இடம் பெற்றால் விட மாட்டானே
இவ்வர்த்தம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் விஷயத்தில் காணப்பட்டது இறே –
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ மாயங்கள் செய்து வைத்து இவை என்ன மயக்குகளே –திருவாய் -7–8-5-என்று ஆழ்வார் அருளிச் செய்தார் இறே
அது என் என்னில் ராஜாவானவன் ந்ருத்த கீதாதி நிபுணையான வேசியையை அபிமதமாக கொண்டாலும் போக காலம் வரும் அளவும்
நிருத்த கீதாதிகளாலே விநியோகம் கொள்ளும் அளவில் அத்யந்த ஸூ குமாரி யானால் சீக்ரமாகக் கூட்டிக் கொண்டு திருட சரீரி யானால்
அவளுடைய இஷ்டம் போரும் அளவும் லீலையில் விநியோகம் கொண்ட பின்பு அனுக்ரஹிக்குமா போலே
சர்வேஸ்வரனும் லோக யாத்திரைக்கு அசக்தராய் ஆர்த்தரானால் கடுக அனுக்ரஹித்தும் -இத்தை பொறுத்து இருந்து திருப்தரானால்
சில காலம் லீலையில் விநியோகம் கொண்டு எப்போது ஆர்த்தர் ஆவாரோ அப்போதே அங்கீ கரிக்கும்
திருப்தா நாம் அபி ஐந்து நாம் தேஹாந்த்ர நிவாரிணீ-என்று சொல்லா நின்றது இறே பாஞ்ச ராத்ரத்தில் -என்னில்
இப்போது சிர பரிச்சயத்தாலே திருப்தராய் பிராரப்த சரீரத்தை பொறுத்து இருந்தாலும் சரம காலத்தில் ஆர்த்தனாக்கி
சர்வேஸ்வரன் கைக்கு கொள்ளும் என்னும் அத்தாலே சொல்லப் பட்டது
திருப்தன் ஆனவனும் ஆ நிரை மேய்த்து வந்தான் அல்லனே-தேஹ அவசனத்து அளவும் இத்தேகத்தோடே பொருந்தி இருக்குமது ஒன்றே இறே
இவ்வதிகாரிக்கு தோஷம் மற்றும் உண்டான தியாக ஸ்வீகாரங்கள் எல்லாம் இருவருக்கும் ஒக்கும் இறே
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே- கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–என்னை என் செய்கின்றாய் –
என் தாமரைக் கண்ணா -நெறி காட்டி நீக்குதியோ –பல நீ காட்டிப் படுப்பாயோ -தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ என்று இப்படி கூப்பிட்டுக் கொண்டு
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்–இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் -சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் –
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன் -என்று ஆஹார நித்திரைகளிலே நசை அற்று கண்ணீர் நிறைத்துக் கொண்டு காலும் கையும்
சலிப்பிக்க மாட்டாதே மூர்ச்சித்து திரியவும் தெளிந்து அழுவதும் தொழுவதும் ஆடுவதும் பாடுவதுமாய்
-எங்கும் நாடி நாடி நரசிங்கா -என்று பிரலாபிக்கும் ஒன்றுமே ஆர்த்தனுக்கு ஏற்றம் –
பரிதாபம் பிறந்து -நீயே ரஷிக்க வேணும் -என்று சரணம் புக்கால் –பதிவா ராவணஸ்வயம் -என்கிறபடி ரிபூணாமபி வத்சலனானவன் இவனை விட்டுக் கொடான் இறே
அடியாரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன் –திருவாய் -1–7–2-என்று
ஸ்வ ஆஸ்ரிதரை பிரபல கர்மங்களிலே மூட்டான் இறே -பஞ்ச இந்த்ரியங்களாலும் விஷயங்களை அனுபவித்து நிற்கும் படி விட்டுக் கொடான் என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவன் அனுக்ரஹத்துக்கு பாத்ர பூதரான அடியார் சாது கர்மங்களை செய்து முக்தனாமது ஒழிய விஷய ப்ரவணனாய் நசிக்குமது இல்லை –
அவனே திருத்திப் பணி கொள்ளும் அளவில் இவனுக்கு அருமை யானது ஓன்று இல்லை –
க்ரம க்ரமமாக ப்ராக்த்தந சிஷ்டாசார அனுசந்தானத்தாலும்
அருளிச் செயல் அனுசந்தானத்தாலும் தெளிவு பிறக்கும் படி -ஹ்ருத்ஸ்யத்தனாய் நின்று
தேஷாம் ஏவா நுகம் பார்த்தம் அஹ மஞ்ஞான ஜம்தம-நாசயாம் யாத்ம பாவஸ்த ஞான தீபேன பாஸ்வதா —ஸ்ரீ கீதை -10–11-என்கிறபடி
ஞான தீபத்தாலே அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி -சத் அனுஷ்டானத்திலே பிரவர்த்திப்பித்து ரக்ஷிக்குமதில் சம்சயம் இல்லை
இவன் சேதனான வாசியைப் பெற்ற பிராதி கூல்யங்களை பரித்யஜித்து ஆனு கூல்யங்களில் சங்கல்ப மாத்திரம் உண்டானால்
தானே இவை எல்லாம் உண்டாக்கி நிர்வஹித்துக் கொண்டு போரும் –
ஆகையாலே –நபிபே திகுதஸ் சந-என்றும் மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேத
தது அகர்ஹிதம் யேபாபிநோ அபி சிசீபால ஸூ யோத நாத்யா முக்திம் கதா –என்கிற சரண்ய ப்ரபாவ வாக்கியங்களை சொல்லிக் கொண்டு
அவற்றுக்கு தாத்பர்யம் அறியாதே தாமும் பத்த சம்சாரிகளாய் சப்தாதி விஷய ப்ரவணராய் அஹங்காராதி வஸ்யராய்-
ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆஸ்ரயித்த ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே
–பூர்வர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே ஓர் –உபதேச ரத்னமாலை -67- என்கிறபடியே –பல நீ காட்டிப் படுப்பாயோ -இன்னம் கெடுப்பாயோ -என்று
பூர்வாச்சார்யர்கள் அனைவரும் விஷயாந்தர தர்சனத்திலே பீத பீதராய் -தன் நிவ்ருத்தியைப் பிரார்த்தித்துக் கொண்டு
பிராமாதிகமாகவும் அவை வராதபடி முன்னாசரித்த பராங்குச பரகாலாதிகளுடைய சிஷ்டாசாரங்கள் அறியாதே
-எனக்கு பகவத் சம்பந்தம் உண்டு -சதாசார்ய சம்பந்தம் உண்டு -என்று பிராதி கூல்யங்களை பரித்யஜிக்க மாட்டாதே
தாமும் நிர்பயராய் பிறர்க்கும் இதுவே உபதேசித்து நிர்பயராம் படி பண்ணித் திரிகிற ஸ்வ பர விநாசகரோடே கலந்து
அவர்கள் உபதேசம் கேட்டு நசித்துப் போகாதே நாத யாமுன யதிவர ப்ரப்ருதிகளுடைய யுக்தி அனுஷ்டானங்களைக் கொண்டு
தத் அனுகுணமான சம்யக் அனுஷ்டானம் உடையராய் ப்ராப்ய பிரதிபந்தக நிஷித்த அனுஷ்டான பரித்யாக பூர்வகமான
அனுஷ்டானத்தையே பிறருக்கும் உபதேசித்து கரை ஏற்ற வல்லராய் –
நம்மாழ்வார் பூத பவிஷ்யத் வர்த்தமான கால த்ரய வியவசாய ஞானம் உடையவர் ஆகையாலே –
ஸ்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதாத்விஜா -என்கிறபடியே
கலி பிரபலமாகா நிற்கும் அளவில் விபரீதார்த்த போதகரும் விபரீத அனுஷ்டானங்களும் பிரபலமாய் வர்த்திக்கும் என்று கடாக்ஷித்து
விஷ்ணு சித்தாந்தத்தில் அவை புகுராதபடி பண்ண வேண்டும் படி எம்பெருமானாருடைய பவிஷ்யதாசார்ய அவதாரத்தைக் கொண்டு
பொலிக பொலிக பொலிக -5-2–1—என்று தாமும் மங்களா சாசனம் பண்ணி -சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் என்று
அவரையே முமுஷுக்களுக்கு எல்லாம் ஸமாச்ரயணீயராகச் சொல்லி மதுரகவி நாதமுனிகளுக்கு த்ரிதண்ட காஷாயாதிகள் உடன்
அந்த அவதாரம் காண வரும் படி விசேஷ கடாக்ஷம் பண்ணி
நமக்கு அடியுமாய் நம் காரியத்துக்கு கடவதுமாய் இருக்கும் என்றும் இவ்வத்தாராமே சர்வ உத்தாரகம் –
இவரே நம் தரிசனத்துக்கு எல்லாம் குருபதா மூர்த்தா அபி ஷிக்தர் என்றும் அருளிச் செய்கையாலே நாத முனிகள் தொடங்கி அஸ்மாத் ஆச்சார்யர்கள் அளவும்
எம்பெருமானார் உத்தாரக ஆச்சார்யராகவும் அவருடைய யுக்தி அனுஷ்டாங்களே பிரமாணங்களாகவும் அங்கீ கரித்து அவரையே உத்தாரகராகக் காட்டுகிற
மறுவற்ற சத் அனுஷ்டான சம்பன்னரான சதாசார்யனே மஹா உபகாரக ஆச்சார்யராக புத்தி பண்ணி -பிறருக்கும் உபதேசித்து
ராமாநுஜர்யே குரூரிதி சபதம் பாதி நான்யத்ர-என்று மற்று ஒரு விஷயத்தில் இப்படிப்பட்ட ஆச்சார்யத்வம் உண்டாவதாகச் சொன்னால்
ருசி பேதங்களால் அநேக விபரீத அர்த்தங்கள் புகுரும் என்று ஆகாம்ய அனர்த்தத்தை நிரீக்ஷித்து இதர நிஷேதம் பண்ணுகையாலே
க்ரந்தஸ்தங்களான அவருடைய உத்தி அனுஷ்டானங்களே உபாதேயங்களாய் இருக்கும் —
ஆகையால் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று காட்டுகிற சதாச்சார்யன் –
அபிமானத்திலே ஒதுங்கி இருந்த ஆச்சார்யனே -மாதா பிதா யுவதயா/ ஐஹிக்க ஆமுஷ்மிகம் கரு சர்வம் / இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்
இவை எல்லாமாக நினைத்து சர்வ உத்தாரகரான எம்பெருமானாரே உத்தாராக ஆச்சார்யராக அத்யவசித்து —
ஷேமஸ்ச ஏவஹி யதீந்த்ர பவச்சிதா நாம் –என்கிறபடியே அவர் பண்ணின சரம கால பிரபத்தியே ரஷகம் என்று புத்தி பண்ணி கொண்டு
ஜெகதாசார்ய ரசிதே ஸ்ரீமத் வசன பூஷணே தத்வ ஞானம் ச சன்னிஷ்டாம் தேஹி நாத யதீந்த்ரமே என்று பிரார்த்தித்துக் கொண்டு க்ரமமாக
அதில் ஸ்ரீ வசன பூஷணத்தில் -சொன்ன சத் அனுஷ்டானங்களை அனுஷ்டித்துக் கொண்டு -அவை கை புகுரும்படி சத் அனுஷ்டான சம்பன்னரான
பரமார்த்தரோடே சகவாசம் பண்ணிக் கொண்டு அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே தக்தமாக்கும் என்றும் விஷய ஸ்பர்சம் விஷ பக்ஷணம் போலே
முடித்து விடும் என்றும் பாகவத அபசாரம் த்ரிசஞ்சுவைப் போலே கர்ம சண்டாளனாக்கி
அனந்தரம் தக்தபடம் போலே உரு மாய்ந்து போம்படி பண்ணும் என்று பயப்பட்டு
பிரதோஷ நிரீக்ஷணம் பண்ணப் போகாதே ஸர்வபூத தயா பரராய் ஆன்ரு சம்சயத்தாலே விஹித கர்மம் லோக சங்க்ரஹார்த்தம்
யதோ உசிதமாக அனுஷ்டித்துக் கொண்டு ஆஹார அனுவர்த்தன ஸஹவாஸ நியதிகளை யுடையனாய்
தேகத்திலும் தாரா புத்ராதிகளிலும் அநுராகத்தை விட்டு பிரகிருதி விகாரம் பிறந்தால் தர்ம போக புத்திகள்
நலமித்தம் இல்லாதோர் நாட்டில் ஆனந்த நிர்பயனாய் இருக்கும் –
பக்திஷ்ட விதாஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே -என்றும் பயிலும் திருவுடையார் எவரேலும் -என்றும் ஜென்மத்தால் அபக்ருஷ்டரானாலும்
மத் பக்த ஜன வாத்சல்யம் என்று தொடங்கி சொன்ன அஷ்டவித பக்திகளும் பகவத் அனுமவ சம்பத்தியுமுடைய
திருப்பாண் ஆழ்வார் மாறநேரி நம்பி திருக் கச்சி நம்பி -விளாஞ்சோலைப் பிள்ளை முதலானோர் வர்த்திக்கிறாப் போலே
லோக யாத்திரையும் சம்சார சம்பந்தமும் மற்றும் பந்து சங்கமும் பரித்யஜித்து –
ஸ்வரூப விருத்தங்களுமாய் சர்வ விநாச கரங்களுமாய்
ரஜஸ் தமஸ் அபிவிருத்தி ஹேதுக்களுமான நிஷித்த பிரவ்ருத்திகளை அருவருத்து
நான் கீழ் சொன்ன வ்ருத்தி நிஷ்டர் படியே தம்முடம்பை மறந்து பக்தி பாரவசயத்தாலே திரிகிற அதிகாரிகள்
ஏகாந்தீ வ்யப தேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி –என்றும் விஷ்ணு நாவ்யபதேஷ்டே வ்யஸ்தஸ்ய சர்வம்ச ஏவ ஹி-என்று
க்ராம குலாத்தி வியபதேசம் இன்றிக்கே சகல வர்ணாஸ்ரம வ்யாவ்ருத்தராய் பரம விலக்ஷணராய்த் திரியுமது ஒழிய தமக்கு
ஒரு நிக்ருஷ்ட வர்ணமும் தத் அநு குண நிஷித்த வருத்தமும் ஏறிட்டுக் கொண்டு திரிவாரோ -திரிந்தால் அவர் உத்தேசியர் ஆவாரோ
-தாஸ்ய அநு குணமான நிரஹங்கார ஜென்மமும் தாஸ்ய க்ருத்யங்கள் ஆகிற நிரஹங்கார வ்ருத்தமுடைய
பரம விலக்ஷணரை அன்றோ உத்தேசியர் என்று சொன்னது
இப்படிப்பட்ட அதிகாரிகள் எங்கேனும் ஒருவர் உண்டாகில் உத்தேசியர் என்று சொல்லுகிறது ஒழிய அஹங்கார்த்த காம பரவசரான மூர்க்கர் எல்லாரும்
க்யாதி லாப பூஜ அனுபவ அர்த்த நாதிகளுக்காக சிரோ முண்டனம் பண்ணிக் கொண்டு வைஷ்ணவ நாம ரூபங்களுடையவாராய்
யதா பூர்வ நிஷித்த அனுஷ்டான நிறத்தராய் -பத்த சம்சாரிகளாய் -திரியவும் நிர் அஹங்காரிகளாய் இராதே நாம் அன்றோ விலக்ஷண வைஷ்ணவர் என்று
அஹங்கரித்துக் கொண்டு திரிகிற சாமான்ய விசேஷ சாஸ்திரங்கள் இரண்டுக்கும் தப்பி நடக்கிற உபயப்பிரஷ்டரை அனுவர்த்திக்க வேணும் என்று
யாரேனும் சொன்னாரோ
நாம ரூபங்கள் உண்டாகையாலே தத் அனுகுணமாக கிஞ்சித்கரித்து நிந்திக்கப் போகாதே
பரம சத்வ நிஷ்டராய் பரம விலக்ஷணராய் ஸ்வ நைச்ய அனுசந்தான நிரதராய் நிரஹங்காரியாய் பரமார்த்தருமாய்
ய பஸ்யதி சுபாசாரம் வைஷ்ணவம் வீத கல்மஷம் -யஸ்மின் கஸ்மின் குலே ஜாதம் பிரணமேத் தண்டவத் புவி–என்கிறபடி
சத் அனுஷ்டான சம்பன்னராய் வீத கல்மஷரான வைஷ்ணவர்கள் இந்தளத்தில் தாமரைப் பூத்தால் போலே இருள் தரும் மா ஞாலமான
இவ்விபூதியில் ஓர் ஒருவர் யுண்டாய் –ஆஹ்லாத சீத நேத்ராம்பு புளகீக்ருத காக்ரவான் சதாபர குண ஆவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ் சர்வ தேஹிபி-
ஆனால் ஜன்மத்துக்கு பூர்வ ஜென்மம் என்று கொள்ள வேண்டும் என்று வாராதோ என்னில் -அதுவே –சத்யம் –என்றும் -அசன்நேவ -என்றும் –
அன்று நான் பிறந்திலேன் -என்றும் பண்டைக்குலம் என்றும் ஆச்ரயண அநந்தரத்தில் இது வேறு ஒரு ஜென்மமாக அருளிச் செய்தார் இறே
இவ்வர்த்தம் நெஞ்சில் கொள்ளாதே -எது இயல்வாக நின்றோர் – என்று உத்தர கால துர் வ்ருத்தர் உத்தேசியர் என்றால்
சகல பிராமண விரோதமுமாய் சர்வ அநிஷ்ட கரமுமாய் சர்வ சிஷ்ட கர்ஹயமுமாய் ப்ரார்த்தன சர்வ சிஷ்டாசார விருத்தமுமாய் ஸ்வரூப நாசகமுமாய் இருக்கும்
அர்த்த காமாதிகளுக்காக ததீய நாம ரூபங்களை யுடையராய் எம்பெருமானார் திருவடிகளே சரணமேயென்று வாங்மாத்திரம் சொல்லிக் கொண்டு
அஹங்காராதிகளாலே பாகவத அபசார பரராய் உரு மாய்ந்து போருகிற கர்ம சண்டாளாரை உத்தேச்யராக கொள்ள வேண்டி வரும்
எது இயல்பு என்ற போது ஒரு நிஷித்த வ்ருத்தமும் கூடாது என்ன ஒண்ணாது இறே என்ன ஜிதேந்த்ரிய அக்ரேஸராய் சுத்த சத்வ சம்பன்னராய்
சம்சாரிக துஷ் கர்ம கந்த ரஹிதராய் பரம விலக்ஷணரான எம்பெருமானாரை ஆஸ்ரயித்து அவர் கருத்து அறிந்து அவர் அபிமானத்தில் ஒதுங்கின
சரம பர்வ நிஷ்டர் விஷயாசக்த சித்தராவரோ -ரஜஸ் தமஸ் பிரசுரர் ஆவரோ -அஹங்காரிகள் ஆவரோ -தார புத்ராதிகளை விட மாட்டாதே பத்த சம்சாரிகள் ஆவரோ –
அர்த்த ஆர்ஜனாதி தத்தபரராய் அஸேவ்ய சேவா நிரதராவரோ-அவிலக்ஷண க்ருத் யங்களான நிஷித்த அனுஷ்டானம் பண்ணுவரோ
இந் நிஷித்த க்ருத்யங்களில் சரம பர்வ நிஷ்டருக்கு உத்தர காலத்தில் எது இயல்வாக நின்றோர் என்கைக்கு யோக்கியமான
நிஷித்த அனுஷ்டானம் ஏதோ -நான் அறியேன் சொல்லும் என்ன
நிருத்தராய் ஸ்வாமிந்-தேவர் எப்படிச் சொன்னாலும் இன்னமும் இதுவே அனுவர்த்திக்கிறது -சிலர் ஞானாதிகராய் வீத ராக இருந்து வைத்தும்
ஜாதி உசித அபிமான நிவ்ருத்திக்கு ஸஹக்ருதம் என்றும் சரம ஸ்லோகத்தில் சொன்ன சர்வ தர்ம நிவ்ருத்திக்கு அஹரஹஸ் சந்த்யா முபாஸீத-இத்யாதி
அங்க ஸஹிதமான விஹித ரூப தர்மங்களோ பாதி
ந களஞ்ஜம் பஷயேத் -இத்யாதி நிவ்ருத்த ரூப தர்மங்களும் த்யாஜ்யங்கள் ஆகையால் தத் த்யாகத்துக்காக நிஷித்த ஸ்வீகாரம் அபேக்ஷிதம் என்று சொல்லிக் கொண்டு
சரேத விதி கோசர என்கிறபடியே பகவத் பிரபன்னர் சாஸ்திர வஸ்யர் அன்றிக்கே வர்த்திக்க வேணும் என்று நிஷித்த ஸ்வீகாரம் விதியாகச் சொல்லா நின்றார்கள்
அதுக்கு அடி என் என்ன -இதுக்கு அடி நிராங்குச ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரனுடைய லீலார்த்தமான அவித்யா கார்யம் என்று கொள்ள வேணும் –
எங்கனே என்ன –
ஜன்மத்துக்குக் கொற்றையும் அதுக்குப் பரிஹாரமும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார்-பழுத்திலா ஒழுகலாற்று –42-என்று
ஜன்மக் கொற்றை வம்ச ப்ரவாஹத்தில் நாம் நிரவத்தியமாய் நின்றோம் -வேத சாஸ்திரங்களை அதிகரித்தோம் -அவற்றுக்குப் பொருள் சொல்ல வல்லோம் என்கிற
அபிஜன வித்யா வ்ருத்த மதங்களாகவும் அதுக்குப் பரிஹாரம் –இழி குலத்தவர்களும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடிமின் கொள்மின் –42-என்று
ஜாதி அபிமான சூ ன்யரான விலக்ஷண ஜென்ம வைஷ்ணவ அநு வர்த்தனம் என்று ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்யா நிற்கச் செய்தேயும்
லோக சகலத்துக்காக மணி மாடத்தை தஹிப்பிக்குமா போலே அஹங்கார நிவ்ருத்திக்காக ஸ்வரூப விரோதி க்ருத்யங்களில் அந்வயிக்கை –
பகவத் பிரசாதத்தாலே பிறக்க வேண்டுகிற ஜாதி அஹங்கார நிவ்ருத்தி பரதார பரிக்ரஹ அபாஷ்ய பஷணாதி நிஷித்த அஷ்டானத்தாலே
சித்திக்கும் என்று பிரமித்து கைங்கர்ய வியதிரிக்த ஸ்வ ப்ரவ்ருத்திகள் ஒன்றும் சஹியாத பகவத்யந்த பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கும்
சேராதவையுமாய் -உபாய உபேய விரோதிகளுமான பர ஹிம்ஸா பர தார பரிக்ரஹ அபேய பண அபஷ்ய பாஷணாதிகள் பண்ணுகை -ஆஸூர க்ருத்யங்கள் ஆகையால் பகவல் லீலார்த்தமான அவித்யா கார்யங்களாய் இருக்கும் –
இனி நிவ்ருத்தி ரூப தர்ம தியாகத்துக்கு அபேக்ஷிதம்
என்றதற்குப் பரிஹாரம் முன்பே சொன்னோமே யாகிலும் மேலும் சொல்லுகிறேன் -எங்கேனும் ஓர் இடத்திலே யானாலும் ஒருவர் ஆனாலும்
தர்ம தியாகத்துக்கு நிஷித்த ப்ரவ்ருத்திகள் அபேக்ஷிதம் என்று சொல்லிற்று இல்லையே -பிரபத்ய அனுஷ்டான விசதீகரண ஸ்தலங்களில்
உபாய அபாய நிர்முக்தா மத்ய மாம்ஸ்திதி மாஸ்திதா என்று உபாய அபாய நிர்முகதையாய் மத்யஸ்தையாய் நின்றது என்றும்
உபாய அபாய சம்யோகே நிஷ்ட யாஹீயதே நயா –என்று தொடங்கி உபாய அபாய சம்யோகத்தில் சித்த உபாய நிஷ்டை நழுவும் என்றும்
அதுக்கு பிராயச்சித்தம் பண்ண வேணும் என்றும் சொல்லுகிறது ஒழிய அபாயமான அக்ருத்ய கரணம் பகவத் இஷ்டம் என்றும்
இது ப்ரபத்திக்கு அபேக்ஷிதம் என்றும் ப்ரபன்னனுக்கு அவஸ்ய கரணம் என்றும் சொன்னது இல்லாமையால் சாமான்ய விசேஷ சாஸ்திர விபாகம் அற
சகல சாஸ்திர விருத்தமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் பகவத் அநிஷ்டமுமாய்
ஆசாபாச சதைர் பத்த காம க்ரோத பாராயண ஈஹந்தே காம போகார்த்தம் அன்யாயேநார்த்த சஞ்சயான் –ஸ்ரீ கீதை –16–12-
அநேக சித்த விப்ராந்தா மோஹ ஜால ஸமாவ்ருதா -ப்ரஸக்தா காம போகேஷூ பதந்தி நரகேஸூசவ்–16–16-என்றும் சொல்லுகிறபடியே காம க்ரோத பராயணராய்
இது பரமார்த்தம் என்று மாயா மோஹிதராய் திரிந்தார்கள் ஆகில் பகவான் நிக்ரஹ பாத்ரராய் போவார்கள் ஆகையால் சப்த சக்தியைக் காட்டிலும் தத் வ்யதிரிக்தமான ப்ரவ்ருத்தி ரூப தர்மங்களுக்கே த்யாஜ்யத்வம் அங்கீ கரிக்க வேணும் என்ன -காட்டிலும் பரிக்ஹரிக்கிறது என் என்ன பாதகம் உண்டானால் பரிக்ரஹிக்க வேணும் இறே
திரு மந்திரத்தில் நார பதத்தாலே-ப்ராஹ்ம்யா மண்டம் ததந்தஸ்தா லோகாஸ்ஸ ச சராசரா ஏவம் அண்டான் யநந்தாதி தத் சர்வம் நாரமுச்யதே –என்று –
பகவத் ஸ்வரூப வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் காட்டா நிற்கச் செய்தேயும் தத் புருஷ ஸமாஸத்தில் உபாய உபேய பாவங்களை சொல்லும் அளவில்
அசேதனங்களுக்கு அநபேஷதங்கள் ஆகையால் அவற்றை பரிக்ரஹித்து சேதனர்க்கே சொல்லுமா போலேயும்-
பஹு வ்ரீஹி ஸமாஸத்தில்
ஆத்மாஸ்ர தோஷமும் அநவஸ்தையும் வரும் என்று குணங்களை விட்டு தத் வ்யதிரிக்த நாரங்களுக்கே அந்தர்யாமித்வம் சொன்னால் போலேயும்
ஸ்வரூப உபாய வ்ருத்தாதி பஹு தோஷம் உண்டாகையாலும் நிவ்ருத்தி ரூப தர்ம வ்யதிரிக்த பரவ்ருத்தி ரூப தர்ம தியாகம் கொள்ள வேணும் என்ன
ஆனால் சாகல்யத்துக்கு சங்கோசம் வரும் என்னில் சாகல்ய சங்கோசம் வராதபடி எல்லாம் சவாசன தியாகம் பண்ணப் புக்கால் தர்ம சப்தத்தால்
அவதார ரகஸ்ய ஞானம் -புருஷோத்தம வித்யை –தேச வாசம் -திரு நாம சங்கீர்த்தனம் -திரு விளக்கு எரிக்கை -திருமாலை எடுக்கை-முதலானவை எல்லாம் சொல்லுகையாலே இவை எல்லாம் சவாச தியாகம் பண்ண வேண்டி வரும் இறே
———————-
அவற்றிலும் தேஹ பாரவசயத்தாலும் சர்ம கண்டூதியாலும் செய்யுமவை யன்றிக்கே ஸ்வார்த்த நிரபேஷமாக ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான
வியாபாரங்களே யானால் உபாதேயங்களுமாய் இருக்கும்–
இவ்வர்த்தம் நாத்ர கர்ஹா -என்று சொல்லி –கிந்து புவன பவனத்ராணத -என்று
ஆஸ்ரித அர்த்தமானவை ஆகையால் கர்ஹை இல்லை என்று சொல்லிற்று இறே –
இப்படிக் கொள்ளாதே நாம ரூபங்களுடைய
பாகவதராய் எப்படித் திரிந்தாலும் உபாதேயம் என்றால் –ஓர்த்து நெஞ்சே முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் எனவிட்டு
நடுச் சொன்னவரை நாளும் தொடர் –என்று அருளிச் செய்யப் பணி இல்லை இறே-
மிலேச்சனும் பக்தனானால் பாவன தீர்த்த ப்ரசாதமாம் என்று –ஆச்சர்ய ஹ்ருதயம் -85-
பரம விலக்ஷண சம்பந்த ஸ்வீகாரத்தை ஜகத் விதிதமாக பகவத் ஆஞ்ஞாசித்தம் என்று நிர்பயராய் க்ரந்தஸ்தங்களாம் படி விதிக்கிற
பூர்வாச்சார்யர்கள் ஒருவரானாலும் ஒரு ரகஸ்யத்தின் ஆனாலும் பகவத் ப்ரபன்னன் அஹங்கார நிவ்ருத்திக்காகவும்
சர்வ தர்ம பரித்யாகத்துக்காகவும் களஞ்ச பஷணாதிகள் பண்ண வேணும் என்று சொல்லிற்று இல்லையே
சொல்லாது ஒழிந்தாலும் தூஷணம் இல்லையாகில் கிரந்தங்களில் யுக்தமான அஹங்கார நிவ்ருத்திக்கும் விலக்ஷண
அநு வர்த்தனத்துக்கும் உபயுக்தம் என்று செய்யலாம் இறே என்னில்
பிரபந்த ராஜ வசன பூஷணாதி திவ்ய சாஸ்தி ரங்களில் சதச தூஷித்த அக்ருத்ய கரணாதிகள் பண்ணுகை –பகவன் மாயா பிரபாவம் என்று
நினைக்க வேணும் இத்தனை ஒழிய சிஷ்டாசாரம் என்ன ஒண்ணாது இறே
க்ரந்தஸ்மாகச் சொன்னால் அநதிகாரிகள் கர்ஹித்து நசித்துப் போவார் என்று ஐதிஹ்ய ஸித்தமாய் சம்பிரதாயகமாக ப்ரவர்த்தித்துப் போருகிறது என்னில்
வசன அனுஷ்டான விரோதம் இல்லையானால் ஆகிலுமாம் என்று கொள்ள வமையும்-லௌகீக வைதிக பரம வைதிக விரோதங்கள்
அநேகம் உண்டாகையாலே அப்படிச் சொல்ல ஒண்ணாது
சாஸ்திரத்தில் ஒரு பரமார்த்தம் சொன்னால் அதுக்கு அபேக்ஷிதமான அங்க உபாங்கங்கள் ஐதிஹ்யங்களாலும் ஸம்ப்ரதாயத்தாலும்
சங்க்ரஹிக்க வேணும் என்கிறது அத்தனை ஒழிய சகல சாஸ்திர தூஷிதங்களுமாய் சிஷ்ட கர்ஹிதங்களுமான ததர்த்தங்கள்
உபதேச பரம்பரா ப்ராப்தங்கள் என்று கர்ஹிக்கப் போகாது இறே –
இப்படி சாஸ்திரங்கள் கொண்டு அறிய வேணுமோ –
ரஜஸ் தம உத்ரேகங்களுமாய் அத ஏவ ஆஹார தோஷம் ஞான விரோதி என்கிறபடியே அர்த்த பஞ்சக ஞான விரோதிகளுமாய் ஜாதி துஷ்டங்களுமாய்
ப்ராக்ருத பிருஷ்ட துஷ்டங்களுமாய் அத்யந்த ஹேயங்களுமாய் லோக சாதனரும் உட்பட அருவருத்து பரித்யஜிக்கிற
நிந்த்யங்களான நிஷித்த த்ரவ்யங்கள் ஆகாரந்த்ரத்தாலே கூடும் என்று ஆஸூர ப்ரக்ருதிகளுக்குத் தோற்றுமது ஒழிய
விசேஷ சாஸ்திர வஸ்யரான சிஷ்ட ஜனங்களுத் தோற்றாது இறே –
அநதிகாரிகள் கர்ஹிப்பர் என்று பயம் இன்றிக்கே விலக்ஷண ஜென்ம வைஷ்ணவ அனுவர்த்தன தீர்த்த பிரசாத ஸ்வீ காரங்கள் விதிக்கிற
அதிகாரிகள் இதுவும் சொன்னால் அதிகாரி பேதத்தால் கூடும் என்று தோன்றும் இறே
இன்னமும் இது பாஹ்ய மதஸ்தர்க்கு ஆகமங்களானாலும் உண்டு
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விதித்ததே ஹேதுவாக்கித் தன்னடையே சொல்லிற்று ஆகாதோ என்ன
அப்போது சாஸ்திர பரிக்ரஹம் ஆனாலும் -பகவத் உக்தியானாலும் -ப்ராக்த்தன -பழைமையான -சிஷ்டாசாரங்கள் ஆனாலும் ஒன்றும் இன்றிக்கே இருக்க
-புத்தரைப் போலே ஆபாச உக்திகளாலே விபரீத அர்த்தங்களை சொல்லிக் கொண்டு -பகவன் மாயா கல்பிதங்களான சில ப்ரத்யக்ஷங்களைக் காட்டி
பிரமித்துத் திரியா நிற்கிற சில அபிராமாணிக்கருடைய யுக்தி அனுஷ்டானங்கள் உஜ்ஜீவன இச்சை யுடையவர்களுக்கு பிரமானமாகக் கொள்ளப் போகாது
அது என் -அவர்கள் தாம் ஸ்வ தந்திரமாய் ஓர் அனுஷ்டானம் கல்பிக்கிறது இல்லையே –
தர்மஞ்ஞா சமய பிரமாணம் -என்றும் –யத்ய தாசாரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரே ஜன -3–21-என்கிறபடி சிஷ்டாசாரமே பிரமாணமாக அங்கீ கரித்து-
ஆச்சார்யஸ்ய ப்ரஸாதேன மம சர்வம பீப்சிதம்–ப்ராப்நுயாமீதி விச்வாசோ யஸ்யாஸ் தி ச ஸூகீபவதே-என்று ஸ்வா சார்ய விசுவாசத்தால்
தத் ஆஞ்ஞாநுவர்த்தனம் பண்ணினால் நர்த்தகரமாமோ என்னில் ஸ்வாசார்ய ஆஞ்ஜை என்று அங்கீ கரிக்கலாவது-அவர் தல் லக்ஷண லஷிதராய் சாஸ்திர பாணியாய் பிரபல பிராமண பர தந்தரராய் ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய சாஸ்திர யுக்த ரீத்யா சிஷித்தால் இறே
அப்படிச் சொல்லாதே தன் நெஞ்சினில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வரவாற்றது என்று சில விபரீத அர்த்தங்களை கல்பித்து
-அணங்குக்கு அருமருந்து என்று அங்கோர் ஆடும் கள்ளும் பராய்-என்கிறபடியே இந்த நிஷித்த அநுஷ்டானமே சித்தோ உபாயம் என்று
சிஷ்ட ஜனங்கள் அறியாத படி -ஒருவருக்கு ஒருவர் சாங்கேத்ய பாஷாணங்களாலே சொல்லிக் கொண்டு -சதாந்த ந்யாயத்தாலே
கூபத்திலே விழுகிற அப்ரமாணிக்கரைப் பற்றி தத் ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணினால் ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகல் ஓடமாய்
இருவதும் மூழ்கிப் போவார் ஆகையால் அவர்களுடைய ஸஹவாசம் தூரதா பரிவர்ஜனீயம் இறே
ஆச்சார்யனாவன் அஹங்கார அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய்
–சாஷாத் நாராயணோ தேவா க்ருத்வா மார்த்த்யமயீம் தனும்–மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணிநா -என்கிறபடியே
சாஸ்திர பாணியாய் ரக்ஷிக்குமவன் இறே –
அந்த சாஸ்திரமும் குண அனுகுணமாக பஹுவிதமாக இருக்கையாலே –
அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரா தரம் த்யஜேத் பஜேத் சார தமம் சாஸ்திரம் ரத்நாகர இவாம் ருதம்-என்கிறபடியே
அசாரமான பாஹ்ய சாஸ்திரமும் / அல்ப சாரமான பூர்வ பாகமும் / சாரமான உத்தர பாகமும் பரக்கச் சொல்லுகிறவை எல்லாம் விட்டு /
சார தரமான விஷ்ணு காயத்ரியின் சார தமமாக முதலிலே சொல்லப்பட்ட சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்து
-தத் அனுரூப அனுஷ்டானங்களை விதித்து ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் க்ரந்தஸ்தங்களாக அருளிச் செய்தும் தாம் ஆசரித்தும்
போருகிறபடிகள் ஒன்றும் தப்பாதபடி தானும் ஆசாரித்து இவனையும் ஆசிரிப்பிக்குமவன் ஆகில் இறே -இருவருக்கும் உஜ்ஜீவனம் சித்திப்பது –
நீச ஸ்பர்சமுடைய குரு மந்த்ர தேவதைகள் பரித்யாஜ்யங்கள் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே -மாணிக்க மாலையிலே –
அர்த்த ஸ்திதி இதுவாய் இருக்க சம்சார நிவர்த்தக மூல மந்த்ர உபதேஷ்டாவே ஆச்சார்யன் என்று வாங் மாத்திரம் சொல்லிக் கொண்டு
–த்ருஷ்ணா தோய மத் அனுபவ நோத்தூத மோஹோர்மிமாலே தாராவர்த்ததே தனய சஹஜ க்ராஹ சாங்கா குலேச -என்கிறபடியே
சம்சார சாகரத்தில் அழுந்தித் தானும் கரையேற மாட்டாதே தன்னைப் பற்றினவனையும் பத்த சம்சாரியாம்படி பண்ணி –
பாபேக்ருதேய திபவந்தி பயானுதாப லஜ்ஜா புன -என்கிறபடியே துர்வாசனையாலே பாபம் பண்ணினாலும் பய அனுதாப லஜ்ஜைகள் யுண்டாய்
க்ருபா பாத்ரர் ஆகாதபடி நமக்கு ஆச்சார்ய சம்பந்தம் உண்டு என்று பயம் கெடுத்து
-காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம் –9–1–9-என்கிறபடியே
அதுவும் இல்லாதபடி பண்ணி வ்யபசாரி சொல்லுகிற பதிவிரதா தர்மங்கள் போலே ஹாஸ்ய ஆஸ்பதங்களுமாய் அப்ரயோஜனங்களாய் இருக்கும் இறே
அவரில் பசையில்லை யானாலும் -விசுவாச பலதாயக -என்று இவனுடைய திருட அத்யாவசிய மாத்திரத்தாலே பல பிரதமாகாதோ என்ன
-இந்த விசுவாசம் வேத பாஹ்யனும்மும் உண்டு இறே
குரு உபநிஷ்ட மார்கேண ஞான கர்ம சமுச்சயாத் மோஷாபந்த விரக்தஸ்ய ஜாதே புவி கஸ்ய சித் என்று வேத பாஹ்யனுக்கும்
குரு விசுவாசமும் தத் உபதிஷ்ட மார்க்க ப்ரவர்த்தகத்வமும்-அத்தாலே மோக்ஷம் தப்பாது என்கிற திருட அத்யவசாயமும் மிகவும் உண்டு இறே
பிரமாண பரதந்த்ரனானவனுக்கு ஆச்சார்யன் சாஸ்திரஞ்ஞனாக வேணும் -ஞான அனுஷ்டான சம்பன்னன் ஆக வேனும்
-சத் சம்பிரதாய சித்தனாக வேணும் -என்ற இவை எல்லாம் அபேக்ஷிதங்களாய் இருக்கும்
பாஹ்ய மதஸ்தர்க்கு பிரமாண அபேக்ஷை ஒன்றும் இல்லாமையால் ஆச்சார்ய நிஷ்டை மிகவும் பரிபூரணமாய் இருக்கும்
அது உண்டு என்னுமத்தாலே பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ பிராப்தி சொல்ல ஒண்ணாது இறே
குரு மந்த்ர தேவதா பேஷஜ-மருந்து -விஷயங்களில் திவ்ய சக்தி உண்டானாலும் விசுவாசம் இல்லாத போது கார்யகரம் ஆகாது என்று
விசுவாஸ்ய அபேக்ஷிதம் சொல்லிற்று
இத்தனை ஒழிய சுக்திகையில் ரஜத புத்தி பண்ணி விசுவசித்தால் அது மெய்யாக மாட்டாது இறே –
ஆச்சார்யர் ஞானாதிகனாய் அவனுக்கு அத்யந்த பிரிய தமனாய் இருந்தால் சிஷ்யன் பக்கல் சில ஸ்காலித்யங்கள்-
சிஷ்யன் பல தவறுதல்களைச் செய்து இருந்தான் ஆகிலும் –ஆச்சார்யன் பக்கல் ப்ரேமம் உண்டாய் போருகிற இடத்தில்
-ஈஸ்வரன் சிஷிக்க நினைத்தாலும் இவ் வாச்சார்யன் தன் பின்னே வைத்துக் கொண்டு ரஷிக்க மாட்டானோ என்னில்
-ஸ்காலித்யே சாசிதாரம் -ந்யாஸ விம்சதி -1-என்கிறபடியே அவை வராதபடி சிஷித்து போக யோக்யனாம் படி பண்ணி ரக்ஷிக்குமதே
ஆச்சார்ய க்ருத்யம் அத்தனை போக்கி -தன்னை ஆஸ்ரயித்துத் தன் பக்கல் ப்ரேமம் உண்டாய் போந்தால் அவிநீதன் ஆனாலும்
–பணிவில்லாதவனாலும் -ரஷிக்க வல்லன் என்று நினைக்கல் ஆகாது –
குரு கர்ண தாரம் -என்று ஆச்சார்யன் ஆகிய கர்ண தாரன் விஷ்ணு போதத்திலே ஒதுங்கி ஸூ ஸ்திரனாய் இருந்தால் -மிகவும் உறுதி படைத்து
-உத்தாரகனாகத் தட்டில்லை இவன் இருக்கையும் விட்ட இடத்தில் நிர் பயனாய் நிர் வியாபாரனாய் இருக்க மாட்டாதே
அகாதமான சம்சாரத்திலே மூழ்கித் தரைப்படில் சர்வ சக்தியான சர்வேஸ்வரனுக்கே அசக்யம் என்று
க்ருபாவானாய் போகார்த்தமாக விநியோகம் கொள்ளும் இடத்திலும் தான் அந்தராத்மாவாய்க் கொண்டு
-சேஷியாய் -ஆதாயத்வ-விதேயத்வ–சேஷத்வ லக்ஷணங்கள் உடைய ஆழ்வாரைத் திரு மேனியாகவும்
ஷமா குணத்துக்கு ஆச்ரயமான எம்பெருமானாரைத் திருவடிகளாகவும் கொண்டு ஆச்சார்ய அவதாரம் பரிஹரித்தான் ஆகையால்
அவனே சர்வ நிர்வாஹகன் -அவன் இஷ்டமே எல்லாருக்கும் இஷ்டார் -மற்றுள்ள எல்லாரும் அவனுக்கு நித்ய பரதந்த்ரர் -தனித்து ஒருவருக்கும் ஒரு பிரவ்ருத்தியும் இல்லை –
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு –நான்முகன் –38-என்று அவன் நினையாத போது
த்ருண மாத்ரமும் சலிப்பிக்க சக்தன் ஒருவனும் இல்லை –இவ்வாச்சார்யன் ஹித உபதேசம் பண்ணி திருத்த வருகிறது –
அமைத்த சோற்றிலே மாமியார் கை வைத்தால் போல் -அசித விசேஷித்தராய்க் கிடந்த வன்று கரண களேபரங்களைக் கொடுத்து
-ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளை யுண்டாக்கி விபசரியாத படி வேத சாஸ்த்ராதிகளை அபகரித்து ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து அவதரித்து
ஹித உபதேசம் பண்ணியும் துர் வாசனையால் ஒருவரும் சாஸ்திர மரியாதையால் வாராது ஒழிந்தால் கிருபை கரை புரண்டு தானே யத்னம் பண்ணி
ரஷிக்க வேணும் என்று நினைத்து இவ் விபூதியில் லீலார்த்தமாகத் தான் பண்ணுவித்த கட்டளையை அதிக்ரமித்து ரஷிக்க தனக்கே சக்யம் இல்லாமையால்
உச்சி வீடு விடுகிற ஒரு சமயத்தை நிரீக்ஷித்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அத்வேஷாபிமுக்கிய சத் சங்கங்களும் சாத்விக உதயங்களும் உண்டாக்கி
மோக்ஷ அபேக்ஷையும் பிறப்பித்துச் சேர்ந்த பின்பு இறே அவனுக்கு இவன் உபதேசம் பண்ணுவது
ஹித உபதேசம் பண்ணின பின்பு –உபதேசோ நிரர்த்தக -என்னும்படி துர் வாசனை மேலிட்டால்-தம்ஹதேவம் ஆத்மபுத்தி பிரதேசம் -என்றும்
ஏஷ ஏவ சாது கர்மகாரயதி –என்றும் –சர்வஸ் யாஹம் ஹ்ருதி சன்னிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானமபோ ஹ நஞ்ச —ஸ்ரீ கீதை –15–15-என்றும் சொல்லுகிறபடியே
ஹ்ருதி ஸ்த்தனாய் நின்று ஆத்ம குணங்களை பிறப்பித்து அபரமாத்மநி வைராக்கியத்தை யுண்டாக்கி ஸ்வ கீய விஷயங்களில் காதல் கடல் புரைய விளைவித்து
பரமார்த்தனமாம் படி அனுக்ரஹித்து பிராரப்த விமோசனம் தொடங்கி நித்ய கைங்கர்ய பிராப்தி அளவும் யுண்டான பல பரம்பரைகளை
அடையும்படி பண்ணுவது -அவனுடைய அநிதர அசாதாரண க்ருத்யங்கள் இறே
பரமார்த்தம் இதுவாய் இருந்தாலும் அநாதியாக சம்சரித்துப் போருகிற இவனுடைய சமுத்தரணத்துக்கு ப்ரதமம் உபகாரம் தோற்றுவது
ஆத்ம நோஹ்யதி நீ சஸ்ய யோகித் யேவ பதார் ஹதாம் –கிருபையை வோப கர்தாரம் ஆசார்யம் சம்ஸ் மரேத் சதா –என்று
அநாதியாய் ஈஸ்வரனும் உளனாய்-பிராட்டியும் உளளாய் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எல்லாரும் ஆத்ம ரக்ஷண அர்த்தமாக பிறந்து இருக்கச் செய்தேயும்
இந்த ஜென்மத்தில் தனக்கு இந்த லாபம் ஸ்வாசார்ய சம்பந்த த்வாரா உண்டாக்கினான்
-ஆகையால் ஸ்வாச்சார்யன் பக்கலிலேயாய் இருக்கும் இவ் விவகாரத்துக்கு –
முடிந்த நிலம் பார்த்தவாறே -சர்வ காரண பூதன் ஆகையால் அவ்விடத்திலே பர்யவசித்து அன்று நில்லாது ஆகையால்
உபகார ஸ்ம்ருதிக்கு முதலடி ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞஜை -முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஞ்ஞஜை–ஸ்ரீ வசன பூஷணம் –329-என்று அருளிச் செய்தது –
இந்த ஆச்சார்ய அவதாரமும் அவனதே யாகையாலே –ஆச்சார்ய தேவோ பவ -என்றும் –குரு ரேவ பரம் ப்ரஹ்மம் –என்றும் –
சாஷாத் நாராயணோ தேவா -என்றும் ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் என்றும் –மாதா பிதா யுவதயா என்றும்
பூர்ண அதிகாரி விசேஷத்தில் அனுசந்திக்கக் குறையில்லை –
ஆகையால் இறே விபரீத அனுஷ்டானங்கள் புகுராத படி
ராமாநுஜர்யே குரு ரிதிச பதம்பாதி –என்று அவ்விடத்தில் அநிதர சாதாரணோபயாத்மக ஆச்சார்யத்வம் -எம்பெருமானார் இடத்தில்
பூர்வர்கள் எல்லாரும் அனுசந்தித்தும் உபதேசித்தும் போகிறது –
அதுக்கு கருத்து அன்றைக்கு அன்று
மாயா ப்ரவ்ருத்தமாய் தம் தாம் ஆச்சார்யர்கள் சொல்லுகிற விபரீதங்களைக் கேட்டு அஞ்ஞரானவர் பிரவ்ருத்தித்துப் போகாத படி
எம்பெருமானாருடைய யுக்தி அனுஷ்டானங்களை உத்தேசம் என்று எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி நிர்ணயித்துப் போந்தார்கள் –
ஆகையால் தாம் ஒன்றை ஆசரித்து இது எம்பெருமானார் அருளிச் செய்த அனுஷ்டானம் என்று சொல்லுகிற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே
குரு பரம்பரா பிரபாவம் முதலான கிரந்தங்களில் அருளிச் செய்த அர்த்த விசேஷங்களுக்கு
பூர்வ குரு வசன அனுஷ்டானம் விரோதம் வாராத படி நன்றாக ஓர்ந்து அர்த்த நிச்சயம் பண்ணுகிற பரம வைதிகரான அதிகாரிகளுடைய
யுக்தி அனுஷ்டானங்களை உத்தேச்யம் என்று கொள்ள வேணும்
மிகு ஸ்ருதியுள்-என்று தொடங்கி பல இடங்களிலும் வேத பிராமண்யம் அங்கீ கரித்து –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -/ தேஹ நா நாஸ்தி கிஞ்சன / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசனா-என்று தொடங்கிச் சொல்லுகிற
வேத வாக்கியங்கள் திராவிட வாக் வ்ருத்தியாலே விஷதீ கரித்து முமுஷுக்களுக்கு அறிய வேண்டும் அர்த்த விசேஷங்களுக்கு
ஸ்வ பிரபந்த முகத்தால் வெளியிட்ட பரம வைதிக அக்ரேஸர் ஆகையால் இறே
பிரபன்ன ஜன கூடஸ்தராய் சகல சிஷ்ட அக்ர கண்ய சிரஸா வஹ்யராய் இருக்கிறது
ஆகையால் எப்படிப்பட்ட ஞானாதிகர் ஆனாலும் வேத வேதாந்த விருத்தமாக அபேத ப்ரவ்ருத்தரானால் லீலா விஷயமாகை ஒழிய கிருபா விஷயமாக பெறார்கள்
ஞானாதிகர் மாத்திரம் அன்றிக்கே பரம வீத ராகருமாய் அத்யந்த பக்தி யுக்தருமாய் இருந்து வைத்தும் சாஹச க்ருத்யங்களில் அந்வயித்தார் ஆகில்
ஏதாக நினைத்து இருக்க வேணும் என்னில் சர்வேஸ்வரன் தன் லீலா சஹகாரியாக இட்டுக் கொண்ட பார்வையாக நினைத்து
அவர் அருகே தான் போகாதே கடக்க வர்த்திக்க வேணும் –
சர்வேஸ்வரன் நிரங்குச ஸ்வதந்திரனாய் பரம கிருபாவானாய் போக லீலார்த்த விபூதி த்வய ஈஸ்வரன் ஆகையால்
லீலா போகங்கள் இரண்டும் அவனுக்கு இஷ்ட ரசங்களே யாய் -ஒரு காலத்திலே லீலாலோலனாய் சிலரை அதுக்கு சஹகாரிகளாய்க் கொண்டு
தன் மூலமாகச் சிலரை லீலையில் விநியோகம் கொள்ளுவதும்
ஒரு காலத்தில் தயா பரவசனாய் சிலரை தானே முக்தராகப் பண்ணி போகத்தில் கூட்டிக் கொள்வதும் சில ஆத்மாக்களை விலக்ஷண சம்பந்தம் உண்டாக்கி
தன் மூலமாக சமுத்தரிப்புக்குமதும் அவனுக்கு ஸ்வ பாவம் ஆகையால்
ஸ்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா பிராயேண பதிதா த்விஜார் -அங்கா நிச விசீர் ணாதி ஹா வ்ருத்தோ வர்த்ததே கலி-என்று
கலி ப்ரவ்ருத்தமாய் வேத வைதிக மரியாதைகளைத் தப்பி எல்லாரும் நாஸ்திகராய் நசிக்கப் பூக்கவாறே தயா பராசனாய்
பராங்குச பரகால யதிவராதிகளை பார்வையாக வைத்து தன் மூலமாக திருத்தப் பார்க்க
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னும்படி கலி தோஷம் எல்லாம் நீங்கி
பெரிய கிருதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெறுக கரிய முகில் வண்ணம் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி
எங்கும் இடம் கொண்டனவே என்னும் படி -இனி லீலைக்கு விஷயம் ஒருவரும் இல்லை என்னும் படி கண்ட கண்ட இடம் எல்லாம் ஸ்ரீ வைஷ்ணவரேயாய்
மஹாதாபிமானத்தாலே அநதிகாரிகளும் முக்தராம் படி எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்கிறபடியே
முக்தி யோக்கியமான அதிகாரி சம்பந்தம் ஒன்றும் இன்றிக்கே பிரதி கூலியா நிவ்ருத்தி மாத்திரத்தாலே மஹதபிமான அந்தர்பூதராய்
பால மூக ஜடாந்த பங்குராதிகளும் முக்தரானால் சாஸ்திர மரியாதை தப்பித் போம் என்றும்
லீலா விபூதியும் குறைபடும் என்று நினைத்து நிஷித்த ப்ரவ்ருத்திகள் உண்டானால் அல்லது லீலையில் விநியோகம் கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாமையால்
பூர்வத்தில் அசுரர் ராக்ஷசர் அக்னி ஹோத்ராஸ ச வேதாஸ்ச -என்கிறபடி வேத வைதிக ஸ்ரத்தைகளும் உண்டாய்
-வேதத் த்வேஷிகளுமாய் சாது பாதகருமாய் இருக்கையால் வைதிக ஸ்ரத்தையைப் போக்கி விபரீத நிஷ்டராக்கி அல்லது நசிப்பிக்க ஒண்ணாது என்று
திண் கழல் கால் அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை –திருவாய் –3–5–2-என்கிறபடியே பிராட்டியும் தானும் ஓர் இலக்குப் பார்த்து
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்த அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்–திருவாய் –5–10–4- என்கிறபடியே
தானே புத்த வேஷ தாரியாய் போய் அவர்களோடு உள்கலந்து மதி மயங்கப் பண்ணி வைதிக ஸ்ரத்தையை மாற்றி விபரீத அனுஷ்டான பரராக்கியும்
ப்ருஹஸ்பதே ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூ ஸர்வேஷாம் அதிசயித ஞானானாம் நிதர்ச நத்வேன சங்கீர்த்த நாத் –என்று அதிசயித ஞானிகளுக்கு எல்லாம்
நிர்தசரதான பூதரான ப்ரஹஸ்பதியை தன்மத ஸ்தபகனாக்கி தன் மூலமாக சிலரை விபரீத ப்ரவ்ருத்தர் ஆக்கியும் இன்னமும்
பல சமய மதி கொடுத்தாய் –3–1–4-என்றும் சமயங்கட்க்கு எல்லாம் பொருவாகி நின்றான் –9–4–8-என்றும் சொல்லுகிறபடியே
தன் திரு உருவில் மனம் வைக்க மாட்டாத படி -மற்றும்
அநேக பாஹ்ய மதங்களையும் குத்ருஷ்ட்டி மதங்களையும் கல்பித்து தத் தத் குண புருஷர்களாலே தத் தத் மதங்களை ப்ரவ்ருத்திக்கப் பண்ணி
-தன் மூலமாக அசுரர் பிரக்ருதிகளை பத்த சம்சாரியாக்கி இவற்றை அபிவ்ருத்தமாக்கிக் கொண்டாப் போலே
இத் தர்சனத்திலும்
க்யாதி லாப அர்ச்சனை தத் பரராய் நாம ரூபங்களைத் தரித்து ஸ்வரூப அனுரூப வ்ருத்தி விசேஷங்கள் ஒன்றும் இன்றிக்கே ஸ்வரூப விரோதிகளை
ஒன்றும் த்யஜிக்க மாட்டாதே -தேஹாத்ம அபிமானிகளாய் துர் அஹங்கார க்ரஸ்தராய் கிருஷ்ண சிஹ்னங்களைத் தரித்து பின்னை
அவனோடே எதிரிட்ட புண்டரீக வாசுதேவனைப் போலே யும்-
அம்ருத அர்த்திகளாய் தேவதா கோஷ்டியுள் புக்க ராஹு கேதுக்களை போலேயும்
ஸ்வ கார்ய பரராய் வானர ஆகாரங்களைத் தரித்த சுக சாரணரைப் போலேயும்-
திரிகிற பர ஹிம்ஸா பரதார பரிக்ரஹ பர த்ரவ்ய அபகார தத் பரரான
ஆ சூரா பிரவ்ருத்திகள் வந்து கலந்தால் அவர்களை மோஹிப்பித்து தனக்கு அசல் ஆக்குகைக்காக சஹகாரிகளாம் படி சிலரைப் பார்வையிட்டு
அவராலே நிதர்சனங்களைக் காட்டி தன் மூலமாக நிஷித்த அனுஷ்டான பரராக்கி லீலையில் விநியோகம் கொள்ளுகிறான் என்று
ப்ரமாண பரதந்த்ரரானவர் –தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு –7–5–11-என்கிறபடியே திருட சித்தராய் நின்று
இந்திர வேஷ தாரியாய் அம்பரீஷனை பிரமிக்க பிரமிக்க வந்தால் போலே பண்ணுகிற எண்ணிலா பெரு மாயனானவனுடைய மாயா கார்யம் என்று நினைத்து
அப்ரமாணிக க்ருத்யங்களை சிஷ்டாசாரம் என்று ஆசரிக்கப் போகாது -அவரை தூஷிக்கவும் கூடாது தான் கடக்க நின்று
அவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே –4–10–6-என்று அருளிச் செய்தால் போலே ஓடிப் போக வேணும்
அவன் லீலா அர்த்தமாகப் பண்ணும் கிருஷியை தூஷித்தான் ஆகில் அதுவும் லீலாலோலனான அவனுக்கு இஷ்டம் இல்லாமையால்
இது கூடாதே என்று சொன்னால் அவனுக்கு ஒரு த்ருஷ்ட விஷயத்தில் அனர்த்தம் நந்திடும் மாமியார் கச்சை என்று அவ்விடத்தில் நில்லாது
ப்ரமாண பரதந்த்ரராய் விசுவசிக்கத் தக்க அதிகாரிகளோடு இவ்வர்த்தம் சொல்லிக் கொண்டு கடக்கப் போக வேணும்
இவ்வதிமாத்ர ப்ரவ்ருத்திக்கு ஐதிஹ்யம் -எம்பெருமானார் தர்சனம் நிர்வஹித்தித் கொண்டு போரு கிற காலத்தில் யாதவ பிரகாசன்
இவருடைய வைபவம் எல்லாம் கண்டு இருந்தும் மாத்ரு வசனத்தாலும் பகவத் ஆஞ்ஜையாலும் அவரை ஆஸ்ரயித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்திலே
பிரவர்த்திக்கக் கண்டு தத் புத்ர சிஷ்யர்கள் சகிக்க மாட்டாதே இத் தர்சனத்திலே அபேத ப்ரவ்ருத்தி யுண்டாம் படி தூஷிக்க வேணும் என்று நினைத்து நம் பூர்வாச்சார்யர்கள்
—————————————-
சதா பராகுணாவிஷ்டானாய் மநோ புத்திகள் இரண்டும் அவனிடத்தில் பர்யவசித்து மெய் மறந்து புத்தி பூர்வ
ப்ரவ்ருத்திகள் ஒன்றும் இன்றிக்கே
யஸ்ய நாஹன்க்ருதோ பாவ -18-17–யாவனுடைய நினைவு யானே செய்கிறேன் என்னும் அபிமானம் விளையாமல் இருக்கின்றதோ –
என்கிறபடியே பிரவ்ருத்த்தானாகில் அவனுக்கு வாராது –
இந்த ஞானம் மாத்ரம் வேதாந்த ஞான வாசனை யுடையார் எல்லாருக்கும் உண்டு -தத் அனுரூப அனுஷ்டானம் உண்டானால் இ றே-அனுபவிப்பது –
இந்த ஞான மாத்ரம் ராவணனுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும் பர ஹிம்ஸா பர தார பரிக்ரஹ பரத்ரவ்ய அபஹார அபேயபான
அபாஷ்ய பஷணாதிகள் மாறாதே நடக்கும் படியான அனுஷ்டானம் இதிஹாசாதிகளிலே காணா நின்றோம் இறே
ஆதே யத்வ விதே யத்வ சேஷத்வ ராசதாஸ்ரிய ஸ்ரீ பதேர் முக்ய தநவ பரமை காந்தி நஸ்ம்ருதா -என்று ததேக சேஷமாய் ததேக பரதந்த்ரமாய்
ததேக தாரகமாய் இருக்கிற சரீர லக்ஷணங்கள் உண்டான பரமைகாந்திகளை இ றே அவனுக்கு சரீர பூதராய் சொல்லுவது
ராகாதி தூஷிதே சித்தி நரஸ்பதீ மது ஸூ தனன- நபத்ராதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்தம அம்பசி -என்று ராகாதி தூஷித சித்தன் சரீரபூதன் ஆகமாட்டான்
சரீர பூதனான பரமைகாந்தி -போகா புரந்தராதீநாம் தே சர்வே நிராயோபம-என்று இஹலோகாத் விலக்ஷணமான ஸ்வர்க்காதி
போகங்களும் ஸ்வாத்ம அனுபவ ஸூ கமும் நரகோபமாக நினைத்து இருக்குமது ஒழிய
அமேத்ய பூர்ணம் க்ரிமிஜால சங்குலம் ஸ்வபாவ துர்கந்தம் அசவ் சுமத்ருவம் களேபரம் மூத்ர புரீஷ பாஜநம் நமந்தி மூடா -என்று
மூடரைப் போலே ஹேய துர்விஷய ப்ரவணனாய் சம்சாரிகளும் த்யாஜ்யமாக நினைக்கிற நிஷித்த வியாபாரத்தை பண்ணினான் இ றே
அக்ருத்யம் வைஷ்ணவ பாப புத்தயா சாஸ்திர விரோதத ஏகாந்தி பரமை காந்தீ ருஸ்ய பாவாச்ச சந்த்யஜேத்-என்று
அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானம் ப்ராப்ய பிரதிபந்தகம் என்னும் பயத்தால் வைஷ்ணவனும் சாஸ்திர விரோதம் ஆகையால்
பகவத் ஆக்ஜ்ஜாதிக்ர மணம் வரும் என்கிற பயத்தால் ஏகாங்கியும் ஹேயமாய்த் தோற்றி ருஸ்ய பாவத்தால் பரமை காந்தியும் த்யஜிப்பர் என்று சொல்லா நின்றது இறே
இருவரும் ருசி செல்லா நிற்கச் செய்தே விரோதி பயத்தால் த்யஜிப்பார்கள்-சரம அதிகாரிக்கு பிராப்ய ருசி கண் அழிவு அற
உண்டாய் இருக்கையாலே பீத்யா விடுகை அன்றிக்கே ருஸ்ய பாவத்தால் விடும்
இப்படியான அதிகாரியினுடைய க்ருத்யங்கள் இறே அவன் தன்னதாக அபிமானித்து இருக்கிறது -இது பொருள் அல்லவாகில்-சகல சேதன
அசேதனங்களும் அவனுக்கு சரீரமேயாய் இவர்கள் எல்லாருடைய கிருத்யங்களும் அவனதேயாய் விடும் -அவை போல் அன்றிக்கே
ஞானம் உண்டு இறே இவர்களுக்கு என்னில் -அந்த பக்ஷத்தில் வேதாந்த ஞானமுடைய ராவணாதிகளுடைய ஆசூரா க்ருத்யங்களும் அவனதேயாகி விடுமே
ஆகையால் சம்பந்தம் மாத்ரம் போதாது -ஞானமும் போராது-தத் அனுரூப அனுஷ்டானம் உண்டாக வேணும்
சரம ஸ்லோகத்தில் சர்வ தர்ம பரித்யாக பூர்வக ததேக உபாயதயா அத்யாவசாயமே அதிகாரி க்ருத்யம்
தானே புத்த வேஷ தாரியாய் போய் -அவர்களோடு உள் கலந்து மதி மயங்கப் பண்ணி வைதிக ஸ்ரத்தையை மாற்றி-விபரீத அனுஷ்டான பரராக்கியும்-
ப்ருஹஸ்பதே ஸ்ருதி ஸ்ம்ருதி ஷூ ஸர்வேஷாம் அதிசயிதே ஞானானாம் நிதர்ச நத்வேன சங்கீர்த்தநாத் -என்று
அதிசயித ஞானிகளுக்கு எல்லாம் நிதர்சன பூதரான ப்ரஹஸ்பதியை தன்மத ஸ்தாபகனாக்கி தன் மூலமாக சிலரை விபரீத ப்ரவ்ருத்தர் ஆக்கியும்-
இன்னமும் பல சமய மதி கெடுத்தாய் -என்றும் -சமயங்களுக்கு எல்லாம் பொருவாகி நின்றான் என்றும் சொல்லுகிறபடியே
தான் திரு உருவில் மனம் வைக்க மாட்டாத படி -மற்றும் -அநேக பாஹ்ய மதங்களையும் குத்ருஷ்ட்டி மதங்களையும் கல்பித்து
தத் தத் குண புருஷர்களாலே தத் தத் மதங்களை பிரவர்த்திக்கப் பண்ணி
தன் மூலமாக அசுரர் பிரக்ருதிகளை -பத்த சம்சாரியாக்கி -இவற்றை அபிவ்ருத்தம் ஆக்கிக் கொண்டால் போலே
இது தர்சனத்திலும் க்யாதி லாப அர்ச்சனதத் பரராய்
நாம ரூபங்களை தரித்து ஸ்வரூப அநு ரூப விருத்தி விசேஷங்கள் ஒன்றும் இன்றிக்கே
ஸ்வரூப விரோதிகளை ஒன்றும் த்யஜிக்க மாட்டாதே தேஹாத்ம அபிமானிகளாய் -துர் அஹங்காரஸ்தராய்
கிருஷ்ண சிஹ்னங்களைத் தரித்து
பின்னை அவனோடே எதிரிட்ட புண்டரீக வா ஸூ தேவனைப் போலேயும்-
அமிருதார்த்திகளாய் தேவதா கோஷ்டியுள் புக்க ராஹு கேதுக்களை போலேயும்
ஸ்வகார்ய பரராய் வானர ஆகாரங்களை தரித்த சுக சாரணரைப் போலேயும்-
திரிகிற பர ஹிம்ஸா பரதார பரிக்ரஹ பர த்ரவ்ய அபகார
தத் பரரான ஆஸூர ப்ரப்ருதிகள் வந்து கலந்தால்
அவர்களை மோஹிப்பித்து தனக்கு அசல் ஆக்குகைக்காக ஸஹ காரிகளாக ஆகும் படி சிலரை பார்வையிட்டு அவராலே நிதர்சனங்களைக் காட்டி
தன் மூலமாக நிஷித்த அனுஷ்டான பரராக்கி லீலையில் விநியோகம் கொள்ளுகிறான் என்று
பிரமாண பரதந்த்ரரானவர்
தெளியுற்று வீவின்றி நின்றவர்க்கு -என்கிறபடியே த்ருட சித்தராய் நின்று சர்வேஸ்வரன் ஆனாலும் எம்பெருமானாரே யானாலும்
வாய் திறந்து சொன்னாலும் ஸ்வப்னாதிகளிலே நியமித்தாலும் இந்திர வேஷ தாரியாய் அம்பரீஷனை பிரமிக்க வந்தால் போலே பண்ணுகிற
எண்ணிலா பெரு மாயவனுடைய மாய கார்யம் என்று நினைத்து
அபிராமாணிக க்ருத்யங்களை சிஷ்டாசாரம் என்று ஆசரிக்கப் போகாது -அவரை தூஷிக்கவும் கூடாது தான் கடக்க நின்று
-அவன் மாயம் கண்டீர் அறிந்து அறிந்து ஓடுமினே -என்று ஆழ்வார் அருளிச் செய்தால் போலே ஓடிப் போக வேண்டும்
அவன் லீலார்த்தமாகப் பண்ணும் கிருஷியை தூஷித்தான் ஆகில் அதுவும் லீலாலோனனான அவனுக்கு இஷ்டம் இல்லாமையால் இது கூடாதே
என்று சொன்னால் அவனுக்கு ஒரு த்ருஷ்ட விஷயத்தில் அனர்த்தம் தந்திடும்
மாமியார் கச்சை என்று அவ்விடத்தில் நில்லாதே ப்ராமண பரதந்த்ரராய் விஸ்வசிக்கத் தக்க அதிகாரிகளோடு இவ்வர்த்தம் சொல்லிக் கொண்டு கடக்கப் போக வேணும் –
இவ்வாதி மாத்ர ப்ரவ்ருத்திக்கு ஐதிக்யம் எம்பெருமானார் தர்சனம் நிர்வகித்துக் கொண்டு போகிற காலத்தில் யாதவ பிரகாசன் இவருடைய
வைபவம் எல்லாம் கண்டு இருந்தும் மாத்ரு வசனத்தாலும் பகவத் ஆஞ்ஞஜை யாலும் அவரை ஆஸ்ரயித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தில்
பிரவர்த்திக்கக் கண்டு தத் புத்ர சிஷ்யர்கள் சகிக்க மாட்டாதே இது தர்சனத்திலே அபேத ப்ரவ்ருத்தி உண்டாம்படி தூஷிக்க வேணும் என்று நினைத்து
நம் பூர்வாச்சார்யர்கள்-நாத்ர கர்ஹா-என்றும் நிந்தாம் குர்வந்தியே நரா -என்றும் சொல்லுகிற படியே கர்ஹிக்கக் கூடாது என்றும் -நிந்தித்தான் ஆகில்-நிக்ரஹ பாத்ரனமாம் என்றும் சொல்லுகிறதே விவஷிதம் –
போக்யமாகக் கொள்ளுகிறது என் என்னில் -தான் பாலே தாரகமாக வளருகிற
வத்ஸை காலாலே மிதித்தாலும் , தலையால் தள்ளினாலும் -பல்லாலே கடித்தாலும் தேனுவானது சகித்துக் கொண்டு
ஸூக ரூபமாகக் கொள்ளுமா போலே –
பாகவதர் தன்னைப் பரிபவித்தாலும் -புருஷ யுக்திகளை சொன்னாலும் -அத்தைப் பொறுத்து இருக்க வேணும் என்றும்
இது வன்றிக்கே விஷய ப்ரவணன் படுக்கைத் தலையிலே அபிமத விஷயமான ஸ்திரீயானவள் போக சமயத்திலே காலாலே தள்ளினாலும்
உகிராலே கிள்ளினாலும் வாயாலே கவர்ந்தாலும் புருஷ யுக்திகளை சொன்னாலும் மற்றும் அநேகமான திரஸ்கார க்ருத்யங்களை செய்தாலும்
ஒருவருக்கும் வெளியிடாதே அவை எல்லாம் பரம போக்யமாகக் கொள்ளுமா போலே
பாகவதரானால் தான் அபராதம் பண்ணாது ஒழிந்தாலும்
தான் மேல் பிறர் சித குரைக்கிலும்-அத்தைக் கேட்டுத் தன்னை
தாடன புருஷ யுக்தி தர்ஜன பர்த் நாதிகளாலே சிஷித்தாலும் அது தனக்கு ஹிதம் செய்வதாக போக்யமாகக் கொண்டு சர்வஞ்ஞரான
சுஷ்க ப்ரிய வசனங்களைச் சொல்லிக் கொண்டு ஒரு காசும் கொடுக்க மாட்டாதே வருந்தி ஒரு கைங்கர்யத்துக்கும் ஆளாகாதே
ஸ்ரீ பாத தீர்த்தம் பிரசாதிக்க வேணும் என்று அத்தை சுவீகரித்து அத்தை உகப்பாக வர்த்திக்க வேணும் என்று அருளிச் செய்தான் என்னப் போகாது இறே –
ஸ்ரீ கீதா சாஸ்த்ராதிகள் முன்பு ஏதுவாக நின்றாலும் பின்பு அநந்யபாக்காயத் திரிந்தால் ஆதரணீயன் என்று சொல்லுகையாலே இதுவே பொருளாகக் கொள்ள வேணும் இறே
இது பொருள் அல்லாவாகில்-பகவத் அபிப்பிராயஞ்ஞரான ஆச்சார்யர்கள் நாத்திகரையும் ஆத்திக நாத்திகரையும் மூர்க்கர் என விட்டு
நடுச் சொன்ன ஸ்ரீ வசன பூஷண சாஸ்திர வஸ்யரான ஆஸ்திகரையே ஆதரணீயர் என்று சொல்ல மாட்டார் இறே
ஆகையால் நாம ரூப தாரணம் யுடையவரானாலும் அவருடைய வியாபாரம் நிந்திக்கப் போகாதே -தான் பக்கல் அவர் குற்றம் செய்தால்
அது போக்யமாகக் கொள்ள வேணும் என்று அதுவே பகவத் அபிப்ராயம்
அவர் செய்கிற அக்ருத்ய கரணாதிகள் போக்யமாகக் கொண்டு அதுவே தனக்கு ரக்ஷகமாக அனுசந்திக்க வேணும் என்றால்
பர அவர யாதாம்ய வித்தரான நம்மாழ்வாரால் பல இடங்களிலும் –கழிமின் தொண்டீர்கள் கழித்துத் தொழுமின் –என்றும் –
சத்திரிய மடவார் தாழ்ச்சியை மதியாது எழுவது பயனே -என்றும் –திறமுடை வலத்தால் தீ வினை பெருக்காது -என்றும்
கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே -என்றும் வழக்கு என நினைமின் வல் வினை மூழ்காது -என்றும் –சூது என்று களவும் சூதும் செய்யாது -என்றும் –
அக்ருத்ய கரணாதி சீலராய் -நரகத்தில் அழுந்தாதே –
இவை எல்லாம் வேர் முதல் மாய்த்து —பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கு -என்றும் வாய் வாய் அடித்துக் கொண்டு
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ -என்று சம்சாரத்தில் ஸூ கம் இல்லை கண்டீர் -ஐயோ நான் இவ்வர்த்தம் உபதேசிக்க வேண்டுவதே என்று பரிதபிக்க வேண்டாவே
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் -4–9–2-என்று இருந்து தாம் அத்தை போக்யமாகக் கொள்ள லாம் இறே
இப்படிக்கு கூப்பிட்டது கேவல சம்சாரிக்களுக்கு அன்றோ -வைஷ்ணவர்க்கு என்று கூப்பிட்டாரோ என்னில் –
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply