ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத். நாந்யத் கிஂசந மிஷத். ஸ ஈக்ஷத லோகாந்நு ஸரிஜா இதி৷৷1.1.1৷৷
பர ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது -வேறு ஒன்றும் இமை கொட்டக் கூட இல்லை -ஸ்ருஷ்டிக்க சங்கல்பம் கொண்டது –
ஆத்மா என்ற சொல்லின் விசாரம்:
இது நான்கு விதத்தில் விளக்கபடுகிறது. அவைகள்
1. ஆப்னோதி இதி ஆத்மா – அனைத்தையும் வியாபித்திருப்பது, எங்கும் இருப்பது.
ஸத்தா ரூபேன – ஸத் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது. இருத்தல் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது.
2. ஆதந்தே ஆத்மா (ஸர்வாதாரஹ) – எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது, எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது.
3. அத்தி(eat) இதி ஆத்மா – அனைத்தையும் அனுபவிப்பதாக இருப்பது; ஞான ஸ்வரூபம்
4. அததி – நித்யஹ – என்றும் இருப்பது., நிலையாக இருப்பது
————
ஸ இமா ఁல்லோகாநஸரிஜத. அம்போ மரீசீர்மரமாபோதோம்பஃ பரேண திவஂ த்யௌஃ
ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. பரிதிவீ மரோ யா அதஸ்தாத்தா ஆபஃ৷৷1.1.2৷৷
அம்பஹ – சுவஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, சத்யஹ என்கின்ற ஏழு மேலுலகங்கள்
மரீஹீ – மரம், புவஹ – பூலோகம்; ஆபஹ என்கின்ற – கீழுள்ள ஏழு உலகங்கள்,
இவ்வாறாக ஈஸ்வரன் பதினான்கு உலகங்களையும் முதலில் படைத்தார்.
இவைகள் கிரமமாக படைக்கப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அவைகள் அம்பஹ, மரீஸீ, மரம், ஆபஹ என்ற நான்கு பிரிவாக கூறப்பட்டுள்ளது.
அதோ அம்பஹ பரேண திவம்: சொர்க்கலோகத்திற்கு மேலேயுள்ள உலகங்கள் அம்பஹ என்று கூறுகிறது.
த்யௌ ப்ரதிஷ்டா- சுவர்க்க லோகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது
அந்தரிக்ஷம் மரீஸய – அந்தரக்ஷம் என்று அழைக்கப்படும் புவலோகம்
ப்ருத்வீமரோ – இது பூலோகத்தை குறிக்கிறது.
யாஹா அத4ஸ்தா தாஹா ஆபஹ : கீழேயுள்ள ஏழு உலகங்களை அப என்று குறிக்கிறது.
ஸ ஸரிஜத. இமான் லோகான் -அந்த பர ப்ரஹ்மம் இந்த லோகங்களை ஸ்ருஷ்டித்தது
அம்போ மரீசீர்மரமாபோ–அம்பஸ்-மரீசீர் -மரம் -ஆப –
அம்பஃ பரேண திவஂ த்யௌஃ ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. –அம்பஸ் –ஸ்வர்க்கத்துக்கும் மேலே -ஸ்வர்க்கம் இத்தை தாங்கி இருக்கும்
மரீசீர் -ஸ்வர்க்கத்துக்கும் கீழ் உள்ள ஆகாசம் -இங்கு தான் ஸூர்ய வெளிச்சம் -மரீசீர் -ஸூ ர்ய கிரணங்களால் வந்த பெயர்
பரிதிவீ மரோ -பிருதிவி அழிந்து மீண்டும் வருவதால் மரம் -மிரியந்தே-என்றவாறு
யா அதஸ்தாத்தா ஆபஃ- பாதாள லோகங்கள் அப -தண்ணீருக்குள் இருப்பதால் –
———–
ஸ ஈக்ஷதேமே நு லோகாஃ லோகபாலாந்நு ஸரிஜா இதி. ஸோத்ப்ய ஏவ புரூஷஂ ஸமுத்தரித்யாமூர்ச்சயத்৷৷1.1.3৷৷
ஸஹ ஈக்ஷா – மீண்டும் அவர் சிந்தித்தார்.
இமே லோகஹா – இந்த உலகங்கள் என்னால் படைக்கப்பட்டது.
லோகபாலன் ஸ்ருஜா இதி – இனி உலகை பாதுகாக்கின்ற தேவதைகளை படைக்க வேண்டும்.
ஸ அத்ப்யஹ ஏவ புருஷம் – அவர் பஞ்ச பூதங்களை எடுத்து ஒரு மனித உருவமுடைய
அமூர்சயத் – தேவதையை படைத்தார், அதற்கு பெயர் விராட்.
லோகங்களை ஸ்ருஷ்டித்த பின்பு லோக பாலர்களையும் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தான் –
பஞ்ச பூதங்களை உண்டாக்கி பஞ்சீ கரித்து உண்டாக்கினான் –
—————–
தமப்யதபத்தஸ்யாபிதப்தஸ்ய முகஂ நிரபித்யத யதாண்டம். முகாத்வாக்வாசோக்நிர்நாஸிகே நிரபித்யேதாஂ நாஸிகாப்யாஂ ப்ராணஃ
ப்ராணாத்வாயுரக்ஷிணீ நிரபித்யேதாமக்ஷீப்யாஂ சக்ஷுஷ்சக்ஷுஷ ஆதித்யஃ கர்ணௌ நிரபித்யேதாஂ
கர்ணாப்யாஂ ஷ்ரோத்ரஂ ஷ்ரோத்ராத்திஷஸ்த்வஙநிரபித்யத த்வசோ லோமாநி லோமப்ய ஓஷதி வநஸ்பதயோ ஹரிதயஂ
நிரபித்யத ஹரிதயாந்மநோ மநஸஷ்சந்த்ரமா நாபிர்நிரபித்யத நாப்யா அபாநோபாநாந்மரித்யுஃ
ஷிஷ்நஂ நிரபித்யத ஷிஷ்நாத்ரேதோ ரேதஸ ஆபஃ৷৷1.1.4৷৷
இந்த மந்திரத்தில் மூன்று தத்துவங்கள் கோளகம், இந்திரியம், தேவதா.
தம் அப்யதமத் – விராட் உருவத்தை பார்த்து ஆலோசித்தார்.
முகம் நியபித்யதா – வாய் திறந்தது.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
கோளகம் இந்திரியம் தேவதை
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
முகம் வாக்கு அக்னி
மூக்கு பிராணன்(நுகரும் சக்தி) வாயு
கண்கள் சக்ஷூ(பார்க்கும் சக்தி) ஆதித்யன்
காது கேட்கும் சக்தி திசை தெய்வங்கள்
தோல் தொட்டுணரும் சக்தி ஔஷதி வனஸ்பதா
ஹ்ருதயம் மனம் சந்திரன்
தொப்புள் அபாணன் ம்ருத்யு
சிறுநீர் கழிக்கும்
இடம் ரேதஹ ஆபஹ
ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து திரு முகம் -திரு வாய் விரிய –
திரு முகத்தில் -திரு வாயில் இருந்து வாக் -அந்த வாக்கை காக்கும் அக்னியும் —
இதே போலே மூக்கில் இருந்து பிராணனும் கந்தமும் வாயும் வர காதுகளில் இருந்து கேட்க்கும் உணர்வும் திக் பாலர்களும்
கண்களில் இருந்து ஸூர்ய -தோலில் இருந்து தொடு உணர்வும் -ஒளஷதங்களும் மரங்களும் -மனஸ்-சந்த்ரர்களும்-போல்வன –
————————–
தா ஏதா தேவதாஃ ஸரிஷ்டா அஸ்மிந்மஹத்யர்ணவே ப்ராபதஂஸ்தமஷநாபிபாஸாப்யாமந்வவார்ஜத்.
தா ஏநமப்ருவந்நாயதநஂ நஃ ப்ரஜாநீஹி யஸ்மிந்ப்ரதிஷ்டிதா அந்நமதாமேதி৷৷1.2.1৷৷
தேவதைகளும் சம்சாரிகள் என்று வர்ணிக்கப்படுகிறது.
தேவதைகளும், ஜீவர்களும் படைக்கப்பட்டு விட்டது.
சம்சாரமே மிகப்பெரிய கடலாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சம்சாரம் துயரமென்னும் நீரால் நிரம்பியிருக்கிறது.
இந்த பெரிய கடலில் எல்லா தேவதைகளும் வீழ்ந்திருக்கிறார்கள்.
சம்சாரம் என்ற சொல்லின் பொருள் சம்யக் தரதி – நன்கு அங்குமிங்கும் அலைகின்றார்கள்.
பசி-தாகத்துடன் (சம்சாரம்)கொடுத்தார்கள்.
மனதிற்கு ஞானேந்திரியங்கள் வழியாக விஷயங்களை உணவாக கொடுத்து பசியை அடக்குகிறோம்.
வயிற்றுப்பசியை ஸ்தூல உணவை கொடுத்து அடக்குகிறோம். பசி-தாகம் மனதின் நிறைவின்மை.
இதை எந்தப்பொருளினாலும் நீக்க முடியாது. பசி-தாகத்தை கொடுத்தவுடன் ஜீவர்கள் அதை போக்குவதற்கு ஸ்தூல உடலை கேட்கின்றார்கள்.
ஜீவர்கள் ஈஸ்வரனிடம் இவ்விதம் பேசினார்கள்.
எங்களுக்கு ஒரு இருப்பிடம் (சரீரம்) கொடுங்கள்.
எந்த உடலில் இருந்து அன்னத்தை சாப்பிட்டு பசி-தாகத்தை போக்கி கொள்ள முடியுமோ அதை எங்களுக்கு கொடுங்கள்.
ஜீவர்களுக்கு இந்த பசி-தாகம் மூலம் சம்சாரம் வந்து விட்டது.
இப்படி ஸ்ருஷ்டித்த அக்னி தேவதைகள் தங்கள் வசிக்கவும் உணவு உண்ணவும் இடங்களை பிரார்த்தித்தார்கள்-
———–
தாப்யோ காமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி. தாப்யோஷ்வமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி৷৷1.2.2৷৷
ஜீவர்களுக்கு இருப்பிடமாக சரீரமாக பசுவை கொண்டு வந்து காட்டப்பட்டது
இது எங்களுக்கு போதாது.
இப்பொழுது குதிரையை காட்டப்பட்டது
இதுவும் எங்களுக்கு போதாது என்று கூறினார்கள்.
அவர்களுக்கு மாடு ஒன்றை கொடுக்க -இது போதாது என்ன குதிரையையும் கொடுக்க அதுவும் போதாது என்றார்கள் –
—————–
தாப்யஃ புரூஷமாநயத்தா அப்ருவந் ஸுகரிதஂ பதேதி புரூஷோ வாவ ஸுகரிதம். தா அப்ரவீத்யதாயதநஂ ப்ரவிஷதேதி৷৷1.2.3৷৷
அவர்களுக்காக மனுஷன் ஒருவனை கொடுக்க -சுக்ருத் என்றார்கள் –
அதானால் தான் ஸ்வதந்த்ர எண்ணம் இன்றும் மனிசர்க்கு மிக்கு உள்ளது என்பர் –
பின் தேவர்களை அவர்கள் அவர்கள் இடம் போக சொன்னான் –
அதாவது வாக் முதலியவற்றை பாலனம் பண்ண என்றவாறு –
பிறகு மனித சரீரத்தை காட்டபட்டது..
நன்றாக உருவாக்கப்பட்ட சரீரம் என்று கூறினார்கள்.
மனித சரீரம் உயர்ந்தது என்று சொல்வதற்கு காரணம் இதுதான்
பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மத்தை செய்வதற்கும், மோட்சத்தை அடைவதற்கும் சரியான கருவியாக இருக்கிறது.
ஈஸ்வரன் அந்த தேவதைகளிடம் உங்களுக்குரிய இருப்பிடத்தில் சென்று வசியுங்கள் என்று கூறினார்.
————–
அக்நிர்வாக்பூத்வா முகஂ ப்ராவிஷத்வாயுஃ ப்ராணோ பூத்வா நாஸிகே ப்ராவிஷதாதித்யஷ்சக்ஷுர்பூத்வாக்ஷிணீ ப்ராவிஷத்திஷஃ
க்ஷோத்ரஂ பூத்வா கர்ணௌ ப்ராவிஷந்நோஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசஂ ப்ராவிஷஂஷ்சந்த்ரமா மநோ பூத்வா ஹரிதயஂ
ப்ராவிஷந்மரித்யுரபாநோ பூத்வா நாபிஂ ப்ராவிஷதாபோ ரேதோ பூத்வா ஷிஷ்நஂ ப்ராவிஷந்৷৷1.2.4৷৷
அக்னி பகவான் வாய்க்குள்ளும் பேச்சாகவும் -வாயு பகவான் மூக்குக்குள் கந்தமாகவும் -ஸூரியன் கண்ணுக்குள் பார்வையாகவும் –
திக் தேவதைகள் காதுக்குள் கேள்வியாகவும் -மூலிகைகளும் மரங்களும் தோலில் மயிர்களாகவும் ஸ்பர்ச உணர்வாகவும் –
சந்திரன் ஹ்ருதயத்துக்குள் மனஸாகவும் -இத்யாதி -என்றவாறு –
அக்னியானது வாயில் சென்று அமர்ந்து பேசும் சக்தியாக இருக்கிறது.
வாயு மூக்கில் இருந்து கொண்டு நுகரும் சக்தியாக இருக்கிறது.
சூரியன் கண்களில் இருந்து கொண்டு பார்க்கும் சக்தியாக இருக்கிறது.
திசைகள் காதில் இருந்து கொண்டு கேட்கும் சக்தியாக இருக்கிறது.
மூலிகைகளும் தாவரங்களும் தோலில் இருந்து கொண்டு தொட்டுணரும் சக்தியாக இருக்கிறது.
இவ்வாறாக எல்லா இந்திரியங்-களும் அவரவர்களுக்குரிய இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்து கொள்கிறார்கள்.
—————————–
தமஷநாயாபிபாஸே அப்ரூதாமாவாப்யாமபிப்ரஜாநீஹீதி. தே அப்ரவீதேதாஸ்வேவ வாஂ தேவதாஸ்வாபஜாம்யேதாஸு பாகிந்யௌ கரோமீதி.
தஸ்மாத்யஸ்யை கஸ்யை ச தேவதாயை ஹவிர்கரிஹ்யதே பாகிந்யாவேவாஸ்யாமஷநாயாபிபாஸே பவதஃ৷৷1.2.5৷৷
பசியும் தாகமும் தங்களுக்கும் இடம் கேட்க -உங்களுக்கு தனியாக இல்லாமல் இந்த தேவதைகளை உங்களுக்கும்
இடம் விட்டு கொடுக்க பண்ணுகிறேன் இதனாலே ஹவிஸ் கொடுக்கும் பொழுது இவர்களுக்கும் பங்கு உண்டு –
சம்சாரம் என்பது பசி-தாகம். இது இந்திரியங்களைச் சார்ந்து இருக்கின்றது.
எனவே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பசி-தாகம் ஈஸ்வரினிடம் எங்களுக்கும் தங்குவதற்கு இடம் கொடுப்பதற்கு ஆலோசனை செய்யுங்கள் என்று வேண்டின.
உங்களிருவரையும் இந்த தேவதைகளுக்குள்ளேயே இருக்கும்படி செய்கிறேன்.
நீங்கள் இப்படி அங்கமாக இருப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அனுபவிப்பதே நீங்கள் தான்.
—————————–
அத்தியாயம்-3 – ஸ்ருஷ்டியின் தன்மை
இதில் ஐந்து கருத்துக்கள் பேசப்படுகின்றன. அவைகள்
1. போக்ய ஸ்ருஷ்டி
2. விஷய ஸ்ருஷ்டி
3. அபவாதம்
4. பிரவேச ஸ்ருஷ்டி
5. ஆத்ம ஞானம்
———
ஸ ஈக்ஷதேமே நு லோகாஷ்ச லோகபாலாஷ்சாந்நமேப்யஃ ஸரிஜா இதி৷৷1.3.1৷৷
ஈஸ்வரன் ஆலோசித்தார் என்னால் உலகம் படைக்கப்பட்டுவிட்டது.
உலகத்தை பாதுகாப்பதற்கு தேவதைகளும் படைக்கப்பட்டு விட்டது.
இப்பொழுது இவர்கள் உண்பதற்கு உணவை தோற்றுவிக்க வேண்டும்.
—————
ஸோபோப்யதபத்தாப்யோபிதப்தாப்யோ மூர்திரஜாயத. யா வை ஸா மூர்தி-ரஜாயதாந்நஂ வை தத்৷৷1.3.2৷৷
பஞ்ச பூதங்களை வைத்து சிந்தித்த பிறகு அதிலிருந்து விதவிதமான உணவுகள், விதவிதமான ஜீவர்களையும் படைத்துவிட்டார்.
————-
ததேநத்ஸரிஷ்டஂ பராங்த்யஜிகாஂஸத்தத்வாசாஜிகரிக்ஷத்தந்நாஷக்நோத்வாசா க்ரஹீதும்.
ஸ யத்தைநத்வாசாக்ரஹைஷ்யதபிவ்யாஹரித்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.3৷৷
நாம் உண்ணும் உணவை முயற்சி செய்துதான் அடைய வேண்டும்.
யாருக்கு எந்த வகையான பசி எடுக்கிறதோ அதற்கு தகுந்த இந்திரியத்தை பயன்படுத்தி அடைய வேண்டும்.
இவ்வாறு உணவு படைக்கப்பட்டது
அதை சாப்பிட போடும்போது அது ஓட ஆரம்பித்தது
பேசி அதை பிடிக்க என்று முயற்சி செய்தான். இப்படி பேச்சினால் அவனால் கிரகிக்க முடிந்து இருந்தால்
இவன் அதை பேசுவதனாலே திருப்தியடைந்து விடுவான். அப்படி முடியாததால் இவனுக்கு திருப்தி வரவில்லை.
————–
தத்ப்ராணேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்ப்ராணேந க்ரஹீதும்.
ஸ யத்தைநத்ப்ராணேநாக்ரஹைஷ்யதபிப்ராண்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.4৷৷
பிராணன் இது நுகர்வதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
————-
தச்சக்ஷுஷாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சக்ஷுஷா க்ரஹீதும்.
ஸ யத்தைநச்சக்ஷுஷாக்ரஹைஷ்யத்தரிஷ்ட்வா.ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.5৷৷
கண்ணானது பார்வையாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
————
தச்ச்ரோத்ரேணாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்ச்ரோத்ரேண க்ரஹீதும்.
ஸ யத்தைநச்ச்ரோத்ரேணாக்ரஹைஷ்யச்ச்ருத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.6৷৷
காதானது கேட்பதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
—————–
தத்த்வசாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்த்வசா க்ரஹீதும்.
ஸ யத்தைநத்த்வசாக்ரஹைஷ்யத்ஸ்பரிஷ்ட்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.7৷৷
தோலானது தொட்டுணர்ந்தே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
——————-
தந்மநஸாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோந்மநஸா க்ரஹீதும்.
ஸ யத்தைநந்மநஸாக்ரஹைஷ்யத்தயாத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.8৷৷
மனமானது எண்ணங்களாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
——————
தச்சிஷ்நேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சிஷ்நேந க்ரஹீதும்.
ஸ யத்தைநச்சிஷ்நேநாக்ரஹைஷ்யத்விஸரிஜ்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.9৷৷
சிறுநீரகமானது கழிவை அகற்றுவதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
——————-
ததபாநேநாஜிகரிக்ஷத். ததாவயத். ஸைஷோந்நஸ்ய க்ரஹோ யத்வாயுரந்நாயுர்வா ஏஷ யத்வாயுஃ৷৷1.3.10৷৷
கடைசியில் உணவை எடுத்து வாயினுள்ளே போடுகிறார்கள். இப்படி உணவை பிடித்து விட்டார்கள்.
அபான பிராணன் மூலம் உணவை சாப்பிட்டு புரிந்து கொண்டார்கள்.
—————–
ஸ ஈக்ஷத கதஂ ந்விதஂ மதரிதே ஸ்யாதிதி ஸ ஈக்ஷத கதரேண ப்ரபத்யா இதி. ஸ ஈக்ஷத யதி வாசாபிவ்யாஹரிதஂ
யதி ப்ராணேநாபிப்ராணிதஂ யதி சக்ஷுஷா தரிஷ்டஂ யதி ஷ்ரோத்ரேண ஷ்ருதஂ யதி த்வசா ஸ்பரிஷ்டஂ யதி மநஸா த்யாதஂ
யத்யபாநேநாப்யபாநிதஂ யதி ஷிஷ்நேந விஸரிஷ்டமத கோஹமிதி৷৷1.3.11৷৷
இதில் மூன்று கர்த்துக்கள் அடங்கியுள்ளது.
1. பரமாத்மா ஜீவாத்மாவில் பிரவேசம்
2. எந்த வழியாக உள்ளே நுழையலாம் என்று யோசிக்கிறார்.
3. ஜீவனுக்கு அத்மஞானம் வேண்டுமென்றால் எப்படி சிந்திக்க வேண்டும்.
கஹ அஹம் இதி – நான் யார் என்று சிந்திக்க வேண்டும்.
நாம் எப்பொழுதும் வெளி விஷயங்களைத் தான் சிந்தித்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நான் யார்? இப்படி சிந்திப்பவன் யார்? என்று யோசிக்க வேண்டும்.
எந்த அறிவை பயன்படுத்தி வெளி விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கின்ற நாம் இவ்வாறு பார்ப்பவன் யார் என்று
விசாரம் செய்ய வேண்டும் என்றால் நம் மனதைக் கொண்டேதான் இவ்வாறு நம்மை விசாரிக்க வேண்டும்..
இந்த விசாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று உபநிஷத் இங்கே விளக்கியிருக்கிறது.
நம் இந்திரியங்களை யாரோ ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது.
இந்திரியங்கள் தன்னிச்சையாக செயல்பட்டால் நான் யார் என்ற கேள்வி எழும்.
இந்தக் கேள்வியிலிருந்து நான்தான் இவைகளை கட்டுப்படுத்துகிறேன் என்ற அறிவு கிடைக்கும்
இந்திரியங்களுக்கு நான்தான் தலைவன். நான் வேறு, இந்திரியங்கள் வேறு,
அவைகள் எனக்காக வேலை செய்கிறது என்ற மனப்பான்மையுடன் விவகாரம் செய்தல்
இந்திரியங்களுக்கு இந்திரியமாக இருக்கிறேன்.
ஈஸ்வரன் – ஜீவன் இந்த மாதிரி சிந்திக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஒருவேளை வாயானது அது இஷ்டத்திற்கு பேசிக்கொண்டிருந்தால், காதானது அது இஷ்டத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தால்,
தோலானது அது விருப்பத்திற்கு தொடு உணர்வை அனுபவித்துக் கொண்டிருந்தால், மனமானது அதுபாட்டுக்கு சிந்தித்துகொண்டிருந்தால்,
பிறகு நான் யார்? என்ற கேள்விக்கு இவ்வாறு சிந்திக்க வேண்டும். இந்திரியங்கள் மனதின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது,
மனது வேறொருவரின் கட்டுக்குள் இருக்கிறது. அந்த வேறொருவர் நான்தான்,
நான் சேதன ஸ்வரூபமானவன், நித்யமானவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
——————
ஸ ஏதமேவ ஸீமாநஂ விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத. ஸைஷா விதரிதிர்நாம த்வாஸ்ததேதந்நாந்தநம்.
தஸ்ய த்ரய ஆவஸதாஸ்த்ரயஃ ஸ்வப்நா அயமாவஸதோயமாவஸதோயமாவஸத இதி৷৷1.3.12৷৷
ஈஸ்வரன்,
தலை உச்சியில் ஓட்டையை போட்டு
அந்த துவாரம் வழியாக
நுழைந்தார்.
இந்த கதவுக்கு
விக்ருதி என்ற பெயரும் உண்டு.
நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு, இது மகிழ்ச்சியை தரும் வழியாகும்.
ஈஸ்வரனுடைய
மூன்று விதமான இருப்பிடங்கள் (வலது கண், மனம், ஹ்ருதயம்)
மூன்று விதமான கனவு நிலைகள் (விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்நிலை உறக்கம்)
இந்த ஒன்றானது (வலது கண் முதலாவது)
இருப்பிடம், மனதானது இரண்டாவது இருப்பிடம், இருதயமானது மூன்றாவது இருப்பிடம்.
ஈஸ்வரன் ஜீவனுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்று யோசித்தார்,
தலை உச்சி (பிரம்ம அந்திரம்) வழியாக போகலாமா அல்லது அடிப்பாதம் வழியாக போகலாம என்று யோசித்தப் பின்னர்,
தலையுச்சி வழியாகவே பிரவேசிக்கலாம் என்று முடிவெடுத்து அதன் வழியாக உள்ளே நுழைந்தார்.
ஜீவன் உடலில் சிதாபாஸனாக தோன்றினார். ஈஸ்வரன் உள்ளே நுழைந்த கதவுக்கு (வழிக்கு) வித்ருதி என்று பெயர்.
நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு.
அந்த ஜீவனுக்கு மூன்று இடங்கள் அளித்து மூன்று விதமான அவஸ்தைகள் மூலமாக உலகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கட்டும்.
ஜாக்ரத் அவஸ்தையில் கண்ணை இருப்பிடமாக கொண்டு விவகாரம் செய்கின்றான்.
கனவு நிலையில் தொண்டையில் உள்ள கண்ட ஸ்தானம், ஆழ்ந்த உறக்கத்தில் இதயத்தில் இருக்கின்றான்.
————–
ஸ ஜாதோ பூதாந்யபிவ்யைக்யத் கிமிஹாந்யஂ வாவதிஷதிதி.
ஸ ஏதமேவ புரூஷஂ ப்ரஹ்ம ததமமபஷ்யதிதமதர்ஷமிதீ 1.3.13৷৷
பரமாத்மா இப்போது ஜீவ ரூபமாக சம்சாரத்தில் இருக்கிறார். ஜீவனாக வெளிப்பட்டிருக்கிறார்.
இந்த அனைத்து ஜீவராசிகளை குறித்து
குரு, சாஸ்திரங்களின் துணைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார்.
இந்த உலகத்தில் எனக்கு (பிரம்மத்திற்கு) வேறாக எதை சொல்ல முடியும் என்ற கேட்டால், நானே அனைத்துமாக இருக்கிறேன்
என்று அறிந்து கொண்ட பிறகு நான் தெரிந்து கொள்வதற்கு வேறொன்றுமில்லை.
இந்த ஜீவனையே பிரம்மன்
என்று அறிந்தான்.
இந்த பிரம்ம லட்சணமானது.
எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மனாகவே அறிந்து கொண்டான்.
இவ்விதமாக பிரம்மத்தை (ஞானியானவன்) அறிந்துக் கொண்டான்
———-
தஸ்மாதிதந்த்ரோ நாமேதந்த்ரோ ஹ வை நாம. தமிதந்த்ரஂ ஸந்தமிந்த்ர இத்யாசக்ஷதே பரோக்ஷேண.
பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ৷৷1.3.14৷৷
ஆகவே, ஜீவன் பிரம்மத்தை அபரோக்ஷமாக அறிந்த பிறகு,
பிரம்மத்திற்கு இன்னொரு பெயர். இதை அபரோக்ஷமாக அறிவதனால்தான் பிரம்மத்திற்கு இந்த பெயர்.
இதை இந்திரன் என்று மறைமுகமாக என்று அழைப்பதுண்டு. ஞானிகளும், தேவர்களும் தங்களை மறைத்துக் கொள்வதில்
தான் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் தெரியக்கூடியதாக இருந்தாலும் ஜீவர்களுக்கு தெரியாமல்தான் இருக்கின்றார்கள்.
ஞானத்தை அடைந்தவனுக்கு அபரோக்ஷமாகவும், ஞானத்தை அடையாமல் அறிந்தவனுக்கு பரோக்ஷமாகவும் இருக்கிறது இந்த பிரம்மன்.
இது புலன்களால் அறிய முடியாததாக இருக்கிறது. ஞானிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
—————————-
புரூஷே ஹ வா அயமாதிதோ கர்போ பவதி. யதேதத்ரேதஸ்ததேதத்ஸர்வேப்யோங்கேப்யஸ்தேஜஃ
ஸஂபூதமாத்மந்யேவாத்மாநஂ பிபர்தி தத்யதா ஸ்த்ரியாஂ ஸிஞ்சத்யதைநஜ்ஜநயதி ததஸ்ய ப்ரதமஂ ஜந்ம৷৷1.4.1৷৷
கர்ம பலன் அனுபவித்த பின்பு மீண்டும் மழை-தானியம் -புருஷன் -சம்யோகத்தால் கர்ப்ப வாசம் பற்றி சொல்கிறது –
இந்த ஜீவன் முதலில் தந்தையின் உடலை இருப்பிடமாக கொண்டிருக்கிறது.
தந்தையின் விந்தில் இருக்கிறது. இந்த விந்தானது உடலினுடைய எல்லா அங்கங்களின் ஒட்டு மொத்த சாராம்சமாக இருக்கிறது.
தந்தை தன் குழந்தையைப் பார்க்கும்போது தன்னையே பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கின்றான்.
நான் இறந்தாலும் தன் குழந்தையின் உடலில் இருப்பேன் என்று நம்பி கொண்டு
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதைப் போன்று தன் குழந்தையை பாதுகாக்கின்றான்.
ஆணினுடைய விந்திலிருந்து பெண்ணின் கர்ப்பத்திற்குள் செல்கின்றது, இதுதான் அவனுடைய முதல் ஜென்மம்.
————-
தத்ஸ்த்ரியா ஆத்மபூயஂ கச்சதி யதா ஸ்வமங்கஂ ததா. தஸ்மாதேநாஂ ந ஹிநஸ்தி ஸாஸ்யைதமாத்மாநமத்ர கதஂ பாவயதி৷৷1.4.2৷৷
தாயின் கருப்பைக்குள் சென்ற ஜீவனானது அவளது அங்கமாகவே மாறிவிடும்.
அதனால் இந்த தாய்க்கு எந்த தீங்கும் செய்வதில்லை.
தன்னிடத்தில் வந்த அந்த ஜீவனை தாய் மிகவும் போற்றி பாதுகாக்கின்றாள்.
கர்ப்பத்தில் உள்ள சிசுவை தாய் மிகவும் கவனமாக போஷித்து -தானே அதற்காகவும் உண்டும் வளர்க்கிறாள் என்கிறது –
—————-
ஸா பாவயித்ரீ பாவயிதவ்யா பவதி தஂ ஸ்த்ரீ கர்பஂ பிபர்தி ஸோக்ர ஏவ குமாரஂ ஜந்மநோக்ரேதிபாவயதி. ஸ யத்குமாரஂ
ஜந்மநோக்ரேதிபாவயத்யாத்மாநமேவ தத்பாவயத்யேஷாஂ லோகாநாஂ ஸந்தத்யா ஏவஂ ஸந்ததா ஹீமே லோகாஸ்ததஸ்ய த்விதீயஂ ஜந்ம৷৷1.4.3৷৷
அவள் பாதுகாப்பவளாகிறாள்.
தாய் குழந்தையை பாதுகாக்கும்போது அவளை மற்றவர்கள் பாதுகாக்க வேண்டும்.
பிறப்பதற்கு முன் அவள்தான் குழந்தையை பாதுகாக்கின்றாள்.
பிறப்பதற்கு முன் தாயை கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை பாதுகாக்க வேண்டும்.
அவர் தன்னுடைய குழந்தையை பிறப்பதற்கு முன்னும் பின்னும் அதை நன்கு கவனிப்பதற்குக் காரணம்
அவர் தன்னையே அந்த குழந்தையினிடத்தில் பார்ப்பதால் தன்னையே கவனிப்பதற்கு சமமானதாக இருக்கிறது.
இந்த உலகத்தில் தன்னுடைய சந்ததியானது தொடர்ந்திருப்பதற்காக இவ்வாறு தந்தை தன் குழந்தை பாதுகாக்கிறார்.
ஜீவன் தாயின் கர்ப்பதிலிருந்து உலகத்தில் வருவது இரண்டாவது ஜென்மம்.
கர்ப்பத்தில் தாய் ரஷித்து பிறந்த பின்பு தாயும் தந்தையும் ரஷித்து -இத்தால் உலகம் தொடர்ந்து -நடக்கிறது என்றபடி
—————-
ஸோஸ்யாயமாத்மா புண்யேப்யஃ கர்மப்யஃ ப்ரதிதீயதே. அதாஸ்யாயமிதர ஆத்மா கரிதகரித்யோ வயோகதஃ
ப்ரைதி ஸ இதஃ ப்ரயந்நேவ புநர்ஜாயதே ததஸ்ய தரிதீயஂ ஜந்ம৷৷1.4.4৷৷
தன்னுடைய ஸ்வரூபமாக மகனை கருதுகிறார் தந்தை
தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின் படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்
அதற்கு பிறகு
இந்த மகனுக்கு தந்தையானவர்
இந்த உலகத்தில் செய்ய வேண்டிய மூன்று கடமைகளிலிருந்து விடுபடுகின்றார்,
அவைகள் கடவுளுக்கு, ரிஷிகளுக்கு, தேவதைகளுக்கு செய்ய வேண்டியது மூன்று கடமைகள்-
பிறகு வயதாகி இறந்து விடுகின்றான்.
இந்த உலகத்தை விட்ட பிறகு மீண்டும் வேறொரு உடலை எடுக்கின்றான்.
இது அவனுக்கு மூன்றாவது பிறப்பு.
தன்னுடைய ஸ்வரூபமாக பாவிக்கும் மகனை புண்ணிய கர்மத்தை அவன் செய்யும் விதத்தில் வளர்க்க வேண்டும்.
தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின்படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்.
அவனும் அதே மாதிரி வளரத்-தொடங்கினான், தந்தை சொன்னபடி இந்த உலகில் தர்மப்படி வாழ்ந்து வயதான பிறகு இறந்துவிடுகின்றான்.
இது இவனுக்கு மூன்றாவது ஜென்மம்.
புத்ரனை ஜீவாத்மாவுடைய இரண்டாவது ஜென்மம் என்பர் -வேதங்களில் விதித்தித்த அனுஷ்டானங்களை தொடர்ந்து செய்ய
ஜீவன் சரீரம் விட்ட பின்பு கர்மத்தின் அனுகுணமாக மூன்றாவது ஜென்மம் எடுக்கிறான் என்கிறது –
—————-
ததுக்தமரிஷிணா. கர்பே நு ஸந்நந்வேஷாமவேதமஹஂ தேவாநாஂ ஜநிமாநி விஷ்வா. ஷதஂ மா புர ஆயஸீரரக்ஷந்நதஃ
ஷ்யேநோ ஜவஸா நிரதீயமிதி கர்ப ஏவைதச்சயாநோ வாமதேவ ஏவமுவாச৷৷1.4.5৷৷
ஸ்ரீ வாம தேவர் முந்திய ஜென்ம கர்ம -புண்ணிய கர்ம – பலத்தால் கர்ப்பத்தில் இருந்த பொழுதே -தனது முந்திய ஜென்மங்களை பற்றியும்
பர ப்ரஹ்மத்தின் பல் வேறு ஸ்வரூப ரூபங்களையும் தேவதைகளின் ஜென்ம பரம்பரைகள் விசேஷங்களையும் அறிந்ததாக சொல்கிறார் –
ஆத்ம ஞானத்தை அடைந்த ரிஷி ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது.
கர்ப்பதிலிருக்கும் போதே நான் என்னை அறிந்து கொண்டேன்.
அனைத்து தேவர்களின் பிறப்பையும், தேவ ரகசியத்தையும் (ஆத்ம ஞானம்) அறிந்து கொண்டேன்.
இதை அடைவதற்கு முன் 100 இரும்புக்கதவுக்குள் அடைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
பருந்தானது கூண்டிலிருந்து வெளியேறுவது போல நான் மாயை என்ற வலையிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று
வாமதேவர் என்ற ஞானி தான் கர்ப்பத்திலிருக்கும்போதே இந்த ஞானத்தை அடைந்துவிட்டதை கூறியிருக்கிறார்.
———————
ஸ ஏவஂ வித்வாநஸ்மாச்சரீரபேதாதூர்த்வ உத்க்ரம்யாமுஷ்மிந் ஸ்வர்கே லோகே ஸர்வாந் காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத்৷৷1.4.6৷৷
இப்படி கருவிலே திரு உள்ளவர் மீண்டும் பிறக்காமல்–ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார் –
யாரொருவன் வாமதேவர் அறிந்தது போல் ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டால்
இந்த சரீரத்திலிருந்து கொண்டே மனநிறைவைப் பெற்று மரணமற்ற நிலையை அடைவான்.
————————
கோயமாத்மேதி வயமுபாஸ்மஹே கதரஃ ஸ ஆத்மா . யேந வா பஷ்யதி யேந வா ஷரிணோதி யேந வா
கஂதாநாஜிக்ரதி யேந வா வாசஂ வ்யாகரோதி யேந வா ஸ்வாது சாஸ்வாது ச விஜாநாதி৷৷1.5.1৷৷
இப்படி உபாசித்து -கண்ணால் கண்ட -காதால் கேட்ட -மூக்கால் நுகர்ந்த -நாக்கால் சுவைத்த –
யார் இந்த ஆத்மா?
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சொல் “நான்”
எப்படிபட்டது இது? நிர்குண சைதன்யமா அல்லது சகுண சைதன்யமா?
ஸ்தூல, சூட்சும சரீரங்களை விசாரம் செய்து இவைகள் ஆத்மா அல்ல என்ற முடிவுக்கு வருகின்றார்கள்.
எந்த இந்திரியத்தால் பேசுகிறோமோ, கேட்கிறோமோ, வாசனையை நுகர்கின்றோமோ
இவைகள் ஆத்மா என்று விசாரம் செய்து இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இந்த சூட்சும சரீரம் மாற்றத்தை அடைவதால் அது ஆத்மா அல்ல என்று தெளிவடையலாம்.
காலம் செல்ல செல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி போன்ற இந்திரியங்களின் சக்திகள் குறைந்து கொண்டே போவதால்,
இவைகள் மாற்றத்திற்கு உள்ளாகின்றது
இதுவே நமக்கு விஷயமாக உள்ளது. ஏதாவது ஒரு பொருளை காட்டி இது தெரிகிறதா என்று கேட்டால், தெரிகிறது என்று கூறுவோம்.
எனவே பொருளும் தெரிகிறது அதை கண்ணால் அறிந்து கொண்டேன் என்று இந்திரியத்தின் செயலையும் தெரிந்து கொள்கிறோம்.
ஆனால் இந்திரியங்களின் விஷயங்களாகி வேறொருவன் அதைப் கவனிக்கின்றான்.
கரணமாக இருப்பதால், இதை பயன்படுத்தி வேறொருவன் பயனடைகின்றான்.
மேற்கூறிய காரணங்களால் சூட்சும சரீரங்கள் ஆத்மாவல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.
—————-
யதேதத் ஹரிதயஂ மநஷ்சைதத். ஸஂஜ்ஞாநமாஜ்ஞாநஂ விஜ்ஞாநஂ ப்ரஜ்ஞாநஂ மேதா தரிஷ்டிர்தரிதிர்மதிர்மநீஷா ஜூதிஃ
ஸ்மரிதிஃ ஸஂகல்பஃ க்ரதுரஸுஃ காமோ வஷ இதி. ஸர்வாண்யேவைதாநி ப்ரஜ்ஞாநஸ்ய நாமதேயாநி பவந்தி৷৷1.5.2৷৷
இந்த மனமும் (சித்தம், அகங்காரம், மனம்) புத்தியும் ஆத்மா அல்ல.
ஆத்மா என்பது சேதன ஸ்வரூபம், அறிவு ஸ்வரூபம், உணர்வு ஸ்வரூபம்.
நம்மிடத்தே எழுகின்ற எண்ணங்களுக்கு பின்னால் இந்த சைதன்யம் இருக்கிறது.
எண்ணங்கள் பலவாக இருப்பதற்கு காரணம் அதற்கு விஷயமாக இருக்கும் பொருட்களால் ஆனால்
இதையெல்லாம் அறிந்து கொண்டிருப்பது ஒரே ஒரு சைதன்யம்தான்.
நமது மனதில் வருகின்ற எண்ணங்களுக்கு சைதன்யத்திற்கு கொடுக்கப்படுகின்ற பெயர்கள்.
சம்ஞானம் – சாதாரண மனிதர்களிடத்திலே தோன்றும் எண்ணம், நான் இருக்கிறேன் என்ற அறிவு.
ஆஞானம் – யோகிகளிடத்தில் இருக்கின்ற ஞானம். மனிதர்களிடத்திலே இல்லாத ஞானம்.
விக்ஞானம் கலைஞானம், பிரக்ஞானம், புரிய வேண்டியதை அந்த நேரத்தில் புரிந்து கொள்ளும் திறமை.
மேதா4 – வாஸனைகள்; எண்ணப் பதிவுகள்
த்ருஷ்டி – இந்திரியங்களால் அடையப்படும் ஞானம்
த்ருத்ஹி – துணிவை கொடுக்கின்ற உறுதியான ஞானம்
மதிஹி – யோசிக்கும் திறமை (மனனம்)
மணிஷா – நாம் சுதந்திரமாக இருத்தல்
ஜூதிஹி – மனதினால் வலி வேதனைகளை அனுபவித்தல்
ஸ்மிருதி – எண்ணிப் பார்த்தல்
சங்கல்பஹ – உறுதி செய்தல்
க்ருதஹ – தீர்மானித்தல்
அஷூ – எச்சரித்தல்
காமோ – ஆசை வயப்படுதல்
இப்படி பலவிதமான எண்ணங்கள் நம்மிடத்தே இருக்கின்றது.
இவைகளெல்லம் சைதன்யத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர்களாகும்.
இது ஹிருதயம் அனைத்துக்கும் திரண்ட ஸ்தானம் -அதுக்கும் விட -மனஸ் -இதுவே அனைத்து இந்த்ரியங்களுக்கும் ஞான துவாரம்
சம் ஞானம் அஞ்ஞானம் விஞ்ஞானம் பிரஞ்ஞானம் -மேதாவிலாசம் -த்ரிஷ்ட்டி -திட புத்தி மதி -ஜூதி
ஸ்ம்ருதி -சங்கல்பம் -கருதி -காமம் -பல தசைகள் உண்டே –
———————
ஏஷ ப்ரஹ்மைஷ இந்த்ர ஏஷ ப்ரஜாபதிரேதே ஸர்வே தேவா இமாநி ச பஞ்ச மஹாபூதாநி பரிதிவீ வாயுராகாஷ ஆபோ
ஜ்யோதீஂஷீத்யேதாநீமாநி ச க்ஷுத்ரமிஷ்ராணீவ. பீஜாநீதராணி சேதராணி சாண்டஜாநி ச ஜாருஜாநி ச ஸ்வேதஜாநி
சோத்பிஜ்ஜாநி சாஷ்வா காவஃ புரூஷா ஹஸ்திநோ யத்கிஂசேதஂ ப்ராணி ஜங்கமஂ ச பதத்ரி ச யச்ச ஸ்தாவரஂ ஸர்வஂ
தத்ப்ரஜ்ஞாநேத்ரஂ ப்ரஜ்ஞாநே ப்ரதிஷ்டிதஂ ப்ரஜ்ஞாநேத்ரோ லோகஃ ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரஜ்ஞாநஂ ப்ரஹ்ம৷৷1.5.3৷৷
எல்லா ஜீவராசிகளும் சைதன்ய ஸ்வரூபமாகவே இருக்கின்றது.
பிரக்ஞானே ப்ரதிஷ்டிதம் – ஸ்ருஷ்டி காரணம்
பிரக்ஞானே நேதமா லோகா – ஸ்திதி காரணம்
ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா – லய காரணம்
மஹா வாக்கியம் : பிரக்ஞானம் பிரம்ம – ஜீவனுடைய சூட்சும சரீரத்திற்கு ஆதாரமாக இருப்பது பிரக்ஞானம்,
இதுவே பிரம்மனாக இருக்கின்றது.
பிரமன் இந்திரன் பிரஜாபதி -பஞ்ச பூதங்கள் -ஸ்தாவரங்கள் ஜங்கமங்கள்-பீப்பிலி வரை அனைத்துக்கும் -அனைத்து ஜீவனுக்குள்ளும் –
ப்ரஹ்மம் அந்தர்யாத்மா வாக இருந்து நடத்துகிறார் –
இப்படி ஒன்றை சொன்னால் ஜீவன் பர ப்ரஹ்மம் வரை செல்லும் என்று உணர வேண்டும் –
———————-
ஸ ஏதேந ப்ரஜ்ஞேநாத்மநாஸ்மால்லோகாதுத்க்ரம்யாமுஷ்மிந்ஸ்வர்கே லோகே ஸர்வாந்காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத். இத்யோம்৷৷1.5.4৷৷
ஸ்ரீ வாம தேவர் போல்வார் ஆத்ம சாஷாத்காரம் பெற்று அதற்கும் மேலே பர ப்ரஹ்மத்தை உணர்ந்து அந்தமில் பேரின்பம் பெற்றனர் –
இந்த பிரஹ்ம ஞானத்தின் பலன் இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது.
தான் எந்த அறிவை அடைந்தானோ அதிலேயே நிலைபெற்று இருத்தல், பிராரப்தம் முடிந்தவுடன்
இந்த உடலை விட்டு விட்டு எல்லா ஆசைகளையும் அடைந்தவனாக தன்னிடத்திலே இருக்கிறான், மரணமற்றவனாக உயர்ந்து விடுகிறான்.
————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply