ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி —
———-
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே –1-
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
நந்த வனத்தில் கல்ப கொடி -பெரியாழ்வார் தோட்டம் -மிக்க நல் தொண்டர் அன்றோ –
ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிய சந்தன மரத்துடன் சேர்ந்த ஆண்டாளை பார்த்து –
சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
பொறுமை -பெரிய பிராட்டி போலே -கைங்கர்யம் -அண்ட சராசரங்களையும் -சேர்த்து வைக்க -கருணை உடனும் –
பொறுமையால் பூமா தேவி வடிவும் -கருணையால் ஸ்ரீ தேவி வடிவும் கொண்டவளாய் –
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே
அநந்ய கதித்வம் -சரணம் அடைகிறார் –
காம் ததாதி கோதா -வாக்கு –மாலை -என்றுமாம் -சூடிக் கொடுத்த நாச்சியார் –
நாம சங்கீர்த்தனம் -அர்ச்சனை -ஆத்ம சமர்ப்பணம் –மூன்றையும் -நமக்கு காட்டி அருள ஸ்ரீ பூமா தேவி
பேர் பாடி -முதல் பத்தால்-சர்வ தேவ நமஸ்காரம் கேசவன் கச்சதி —
அர்ச்சனை அடுத்த பத்தால் -திருப் பாதங்களில்
ஆத்ம நிவேதனம் அடுத்த பத்தால் -அருளிச் செய்து –
ஸ்ரீ ஆண்டாளுடைய திரு அவதாரமும் திருக்கல்யாணமும் அருளிச் செய்யப்படுகிறது –
நந்த இதி நந்தனம்
ஆனந்தோ நந்தனோ நந்தி -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே மால் தேடி ஓடும் மனம்
சந்தன யோக -ஸம்ஸ்லேஷம்-ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீ அரங்கனுக்கு –
அவனது விரஹ தாபம் இவள் சேர்த்தியாலே கழிந்து தண்மை அடைந்தது –
த்ருஸ்யம்- மிதுனத்தை நமக்கும் காட்டி அருளுகிறாள் –
சர்வம் சஹா-ஷமையே உரு எடுத்தவள்
லகு உபாயம் வத ப்ரபோ -என்று நமக்காகவே பிரார்த்தி அவனை ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் அருளச் செய்தவள்
உனக்கே நாம் ஆள் செய்வோம் என்று சென்று நாம் சேவித்தால் ஆ ஆ என்று ஆராய்ப்பித்து அருள்வான்
சாஷாத் ஸ்ரீ -கமலா -இவ -அந்யாம் -திருமகள் போல் வளர்த்தேன் -தூய திருமகளாய் வந்து -பிரபந்த சாரம் –
அநந்ய சரண -அசரண்ய சரணம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே
ஸ்ரீ யம் அசரண த்வம் சரண்யம் ப்ரபத்யே ஸ்ரீ ஸ்துதி –
விஸ்வம்பராம் அசரண சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ பூ ஸ்துதி
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ கோதா ஸ்துதி
ஸ்ரேயோ மூர்த்தி -சர்வ மங்கள விக்ரஹ மூர்த்தி -ஸ்ரீ தேவி -/ விஸ்வம் பரா- ஸ்ரீ பூமா தேவி /
வாக் அருளுபவள் ஸ்ரீ கோதா தேவி
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளில் சரண் புகுந்து அவளது கல்யாண குணங்களே தன்னை ஸ்தோத்ரம் செய்யத்
தூண்டியதை அருளிச் செய்கிறார் மேல்
—————————————————-
வாத்சல்யாதி குணங்களே என்னை பாட வைக்கும் –
வைதேசிக ஸ்ருதி சிராமபி பூயஸீ நாம்
வர்ணேஷூ மாதி மஹிமா ந ஹி மாத்ருஸாம் தே
இத்தம் விதந்தமபி மாம் சஹசைவ கோதே
மவ்ந த்ருஹோ முகர யந்தி குணாஸ் த்வதீயா –2–
வைதேசிக ஸ்ருதி சிராமபி பூயஸீ நாம்
அநேக வேத வாக்குக்களும் அறிய முடியாமல் -ஆனந்த வல்லி -ஒன்றையே பிடிக்க முடியாமல் –
யாதோ வாசோ நிவர்த்தந்தே -அவன் விஷயத்திலே –
விதேச பாவ வைதேசிக -ஸூவ தேசம் இல்லாமல் விதேச தேசமாக வேதங்கள் கூட -அபி சப்தம் –குணங்களைப் பேச முடியாமல் திரும்பினவே –
வர்ணேஷூ மாதி மஹிமா ந ஹி மாத்ருஸாம் தே
ஸ்தோத்ரம் பண்ணி அடைக்க முடியாத மஹிமை -எழுத்துக்களில் அடங்காமல் -கர்த்தும் ததீய மஹிமா -ஆளவந்தார் –
இத்தம் விதந்தமபி மாம் சஹசைவ கோதே
காம் ததாதி கோதா -கோதையை சரணம் அடைந்தார் -பரோஷமாக த்வயம் மந்த்ரம் போலே –
இதில் சாஷாதாகாவே கேட்க்கிறார்-விரைவாக நீயே அருளி
மவ்ந த்ருஹோ முகர யந்தி குணாஸ் த்வதீயா
மௌனமாக இருக்க ஒட்டாமல் குணங்கள் வாயை திறக்க வைக்கும் -சஹஜ காருண்யாதி குணங்களே பாட வைக்கும்
ரெங்கன் கொடுத்த கவி தார்க்கிக ஸிம்ஹம் -அன்றோ தேசிகர் -வேதாந்தமே நிரூபகமாக இருக்க –
குணங்கள் குழந்தை என்னை பாட வைத்த சாஹசம் அன்றோ -கோதை ஊமைத் தனத்தை அழித்து
முகம் -வாக்கு வாய் பேச்சு -முகம் கொடுப்பது மௌனத்தை தகர்த்து -வாக்கை பிடுங்கி அன்றோ பாட வைத்து அருளுகிறாய் –
—————————————————–
த்வத் ப்ரேயஸ ஸ்ரவணயோர் அம்ருதாயமா நாம்
துல்யாம் த்வதீய மணி நூபுர சிஞ்ஜிதாநாம்
கோதே த்வமேவ ஜநநி த்வத் அபிஷ்ட வார்ஹாம்
வாசம் பிரசன்ன மதுராம் மம சம்விதேஹி –3–
த்வத் ப்ரேயஸ ஸ்ரவணயோர் அம்ருதாயமா நாம்
ஸ்ரீ ரெங்கனுக்கு அமிர்தம் ஆக்கும் வாக்குகளை நீயே தந்து அருள –
ப்ரேயஸ ஸ்ரவணயோர்
பக்தஸ்தே அதீவ மே ப்ரியா -அவனும்
அஹம் சிஷ்ய ச ச பிரேஷ்யா ச த்வயி மாதவ -என்று பிரார்த்தித்து ஸ்ரீ வராஹ ஸ்லோகம்
துல்யாம் த்வதீய மணி நூபுர சிஞ்ஜிதாநாம்
சிலம்பு -ஓசை நாயகனுக்கு இருப்பது போலே -சிறந்த கவியை அருள வேணும் –
கர்ணயோர் -என்று இல்லாமல் -ஸ்ரவணயோர்-என்றது ஸ்ரவணம் இத்யாதி நவவித பக்தி
ஆண்டாள் ஸ்தோத்ரம் கேட்டு மகிழ்வான் அரங்கன் -புண்யம் அஸ்ய உபஸ்ருனோமி வாசாம்-ஸ்ருதி
ஸ்ரீ கோதாவின் கொலுசு சப்தம் பொன்ற ஒலி தமது ஸ்தோத்ரத்துக்கும் தரும் படி அருள பிரார்திக்கிறார் –
கோதே த்வமேவ ஜநநி த்வத் அபிஷ்ட வார்ஹாம்
தாயே –ப்ரீதி மிக்கு -நீயே கொடுத்து அருள வேணும் –
ஜனனி தவமேவ வாசம் சம்விதேஹி -நீ தான் உனது குழந்தைக்கு வேண்டியதை பார்த்து அருளுவாய்
அபீஷ்டவ்மி நிரஞ்சனம் -தயா சதகம் –
அபீத ஸ்தவம் -பல வழிகளில் அர்த்தங்கள் உள்ள ஸ்தோத்ரம்
வாசம் பிரசன்ன மதுராம் மம சம்விதேஹி —
வெளிப்படை -மதுரம் -நீயே கொடுத்து அருள வேணும் -மஹிமை -பாட அசக்தன் –
சரணம் புகுந்து குணங்கள் தூண்ட —
வார்த்தைகளை -கோதா கொடுப்பாய் -ஸ்வயமாக தாய் குழந்தைக்கு சொல்வது போலே –
வாக் பிக்ஷை கேட்க வெட்கம் இல்லை –
கோதா கர்ணாம்ருதம் கேட்க ஸ்ரீ ரெங்கன் –உனக்கு அபீஷ்டன் கேட்டால் போதும் -நீ கேட்க வேண்டாம் –
மதுரமான பா அஞ்சாலி -வைதர்பி -ஸ்தோத்ரம் பண்ண -பிரார்த்திக்கிறார்
—————————————————————————
க்ருஷ்ண அந்வயேந தததீம் யமுன அநு பாவம்
தீர்த்தைர் யதாவதவ காஹ்ய சரஸ்வதீம் தே
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாஷாத்
வாச ஸ்புரந்தி மகரந்த முச கவீ நாம் –4–
க்ருஷ்ண அந்வயேந தததீம் யமுன அநு பாவம்
யமுனை போன்ற பரிசுத்தி –எம்பெருமான் சேர்க்கையால் –
தீர்த்தைர் யதாவதவ காஹ்ய சரஸ்வதீம் தே
சரஸ்வதி தீர்த்தம் போலே -மூழ்கி -நீராடி -வாக்கு -திருப்பாவை நாச்சியார் திருமொழி -ஆச்சார்யர் மூலம் அறிந்து
யதாவதவ காஹ்ய-குள்ளக் குடைந்து நீராட -சரஸ்வதி யமுனை சங்கமம் போலே
ஸ்ரீ கோதாதேவி அருளிய பிரபந்த ஆழ்பொருள்களை ஆச்சார்யர்கள் மூலமே அறிந்து அனுபவிக்கிறோம்
ஸ்ரீ கிருஷ்ணன் -யமுனைத்துறைவன் -ஸ்ரீ கிருஷ்ண சம்பந்தத்தால் பெருமை பெற்ற யமுனையும் ஸ்ரீ ஆண்டாள் உடைய
இரண்டு திவ்ய பிரபந்தங்களும்
ஸ்ரீ கோதா வாக்குக்கள் -சரஸ்வதி நதிக்கு படிக்கட்டுக்கள் இல்லையே அந்தர்வாஹினியாய் இருப்பதால் –
ஆச்சார்யர்களாகிற படித்துறைகள் -யமுனைத் துறைகள் போலே -கொண்டே நமக்கு அனுபவம் –
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாஷாத்
கோதாவரி -கோதா –இங்கே நீராடி மேலே சரஸ்வதி யமுனா -தென் தேச கவி
உன் கடாக்ஷம் பெற -நீ பாடி அருளிய மாலைகளில் மணம் ஆச்சார்யர் மூலம் அறுந்து யாதாவாக அவஹாகித்து -புத்தி விகசித்து
வாச ஸ்புரந்தி மகரந்த முச கவீ நாம்
பரிபூர்ண கருணையால் வாக் பிரவஹிக்க –மலர்களில் தேன் பிரவஹிக்குமா போலே –
கடாக்ஷம் மூலம் அனுக்ரஹத்தாலே பெற்ற விசேஷ ஞானம் -ஸ்புரந்தி-ஸ்ம்ருதி போலே இல்லாமல் -மின்னல் போலே ஸ்புரிக்கும் படி அருளி –
அந்தர்வாஹினியான சரஸ்வதி வாக் பஹிர்வாஹினியாக-யமுனையாக -ஸ்ரீ கோதா தேவி பிரபந்தங்கள் போலே –
ஆகவே தானே யமுனைத்துறைக்கு என்னை உய்த்திடுமின் என்று விரஹ தாபம் தணிக்க பிரார்த்தனை –
ஹயக்ரீவரே நல்ல வாக்கு சாமர்த்தியம் கொடுத்த பின்பு -என்னிடம் பிரார்த்திப்பது என்–
லோகத்தாருக்கு இனிமையாக -அங்கு பிரார்த்தனை
சிலம்பு ஓசை போலே -முக ஸ்துதியாக -கேட்க வேணுமோ –அரங்கனுக்கு அமிருதமாக இங்கு பிரார்த்தனை -என்கிறார்
சாஷாத் ஹயக்ரீவனுக்கும் இனிமையாக வேணுமே -இதற்கு உன்னுடைய -ஒரே கடாக்ஷம் போதும் –
உன் பா மாலைகள் கண்ணனை அனுபவித்து பிரவாகமாக வந்த அமிருதம் அன்றோ –
கிருஷ்ணா யமுனா சரஸ்வதி கோதாவரி -பெயர்களும் நீர்த்திரைகள் நீராடி -தீர்த்தம் -சொற்களும் இருப்பது அழகு
——————————————————–
அஸ்மாத் ருசாம பக்ருதவ் சிர தீக்ஷிதா நாம்
அஹ்நாய தேவி தயதே யதசவ் முகுந்த
தன் நிஸ்திதம் நியமிதஸ்தவ மௌலி தாம்நா
தந்த்ரீ நிநாத மதுரைஸ்ஸ கிராம் நிகும்பை–5-
அஸ்மாத் ருசாம பக்ருதவ் சிர தீக்ஷிதா நாம்
நீசன் நிறை ஒன்றும் இல்லா அடியேன் இடம் –நான் தீக்ஷிதன் -அபகருதிகளை அநாதி காலம் செய்து –
என்னைப் போல்வாருக்கும்
அஹ்நாய தேவி தயதே யதசவ் முகுந்த
முகுந்தன் தயை பள்ள மடையாக விழுந்ததே –கோதா தேவி -மோக்ஷம் பிராப்தி பிராபாம்-உன்னுடைய ஸ்தோத்ரம்
கேட்க அன்றோ கடாஷிக்கிறான் -முகுந்தன் அன்றோ -தாமதிக்காமல் -உடனே அளிக்கிறான்
தன் நிஸ்திதம் நியமிதஸ்தவ மௌலி தாம்நா
சூடிக் கொடுத்த -பாடிக் கொடுத்த –வேதங்கள் அனைத்துக்கும் வித்து –
தந்த்ரீ நிநாத மதுரைஸ்ஸ கிராம் நிகும்பை
வீணை நரம்பு ஒலி இனிமை போலே -ஸ்ரீ ஸூக்திகள் -சூடிக் கொடுத்த மாலை இனிமையால் தான் அவன் இப்படி
எங்கள் குற்றங்களை புறக்கணித்து கருணை மழை பொழிந்து
மேல் விழுந்து என்னை உங்கள் இடம் சேர்த்துக் கொள்கிறான் –
ஸாஸ்த்ர உல்லங்கனம் செய்வதிலும் -க்ருத்ய அகரணங்களும் அக்ருத்ய கரணங்களும் -செய்வதில் -சிர தீக்ஷிதர்களாக இருந்தாலும்
சூடிக் கொடுத்த மாலையாலும் பாடிக்கொடுத்த மாலையாலும் அவனை வசீகரித்து அவனுடைய நிக்ரஹங்களை மாற்றி
அனுக்ரஹங்களை பொழிய வைக்கிறாய் –
சர்வ லோக நியந்தாவையே பலாத்கரித்து -கிராம் நிகும்பை-நியாம்யன் ஆக்குகிறாய்-
—————————————————————
சோணாஸ் தரே அபி குசயோரபி துங்க பத்ரா
வாஸாம் ப்ரவாஹ நிவேஹ அபி சரஸ்வதீ த்வம்
அப்ராக்ருதைர் அபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதாபி தேவி கமி துர் தநு நர்மதா அஸி–6-
சோணாஸ் தரே அபி குசயோரபி துங்க பத்ரா
நதிகளை சொல்லி -பெயர் பொருத்தம் சொல்லி -உதடு செந்நிறம் -சோணாஸ் -சிவந்த நதி என்பர்
ஸ்தனங்கள் துங்க பத்ரா -இரண்டும் –அங்க அசைவுகள் மேல் எழுந்து துங்க பத்ரா நதி போலே –
வாஸாம் ப்ரவாஹ நிவேஹ அபி சரஸ்வதீ த்வம்
வாக்குகள் -செல்வம் -ப்ரத்யக்முகமாக –காருண்யம் இருந்தால் தான் கவி பாட முடியும்
அப்ராக்ருதைர் அபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
பிரகிருதி சம்பந்தம் இல்லா சுத்த சத்வம் -அன்றோ உம்முடைய ஸ்ரீ ஸூக்திகள் தேவி —
எம்பெருமானுக்கு உகந்தவை அன்றோ
கோதாபி தேவி கமி துர் தநு நர்மதா அஸி
இருந்தாலும் -விளையாட்டாக -உன்னுடைய கடைக் கண் பார்வையால் —
கடாக்ஷம் உன் அருளால் நம் போல்வாரை ராஷிக்கிறான் அன்றோ
அந்த நதியோ இதுவோ -முதல் -/ ஒரே நதி மற்ற நதியாக ஆகும் / எல்லாம் உன்னிடம் -கோதாவரி /
கோதா காருண்ய ரசம் –
அதரே -வாக்கில் உச்சரிக்கும் -ஸூக்திகள் தாண்டி போக மாட்டான் –
புண்ய நதிகள் பாவானத்வம் உன்னாலே அன்றோ -வாக் பிரவாகம் போலே இவை –
உன் ஸ்தோத்ரங்களாலும் பரிஹாஸ சொற்களாலும் உன் நாயகனுக்கு இனிய சுவையைப் பெருக்குகிறாய்-
சோனா துங்க பத்ரா சரஸ்வதி விரஜை கோதாவரி நர்மதா -ஆறு நதிகளின் பெயர்களையும் சமத்காரமாக கோதாவுக்கு சாம்யம்
சோனா நதி -சிவந்த தண்ணீர் -கோண்டவனம் தொடங்கி பாடலிபுத்ராவில் கங்கையுடன் கலக்கும்
சிகப்பு -நாச்சியார் திருமொழி -காதல் அபி நிவேசம் காட்டும் –
துங்க பத்ரா -துங்க -உயர்ந்து சிறந்த /பத்ரம் -கர்ணேபி ஸ்ருணாயாம -செழிப்பு ஆனந்தம் மங்களம்
பத்ரம் பத்ரம் பகவான் பூயஸே மங்களாயா
இதுவே ஞான பாலாறு -நமக்கு
சரஸ்வதி -அந்தர்வாஹினி -வேகவதி -வெக்கா –
சரஸ்வதி என்று ஆயுர்வேத ஜோதிஷ்மதி செடிக்கும் பெயர்
விரஜா-ராஜஸாதிகள் தூசிகள் இல்லாமை -சுத்த சத்வ மயம் -ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே-அகர்ம வஸ்யர்-வாசனா ருசிகளையும் போக்கி அருளும்
கோதாவரி -வரிவாஸ் வரிமான்-ஐஸ்வர்யம் ஆனந்தம் மூலம் நம்மை ஐஸ்வர்யவான்களாகவும் ஆனந்திப்பவர்களாகவும் ஆக்கி அருளும்
நர்மதா நதி -நர்மதா வாக் பரிகாச சொல்
திரு உதடுகள் -திரு மார்பகம் -வாக் -முதல் மூன்றும் -பிராகிருத ரசம் அடுத்த மூன்றும் அப்ராக்ருதம்
————————————————–
வல்மீ கத ஸ்ரவணதோ வஸூ தாத்மநஸ்தே
ஜாதோ பபூவ ஸ முனி கவி ஸார்வ பவ்ம
கோதே கிமத்புதம் இதம் யதமீ ஸ்வ தந்தே
வக்த்தாரவிந்த மகரந்த நிபா ப்ரபந்தா –7-
வல்மீ கத ஸ்ரவணதோ வஸூ தாத்மநஸ்தே–ஜாதோ பபூவ ஸ முனி கவி ஸார்வ பவ்ம –
வால்மீகி உத்தம கவி -வாக்குக்காக பிரார்த்திப்பார்கள் -தேவ நாயாக ஸ்துதி -பாதுகா சகஸ்ரம் -நீரும் -பிரார்த்தித்தீரே
கவி பிரதம -கவிநாம் ஆதாரண காளி தாசரும் புகழ்ந்து —
என்னிடம் வாக் பிக்ஷை கேட்டு –அப்பொழுதும் எல்லாம் கூப்பிட வில்லையே –
கோதே கிமத்புதம் இதம் யதமீ ஸ்வ தந்தே
வல் மீகம் உன் செவி தானே -பூமா தேவி உன் ஒரு அம்சம் தானே -ஸ்ரோத்ரம் பிறந்தவர் என்றே முன்பு கொண்டாடினேன்
அதனாலே பெருமாள் இன்புற்று கேட்டு அருளினார் -ராமாயணம் காவ்யம் மூலம் -அம்சத்துக்குள் அம்சி அடங்குமா
பெரிய பிராட்டி -நிரதிசய ப்ரீதியால் உன் இடம் பிறந்து -இச்சா வசத்தால் அம்சம் அம்சி பாவம் மாறினதே –
ஆண் பிள்ளை தாய் ஸ்வபாவம் என்பதாலே வால்மீகி -சிரேஷ்டர் -இதனாலே ஆனார் -இதில் என்ன அத்புதம் இருக்க முடியும்
வக்த்தாரவிந்த மகரந்த நிபா ப்ரபந்தா
தாமரையில் பிறந்த தேன் போன்ற இனிமை உள்ள இந்த கோதா ஸ்துதி -இதில் என்ன அத்புதம் இருக்க முடியும் -என்றவாறு –
—————————————————
போக்தும் தவ ப்ரிய தர்மம் பவதீய கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்தா
உச்சாவ சைர் விரஹ சங்க மஜை ருதந்தை
சிருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா –8–
போக்தும் தவ ப்ரிய தர்மம் பவதீய கோதே –பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்தா
சம்வாதம் தொடருகிறது -காதல் மிகுந்த நாயகனை
எங்கள் பிரணய ரசம் -ரகுவரன் பக்தி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்தா அபஹாரிணாம் –
பெண் உடை உடுத்து அவாவும் -அத்யர்த்தம் பிரியதமம் –
உச்சாவ சைர் விரஹ சங்க மஜை ருதந்தை-சிருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா
அபிநவச தசாவதாரம் ஆழ்வார்கள் இடம் பெற்ற பாவனை -பகு பிரகாரங்களால் -சம்ச்லேஷம் விஸ்லேஷம்
ப்ரத்யக்ஷமாக வர்ணித்தார்
தூது விடுதல் மடல் ஊர்தல் -தாய் தோழீ தலைமகள் போன்ற பல அவஸ்தைகளில் அனுபவித்தார்கள்
பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை –
அவரே எப்படி பிரணய ரசம் பாடி அருளுகிறார் –
வந்து மண்ணும் மணமும் மணமும் கொண்மின் எங்களையும் கூப்பிட்டார் -ஸ பத்தினிகளாக வரச் சொல்லி –
அதே வழியிலே நானும்
—————————————————-
மாத சமுத்தித வதீ மதி விஷ்ணு சித்தம்
விஸ்வோ பஜீவ்ய மம்ருதம் வசசா துஹா நாம்
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மன்யாம்
சந்த பயோதி துஹிது சஹஜாம் விதுஸ்த்வாம் –9–
மாத சமுத்தித வதீ மதி விஷ்ணு சித்தம் -விஸ்வோ பஜீவ்ய மம்ருதம் வசசா துஹா நாம்
தாயே சம்போதிக்கிறார் –விஷ்ணு சித்தர் -மூலம் -சகல ஜகத்தும் உய்ய -தாப த்ரயம் போக்க -அன்றோ -பட்டர்பிரான் கோதை –
அபிமானத்தால் எங்கள் குலப் பெண் -நீயோ தாய் -அனைவருக்கும் -உன் அபிமானத்தால் பிதா –
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மன்யாம்-சந்த பயோதி துஹிது சஹஜாம் விதுஸ்த்வாம்
சந்திரன் -போலவே -பெரிய பிராட்டியார் உடன் பிறந்தவள் -மதி முக மடந்தை –
தேன் போன்ற பாசுரங்கள் –அத்யந்த சகோதரி
நிழல் போல அன்றோ -ஸ்ரேஷ்டங்கள் எல்லாம் சேர்ந்து அன்றோ தேவரீர் திருவவதாரம் –
சந்த்ரமா மனசோ ஜாதா -மனசில் இருந்து வந்தது போலே
அவன் திரு உள்ளம் படி ஆவிர்பவித்து -அவன் உகந்த உருவம் அன்றோ நீர் –
விஷ்ணு சித்தம் -அவன் திரு உள்ளம் படி அன்றோ நீர் அவதரித்தீர்
விஷ்ணு சித்தர் மூலம் நீர் – சந்திரன் கூடப் பிறந்த பெரிய பிராட்டியார் உடன் கூடப் பிறந்தவள் அன்றோ நீயும் –
உப்புச் சாரான அமுதம் -தேவ உப ஜீவியம் -வசசா துஹா நாம்-உமது பிரபந்த மதமோ லோக உப ஜீவியம் –
அமிருத சஹஜை-மஹா லஷ்மீ சஹஜை –
——————————————————-
தாதஸ்து தே மது பித ஸ்துதி லேச வஸ்யாத்
கர்ணாம்ருதை ஸ்துதி சதைர நவாப்த பூர்வம்
த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் பிரசாதம் –10-
தாதஸ்து தே மது பித ஸ்துதி லேச வஸ்யாத் -கர்ணாம்ருதை ஸ்துதி சதைர நவாப்த பூர்வம்
உன்னுடைய தகப்பனாரோ என்னில் -செவிக்கு இனிய பாசுரங்கள் பாடும் படி –
அபிமான தாதைகள் எல்லா ஆழ்வார்களும்
இவர் மட்டுமே பெரியாழ்வார் -அபிநவ தசாவதாரங்கள் -தமிழ் வேத த்ருஷ்டாக்கள் –
மஹா பதம் அனைவருக்கும் இருந்தாலும் -இவருக்கு மஹத்தர பதம் –
த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹருத்ய மாலாம் -லேபே மஹத்தர பதாநுகுணம் பிரசாதம்
அதி மேன்மைக்கு ஒத்த அனுக்ரஹம் பெற்றார் -கேஸ நறு மனம் –சூடிக் கொடுத்த மாலை சமர்ப்பித்து அன்றோ அடைந்தார்
வேதம் தமிழ் செய்த மஹாதிகள் மற்றவர்கள் -இவர் அன்றோ உத்தர மஹத் –
ஐஞ்சு குடிக்கு சந்ததி நீ -பொங்கும் பரிவினில் பல்லாண்டு பாடும் படி அன்றோ நீர் அனுக்ரஹித்தீர்
சூடிக் கொடுத்த மாலையின் மகிமையால் அன்றோ -கந்தத்வாராம் -பெரிய பிராட்டி அம்சம் அன்றோ இவளும் –
—————————————————–
திக் தக்ஷிணா அபி பதி பக்த்ரிம புண்ய லப்யாத்
சர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்
யத்ரைவ ரங்க பதிநா பஹு மாந பூர்வம்
நித்ராளுநா அபி நியதம் நிஹிதா கடாஷா–11-
திக் தக்ஷிணா அபி பதி பக்த்ரிம புண்ய லப்யாத்-சர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத்
தெற்கு திக்கே -உன் அவதாரத்தால் -உத்தர திக்கு போலே மென்மையாக ஆனதே -மேலும்
கீழே பெரியாழ்வார் -சூடிக் கொடுத்த மாலை சமர்ப்பித்ததால் நம்மாழ்வாரை விட சிரேஷ்டர் என்றார்
இங்கு திக்கும் சர்வோத்தரம் ஆனது என்கிறார் -உன் சம்பந்தத்தால் –
யத்ரைவ ரங்க பதிநா பஹு மாந பூர்வம் -நித்ராளுநா அபி நியதம் நிஹிதா கடாஷா
யோக நித்திரை செய்து அருளும் ஸ்ரீ ரெங்க நாதனும் -பிரேம ரூபியான உன்னையே கடாக்ஷித்து
தெற்கு நோக்கி அன்றோ உள்ளான் —
உத்தர என்ற சொல் வட திசையையும் மேம் பட்டதையும் குறிக்கும் –
தென் திசை வட திசை யாயிற்று என்ற முரண் பாட்டையும் தென் திசை மேம்பட்டது என்று
முரண்பாடு ஒழி தலையையும் அறியலாம்
—————————————————–
ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதா வரீ ஜகதிதம் பயசா பு நீதே
யஸ்யாம் சமேத்ய ஸமயேஷூ சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருத யோ அபி பவந்தி புண்யா –12–
ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்–கோதா வரீ ஜகதிதம் பயசா பு நீதே
தேவி உம்முடைய திரு நாம வைபவத்தாலே -கோதா -பெயரைக் கொண்டதாலேயே -பாவனத்வம்-இந்த உலகில்
தென் திக்கால் பெருமை முன்பு சொல்லி
இதில் திரு நாமம் -வைபவம் -முன்பு சீதா பிராட்டிக்கு உதவாமல் பெற்ற பாவம் தீர்ந்ததே
யஸ்யாம் சமேத்ய ஸமயேஷூ சிரம் நிவாஸாத் -பாகீரதீ ப்ரப்ருத யோ அபி பவந்தி புண்யா
புண்ய காலங்களில் கலந்து புண்யம் ஆகும் மற்ற நதிகள் -கங்கை போல்வன கூட–
ஒருவர் பெயரை மற்று ஒருவர் சூட்டிக் கொள்வது சேஷ பூதன் ஆனதற்கு சிஹ்னம் அன்றோ
உன் திரு நாமம் சூட்டிக் கொண்டதால் பெற்ற பெருமை அன்றோ கோதாவரிக்கு என்றவாறு
——————————————————
நாகே சய ஸூதநு பஷிரத கதம் தே
ஜாத ஸ்வயம் வர பதி புருஷ புராண
ஏவம் விதா சமுசிதம் ப்ரணயம் பவத்யா
சந்தரசயந்தி பரிஹாஸ கிர சகீ நாம் –13–
நாகே சய ஸூதநு பஷிரத கதம் தே
ஸூ தது –லாவண்யம் -திரு அநந்த ஆழ்வான் படுக்கை -பெரிய திருவடி வாஹனம் –
விஷ பாம்பு –பறக்கும் பறவை -மெத்தென்ற பஞ்ச சயனம் நீ எதிர் பார்க்க –
ஜாத ஸ்வயம் வர பதி புருஷ புராண
தானே விரும்பி கைப் பிடித்த கணவன் -புராண புருஷன் -யுவதி நீ -இவனுக்கு வயசே தெரியாதே
ஸ்ரவணமா ஹஸ்தமா புனர்வஸுவா ரேவதியா ரோஹிணியா-ஜாதகமே இல்லையே -முந்தைக்கும் முந்தை
ஏவம் விதா சமுசிதம் ப்ரணயம் பவத்யா-சந்தரசயந்தி பரிஹாஸ கிர சகீ நாம்
இப்படி கேலி பேச -விருப்பம் காட்டி -நிந்தா ஸ்துதி அணி —ஆர்க்கும் என் நோய் அறியலாகாது
கார்க் கடல் வண்ணன் கை பிடித்தால் போகும் -கண்ணன் என்னும் கரும் தெய்வம் —
வீசுமினே –வ்யாஜ ஸ்துதி -என்றுமாம் –
பரிஹாஸப் பேச்சா பெருமைப் பேச்சா -தோழிகளின் பேச்சுக்கள் நாயக நாயகிகளின் பிரணய ரசத்தை வெளிக் காட்டும்
பிறர் அஞ்சும் கொடிய பாம்பில் அன்றோ படுபவர் –
பறவை மேல் உன்னையும் தூக்கிக் கொண்டு ஆகாசத்தில் பறப்பவர் அன்றோ –
மிக பழைமையான மூத்தவர் அன்றோ -என்று பரிகாசம்
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் செய்பவனாய்
நறு மணம் அழகு குளிர்ச்சி விகாசம் உயர்வு மென்மை போன்ற சிறப்புக்களை கொண்ட
ஆதி சேஷன் மேல் அன்றோ பள்ளி கொண்டவர்
வேத ஸ்வரூபனாய் சகல சக்திமானான பெரிய திருவடி அன்றோ வாஹனம்
ப்ரஹ்மாதி தேவர்களாலும் அரிய முடியாத பர ப்ரஹ்மம் அன்றோ உன் மணாளன் -இப்படியுமாம்
———————————————————-
த்வத் புக்த மால்ய ஸூரபீக்ருத சாரு மௌளே
ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம்
பத் யுஸ்த வேஸ்வரி மித பிரதி காத லோலா
பர்ஹாத பத்ர ருசிமாரஸ யந்தி ப்ருங்கா–14-
த்வத் புக்த மால்ய ஸூரபீக்ருத சாரு மௌளே–ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம்
கரு வண்டுகள் குடையாம்-சென்றால் குடையாம் -பிரதம சேஷி -அவன் இல்லை –
திரு மார்பில் -திருத் துழாய் -வண்டுகள் -சூடிக் கொடுத்த மாலை -சூடினான் பின்பு
பத் யுஸ்த வேஸ்வரி மித பிரதி காத லோலா –பர்ஹாத பத்ர ருசிமாரஸ யந்தி ப்ருங்கா
விட்டு வண்டுகள் கிளம்ப -சிரசில் கூடி வட்டம் இட்டு -ஈஸ்வரி -இதில் -விஷ்ணு பத்னி அன்றோ –
மயில் தோகை காந்தி தேஜஸ் போலே அன்றோ வண்டுகள் உள்ளன -ஆசைப் பட்டுக் குடையாக இருந்தனவே
கூடவே இவையும் போனதாம் என்றுமாம் -மகரந்தம் சேர்க்கை அதிகம் அன்றோ இவள் சூடின பின்பு –
ஆரவாரம் உடன் கலந்து -தேனை பருகி மயங்கி -சிரசில் கூட்டமாக குடை போலே —
மணமகன் – குடை -மாலை -விரதம் அனுஷ்ட்டிக்கும் முறை -இவற்றை அறிவிக்கும் ஸ்லோகம்
———————————————————
ஆமோத வத்யபி சதா ஹ்ருதயம் கமா அபி
ராகான்விதா அபி லலிதா அபி குணோத்தரா அபி
மௌலி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ –15–
ஆமோத வத்யபி சதா ஹ்ருதயம் கமா அபி
பெண் ஆனவள் -சந்தோஷமாக இருந்தாலும் -ஹிருதயம் விட்டு பிரியாமல் இருந்தாலும் கூட
ராகான்விதா அபி லலிதா அபி குணோத்தரா அபி
ஆசை -வனமாலை பெண்ணுக்கும் இருந்தாலும் -இனிமையாக -மெம்னப்பட்ட குணங்கள் இருந்தாலும்
மௌலி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா
நீ சூடிக் கொடுத்த மாலையால்
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ —
சூடிக் களைந்த மாலை பெருமை -மீண்டும் -அருளி –
வனமாலை நித்யம் -சூடி –தள்ளி -முன்னே வந்ததே –
திரு மார்பில் -மிருத -மார்த்வம் இருந்தாலும் கூட -நல்ல கயிற்றால் புனைந்த திருத் துழாய் மாலை -இருந்தாலும் கூட
திரு முடியை நீ அடைந்த பின்பு -சூடிக் கொடுத்த மாலையை சென்னியில் தாங்கி-
துளசி மாலை கோதா நீயே -என்றுமாம் -ப்ரீதிக்கு இருவரும் பாத்திரம்
திருமணத்துக்கு பூர்வ அங்கமான மாலை மாற்றுதல் பற்றிய ஸ்லோகம்
ஐந்து அபி சப்தங்கள் வைஜயந்தி மாலையின் ஸ்ரேஷ்டம் பற்றி –
வைஜயந்தி வனமாலை -நறு மணம் -செம்மை -மென்மை -ஆகர்ஷகம் -இவை இருந்தாலும் திரு மார்பிலே தானே உள்ளது –
தேவரீர் சூடிக் கொடுத்த மாலையைப் போலே திரு முடியில் சிரஸா வஹிக்கப் பட வில்லையே
இத்தால் பிரணயி-மெல்லியளாய் -நல் குணங்களை யுடைய -மனதுக்கு உகந்த நாயகியால்
செல்வம் இத்யாதியால் செருக்கு கொண்ட மற்றொரு பெண் தாழ்த்தப் படுவதை அருளிச் செய்தவாறு –
——————————————————
த்வன் மௌலி தாமநி விபோ சிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித சபீதி ரஸா ப்ரமோதா
மஜ்ஜூ ஸ்வநா மது லிஹோ விதது ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் –16-
த்வன் மௌலி தாமநி விபோ சிரஸா க்ருஹீதே -ஸ்வச் சந்த கல்பித சபீதி ரஸா ப்ரமோதா
திரு முடியில் உள்ள சூடி கொடுத்த மாலையை சூடி -சேர்த்தி -தேனை பருகும் வண்டுகள் ரீங்காரம் -கருடன் போலே வீசியும்
திரு அனந்தாழ்வான் போலே குடையாகவும் முன் பார்த்தோம் –
அவற்றால் திருப்தி அடையாத வண்டுகள் இதில் மங்கள வாத்யம் –
மஜ்ஜூ ஸ்வநா மது லிஹோ விதது ஸ்வயம் தே -ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம்
மங்கள ஒலி –இனிய குரல் -பேரிகை கோஷம் -இதுவே -ஒன்றுடன் ஓன்று களித்து பேசிக் கொண்டு –
நாம் பெற்ற பாக்யம் என்று
தேனை பருகினால் கைங்கர்யத்தில் குறியாக -இருந்தனவே –
விதது –
மற்றவர்களுக்காக செய்த கைங்கர்யம் என்றபடி –
திருமணத்தில் விருந்தும் வாத்ய கோஷமும் சொன்னவாறு –
யமேவை ஏஷ விவ்ருணுதே -வேதம் பிரியதம ஏவ ஹி வரணியோ பபதி
யஸ்யாம் நிரதிசய பிரிய -ஸ்ரீ எம்பெருமானார்
பிரமரங்கள் பிரமம் இல்லாமல் ஸம்ப்ரம்மத்தோடு செய்த சேவை அன்றோ இது
மஞ்சுஸ்வனா -மதுலிஹோ -என்று மங்கள துரிய கோஷங்கள் அருளிச் செய்த ஸ்ரீ நம்மாழ்வாரையும் மற்றைய ஆழ்வார்களும் சொன்னபடி –
———————————————-
விஸ்வாயமான ரஜசா கமலேந நாபவ்
வஷஸ் தலே ஸ கமலா ஸ்தன சந்தநேந
ஆமோதி தோ அபி நிகமைர்வி புரங்க்ரி யுக்மே
தத்தே நதேந சிரஸா தவ மௌலி மாலாம் –17–
விஸ்வாயமான ரஜசா கமலேந நாபவ்
நாபிக் கமலம் –பரிமளம் மிக்கு
வஷஸ் தலே ஸ கமலா ஸ்தன சந்தநேந
பெரிய பிராட்டியார் -சந்தன நறு மணம் -நித்ய வாசம் -அதனால் வந்த பரிமளம் –
மஹிமை தன்னாலும் சொல்ல முடியாத –
ஆமோதி தோ அபி நிகமைர்வி புரங்க்ரி யுக்மே
வேதங்களில் -திருவடியில் சேர்ந்த கந்தம் –
தத்தே நதேந சிரஸா தவ மௌலி மாலாம்
சூடிக் கொடுத்த மாலை கந்தம் பெருமை — உகந்து – திரு முடியில் தரித்து –
அந்தர்பகிஸ்த-சர்வ வியாபி -இப்படி படுவதே –ஏகாந்த பக்தி ஸ்ரத்தைக்கு ஈடு இல்லையே —
சிரஸாக அன்றோ தங்குவான் –
உந்திக் கமலத்தின் ஒவ் ஒரு துகளும் உலகமாய் மாறும் தன்மை –
திரு மார்பில் பெரிய பிராட்டியார் திரு முலைத் தடங்களில் உள்ள சந்தன நறுமணம் வீச
வேதங்கள் அருளிச் செயல்கள் திருவடிகளின் பெருமை பேசி அவற்றின் பரிமளம் நிறைந்து இருக்க
இவற்றாலும் கூட திருப்தி அடையாத அரங்கன் உமது சூடிக் கொடுத்த மாலையை சிரஸா வஹித்து மகிழ்கிறான் –
—————————————————–
சூடா பதேன பரிக்ருஹ்ய தவோ த்தரீயம்
மாலா மபி த்வ தள கைரதி வாஸ்ய தத்தாம்
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸுபாக்ய சம்பதபிஷேக மஹாதிகாரம் –18–
சூடா பதேன பரிக்ருஹ்ய தவோ த்தரீயம் -மாலா மபி த்வ தள கைரதி வாஸ்ய தத்தாம்
உத்தரீயம் -கச்சு -குழலில் சூடி மணம் வூட்டி
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே -ஸுபாக்ய சம்பதபிஷேக மஹாதிகாரம் —
ஸ்ரீ ரெங்க நாதன் சூடிக் கொடுத்த மாலைக்கு ஏங்கி –
மங்களம் -ஐஸ்வர்யம் -முடி சூடும் படி -இதனாலேயே –
அரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே –
பரிவட்டம் -ஆண்டாள் கச்சம் மாலை சாத்தி -ஸர்வேச்வரத்வம் -இதனாலே -தான்
திரு அபிஷேகம் கழற்றி இவற்றை சாத்திக் கொள்கிறான் –
——————————————————
துங்கைர க்ருத்ரிம சிர ஸ்வய முத்த மாங்கை
யம் சர்வ கந்த இதி சாதர முத்வ ஹந்தி
ஆமோத மன்ய மதி கச்சதி மாலி காபி
ஸோ அபி த்வ தீய குடி லாளக வாஸி தாபி –19-
துங்கைர க்ருத்ரிம க்ருஹ ஸ்வய முத்த மாங்கை
யாராலும் உருவாக்காத வேதம் -உபநிஷத் -ஸ்வயம் -சிரஸ்-வைத்து
யம் சர்வ கந்த இதி சாதர முத்வ ஹந்தி
சர்வ கந்த சர்வ ரஸ –அன்போடு கொண்டாடும் -வேத பெண்மணி -மீண்டும் மீண்டும் சொல்லி –
ஆமோத மன்ய மதி கச்சதி மாலி காபி
வாசனை அடைந்து -இத்தை எதிர்பார்த்து -வேறே வாசனைக்கு எதிர் பார்த்து –எதனால்
ஸோ அபி த்வ தீய குடி லாளக வாஸி தாபி
அலை அலையாக சுருண்ட கேசங்கள் -மணமூட்டப் பட்ட -மாலைகள் -ஆசைப்பட்டு -அவாப்த ஸமஸ்த காமன்
ஸ்வரூபம் அழிய மாறியும் -எதிர் பார்த்து உள்ளான் —
உன் சூடிக் கொடுத்த மாலையை பெற்றதும் சர்வ கந்தன் ஆனதாக உள்ளான் –
——————————————————
தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்த மாங்கே
த்வன் மௌலி மால்ய பர சம்பரணேந பூய
இந்தீவர ஸ்ரஜமிவா தததி த்வதீயாநி
ஆகே கராணி பஹூமான விலோசிதாநி –20-
மாலை சூடிய மாலையைப் பார்ப்பதும் மற்றொரு மாலை
உன்னுடைய திரு முடியில் உள்ள மாலைகளை சிரஸா வகிப்பதால் பாக்யம் பெற்ற சர்வ லோக பிதா –
உன்னுடைய அரைக்கண் கடாக்ஷத்தால் மீண்டும் கரு நெய்தல் மாலையைச் சூடிக் கொள்கிறான்
——————————————————-
ரெங்கேஸ்வ ரஸ்ய தவ ஸ ப்ரணாயநு பந்தாத்
அந்யோன்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டு வந்த
வாசால யந்தி வஸூதே ரஸி காஸ்த்ரி லோகீம்
ந்யூநாதி கத்வ சமதா விஷயைர்விவாதை –21-
ரெங்கேஸ்வ ரஸ்ய தவ ஸ ப்ரணாயநு பந்தாத்
ஸ்னேக தொடர்பு
அந்யோன்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டு வந்த
மாலை மாற்றும் உத்சவம் இன்றும் மகிழ்கிறோம் -பெருமை –
வாசால யந்தி வஸூதே ரஸி காஸ்த்ரி லோகீம்
பூமா தேவி -சாஸ்திரஞ்ஞார் -மூன்று லோகங்களிலும்
ந்யூநாதி கத்வ சமதா விஷயைர்விவாதை —
சாம்யம் பற்றி விவாதிக்கும் —
14 -தொடங்கி -7 – மாலை பற்றி பேசி –அரங்கனையும் ஆண்டாளையும் –பக்ஷ பாதிகள் –
நங்கையை காணும் தோறும் நம்பிக்கு ஆயிரம் கண்கள் வேணுமே
திரு வுக்கும் திருவாகிய செல்வா -ஆண்டவனை ஆட்க்கொண்டதால் ஆண்டாள் என்பர்
மத்தியஸ்தர் -அந்யோன்ய பிரணயித்தவம் பேசி -சூடிக் கொடுத்த மாலை காட்டுமே –
ஒண் டொடியாள் மலர் மகளும் -நீயும் நிலா நிற்க
கடகர்-தேசிகர் -அன்யோன்யம் பேசி -ஸ்ரீ விசிஷ்டம் நம் சித்தாந்தம் –
பாஸ்கரன் பிரபாயதா-அன்றோ -பரஸ்பரம் ஈடுபாடு அன்யோன்யம் –
மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் -திருமாலை மாற்றி பாப பூயிஷ்டமான நம்மையும் அங்கீகரிக்கச் செய்கிறாள் –
பிரணயித்வ அதிசயம் -உன்பால் கௌரவத்தைக் கண்டு அவனிலும் மேம்பட்டவளாகவும்
பத்னீ ஸ்தானத்தால் அவனுக்கு வசப்பட்டு இருப்பவளாயும் -மத்யஸ்தர் சாம்யம் என்றும் ஆர்வம் மிக்கு வாதம் செய்கிறார்கள்
——————————————————–
தூர்வா தள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசநா ருசிரயா ஸ ருசேந்திராயா
ஆஸீத நுஜ் ஜித சிகாவள கண்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரி காத்ரம் –22–
தூர்வா தள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா–கோரோசநா ருசிரயா ஸ ருசேந்திராயா
திரு மேனி -வர்ண விசேஷம் –பெரிய பிராட்டியார் -பொன்னிறம் -பச்சை மா மலை மேனி
கோதா சேர்ந்து இருப்பதால் மயில் கழுத்து போலே
ஆஸீத நுஜ் ஜித சிகாவள கண்ட சோபம்–மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரி காத்ரம் —
மங்களம் வழங்கி -விரோதி நிரசனம் -நீங்காத சோபை -சிகா வளம் -மயில் -கரிய திருமேனியில் இந்த வர்ணங்கள் பரவி –
சேர்த்தி அழகில் மயங்கி அருளிச் செய்கிறார் –
மஹேஸ்வரம் பர்வத ராஜ புத்ரி -அனுஜித -விட்டு பிரியாத சேர்த்தி
நீல கண்டருக்கு கழுத்து மட்டும் நீலம் -மயிலுக்கு இப்படி கழுத்தில் மட்டும்
இங்கு ஸர்வதா நீலம் -சரீரம் முழுவதும் -சிவ -சப்தம் மங்களம் -நித்யம் அஞ்ஞானம் நிக்ரஹம் பிராட்டி
—————————————————–
அர்ச்சயம் சமர்ச்சய நியமைர் நிகம ப்ரஸூநை
நாதம் த்வயா கமலயா ஸ மேயி வாம்சம்
மாதஸ் சிரம் நிரவிசன் நிஜமாதி ராஜ்யம்
மான்யா மநு ப்ரப்ருதயோ அபி மஹீஷி தஸ்தே –23-
ஸூர்ய குலத்தில் மனு மாந்தாதா – மன்னர்கள் கூட தேவரீரும் பெரிய பிராட்டியாரும் சேர்ந்து இருந்த உன் நாயகனை
ஆகமங்கள் படி புஷ்பாதி உபகரணங்களால் ஆராதித்து தங்கள் ஆட்சியை நன்கு நடத்த உங்கள் பிரசாதம் பெற்றார்கள்
அஹிம்சை -சத்யம் -ப்ரஹ்மசர்யம் -சவ்சம் -தவம் -போன்ற புஷ்பங்கள் என்றுமாம் –
அர்ச்சயம் சமர்ச்சய நியமை-
அர்ச்சயம் -அர்ச்சிதோ தேவ பிரியதாம் மே ஜனார்தனா -அர்ச்சா பெருமாளுக்கு பக்தி பூர்வகமாக அர்ச்சனை
செய்ய வேண்டும் நிகம ப்ரஸூமை – அஹிம்சா பிரதம புஷபம் இத்யாதி
நாதம் த்வயா கமலயா ஸ மேயி வாம்சம்-ப்ரிய பதி முதலில் ஸ்ரீ யபதி பின்பு –
ஹ்ரீச்ச தே லஷ்மீச் சா பத்ந்யோ –ஸ்ருதி போலே –
ஆதி ராஜ்யம்-உனது அனுக்ரஹத்தாலே அரசர்களும் சக்ரவர்திகளும் -ஸர்வேஸ்வரத்வமும்
அநிதர சரணானாம் ஆதி ராஜ்ய அபி ஷிஞ்சேத் சமித விமத பக்ஷ சார்ங்க தனு வானுகம்ப –தயா சதக ஸ்லோகம்
—————————————————-
ஆர்த்ரா பரா திறி ஜநே அப்ய பிரஷணார்த்தம்
ரங்கேஸ்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே
பார்ஸ்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ராயேண தேவி வதனம் பரி வர்த்திதம் ஸ்யாத் –24–
தவறுகள் பல செய்து வருந்தினாலும் -ந கச்சின் ந அபராத்யதி என்று அருளிச் செய்யும் பெரிய பிராட்டியாரும்
தேவரீருக்கு இரண்டு பக்கமும் பரிந்து அருளிச் செய்யா விட்டால் எங்களுக்கு உஜ்ஜீவிக்க வழி இல்லையே
—————————————————-
கோதே குணைரப நயன் ப்ரணதா பராதாந்
ப்ரூஷேப ஏவ தவ போக ரஸாநு கூல
கர்மாநுபந்தி பல தான ரதஸ்ய பர்த்து
ஸ்வாதந்தர்ய துர்வ்யசன மர்ம பிதா நிதானம் –25–
உனது குணங்களால் ஆஸ்ரிதர் குற்றங்களைக் காணாக் கண் இட்டு இருக்க உசித உக்திகளாலும்
போக ரசத்துக்கு சேஷ்டிதங்கள்-புருவ நெறிப்பு இத்யாதி மூலம் அரங்கனை
உன் வசத்துக்கு வைத்து ரக்ஷித்து அருளுகிறாய்
————————————————–
ரங்கே தடித்குண வதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம் புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸூ வ்ருஷ்ட்யா
தவ்ர்கத்தய துர்விஷ வி நாச ஸூ தா நதீம் த்வாம்
சந்த பிரபத்ய சமயந்த்ய சிரேண தாபன்–26–
பெரிய பிராட்டியாரான மின்னல் கொடி உள்ள அரங்கனாகிற காள மேகத்தை
கருணா வர்ஷம் மூலம் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஸமஸ்த உலகோரும் சம்சாரம் ஆகிய விஷத்தை நிரசிக்க
அமிருத நதியான தேவரீரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கிறார்கள்
அமுத ஆற்றின் வெள்ளம் ஆகிய உன் பாசுரங்களில் ஆழ்ந்து அனுபவித்து
தாப த்ரயங்களைப் போக்கிக் கொள்கிறார்கள்
—————————————————–
ஜாதா பராதமபி மா மநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா
வாத்சல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதரா அபி –27–
அகில ஜெகன் மாதா -அஸ்மாத் மாதா -ஸ்தந்தயா பிரஜை பால் குடிக்கும் பொழுது முலையைக் கடித்தாலும்
கடிந்து கொள்ளாமல் போஷிக்கும் தாய் போலே அடியோங்களின் குற்றங்களை க்ஷமித்து அருள்கிறாய் –
——————————————————
சதமக மணி நீலா சாரு கல்ஹார ஹஸ்தா
ஸ்தன பர நமிதாங்கீ சாந்த்ர வாத்சல்ய சிந்து
அளக விநிஹிதாபி ஸ்ரக் பிராக்ருஷ்ட நாதா
விலசது ஹ்ருதி கோதா விஷ்ணு சித்தாத் மஜா ந–28-
இந்திர நீல மணி போன்ற திவ்ய மங்கள விக்ரஹம் -செங்கழுநீர் பூவைத் திருக் கையில் ஏந்தி
திருக் கொங்கைகள் நிறைந்த திரு மேனி -அன்புக்கடலான -பெரியாழ்வார் திருமகளான
சூடிக் கொடுத்த நாச்சியார் நம் உள்ளத்தில் அரங்கனுடன் நித்தியமாக சேவை சாதித்து அருளட்டும்
கரு முகில் வண்ணம் -அவனது ஸம்ஸ்லேஷம் அடியாகவே –
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்யா புங்க்தே கோதா தஸ்யை நாம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய –
கட்டுண்ணப் பண்ணியவள் அன்றோ
சேர்த்தியுடன் நம் ஹ்ருதயத்தில் எழுந்து அருள பிரார்த்தனை –
ஸ்ரீ கோதா தேவியின் த்யான ஸ்லோகம்
ஸ்ரீ தேசிகன் தனது ஸ்தோத்திரங்கள் எல்லாம் நமக்கு உஜ்ஜீவன அர்த்தமாக அனுசந்திக்க த்யான ஸ்லோகம் அமைத்து அருளுவார்
ஸ்ரீ ஸ்துதி -கல்யாணாம் அவிகல நிதி
ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -வியாகிய முத்ராம்
ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸ்யாத் -வ்யாதந்வனா
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் -இச்சா மீனா விஹார கச்சப-போல்வன உண்டே
——————————————————–
இதி விகசித பக்தே ருத்திதாம் வேங்கடேசாத்
பஹு குண ரமணீயாம் வக்தி கோதா ஸ்துதிம் ய
ஸ பவதி பஹு மான்ய ஸ்ரீ மதோ ரங்க பர்த்து
சரண கமல சேவாம் ஸாஸ்வதீ மப்யு பைஷ்யன் –29-
விகசிகத பக்தியை உடைய ஸ்ரீ வேங்கடேச கவி அருளிச் செய்த இந்த ஸ்ரீ கோதா ஸ்துதியை அப்யசிப்பார்
பெரிய பிராட்டியார் உடன் கூடிய பெரிய பெருமாள் திருவடித் தாமரைகளில்
நித்ய கைங்கர்யம் செய்யப் பெற்று பெரிய பெருமாளால் உகக்கப் படுவர்
ஸ்ரீ கோதா திருக்கரத்தில் உள்ள செங்கழு நீர் புஷ்பம் போலே விகசித பக்தி உடைய ஸ்வாமி
வக்தி கோதா ஸ்துதிம்-இங்கு இப்பரிசு உரைப்பார் அங்கு அப்பறை பெற்றவாறு பெறுவாரே-
கிம் சாஸ்திரம் கிம் காவ்யா ரத்னம் அதவ பக்தி பிரதான ஸ்துதி
கிம் வா நாடகம் அந்ய தேவா ரசனம் பவ்ராணிகி கிம் கதா ஆச்சர்ய மாலா சேமுஷி விலஸிதம்
கிம் வா ரஹஸ்ய த்ரயம் கோதா கீதம் இதம் படந்தி புவி யே தே தன்யதன்யா ஜனா
இது கொண்டே செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
——————————————–
ஸ்ரீ கோதாஸ்துதியின் சொற்சுவையும் பொருட்சுவையும் அறிந்து அநுபவித்தவர் களுக்கே பூரணமாகத் தெரியும்.
ஸ்ரீ ஆண்டாளுடைய வ்ருத்தாந்தம் எவ்வாறு மனத்தைக் கவர வல்லதோ அவ்வாறு ரம்யமாய்
வஸந்த திலக வ்ருத்தத்தில் படனஞ்செய்வதற்கும் பாடுவதற்கும் இன்பமாய் கோதையினுடைய மணிச்சிலம்பின் மிழற்றல் போல்
பரந்தாமனுக்கும் நமக்கும் வெகு மனோஜ்ஞமாய் அமைந்துள்ளது இத் தோத்திரப் பாமாலை.
பகவத் பக்தியில் ஆழ்வார்களில் ஒருவராயும் அவனுடைய தேவிமார்களில் ஒருவராயும் இருக்கும் இருப்பு ஆண்டாளுக்கு அஸாதாரணம்.
ஆழ்வாராய்க் கொண்டு பாமாலை சூட்டியும் தேவியாய் நின்று பூமாலை சூட்டியும் அநுபவம் ஆண்டாளுக்கே உரியது.
பாமாலை சூட்டிய தேவியும் இல்லை. பூமாலையைத் தாம் சூடிப் பெருமாளுக்குச் சூட்டிய ஆழ்வாரும் இல்லை.
ஸ்வாமி தேசிகனுடைய பக்தி விகசித்து (மலர்ந்து) அருளிச் செய்யப் பெற்ற பிரபந்தமே கோதாஸ்துதி.
அது அவருடைய மனத்தையே கவர்ந்தது என்பது “பஹுகுணரமணீயாம்” என்பதாலே அறியலாம்.
இத்துதி இருபத் தொன்பது சுலோகங்கள் கொண்டது.
அசேதனத் தத்துவங்கள் 24, இருபத்தைந்தாவது தத்துவம் ஜீவாத்மா, 26ஆவது தத்துவமாகிய பெருமாள் 1,
அவருடைய தேவிமார் 3, ஆக தத்துவக்கணக்கில் மொத்தம் 29-ஐ அநுசரித்த தாயிருக்கலாம் இந்த எண்ணிக்கை.
திருப்பாவைப் பாசுரங்கள் முப்பதில் இறுதிப் பாசுரத்தைச் சேர்க்காமல் ’சிற்றஞ்சிறு காலை’யோடு பூர்த்தி செய்து 29 கணக்காக
ஸ்வாமியின் திருவுள்ளம் இருக்கலாம்.
29-ஆம் சுலோகத்தில் ’சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யந்’ என்றுள்ளது.
’உன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்’ ,
’நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன் தன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று 29ஆம் பாசுரத்திலுள்ளதை அநுஸரித்ததே.
’இதி பஹுகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம்ய:’ என்று இருபத்தொன்பதாம் சுலோகத்தில் உள்ளது
“கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை முப்பதுந் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார்’ (திருப்பாவை 30)என்பதை முற்றிலும் அநுஸரித்தே.
’ இதி வக்தி ’ என்பதற்கு மலர்ந்த பக்தியோடு தேசிகன் (வேங்கடேசன்) மனத்திலிருந்து உருகி (வாக்காக) வெளிவரும்
ப்ரகாரமாக இப்படியே யார் தப்பாமே உச்சரிக் கிறாரோ’ என்பது பொருள்.
’இப்பரிசுரைப்பார்’ என்பதற்கும் ’கோதை எப்படி பக்தி வெள்ளமாக மனமகிழ்ந்து உரைத்தாளோ அப்படியே ஓதுபவர்’ என்பது பொருள்.
ஸ்ரீரங்கராஜனிடம் கோதையின் பக்தியை யொக்கும் கோதையிடம் ஸ்ரீ தேசிகன் பக்தி.
’சங்கத்தமிழ் மாலை’ என்பதற்குச் சிறந்த தமிழாகிய சங்கத் தமிழால் இயற்றிய பாமாலை என்றும் சொல்லலாம்.
’ பஹுகுண ரமணீயாம்’ என்பது சங்கத் தமிழ் போல உயர்ந்த ஸம்ஸ்கிருதமான வைதர்ப்பீ பாஞ்சாலிரீதிகளில் அமைந்தது
கோதையின் னருளால் இத்துதி என்று பேசுவதாகச் சொல்லலாம்.
———
இதி ஸ்ரீ கோதா ஸ்துதி சம்பூர்ணம் –
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply