ஸ்ரீ ஸுதர்ஸன அஷ்டகம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

திருக் கை கழலா நேமியான் -பிரணய ரக்ஷணத்தில் கால விளம்பம் அஸஹ்யன் –
ஹேதி ராஜன் -ஹன்யதி -திவ்யாயுதங்களுக்கு ராஜா /ரதாங்கம் –
1268—/69—1368/69–28 ஸ்தோத்திரங்கள் -பரமத பங்கம் ஸ்தோத்ரம் -நிறைவேற –
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வாரை பிரார்த்தித்து
ஷோடச திவ்யாயுதங்களுக்கு 16 ஸ்லோகங்கள்
திருவாய் மொழி பெரிய திருமொழி -நிலை நிற்க -எங்கள் கதியே ராமானுஜ முனியே தங்கும் மனம் நீ எனக்கு தா –
வளர்த்த இதத்தாய் ராமானுசனை பிரார்த்திப்பது போலே -திருவயிந்திர புரத்திலே சாதித்தார் என்பர் –
திருப்புட் குழி -விஷ ஜுரம் போக்கி–ஆராயம் ஆயுஸ் ஸூ ஐஸ்வர்யம் -பெற்று–
கைங்கர்ய நிஷ்டர் ஆக்குவதற்காக -அருளிச் செய்தார்
நாம் மங்களாசாசன பரராவதற்காக சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் –
விருத்தங்கள் பல —-க்ரஸ்த்வம்– குறில் குறில் குறில் /நெடில் நெடில் குறில் /நெடில் குறில் குறில் —
எல்லா பாதங்களும் -இப்படியே இருக்கும்
ஸூ தர்சனம் -சோபனம் தர்சனம் அஸியேத்தி-மங்களமான தர்சனம் இருப்பதால் /
கையார் சக்கரத்து –என்று என்று -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி -சேர்த்திக்கும் பல்லாண்டு பாடுவார்கள் –
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழி
திரு மால் உரு ஒக்கும் -மேரு –நீல மலை இரண்டு பிறை –கோல வராஹம் –செஞ்சுடரோன் உதித்தால் போலே –
திரு மால் திருச் சக்கரம் ஒக்கும் –
ஸூ கேன த்ருச்யதே -ஸூ கமாக கடாக்ஷம் -ஸூ மார்க்கம் காட்டிக் கொடுப்பவர் -மோக்ஷமார்க்கம் -காட்டிக் கொடுப்பவர் –
சக்ர -க்ரியதே அநேக -அநேகம் கார்யங்கள் கிரியா –
ஹேதி ஹன்யாதே விரோதி நிரசனம்
ரதாங்கம் -வட்ட வடிவு –ஆழி -சமுத்திரம் போலே சுழன்று
ஜ்வாலை மேலே /-கூர்மை யான நுனி நேமி/ அரம்/நாபி -அக்ஷம் -குழி -ஐந்து அங்கங்கள் —
ஹேதி ராஜ ஸ்தவம் ஹேதி புங்கவ ஸ்தவம் ஸ்தோத்ரம் நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
திருவரங்க பெருமாள் அரையர் நோய் சாத்திக் கொண்டு இருக்க அத்தை தீர்க்க -101 ஸ்லோகங்கள் கொண்ட
ஸூ ர்சன சதகம் -கூர நாராயண ஜீயர் -ராமானுஜர் திரு மடம் -ஆண்டாள் முயன்று ஏற்படுத்தி –

எண் தல அம்புயத்துள் இலங்கும் அறு கோண மிசை
வண் பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம்
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே–பரமத பங்கம் பாசுரம் –

அறு கோண மிசை–ஷட் கணம் / பணிலம் -சங்கம்/திகிரி -சக்கரம் /வில்-சார்ங்கம் / முசலம் -உலக்கை /
அங்குசம் /-பாசக்கயிறு /கதை /செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே

சங்கம் / சக்கரம் / உலக்கை / சார்ங்கம் / செந்தாமரை மலர் /கதை /அங்குசம் /பாசக்கயிறு -ஆக அஷ்ட ஸ்லோகங்கள்

அஷ்ட திவ்யாயுதங்கள் ஏந்தியும் ஸூ தர்சன ஆழ்வார் -ஷோடச -ஆயுதங்கள் சேர்த் தும் ஸூதர்சன ஆழ்வார் –
சங்கம் / கோதண்டம் / பாச கயிறு /ஹாலா -கலப்பை /முசல -உலக்கை /கதை / வஜ்ரம் -இடது திருக்கை
சக்கரம் /குந்தம் /கிருபானம்/ பத்து பரசு /கோடரி / சதமுக அக்னி /அங்குசம் -/சக்தி வேல் -வலது திருக்கை –

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அஷ்ட புஜத்தான்-ஜய ஜய ஸூ தர்சன -தோலாத வென்றியான்
ஆனி சித்திரை -இவர் திரு நக்ஷத்ரம் -ஆனி-ஸ்வாதி ஸ்ரீ நரசிம்மர் – –
உக்ரம் -இத்யாதி -சகஸ்ரா ஹூம் பட் இத்யாதி -மந்த்ரம் தொடர்பு
நான்கு கைகளிலும் சக்கரம் -பாஞ்ச ராத்ரம் -ஸ்ரீ நரசிம்மர் -சக்கரத் ஆழ்வார் பின் பக்கம் –
திருப் ப்ரீதி -கால சக்கரம் சுழற்றி சேவை -பிரயோக சக்கரம் திரும்பி சில இடங்களில் சேவை –
ஜ்வாலா கேசம் த்ரி நேத்ரம் -ஹாரா கேயூர பூஷம் -சகல ரிபுண–பஞ்ச சம்ஸ்காரம் -பாஞ்ச ராத்ர ஆகமத்தில் உண்டு –
துவாதச ஆரம்-12-ஆரங்கள் -6 கோணங்கள் -சக்கர பொறி -தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி –
என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டு -பர சம்பந்த வேதனம் -வளையாதி விபூஷணம் –

——————————-

பிரதிபட ஸ்ரேணி பீஷண-வர குண ஸ்தோம பூஷண
ஜனி பய ஸ்தான தாரண ஜகதவ ஸ்தான காரண
நிகில துஷ் கர்ம கர்சன நிகம சத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன –1-

பிரதிபந்தகங்களின் ஸமூஹத்துக்கு அச்சத்தை அளிப்பவனே
ஸமஸ்த கல்யாண குண ஸமூஹங்களை ஆபரணமாக உடையவனே
பயத்துக்கு இருப்பிடமான பிறப்பை ஒழிப்பவனே
உலகத்தை நிலை நிறுத்த காரணம் ஆனவனே
எல்லா பாபங்களையும் அழிப்பவனே
நல்ல தர்ம மார்க்கங்களைக் காட்டுபவனே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

திருச் சங்குக்கு ஜய கோஷம் முதல் ஸ்லோகம்
பிரதிபட ஸ்ரேணி பீஷண-யஸ்ய நாதம் -த்ருஷ்ட்ரர்கள் நெஞ்சு உளுக்கும் படி
வர குண ஸ்தோம பூஷண -கல்யாண குணாத்ம கோஸவ் –
ஜனி பய ஸ்தான தாரண-சம்சாரம் தாண்டுவிக்கும்
ஜகதவ ஸ்தான காரண -ஸ்திதிக்கு காரணம்
நிகில துஷ் கர்ம கர்சன
நிகம சத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன-ஸ்ரீ விஷய லஷ்மி சமேத
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன
அடியேன் நாவில் இருந்து ஜெயித்து அருள வேணும் –

————————————————————————-

ஸூ ப ஜகத்ரூப மண்டன ஸூர கண த்ராச கண்டன
சதமக ப்ரஹ்ம வந்தித -சத பத ப்ரஹ்ம நந்தித
பிரதித வித்வத் சபஷித-பஜத ஹிர்ப்புந்த்ய லஷித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–2-

மங்களமான ஜெகதாகாரமான ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு அலங்காரமாய் இருப்பவரே
தேவ சமூகங்களுக்கு பயத்தை ஒழிப்பவரே
நூறு யாகங்கள் செய்த இந்த்ரனாலும் ப்ரஹ்மாவாலும் ஆராதிக்கப்படுபவரே
சத பதம் என்னும் ப்ராஹ்மணத்தால் போற்றப்படுபவர்
பிரபலமான வித்வான்களுக்கு அனுகூலமாய் இருப்பவரே
உம்மை ஆஸ்ரயிக்கும் சிவனுக்கு உம்மைக் காட்டி அருளுபவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

ஸூப ஜகத்ரூப மண்டன -ஸூபாஸ்ரயம் விராட் ரூபம் -ஆழி எழ அணி அத்திகிரி -பூஷணம் –
ஸூர கண த்ராச கண்டன -தேவ ஜனங்கள் பயம் போக்கும் –
சதமக ப்ரஹ்ம வந்தித–ப்ரஹ்மாதிகள் வணங்கும் -அம்பரீஷ உபாக்யானம் –
அத்திகிரி பத்தர் வினை தீர்க்கும் -தொற்று அற அறுக்கும் –
சத பத ப்ரஹ்ம நந்தித -வேதங்களால் கொண்டாடப்பட்ட
பிரதித வித்வத் ச பஷித- வித்வான்களால் போற்றப்பட்ட
பஜத ஹிர்ப்புந்த்ய லஷித-பாஞ்ச ராத்ரம் -மஹிமை
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன.
பர மதங்களை நிரசித்து விஜய வல்லி சமேத ஸூ தர்சன ஆழ்வார் ரஷிப்பார்

——————————————————–

ஸ்புட தடிஜ்ஜால பிஞ்ஜர-ப்ருததர ஜ்வலா பஞ்ஜர
பரிகத ப்ரத்ன விக்ரஹ -படுதர ப்ரஞ்ஜ துர்க்ரஹ
ப்ரஹரண க்ராம மண்டித -பரி ஜன த்ராண பண்டித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூதர்சன–3-

பிரகாசிக்கும் மின்னல் கூட்டம் போலே சிவந்த பொன் வண்ணம் உள்ளவரே
மிகப் பெரிய அக்னி கொழுந்துகளாலான ஸமூஹத்தை உடையவரே
யந்த்ரத்திலும் சுற்றிலும் சிறந்த திரு மேனியை உடையவனே
மிகக் கூர்மையான அறிவு உடையாராலும் அரிய முடியாதவரே
திவ்ய ஆயுத ஸமூஹங்களால் அழகு படுத்தப் படுபவரே
ஆஸ்ரித ரக்ஷணத்திலே பண்டிதரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

ஸ்புட தடிஜ்ஜால பிஞ்ஜர-
உலக்கை -நிலை நின்ற மின்னல் கூட்டம் போலே -அபூத உவமை
ப்ருததர ஜ்வலா பஞ்ஜர
அக்னி ஜ்வாலை கூட்டம் போலே -குமார சம்பவம் அக்னி மத்யம் தபஸ் –
பரிகத ப்ரத்ன விக்ரஹ –
யந்த்ரம் -ஸ்ரேஷ்டமான ரூபம் -வ்யூஹவதாரங்கள்
படுதர ப்ரஞ்ஜ துர்க்ரஹ
வித்வான்களாலும் அறிய முடியாத படி
ப்ரஹரண க்ராம மண்டித –
பல திவ்யாயுத சேர்க்கை போலே
பரி ஜன த்ராண பண்டித
ஆஸ்ரிதர் பரிபாலன சாமர்த்தியம்
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன

———————————————————–

நிஜ பத ப்ரீத சத் கண நிரு பதி ஸ்பீத ஷட்குண
நிகம நிர் வ்யூட வைபவ நிஜ பர வ்யூஹ வைபவ
ஹரி ஹய த்வேஷி தாரண ஹர புர ப்லோஷ காரண
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–4-

தனது திருவடிகளில் பக்தி உடைய நல்லவர்களின் ஸமூஹங்களை உடையவரே
ஸ்வாபாவிக பரி பூர்ண ஞானாதி ஷட் குணங்களை உடையவரே
வேதங்களால் ஸ்தாபிக்கப் பட்ட பெருமையை உடையவரே
தனது பரம் வ்யூஹம் ஆகிய திரு மேனியின் பெருமையை உடையவரே
இந்திரனது விரோதிகளை ஒழித்தவரே
சிவனது பட்டணம் வெந்து எரிவதற்கு காரணம் ஆனவர்
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

நிஜ பத ப்ரீத சத் கண-ஸ்தானங்கள் -அடைந்து ஸந்துஷ்டர் கூட்டங்கள்
சார்ங்கம் -வளை வில் -சிலை வளவாய் முஸலம்-இதில் –
சரணாரவிந்தம் ப்ரீதி உடன் சேரும் சாதுக்கள்
நிரு பதி ஸ்பீத ஷட்குண இயல்பாகவே ஷட் குண பூர்ணர் –
ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -ஷட் ஏவ பிரதம குணங்கள் —
பர வா ஸூ தேவன் -போலே தேஜோ மயமான திரு ஆழி ஆழ்வானுக்கும் –சாரங்கத்துக்கும்
நிகம நிர் வ்யூட வைபவ-வேதங்கள் போற்றும் வைபவம் –
நிஜ பர வ்யூஹ வைபவ -எல்லா அவஸ்தைகளும் உண்டே -இயல்பாகவே –
ஹரி ஹய த்வேஷி தாரண-இந்திராதி –சத்ரு கண்டன -குதிரை முகன்
ஹர புர ப்லோஷ காரண -சிவன் புரம் காசி அழிவுக்கு காரணம் -பவ்ண்டரகன்-
கிருத்யா -துணை உடன் வர -அழித்து-
புரம் ஒரு மூன்று –அழித்து –ஓர் மாத்திரை போதில் பொங்கு அக்னிக்கு இரை யாக்கி –
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன

————————————————————

தநுஜ விஸ்தார கர்த்தன ஜநி தமிஸ்ரா விகர்த்தன
தநுஜ வித்யா நிகர்த்தன பஜத வித்யா நிவர்த்தன
அமர த்ருஷ்ட ஸ்வ விக்ரம சமர ஜுஷ்ட ப்ரமி க்ரம
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–5-

அசுரர்களின் வளர்ச்சியை அறுப்பவரே
சம்சாரமாகிய இருண்ட இரவுக்கு ஸூர்யன் போன்றவரே
அசுரர்களின் மாயையை ஒழிப்பவரே
பக்தர்களின் அறியாமையைப் போக்குபவரே
தேவர்களால் காணப்பட்ட தமது வீர்யத்தை உடையவரே
போரில் கையாளும் சுழற்சி முறைகளை உடையவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

தநுஜ விஸ்தார கர்த்தன–செங்கமலம் -அருணாரவிந்த திவ்ய ஆயுதம் -எல்லாமே திவ்ய ஆயுத அம்சம் –
மெல்லிய இதழ் மொட்டு கூட ஆயுதம் –
ஜநி தமிஸ்ரா விகர்த்தன–இருள் தரும் சம்சாரம் போக்கி / வேரோடு ருசி வாசனைகள் இல்லாமல் /
தநுஜ வித்யா நிகர்த்தன-தானவர் அசுரர் ராக்ஷசர் ஜாதிகள் குலங்களோடே போக்கி அருளும் பராக்ரமம் –
பாஸ்கர கோடி துல்யம்
பஜத வித்யா நிவர்த்தன
அமர த்ருஷ்ட ஸ்வ விக்ரம-தேவாதிகள் கண்டு அனுபவிக்கும் படி –விக்ரமங்கள் மிக்கவன் –
சமர ஜுஷ்ட ப்ரமி க்ரம –தேஜஸ் பிரபாவம் மிக்கு
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன

————————————————————-

ப்ரதி முகா லீட பந்துர ப்ருது மஹா ஹேதி தந்துர
விகட மாயா பஹிஸ்க்ருத விவித மாலா பரிஷ்க்ருத
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித த்ருட தயா தந்த்ர யந்த்ரித
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–6-

திருவடிகளை முன்னும் பின்னும் வைத்து அழகாக இருப்பவரே
மிகப் பெரிய திவ்ய ஆயுதங்களால் சூழப் பட்டு இருப்பவரே
கொடிய மாயைகளுக்கு அப்பால் பட்டவரே
பல மாலைகளால் அலங்கரிக்கப் படுபவரே
நிலையான பெரிய யந்திரத்தில் இருப்பவரே
உறுதியான கருணை என்னும் கட்டுத் தறியில் கட்டுப் பட்டவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

ப்ரதி முகா லீட பந்துர–கதா திவ்ய ஆயுத ஸ்தோத்ரம் -சீர் திகழும் கதை –நிற்கும் நிலை -மநோ ஞானம் உடையவர்
இடது திருப் பாதம் முன் புறம் குனிந்து வலது திருப் பாதம் பின் புறம் -கோபால விம்சதி -ஜல க்ரீடை பண்ணும் போது நின்ற நிலை
இதே நிலையில் நின்று அருளி -பக்தர்கள் சேவிக்கும் படி
ப்ருது மஹா ஹேதி தந்துர -திவ்ய ஆயுதங்கள் சூழ்ந்து/ நெருக்கத்தில் எழுந்து அருளி
விகட மாயா பஹிஸ்க்ருத
விவித மாலா பரிஷ்க்ருத–கண்டா மாலைகளால் அலங்க்ருதம் /-24-தத்வங்கள் மாலையாக /
ரக்ஷித்தத்தில் தீஷித்து -விசாலமான / விகசிதமான சுத்த ஞான ஸ்வரூபன்
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித–சாஸ்வதம் -பெரிய யந்த்ர -சரணாகதி மட்டுமே ஸ்திரம் —
ஞான சக்தி பலம் வீர்யம் தேஜஸ் ஐஸ்வர்யம் –ஷட் குணங்கள் உடன் கூடிய யந்த்ரம்
த்ருட தயா தந்த்ர யந்த்ரித–கட்டப்பட்டவர்/ கதா பாணி பெருமாள் ஸ்ரீ ராமாயணம் –
கதா ஸ்வரூபம் என்று அறிந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயம் -சம் ரக்ஷணத்துக்காக நிலை கொண்டு அருளி -என்றவாறு –
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன

————————————————————

மஹித சம்பத் சத ஷர விஹித சம்பத் ஷட ஷர
ஷடர சக்ர ப்ரதிஷ்டித சகல தத்வ ப்ரதிஷ்டித
விவித சங்கல்ப கல்பக விபுத சங்கல்ப கல்பக
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–7-

மிக உயர்ந்த செல்வமான ஞானத்தை உடைய சாதுக்களுக்கு அழியாத மோக்ஷம் அளிப்பவரே
அளிக்கப்பட்ட செல்வங்களை உடைய ஆறு எழுத்து மந்த்ரத்தை உடையவரே
ஆறு கோணங்களை உடைய சக்கரத்தில் நிலையாக இருப்பவரே
எல்லா தத்துவங்களின் உள்ளே நிற்பவர் ஸமஸ்த அபேக்ஷைகளையும் அளிப்பவரே
கற்பக வ்ருஷம் போன்றவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

மஹித சம்பத் சத ஷர –அங்குசம் திவ்ய ஆயுத மஹிமை -பிரசித்த ஞானம் உடைய –
ஞானவான்களுக்கு -மோக்ஷ பூதர்-
விஹித சம்பத் ஷட ஷர -உபாசகர்களுக்கு -ஷட் அக்ஷரம் -இதுவே சம்பத் இவர்களுக்கு –
மந்த்ர சாஸ்த்ர சித்தாந்தம் /சத அஷர மந்த்ர ரூபி
ஷடர சக்ர ப்ரதிஷ்டித–சக்கரத்தில் ஆறு அரங்கங்கள் நிலைத்து நிற்பவர் –
சகல தத்வ ப்ரதிஷ்டித –தத்துவங்களில் சன்னிஹிதம் உடையவர்
யா பிருதிவ்யாம் திஷ்டன் இத்யாதி -அந்தராமி ப்ராஹ்மணம் –
விவித சங்கல்ப கல்பக–எல்லா விதங்களிலும் நினைத்தவற்றை -செய்து முடிப்பவர் -சங்கல்ப மாத்திரத்திலே –
விபுத சங்கல்ப கல்பக -கற்பக வருஷம் போலே அனைத்தையும் அளிப்பவர்
உபாசகர்கள் ப்ரஹ்ம ஞானிகளுக்கு -சர்வ பல பிரதத்வம் –
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–
எம்பெருமான் அந்தர்யாமியாக உபாசானம் செய்து மோக்ஷ பலன் -பெறுவோம் –

————————————————————-

புவன நேத்ர த்ரயீ மய சவன தேஜஸ் த்ரயீ மய
நிரவதி ஸ்வாது சின்மய நிகில சக்தே ஜகன் மய
அமித விஸ்வ க்ரியா மய சமித விஷ்வக் பயாமயா
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–8-

உலகங்களுக்கு கண் போன்றவரே –
மூன்று வேதங்களின் வடிவம் ஆனவரே-
யாகங்களில் மூன்று அக்னிகளின் வடிவம் ஆனவரே
அபரிமித ஞான ஆனந்த திவ்ய வடிவம் ஆனவரே
சர்வ சக்தியும் ஆனவரே
உலக வடிவம் ஆனவரே
அளவற்ற சர்வ கர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவரே
எங்கும் பரந்த நோயையும் அச்சத்தையும் ஒழித்தவரே
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானே உமக்கு ஜெயம்-

புவன நேத்ர த்ரயீ மய–பாசரூபம்-நேத்ரம் போலே வேத ஸ்வரூபன் -கண்ணாவான் –காக்கும் இயல்பினன் –
வேதம் ஸ்ரீ ராமாயணம் -அவன் பெருமாள் -பிரியாமல் –
சவன தேஜஸ் த்ரயீ மய -மூன்று யாக அக்னி -சாஸ்திரம் -சாஷாத் ஸூ தர்சன ஆள்வான் எல்லை இல்லா பவித்ரன்
நிரவதி ஸ்வாது சின்மய -ஞான ஆத்மாக ஸ்வரூபம் -அளவில்லா ஞானம்
நிகில சக்தே ஜகன் மய -சர்வமும் இவர் அங்கம் -ஜெகதாகாரம் சர்வ சக்தன்
அமித விஸ்வ க்ரியா மய – அனைத்து பிரவ்ருத்திகளும் உம் அதீனம் -நித்ய நைமித்திக கிரியைகள் ஆஜ்ஜை படி
சமித விஷ்வக் பயாமயா -போக்கடிக்கப்பட்ட வியாதி இத்யாதி –பயங்களை போக்கி –
பஹு வரீஹீ சமாசம் -அடங்கி போகுமே இவர் முன்னே
ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன ஜய ஜய ஸ்ரீ ஸூ தர்சன–

————————————————————–

த்வி சதுஷ்கமிதம் ப்ரபூத சாரம் படதாம் வேங்கட நாயக ப்ரணீதம்
விஷமே அபி மநோ ரத ப்ரதாவன் ந விஹன் யேத ரதாங்க துர்ய குப்த -9-

த்வி சதுஷ்கமிதம் ப்ரபூத சாரம் படதாம் -சிறந்த ரசம் -உடைய இந்த இரு நான்கை உடைய அஷ்ட ஸ்லோகங்கள் –
ப்ரதிதினம் அனுசந்தித்தால் /
அப்படியே பருகலாம் இனிமையானவை அன்றோ -வேதம் உபநிஷத் சாஸ்திரங்கள் அவதார வைபவங்களில் சாரம் இவை என்றபடி –
வேங்கட நாயக ப்ரணீதம்—ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்த /நன்கு பரீஷை பண்ணி -அருளிச் செய்தவை –
விஷமே அபி மநோ ரத ப்ரதாவன்-எண்ணாத பலன்களையும் அளிக்க வல்லவை /
ந விஹன் யேத ரதாங்க துர்ய குப்த —ஸ்ரீ சக்கரத் தாழ்வார் அருளால் -பெற்று இன்புறுவர் –
வசந்த மாலிகை வ்ருத்தம்-இந்த பல சுருதி ஸ்லோகம் /
பஞ்சாயுதம் -சர்வ பிரகாரணாயுத –சாஷாத் சக்கரத் தாழ்வான் அம்சம் -செந்தாமரை மொட்டும் கூட
மனசையும் இந்திரியங்களை வசப்படுத்தி பகவான் இடம் நம்மை செலுத்த வல்ல
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வார் அருளுக்கு ஆளாகுவோம்

——————————————

இதி ஸூ தர்சன அஷ்டகம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாணகுண சாலிநே –
ஸ்ரீ மாதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading