ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ காமாஸிக அஷ்டகம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி –

திரு வேளுக்கை –திரு வேள் இருக்கை –காமாஸிக -யோகாசனம் –ஸிம்ஹம் தான் பயங்கரம் அல்லன்–அழகியான தானே அரியுருவம் தானே –தம் அத்புதம் பாலகம் அம்பு ஜேக்ஷணம் – கண்ணன் -அத்ருஸ்யத அதி அத்புதம் நரஸிம்ஹம் -ஸ்ரீ மத் பாகவதம் -அழகிய ஸிம்ஹர் என்றே நிரூபணம் -அங்கு ஓர் ஆளரியாய் -ஒப்பற்ற -சீற்றத்தோடு அருள் பெற்ற -சேராச் சேர்த்தி –
வேட்க்கை பிறப்பிக்கும் திரு உருவம் -அசுரர்களுக்கு பயங்கரம் -அத்திகிரி நாதனே இங்கு
அஷ்ட புஜ அஷ்டகம் -ஹரினா–மூலம் அருகில் -உள்ள -திரு வேளுக்கை நினைவால் -அங்கேயே -அருளி –
யஞ்ஞம் சம்ரக்ஷணர்த்தம் திருவவதாரம் -ஸ்தோத்ர பாடம் பிரசித்தம் –

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்தோத்ரங்களில் விபவ அவதாரமும் ஸ்பஷ்டமாக அர்ச்சாவதார திவ்யதேச பரமாயும் இருந்துள்ள ஒரே ஸ்தோத்ரம் இதுவே-அவனே ஆசைப்பட்டு நித்யவாஸம் பண்ணும் திவ்யதேசம் -என்பதே – காமாஸிக-வேளுக்கை என்பதின் அர்த்தம் -பாலும் சக்கரையும் சேர்ந்து இனிமை போல் அவதாரமும் அர்ச்சயையும் – சேர்ந்து அனுபவித்து அருளிய ஸ்தோத்ரம் 

———————————

ஸ்ருதீநா முத்தரம் பாகம் வேகவத்யாஸ் ஸ தக்ஷிணம்
காமாத் அதி வசன் ஜீயாத் கஸ்ஸித் அத்புத கேஸரீ –1-

வேதங்களின் மேல் -வடக்கு -பக்கத்திலும் -வேகவதி ஆற்றின் தென் பக்கத்திலும்
தனது –காமாத் அதி வசன்-அபி நிவேசத்தால் உகந்து எழுந்து அருளி இருக்கும் அத்விதீயமான அத்புத ஸிம்ஹ ரூபனே ஜீயாத் உனக்குப் பல்லாண்டு-

வேதங்களின் மேல் (வடக்கு ) பக்கத்திலும் வேகவதி -ஆற்றின் தென் பக்கத்திலும் தனது ஆசையால் எழுந்தருளி இருக்கும் ஒப்பற்ற அத்புதமான சிங்க வடிவு கொண்ட எம்பெருமான் வாழ்க !

ஸ்ருதீ நா முத்தரம் பாகம் வேகவத் யாஸ்ஸ தக்ஷிணம் –காமாததி வசன் ஜீயாத் கஸ்ஸி தத்புத கேஸரீ —வேத சிரஸ் உபநிஷத் -வேகவதி தெற்கு ஸ்தானம் -உகந்து அருளின –
ஸிம்ஹம் -ந பீமா அனுகூலருக்கு –அத்புத கேஸரீகச்சித்–விலக்ஷணம் –தெரிந்த அம்சம் அத்புத -அளவற்றது எவ்வளவு என்றும் கூற முடியாது என்பதால் தெரிந்த அம்சம் அத்புத -அளவற்றது எவ்வளவு என்றும் கூற முடியாது என்பதால் –கச்சித்––
லஷ்மி யா ஆலிங்கனம் –அத்புதம் –அழகியான் தானே அரி யுருவம் தானே -காமாஸிகா அரி -நர ஹரி -கேஸரீ-காமம் -இச்சை சங்கல்பம் -ஆஸிகா -தானே ஆசைப்பட்ட ஆசனம் –
ஸ்ருதி ஸ்ரசால் பிரகாசிக்கும் பர ப்ரஹ்மமே வேகவதி நதிக்கரையில் -வரத ராஜ பெருமாளே நரஸிம்ஹம் இங்கே –
வைகுண்டம் ஆஸக்தி -வி முக்த வைகுண்ட -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா-
ஸ்ருதீநாம் பஹு வசனம் -பல பெண்கள் –வேகவதி பெண்–முதலில் பன்மை அடுத்து -ஒருமை -வ்யாமோஹம் இரண்டையும் காட்டி –

உப கங்கம் கரைக்கு பிரதானம் -ராஜ சேவகம் சேவகன் முக்கியம் பீதாம்பரம் -தத் புருஷ சமாகம் இது -தரித்து இருக்கும் பிரானுக்குத் முக்கியம் நரசிம்மன் -இரண்டையும் பிரகாரமாக உடைய அவனுக்கு பிரதான்யம்

தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியன் ஆய மைந்தன் உய்ந்தான் நினைக்கும் கால்
வேளுக்கை ஆள் அரியே வேறு உதவி உண்டோ உன்
தாளுக்கு ஆள் ஆகா தவர்க்கு –77–

——————————————–

தபந இந்த் வக்நி நயன தாபாந் அபஸிநோதுந
தாப நீய ரகஸ்யா நாம் சார காமாஸிகா ஹரி –2-

சூர்யன் -சந்திரன் -அக்னி -ஆகிய மூன்று கண்களை உடைய ஸ்ரீ நரஸிம்ஹ
தாப நீய உபநிஷத்துக்கள் சாரமாக உள்ள திரு வேள் இருக்கை நரஸிம்ஹன்
நம் தாப த்ரயங்களையும் ஒழித்து அருள வேண்டும் –

ஸூர்யன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று கண்களை உடைய ந்ருசிம்ஹ தாபநீய உபநிஷத்துகளின் ஸாரமாக உள்ள திரு வேள் இருக்கை நரசிம்ஹன் நம்முடைய மூன்று , தாபங்களை ஒழிக்க வேண்டும் !

தப நேந்த்வக்நி நயன தாபா நபஸி நோது ந-தாப நீய ரகஸ்யா நாம் சார காமாஸிகா ஹரி-
தாபங்களை போக்கட்டடிக்கட்டும் -இந்து அக்னி -மூன்று திருக் கண்கள் கடாக்ஷத்தால் பயம்-
விரோதி தாரதம்யம் ஏற்ப சூரியன் அக்னி தேஜஸ் –
ஆஸ்ரிதர்களுக்கு ப்ரீதி அள்ளி வழங்கி -சந்திரன்
அத்யந்த ஆஸ்ரிதர் -மூன்றுமே அளவில்லா ஆனந்தம் –
தாபன் அபசிநோதுனா-அடியோடு நீங்க வேண்டுமே –
தாபநீய உபநிஷத் –நரஸிம்ஹனைப் பற்றியே சொல்லும் -அதர்வண வேத பாகம் –மந்த்ர ராஜ ஸ்தோத்ரம் -சிவ பெருமான் அருளி –

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம்ரகஸ்யா நாம்--11 பாதங்கள் 32- அக்ஷரங்கள்

யாவது காலம் எழுந்து அருளி இருக்க ப்ரஹ்மா பிரார்த்தித்த உடன் -அருள் வரதர் –
வேகவதி தக்ஷிண கரையில் -காமாஸிகா ஹரி
சங்கல்ப மாத்ரத்தால் அவதரித்து -ஷேத்ர வாசி ஹரி –

அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண்ஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22-

200-அம்ருத்யு -ம்ருத்யு தெய்வத்துக்கே பகைவர் -மரணத்தை ஒத்த ஹிரண்யனுக்கு விரோதி –
201–சர்வத்ருத் -நண்பர்கள் பகைவர்கள் நாடு நிலையாளர் ஆகிய அனைவரையும் சமமாகப் பார்ப்பவர் –
202-சிம்ஹ -பெரிய நரசிம்ஹ வடிவம் உடையவர் –
203- சந்தாதா -ஹிரண்யனை அழிக்கும் காலத்திலேயே பக்த பிரகலாதனை சேர்த்துக் கொண்டவர் –
204-சந்திமான் -தன் அடியவர்களோடு தன் சேர்க்கை நீங்காமல் இருப்பவர் –
205-ஸ்திர-பக்தர்கள் இடம் வைத்த அன்பில் அவர்கள் குற்றத்தையும் பொறுத்து விலகாமல் இருப்பவர் –
206-அஜ -தூணில் பிறந்த படியால் இயற்கையான பிறப்பு இல்லாதவர் –
207-துர்மர்ஷண-பகைவர்களால் தன் பார்வையைத் தாங்க முடியாமல் இருப்பவர் –
208-சாஸ்தா -தீயவர்களைத் தண்டிப்பவர் –
209-விஸ்ருதாத்மா -வியந்து கேட்கத்தக்க நரசிம்ஹ அவதார திரு விளையாட்டுகளை உடையவர் –
219-சூராரிஹா -தேவர்களின் பகைவரான ஹிரண்யனை அழித்தவர் –

* ந ஜாயதே ஜநித்யாம் யத₃ஜஸ் தஸ்மாத₃அநேக ஜித் இதி ॥
தாயின் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை யாதலால் அஜன்
அவன் அனைவரையும் வெற்றி கொள்பவன்-பிதாமஹீ ஆனதே ஹிரண்யன் தூண் –

———————————-

ஆகண்டம் ஆதி புருஷம் கண்டீ ரவ முபரி குண்டிதாராதிம்
வேகோ பகண்ட சங்காத் விமுக்த வைகுண்ட பஹூ மதி முபாஸே–3–

கழுத்து வரையில் புராண புருஷ, வடிவும் .(கழுத்துக்கு) மேலே சிங்க வடிவும் கொண்டவனும் பகைவனைக் கொன்றவனும் வேகவதீ – நதியின் அருகில் உள்ள இடத்தின் மீது உள்ள
ஆசையினால் ஸ்ரீ வைகுண்டத்தின் பெருமையைக் கை விட்டவனுமான , நரஸிம்ஹனை வணங்குகிறேன் !

திருக் கழுத்து வரையில் புராண புருஷ வடிவும் -மேலே ஸிம்ஹ வடிவும் கொண்டவனும்
ஆஸ்ரித விரோதியை நிரசித்தவனும் -வேகவதி நதியின் அருகில் உள்ள திவ்ய தேசத்தில் அபிநிவேசத்தால் பெருமை மிக்க ஸ்ரீ வைகுண்டத்தில் விரக்தி குண்டவனுமான ஸ்ரீ நரஸிம்ஹனை ஆஸ்ரயிப்போம்-காமாஸிகா ஹரி-அத்யாஹாரம் செய்து கொள்ள வேண்டும்

ஆகண்ட மாதி புருஷம் கண்டீ ரவ முபரி குண்டித ஆராதிம்-
வேகோ பகண்ட சங்காத் விமுக்த வைகுண்ட பஹூ மதி முபாஸே-உபாசிக்கிறேன் -யாரை —ஆகண்டம் ஆதி புருஷன் –உவரி கழுத்து மேலே ஸிம்ஹம்-ஆ–உப சர்க்கம் -அது பர்யந்தம் என்றும் அதில் இருந்து என்றும் -புரங்களில் சயனித்து இருக்கும் புருஷன் -ஹ்ருதய கலத்தில்-மானஸ சரோவரத்தில் சயனித்து இருக்கும் -ஹம்சம் -புருஷன் – ஆத்மாக்குள்ளும் இருப்பதால் ஆதி புருஷன் -புருஷோத்தமன் –
வேகவதி நதியில் -விமுக்த வைகுண்டம் விட்டு அன்றோ வந்து அருளினார்
நரம் கலந்த சிம்ம உருவாய் -ஜகத் சர்வம் நரசிம்ஹ மாகவே —ஸ்தான பேதம் வைத்து —
கண்டீரவம் கர்ஜனை பிரசித்தம்-தோற்றத்தால் சத்ருக்கள் மாயும் படி -வேகவதி -கர்ஜனை பண்ணி ஓடி -சரஸ்வதி நதி -பிரிந்து -அடக்கி ஆள
இவர் கர்ஜனையால் அந்தர்வாஹினி ஆனாள்-இங்குள்ள ஆசையால் ஸ்ரீ வைகுண்டம் மறந்து –
குண்டித -வெல்லப்பட்ட திரு முகம் –

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய-அங்கு பகல் விளக்கு-சர்வஞ்ஞருக்கு அங்கு -காதாலே கேட்டே போக வேண்டும் அத்தை -அருள் மட்டும் அங்கு -சீற்றத்தோடு அருள் இங்கேயே தானே – -பின்னானார் வணங்கும் ஜோதி -கண்டார் உளர் இங்கு –

——————————————-

பந்தும் அகிலஸ்ய ஐந்தோ பந்துர பர்யங்க பந்த ரமணீயம்
விஷம விலோசன மீடே வேகவதீ புளின கேளி நரஸிம்ஹம்–4-

எல்லா பிராணிகளுக்கும் உறவினன் , ஆனவனும் திடமான பர்யங்க பந்தம் எனும் ஆஸனத்தால் அழகு அடைந்தவனும் ஒற்றைப் படையான (3) கண்களை உடையவனும் வேகவதீ – நதியின் மணல் – திட்டில் விளையாடுபனுமான நரஸிம்ஹனை ஸ்துதிக்கிறேன் !காமங்களை அருளட்டும் !

ஸமஸ்த பிராணிகளுக்கும் ஸர்வவித நிருபாதிக  பந்து ஆனவனும் -திடமான பரியங்க பந்தம் என்னும் ஆசனத்தால் அழகு அடைந்தவனும் -மூன்று திருக் கண்களை உடையவனும் வேகவதீ நதியின் மணல் திட்டில் விளையாடுபவனுமான ஸ்ரீ நரஸிம்ஹனை ஆஸ்ரயிப்போம் –

பந்து மகி லஸ்ய ஐந்தோ பந்துர பர்யங்க பந்த ரமணீயம் –விஷம விலோசன மீடே வேகவதீ புளின கேளி நரஸிம்ஹம்-ஸமஸ்த லோக ஜந்துக்கள் -அனைவருக்கும் சர்வ வித பந்து -அகிலஸ்ய பந்து —சமோஹம் சர்வம் அன்றோ-ஹிரண்யகசிபுவுக்கும் பந்து -அவன் இசையாமல் இழந்தான் -விலக்காமை ஒன்றே வேண்டும் –
தேவானாம் தானவானாம் –அகில –பிதா மாதா மாதவ -த்வமேவ தேவ சர்வம் –யதிவா ராவணஸ்யம் –
பரியங்க பந்தம் –ஆசன விசேஷம் கிடைத்தாலே போதும் -அவன் அழகு வேண்டாம் -பரியங்க அழகே காலை கட்டிப் போடும்-மேற்கு நோக்கி திருமுக மண்டலம் இங்கு –
விஷம விலோசனம் –முக்கண் –ஆஸ்ரிதர் -தண்ணளி -விரோதி பக்கல் குரூரம் விஷமம்- சீற்றமும் அருளையும் ஏக காலத்திலேயே காட்டி அருளும் விஷமும் உண்டு -இதுவே –சீற்றத்தோடு அருள் –பிரியதமர்களை தானே வரித்து வெறிதே அருள் புரிபவன்
வேகவதி நதி மணல் குன்றில் விளையாடும் நரசிம்மனை ஸ்துதிப்போம்
ப்ரஹதாரண்ய உபநிஷத் பாடப்படும் -கிரி குகைக்குள் -மணல் குன்றில் நம் கண் காண விளையாடுகிறதே –

———————————————–

ஸ்வ ஸ்தாநேஷூ மருத் கணான் நியமயன் ஸ்வாதீன ஸர்வேந்த்ரிய
பர்யங்க ஸ்திர தாரணா ப்ரகடித ப்ரத்யங் முகா வஸ்தித
ப்ராயேண ப்ரணி பேதுஷாம் ப்ரபுரசவ் யோகம் நிஜம் சிக்ஷயன்
காமாந் ஆதநுதாத் அசேஷ ஜகதாம் காமாஸிகா கேஸரீ –5-

வாயு (தேவர்) கூட்டங்களை தம் தம் ,இடங் களில் நிறுத்தி வைத்தவனும் எல்லா இந்திரியங்களையும் தனக்கு , வசப்படுத்தியவனும் பர்யங்க – பந்தம் எனும் ஆஸனத்தில் உறுதியாகப் பற்றியவனும் வெளிப்படுத்தப்பட்ட மேற்கு (உள்) நோக்கிய நிலையில் முகத்தை உடையவனும் பக்தர்களுக்கு தனது த்யானத்தைக் கற்பிப்பவன் போல் உள்ளவனும் பிரபுவுமான இந்த காமாஸிகா நரஸிம் ஹன் எல்லா மக்களுக்கும் விரும்பிய பயன்களை அளிக்க வேண்டும் !

வாயு இத்யாதி தேவர் கூட்டங்களை தம் தம் இடங்களிலே நிறுத்தி வைத்தவனும்
நம் சகல இந்திரியங்களை தன் வசப்படுத்தி இருப்பவனும் -பரியங்க பங்கம் என்னும் ஆசனத்தில் உறுதியாக பற்றினவனும் – வெளிப்படுத்தப் பட்ட மேற்கு உள் நோக்கிய நிலையில் திரு முகத்தை உடையவனும் – பக்தர்களுக்கு தனது தியானத்தை கற்ப்பிப்பவன் போல் உள்ளவனும் பிரபுவுமான இந்த காமாஸிகா நரஸிம்ஹன் ஸமஸ்த ஜன ஸமஸ்த அபேக்ஷிதங்களையும் அளித்து அருள வேண்டும் –

ஸ்வ ஸ்தாநேஷூ மருத் கணான் நியமயன் ஸ்வாதீன ஸர்வேந்த்ரிய -பர்யங்க ஸ்திர தாரணா ப்ரகடித ப்ரத் யங்முகா வஸ்தித-மருத் கணங்களை ஸ்வ ஸ்வ ஸ்தானங்களில் நியமித்து -ஹிரண்யாசுரன் நலிவால் முன்பு -இல்லையே –
யோக அனுஷ்டானம்-ஹிரண்ய வதம் அனந்தரம் -இரண்டையும் குறிக்கும் -இத்தால்
பிராண அபான பஞ்ச பிராண -அடக்கி -ஒரே ஸ்தானத்தில் ஆத்மஞானம் யோகிகள் பெறுவார்கள் –
இந்திரியங்களை அடக்கி -யோக சித்த விரோதி -மனம் வியாபாரம் அடக்கி –
ப்ராயேண ப்ரணி பேதுஷாம் ப்ரபுரசவ் யோகம் நிஜம் சிக்ஷயன் -காமா நாத நுதாத் அசேஷ ஜகதாம் காமாஸிகா கேஸரீ-மேற்கு முகமாக எழுந்து அருளி -சகல ஜகத்துக்கும் காமங்களை அள்ளிக் கொடுக்க -ஷேமங்களை அருளி
சர்வ பல ப்ரதன்-நாராயணனே நமக்கே பறை தருவான் -உதாரா சர்வம் -என்பவன் அன்றோ
யோகேஸ்வரன் -யத்ர யோகேஸ்வர கிருஷ்ண -சர்வ வித ஷேமமும் கிட்டும் –

——————————————–

விகஸ்வர நக ஸ்வருஷத ஹிரண்ய வஷஸ்தலீ
நிரர்க்கள விநிர்க்கள த்ருதிர சிந்து ஸந்த்யாயிதா
அவந்து மத நாசிகா மனுஜ பஞ்ச வக்த்ரஸ்ய மாம்
அஹம் பிரதமிகாமித ப்ரகடிதாஹவா கவா--6-

விரிந்த திரு நகங்கள் ஆகிற வஜ்ராயுதத்தால் பிளக்கப்பட்ட ஹிரண்யனது மார்பில் இருந்து தடை இல்லாமல் பெறுகிற இரத்த வெள்ளத்தால் அந்திப் பொழுது போலே சிகப்பாக ஆனவைகளும் -நான் முன்னே என்று போட்டி போடுவதில் ஒன்றை ஓன்று மிஞ்சிப் போரிடுவதை வெளிக் காட்டுபையுமான காமாஸிகாவில் இருக்கும் ஸ்ரீ நரஸிம்ஹனுடைய திருக் கைகள் அடியேனை ரக்ஷிக்கட்டும்

விகஸ்வர நக ஸ்வரு ஷத ஹிரண்ய வஷ ஸ்தலீ -நிரர்க்கள விநிர் க்களத்ருதிர சிந்து ஸந்த்யாயிதா-திரு உகிர் ஸ்துதி -இது -வஜ்ராயுதத்துக்கும் மேல் மஹிமை –
பிரகாசிக்கும் -திரு உகிர்கள் -தங்கு தடை இல்லாமல் ரத்தம் பெறுக -சந்த்யா காலம் சூர்யன் சிகப்பு ஒளி போல்
அவந்து மத நாசிகா மனுஜ பஞ்ச வக்த்ரஸ்ய மாம் -அஹம் பிரதமிகா மித ப்ரகடி தாஹவா பகாவா-நான்கு திருக்கரங்கள் -இருபது திரு விரல்களும் அஹம் அஹம் என்று முந்தி -பக்த ரக்ஷண த்வரை-திருக்கரங்கள் –மாம் அவந்து -நம்மை ரக்ஷிக்கட்டும்
கீழே யோகிகளுக்கு –அஹம் ஸ்மராமி மத் பக்திம் என்றவர் தானே –
பக்தஸ்ய பரிபாலனாய –திருவவதாரம் –பஞ்சாயுதங்களுக்கு வேலை இல்லாமல் –
திரு உகிர்களே –ரக்ஷணத்தில் முற்பாடராகி –

——————————————-

சடா படல பீஷணே சரபஸ அட்டஹாஸோத் படே
ஸ்புரத் க்ருதி பரிஸ் புடத் ப்ருகுடிகே அபி வக்த்ரே க்ருதே
க்ருபா கபட கேஸரின் தநுஜ டிம்ப தத்தஸ்தநா
சரோஜா சத்ருஸா த்ருஸா வ்யதிபிஷஜ்யதே வ்யஜ்யதே–7-

கபட கேஸரின்-கபடமான ஸிம்ஹ உரு கொண்டவனே -திரு முகத்தில் பிடரி மயிர்க் கற்றைகளால் பயங்கரமாய் வேகத்துடன் பெரும் சிரிப்பால்-மிடுக்கு உடையவனாய் -துடிக்கும் புருவங்களுடன் கோபம் மூண்டவனாக உன்னால் செய்யப் பட்டாலும்
உன் கருணை போன்ற உன் திருக் கண்களால் அஸுரக் குழந்தை ப்ரஹ்லாதனுக்கு
முலைப்பால் மூட்டி மாறுபட்ட சிகிச்சை செய்தது வெளிப்படுகிறது

சடா படல பீஷணே சரபஸா ட்டஹா ஸோத் படே -ஸ் புரத் க்ருதி பரிஸ் புடத் ப்ருகுடி கேஅபி வக்த்ரே க்ருதே-திரு முகத்தில் பிடரி மயிர் கூட்டங்கள்-அட்டகாசமான ரூபம்
கர்ஜனை மிக்கு -க்ரோதம் மிக்கு -தெளிந்த கோபம் -புருவம் துடித்து -இருந்தாலும் கூட
ரத்த மயம் எங்கும் -இருக்க -மாற்று மருந்து -அருகில்
சீரிய ஸிம்ஹம் -பூவைப் பூ வண்ணன் அன்றோ -சகஜம் இரண்டும்
க்ருபா கபட கேஸரின் தநுஜ டிம்ப தத்த ஸ்தநா -சரோஜா சத்ருஸா த்ருஸா வ்யதிபிஷஜ்ய தே வ்யஜ்யதே–கபடத்தால் கேஸரீ -அசுரன் சிசு பிரகலாதன் -தாய் பாசம் -முலை தருமா போலே சாந்த ஸ்வரூபம் கடாக்ஷம் –
தயை எங்கு இருந்து வந்தது
தாமரை மலர் போலே -பிரகாசம் படுத்தும் கடாக்ஷம் –
சர்வ லோகமும் வாழும் படி –சிகிச்சை -operation success
பிரகலாதனுக்கு -விரோதி நிவ்ருத்தி -என்றபடி
சீற்றத்தோடு அருள் கொடுத்த என் சிங்க பிரான் மஹிமையை யாரால் அறிய முடியும் –

—————————————-

த்வயி ரஷதி ரஷகை கிமன்யை-த்வயி ச அரஷதி ரஷகை கிமன்யை
இதி நிஸ்ஸித தீ ஸ்ரயாமி நித்யம் ந்ருஹரே வேகவதீ தடாஸ்ரயம் த்வாம் –8-சதி ஸப்தமி பிரயோகம் கீழ் ஸ்லோகமும் இந்த ஸ்லோகமும்

ஸ்ரீ நரசிம்ஹர் நீ அடியேனை ரஷித்த பின்பு மற்ற ரக்ஷகர்களால் என்ன பயன் –
நீ என்னை ரக்ஷிக்கா விட்டால் கூட மற்ற ரக்ஷகர்களால் என்ன பயன் என்ற உறுதியான எண்ணத்துடன் வேகவதீ நதிக் கரையிலே நித்ய வாசம் செய்து அருளும் உன்னை அடியேன் எப்பொழுதும் சரண் அடைகிறேன்

த்வயி ரஷதி ரஷகை கிமன்யை-த்வயி சாரஷதி ரஷகை கிமன்யை —அவன் ஒருவனே ரக்ஷகன் -நீ ரக்ஷிக்க முடிவு பண்ணினால் –வேறே யார் வேண்டும் – நீ ரக்ஷிக்கா விடிலும் வேறு யாருக்கும் வேலை இல்லை
கோரமான -உருவம் -பிரகலாதன் முன் பாசம் மிக்க தாய் -பார்த்தோம் –
வேறே எங்கேயும் போக வேண்டாம் —மத்யே விரிஞ்சி –-பிரஜை ரக்ஷணத்துக்காக -சர்வ பூதானாம் ரக்ஷணார்த்தம்-
ப்ரஹ்மா ஸ்வயம்பு –பெருமாள் பற்றி வால்மீகி -இதே போலே -அத்தை ஒற்றியே ஸ்வாமி இங்கே அருளிச் செய்கிறார்
இதி நிஸ்ஸித தீ ஸ்ரயாமி நித்யம் ந்ருஹரே வேகவதீ தடாஸ்ரயம் த்வாம்
நரசிம்மனே –திரு வேளுக்கை எழுந்து அருளி -உன்னை அண்டி சேர்ந்து அடைக்கலம் அடைந்து நிம்மதியாக இருப்போம் –
நிச்சயித்த தீ -புத்தி அத்யாவசியம் உடன் -இருப்போம் –

——————————————————————-

இத்தம் ஸ்துத ஸக்ருதி ஹாஷ்ட பிரேஷ பத்யை
ஸ்ரீ வேங்கடேச ரசிதை ஸ்திரித சேந்த்ர வந்த்ய
துர்த்தாந்த கோர துரித த்விர தேந்த்ர பேதீ
காமாஸிகா நர ஹரிர் வித நோது காமான் –-9-

அடக்க முடியாத கொடிய பாபங்கள் ஆகிய பெரிய யானைகளைப் பிளப்பவனும்
உயர்ந்த தேவர்களாலும் ஆஸ்ரயிக்கப் படுபவனான இந்த காமாஸிகா நரஸிம்ஹன்
ஸ்ரீ வேங்கடேச கவியால் இயற்றப்பட்ட இந்த எட்டு ஸ்லோகங்களும் இவ்வாறு இவ்வுலகில்
ஒருமுறை ஸ்துதிக்கப் பட்டு சர்வ அபேக்ஷிதங்களையும் அளித்து அருளுவானாக –

இத்தம் ஸ்துத ஸக்ருதி ஹாஷ்ட பிரேஷ பத்யை -ஸ்ரீ வேங்கடேச ரசிதை ஸ்திரித சேந்த்ர வந்த்ய-ஸ்வாமி தேசிகன் -8-ஸ்லோகங்கள் -ஒரு தடவை அனுசந்தித்து -கர்த்தா -ஞான அனுஷ்டான சம்பன்னர் அன்றோ –
இத்தம் இஹ ஸக்ருத் -இந்த இடத்தில் ஒரு தடவை —அஷ்டபி -திரு அஷ்டாக்ஷரம் போலே இந்த ஸ்லோகம் –
துர்த்தாந்த கோர துரித த்விர தேந்த்ர பேதீ-காமாஸிகா நர ஹரிர் வித நோது காமான் —
அவனே அனைவராலும் ஆச்ரயிக்கப் பட வேண்டும் -அனுசந்திப்பார்களுக்கு சகல பலன்கள்
யானை போன்ற பாபங்கள் செய்து இருந்தாலும் -ஹரியாலும் சகிக்க முடியாதபடி இருந்தாலும் –அவற்றைப் போக்கி அபேக்ஷிதங்கள்
அனைத்தையும் அருளுவான் -காமான் வித நோது –சர்வ சக்தன் –
மற்ற அவதாரங்கள் விட ஸ்ரேஷ்டம் -பக்த ரக்ஷணம் -அவதரித்த அன்றே –வ்யாபரித்தான் அன்றோ –

——————————

இதி காமாஸி காஷ்டகம் சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலி நே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading