அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த -அருளிச் செயல் ரகஸ்யம்-சரம ஸ்லோக பிரகரணம் -உத்தரார்த்தம் -ஸ்ரீ உ .வே .வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ரகஸ்ய பூஷணம் –

உத்தரார்த்த நிரூபணம் –
இப்படி தன்னைப் பற்றினவனுக்கு உபாயமான தான் செய்யுமது சொல்லுகிறான் பிற்கூற்றால் –

———————————————-

உத்தரார்த்த ப்ரமேயத்தை சங்க்ரஹிக்கிறார் -இப்படி -என்று தொடங்கி –
உத்தரார்த்தம்
உபாயத்தினுடைய க்ருத்ய அம்சத்தைச் சொல்லி
அதிகாரியினுடைய க்ருத்ய அம்ச லேசத்தையும் சொல்லுகிறது -என்பர்

க்ருத்ய அம்ச லேசத்தையும்-சோகப்படாமல் இருக்க வேண்டுமே நாம்

(குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் அஹம் அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலம் த்வா
நந்த கோபன் குமரன் மாம் யசோதை இளம் சிங்கம் அஹம்-
அடியேன் மாம் – ஏவிற்றுச் செய்யும் பரதந்த்ரன் புருவ நெறிப்பைப் பார்த்து தேர் ஒட்டி தூது சென்று –
ஏறிட்டுக் கொண்டான் -ஸ்வரூபம் இல்லையே –
நான் அஹம்-நிரங்குச ஸ்வ தந்த்ரன் இது தானே ஸ்வரூபம்
வஸூ பிரத-இரண்டு தரம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் -இந்த இரண்டையும் சொல்லுமே- )

—————————————————————————————————

அஹம் -பதார்த்தம் ..
அஹம் -தான் –
தனக்கு ஏவிற்றுச் செய்கிறது (பெரியாழ்வார் திரு மொழி 4-2-6 )
ஸ்வாதந்த்ரியத்தின் மிகுதியாலே -எளிமையாக நினைத்து அஞ்சுகிறவன் தேறும்படி
அந்தமில் ஆதி அம் பகவனான (திரு வாய் மொழி 1-3-5 ) தன் நிலையை –
நான் -என்று வெளி இடுகிறான் —

மாம் -என்றால் பற்றுகைக்கு உறுப்பான வாத்சல்யாதிகள் நான்கும் தோன்றுமாப் போல
அஹம் -என்றால் காரியம் செய்கைக்கு உறுப்பான -ஞானமும் /சக்தியும் /கிருபையும் /பிராப்தியும் தோன்றும் ..

நிறை ஞானத்து ஒரு மூர்த்தி (திரு வாய் மொழி 4-8-6 )
(நெறி எல்லாம் எடுத்து உரைத்த -பரி பூரணமான ஞானமே உரு கொண்டு வந்த ஸ்ரீ கீதாச்சார்யன் )-என்றும் –

ஆற்றல் மிக்கான் (திரு வாய் மொழி 7-6-10 )
(கஞ்சனைக் கொன்று ஐவரக்காய்க் கொடும் சேனை தடித்து ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரிய
தர்மன் -முடியில் கிரீடம் -திரௌபதி குழல் முடிக்க – )-என்றும் –

அருள் செய்த நெடியோன் ( திரு வாய் மொழி 3-7-11)
(நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த நெடியோன்)-என்றும் –

இரு நிலத்தவித்த எந்தாய் ( திரு வாய் மொழி 3-2-3)
(கொல்லா மாக் கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் )-என்றும்
தேர் தட்டின் நிலையிலே இந்நாலு குணத்தையும் ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் ..

இவை எல்லா வற்றிலும் இவ் இடத்திலே சக்தியிலே நோக்கு ..
எல்லா பொருளும் கருத்தினால் (சங்கல்பத்தாலே) உண்டாக்குவதிலும்

எப்பொருட்கும் ஏண் பாலும் சோராமல் நிற்ப்பதிலும் (திரு வாய் மொழி 2-8-8- ) -என்றும் –
(ஸ்ருஷ்டித்த பின்பு அநு பிரவேசித்து -பரந்து உள்ளான் )

முப்பொழுதும் அகப்படக் கரந்து ஓர் ஆல் இலையில் சேர்வதிலும்-( திரு வாசிரியம் -7) -என்றும் –

மறுவில் மூர்த்தியோடு -(ப்ருதக் ஸ்திதி அநர்ஹமாய் நிற்குமே )இத்தனையும் நின்ற வண்ணம்( திரு வாய் மொழி 4-10-10 )
நிற்கும் நிலையிலும் அரியது –

தான் ஒட்டி ( திரு வாய் மொழி 1-7-7 -ஒரே சொல்லால் அவன் செய்த கார்யம் இதுவே)
இவனுடைய நீங்கும் விரதத்தைக் குலைத்து (நல் வீடு செய்யும் மாதா பிதா திருமால் -திரு விருத்தம் -95 )
மேவும் தன்மையையும் ஆக்கி ( வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய் மொழி 2-7-4)
திருத்திப் பணி கொள்ள ( திரு வாய் மொழி 3-5-11 ) வல்லனாகை இறே ..

மாம் -என்றால்
கோல் கையில் கொண்டு-(பெரிய திரு மொழி-2-3-1) தேவாரம் கட்டி அவிழ்கிற அர்ஜுனன் கால் பொடி தன் முடியிலே உதிர
ரத்யங்களை விடுவித்துக் கொண்டு
சொலவுக்குச் சேராதபடி நிற்கிற சௌலப்யம் தோன்றும் –

அஹம் -என்றால்
திருச் சக்கரம் ஏந்தும் கையனாய் ( பெரியாழ்வார் திரு மொழி 4-1-7 )
தார் மன்னர் (பெரிய திரு மொழி 11-5-8 ) தங்கள் தலையிலும்
சிவன் முடியிலும் (திரு வாய் மொழி 2-8-6 )ஆன
தன் காலில் உதறி விழ
பாபங்களை அறுக்கிறேன் என்று கொண்டு
செயலுக்குச் சேரும் படியான பரத்வம் தோன்றும் —

——————————————————————————–

மேலே உத்தரரார்த்திலே -பிரதம பத அர்த்தம் -அருளிச் செய்கிறார் –
அஹம் -என்று தொடங்கி –
இவ்விடத்தில் மோக்ஷயிஷ்யாமி -என்கிற உத்தமனாலே
நான் -என்று தோற்றா நிற்க -மிகுதியான -அஹம் -என்னும் பதம் அர்த்த ஸ்வபாவத்தாலே
சர்வ பாப விமோசனத்துக்கு உறுப்பான அகடிதகடநா சக்த்யாதிகளை விவஷித்து சப்ரயோஜனம் ஆகிறது
(ஆலிலை விருத்தாந்தம் விட யாதேனும் பற்றி விலகும் நம்மை கூட இசைவித்து சேர விடுதல் பெரிய சாமர்த்தியம் தானே)

அபராதம் பண்ணினவனை விலங்கு இட்டு வைத்த சமாதிக தரித்ரனான நான்
அப்ரதிஷேத மாதரத்தையே கொண்டு
அபராதத்தை பொறுத்து விடும் போது விலக்க வல்லார் இல்லை –
வேறு ஒருவனாலே இவனை முக்தனாக்கவும் ஒண்ணாது -என்று இங்கு தாத்பர்யம்

இவ்வர்த்தம் -மோக்ஷ தோ பகவான் விஷ்ணு -என்றும் –
பஸவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வ லீலையா -தே நைவ மோச நீ யாஸ்தே நான்யைர் மோஸயிதும் ஷமா -இத்யாதிகளிலே பிரசித்தம் –

கீழில் பாரதந்தர்யம் இந்த ஸ்வாதந்தர்யத்தினுடைய எல்லை நிலம் -என்று அருளிச் செய்கிறார் –
தனக்கு -என்று தொடங்கி –
இப்பதத்தில் மாம் என்கிற இடத்தில் சாரதியாய் நின்ற பாரதந்தர்யத்துக்கு எதிர்த்தட்டான தன் ஸ்வாதந்தர்யத்தை பிரகாசிப்பித்தமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் -எளிமையாக -இத்யாதி –

அதாவது மாம் -என்று சாரத்ய வேஷத்தோடே நிற்கிற தன்னைப் பற்றச் சொன்ன போது அர்ஜுனன் –
தன்னுடைய ரக்ஷண அர்த்தமாக ஏறிட்டுக் கொண்ட சாரத்ய வேஷத்தை –
சர்வாதிகன் ஆனவன் இப்படித் தாழ நின்றது தன் குணத்தால் இறே -என்று அவனை இட்டுப் பாராதே
நமக்கு இழி தொழில் செய்து சாரதியாய் நிற்கிறவன் அன்றோ -என்று தன்னை இட்டுப் பாராதே –
சர்வ தர்மங்களையும் விட்டு என்னை பற்று என்னா நின்றான் இது என்னாக கடவது -என்று அஞ்சின அச்சம் தீர –
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகனாய்க் கொண்டு
நிராங்குச ஸ்வ தந்திரனாய் இருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை அஹம் என்று -தர்சிப்பிக்கிறான் -என்கை

இப் பதத்தில் பிரகாசிக்கும் குணங்களை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –
மாம் என்றால் என்று தொடங்கி –
இதில் அஹம் சப்தம் வ்ரஜவில் ஆர்த்தமாகப் புகுந்த அதிகாரியினுடைய மஹா விசுவாசத்துக்கு ஊற்றாய்-
மேல் சொல்லப் புகுகிற பாப விமோசனத்துக்கு பரிகரமான
ஞான சக்த்யாதி குண விசேஷங்களை -கீழ் மாம் -என்று ஆஸ்ரயணீயமாக யுக்தமான வஸ்துவுக்கு பிரகாசிப்பிக்கிறது –
ஆஸ்ரயிக்கைக்கு வாத்ஸல்யாதிகள் வேணும் –
கார்யம் செய்கைக்கு ஞான சக்த்யாதிகள் வேணும் –

நிவர்த்ய அம்சம் இன்னது -நிவர்த்தன பிரகாரம் யின்னது – நிவர்த்தன அதிகாரி இன்னான் -என்று அறிகைக்கு சர்வஞ்ஞனாக வேணும் –

ஞானம் பிறந்தால் மாத்திரம் பிரயோஜனம் இல்லை –
பங்கு கல்பனாய் அசக்தனாய் இருக்குமாகில் –ஆகையால் ஞான அனுகுணமாக கார்யம் செய்கைக்கு சர்வ சக்தியாக வேணும்

சர்வ சக்தியானாலும் இவன் இடும் பச்சை கொண்டு குறை தீர வேண்டும்படி அபூரணனாய் இருக்குமாகில் –
அவனுக்கு ஈடாக இவனால் இடலாவது ஓன்று இல்லாமையால் -அவை இரண்டும் அகிஞ்சித்க்கரம் இறே –
அங்கன் அன்றியிலே ஒழியும் போது அவாப்த ஸமஸ்த காமன் ஆக வேணும்

சர்வஞ்ஞன் ஆனாலும் சர்வ சக்தன் ஆனாலும் அவாப்த ஸமஸ்த காமன் ஆனாலும் இச் சேதனன் உடன் சம்பந்தம் இல்லாத அன்று
அவை மூன்றும் கார்யகரம் ஆகாதே -அதுக்கு சர்வ ஸ்வாமி யாக வேணும் –

இவை நாலும் விபரீத பலம் ஆகாதே இவனுடைய ரக்ஷணத்துக்கு உறுப்பாம் போதைக்கு
பர துக்க அஸஹத்வ லக்ஷணமான பரம தயை உடையனாகை வேணும்-
இல்லாத வன்று சர்வஞ்ஞத்வம் இச் சேதனன் பண்ணின குற்றங்களை தப்பாமல் கணக்கு இடுகைக்கு உறுப்பாய் அறும்-
சர்வ சக்தித்வம் அக் குற்றங்களுக்கு ஈடாக நரகாதிகளில் தள்ளி அறுத்து அறுத்து தீற்றுகைக்கு உறுப்பாய் அறும் –
தீற்றா நின்றால் கண் பார்த்து நெகிழமைக்கு உறுப்பாய் அறும் -அவாப்த ஸமஸ்த காமத்வ நிபந்தமான நைரபேஷ்யம்-
இங்கன் செய்யா நின்றால் கடவதல்ல என்று நியமிப்பார் இல்லாமைக்கு ஹேதுவாம் இத்தனை
சர்வ ஸ்வாமித்வ ப்ரயுக்தமான நிரங்குச ஸ்வாதந்தர்யம் –

ஆகையால் சர்வஞ்ஞத்வத்தை ரக்ஷண விதயா விஷயம் ஆக்குகைக்கும்
சர்வ சக்தித்வத்தை ரக்ஷண வியாபாரத்தில் ஆக்குகைக்கும் –
அவாப்த ஸமஸ்த காமதையை பிரயோஜன நிரபேஷமாக ரஷிக்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும்
சர்வ ஸ்வாமித்வத்தை தன் பேறாக கார்யம் செய்கைக்கு உறுப்பு ஆக்குகைக்கும் தயை வேணும்

தோஷா பவேயுரே தே நாம தயே த்வயா விநா பூதா -இறே –
ஆகையால் இக்காரியம் செய்கைக்கு உறுப்பான இந்த ஐந்து குணங்களும் –
அஹம் -சப்தத்தில் அனுசந்தேயம் –
ஆக சர்வஞ்ஞனுமாய் -சர்வ சக்தியுமாய்-அவாப்த ஸமஸ்த காமனுமாய் -சர்வ ஸ்வாமியுமாய் -பரம தயாவானுமான –
நான் என்றதாயிற்று –

சரம ஸ்லோகத்தில் -மாம் -அஹம் -என்கிற -பதங்களால் சொல்லப் படுகிறது உபய வித குணம் இறே –
அதாவது
உச்சார யித்திருத்வ உபலஷித தர்ம அவச்சின்ன வாசியான -அஸ்மத் -பதம் –
வ்ரஜ -மோக்ஷயிஷ்யாமி -என்கிற வ்ரஜந மோஷண ரூப க்ரிய அந்வய யோக்யதா வச்சேதகங்களான
வாத்சல்யாதிகளையும் ஞானாதிகளையும் சொல்லும் என்றபடி –

இந்த அஹம் பதத்துக்கு எக்குணத்திலே நோக்கு என்பதனை அருளிச் செய்கிறார் –
இவை -என்று -தொடங்கி —
இப்பதத்துக்கு சக்தியிலே நோக்கு என்றது இங்கு சக்தி விசேஷத்திலே நோக்கு என்றபடி
சக்த்யந்தரங்களை கழித்து சக்தி விசேஷத்தை சப்தார்த்தமாக அறுதி இடுகிறார் எல்லா பொருளும் என்று தொடங்கி –
அவற்றுக்கு தன் நினைவே அமையும் –
இங்கு எதிர்தலையை இசைவிக்க வேணும் –
ஆகையால் அவற்றைக் காட்டிலும் இதுக்கு ஆதிக்யம் உண்டு என்றபடி –
இந்த ஞானாதி குணங்கள் சேதனனுடைய அநந்ய சாதனத்வ விவசாயத்துக்கு அடியாகவும் –
ஈஸ்வரனுடைய விரோதி நிரசனத்துக்கு பரிகரமாகவும் இருக்கும் –

மாம் என்று தன் ஸுலப்யத்தைக் காட்டினான் -அஹம் என்று பரத்வத்தைக் காட்டுகிறான் -மாம் என்கிற நிலையில் –
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்-11-5-8- -என்னும் ஸுலப்யம் தோற்றும் —
அஹம் என்கிற நிலையில் தார் மன்னர் தங்கள் தலை மேலான் 11-5-8–என்னும் பரத்வம் தோற்றும் –
மாம் என்று -பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான்-2-3-1- -என்றும்
கொல்லா மாக் கோலான உழவு கோலும் கையுமாக நிலையைக் காட்டினான் –
அஹம் என்று வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்து கையன் -என்று
கையும் திரு வாழியுமான வடிவைக் காட்டுகிறான் -என்னும் இவ்வர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
மாம் என்றால் என்று தொடங்கி –

தேவாரம் கட்டி அவிழ்க்கிற -சிவ பூஜை செய்கிற –
இத்தால் பூர்வ உத்தர அர்த்தங்களில் பகவத் வாசகங்களான -மாம் -அஹம் சப்தங்களுக்கு அர்த்த பேதம்
அருளிச் செய்து அருளினார் ஆயிற்று –

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் என்கையாலே -தர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டினான் –
அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே அதர்ம நிவர்த்தகமான வேஷத்தைக் காட்டுகிறான் –
(இரண்டும் தொலைத்து தானே பரமம் சாம்யம் அடைவோம்)

மாம் என்று சரணம் என்கிற யுக்தி மாத்ரத்தையும் சஹியாத நிரபேஷமான நிலையாகையாலே
உக்திக்கு விபரீதமான நிலையைக் காட்டினான் –
அஹம் என்று பாப விமோசகத்துவத்தாலே அனுஷ்டானத்துக்கு விபரீதமான நிலையைக் காட்டுகிறான் -என்றபடி –
(வாயால் சொல்லவும் ஸஹிக்காத எளிமையும் நம் ப்ரயத்னத்தையும் சஹியாத மேன்மையும் இவற்றால் காட்டினான்)

அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே பந்தகனான நானே விமோசகன் ஆனால் வேறு நிவாரகனும் உண்டோ என்று
தன்னுடைய சாமாப்யதிக ராஹித்யத்தை சொல்லுகிறான் –
அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ்ஞாஸ்ய -இறே
(மோக்ஷம் பெற அவனே விருப்பத்துடன் தேடப்படுகிறான்)

ஆக இவ்வளவால் உத்தரராத்த பிரதம பதார்த்தம் அருளிச் செய்தார் யாயிற்று –

————————————————————————————

த்வா -பதார்த்தம் ..
த்வா -என்று உபாயத்தைப் பற்றினவன் உடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
த்வா -உன்னை
அறிவிலேனுக்கு அருளாய் (திரு வாய் மொழி 6-9-8 ) என்றும் –
அறியோமை என் செய்வான் எண்ணினாய் ( பெரிய திருவந்தாதி -6) -என்றும் –
என் நான் செய்கேன் (திரு வாய் மொழி 5-8-3 ) என்றும்
அஞ்ஞானத்தையும் அசக்தியையும் ,அபிராப்தியையும் ,அபூர்த்தியையும் , முன் இட்டுக் கொண்டு
என்னையே உபாயமாக பற்றின உன் பற்றை உபாயம் என்று இராதே
என்னுடைய ஞான சக்திகளில் அதி சங்கை அற்று இருக்கிற உன்னை —

(ஒன்றும் இல்லாத நான்-உன்னையே பற்றின நான் – -பற்றினதும் உபாயம் அன்று என்று
தெளிந்த -மஹா விசுவாசம் உள்ள நான் -இப்படி நான்கும் இங்கு உண்டு
மோக்ஷம் போக ஆசை கொண்ட நான் -அவன் மேல் பரத்தை வைத்த நான் -என்றவாறு )

(நாராயணனே -அஹம்/ நமக்கே -த்வா-இங்கே அநிஷ்டம் போக்குகிறேன் –
அத்தை எதற்கு நம் வாயால் சொல்ல வேண்டும் பறை தருவான் -இஷ்ட பிராப்தி -ஸ்ரீ கோதா உபநிஷத் ஏற்றம் )

—————————————————————————

அநந்தரம் த்வதீய பதார்த்தம் அருளிச் செய்கிறார் -த்வா -என்று தொடங்கி –
அஹம் சப்தத்தாலே பாப சத்ருவையும் –
த்வா -என்கையாலே பாப ஆஸ்ரயத்தையும் சொல்லிற்று ஆயத்து –

————————————————————————————————————————–

சர்வ பாபேப்யா -சப்தார்த்தம் ..
இவனுக்குத் தான் கழிக்கும் விரோதிகளை -சர்வ பாபேப்யோ -என்கிறான் ..
எல்லா பாபங்களில் நின்றும் –

பாபம் ஆவது -இஷ்டத்தைக் குலைத்து அநிஷ்டத்தைத் தருமது ..
இவ் இடத்தில் ஞானத்துக்கும் ருசிக்கும் , உபாயத்துக்கும் –
விலக்கு கழிந்த பின்பு
பிராப்திக்கு இடைச் சுவராய் கிடக்கும் அவற்றைப் பாபம் என்கிறது –

(பிபதி -பஷயதி-கர்த்தாராம் பாபம்-துரிதம் -அகம் -நம்மையே உண்ணும் குடிக்கும் ஸ்வரூபத்தை அழிப்பதே பாபம் –
அநிஷ்டம் கொடுக்கும் இஷ்டம் தடுக்கும்
புன-ஸூப கர்மங்கள் அடைய யோக்யம் உள்ளவன் -புண்ய வேலை இஷ்டம் கொடுக்க அநிஷ்டம் தவிர்க்க –
தாது அர்த்தம் -புண்ய பாப ரூப கர்மாக்கள்
இங்கே சொல்வது இரண்டையும் -பாப சப்தம் கர்மாவையே குறிக்கும்

ஞான விரோதி -தத்வ த்ரயம் அறியாமல் பண்ணும் -பாபங்கள் –
ஆச்சார்யர் உபதேசம் பெற்று தாண்ட
ருசி விரோதி -இந்திரியங்களின் ஆசை -விஷயாந்தரங்கள் –
உபாய விரோதி – உபாயாந்தரங்கள் -ஸ்வ தந்த்ர அபிமானம் –
மூன்றையும் தாண்டி
பிரகலாதன் வாமனை வளர வேண்டாம் என்று தடுத்தானாம் -பேரனுக்காக –
துருவன் ஆறாம் மாசம் சேவித்து நக்ஷத்ரம் பதவி -32000-வருஷம் ஆண்ட பின்பே முக்தி
வசிஷ்டர் -சக்தியை கொன்றவன் மேல் கோபம் -பிள்ளை அபிமானம்
இப்படி பாபங்கள் ஒட்டிக் கொண்டே இருக்கும்
ப்ராப்ய விரோதி -ஸூவ போக்த்ருத்வ புத்தி-பிரபல விரோதி-
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்-மாயக் கூத்தன் -ஒரே பாசுரம் 8-2-8-
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண் கொடானே –
விலக்ஷண மோக்ஷ அதிகாரம் -எறும்பி அப்பா –
ஸ்வீ கார சித்த -மோக்ஷம் கேட்டு அதுக்கு வேண்டிய அனைத்தையும் -நீயே தந்து அருள வேண்டும்
ஆச்சார்ய ஹ்ருதயம் -100-இவ்வளவும் பிரப்யமாக பிரார்த்திப்பார்
ஞானம் ப்ரேமம் விஷயாந்தர ப்ராவண்யம் குலைத்து ருசி வளர்த்து கூட்டிச் செல்ல
மார்க்க மத்யத்தில்-பிராப்திக்கு முன்னே இவை சித்திக்கும் –
கத்யத்திலும் இதே பிரார்த்தனை
அதிகாரம் வளர்த்த இவனுக்கு -தடங்கல் இல்லாமல் அவனுக்கு பிடித்தமாக இருக்க வேண்டும் –
ஏகாந்தி -அவனே புருஷார்த்தம்
பரம ஏகாந்தி -அவனே உபாயம்
தினம் தினம் இவற்றை நோக்கி போக வேண்டுமே
ஆழ்வாருக்கே அதிகாரம் வளர இங்கே வைத்து இருந்தானே – )

முமுஷுக்கு பாபம் போல புண்ணியமும் ( திரு வாய் மொழி 6-3-4-திரு விண்ணகர் பாசுரம் -இவையாய் -உனக்கு சரீரம் விசேஷணங்கள் )
துயரமே தருகையாலே (துன்ப இன்ப வினைகளாய்-திரு வாய் மொழி 3-6-8 )
இரு வல் வினைகள் (சரித்து மாயப் பற்று அறுத்து- திரு வாய் மொழி 1-5-10 ) என்று
புண்ணியத்தையும் பாபத்தையும் சேரச் சொல்லுகையாலே
( பிராப்தி விரோதிகள் இவை என்பதால்) இவை இரண்டையும் பாபம் என்கிறது

பாபங்கள் என்கிற பன்மை
பொய் நின்ற ஞானம் ( திரு விருத்தம் -1) என்கிற அவித்யை முதலாக
பிரகிருதி சம்பந்தம் முடிவாக நடுவு பட்டவை எல்லாவற்றையும் காட்டுகிறது —
(அவித்யை -அது அடியாக தப்பான கர்மாக்கள் -வாசனை -ருசி -சரீரம் ஜென்மம் பிரகிருதி சம்பந்தம் இவை
ஒரு வித அவித்யை போனாலும் வேறு வித அவித்யை ஒட்டிக் கொண்டு இருக்குமே
அதனால் தான் கீழே வசிஷ்டர் இத்யாதி த்ருஷ்டாந்தங்கள் )

சர்வ சப்தம் –
உபாயத்தைப் பற்றியும் -உடம்போடு இருக்கைக்கு அடியான வற்றையும் ,
(உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்கின்றேனே)
இருக்கும் நாள் நினைவற புகுரும் அவற்றையும்
கருத்து அறியாதே உத்தேச்ய விஷயங்களில் உபசாரம் என்று பண்ணும் அவற்றையும்
(உபசாரம் -அபசாரம் சர்வம் க்ஷமஸ்வ -சொல்கிறோம்)
உகப்பாகச் செய்யும் அவற்றில் உபாய புத்தியையும்
நாட்டுக்கு செய்யும் அவற்றை தனக்கு என்று இருக்கையும்
வாசனையாலே விட்டவற்றில் மூளுகையும் —
அவற்றை உபாயம் என்று அஞ்சாது இருக்கையும்
துணிவு குலைந்து மீளவும் உபாய வரணம் பண்ணுகையும் சொல்லுகிறது —

இப்படி உபாயத்திலும் அதிகாரத்திலும் குறைவற்ற பின்பு -விரோதிகளில் கிடப்பது ஓன்று இல்லை இறே ..

——————————————————————

மேலே த்ருதீய -பதார்த்தம் அருளிச் செய்கிறார் -இவனுக்குத் தான் -என்று தொடங்கி –
இப்படி பந்த மோக்ஷ சக்தனான மோக்ஷ ப்ரதனையும்-
அசக்தனாய் -அவன் பக்கலிலே ந்யஸ்த பரனான-முமுஷுவையும் சொல்லி-
மேல் சர்வ பாபேப்யோ -என்று பந்தகங்களை சொல்லுகிறது என்றபடி –

இதுவும்- பாப பதமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் -த்ரிபிரகாரமுமாய் இருக்கையாலே
இம் மூன்றையும் உட் கொண்டு
இப்பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -பாபமாவது -என்று தொடங்கி

பூர்வார்த்தத்தில் தர்ம சாமான்ய வாசகமான தர்ம சப்தத்துக்கு பர தர்ம ரூப விசேஷத்தில் சங்கோசம் சொன்னால் போலே
உத்தரார்த்தில் பாப சாமான்ய வாசியான பாப சப்தத்துக்கு பாப விசேஷத்தில் சங்கோசத்தை அருளிச் செய்கிறார் —
இவ்விடத்தில் என்று -தொடங்கி –

இங்கு பாப சப்தம் புண்ணியத்தையும் சொல்லுகிறது என்கிறார் -முமுஷுவுக்கு -என்று தொடங்கி –
அதாவது –
இங்கு பாப சப்தம் -முமுஷுவைப் பற்ற அநிஷ்ட பலங்களான சாம்சாரிக புண்யங்களையும் சொல்லுகிறது
ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தாநஸ்ய பரமாத்மன -என்கையாலே
ஸ்வர்க்காதிகளும் முமுஷுவுக்கு நரகம் ஆகையால் இவனுக்கு ஸ்வர்க்க ஹேதுவோடு நரக ஹேதுவோடு வாசி இல்லை –
ஆகையால் இறே முமுஷுவுக்கு பாபங்களை விடச் சொல்லுகிறாப் போலே –
த்ரை வர்க்கி கான் த்யஜேத் தர்மான் -என்று விதிக்கிறது –

இரு வல் வினைகளும் சரித்து -1-5-10-என்கிறபடியே
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் இரண்டும் முமுஷுவுக்கு நிராகரநீயங்களாக இறே ஸ்ருதி ஸ்ம்ருதிகள் சொல்லுகின்றன என்றபடி –
பஹு வசன அர்த்தம் அருளிச் செய்கிறார் -பாபங்கள் -என்ற பன்மை -என்று –

பற்றோடு அறுத்து -கண்டு கொண்டு -என் கண்ணினை ஆரக் களித்து -தர்சனம்-பேறு முதலில் -பின்பு வினைகள் கழன்று போனமை அறிந்தார் ஆழ்வார்
ராஜ குமாரனை முடி சூட்டிய பின்பு விலங்கு அறுப்பது போலே சர்வ சப்தார்த்தம் அருளிச் செய்கிறார்
சர்வ -என்று தொடங்கி –
அதாவது சர்வ சப்தத்தாலே இந்த அதிகாரிக்கு ஈஸ்வரன் விசேஷித்து கழிக்கும் பாபத்தைச் சொல்லுகிறது -என்றபடி –

——————————————————————————————————–

மோக்ஷயிஷ்யாமி – சப்தார்த்தம்
மோக்ஷயிஷ்யாமி -என்று பாபங்களை விடுவிக்கும் படியைச் சொல்லுகிறது
மோக்ஷயிஷ்யாமி -முக்தன் ஆக்குகிறேன் –

பண்டை வினை ஆயின (திரு வாய் மொழி 9-4-9 ) -என்றும் –
(பற்றோடு அறுத்து -கண்டு கொண்டு -என் கண்ணினை ஆரக் களித்து -தர்சனம்-பேறு முதலில் –
பின்பு வினைகள் கழன்று போனமை அறிந்தார் ஆழ்வார்
ராஜ குமாரனை முடி சூட்டிய பின்பு விலங்கு அறுப்பது போலே
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலை சொல்லும்படி ஆக்கி அருளிய அண்டத்து அமரர் பெருமான்)

சும்மெனாதே கை விட்டு ( பெரியாழ்வார் திரு மொழி 5 -4-3)-என்றும் –
(நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர் பெறுவார் -சும்-என்று சொல்ல வேண்டாதபடி
கை விட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே – )

விண்டே ஒழிந்த (திரு வாய் மொழி 10-4-9 ) என்றும் –
(கண்டேன் கமல மலர்ப் பாதம் -காண்டலுமே-அனுபவம் ஆரம்பிக்கும் பொழுதே –
வினை ஆயின எல்லாம் -சர்வ பாபேப்யோ —பண்டே பரமன் பணித்த வகையே)

கண்டிலமால் ( பெரிய திருவந்தாதி -54) என்னும் படி
(மஹா புரஸ்தானம் -பெரிய புறப்பாடு -இவை வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் )
பாபங்கள் உன்னைக் கண்டு அஞ்சிப் போன இடம் தெரியாது போம்படி பண்ணுகிறேன் ..

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு (திருப் பாவை -5 ) பாபங்களைப் போக்கும் போது
தீயினில் தூசாகும் ( திருப் பாவை -5) என்கிறபடியே பின்பு முகம் காண ஒண்ணாது இறே —

வல் வினை மாள்வித்து (திரு வாய் மொழி 1-6-8 ) என்றும் –
(தொழுமின் அவனை -தொழுதால் -ஆத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தம் போலே இணைந்து உள்ள
வல் வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே)

தன் தாளின் கீழ் சேர்த்து (திரு வாய் மொழி 7-5-10 ) என்று
(வார்த்தை அறிபவர் –பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து)

விரோதி கழிகையும் ,
தன்னைக் கிட்டுகையும் பேறாய் இருக்க
ஒன்றைச் சொல்லிற்று மற்றையது தன் அடையே வராதோ என்று ..
மாணிக்கத்தை மாசறுத்தால் ஒளி வரச் சொல்ல வேணுமா ?
(சம்பந்தம் நித்யம் -தடை மட்டுமே நீக்க வேண்டியது)

வானே தருவான் அன்றோ தடுமாற்ற வினைகள் தவிர்க்கிறது( திருவாய் மொழி 10-8-5 )
(எனக்காய் என்னோடு ஒட்டி ஊனே குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் —
எனவே வினைகள் தவிரவே வான் சித்தம்)
இறந்தால் தங்கும் ஊர் அண்டம் அன்றோ ( பெரிய திருமொழி-10-2-10 )
முன்பில் உபாயத்துக்குச் சொன்ன பலமே இதற்கும் பேறான பின்பு இதற்கு தன் ஏற்றம் விரோதி கழிகை அன்றோ
என்று அவ்வளவைச் சொல்லுகிறான் —
(பக்தி விட பிரபத்திக்கு ஏற்றம் -பேற்றில் வாசி இல்லை -சரீர அவசானத்தில்-மரணமானால் வைகுந்தம் அன்றோ இங்கு )

————————————————————————–

இந்த சதுர்த்த பதார்த்தம் அருளிச் செய்கிறார் -மோக்ஷயிஷ்யாமி -என்று தொடங்கி –
இந்த ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி ரூப பலத்தைச் சொல்லாமையாலே வரும் குறையைப் பரிஹரிக்கிறார் –
வல்வினை -என்று தொடங்கி
அதாவது விரோதி நிவ்ருத்தியும் -அபிமத பிராப்தியும் -இரண்டும் பலமாய் இருக்க ஒன்றைச் சொல்லுவான் என் என்னில்
ஓன்றைச் சொன்னால் மற்றையது தன்னடையே வருகையால் சொல்லிற்று இல்லை –
இங்கே சேது பங்க ஸ்ரோத ப்ரவ்ருத்தி நியாயம் அனுசந்தேயம் –
(அணை திறக்க தண்ணீர் பாய்ந்து ஓடி வருமே)
மாமேவைஷ்யஸி-என்று கீழில் உபாயத்துக்குச் சொன்ன பலம் ஒழிய இவ்வுபாயத்துக்கு வேறு பலம் இல்லாமையால்
சொல்லிற்று இல்லை என்னவுமாம் -என்றபடி

ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னை சொல்லுவான் என் என்ன அருளிச் செய்கிறார் -முன்பில் என்று தொடங்கி –
அது அதிகம் ஆகையால் சொல்லிற்று என்றபடி
ஆகை இறே -ஆ விஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய-என்று அஷ்ட ஸ்லோகியில் பட்டர் அருளிச் செய்தது –
(சஹஜ கைங்கர்யம் தானே ஏற்படட்டும்)

இத்தால் சாதாநான்தர நிஷ்டனுக்கு –
போகேனே து இதரே ஷபயித்வா அத சம்பத்யதே–4-1-19–என்று
(அனுபவித்தால் அன்றோ -அதை தவிர மற்றவற்றை போக்கி -மோக்ஷம் -பக்தனுக்கு)
பூர்வ உத்தர ராகங்களை ஒழிந்த
ப்ராரப்தமான புண்ய பாபங்கள் இரண்டையும் போகத்தாலே கழித்து அநந்தரம் ப்ராப்தியைப் பெறும் என்கையாலே
பிராரப்த கர்ம அனுபவ அபேக்ஷை உண்டு –
அது பிரபன்னனுக்கு இல்லையாய் இருக்கும் என்று கொண்டு அவனுடைய நிஸ் சேஷ பிரதிபந்தக நிவ்ருத்தியினாலே
பலத்தினுடைய அவிளம்பம் ஸூசிப்பிக்கப் பட்டதாயிற்று –

ஆனால் எல்லா பாபமும் ஸக்ருத் பிரபதன அனந்த்ரத்திலே பகவானால் நிஸ் சேஷமாக போக்கப் படும் ஆகையால் –
அந்த பிரபத்ய அனுஷ்டான க்ஷணத்துக்கு அனந்தரத்திலே பல பிராப்தி விளம்பியாமல் சித்திக்கையால்
வர்த்தமான சரீர ஸ்திதி அனுவர்த்திக்கிற படி எங்கனே –
அதுவும் பிராப்தி பிரதிபந்தகம் ஆகையால் சோகத்துக்கு நிமித்தம் அன்றோ
ஆகையால் அது போகாத போது மாஸூச என்கிற வசனம் சங்கதம் ஆகாதீ என்னில் -அப்படிச் சொல்லப் போகாது –

இவ்விடத்தில் உபாய வைக்கலயத்தாலே விளம்பிக்கிறது என்று கொள்ள ஒண்ணாது –
நிரபாயமான உபாயமானது சர்வ சக்தி உக்தம் ஆகையால்
இனி உபாய சுவீகாரம் பண்ணின அதிகாரியினுடைய அபி சந்தி பேதத்தாலே விளம்பமும் அவிளம்பமும் சம்பன்னம் ஆகிறது –
அதாவது -யாவன் ஒருவனுக்கு வர்த்தமான தேஹ சம்பந்தம் தானே நெருப்பில் இருந்தால் போலே அத்யந்தம் அஸஹ்யமாய் இருக்கும் —
அவனுக்கு தத் தேஹ சம்பந்தமும் சோக நிமித்தம் ஆகையால் அப்போதே நிவர்த்திக்கப் படும் –

யாவன் ஒருவனுக்கு அந்த தேஹ சம்பந்தம் துக்கம் அன்றியே தேகாந்தர சம்பந்தம் அநிஷ்டமாம் –
அவனுக்கு தேகாந்தர சம்பந்தமே சோக நிமித்தமாய்க் கொண்டு நிவர்த்யம் ஆகையால்
வர்த்தமான சரீரம் அனுவர்த்திக்கிறது என்று விசேஷம் – ஆகையால் அதிகாரி வைக்கலயத்தாலே விளம்பம் உண்டாயிற்று –
உபாய வைக்கலயத்தால் அன்று -என்னும் இடம் சம்பிரதிபன்னம்-

ஆர்த்தா நாம் ஆஸூ பலதா சக்ருதேவ க்ருதா ஹ்ய சவ்-திருப்தா நாமபி ஐந்தூ நாம் தேகாந்தர நிவாரிநீ-என்னக் கடவது இறே
பரமார்த்தரான ஆழ்வாருடைய சரீர ஸ்திதிக்கு ஹேது கேவல பகவத் இச்சை இறே –
திருப்த விஷயத்திலும் பகவத் இச்சை பிராரப்த கர்மம் அடியாக உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறது கேவல சப்தத்தாலே –

ஆக பிராப்தி விரோதி சகல பாபங்கள் தானே உன்னை விட்டுப் போம்படி பண்ணுகிறேன் என்றதாயிற்று –

மோக்ஷயிஷ்யாமி -என்கிற நிச்சாலே-
நெடுநாள் உன்னைப் பற்றி -விடாதே கிடக்கிற பாபங்கள் தானே நமக்கு ஆஸ்ரயம் இல்லை என்று விட்டு போம்படி பண்ணுகிறேன்
நெடுநாள் பாப தர்சனத்தாலே உனக்குப் பிறந்த பயம் உன்னைக் கண்டு அதுக்குப் பிறக்கும்படி
பண்ணைக் கடவேன்-என்னும் இடம் தோற்றுகிறது
நரகத்தை நகு நெஞ்சே -என்றார் இறே –
ஆன் ஈன்ற கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்த ஆழ்வார் –

மோக்ஷயிஷ்யாமி என்கிற உத்தமனில் அபிபிரேதமான -ஓர் அர்த்த விசேஷம் உண்டு -அதாவது
இனி உன் கையிலும் உன்னைக் காட்டித் தாரேன் –
என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்கை –

என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்றது
யத்ன பலித்வங்கள் இரண்டும் தன்னது என்று தோற்றுகைக்காக-
அகமேனியில் அழுக்கு அறுக்கை அபிமானி க்ருத்யம் இறே –
ஆகையால் உன்னுடைய விரோதியில் கிடப்பது ஓன்று இல்லை என்றபடி

———————————————————————————————–

மாஸூச -சப் தார்த்தம் –
சோகியாமைக்கு வேண்டுவது எல்லாம் சொல்லி –
மாஸூச -என்று நீ சோகியாதே கொள்-என்கிறான்
(மாஸூச =படாதே சோகம் -என்றபடி )

இவன் சொன்ன உபாயங்கள் நமக்குச் சேராது –
ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயம் கண்டிலோம் –
விரோதி கனத்து இருந்தது என்று இறே சோகித்தாய்-

சேராத உபாயங்களை விடச் சொன்னோம் —
நம்மை உபாயமாக நினை என்றோம் –
நாம் விரோதிகளில் நின்றும் விடுக்கிறோம் என்றோம் -இனி சோகிக்கிறது என் –

செயல் தீரச் சிந்தித்து வாழ்கிற-நான்முகன் -88- உனக்கு செய்ய வேண்டுவது இல்லை —
(ஓடி அயர்வென்ற தீர்ப்பான் பேர் பாடி -ஆள் வைத்து அந்தி தொழாமல் தானே ஓடி வந்து –
அவன் பேர் பாடி -சித்தமாக இருப்பதை சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்)

ஜன்ம சன்மாந்தரம் காத்துக் கொண்டு போய்-(திருவாய் மொழி- 3-7-7-தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பனை )
விசும்பு ஏற வைக்கை -(பெரிய திரு மொழி -2-1-4-எந்தை கோபி நாயகன்)-நம் பணியாய் இருந்தது –
நல்வினையும் தீவினையும் -(ஆவான் பெரும் குருந்தம் சாய்த்தவனே-நான்முகன் -57-)
வினை பற்று அறுக்கும் விதி-(பெரிய திரு மொழி -11-4-9-) நாம் இட்ட வழக்காய் இருந்தது –

உன்னைப் பார்த்தோ
நம்மைப் பார்த்தோ
விரோதிகளை பார்த்தோ
நீ எதுக்கு சோகிக்கிறாய்-

——————————————————

அநந்தரம் சரம பதமான பஞ்சம பதத்தின் அர்த்தம் அருளிச் செய்கிறார் –
சோகியாமைக்கு -என்று தொடங்கி

த்வா -என்று நிர்தேசித்த அதிகாரியினுடைய க்ருத்யம்ச லேசத்தை சொல்லுகிறது –
மாஸூச -என்ற பதம் -என்றபடி

சோக நிவ்ருத்தி ஹேதுக்களை அருளிச் செய்கிறார் –
இவன் என்று தொடங்கி –
1-நிரபாய உபாய பூதனான நான் உன்னுடைய விரோதி நிவ்ருத்தி பூர்வகமான அபிமத சித்தியை
சாதித்துத் தரக் கடவனாக ஏறிட்டுக் கொண்ட பின்பு
ஸாபாயமான சாதநாந்தரங்களினுடைய துஷ்கரத்வாதிகளை அனுசந்தித்து சோகிக்கக் கடவை அல்லை –
அந்த சாதன விஷயங்களை ஒழிய நிரபாய உபாயம் இல்லாத வன்று அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
2-அவற்றை விட்டு என்னை ஆஸ்ரயிக்கையாலும் நீ சோகிக்க வேண்டா –
3-ஆஸ்ரய நீயானான நான் வத்சலன் ஆகையால் உன்னுடைய தோஷம் கண்டு சோகிக்க வேண்டா
4-ஸூலபன் ஆகையால் துர்லபம் என்று சோகிக்க வேண்டா –
5-ஸூசீலன் ஆகையால் உன்னுடைய சிறுமை கண்டு சோகிக்க வேண்டா –
6-சர்வ ஸ்வாமி ஆகையால் அப்ராப்தன் என்று சோகிக்க வேண்டா –
7-அவாப்த ஸமஸ்த காமன் ஆகையால் உன்னுடைய அபூர்த்தி கண்டு சோகிக்க வேண்டா
8-சர்வ சக்தி யாகையாலே உன்னுடைய சக்தி கண்டு சோகிக்க வேண்டா –
9-நிருபாதிக பந்து வாகையாலும் -பரம தயாவான் ஆகையால் கார்யம் செய்யுமோ செய்யானோ என்று சோகிக்க வேண்டா –
10-சர்வ பாப விமோசகன் ஆகையாலும் சோகிக்க வேண்டா

உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா

நீ என் பக்கல் சர்வ பரந்யாசம் பண்ணுகையாலே உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
நான் சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டன் ஆகையால் என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
விரோதி யாகிறது என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையால் பொறுத்தோம் என்னத்த தீரும் -ஆகையால்
விரோதியைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –

——————————————————————————————————————

பிரபத்த்யதிகாரி
மற்ற உபாயங்களைக் கேட்டால் சோகிக்குமவன்-
ஞானவானுமாய் –
தன்னையும் அறிந்து –
இவ்வுபாயத்தின் நன்மையையும் அறிந்து
அவற்றின் குறைகளையும் கண்டு –
இவ்வுபாயத்தையும் பெற்று –
அவற்றையும் விட்டு –
இவற்றை இத்தை பெறுகைக்கு அதிகாரியுமாம் –

சோக நிவ்ருத்தி விதி
சித்த உபாயத்தைக் கேட்டால் சோகிக்குமவன்
அறிவு கேடனுமாய் –
தன்னையும் அறியாதே –
இவ்வுபாயத்தின் நன்மையையும் அறியாதே
பேர் இழவோடே-இவ்வுபாயத்துக்கு அதிகாரியும் அன்றிக்கே ஒழியும் –

ஆன பின்பு முன்பு சோகித்த நீ இனி சோகிக்கல் ஆகாது காண்-

உடைமையின் பேறு உடையவனது-
பேறு உடையவனுக்கு இழவு-
உடையவன் இழவுக்கு வெறுக்கவும் -பேற்றுக்கு வழி கேட்கவும் -பெற்றால் உகக்கவும் கடவன் –
ஆன பின்பு நான் செய்யுமவை மற்றை நீ செய்யவோ –
என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ
நீ உன்னை அறியாமை காண் சோகித்தாய் என்று கண்ணில் நீரைத் துடைக்கிறான்-

சரம ஸ்லோகார்த்த சங்க்ரஹம் –
விடுமது இன்னது -அவற்றை இன்னபடி விடு –
பற்றுமது இன்னது -அவற்றை இன்னபடி பற்று –
விடுவித்து பற்றுவித்த நான் -விட்டுப் பற்றின உன்னை விலக்கடிகளில் நின்றும் விடுக்கிறேன் –
நீ கலங்காதே கொள்-என்று உபாயாந்தர பரித்யாகத்தையும் –
சித்த உபாய பரிக்ரஹத்தையும் -உபாய நைர பேஷ் யத்தையும் –
அதிகாரி பூர்த்தியையும் விரோதி நிவ்ருத்தியையும் –
சுமை போட்ட சோம்பர் இருக்கும் படியையும் சொல்லி

வருந்தாது இரு நீ -பெரிய திருமொழி -8-6-6-
வருந்தேல் உன் வளைத் திறம் -திரு விருத்தம் -69-
எத்தினால் இடர்க் கடல் கிடத்தி – திருச் சந்த விருத்தம் -115- -என்கிறபடியே
அர்ஜுனனைத் தேற்றி அருளுகிறார் –

—————————————————————————-

சரம ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டான அதிகாரியை நிர்தேசிக்கிறார்-
மற்ற -என்று தொடங்கி –

மாஸூச என்கிற இது –
விதி என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் -சித்த உபாயத்தைக் கேட்டால் –
என்று தொடங்கி –
இத்தால் சிலர் -மாஸூச என்கிற இது விதி யாகையாலே
ப்ரபன்னனான பின்பு சோகிக்கை விதி அதி லங்கநமாய் –
இவனை உபாய பூதனான சரண்யன் நெகிழ்ந்து
தன் காரியத்துக்கு தானே கடவன் ஆகை யாகிற ப்ரத்யவாயம் உண்டாம் என்று சொன்னவிடம் விருத்தம் –
என்னும் பக்ஷம் அனாதரணீயம் -என்றபடி –

ஆக நீயும் இப்படி என் பக்கலிலே ந்யஸ்த பரனாய்
விரோதியும் இப்படி துர்லபமான பின்பு
சோகம் அனுவர்த்திக்குமாகில்-நீயும் எனக்கு இன்றியிலே -நானும் உனக்கு இன்றியிலே –
உன்னையும் -ந நமேயம் -என்னப் பண்ணி
என்னையும் – ஷிபாமி -ந ஷமாமி -என்னப் பண்ணின பாபம் மூர்த்த அபி ஷிக்தமாய் இருக்க
சோகியாதே
அநாதி காலம் ஆனைக் கழுத்திலே இருக்கிறாயாய்ப் போந்த அஞ்ஞானத்தோ பாதி போரும்-கிம் பஹு நா –
நான் உன் காரியத்துக்கு கடவனாய் இருக்க நீ சோகிப்பு தியாகில்
உன் காரியத்துக்கு நீயே கடவையாம் அத்தனை -என்றதாயிற்று –

இத்தால் –
வ்ரஜ -என்கிற விதியோ பாதி சோக நிஷேத விதியும் கர்தவ்யம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –

இனி சோகிக்கை யாவது –
இஷ்ட ப்ராப்த்திய அநிஷ்ட நிவ்ருத்தி பல ரூபத்துக்கு ஸ்வ இதர சகல சஹாயாந்தர அஸஹமாய்
வாத்சல்யாதி குண விசிஷ்டமாய் இருக்கிற வஸ்துவை உபாயமாகப் பற்றி
ஸ்வ பர நிவ்ருத்தி பூர்வகமாக அவன் பக்கலிலே சர்வ பரங்களையும் ந்யஸித்து
நிற்கிற நிலைக்கு விருத்தம் இறே என்றதாயிற்று –

மாஸூச -என்கிற இடத்தில்
நிஷேத வாசகம் முன்னே கிடக்கத் தாத்பர்யம் ஆவது என் என்னில்
பிரணவத்தில்-பகவத் ஏக ரஷ்ய பூதனாகவும் பகவத் அநந்யார்ஹ சேஷ பூதனாகவும் சொல்லப்பட்ட ஆத்மாவுக்கு
ஞாத்ருத்வ நிபந்தமாக வருகிற ஸ்வ ரக்ஷகத்வ அபிமானமும் -ஸ்வ சேஷத்வ அபிமானமும் –
ஸ்வ ஸ்வாதந்தர்ய அபிமானமுமான விரோதிகளை நிஷேதிக்கிற இடத்தில்
நமஸ் சப்தத்தில் –
நிஷேத்ய வாசியான மகாரத்துக்கு முன்னே நிஷேத வாசியான நகாரம் முற்பட்டால் போலேயும்-

புருஷார்த்தத்தில் ஸ்வ கீயத்வாதி நிஷேதம் பண்ணுகிற நமஸ் சப்தம்
கைங்கர்ய பிரார்த்தனா வாசி பதத்துக்கு முற்பட்டால் போலேயும் –

சர்வ தர்ம பரித்யாகம் சொல்லுகிற இடத்தில்
தியாகத்தின் உடைய அத்யந்த அபாவத்தில் அல்லது ஸ்வரூப பூர்த்தி இல்லாமையாலும்
ஸ்வ கார்ய உபாயத்துக்கு உதயம் இல்லாமையாலும் –
தத் வாசகமான பரி சப்தம் தியாக சப்தத்துக்கு முற்பட்டால் போலேயும் –

வ்ரஜ என்று விஹிதமான உபாய ஸ்வீகாரம் சித்த உபாய விஷயமான பிரதிபத்தி மாத்ரமாய் –
தாம் உபாயமும் இன்றிக்கே-சஹகாரியும் இன்றிக்கே ஒழிகையாலே
தத் வியாவர்த்தகமான ஏக பதம் ஸ்வீகார விதானம் பண்ணுகிற வ்ரஜ என்கிற பதத்துக்கு முற்பட்டால் போலேயும்

ந்யஸ்த பரனான இவனுக்கு உண்டான சோக உதயமும் -ஸ்வ பல அன்வயத்தைக் காட்டுகையாலே
சோகம் பிரசுத்துதம் ஆவதற்கு முன்னே -மாஸூச -என்று நிஷேத அக்ஷரம் முற்படுகிறது என்கை –

ஆகை இறே இவ்வதிகாரிக்கு யாவத் பல பிராப்தி நிர்பரனுமாய்
நிர் பயனுமாய் இருக்கையே கர்த்தவ்யம் -என்கிறது —
அதாவது
தன்னுடைய பாரதந்தர்ய அனுசந்தானத்தாலும் -உபாய பூதனுடைய நிருபாதிக ரக்ஷகத்வ அனுசந்தானத்தாலும்
நிர் பரனாய் இருக்கையும்
தன்னுடைய ஆகிஞ்சன்ய அனுசந்தானத்தாலும் -உபாய பூதனுடைய ஞான சக்த்யாதி குண அனுசந்தானத்தாலும்
நிர் பயனாய் இருக்கையும் –

தான் சேஷ பூதன் ஆகையால் பலித்வம் இல்லை –
பரதந்த்ரன் ஆகையால் உபாய கர்த்ருத்வம் இல்லை —
ஆகையால் பல அலாப நிபந்தமாகவும் சோகிக்க பிராப்தி இல்லை

உபாயாந்தர ஸ்ரவணத்தில் சோகித்திலன் ஆகில்
அவற்றின் உடைய துஷ்கரத்வ ஸ்வரூப அனுரூபத்வாதி தோஷங்களையும் –
அவற்றின் உடைய தியாகத்தில் அல்லது சித்த உபாயம் அன்வயம் உண்டாகாது என்னும் இடம் அறிந்திலன் ஆகும் –
ஆகையால் உபாயம் அதிகாரம் இல்லை

சித்த உபாய ஸ்ரவணத்தில் சோகித்தான் ஆகில்
அதனுடைய சஹாயாந்தர அஸஹத்வமும் ஸ்வரூப பிராப்தத்தையும் முதலான குணங்களையும்
அதில் தனக்கு கர்த்தவ்ய அம்சம் ஒன்றும் இல்லை என்கிற ஆகாரமும் அறிந்திலனாம் –
ஆகையால் உபாய அதிகாரம் இல்லை –

ஆகையால்
முன்புற்றை சோக அனுவ்ருத்தி சாத்ய சாதன யாதாத்ம்ய ஞான கார்யம்-
பின்புற்றை சோக நிவ்ருத்தி சித்த சாதன யாதாத்ம்ய ஞான கார்யம்
சித்த உபாய ஸ்வீகார அநந்தரம் சோகம் அனுவர்த்தித்தது ஆகில் தியாக ஸ்வீகாரங்களில் அந்வயம் இல்லை
அதுக்கு முன்பு சோகித்திலன் ஆகிலும் தியாக ஸ்வீகாரங்களில் அந்வயம் இல்லை –

ஆக –
1-துஷ்கரங்களாய்-ஸ்வரூப விருத்தங்களான சாதநாந்தரங்களினுடைய தர்சனமும் –
2-ஸூ கரமுமாய் ஸ்வரூப அனுரூபமான சாதன அதர்சனமும்
3-தத் சாபேஷைதையும்-4-வியவகித்தவமும் -5-அதில் அருமையும் -6-அசாமர்த்யமும் –
7-ஸ்வீகர்த்தாவினுடைய ஆகிஞ்சன்யமும் -8-விரோதி பாஹுள்யமும்
9-தன் நிவ்ருத்தியில் அசக்தியும் இறே -சோக காரணம் –

இவை இத்தனையும் இல்லாமையால் சோகிக்க வேண்டா என்கிறது –
என்றதாயிற்று –

சரம ஸ்லோகார்த்த சங்க்ரஹம் பண்ணி அருளுகிறார் –
விடுமது -என்று தொடங்கி-

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading