76- ஒரு நயம் பேசுவன்
திரு அரங்கேசர் தாள்
மருவுமின் நாசம் ஆம்
கருமவன் பாசமே –
நயம் -நல வார்த்தை
வினைகள் ஆகிய வலிய பந்தங்கள் அழிந்து போம் -மோஷம் உண்டாகும் -நல் வினையும் பிறப்புக்கு ஹேது என்பதால் கருமவன் பாசமே என்கிறார்
திருத் தாள்கள் பற்றுவது சாதனம் அன்று -பிரபன்ன அதிகாரிக்கு விசேஷணம் ஆகும் அத்தனையே
—————————————————————————-
தலைவி இரங்கல்
77- பாசம் ஆம் அடியார் பால் நேசம் ஆம் அடிகளும்
பைம்பொன் ஆர் ஆடையும் செம்பொன் மா மேனியும்
ஆசை ஆம் மலர் உளாள் வாசம் ஆர் அகலமும்
அஞ்சல் என்று அருள் செயும் கஞ்சமும் கருணையன்
தேசு உலா வதனமும் மாசு இலா முறுவலும்
சீரிதாய் எழுது கத்தூரி நாமமும் எனக்கு
ஈசனார் திரு அரங்கேசனார் திகிரியும்
இலகு வெண் சங்குமே உலகம் எங்கும் எங்குமே –77-
கஞ்சமும் -தாமரை மலர் போன்ற அபய ஹஸ்தமும்-
நாயந்தே -ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித் தாமரைகளும் -அஞ்சல் என்ற கையும் -கவித்த முடியும் –
முறுவல் பூரித்த சிவந்த திருமுக மண்டலமும் திரு நுதலில் கஸ்தூரித் திரு நாமமும் பரமபத்திலே கண்டிலேனாகில்
ஒரு மூலையடியிலே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன் -இவரது ஆச்சார்யரான ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூ க்திகள்
———————————————————————————-
தலைவன் இடம் அணித்து என்றல்
78–எங்கணும் நிறைந்து உறையும் எம்பிரான்
கொங்கு அணுகி வண்டு முரல் கோயில் சூழ்
உங்கள் வரை எங்கள் வரை ஒன்றியே
மங்கை உன்ன கொங்கைகளை மானுமே –78–
எங்கும் அந்தர்யாமியாய் உறையும் நம்பெருமாள் வண்டுகள் தேனுக்காக நெருங்கி ஆரவாரிக்கிற
திருவரங்கத்தைச் சூழ்ந்த -எம்பிரானது கோயிலானது -உங்கள் மலையும் எங்கள் மலையும் நெருங்கி
பெண்ணே உனது ஸ்தனங்களை ஒத்து இருக்கும் –
இருவர் இடமும் மிகவும் அணித்து என்றபடி –
—————————————————————–
நாரையை நோக்கித் தலைவி இரங்கிக் கூறல்
79-மான் ஆர் கேசன் மேலார் மால் ஆய் வாழ் கோயில்
தேன் ஆர் காவில் பூ ஆராயும் தேனே போல்
நானா போகத்து இன்பம் கண்டார் நான் வாடப்
போனார் வாராது ஏதோ ஓதாய் போதாவே –79-
மான் ஆர் கேசன் -கங்கை மகள் பொருந்திய சடை முடியினை யுடைய உருத்திரன் முதலானோர்
மேலார் மால் ஆய் வாழ் கோயில் -தேவர்கள் பேர் அன்பு கொண்டு வந்து தங்குகின்ற திருவரங்கத்தில்
மேல் உலகத்தில் உள்ளார் -மேன்மை உடையவர் மேலார் –
தேன் ஆர் காவில் பூ ஆராயும் தேனே போல்
தேன் நிறைந்த சோலையிலே மலர்கள் தோறும் ஆராய்ந்து இனிதாய் தேன் உண்கின்ற வண்டுகளைப் போலே
நானா போகத்து இன்பம் கண்டார் -பலவகைப் பட்ட போக சுகங்களை அனுபவித்தவரும் –
நான் வாடப் போனார் -நான் வாட்டம் அடையும் படி பிரிந்து போனவருமாகிய தலைவர்
வாராது ஏதோ ஓதாய் போதாவே –மீண்டும் வாராதது யாது காரணத்தாலே சொல்லு –
————————————————————————-
மதங்கு -மடக்கு –
80-போத எனக்கு எளிது ஆனார் போதவனுக்கு அரிது ஆனார்
நாதர் அரங்கர் திருத் தாள் நாடி அரங்கில் நடக்கின்
ஓதும் மதங்கி நடித்தால் உள்ளம் அது அங்கி அரக்கு ஆம்
வேதம் அறைந்திட வல்லீர் விரைய மறைந்து விடீரே –80-
போதவன் -நான்முகன் -அவனுக்கு அரிதானவர் போத எனக்கு எளிதானார் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்களுக்கு அரிய வித்தகன்
மதங்கி ஆடல் பாடல் வல்ல இள மாது -இவள் நடனம் செய்தால் காண்பவர் உள்ளம் நெருப்பில் இட்ட அரக்கு போலே கரைந்து உருகிப் போம்
-ஆகையால் விரைந்து மறைந்து செல்லுமின் -என்கிறார்
வினையை மறந்து விடீர் -பாட பேதம் -நீங்கள் செய்யும் வைதிக கர்மங்களை மறந்து விடுங்கள் என்கிறார் –
——————————————————————————–
பாண்
81- விடாது பூடந்தைமார் விரும்ப ஆயர் மாதர் தோள்
வியந்து முன் நயந்தவர்க்கு விற்கும் எங்கள் கொங்கை தான்
அடாதது அன்று பாண இன்னம் அங்கன் அன்றி இங்கனம்
அரங்கர் அன்பு கூர இன்பமாக வல்ல அல்லவே
எடாது இருக்கின் வாய் திறக்கும் எங்கள் ஐயன் உச்சி தோய்
எண்ணெய் பட்ட மெயில் இட்ட முத்தும் உத்தரீயமும்
படா முகம் திறந்து அசைந்து மழலை வாயின் மணம் அறாப்
பசு நரம்பு புடை பரந்து பால் சுரந்த முலையுமே –81-
விடாது பூடந்தைமார் விரும்ப -திருமகளும் நிலா மகளும் சிறிதும் விட்டுப் பிரியாமல் விரும்பக் கூடி இருக்கவும்
ஆயர் மாதர் தோள்-இடைப் பெண்ணான நப்பின்னை தோள்களை
வியந்து முன் -கிருஷ்ணாவதாரத்திலே அதிசயித்து
போதின் மங்கை பூதலத்து கிழத்தி தேவி -ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
வாயும் மனைவியர் பூ மங்கையர்கள் எம்பிராற்கு -நூற்று எட்டு திருவந்தாதி
நயந்தவர்க்கு விற்கும் எங்கள் கொங்கை தான்
விரும்பக் கூடிய தலைவருக்கு விலைக்கு விற்கின்ற எங்கள் ஸ்தனம்
அடாதது அன்று -தகாதது அன்று
பாண -பாணனே
இன்னம் அங்கன் அன்றி இங்கனம்
எடாது இருக்கின்-எடுத்துப் பால் கொடாது இருந்தால்
வாய் திறக்கும்-வாய் திறந்து அழுகின்ற
எங்கள் ஐயன் -எங்கள் குழந்தையினது
உச்சி தோய் எண்ணெய் பட்ட-உச்சியில் பொருந்திய எண்ணெய் படப் பெற்ற
மெயில் இட்ட -எங்கள் உடம்பில் இடப் பெற்ற
முத்தும் உத்தரீயமும் -முத்து மாலையும் மேலாடையும்
படா முகம் திறந்து -அக்குழந்தையால் மேலாடை சிறிது வாங்கப் பட்டு
அசைந்து மழலை வாயின் மணம் அறாப் -அக் குழந்தை உடைய வாயினது வாசனை நீங்கப் பெறாமல்
பசு நரம்பு புடை பரந்து பால் சுரந்த முலையுமே –அரங்கர் அன்பு கூர இன்பமாக வல்ல அல்லவே –
—————————————————————————–
தலைமகள் இளமைக்குச் செவிலி இரங்கல்
82-முலை கொண்ட பால் மணம் வாய் மாறிற்றிலை-அம் மொய் குழலோ
அலை கொண்டது இன்னம் என்கை அணையே அலை ஆழி வற்றச்
சிலை கொண்ட செங்கை அரங்கேசர் தாள் கொண்ட தேசம் எல்லாம்
விலை கொண்ட வாள் விழியாள் சென்றவாறு எங்கன் வெஞ்சுரமே –82-
இச் சிறு மகளுக்கு இன்னம்
-முலை கொண்ட பால் மணம் -தாய் முலையில் கொண்ட பாலினது வாசனை
வாய் மாறிற்றிலை-வாயின் நின்றும் நீங்கிற்று இல்லை –
அம் மொய் குழலோ அலை கொண்டது-அழகிய நெருங்கிய கூந்தலோ அலைந்து கொண்டே இருக்கின்றது -மயிர் முடி கூடிற்று இல்லை
இன்னம் என்கை அணையே -என் கையே படுக்கும் இடமாய் இருக்கின்றது
அங்கனம் இருக்கவும்
அலை ஆழி வற்றச் சிலை கொண்ட செங்கை அரங்கேசர் தாள் கொண்ட தேசம் எல்லாம் விலை கொண்ட வாள் விழியாள் –
உலகம் முழுவதும் விலையாகக் கொண்ட வாள் போன்ற கூரிய கண்களை உடைய இவள்
சென்றவாறு எங்கன் வெஞ்சுரமே –கொடிய பாலை நில வழியில் போன வகை எவ்வாறோ –
செவிலி பேச்சாகவும் தாய் பேச்சாகவும் கொள்வர் –
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே -நம்மாழ்வார்
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்று இல-சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோடு இணங்கி
தீயிணக்கிணங்காடி வந்திவ டன்னன்ன செம்மை சொல்லி மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே-பெரியாழ்வார்
——————————————————————————–
தலைமகன் தலைமகளது இயல் கூறல்
83- வெஞ்சமும் கருதும் கஞ்சனும் எருதும் வேழமும் பரியும் வீழ முன் பொருதார்
தஞ்சம் என்றவருக்கு அஞ்சல் என்று அருளும் தாயில் அன்பு உடையார் கோயிலின் புடை ஆர்
மஞ்சும் வண்டினமும் துஞ்சு தண்டலை வாய் வல்லி ஓன்று அதிலே எல்லியும் திகழும்
கஞ்சம் உண்டு அதிலே நஞ்சம் உண்டு அதிலே கள்ளம் உண்டு அது என் உள்ளம் உண்டதுவே –83-
வெஞ்சமும் கருதும் -கொடிய போரை விரும்புகின்ற
கஞ்சனும் எருதும் -அரிஷ்டாசுரனும்- வேழமும் பரியும் வீழ முன் பொருதார்-
தஞ்சம் என்றவருக்கு அஞ்சல் என்று அருளும் -அபய பிரதானம் செய்து காக்கின்ற
தாயில் அன்பு உடையார் -தாயை விட அன்புடைய நம்பெருமாளது
கோயிலின் புடை-பெரிய கோயிலின் புறத்திலே –
ஆர் -பொருந்திய
மஞ்சும் வண்டினமும் துஞ்சு தண்டலை வாய் -மேகக் கூட்டங்களும் வண்டு கூட்டங்களும் தங்கும் சோலையிலே
வல்லி ஓன்று -கொம்பு ஓன்று உண்டு -மகள் ஒருத்தி உண்டு
அதிலே எல்லியும் திகழும் கஞ்சம் உண்டு -இரவிலும் குவியாத மலர்ந்து விளங்கும் தாமரை மலர் உண்டு -திரு முகம் –
அதிலே நஞ்சம் உண்டு -கண்கள் விஷம் போலே உண்டே
அதிலே கள்ளம் உண்டு அது என் உள்ளம் உண்டதுவே —
தான் மெலிவுற்றதுக்கு காரணம் கூறுகிறான் தலைமகன் பாங்கனுக்கு -தெய்வப் புணர்ச்சியால் -அவள் விழி நோக்கால் இப்படி ஆனேன் என்கிறான்
உருவக உயர்வு நவிற்சி அணி -ரூபக அதிசய உக்தி
——————————————————————–
தலைவி இரங்கல்
84-உண்டு உமிழ் வாசமுடன் தண்டலை மாருதம் வந்து உலவி சாளரமும் குலவிய வாள் நிலவும்
விண்டு அலர் பூ அணையும் மென்பனி நீர் புழுகும் வேனிலிலும் முதிரா வேனிலும் ஆகியவால்
அண்டர் தொழும் பெருமாள் அம்புயமின் பெருமாள் அருமறையின் பெருமாள் அழகிய நம் பெருமாள்
புண்டரிகம் கமழும் தண் துறை ஓதிமமே புன்னைகள் சிந்து அலரே இன்னமும் வந்திலரே –84-
-உண்டு உமிழ் வாசமுடன் -உட்கொண்டு வெளி வீசுகின்ற வாசனையோடு
தண்டலை மாருதம் -பூம் சோலையில் உள்ள இளம் காற்று
வந்து உலவி சாளரமும் -வந்து வீசுகின்ற பல கணிகளும்
குலவிய வாள் நிலவும் -விளங்குகின்ற நிலவின் ஒளியும்
விண்டு அலர் பூ அணையும் -விரிந்து மலர்கின்ற புஷ்ப சயனமும்
மென்பனி நீர் புழுகும் -குளிர்ந்த பனி நீரும் கஸ்தூரிப் புழுகும்
வேனிலிலும் முதிரா வேனிலும்-இரு வகை வேனில் காலத்துள்ளும் -இவற்றை அடைய இள வேனில் காலமும்
ஆகியவால் -ஆயின
இன்னமும்
அண்டர் தொழும் பெருமாள் -தேவர்கள் வணங்குகின்ற சுவாமியும்
அம்புயமின் பெருமாள்-அம்புயம் மின் பெருமாள் -தாமரை மலரில் உள்ள மின்னல் கொடி போன்ற திருமகளுக்குத் தலைவரும்
அருமறையின் பெருமாள் அழகிய நம் பெருமாள் இன்னமும் வந்திலரே
புண்டரிகம் கமழும் தண் துறை ஓதிமமே-அன்னமே –
புன்னைகள் சிந்து அலரே –
—————————————————————–
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்தி உரைத்தல்
85-இன் இசை வேயினர் மன்னிய கோயிலை எய்தார் போல்
பொன் நினைவால் அவர் போன இடத்தினில் போகாதோ மின்னிய
முகில் துளி என்று என் மேல் எலாம்
வன்னியின் பொறிகளை வழங்கும் வாடையே –85-
இன் இசை வேயினர் -இனிய இசையினை யுடைய வேய்ங்குழலை யுடைய நம்பெருமாள்
மன்னிய கோயிலை எய்தார் போல் -எழுந்து அருளி இருக்கும் திருவரங்கத்தை அடையாதார் போல்
எய்தார் போல் -மீண்டும் வாராதவர் போன்று என்றுமாம்
பொன் நினைவால்-பொருள் தேடும் நினைவினால்
அவர் போன இடத்தினில் போகாதோ-அத்தலைவர் போன இடத்தில் போகின்றது இல்லையோ –
மின்னிய முகில் துளி என்று-மின்னுகின்ற மேகங்களின் மழை நீர்த் துளி என்று பெயர் வைத்து
என் மேல் எலாம் -என் உடம்பு முழுவதும்
வன்னியின் பொறிகளை வழங்கும் வாடையே -நெருப்புப் பொறிகளை வீசுகின்ற வாடைக் காற்றானது –
———————————————————————-
கால மயக்கு
வாடையாய் இரு பனியும் ஆய் வேனிலாய் வந்தது கார் என்றே
பேடை மா மயில் சாயலாய் அன்பர் மேல் பிழை கருதிடல் செம்பொன்
ஆடை நாயகன் திருமகள் நாயகன் அரங்க நாயகன் ஏறும்
ஓடை மா இது மதம் இது பிளிறிய ஒலி இது மழை அன்றே –86-
தோழி ஆற்றுவிக்கிறாள் தலைவியை இத்தால் –
கார் எனக் கலங்கும் ஏர் எழில் கண்ணிக்கு இன் துணைத் தோழி யன்று என்று மறுத்தது
பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்
வாடையாய் இரு பனியும் ஆய் வேனிலாய் வந்தது கார் என்றே
கூதிர் காலமும் கழிந்து -முன் பனி பின் பனி இரண்டு பனிக் காலங்களும் கழிந்து இள வேனில் முது வேனில் இரண்டும் கழிந்து
-மழைக் காலமும் வந்தது என்று எண்ணியே
பேடை மா மயில் சாயலாய்-அழகிய மயில் பேடு போன்ற சாயலை உடையவளே –
அன்பர் மேல் -அன்பினை உடைய தலைவர் மீது
பிழை கருதிடல் -குற்றம் நினைக்காதே
இது
செம்பொன் ஆடை நாயகன்-செம் பொன் மயமான பீதாம்பரத்தை யுடைய தலைவனும்
திருமகள் நாயகன் அரங்க நாயகன்-ஸ்ரீ யபதியும் ஆகிய அரங்க நாயகன்
ஏறும் -ஏறி நடத்துகின்ற
ஓடை மா இது மதம் இது பிளிறிய ஒலி இது மழை அன்றே –
முக படாத்தை யுடைய யானை -உடைய மதப் பெருக்கு-அவ் யானை வீரிடுகின்ற ஓசை -ஆகையால் கார் காலம் அன்று
————————————————————
தழை
மழை போல் மரகதம் போல் எம்பிரான் வளர் கோயில் அன்னீர்
பிழை போம் இவர்க்கு இதை யார் உரைப்பார் இவர் பின் வந்து எய்த
தழை யோய் உறைத்த வருத்தம் பொறாமை கொல் சங்கரன் பால்
உழை யோய் ஒதுங்க முயல் போய் மதி புக்கு ஒளித்ததுவே –87-
வேட்டைக்கு வந்தவன் போலே தலைமகன் சொல்வது
மழை போல் மரகதம் போல் எம்பிரான் வளர் கோயில்
கார் மேகம் போலும் நீல மணி போலும் நம்பெருமாள் திருக் கண் வளர்ந்து அருளுகின்ற திருவரங்கத்தை –
அன்னீர் -ஒத்து இருப்பவர்களே
பிழை போம் இவர்க்கு -தவறு செய்து போன இத்தலைவர்க்கு
இதை யார் உரைப்பார் -இவ்வரலாற்றை யார் சொல்லுவார் -எவரும் இல்லை
இவர் பின் வந்து எய்த -தொடர்ந்து வந்து பிரயோகித்த
தழை யோய் உறைத்த -தழை யானது சென்று பட்ட
வருத்தம் பொறாமை கொல் -வருத்தத்தை பொறுக்க மாட்டாமையால் அன்றோ
சங்கரன் பால் -சிவன் இடத்தில்
உழை யோய் ஒதுங்க -மானானது சென்று ஒளிக்க
முயல் போய் மதி புக்கு ஒளித்ததுவே –முயலானது சந்தரன் இடத்தில் சேர்ந்து மறைந்திட்டது
—————————————————————-
கார்காலம் -தலைவி இரங்கல் –
88-ஒளிக்கும் இரு சுடர்க் கவளம் விழுங்கும் பேழ்வாய் உரும் முழக்கத்து இந்திரவில் ஓடை நெற்றி
துளிக்கும் மழை மதக் கொண் மூக்களிற்றை மின்னல் தோட்டி மாருதப் பாகர் துரக்கும் காலம்
அளிக் குலங்கள் இசைபாட கத்த மஜ்ஞை ஆடு பொழில் திரு அரங்கர் அணையாக் காலம்
விளிக்கும் அலைக் கரும் கடலும் ஒறுக்கும் காலம் வினையேற்கு விழி துயிலை மேவாக் காலம் –88-
ஒளிக்கும் இரு சுடர்க் கவளம் விழுங்கும்-விளங்குகின்ற சூரிய சந்த்ரர்கள் ஆகிய கபளங்களை விழுங்குகின்ற
பேழ்வாய்-பிளவு பட்ட வாயையும்
உரும் முழக்கத்து -இடியாகிய முழக்கத்தையும்
இந்திரவில் ஓடை நெற்றி -இந்திர தனுஸ் ஆகிய முக படாத்தை அணிந்த நெற்றியையும்
துளிக்கும் மழை மதம்-பெய்கின்ற மழை நீராகிய மத நீரையும் உடைய
கொண் மூக்களிற்றை -மேகம் ஆகிய யானையை
மின்னல் தோட்டி-மின்னல் ஆகிய அங்குசத்தால்
மாருதப் பாகர் -காற்றாகிய பாகர்கள் -காற்று மேகங்களை செலுத்துவதால் -பாகர் என்கிறார்
துரக்கும் காலம் -செலுத்து கின்ற காலம் –
அளிக் குலங்கள்-இசைபாட கத்த மஜ்ஞை ஆடு-வண்டுகளின் கூட்டங்களும் -களிக்கின்ற மயில்களின் கூட்டங்களும் முறையே பாடி ஆடுகின்ற
பொழில் திரு அரங்கர் அணையாக் காலம் -வந்து சேராத காலம்
விளிக்கும் அலைக் கரும் கடலும் ஒறுக்கும் காலம் வினையேற்கு விழி துயிலை மேவாக் காலம் -தூக்கம் பொருந்தாத காலம் –
————————————————————————-
இள வேனில் காலம் -தலைவி இரங்கல் –
மேவலர் வாழ் தென்னிலங்கை மலங்க ஒரு கால் இரு கால் வில் குளித்து எய்
ஏவலர் வாழ் திரு அரங்கத்து எமை இருத்திப் போனவர் நாட்டு இல்லை போலும்
கோவலர் வாய்க் குழல் ஓசைக்கு ஆ நிரைகள் செவி ஏற்கும் குறும்புன் மாலை
பூ அலரின் மணம் பரப்பி இள வேனில் வர வந்த பொதியத் தென்றல் –89-
மேவலர் வாழ் -அரக்கர்கள் வாழ்கின்ற
தென்னிலங்கை மலங்க ஒரு கால் இரு கால் வில் குளித்து எய்
ஏவலர் -அம்பில் வல்ல நம் பெருமாள்
வாழ் திரு அரங்கத்து எமை இருத்திப் போனவர் நாட்டு இல்லை போலும்
கோவலர் வாய்க் குழல் ஓசைக்கு -ஆ நிரைகள் செவி ஏற்கும்
குறும்புன் மாலை -சிறிய புல்லிய மாலைப் பொழுதில்
பூ அலரின் மணம் பரப்பி
இள வேனில் வர வந்த பொதியத் தென்றல்
—————————————————————————–
தோழி இரங்கல்
தென்றலைக் குங்குமச் சேற்றைப் பொறாள் சிறியாள் பெரிய
துன்று அலைக்கும் துடிக்கும் என் செய்வாள் துயரால் அழைத்த
வன்தலைக் குஞ்சரம் காத்தாய் இலங்கை மலங்க வளைத்து
அன்று அலைக்கும் சரத்தாய் அரங்கா அண்டர் ஆதி பனே –90-
தென்றலைக் குங்குமச் சேற்றைப் பொறாள்
சிறியாள் -சிறிய என் மகள்
பெரிய துன்று அலைக்கும் -நீண்டு உயர்ந்த நெருங்கிய அலைகளுக்கும்
துடிக்கும்-வருந்துவாள்
என் செய்வாள்-என்ன பரிகாரம் செய்ய மாட்டுவாள்
துயரால் அழைத்த-முதலை கவர்ந்த வருத்தத்தால் ஆதி மூலமே என்று கூப்பிட்ட
வன்தலைக் குஞ்சரம் -வழிய தலையை உடைய கஜேந்திர ஆழ்வானை
காத்தாய்
இலங்கை மலங்க வளைத்து அன்று அலைக்கும் சரத்தாய் -அலையச் செய்த அம்புகளை உடையவனே
அரங்கா அண்டர் ஆதி பனே –தேவர்கள் தலைவனே -அதிபன் என்பதின் விகாரம் ஆதிபன் –
நித்ய ஸூ ரிகளுக்கு தலைவன் என்றுமாம் -இடையர்களுக்கு தலைவன் என்றுமாம்
-வண் தரா அதிபன் –என்று பிரித்து வளப்பம் பொருந்திய நில மகளுக்கு அதிபன் என்றுமாம்
——————————————————————————-
தலைவி கூற்று
அண்டர் போற்றும் திரு அரங்கேசனார் அணி அரங்கத் திரு முற்றம் எய்தினால்
பண்டு போனவனை ஆழி வாங்குவேன் பாலியாது பரா முகம் பண்ணினால்
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே சங்கும் ஆழியும் தாரும் என் பேன் அவை
தொண்டருக்கு ஒற்றி வைத்தோம் என்று ஓதினால் துளவ மாலையைத் தொட்டுப் பறிப்பனே –91-
அண்டர் போற்றும் திரு அரங்கேசனார் அணி அரங்கத் திரு முற்றம் எய்தினால்
பண்டு போன வனை ஆழி வாங்குவேன் -முன்னே கவர்ந்து போன சங்கு வளையும் மோதிரத்தையும் மீளவும் பெற்றுக் கொள்வேன்
பாலியாது பரா முகம் பண்ணினால்
தண்டும் வாளும் சிலையும் இருக்கவே சங்கும் ஆழியும் தாரும் என் பேன்
அவை தொண்டருக்கு ஒற்றி வைத்தோம் -ஈடாக வைத்து விட்டோம் -என்று ஓதினால்
-துளவ மாலையைத் தொட்டுப் பறிப்பனே –திருமேனியைத் தீண்டிப் பிடுங்கிக் கொள்வேன்
—————————————————————–
தொட்டு உண்ட தயிர் வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி உரலோடு சூழ்ந்து கட்டக்
கட்டுண்டு கழல விரகு அறியாமல், இருந்து அழுத கள்வன் யாரோ
கட்டுண்டான் அரங்கன் எனக் கட்டுரைப் பாரானாலும் கங்கை சூடி
மட்டு உண்ட கொன்றை யான் மலர் மேலோன் அறிவரிய வடிவன் அன்றே –92-
பரத்வம் சௌலப்யம் பேசும் இரண்டு தோழிமார் வார்த்தை
வண்ணக் கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியான் இமையோர்க்கும் சாழலே -போலே –
இரண்டு பிராட்டிமார் தசை ஏக காலத்தில் எம்பெருமான் திருவருளால் கிட்டும் என்பர்
——————————————————————————-
வடியாத பவக் கடலும் வடிந்து மூல மாயை கடந்து அப்பால் போய் வைகுந்தம் சேர்ந்து
அடியார்கள் குழாம் கூடி உனதடிக்கீழ் அடிமை செயும் அக்காலம் எக்காலம் தான்
கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியோனே அடியேன் நான் முயற்சி இன்றி நின்னருளே பார்த்திருப்பேன் நீசனேனே –93-
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
என்று கொல் சேர்வது அந்தோ அரண் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை –
————————————————————-
நீசச் சமர்க்கும் சூனிய வாதர்க்கும் நீதி அற்ற
பூசற் பவுத்தர்க்கும் சைவர்க்கும் யார்க்கும் புகலுகின்றேன்
நாசப் படா உயிர் எல்லாம் முதல் தந்த நாதன் கண்டீர்
ஆசு அற்ற சீர் அரங்கத்து ஆதி மூலத்து அரும் பொருளே –94-
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
இலங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மலிந்து வாது செய்வீர்களும் மற்றும் உம் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவிரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே –
———————————————————
அரும்புண்ட ரீகத்து அடி இணைக்கே நெஞ்சு
இரும்பு உண்ட நீர் ஆவது என்றோ விரும்பி
அறம் திருந்தும் கோயில் அரங்கா உனை நான்
மறந்திருந்தும் மேல் பிறவாமல் –95-
இரும்புண்ட நீர் மீள்கினும் என்னுழையில் கரும்புண்ட சொல் மீள்கிலள் கானுதியால் -கம்பர்
நெடு வேங்கடத்தான் ஈர இரும் புண்டரீக பொற் பாதங்கள் என்னுயிரைத் தீர இரும்புண்ட
நீராக்குமாறு உள்ளம் சேர்ந்தனவே -திருவேங்கடத்து அந்தாதி
தீர இரும்புண்ட நீரது போல் என்னாருயிரை ஆரப் பருக எனக்கு ஆராவமுதானாயே
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கு இட்ட அடிமை பூண்டு உய்ந்து போனேன்
————————————————————-
பிறவி எனும் கடல் அழுந்தி பிணி பசியோடு இந்திரியச்
சுறவம் நுங்க கொடு வினையின் சுழல் அகப்பட்டு உழல்வேனோ
அறம் உடையாய் என் அப்பா அரங்கா என் ஆர் உயிருக்கு
உறவு உடையாய் அடியேனை உயக் கொல்வதுய் ஒரு நாளோ –96-
பிறவியைக் கடலாகவும் பிணி பசி போன்றவற்றை சுறா மீன்களாகவும் இரு வினைகளை சுழல் ஆகவும் உருவகம்
திருமால் ஆகிய தோணி ஒன்றே கரை ஏற்ற உபாயம்
சம்சார ஆர்ணவ மக் நா நாம் விஷயாக்ராந்த சேதஸாம்-விஷ்ணு போதம் வி நா நாந்யத் கிஞ்சி தஸ்தி பராயணம்
துன்பக் கடலுள் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
ஓன்று சொல்லி ஒருத்தனில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன் உன் திரு வருள் இல்லையேல் –
சென்மம் தரங்கம் கருமம் சுழி பிணி சேல் இணங்கு சென்ம தரங்க திர் பொன் கோள் கண் மாரி திண் கூற்ற சனி
சென்ம தரங்க வற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கம் சென்மம் தரங்க வின் தோள் அரங்கர் திருப் பதமே -திருவரங்கத்து அந்தாதி –
—————————————————————–
ஒரு பொருள் அல்லேன் இரு வினை உடையேன் உனது தொண்டு எனும் துறை குளித்து உன்
பெருகு தணணளியின் பாசம் தொட்டு இழிந்து பெரியது ஓர் முத்தி யான் பெற்றேன்
திருவும் மா மணியும் சங்கமும் ஏந்தி செய்ய தாமரை பல பூத்து
கரு நிறம் உடைத்தாய் நதி பொரு தரங்கம் கலந்தது ஓர் கருணை வாரிதியே –97-
இரு வினை உடையேன் -புண்ய பாப கர்மாக்கள் -பிறப்பு இறப்பு என்றுமாம்
பெருகு தணணளியின் பாசம் தொட்டு -மிக்க குளிர்ந்த திருவருள் ஆகிய கயிற்றைப் பிடித்துக் கொண்டு
கருணை வாரிதியே-அருட்கடலே
சுருங்கச் சொல்லணி -உருவாக அணி
பெற்றேன் -இறந்த காலம் -பேறு கிடைக்கும் அத்யவசாயம் துணிவு பற்றி –
———————————————————————
வாரி அரங்கம் வரு திருப் பாவைக்கும் மண் மகட்கும்
சீரியர் அம் கண் வளர் திருக் கோலமும் தென் திருக் காவேரி அரங்க
விமானமும் கோயிலும் மேவித் தொழார்
பூரியர் அங்கு அவர் கண் இரண்டாவன புண் இரண்டே –98-
வாரி அரங்கம் வரு -திருப் பாற் கடலின் நின்றும் வந்து தோன்றிய
திருப் பாவைக்கும்-திரு மகளுக்கும்
-வாரி அரங்கம் வரு -மண் மகட்கும் -கடலால் சூழப் பட்ட நில மகட்கும்
சீரியர் -சிறந்த மணவாளன் ஆகிய நம் பெருமாள்
அம் கண் வளர் திருக் கோலமும்
தென் திருக் காவேரி அரங்க விமானமும் கோயிலும் மேவித் தொழார்
பூரியர்-கீழ் மக்கள் ஆவார் –
அங்கு அவர் கண் இரண்டாவன புண் இரண்டே-
பூணார மார்பனை புள்ளூரும் பொன் மலையை காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டோமே -திருமங்கை ஆழ்வார்
கண் உடையவர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் –
———————————————————————————
புண் ஆர் உடல் பிறவி போதும் எனக்கும் உனக்கும்
எண்ணாது இருந்தது இனிப் போதும் கண்ணா
குழற்காளாய் தென் அரங்கக் கோயிலாய் நின் பொற்
கழற்கு ஆளாய் நின்றேனைக் கா –99-
புண் ஆர் உடல் பிறவி -மாமிசம் நிறைந்த உடம்பை எடுத்துப் பிறக்கும் ஜன்மம் எனக்கும் போதும்
குழற்காளாய்-வேய்ங்குழலை யுடைய காளை போன்றவனே -நடைக்கும் காம்பீர்யத்துக்கும் வலிமைக்கும் காளை உவமை-
உனக்கும் எண்ணாது இருந்தது இனிப் போதும்-உனக்கும் என்னை நினையாமல் இருந்தது போதும் –
அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி யுன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை யஞ்சேல் என்று கை கவியாய் -பெரியாழ்வார்
——————————————————————————–
காவிரி வாய்ப் பாம்பு அணை மேல் கரு முகில் போல் கண் வளும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் அரங்கர் பொன் அடியே தஞ்சம் எனப் பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்று இருவரினும் சீரியோரே –100-
எம்பெருமான் திருவடிகளே தஞ்சம் என்னும் உறுதியை யுடைய சாத்விகர்கள் -எல்லோரினும் தாழ்ந்த குலத்தில் தோன்றியவர்களே யாகிலும்
அஹங்கார மமகாரங்கள் மண்டி நிற்கப் பெற்ற தேவர் முதளியோரினும் உயர்ந்தவர் -என்றவாறு
———————————————————————–
மழை முகில் எனவே பணா முகம் திகழ் விரி யரவணை ஏறி வாழ் அரங்கர் தம்
எழில் பெறும் இரு தாளிலே கலம்பகம் எனும் ஒரு தமிழ் மாலை தான் அணிந்தனன்
குழல் இசை அளி மேவு கூரம் வந்தருள் குரு பரன் இரு பாத போதடைந்தவன்
அழகிய மணவாள தாசன் என்பவன் அடியவர் அடி சூடி வாழும் அன்பனே –101-
மழை முகில் எனவே பணா முகம் திகழ் விரி யரவணை ஏறி வாழ் அரங்கர் தம் எழில் பெறும் இரு தாளிலே
கலம்பகம் எனும் ஒரு தமிழ் மாலை தான் அணிந்தனன் –யார் என்றால் –
குழல் இசை அளி மேவு-வேய்ங்குழலின் இசை போலும் பாட்டிசையை யுடைய -வண்டுகள் விரும்பி மொய்க்கும்
கூரம் வந்தருள் குரு பரன் -கூரத் தாழ்வான் உடைய
இரு பாத போதடைந்தவன் -உபய திருவடித் தாமரைகளை அடைந்தவனும் -குரு பரன் -பரம குரு -தனது குருக்களுக்கு குரு என்றவாறு
கூரத் ஆழ்வான் உடைய உபய பாதங்கள் ஆகிய ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ வேத வியாச பாதர் திருவடிகளை அடைந்தவர் என்றவாறு
அழகிய மணவாள தாசன் என்பவன் அடியவர் அடி சூடி வாழும் அன்பனே –திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐ யங்கார் -என்றவாறு
——————————————————————————————
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply