சிறப்புப் பாயிரம் -அபியுக்தர் அருளிய தனியன் –
மறைப் பொருளோ அச்சிரப் பொருளோ மனுவே முதலாம்
முறைப் பொருளே இதிகாகச புராண முதுப் பொருளோ
இறைப் பொருளாம் நம் பெருமாளுடைத் திரு எட்டு எழுத்துள்
உரைப் பொருளோ -மணவாளர் தம் மாலையின் உட் பொருளே –
வேதம் -வேதாந்தம் -சிர பொருள் -மனு முதலான தரும சாஸ்திரம் -18 ஸ்ம்ருதிகள் –இதிகாசம் -புராணம் -அஷ்டாஷரம் –
இவை அனைத்தின் பொருளும் இந்த திருவரங்கத்து மாலையிலே உண்டு என்றவாறு
புகழு நல் ஒருவன் என்கோ-பொருவில் சீர் பூமி என்கோ -திகழும் தண் பரவை என்கோ -தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ -இகழ்வில் இவை யனைத்தும் என்கோ என்றால் போலே
ஈடு பட்டு வியந்து சங்கை போலே அருளிச் செய்கிறார் இங்கு
இறைப் பொருள் -தலைமையான பொருள் -முதலாவார் மூவரே யம் மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் -என்பதால் –
இறைப் பொருளாம் நம் பெருமாள் -என்றவாறு
இறைப் பொருள் திரு அஷ்டாஷர திரு மந்த்ரத்துக்கு விசேஷணம் என்றுமாம்
நம்பெருமாளுடை திரு எட்டு எழுத்து -இவன் வெளியிட்டு அருளி குரு பரம்பரையில் இடம் பிடித்து கொண்டதால்
குரு பரம்பரை பூர்வகமாக அனுசந்திக்கும் அஷ்டாஷரம் என்றவாறு-
கோயிலில் வந்த மணவாளர் பொற் திருப் பாதாம்புயங்கட்கு மாலை என மணவாளர் சூடும் என்றவாறு-
————————————————————-
காப்பு -திருவரங்க நாதனது திருமேனி திவ்ய அவயவங்களும் திவ்ய பஞ்சாயுதங்களும் –
நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும்
தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும் துழாய் மணக்கும்
தாளும் கரமும் கரத்தில் சங்கு ஆழியும் தண்டும் வில்லும்
வாளும் துணைவருமே தனியேனை வளைந்து கொண்டே –
நகை முகம் -புன்சிரிப்பை யுடைய திருமுகம் -ஒளியையுடைய திருமுகம்
தொடர்ந்து –விடாது தொடர்ந்து -தேடித் பின் தொடர்தலுமாம்
துழாய் மணக்கும் தாளும் -அடியார்கள் அர்ச்சித்த திருத் துழாய் வாசனை வீசப் பெற்ற திருவடி –
துழாய் உடன் இயற்கை மணம் வீசும் திருவடி என்றுமாம் -திருத் துழாய் வாசனை வீசக் காரணமான திருவடி என்றுமாம் -சர்வ கந்தன் அன்றோ –
அரங்கர் காராழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கில் —-
கூராழி சங்கம் திருக்கதை நாந்தகம் கோதண்டமே-திருவரங்கத் தந்தாதி காப்பு பாசுரம் –
———————————————————————————-
திருவாழி சங்கு திரு ஆழி வாழி சிறந்த கொண்டல்
உரு வாழி யோகத் திருத் துயில் வாழி உலகு அளந்த
மரு ஆர் மது மலர்த் தாள் வாழி வாழி வணங்கும் அன்பர்
பெரு வாழி அனைய பெருமாள் அரங்கப் பெரும் செல்வமே –1-
பெரியாழ்வார் போலே பொங்கும் பரிவாலே திருப் பல்லாண்டு பாடி அருளுகிறார்
திருவாழி-ஸ்ரீ மகா லஷ்மி வாழியே -திருக் கண்டேன் என்றே முதலில் அருளினார் இ றே
அந்தமில் சீர்ப் பொற் பாவை தன்னருளால் பொன்னரங்கர் தாள் பணிந்து நற் பால் அடைந்து உய்ந்தேன் நான் –
சங்கு திரு ஆழி
வாழி சிறந்த கொண்டல் உரு வாழி -திருமாலின் திருமேனி வாழியே -உரு -வடிவமும் நிறமும்
யோகத் திருத் துயில் வாழி -திரு யோக நித்தரை வாழியே-
அறி துயில் -விழி துயில் -துயிலாத் துயில் -பொய்த்துயில் -மாயத்துயில் என்றும் சொல்லுவர் இ றே
உலகு அளந்த மரு ஆர் மது மலர்த் தாள் வாழி -வாசனை நிறைந்த தேனை யுடைய தாமரை மலர் போன்ற திருவடிகள் வாழியே
இவ்வளவு அனுபவத்துக்கும் காரணம் ஸ்ரீ ரங்கத்தில் வாசம் என்பதால் மேலே
வாழி வணங்கும் அன்பர் பெரு வாழ்வு அனைய பெருமாள் அரங்கப் பெரும் செல்வமே —
நமஸ்கரிக்கின்ற மெய்யடியார்க்கு பெரிய வாழ்க்கை போன்ற பெரிய பெருமாள் யுடைய ஸ்ரீ ரங்கத்துக்கு பெரிய ஐஸ்வர்யம் வாழியே
ஸ்ரீ ரங்க ஸ்ரீ ஸ்ச வர்த்ததாம் -போலே
மருவார் -என்றது மலருக்கும் தாளுக்கும் விசேஷணம் -வாசனை நீண்ட -நெடும் தூரம் அளவும் வீசும் வாசனை என்றுமாம்
-அம்ருதஸ் யந்தி நிபாத பங்கஜே- -போலே
பெருமாள் அரங்கப் பெரும் செல்வம் -பெரிய பெருமாள் -உங்கள் பூர்வர்கள் தேடி வைத்த மஹா நிதி காணும்
என்று மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு பெரிய பெருமாளை சுட்டிக் காட்டி அருளினாரே
ஸ்ரீ ரங்க மங்கள நிதி -பெரு வாழ்வு -அழியாத நிரதிசய முக்தி உலக பேரின்ப வாழ்வு என்றவாறு
—————————————————————————————————
படுப்பவரைப் பணி மெல் அணையாகப் பரு வரையால்
தடுப்பவரைப் பண்டு மண்டு கல் மாரி தரணி இடந்து
எடுப்பவரைத் தம் அடியார் இடும் பச்சிலைக்கு முத்தி
கொடுப்பவரை செம் பொற் கோயிலுள்ளே கண்டு கொண்டனனே –2-
செம் பொன் -மாற்று உயர்ந்த பொன் என்றவாறு –
தம் அடியார் இடும் பச்சிலைக்கு-தமது திருவடிகளை அடைந்த மெய்யடியார்களுக்கு –
அத்திருவடிகளில் அர்ச்சிக்கின்ற பசுமையான திருத் துழாய் தளத்திற்காக –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –
அச்யுத உன் மெய்யடியார் உகந்தே இட்ட தணு எனினும் மகா மேருவாகக் கொள்வாய் –
நிச்சயமாய் யுனை நம்பி எண்ணா மூடர் நினைத்திடிலோ நூற்றி ஒன்றையும் கொள்ளாயால்-
எம்பெருமானை வசப்படுத்தும் பச்சிலை என்றவாறு -வசப் பட்டு பெரு வீடு அருளுகிறான்
புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -பணி மெல் அணையாகப் படுப்பவரை-
இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி –பள்ளி கொள்ளும் கரு மணியைக் கோமளத்தை கண்டு கொண்டு
என் கண் இணைகள் என்று கொலோ களிக்குமாறே
அடல் யாயிரவாய் பொருந்து வந்தார் பணிப் பையார் -திருவரங்கத்து அந்தாதி
கல் மாரி தடுத்து தரணி இடந்து -துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் –
மகரத்தில் சூரியன் வந்து உதித்த காலில் வந்திக்க விந்திரனை நோக்கி பொங்கல் மிக விட்டு கயிலை மலை போலே வைக்க
விளையாட்டாய் அத்தனையும் நீயே உண்ண ககனத்தில் இந்திரனும் வந்து பார்த்து கல் மழையை நிரை மீதில் விட்ட மட்டில்
இக பரத்திற்கு இறையவனே நிரைக்காக குன்றை எடுத்து மலை தடுத்தனையே எம்பிரானே -என்பரே –
புண்ணியம் தெய்வதமும் சேர் பூலோகத்தை புல் பாய் போல் சுருட்டி கொண்டே பாதாளம் நண்ணிய இரணியாட்சனைப் பின் தொடர்ந்தே ஏகி
நலமுடனே ஆதி வராகத் தேவாகி மண்ணுலகம் அனைத்தும் இடந்து எடுத்து ஓர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்து
தேவர் எண்ண யுலகீர் ஏழும் படியப் பண்ணா இறைவா நாராயணனே எம்பிரானே –
—————————————————————————
ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து அரவணை மேல்
காள அசலம் எனக் கண்டு கொண்டேன் -மறை காண ஒண்ணாத்
தாள் ஆயிரம் செம்பொன் மா முடி ஆயிரம் தாம நெடும்
தோள் ஆயிரம் திருக் கண் ஆயிரம் கொண்ட சோதியையே –3-
ஆள் ஆனவர் கண் களி கூர் அரங்கத்து அரவணை மேல் -அடியார்கள் கண்டு கண் மிகவும் களிப்ப காரணமான திருவரங்கம் பெரிய கோயிலிலே
கண்களால் காணுவதால் மணம் களி கூர்வதால் கண்ணிலே ஏற்றி அருளுகிறார் -ஒருவகை உபசார வழக்கு
தாம நெடும் தோள் ஆயிரம்-மாலைகள் தரித்த ஆயிரம் தோள்களை உடையவனும்
தாமம் -திருத் துழாய் மாலைகள் -மலர் மாலைகள் -ஹாரங்கள் -வனமாலை –இவற்றை எல்லாம் குறிக்கும் -தாமம் ஒளி என்றுமாம் –
திரு -அடை மொழி -தாள் முடி தோள் இவற்றுடன் கூட்டவுமாம்
காள அசலம் எனக் கண்டு கொண்டேன்-கரு நிறம் உள்ளதோர் மலை கிடந்தால் போலே சயனத் திருக் கோலமாகக் காணப் பெற்றேன்
காளாசலம் -நீல கிரி என்றவாறு
காள மேகம் படிந்ததொரு பெரு மலை என்றுமாம்
பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கன் அச்யுதா –
மறை காண ஒண்ணாத -சோதி உடனும் இயையும் விசேஷணம்
ஆயிரம் -அநேகம் என்றவாறு -திவ்யாத்மா ஸ்வரூபம் -அபரிமித அத்புத ஞான சக்திகள் கொண்டவன் என்றவாறு
————————————————————————–
பூங்கா விரிப்புனற் கோயிலுள்ளே மிக்க போகம் எல்லாம்
யாம் காண யோகத்துயில் கொண்டவாறு எள்ளும் எண்ணெய் யும் போல்
நீங்காது உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி நியாமகன் ஆய்
ஓங்காரம் ஆய் அதன் உட்பொருளாய் நின்ற ஒண் சுடரே –4-
எள்ளும் எண்ணெயும் போல் நீங்காது -இடையறாமல்
உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி -உலகத்தில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு அந்த்ராத்மாவாகியும்
எல்லாம் தானாகவும் அல்லனவாகவும் இறைவன் நிற்கின்ற நிலையை எள்ளும் எண்ணெயும் போல் என்கிறார்
நியாமகன் ஆய் -தலைவன் ஆகியும்
கருதரிய உயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம் என்றால் உன் புகழுக்கு வரம்பாமோ -திருவரங்கக் கலம்பகம்
திட விசும்பு –கரந்து எங்கும் பரந்து உளன்-என்றும்
-பரந்த தண் பரவையுள் –கரந்து எங்கும் பரந்து உளன் என்பரே
எண்ணும் எண்ணெயும் இயைய மற்று எப்பொருள் அகத்தும் நண்ணு நாரணன் –
ஓங்காரம் ஆய் -பிரணவ மந்த ஸ்வரூபி யாகவும்
அதன் உட்பொருளாய்-அந்த மந்த்ரத்தின் உள்ளே அடங்கிய பொருளையும்
சொல்லும் பொருளும் அவனே –
ஓங்காரோ பகவான் விஷ்ணு
பிரணவோ பகவத் வாசீ பிரதான்யா தர்த்த சம்பவாத் –
நின்ற-எந்நாளும் அழிவற்ற ஒரே தன்மையாய்
ஒண் சுடரே –ஒள சுடர் -பிரகாசின்ற சோதியாகியும்
பூங்கா விரிப்புனற் கோயிலுள்ளே மிக்க போகம் எல்லாம் யாம் காண யோகத்துயில் கொண்டவாறு -என்ன ஆச்சர்யம் என்கிறார்
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கம் -நீர் வளம்
போக மண்டபம் அன்றோ கோயில் -பெருமாள் அரங்கம் பெரும் செல்வம் என்றார் இ றே
மிக்க போகம் -வரம்பில் இன்பம் நிரதிசய பேரின்பம்
யாம் -என்று தம்மைப் போன்ற அடியார்கள் ஆகிய நம்மையும் சேர்த்து அருளுகிறார் –
———————————————————————-
கறங்கு ஆழி நாள் எட்டு இலக்கம் இயோசனைகட்செவியின்
பிறங்கு ஆகம் மும்மை இலக்கம் இயோசனை பேர் உலகில்
இறங்கு ஆழி மேகம் எனவே அரங்கத்தில் எந்தை அதில்
உறங்கு ஆகம் நீளம் ஐந்து ஐம்பதினாயிரம் ஒசனையே –5-
கறங்கு ஆழி -ஆராவாரிக்கின்ற திருப் பாற் கடலினது
நீளம் –
நாள் எட்டு இலக்கம் இயோசனை -32 லஷம் யோஜனை அளவாம் –
அதன் இடையே உள்ள –
கட்செவியின் பிறங்கு ஆகம் -திரு வனந்தாழ்வான் உடைய விளங்குகின்ற திரு உடம்பானது –
சஷூஸ் ஸ்ரவஸ் -என்பரே -கோகன நாகம் -அன்றோ
நீளம்
மும்மை இலக்கம் இயோசனை -மூன்று லஷம் யோஜநையாம்
பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே-பெரிய இந்நிலை யுலகத்தில் வந்து இறங்கி வந்த சக்ராயுதத்தை உடைய தொரு மேகம் போலே
ஆழி மேகம் -கடலில் படிந்து நீரை உட்கொண்ட கார் மேகம் -கடலும் மேகமும் போலே என்றுமாம் –
அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு ஆகம் -யோக நித்தரை செய்து அருள்கின்ற திருமேனியானது
நீளம்
ஐந்து ஐம்பதினாயிரம் ஒசனையே -இரண்டரை லஷம் யோஜநையாம்
————————————————————————
பாற் கடல் நாள் எட்டு இலக்கம் இயோசனை பாற் கடலுள்
மால் கவி கோயில் அகலமும் ஈர் ஐந்து வான் அளவும்
தீற்கம் ஓர் ஏழ் திகழ் பணி மூன்று சிறந்த அகலம்
ஏல்கவின் ஒன்றரை உத்தமர் நீளம் இரண்டரையே –6-
பாற் கடல் நாள் எட்டு இலக்கம் இயோசனை-திருப் பாற் கடல் நீளம் 32 லஷம் யோஜநையாம்
பாற் கடலுள் மால் கவி கோயில் -அந்த பாற் கடலுள் திருமாலை வளைந்து கொண்டு இருக்கிற திருக் கோயிலினது
அகலமும் ஈர் ஐந்து-அகலம் 10 லஷம் யோஜநையாம்
வான் அளவும் தீற்கம் ஓர் ஏழ் -ஆகாசத்தை அளாவுகின்ற அத்திருக் கோயிலின் உயரம் ஏழு லஷம் யோஜநையாம்
திகழ் பணி மூன்று -விளங்குகின்ற திரு வனந்த தாழ்வான் உடைய நீளம் மூன்று லஷம் யோஜநையாம்
சிறந்த அகலம் ஏல்கவின் ஒன்றரை-மேன்மை உற்ற திரு வனந்த தாழ்வான் உடைய அகலம் -பொருந்திய அழகை யுடைய ஒன்றரை லஷம் யோஜநையாம்
உத்தமர் நீளம் இரண்டரையே -புருஷோத்தமர் உடைய திருமேனி நீட்சி இரண்டரை லஷம் யோஜநையாம் –
கூறியது கூறினும் குற்றம் இல்லை வேறொரு பொருளை விலக்குமாயின் -தொகுத்து அனைத்தையும் உணர்த்தி அருளுகிறார் -என்பர்
இத்தை வேறு சிலர் இயற்றி இடைச் சொருகல் ஆக்கினார் என்றும் சொல்வர்
—————————————————————
அடித்தலம் அந்த அதலம் பொரு திரை ஆழி வையம்
கடித்தலம் நேமிக்கிரி உடை ஆடை கபாலி முன் நாள்
மிடித்து அலமந்தது ஒழித்தான் அரங்கன் விழி இரு கோள்
முடித்தலம் அண்ட முகடு இனி யாம் என் மொழிவதுவே –7-
அடித்தலம் அந்த அதலம்-திருவடிகள் இருந்த இடம் அந்த அதலம் என்கிற பாதாள லோகம்
பொரு திரை ஆழி வையம் கடித்தலம்-திருவரை இருக்கும் இடம் மோதுகின்ற அலைகளை உடைய கடலால் சூழப் பட்ட பூ லோகமாம்
நேமிக்கிரி உடை ஆடை -அத்திருவரையில் உடுக்கும் வஸ்த்ரம் பூ லோகத்தை சூழ்ந்து உள்ள சக்ரவாள பர்வதம்
முன் நாள் -முற்காலத்தில்
கபாலி மிடித்து அலமந்தது -பிரமன் தலையோட்டை கையிலே கொண்ட சிவன் சாபத்தால் வறுமை உற்று கண்டவிடம் எங்கும் இரந்து திரிந்து வருந்தியதை
ஒழித்தான் அரங்கன் -போக்கி அருளினான் அரங்க நாதனது
விழி இரு கோள் -திருக் கண்கள் சந்திர சூரியர்கள்
முடித்தலம் அண்ட முகடு -திருமுடி இருக்கும் இடம் அண்ட கோலத்தின் உச்சியம் அப் பெருமான் உடைய
திரு உருவத்தின் பெருமையை குறித்து இனி நாம் சொல்லத் தக்கது யாது உளது
விராட் ஸ்வரூபம் -விஸ்வ ரூபம் மகிமையை அருளிச் செய்கிறார்
—————————————————————-
திண் சுடர் ஆழி அரங்கேசர் திக்கு திருச் செவியில்
மண் கழலில் சத்ய லோகம் சிரத்தில் மருத்து உயிரில்
தண் கதிர் உள்ளத்தில் வான் உந்தியில் செந்தரணி கண்ணில்
ஒண் கனல் இந்திரன் வாழ் முகப் போதில் உதித்தனரே –8-
திண் சுடர் ஆழி அரங்கேசர்
திக்கு திருச் செவியில் -திருச் செவியில் இருந்து திக்குகளும்
மண் கழலில் -திருவடிகளில் இருந்து பூமியும்
சத்ய லோகம் சிரத்தில்-திரு முடியில் இருந்து சத்ய லோகமும்
மருத்து உயிரில் -வாயுவும் திரு உயிரில் இருந்தும்
தண் கதிர் உள்ளத்தில்-திரு உள்ளத்தில் இருந்து குளிர்ந்த சந்திரனும்
வான் உந்தியில் -திரு உந்தியில் இருந்து ஆகாயமும்
செந்தரணி கண்ணில் -திருக் கண்ணில் இருந்து செந்நிற சூரியனும்
ஒண் கனல் இந்திரன் வாழ் முகப் போதில் -சிறப்புற்ற தாமரை மலர் போன்ற திரு முகத்தில் இருந்து ஒளி யுள்ள அக்னியும் இந்திரனும்
கால பேதத்தால் வாடுதல் குவிதல் இன்றி எப்பொழுதும் மலர்ந்தே இருப்பதால் வாழ் மலர் என்கிறார்
உதித்தனரே –ஆதியில் தோன்றினார்கள்
புருஷ ஸூ கதம் -மறைப் பொருளின் அர்த்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணமும் இத்தை தெரிவிக்கும் –
—————————————————————-
புரம் ஆயிரம் திருக் கண் மலர் ஆயிரம் புண்டரிகக்
கரம் ஆயிரம் கழற் கால் மலர் ஆயிரம் கண்ணி முடிச்
சிரம் ஆயிரம் திரு நாமமும் ஆயிரம் செய்ய கையில்
அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே –9-
புரம் ஆயிரம்-திரு மேனி ஆயிரமாம்
திருக் கண் மலர் ஆயிரம் புண்டரிகக்
கரம் ஆயிரம்
கழற் கால் மலர் ஆயிரம்
கண்ணி முடிச் சிரம் ஆயிரம்
திரு நாமமும் ஆயிரம்
செய்ய கையில் அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்
பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய வப்பனே -நம்மாழ்வார்
வேதம் செப்பும் பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத் தாரார் முடி யாயிரம் -கம்பர்
——————————————————————-
முன் நாள் விசும்பும் புவியும் திசையும் முறை வகுத்த
அன் நான்முகன் தனது ஆவி எல்லாம் மலர் ஆசனை ஆம்
மின் ஆர் மழை முகில் நல் நாகம் மீதில் விழி துயில் கூர்
எம் நாதனுக்கு ஒரு மூச்சு என்று வேதம் இசைக்கின்றதே –10-
முன் நாள் விசும்பும் புவியும் திசையும் -அனைத்து பஞ்ச பூதங்களையும் மற்றை எட்டு திக்குகளையும்
முறை வகுத்த -எம்பெருமான் திரு வயிற்றினுள் தான் கண்ட கிராமத்தின் படுத்தி வகைப் படுத்தி சிருஷ்டித்த
அன் நான்முகன்
தனது ஆவி எல்லாம்-உயிர் முழுவதும்
மலர் ஆசனை ஆம் மின் ஆர் மழை முகில் -மலராள் உடன் மின்னல் பொருந்திய கார்காலத்து மேகம் போலே போன்ற திருமேனி உடையவனான
நல் நாகம் மீதில் விழி துயில் கூர் எம் நாதனுக்கு ஒரு மூச்சு என்று வேதம் இசைக்கின்றதே —
எம் நாதனுக்கு -நம் பெருமாளுக்கு –
அனைத்தும் ஓர் உயிர்ப்பாம் – சுவாசமாம் –
உயிர்வாழும் காலம் -பிரமனது ஆயுள் காலமும் -ஒரு மூச்சு விடும் காலம் எம்பெருமானுக்கு –
பிரமனும் ஜீவ கோடியில் ஒருவன் -கால வசப்பட்டவன் –
கருட வாகனனுக்கு உலப்பிலா பிரமர் கழியும் நாள் கணத்துக்கும் பற்றா –
கமலர் எண்ணிலர்கள் அமர்ந்திடும் பதத்தைக் கழித்திடும் காலத்தை கடக்கும் விமலன் –
———————————————————————————-
எண்ணில் திகிரிப் பிறப்பிடம் ஆனதும் எண்ணுமவர்
நண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் நாசம் இல்லா
விண்ணின் பதிக்குக் கடைத்தலை ஆனதும் விண்ணவர் தம்
கண்ணில் சிறந்ததும் -மா நீர் அரங்கர் தம் கண்ணில் ஒன்றே -11–
எண்ணில்-ஆராய்ந்து பார்க்கும் இடத்தில்
திகிரிப் பிறப்பிடம் ஆனதும் -சூரியனுக்கு பிறப்பிடம் ஆகியதும் -திருக் கண்ணில் இருந்தே ஆதித்யன் பிறந்தான் என்று புருஷ ஸூ க்தம் சொல்லுமே –
சந்திர சூர்யௌ ச நேத்ரே –
செந்தரணி கண்ணில் –என்றும் -அரங்கன் விழி கோள் -என்றும் அருளிச் செய்தார் முன்னமே
எண்ணுமவர்நண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் -சூரியன் தன்னைத் தியானம் செய்யும் அடியார்கள் பொருந்தி மேன்மை பாடுதற்கு காரணமானதும்
விருப்பிடம் -விரும்பப் படும் என்றுமாம் –
நாசம் இல்லா விண்ணின் பதிக்குக் கடைத்தலை ஆனதும்
-கலங்கா பெரு நகரம் – அழிவில்லா பரமபததுக்கு செல்லும் வழிக்கு தலை வாசல் ஆகியதும்
அர்ச்சிராதி கதியில் அர்ச்சிஸ் தானே முதல் -சூரிய மண்டலத்தை பிளந்து கொண்டு நடுவில் செல்லுவது –
இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலதூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே –
வெங்கதிர்ப் பரிதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –
காரார் புரவி ஏழ் பூண்ட தனியாழித் தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி அதினின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு புக்கு வீடு என்னும் தொல் நெறிக் கண் சென்றார் –
கடைத்தலை -தலைக்கடை -என்றவாறு -இலக்கண போலி
விண்ணவர் தம் கண்ணில் சிறந்ததும் -தேவர்கள் கண்களைக் காட்டிலும் மேம்பட்டதும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர் க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –
சஷூர் மித்ரச்ய வருணஸ் யாக்நே –
மா நீர் அரங்கர் தம் கண்ணில் ஒன்றே -நம்பெருமாளது வலக் கண் ஒன்றே யாம் –
புரவி ஏழ் ஒருகாலுடைய தேரிலே திருச் சக்கரம் ஒத்துக் கால சக்கரச் செங்கோல் நடாவி ஜ்யோதிஸ் சக்ரவொளி சுருக்கி
அக்நீஷோமீயதே ஜோம்ருதத்துக்கு ஊற்றும் மந்தேஹர்க்கு செந்தீயும் முக்தி மார்க்கத்தலை வாசலும்
கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும் த்ரயீ மயமுமான மண்டலத்திலே -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள்
——————————————————————————
புறக்கன்று புல் இதழ் முந்நீர் பிரசம் பொரு இல் செம்பொன்
நிறக்குன்று கன்னிகை எண் கிரி தாது நிலம் அதனுள்
பிறக்கும் துகள் முது மாசுணம் நாளம் பிரமன் வண்டு
சிறக்கும் திகிரி அரங்கேசர் உந்திச் செழு மலர்க்கே –12-
புறக்கன்று புல் இதழ் -புறம் குன்று -பூமியைச் சூழ்ந்த கடலுக்கு -புல்லுதல் சார்தல் சார்ந்துள்ள –
அப்பால் மதில் போல் சூழ்ந்து இருக்கின்ற சக்ரவாள பர்வதம் புற இதழாம்
முந்நீர் பிரசம்-கடல் தேனாம்
பொரு இல் செம்பொன் நிறக்குன்று கன்னிகை -கர்ணிகா – ஒப்பில்லாத சிவந்த பொன் மயமான ஒளியை உடைய மகா மேரு பர்வதம் கொட்டையாம்
84000 யோஜனை உயரம் -16000 யோஜனை பூமிக்கு உள்ளே உருவியதும் -32000 யோஜனை தலையில் விரித்தும் –
16000 யோஜனை அடியில் விரிந்தும் பூமிக்கு கர்ணிகை போலே மேரு -ஸ்ரீ விஷ்ணு புராணம்
எண் கிரி தாது -அஷ்ட குல பர்வதங்கள் அகல் இதழ்களாம்
மால்யவான் -கந்தமாதனம் -நிஷதம்-ஹேம கூடம் -இமயம் -நீலம்-சுவேதம் -சிருங்கும் –
நிலம் அதனுள் பிறக்கும் துகள் -பூமி அம்மலரின் உள்ளே தோன்றும் மகரந்த பொடியாம்
முது மாசுணம் நாளம் -பழைமையான ஆதி செஷன் தண்டாம்
பிரமன் வண்டு -பிரமதேவன் வண்டாகும் -மேலிடத்தில் வாழ்ந்து வேத கீதம் பாடிக் கொண்டே இருப்பதால்
வண்டாய் அயனன் மறை பாட மமலர்ந்த தொரு தாமரைப் போது பண்டு ஆலிலையின் மிசைக்கிடந்து
பாரு நீரும் பசித்தான் போல் உண்டான் உந்திக் கடல் பூத்தது -கம்பர்
சிறக்கும் திகிரி அரங்கேசர் உந்திச் செழு மலர்க்கே -திரு நாபியில் தோன்றிய செழுமையான தாமரை மலர்க்கு –
அனைத்தும் உந்திக் கமலத்தின் ஏக தேசம் என்றவாறு –
—————————————————————————
இரு கூலமும் பொருமா நீர் அரங்கத்தில் எந்தை அம் தண்
முருகு ஊர் கமல முனி ஆய் வகுக்கும் முறையினால்
புரு கூதனுக்குத் திருத் தம்பி ஆகி புரக்கும் உமை
ஒரு கூறு கொண்ட அரன் ஆய அழிக்கும் உகாந்தத்திலே –13-
இரு கூலமும் -இரண்டு பக்கத்து கரைகளையும்
பொருமா நீர் அரங்கத்தில் -மோதி உடைக்கும் மிகுதியான நீர் பெருக்கு உள்ள சூழப் பட்ட திருவரங்கத்தில்
எந்தை -எம்பெருமான் -நம் பெருமாள் –
அம் தண் முருகு ஊர் கமல முனி ஆய்-அழகிய குளிர்ந்த வாசனை வீசும் தாமரை மலரில் தோன்றிய பிரமன் ஆகி
வகுக்கும் முறையினால் -கிரமப்படி உலகங்களையும் சராசரங்களையும் படைத்து அருள்வன்
புரு கூதனுக்குத் திருத் தம்பி ஆகி -தேவேந்த்ரனுக்கு சிறந்த தம்பியாகி தோன்றி
புரக்கும்-காத்து அருள்வான்
உமை ஒரு கூறு கொண்ட அரன் ஆய அழிக்கும் உகாந்தத்திலே —
பார்வதியை உடம்பில் இடப்பக்கத்தில் வைத்துக் கொண்ட சிவனாகி யுக முடிவு காலத்திலே அழித்து அருள்வான் –
ஆக்குமாறு அயனாய் முதலாக்கிய யுலகம் காக்குமாறு செங்கண் இறை கருணை யம் கடலாம் வீக்குமாறு அரனாம்
அவை வீந்த நாண் மீளப் பூக்கும் மா முதல் எவன் அவன் பொன்னடி போற்றி -ஸ்ரீ வில்லி புத்தூரார் பாரதம்
சிவனாய் அயனாய் –முக்கண் அப்பா -தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்-அரன் அயன் என யுலகு அழித்து அமைத்து யுலனே –
ஆக்கும் தொழிற்கு விரிஞ்சியை வைத்து அழிக்கும் தொழிற்கு சிவனை வைத்து காக்கும் தொழில் தான் கைக்கொள் அருள் கடவுள்
உலகம் யாவையும் தான் உளவாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்களா அலகிலா விளைடாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
இவர்கள் சரீர ஸ்தானம் -அவன் ஆத்மாவாக செய்யும் கிரிசைகள் -இருந்து படைக்கும் ஆசனத்தோ பாதி பர்மா -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
தான் சர்வ சக்தனாய் இருக்க பிரமாதிகளை இடையில் வைப்பது ஏன் எனின் அவர்களுக்கு இப்படி வரம் கொடுத்து இருக்கிறான் ஆகையாலே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
———————————————————————-
வாரித்தலமும் குல பூதரங்களும் வானும் உள்ளே
பாரித்து வைத்த இவ் அண்டங்கள் யாவும் படைக்க முன் நாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
மூரிப் புனலில் குமிழ்கள் போலே முளைத்தனவே –14-
வாரித்தலமும் குல பூதரங்களும் வானும்
கடல் சூழ்ந்த உலகங்களையும் குல பர்வதங்களையும் ஆகாயத்தையும்
உவர் நீர் கருப்பஞ்சாறு கள் நெய் தயிர் பால் நந்நீர் -ஏழு கடல்கள்
ஜம்பூ பிலஷம் சால்மலம் குசம் க்ரௌஞ்சம் சாகம் புஷ்கரம் ஏழு தீவுகள்
உள்ளே பாரித்து வைத்த இவ் அண்டங்கள் யாவும் படைக்க முன் நாள்
தமது அகத்திலே பரப்பி வைத்துள்ள இந்த அண்டங்கள் எல்லாம் முன் நாள் எம்பெருமான் சிருஷ்டிக்கும் பொழுது
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே
தேனை யுடைய பசு நிறமான குளிர்ந்த திருத் துழாய் மாலையைத் தரித்த அத் திருவரங்க நாதரது லீலா விபூதியிலே
வேரி வாசனை பசுமை வாடாமை
மூரிப் புனலில் குமிழ்கள் போலே முளைத்தனவே —
பெரு வெள்ளத்தில் குமிழ்த்த நீர்க் குமிழிகள் போலே தோன்றின –
நிற்கு நெடு நீத்த நீரின் முளைத்து எழுந்த மொக்குகளே போலே -கம்பர் –
—————————————————————-
நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நித்தலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தன்னில்
கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே –15-
நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலும் –
நாள் தோறும் பெரிய கடல் மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கி நிற்பதும் -சூரியன் தவறாமல் வந்து வெயில் காய்வதும்
நிற்றல் -நித்யம் வடசொல்லின் சிதைவு
கால் ஒடுங்கி நடப்பதும் -காற்று உலகம் பொறுக்கும் படி அடங்கி வீசுவதும்
தண் கார் பொழிவதும் -குளிர்ச்சி யான மேகங்கள் காலத்தில் வந்து மழை பொழிவதும்
ஊழி தன்னில் கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் –
கல்பாந்த காலத்திலேஉலகத்தை சுட்டு எரிக்கின்ற படபாமுகாக்னி -அதற்கு முன்பு உலகத்தில் பற்றுக் கொண்டு
அதனைச் சுட்டு எரித்து அழியாமல் கடலிநிடையே அடங்கி இருப்பதும்
தும்பை புனைந்து அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே —
தும்பைப் பூ மாலையை சூட்டிக் கொண்டு அழிக்கின்ற அக்கினி போலச் சுவாலைகளை வீசுகின்ற சக்ராயுதத்தை ஏந்திய திரு வரங்க நாதரது
சிறந்த கட்டளையினாலேயே யாம் எம்பெருமானது சர்வேஸ்வரத்வமும் சர்வ நியாமகத்வமும் அருளுகிறார்
அஞ்சி நடப்பது திருச் சக்கரத்தையும் ஆஜ்ஞா சக்கரத்தையும் நோக்கி என்றது ஆயிற்று
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நடாவுதீர் -திருவிருத்தம்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ண பிரான் -திருவாய் மொழி
————————————————————–
ஓலைப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உகம் திரியும்
காலத்தினில் கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு காமர் பசும்
கோலக் குழவி வுருவாய் அகண்டமும் கோத்த வெள்ளத்து
ஆலத்து இலையின் புடைக்கே துயில்வார் அகம் மகிழ்ந்தே –16-
ஓலைப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உகம் திரியும் காலத்தினில்
ஆரவாரத்தைச் செய்கின்ற நீர்ப் பெருக்கை யுடைய காவிரி யானது திவ்ய தீர்த்தத்தால் சூழப் பட்ட திரு வரங்கத்தில்
எழுந்து அருளி இருக்கும் நம் பெருமாள் கல்பம் மாறும் காலத்தில்
கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு -மிகுதியான ஆண்ட கோலங்களை எல்லாம் புசித்து -திரு வயிற்றில் வைத்து அடக்கி அருளி
காமர் பசும் கோலக் குழவி வுருவாய் -கண்டவர் விரும்பத் தக்க அழகையுடைய இளம் குழந்தை வடிவமாய்
அகண்டமும் கோத்த வெள்ளத்து -எல்லா இடங்களிலும் இடைவிடாது பரவிய அந்தப் பிரளய வெள்ளத்திலே
ஆலத்து இலையின் புடைக்கே துயில்வார் அகம் மகிழ்ந்தே —
ஆலிலையினிடத்திலே திரு வுள்ளம் உகந்து யோக நித்தரை செய்து அருள்வர் –
ரஷிக்கப் பெற்றோமே என்று மகிழ்ந்து இருப்பாரே
அகடிகடதநா சாமர்த்தியத்தையும் -பரத்வத்தையும் பேர் அருள் உடைமையும் காட்டும்
நல்ல நீர்மை உடைய திருவரங்கம் என்றுமாம் -ஒரு மாத்ரை நேரம் கூட இங்கே வாஸம் செய்வாருக்கு வீடு பேறு அளிக்கும் நீர்மை உண்டே
——————————————————————
தாற்றுக் கமுக வனம் சூழ் அரங்கர் சயன முகக்
காற்றுப் புலரும்படி முதல் வீசும் கறைக்களத்தன்
நீற்றுச் சிவந்து எழும் கார் ஆழித் தீச்சுடும் நீள் கழலின்
ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டம் எல்லாம் கொள்ளும் அந்தத்திலே –17-
தாற்றுக் கமுக வனம் சூழ் அரங்கர் -குலைகளை யுடைய பாக்கு மரங்கள் யுடைய சோலைகள் சூழ்ந்த திரு வரங்கத்திலே
எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுடைய
சயன முகக் காற்றுப் புலரும்படி முதல் வீசும் -ஆதி சேஷன் யுடைய ஆயிரம் முகங்களின் நின்றும் எழுகின்ற காற்றானது
முதலில் எல்லாப் பொருள்களும் உலர்ந்து வீசும்படி நெடிதாய் வீசும்
பிறகு அந்த முகக் காற்றில் இருந்து
கறைக்களத்தன்-நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை யுடைய ருத்ரன்
நீற்றுச் சிவந்து எழும்-எல்லாப் பொருள்களையும் எரித்து நீறாக்கிக் கொண்டு கோபித்துத் தோன்றுவன்
கார் ஆழித் தீச்சுடும்-திருவரங்கர் பள்ளி கொண்டு அருளும் கரிய கடலில் உள்ள படபாமுகாக்னி உலகத்தை எரிக்கும்
நீள் கழலின் ஆற்றுப் பெரும் பெருக்கு -அத்திருமால் யுடைய நீண்ட திருவடி பட்டதனால் யுன்டாகிய துளை வழியால் பெருகிய பெரும் புறக் கடல் வெள்ளம்
அண்டம் எல்லாம் கொள்ளும் அந்தத்திலே -அண்ட கோளம் முழுவதையும் தன்னிடத்திலே அகப்படும்படி கவர்ந்து கொள்ளும்
ஒல் ஆழி சூழ் புவி உச்சியில் ஏந்தும் உகக் கடையில் கால் ஆன நற்குண மூர்த்தியைக் காலும் அக்காலம் எல்லாம்
மேலா விளங்கும் புவி மீதில் என் தன விழுத் துணை ஆம் மால் ஆம் அரங்க மணவாளர் கண் துயில் மாசுணமே –86 என்பர் மேலே
அரங்கேசர் பொற்றாள் பட்டுடைந்த அண்ட மேலக் கடாகத்து துளை வழியா விழும் புனல் –37-என்பர் மேலே
லோக சம்ஹாரம் எம்பெருமானது அங்க உப அங்கங்கள் மூலம் ஆகும் என்று அவன் பரத்வத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால் –
——————————————————————–
சின்னூல் பல பல வாயால் இழைத்து சிலம்பி பின்னும்
அந்நூல் அருந்தி விடுவது போலே அரங்கர் அண்டம்
பல் நூறு கோடி படைத்து அவை யாவும் பழம் படியே
மன் ஊழி தன்னில் விழுங்குவர் போத மனம் மகிழ்ந்தே –18-
ஸ்வரூப விகாரம் இல்லாமல் இருந்து கொண்டே சிலந்தி பூச்சியே சிலவற்றை யுண்டாக்கி யுட்கொள்ளும் போது
சர்வ சக்தனுக்கு கூடுமே –
ஒரு சிலந்திக்கு யுண்டான ஸ்வ பாவம் சர்வ சக்திக்கு கூடாது ஒளியாதி இ றே-தத்வ த்ரயம் ஸ்ரீ ஸூ க்திகள்
வெற்றிப் போர்க்கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கொற்றப் போராழி யான் -என்றும்
பேயிருக்கும் நெடும் வெள்ளம் பெரு விசும்பின் மீதோடி பெருகு காலம் தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தம்
வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -திருமங்கை ஆழ்வார் –
—————————————————————-
பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு
சிந்தித் திடுவதும் இல்லை கண்டீர் அத்திசை முகனோடு
உந்திக் கமலம் விரிந்தால் உகக் கடையில்
முந்திக் குவியில் உடனே குவியும் இம் மூதண்டமே –19-
உந்திக் கமலம் விரிந்து குவிந்து சிருஷ்டி சம்ஹாரம் -அவன் சங்கல்பிக்கவும் வேண்டாம் என்கிறார்
திசைமுகனோடு அண்டம் விரியும் -திசைமுகனோடு அண்டம் குவியும் என்கிறார்
உகக்கடை யில் குவியும் –கல்பத்தின் தொடக்கத்தில் விரிந்து கடைசில் குவியும் -என்கிறார்
கல்பம் தோறும் அண்டம் ஒரே மாதிரி இருப்பதாலும் அண்டம் பிரவாஹம் போலே நித்தியமாய் இருப்பதாலும் மூதண்டம்
————————————————————————————————————-
அடந்தை நடந்தை வனம் சூழ் அரங்கத்து அரவணை மேல்
கிடந்தனர் துங்கக் கிரிமிசை நின்றனர் கேழல் ஒன்றாய்
இடந்தனர் மீள விழுங்கினர் கான்றன ஈரடியால்
கடந்தனர் கை வழி மண் ஆனது இந்த மண் காரணர்க்கே –20-
அடந்தை நடந்தை வனம் சூழ் அரங்கத்து அரவணை மேல் கிடந்தனர் -சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் கிடந்து அருளி
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் கைங்கர்யம் செய்த பூம் சோலை அடந்தை நடந்தை என்பர்
துங்கக் கிரிமிசை நின்றனர்-திரு வேங்கடத்தில் நிற்று அருளி -திருமால் இரும் சோலை என்றுமாம்
இடவ மலைக்கும் –புயங்க மலைக்கும் இறைவ –திருவரங்கத்து அந்தாதி
கேழல் ஒன்றாய் இடந்தனர்-ஸ்ரீ வராக மூர்த்தியாய் இடந்து அருளி
மீள விழுங்கினர் -கல்பாந்தரத்திலே விழுங்கி அருளி
கான்றன -தொடக்கத்தில் மீண்டும் உமிழ்ந்து அருளி
ஈரடியால் கடந்தனர் -ஸ்ரீ ராமவதாரத்தில் நடந்து திரு விக்ரமனாய் கடந்து அருளி
கை வழி மண் ஆனது இந்த மண் காரணர்க்கே –மட்கலம் வனையும் குயவன் போலே இந்த பூமி ச்வீதீனமாய் உள்ளதே
நினைத்த படி எல்லாம் முடிவதாயும் எளிதாயும் உள்ளதே
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோளாரத்தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மாலார் காண்பாரே -திருவாய் மொழி
சர்வ சேஷ்டா விஷம் -அவனுக்கே சேஷம்
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையின் மண் கொண்டு அளந்து மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன்
படைத்த பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன்
இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
——————————————————————-
பின்னைக்கு இனிய பெருமாள் அரங்கர் பெறாது பெற்ற
முன்னைப் பிரமனை வாழ்விக்க வேண்டி முன் நாள் கவர்ந்த
அன்னம் திரு உரு உள்ளே வளர்ந்ததற்கு ஓர் அண்டம் ஆம்
என்னச் சிறந்தது மூதண்டம் யாம் என் இயம்புவதே –21-
அண்டம் -முட்டை -பறவைகள் முட்டையில் இருந்து பிறப்பதால் அண்டஜம் எனப்படும்
பெறாப் பேரு -தந்தைக்கு ஸ்வா பாவிக அன்பு பிள்ளைக்கு உண்டே
நப்பின்னையாம் விரகதைக்கு விடை ஏழ் தழுவின வேங்கடவன் குரகதைப் பிளந்தான் தோள்களாகிய குன்றங்களே-திருவேங்கடத் தந்தாதி
பின்னை மணாளன் -அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுட் கொம்பினார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் தானே
பின்னை தன காதலன் என்பார்கள் -ஸ்ரீ கிருஷ்ணாவதார பிரதான மகிஷி -மேன்மை யின் எல்லைக்கு ஸ்ரீ யபதி போலே நீர்மையின் எல்லைக்கு நப்பின்னை
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் துன்னுமா இருளா துளங்கு ஒளி சுருங்கி தொல்லை நான் மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறக்கு இருள் நிறம் கெட ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான்
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ணமுதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறையை
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே
முன் இவ் வேழு உலகு உணர்வு இன்றி இருள் மிக யும்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே –
—————————————————————————
சூழிக் களிறு வெவ்வாய் முதலை துனித்த உக்ர
பாழித் திகிரிப் படை அரங்கேசர் படைப்ப வன்தன்
ஊழிப் பொழுது ஒரு சேல் ஆய் ஒரு செல் வுள் கரந்த
ஆழிப் பெரும் புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே –22–
ஒரு சேல் ஆகி -மீன் வடிவமாகி
ஒரு செல் வுள் கரந்த ஆழிப் பெரும் புனல்-தனது ஒரு புறம் முள்ளின் அகத்தே யடங்கு கின்ற பெரிய கடல் வெள்ளத்திலே –
தேவுடைய மீனமாய் யாமையாய் யரியாய் குறளாய் மூவுருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில் –
நிலையிடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர் தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை என்ன வரணாவன்
என்னும் அருளால் அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி யகல் வான் உரிஞ்ச
முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
அருமறையாய் இருக்கு எசுர் சாமத்தினோடு அதர்வணம் ஆகிய சதுர் வேதங்கள் தம்மை திருடி எடுத்துக் கொண்டே யுத்தி சேரும் தீயனுக்கா
மச்சாவதாரமாய் நீ ஒரு செலுவில் சமுத்ரத்தை சுருக்கியே வைத்து கிரகித்தால் சோமுகாசுரனை கொன்றிட்டு இருள் அறவே
விதி படைக்க அவ்வேதத்தை இரங்கி யளித்தனை அரியே எம்பிரானே -என்றார் பின்னோரும்
—————————————————————–
பாட்டுக்கும் முத்தமிழ் வில்லிபுத்தூர் வரும் பாவை குழல்
சூட்டுக்கும் நல்லவர் தென் அரங்கேசர் தொடு கடல் வாய்
மோட்டுக் கமடத் திரு உருவாகி முது முதுகில்
கோட்டுச் சயிலம் உழுவது என்னாத் துயில் கொண்டனரே –23-
மோட்டுக் கமடத் திரு உருவாகி -உயர்ந்த சிறந்த ஆமை வடிவமாகி
முது முதுகில் கோட்டுச் சயிலம் உழுவது என்னாத்-வலிய தனது முதுகிலே சிகரங்களை யுடைய மந்திர பர்வதம் தினவு சொரிவது என்று எண்ணி –
பெரிய பெருமாளுக்கு வாசிக காயிக ரூபா மாலா ப்ரதையாய்-அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –
——————————————————————–
திரிக்கின்ற பொற் குன்று அழுந்தாமல் ஆமைத் திரு உரு ஆய்
பரிக்கின்றதில் பெரும் பாரம் உண்டே பண்டு நான் மறை நூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தம் திருமேனியின் மேல்
தரிக்கின்றது மகரக் கடல் ஆடைத் தரா தலமே –24-
நான் மறை நூல் -விரிக்கின்ற உந்தி அரங்கேசர் -வேதங்களாலும் சாச்த்ரங்களாலும் விரிவாகப் புகழ்ந்து கூறப்படும் திருநாபி யுடைய அரங்கேசர்
அனைத்தையும் மலரைப் போலவும் அணுவைப் போலவும் தாங்கும் இவனுக்கு மந்திர பர்வம் தாங்குதல் ஒரு பொருளோ என்றவாறு
———————————————————
ஓர் உரு வெற்பைத் தரித்தது -தானவர் உம்பர் உள்ளாய்
ஈர் உரு நின்று கடைந்தது வேலை -இதனுடை ஓர்
பேர் உரு இன் அமுதோடு பிறந்தது பெண்மை கொண்டு ஓர்
நார் உரு நின்றது அரங்கா இது என்ன நல் தவமே –25-
மகா கூர்மமாக -ஓர் உருவாய் தரித்து –
தேவ அசுரர்கள் அந்தர்யாமியாய் கடைந்து
தன்வந்த்ரியாய் அம்ருத பூரணமான கமாண்ட மண்டலத்தை திருக்கையில் கொண்டு உதயமாகி
மோகினி ரூபமும் கொண்டு
அநேக ரூபங்கள் சேவிக்கப் பெற்ற தேவர்கள் என்ன தவம் செய்தார்கள்
பரிபாலன சாமர்த்தியம் கருணை வெளியிட்டு அருளுகிறார் –
————————————————————-
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply