தோழி தலைவனது இரவுக் குறி விலக்கல்
51-துறை மதியாமல் இக்கான்யாறு நீந்தி சுரம் கடத்தல்
நிறை மதி யாளர்க்கு ஒழுக்கம் அன்றால் நெடுமால் அரங்கத்து
இறை மதியா வரும் ஆரா அமிர்து அன்ன இந்த நுதல்
குறை மதியாள் பொருட்டால் கங்குல் வாரல் எம் கொற்றவனே –51-
துறை மதியாமல் -செல்லும் வழியை நன்றாக ஆராயாமல்
இக்கான்யாறு நீந்தி சுரம் கடத்தல் -இக்காட்டாற்றை நீந்திக் கடந்து கொடிய காடுகளை தாண்டி வருதல்
நிறை மதி யாளர்க்கு -நிறைந்த அறிவினை ஆளும் தன்மை உடையவர்களுக்கு
ஒழுக்கம் அன்றால் -நல்ல ஒழுக்கம் அன்று -ஆல் -ஆகையால்
நெடுமால் அரங்கத்து இறை
மதியா வரும் ஆரா அமிர்து அன்ன இந்த நுதல் -குறை மதியாள் பொருட்டால் கங்குல் வாரல் எம் கொற்றவனே-
திருப் பாற் கடலை தேவர்களோடும் கடையாமையாலே தோன்றின தெவிட்டாத அமிர்தம் ஒத்த பிறைச் சந்தரன் போன்ற
நெற்றியை உடைய இவள் நிமித்தமாக இரவில் வருவதை இனி ஒழிவாயாக
ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி –
உள்ள மஞ்சாய் வலியாய் வலியார்க்கு முபாயம் வல்லாய் கள்ள மஞ்சாயுதம் கை வருமாயினும் கங்கு லினில்
வல்ல மஞ்சார் பொழில் வேங்கடக் குன்றினில் வீழருவி பல்ல மஞ்சாரல் வழி வரில் வாடும் இப்பாவையுமே -திருவேங்கடத் தந்தாதி –
—————————————————————————————-
மறம்
52- கொற்றவன் தன் திரு முகத்தைக் கொணர்ந்த தூதா
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்
அற்றவர் சேர் திரு அரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக் குலம் என்று அறியாய் போலும்
மற்றது தான் திரு முகமே ஆனால் அந்த
வாய் செவி கண் மூக்கு எங்கே மன்னர் மன்னன்
பெற்ற இள அரசு ஆனால் ஆலின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்கப் பேசுவாயே –52-
கொற்றவன் தன் திரு முகத்தைக் கொணர்ந்த தூதா
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய் -மறவர் கொம்பு -தம்மை படர்க்கையாக -இடவழுவமைதி –
-முகம் இல்லாத முண்டத்துக்கோ வேடர்கள் ஆகிய எங்களது பூம் கொம்பை மணம் செய்யும் படி கேட்டாய்
எங்கள் குலம் –
அற்றவர் சேர்-இருவகைப் பற்று அற்ற முற்றும் துறந்த முனிவர்கள் அடைக்கலம் அடைகின்ற
திரு அரங்கப் பெருமாள் தோழன் -குகப் பெருமாள்
அவதரித்த திருக் குலம் என்று அறியாய் போலும்
மற்றது தான் திரு முகமே ஆனால்
அந்த வாய் செவி கண் மூக்கு எங்கே மன்னர் மன்னன் பெற்ற இள அரசு ஆனால் ஆலின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்கப் பேசுவாயே —
சக்கரவர்த்திக்கு பிறந்த இள வரசுக்கு -பிறந்த குலத்துக்கு பொருந்தாத ஆல மரத்தின் கொம்பை மணம் பேசுவாயா
மறந்தும் புறம் தொழாமாந்தர் -திரு அரங்கனுக்கே அற்றுத் தீர்ந்த நான் மற்றவர்க்கு ஆள்படுவேனோ என்றபடி
———————————————————————
இதுவும் அது –
53- பேச வந்த தூத செல் அரித்து ஓலை செல்லுமோ
பெரு வரங்கன் அருள் அரங்கர் பின்னை கேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே
பட்ட மன்னர் பட்டது எங்கள் பதி புகுந்து பாரடா
வாசலுக்கு இடும் படல் கவித்து வந்த கவிகைமா
மகுட கோடி தினை அளக்க வைத்த காலும் நாழியும்
வீச சாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலி இட்டது அவர்கள் இட்ட வில்லும் வாளும் வேலுமே –53-
பேச வந்த தூத செல் அரித்து ஓலை செல்லுமோ பெரு வரங்கன் அருள் அரங்கர் பின்னை கேள்வர் தாளிலே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம் வைத்து முன்னமே பட்ட மன்னர் பட்டது
பட்ட பாடுகளை
எங்கள் பதி புகுந்து -எங்கள் ஊரிலே வந்து பாரடா
வாசலுக்கு இடும் படல் -கவித்து வந்த கவிகைமா -அவர்கள் பிடித்து வந்த குடைகளாம்-
மகுட கோடி தினை அளக்க வைத்த காலும்-மரக்காலும்
நாழியும் -படியும் போன்ற அளக்கும் கருவிகள் -அவர்கள் தரித்து வந்த க்ரீடங்களின் கூட்டங்கள்
வீச சாமரம் குடில் தொடுத்த கற்றை
சுற்றிலும் வேலி இட்டது அவர்கள் இட்ட வில்லும் வாளும் வேலுமே-
உன்னை ஏவிய அரசனுக்கும் இந்த கதியே நேரும் –
———————————————————————————–
54–வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழித்தோம் இல்லை
மாலை அரங்கேசனை நாம் மாலையிலும் காலையிலும்
உன்னி நைந்தோம் இல்லை உடல் எடுத்த அன்று முதல்
என் நினைந்தோம் நெஞ்சே இருந்து –54–
-வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழித்தோம் இல்லை
கடல் சூழ்ந்த இந்த உலகத்தில்
பிறக்கும் தொழிலை -நீங்கிற்றிலோம்
மாலை அரங்கேசனை நாம் மாலையிலும் காலையிலும் உன்னி நைந்தோம் இல்லை
ஸ்ரீ ரங்க நாதனான திருமாலை காலையும் மாலையும் த்யானித்து மணம் நெகிழ்கிற்றிலோம்
நாவினால் துதித்து என்றுமாம்
உடல் எடுத்த அன்று முதல் என் நினைந்தோம் நெஞ்சே இருந்து –
வேறு என்ன பெரிய காரியத்தை எண்ணி இருந்தோம்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அனுதாபம் கொண்டு கழிவிரக்கத்தால் அருளிச் செய்கிறார் –
————————————————————–
இயலிடம் கூறுதல்
55-இரும்புவனம் விரும்புவனம் அணி அரங்கர் பணி அரங்கர் இமய நண்ப
வரும் கொடியின் மருங்கு ஓடியின் மனம் குழைக்கும் கனங்குழைக்கும் அனங்கன் சாபக்
கரும்பு உருவம் பொரும் புருவம் முத்தம் நகை ஒத்தன கை காந்தள் பூந்தேன்
மருங்கு உழலும் கருங்குழலும் முருகு வளை இருகு வளை மழைக்கண் தாமே –55-
இரும்புவனம் விரும்பு -வனம் அணி –வனமாலை அணிந்த -அரங்கர் பணி அரங்கர் இமய நண்ப –
நம் பெருமாள் உடைய இமய மலை போன்ற மலையின் இடத்தில் உள்ள தோழனே
வரும் கொடியின்-வளர்கின்ற பூம் கோடி போன்ற
மருங்கு ஓடியின்-இடை ஒல்கினால்
மனம் குழைக்கும்-ஆடவர்கள் நெஞ்சத்தை தளரச் செய்யும்
கனங்குழைக்கும்
அனங்கன் சாபக் கரும்பு உருவம் பொரும்புருவம்-மன்மதன் வில் கரும்பு போன்ற புருவங்கள்
முத்தம் நகை ஒத்தன -முத்து போன்ற பற்கள்
கை காந்தள் -கைகள் காந்தள் மலர் போலும்
பூந்தேன் மருங்கு உழலும் கருங்குழலும் -கரிய கூந்தல் மலர்களில் மொய்க்கின்ற வண்டுகள் பக்கங்களில் சுழலப் பெரும்
முருகு வளை இருகு வளை மழைக்கண் தாமே –குளிர்ச்சி உடைய கண்கள் வாசனை மிக்குப் பொருந்திய இரண்டு நீலோற் பல மலர்
———————————————————–
இதுவும் அது –
56-மழை பிறை சிலை வேல் வள்ளை எள் இலவின் மலர் முல்லை மதி வளை கழை யாழ்
வாரிசம் கெளிறு தத்தை வாய் கலசம் மணி வட பத்திரம் எறும்பு ஊர்
அழகு நீர்த் தரங்கம் துடி சுழி அரவம் அரம்பை ஞெண்டு இளவரால் ஆமை
அணிதராசு இணை கந்துகம் துகிர் தரளம் அம்புயம் அரங்க நாடு அனையார்
குழல் நுதல் புருவம் விலோசனம் காது நாசி வாய் நகை முகம் கண்டம்
குலவு தோள் முன்கை அங்கை மெல் விரல்கள் கூர் உகிர் கொங்கை கண் வயிறு
விழை தரும் உரோமம் வரை இடை உந்தி விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்
மிளிர் கணைக் கால்கள் புறவடி பிரடு மென்குதிவிரல் நகம் தாளே–56–
அரங்க நாடு அனையார் -ஒக்கின்ற மாதரது -குழல் நுதல் புருவம் விலோசனம் -கண்களும் -காது நாசி வாய் நகை -பற்களும் –
முகம் கண்டம் -கழுத்தும் -குலவு தோள் -விளங்குகின்ற தோள்களும் -முன்கை -முன்னங்கைகளும் –
அங்கை-அகங்கைகளும் – மெல் விரல்கள் கூர் உகிர் கொங்கை கண்-முலைக் கண்களும் –
வயிறு விழை தரும் உரோமம் -விரும்பப் படுகின்ற மயிர் ஒழுக்கும் -வரை -வயிற்றின் மடிப்புகளும் இடை உந்தி விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்
மிளிர் கணைக் கால்கள் புறவடி-புறங்கா ல்களும் – பரடு -கால் பரடுகளும் -மென்குதிவிரல் நகம் தாளே–
இவ்வவயவங்களும் முறையே
-மழை -மேகமும் -பிறை -பிறைச் சந்திரனும் -சிலை -விற்களும் -வேல் வள்ளை -வள்ளை இலைகளும் -எள் மலர் -எள்ளுப் பூக்களும்
இலவின் மலர் -இலவின் பூக்களும் முல்லை-முல்லை மலர்ப்பூக்களும் – மதி -பூர்ண சந்திரனும் -வளை -சங்கமும் -கழை -மூங்கில்களும் -யாழ் -வீணையும்
வாரிசம் -தாமரை மலர்களும் -கெளிறு-கெளிறு என்னும் மீன்களும் – தத்தை வாய் -கிளியின் வாய்களும் -கலசம் -குடங்களும் -மணி -நீல மணியும் –
வட பத்திரம் -ஆலிலையும் -எறும்பு ஊர் அழகு -எறும்பு ஊர்கின்ற ஒழுங்கும் -நீர்த் தரங்கம் -நீரின் அலைகளும் -துடி-உடுக்கையும் – சுழி -நீர்ச் சுழியும்
-அரவம் -பாம்பின் படமும் -அரம்பை -வாழை மரங்களும் -ஞெண்டு -நண்டுகளும் -இளவரால் -இளைய வரால் மீன்களும் -ஆமை -ஆமைகளும்
அணிதராசு இணை -அழகிய இரண்டு தராசு தட்டுகளும் -கந்துகம் -பந்துகளும் -துகிர் -பவளங்களும் -தரளம் -முத்துக்களும் -அம்புயம் -தாமரை மலர்களும்
ஆகிய இவற்றை ஒக்கும்
கேசாதி பாத பர்யந்தம் 32 அவயவங்களும் அவற்றின் உபமானங்களும் அருளிச் செய்கிறார் –
——————————————————————–
கைக்கிளை
57-தாள் இரண்டும் பார் ஒன்றும் தார்வாடும் வேர்வு ஆடும்
வாள் இரண்டும் காது இரண்டில் வந்து இமைக்கும் கோள் இரண்டும்
ஐவகைப் பூதம் அமைத்தருள் அரங்கர் மை வளர் சோலை மலையில்
தெய்வம் அல்லள் இத்திரு உருவினளே –57-
-தாள் இரண்டும் பார் ஒன்றும் -இரண்டு கால்களும் பூமியில் பொருந்தும்
தார்வாடும் -பூ மாலை வாடும்
வேர்வு ஆடும் -வியர்வை அரும்பும்
வாள் இரண்டும் -வாள் போல் இரண்டு கண்களும்
காது இரண்டில் வந்து-இரண்டு காதுகளிலும் சென்று மீண்டு வந்து
இமைக்கும்
ஆகையால் –
கோள் இரண்டும் -ராகு கேதுக்கள் என்னும் கிரகங்களையும்
ஐவகைப் பூதம் -பஞ்ச பூதங்களையும் –
அமைத்தருள் அரங்கர்-படைத்துக் காக்கும் அரங்க நாதரது
மை வளர் சோலை மலையில் -மேகங்கள் தவழும் சோலைகளை உடைய மலையின் இடத்தே
தெய்வம் அல்லள் இத்திரு உருவினளே -உள்ளவளாகியஅழகிய வடிவத்தை உடைய இம்மகள் -தெய்வ மகள் அல்லள் -மானுட மகளே –
தலைமகன் சங்கை உற்று தெளிந்து-திருமகள் போல் வடிவு ஒத்தவள் என்று – அருளிய -தெளிதல் -என்னும் துறை
————————————————————-
ஊசல்
58-உரு மாறிப் பல பிறப்பும் செத்தும் ஊசலாடுவது அடியேன் ஒளியும் வண்ணம்
கரு மாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கி கருணை எனும் பாசத்தைக் கயிறாப் பூட்டி
மரு மாலைத் துழவு அசைய ஆடீர் ஊசல் மணி மகரக் குழி அசைய ஆடீர் ஊசல்
திருமாது புவி மாதோடு ஆடீர் ஊசல் திரு அரங்க ராசரே ஆடீர் ஊசல் –58-
மரு மாலைத் துழவு அசைய -வாசனை உடைய திருத் துழாய் மாலை அசையும் படி –
அடியார் உள்ளக் கமலம் எம்பெருமான் தங்கும் இடம் ஆதலால் நெஞ்சை ஊஞ்சல் பலகை ஆக்குகிறார்
அவன் திருவருள் அந்த உள்ளத்தைக் காட்டிக் கொடுப்பதால் கருணை என்னும் பாசத்தை கயிறாகப் பூட்டி என்கிறார்
எம்பெருமான் ஊசல் ஆட தான் பிறப்பு இறப்பு என்று ஊசல் ஆடுவது ஒளியும் என்கிறார்
உருவக அணி அங்கம் -பர்யாய அலங்காரம் –
பொருளலா விடயத்தை பொருள் என்று எண்ணி போவது மீள்வதுமாய் எப்பொழுதும் ஆடு மருளுலா மன ஊசல் சுத்தம் செய்து
மாறாது வளர் பத்தி வடத்தைப் பூட்டி யிருளை நேர் குழனிலப் பெண்ணலர் மேல் மங்கை இருவரோடு மேய அதன் மேல் ஏறி
வீறும் அருளினான் மெள்ள யசைந்தாடி ரூசலாதி வடமலை மாயர் ஆடி ஊசல் -திருவேங்கடக் கலம்பகம் –
——————————————————————–
59- ஊசல் வடம் போல் ஊர் சகாடம் போல் ஒழியாமே
நாச உடம்போடு ஆவி சுழன்றே நலிவேனோ
வாசவனும் போது ஆசனனும் கூர் மழு வோனும்
நேசமுடன் சூழ் கோயில் அரங்கா நெடியோனே –59-
நெடியோன் -பெரிய பெருமாள்
ஓடி ஓடி வருவதும் போவதுமாய் இருத்தலால் ஊசல் வடத்தையும் -ஊஞ்சல் கயிறு போலவும்
மாறி மாறி உருண்டு கொண்டே இருத்தலால் ஊர் சகடத்தையும் -செல்லுகின்ற வண்டியின் உருளை போலேயும் –
அழியும் தன்மை உடைய உடம்புடன் உயிர் அலையப் பெற்றே வருந்தக் கடவேனோ -என்கிறார் –
———————————————————-
கையுறை -தழை
60-நேசத்து அழைக்கும் மத யானை முன்பு நின்றோன் அரங்கம்
பேசத் தழைக்கும் என் அன்பு அனையாய் பெரும் கற்பகத்தின்
வாசத் தழைக்கும் நறுந்தழை காண் இது மந்தத் தென்றல்
வீசத் தழைக்கும் தழை போல் கெடாது விலை இல்லையே –60-
-நேசத்து அழைக்கும் மத யானை முன்பு நின்றோன் –
அன்பினால் ஆதி மூலமே என்று அழைத்த-மதத்தை உடைய ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முன்பே வந்து நின்று காத்து அருளின எம்பெருமானது
அரங்கம் -ஸ்ரீ ரங்கத்தை
பேசத் தழைக்கும் -சொல்லும் தோறும் சொல்லும் தோறும் மகிழ்கின்ற
என் அன்பு அனையாய்-எனது அன்பை ஒத்து இருப்பவளே
பெரும் கற்பகத்தின் வாசத் தழைக்கும் -பெரிய கல்பக விருஷத்தினது வாசனை யுடைய தழை யினும்
நறுந்தழை காண்-நறு நாற்றம் மிக்க தழையே காண்
இது மந்தத் தென்றல் வீசத் தழைக்கும் தழை போல் கெடாது -மற்ற மரங்களின் தழை போலே கெடாது -வாடிப் போகாது
விலை இல்லையே –விலையும் இவ்வளவு என்று அறுதி இல்லை -ஆதலால் இத்தை நீ ஏற்றுக் கொள்வாயாக -என்றவாறு –
——————————————————————————
கையுறை -முத்தம் –
61- விலையானது இலை என்று நீ தந்த முத்தம் வேய் தந்த முத்து ஆகில் வெற்பா வியப்பு ஆல்
இலை ஆர் புனல் பள்ளி நாராயணன் பால் எந்தாய் அரங்கா இரங்காய் எனப் போய்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும் தன் தாதை அவர் தாமரைத் தாள் விளக்கும்
அலை ஆறு சூடும் புராணங்கள் பாடும் ஆடும் பொடிப் பூசி ஆனந்த மாயே –61-
விலையானது இலை என்று-இதற்கு விலை இல்லை என்று சொல்லி
நீ தந்த முத்தம் -நீ கொடுத்த முத்தானது
வேய் தந்த முத்து ஆகில்-மூங்கில் பெற்ற முத்தானாள்
வெற்பா வியப்பு -மலை நாடனே அதிசயிக்கும் படி
ஆல் இலை-வட பத்திரத்தில்
ஆர் புனல் -நிறைந்த பிரளய நீரில்
பள்ளி நாராயணன் பால் -பள்ளி கொண்டு அருளுதலை உடைய ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில்
எந்தாய் அரங்கா இரங்காய் எனப் போய் -போய் பிரார்த்தித்து
தலையால் இரக்கும்-தலையால் பிச்சை எடுக்கும்
பணிப்பாய் சுமக்கும் -அந் நாராயணன் உடைய பாயாகிய பாம்பைச் சுமந்து கொண்டு இருக்கும் -உருத்திரன் நாகாபரணன் ஆதலால் –
தன் தாதை அவர் தாமரைத் தாள் விளக்கும் -தன்னுடைய தகப்பனான பிரமன் அந்த நாராயணன் உடைய திருவடித் தாமரைகளை
திரு மஞ்சனம் செய்தலால் உண்டான ஸ்ரீ பாத தீர்த்தம் ஆகிய
அலை ஆறு -அலைகின்ற கங்கை நதியை
சூடும்-தழை மேல் தரிக்கும்
புராணங்கள் பாடும் ஆடும் பொடிப் பூசி ஆனந்த மாயே –
புராணங்களை பாடும் -விஷ்ணு விஷயங்களாக பல புராணங்கள் பாடி இருக்கிறான் –
-இங்கனம் இரந்து சுமந்து சூடி பாடுதலால் உண்டான பேர் ஆனந்தத்தால் விபூதியை அணிந்து கொண்டு நர்த்தனம் செய்யும்
சிவபிரான் கருணையால் வேதங்கள் மூங்கிலால பிரளயத்தில் பிறக்க அவற்றில் தான் முத்தாக தோன்றினதால் சிவபிரானை வேய் தந்த முத்து என்கிறார்
முன்னும் -சாத்திய மாலையும் தாள் விளக்கும் வானம் தரும் கங்கை நன்னீரும் சென்னியில் வைக்கப் பெற்ற
வானம் தந்தான் அல்லவோ முக்கணான் மன்றுள் ஆடுவதே -என்றார்
——————————————————————————
தவம்
62- ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் அடிமை என்னும்
ஞானம் தனால் ஐம்பொறி வாயில் சாத்தி நல் தாளைப் பற்றி
ஈனம் தரும் பற்றும் அற்று என்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்து இருப்பார்க்கு இது போல் இல்லை மாதவமே –62-
தத்வ ஞானம் ஆகிய கதவினால் பஞ்ச இந்திரியங்கள் ஆகிய வாசல்களை அடைத்து அவன் திருவடிகளை சரணமாகப் பற்றி
இழிவைத் தரும் ஆசைகளும் நீங்கப் பெற்று -அஹங்கார மமகாரங்கள் தவிர்ந்து எந்நாளும் நிரதிசய பேர் ஆனந்தம் அடைந்து வேறு மா தவம் இல்லை
பிறவிப் பிணிக்கு மருந்து -நல் தாள் –
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறி வாசல் போர்க்கதவம் சார்த்தி –யறிவான் -பூதத்தார் -பொறிவாசல் சாத்தி -ஞானம் ஆகிய கதவு
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் -திருக் குறள்
———————————————————————–
தவம் –
63-மாதவங்கள் என்று ஒத்து அவங்களின் மருவு சீவன் என்றொருவன் நீ பெரும்
பூதம் அல்லை இந்த்ரியம் அல்லை ஐம் புலனும் அல்லை நல புந்தி அல்லை காண்
சீதரன் பரந்தாமன் வாமனன் திரு அரங்கனுக்கு அடிமை நீ உனக்கு
ஏதும் இல்லை என்று அறி அறிந்த பின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே –63-
தமது முகத்துக்கு உபதேசிக்கும் முகத்தால் ஜீவாத்மா ஸ்வரூபம் இன்னது என்கிறார்
———————————————————————
தலைவி இரங்கல்
64-எம் காந்தாள்-அங்கை நல்லீர் என் செய்கேன் இரண்டு ஏந்திழையீர்
தம் காந்தன் என்று அறிந்தாலும் நில்லாது தரைக்கும் நெய்க்கும்
அங்காந்த செம்பவளத்து எம்பிரான் அரங்கன் புயங்கள்
செங்காத்த மால் வரையோ இரும்போ என் தன சிந்தனையே -64–
தனது விருப்பத்தை நிறைவேற்றுதற்க்கு -பிரிவித் துயரை ஆற்ற வல்லவர்கள் -என்பதால்
-காந்தள் மலர் போன்ற அழகிய கைகளை உடைய தோழிகளை கொண்டாடி அருளுகிறார்
அவனது திவ்ய சௌந்தர்யத்தில் ஈடுபட்டு செம்பவளத் தெம்பிரான் என்கிறார்
திருத் தோள்கள் இரும்பைக் காந்தம் மீட்க ஒண்ணாமல் கவர்வது போலே தமது மனத்தை இழுத்துக் கொண்டதாக அருளுகிறார்
———————————————————————
களி
65-சிந்தையில் குடி கொண்டிருந்தது திருக்கு அறுத்து அடிமைக் கொளும்
திரு வரங்கர் பொருப்பு உயர்ந்த திருப்புயம் புகழ் களியரோம்
புந்தி மிக்கது வந்து புக்கது போத மாதர்கள் எழுவர் தம் பூசையேமாக
பூசை என்றது புதுமை அன்று இது புத்தர்காள்
அந்தரத்து இமையோர் அருந்தும் மருந்தும் வெள்ளையது அன்றியே
அரிய சாதி கொளாத மானிடர் அகலிடத்தினில் இல்லையே
மந்திரத்தில் நிலாத தேவதை வானகத்தினில் இல்லையே வடிவு
இல்லாதவை அண்ட கோளம் வளைந்த வைப்பு அதில் இல்லையே –65 –
கட்குடியர் அந்த களிப்பை சிறப்பித்து கூறும் துறை -களி –
பௌ த்தார் கட்குடியலை விலக்குவதால் அவர்களைக் குறித்து அருளிச் செய்கிறார்
கட்குடியர் துறக்க பூசை செய்பவர் ஆதாலால் அத்தை அருளிச் செய்கிறார்
அமிர்தமும் கல்லும் வெண்மை நிறம் கொண்டவை
சிந்தையில் குடி கொண்டிருந்தது-அன்பால் நினைவாரது உள்ளத்திலே சென்று நீங்காது இருந்து
திருக்கு அறுத்து அடிமைக் கொளும் -அவர்கள் குற்றங்களைப் போக்கி ஆட்கொள்ளுகின்ற
திரு வரங்கர் பொருப்பு உயர்ந்த திருப்புயம்
புகழ் களியரோம்-துதிக்கின்ற கட்குடியர் ஆவோம்
புந்தி மிக்கது வந்து புக்கது -மனம் மகிழ காரணமான களிப்பு மிகுதியாய் வந்து நேர்ந்தது
போத மாதர்கள் எழுவர் தம் பூசையே மக பூசை என்றது-சப்த மாதர்களுடைய பூஜை தானே யாகத்தில் செய்யப்படும் பூஜை என்ற இத்தன்மை
அபிராமி -மாயேச்வரி- கௌமாரி-நாராயணி –வராகி -இந்திராணி –காளி-சப்த மாதர்கள்
புதுமை அன்று இது புத்தர்காள்- பௌத்தர்களே-இத்தன்மை புதுமை அன்று
அந்தரத்து இமையோர் அருந்தும் மருந்தும் வெள்ளையது -ஸ்வர்க்க லோகத்தில் தேவர்கள் பருகும் அமிர்தமும் வெள்ளை தானே
அன்றியே அரிய சாதி கொளாத மானிடர் அகலிடத்தினில் இல்லையே
அதுவும் அல்லாமல் -அருமையான சாதிகளை உடைத்தாகாத மனிதர்கள் பரந்த பூமியில் எங்கும் இல்லையே
மந்திரத்தில் நிலாத தேவதை வானகத்தினில் இல்லையே –
மந்திரத்துக்கு வசப்படாத
தெய்வம் தேவ லோகத்திலும் இல்லையே
வடிவு இல்லாதவை அண்ட கோளம் வளைந்த வைப்பு அதில் இல்லையே —
உருவம் இல்லாத பொருள்கள் அண்ட கோளத்துக்கு உட்பட்ட இடத்தில் இல்லையே –
———————————————————————————–
66-இல்லறம் எனத் துறவறம் எனச் சொல் அறம் பிற துணை அன்று என
பவக் கடலுள் துவக்கு அறுப்பான் காவிரி இடைப் பூவிரி பொழில்
சில மந்திகள் சினை தாவ பல தெங்கின் பழக் குலை உதிர
அடர் கமுகின் மிடறு ஓடி தர தேமாங்கனி சிதறு புவிழ முடப் பலவின் குடக்கனி உக
அரம்பைக் கனி வரம்பில் புக வயல் மருங்கின் மலர்ப் பொய்கையுள் துயில் வலம் புரி துண்ணனவு உற
தா அள் தாமரைத் தவிசு உறை தரு சூ உதடு ஓதி மம் பே எட்டுடன் எழ
மயிர்சேவல் மனம் களிப்ப குயில் பேடைக் குலம் ஒளிப்ப மழை முகில் என முழவு அதிர் தரு
திரு அரங்கப் பெரு நகருள் அரவணை மிசை அறி துயில் அமர்ந்து அருள் புரி
திரு நாரணனைச் சேர்ந்தனம் சரணா விந்தம் தஞ்சம் என்று இரந்தே–66-
-இல்லறம் எனத் துறவறம் எனச் சொல் அறம் பிற -மற்றைப் பொருள் இன்பங்களும் -துணை அன்று என
பாவக் கடலுள் துவக்கு அறுப்பான் -பிறவிக் கடலினுள்ளே கட்டுப் பட்டு இருத்தலை நீக்கும் பொருட்டு
காவிரி இடைப் பூவிரி பொழில் சில மந்திகள் சினை தாவ -மரக்கிளைகளில் தாவிப்பாய
பல தெங்கின் பழக் குலை உதிர
அடர் கமுகின் மிடறு ஓடி தர
தேமாங்கனி சிதறு புவிழ -சிதறி விழவும்
முடப் பலவின் குடக்கனி உக -வளைந்த பலா மரத்தின் குடம் போன்ற பழங்கள் சிந்தவும்
அரம்பைக் கனி வரம்பில் புக -வாழைப் பழங்கள் வயல் வரப்புகளில் விழவும்
வயல் மருங்கின் மலர்ப் பொய்கையுள் துயில் வலம் புரி துண்ணனவு உற-சங்குகள் திடிக்கிட்டு அலறவும்
தா அள் தாமரைத் தவிசு உறை தரு சூட்டு ஓதி மம் பேட்டுடன் எழ -சூட்டு ஓதிமம் -உச்சியை உடைய அன்னப் பறவைகள் பேடைகள் உடன் எழ
மயிர்சேவல் மனம் களிப்ப-மழைக் காலத்தில் மயில்கள் மகிழுமே
குயில் பேடைக் குலம் ஒளிப்ப -ஆண் பெண் குயில்கள் கூட்டம் மனம் வருந்தி மறையவும் -மழைக் காலத்தில் குயில்கள் வருந்துமே
மழை முகில் என முழவு அதிர் தரு–மயிலும் குயிலும் முழவு ஒலியை மழை ஒலியாக மயங்கின
திரு அரங்கப் பெரு நகருள் அரவணை மிசை அறி துயில் அமர்ந்து அருள் புரி திரு நாரணனைச் சேர்ந்தனம் சரணா விந்தம் தஞ்சம் என்று இரந்தே-
————————————————
67- இரவியை இரவின் மதியினை மதியுள் இறையினை இறையும் எண்ணரிய
கரவனை கரவு இல் முனிவனை முனிவர் கருத்தனை கருத்தனைத் துடைத்து ஆள்
பரமனை பரம பதத்தனை பதத்துள் பாரனை பார நத்து ஊதும்
அரவணை அரவின் அரங்கனை அரங்கத்து அடிகளை அடிகள் சேவியுமே –67–
ஏகாவளி அலங்காரம்
இரவியை இரவின் மதியினை
மதியுள் இறையினை-அறிவில் உறைகின்ற தலைவனை
இறையும் எண்ணரிய கரவனை -சிறிதும் நினைத்தற்கும் அரிய மாயையை உடையவனை
கரவு இல் முனிவனை-கபடம் இல்லாத முனிவனாய் இருப்பவனை-கரவின் முனிவனை -முதலை இடம் கோபம் கொண்டவன்
-முனியே நான் முகனே – முனிவர் கருத்தனை -முனிவர் தலைவனே
கருத்தனைத் துடைத்து ஆள் பரமனை -தன்னை அடைந்தவர்கள் உடைய பிறப்பை போக்கி அருளுகின்ற உயர்ந்தவனை
பரம பதத்தனை
பதத்துள் பாரனை-திருவடியினின்றும் பூமியை உண்டாக்கினவனை -திரிவிக்ரமனாய் ஓர் திருவடியால் பூமியை அடக்கினவன் என்றுமாம்
பார நத்து ஊதும் அரவணை -பாஞ்ச ஜன்யம் ஊதுகின்ற ஓசையை உடையவனை -பாரதத்தில் தூதுவனாய் இருந்தவன் என்றுமாம்
அரவின் அரங்கனை அரங்கத்து அடிகளை அடிகள் சேவியுமே –
————————————————–
தலைவி இரங்கல்
68-சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக் கோயில் சூழ்
காவில் கலந்து ஆசை தந்து ஏகினார் நெஞ்சு கல் நெஞ்சமோ
வாவிப் புறத்து அன்னமே இன்னம் ஏதோ வரக் கண்டிலேன்
பாவிக்கு அநேகம் தனிக்காலம் இந்தப் பனிக்காலமே –68-
நெய்தல் நிலத்து அன்னத்துடன் கூறி இரங்கியது
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை பல பல கூறிட்ட கூறாயிடும்–அம்ம வாழி இப்பாழ் இருளே –நம்மாழ்வார்-
—————————————————————
குறம்
69-காலம் உணர்ந்த குறத்தி நான் கருதியது ஓன்று அது சொல்லுகேன்
பாலகன் உச்சியில் எண்ணெய் வார் பழகியது ஓர் கலை கொண்டு வா
கோல மலர்க் குழல் மங்கை நின் கொங்கை முகக் குறி நன்று காண்
ஞாலம் உவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே –69-
எந்த விதங்களும் அறி குறமகள் ஆங்கு எதிர் வந்து இனி எனது இத மொழி கேள்
அந்த முறம் தனில் நவ மணி கொடு வா வன்பில் அணிந்திட அழகிய கலை தா
கந்தம் மிகுந்த தனம் தனில் குறியே கண்டனன் இன்றலர் கமழ் குழல் மடவாய் வந்து எவரும் தொழ
வடமலை தனில் வாழ் வண் துளவன் தின ம் மருவுவன் உனையே –திருவேங்கடக் கலம்பகம் –
—————————————————
மேக விடு தூது
70–பெருமாலை யார்க்கு உரைப்பேன் உமக்கே விண்டு பேசின் அல்லால்
கரு மாலையாய் எழும் கார்க் குலங்காள் தொண்டர் காற்பொடி தன்
திருமாலை கொண்ட திருமால் அரங்கம் தெய்வத் துழாய்
மரு மாலை வாங்கி வம்மின் அந்தி மாலை வரும் முன்னமே –70-
-பெருமாலை யார்க்கு உரைப்பேன் உமக்கே விண்டு பேசின் அல்லால்
பெரிய மயக்கத்தை விரித்து உங்களுக்கு சொல்லாமல் வேறு யாவர்க்கு எடுத்துச் சொல்வேன்
கரு மாலையாய் எழும் கார்க் குலங்காள் -கரியதோர் வரிசையாய் ஆகாயத்தே எழுகின்ற மேகக் கூட்டங்களே
நீங்கள் போய்
தொண்டர் காற்பொடி தன் திருமாலை கொண்ட –
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த திருமாலை திவ்ய பிரபந்த மாலையை கொண்டு அருளிய
திருமால் அரங்கம்
தெய்வத் துழாய் மரு மாலை வாங்கி வம்மின் அந்தி மாலை வரும் முன்னமே-
புண்ணில் புளிப்பு எய்தால் போலே அந்தி மாலை வரும் முன்னர் வாங்கிக் கொண்டு வாருங்கோள் –
—————————————
71-முன்னம் பிறந்த பிறப்போ முடிவு இல்லை
இன்னம் பிறப்பிக்க எண்ணாதே தென் அரங்கம்
மேவிக் கிடந்தானே வீற்று இருக்கும் நின் பதத்து என்
ஆவிக்கு இடம் தான் அருள் –71-
திருவடி நிழலில் -என்றுமாம் -திருவடியே வீடாக என்றுமாம்
பல பிறப்பு எடுத்து உழன்று வருந்திய என்னை பிறப்பு அற்று முக்தி பெறுமாறு அருள் செய்து அருள வேண்டும் –
————————————————
தலைவி இரங்கல் –மடக்கு –
72- அரும்புன்னாகத் தடங்காவே அவா என் ஆகத்து அடங்காவே
அம்போருகக் கண் பொரும் தேனே அழு நீர் உகக்கண் பொருந்தேனே
பரம்பும் கடல் ஊர் நாவாயே பாவிக்கு அடல் ஊர் நாவாயே
பார் மீது உயர மறி அலையே படும் என் துயரம் அறியலையே
கருங்கண் கயலே மாசுறவே கரைவேற்கு அயலே மாசு உறவே
கண்டல் போது உகு வாலுகமே கங்குல் போது குவால் உகமே
குரும்பை தழைக்கும் கரும் பனையே குயில் வந்து அழைக்கும் கரும் பனையே
குருகீர் நந்து அமர் அம் கரையே கொணரீர் நம் தம் அரங்கரையே –72 –
அரும்புன்னாகத் தடங்காவே -அரிய புன்னை மரச் சோலையே
அவா என் ஆகத்து அடங்காவே
அம்போருகக் கண் பொரும் தேனே -தாமரை மலரில் பொருந்திய வண்டே
அழு நீர் உகக்கண் பொருந்தேனே
பரம்பும் கடல் ஊர் நாவாயே
பாவிக்கு அடல் ஊர் நாவாயே -பாவியேனுக்கு ஊர் நா வாயே -அலர் தூற்றும் ஊராரது நாவும் வாயும் -அடல் -பகைமையும் ஆகும்
பார் மீது உயர மறி அலையே
படும் என் துயரம் அறியலையே
கருங்கண் கயலே மாசுறவே-பெரிய சுறா மீனே
கரைவேற்கு அயலே மாசு உறவே -குற்றம் உள்ள உறவினரும் அயலாறே ஆவார்
கண்டல் போது உகு வாலுகமே -தாழை மலர்கள் சிந்துகின்ற வெண் மணல் குன்றே
கங்குல் போது குவால் உகமே -இராப் பொழுது திரண்ட அநேக யுகங்களே யாம்
குரும்பை தழைக்கும் கரும் பனையே -குரும்பைகள் தழைக்கின்ற கரிய பனை மரமே
குயில் வந்து அழைக்கும் கரும் பனையே -குயில்கள் மன்மதனை அழையா நின்றது
குருகீர் நந்து அமர் அம் கரையே-நாரைகளே சங்குகள் பொருந்திய அழகிய கரையே –
—————————————————
73-கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –73-
-கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -இரு கரைகளையும் மோதிப் பெருகுகின்ற காவிரி நதி ஓன்று உண்டு
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -நம்பெருமாள்
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே—திரு அவயவங்கள்
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே -இடது திருவடி ஒரு சேர அளந்ததே
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே -வலது திருவடி -கங்கை நதியை வெளி உமிழ்ந்தது
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே-உந்தித் தாமரை மலர் பிரமதேவனை உண்டாக்கிற்று
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே -திரு மார்பு அழகிய இடமாய் -திரு மனையாகி
-பெரிய பிராட்டிக்கு வாசஸ் ஸ்தானம் -பருத்த கௌஸ்துபம் விளங்கப் பெற்று உள்ளதே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே -வலத் திருக்கை முடை நாற்றம் உடைய பிரம கபாலத்தை ஒழித்தது
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே -இடது திருக்கை கோதண்டத்தை வளைத்தது
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே -திரு முக மண்டலம் -எப்பொழுதும் மலர்ந்து அருளோடு இருந்தது
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே -திருப்பவளம்
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய இன்பம் தழீ இய இரு பெரும் கமலம்-திருக்கண்கள் –
துன்பம் தழீ இய தொண்டனேனையும் உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –
பத்துத் தாமரையும் ஒன்பது அதிசயமும் அருளுகிறார்
அரவிந்தம் -தாமரை -பங்கேரு ஹம்-சேற்றில் முளைப்பது -கோகனகம்- கோக நதம் -மருவி –பதும மலர் –
முளரி-வனசம் -வனஜம் -நீரில் முளைப்பது -புண்டரீகம் -அம்போருகம் -கமலம் -பர்யாய பத்து சொற்கள் –
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி -அவன் கடாஷமே உய்ய ஹேது என்றவாறு –
ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேன் மது ஸூதான -சாத்விகஸ் சது விஜ்ஞேயஸ் சவை மோஷார்த்த சாதக –
மா முதல் அடிப்போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப் போது ஓன்று விண் செலீஇ
நான்முகப்புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட நெறீஇத் தாமரைக்காடு மலர்க் கண்ணொடு கனிவாயுடைய
–முடி தோள் ஆயிரமும் தழைத்த நெடியோக்கு அல்லது அடியதோ வுலகே –
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே –
——————————————————————————————-
தலைவனைப் பிரிந்த தலைவி கார் காலம் கண்டு வண்டுகளை நோக்கி இரங்கிக் கூறுதல்
74-பண் கொண்ட வேய் ஊது செவ்வாய் அரங்கேசர் பைம்பொன்னி நாட்டு
எண் கொண்ட பேராசை தந்தார் மறைந்தார் கொல்-இசை வண்டுகாள்
விண் கொண்ட மலை மீது விண் மாரி பொழிகின்ற விசை போலே என்
கண் கொண்ட மலை மீது கண் மாரி பொழிகின்ற கார் காலமே –74-
எண் கொண்ட பேராசை தந்தார்-எண்ணம் முழுவதும் கொண்ட மிக்க ஆசையைத் தந்தார் –
கண் கொண்ட மலை மீது -கண் பொருந்திய மலை போன்ற முலைகளின் மேலே –
ஆசையைத் தந்தார் -பெயரை சொல்ல விரும்பாமல் ஆசை தந்தார் என்கிறார் –
முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே -நம்மாழ்வார் –
———————————————————————
கைக்கிளை
75-காரகமோ நம் வட திருவேங்கடக் காரர் வரையோ
நீரகமோ நெடு வானகமோ துயில் நீடு பணிப்
பேர் அகமோ தென் திரு அரங்கப் பெரும் கோயில் என்னும்
ஊரகமோ இடம் தண் காவில் நின்ற ஒருவருக்கே –75-
தலைமகன் -தலைமகளைப் பற்றி அருளியது -தலைமகளைப் பற்றி அருளியது -தலைமகள் கூற்றாகவும் கொள்ளலாம்
காரகமோ-மின்னல் கோடி போலே இருப்பதால் –
நம் வட திருவேங்கடக் காரர் வரையோ -வரையர மகிளிர் போலே இருப்பதால்
நீரகமோ -நீரர மகளிர் போலே இருப்பதால்
நெடு வானகமோ -வானர மகளிர் போலே இருப்பதால்
துயில் நீடு பணிப் பேர் அகமோ-நாக கன்னியர் போலே இருப்பதால் -தூக்கம்மிக்க பாம்புகளின் பெரிய இடம் -நாக லோகமோ
தென் திரு அரங்கப் பெரும் கோயில் என்னும் ஊரகமோ -மானிட மாதர் போலே இருப்பதால்
-ஆதி சேஷன் சம்பந்தம் ஊரகம் திருவரங்கம் இரண்டுக்கும் உண்டே
இடம்
தண் காவில் நின்ற ஒருவருக்கே குளிர்ச்சி பொருந்திய சோலையில் நின்ற யான் கண்ட தலைமகளுக்கு தலைமகன் –
தலைமகளைப் பற்றி அருளியது -தலைமகள் கூற்றாகவும் கொள்ளலாம்
—————————————————————-
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply