ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ அர்ச்சிராதி –த்விதீய பிரகரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

போர் மண்டலம் சங்கு தண்டு வில் வாள் புகராழி வெய்யோன்
கார் மண்டலம் சென்று காண்பார் தமக்குக் கதிரோளியோன்
ஏர் மண்டலம் தன்னை எய்தும் வழியை இனிதுரைத்தான்
பேர் மண்டல குருவென்னு முடும்பை பிறந்தவனே –

———————————–

த்விதீய பிரகரணம் –
அதில் முற்பட அர்ச்சிஸ்சைக் கிட்டி -அவன் சிறிதிடம் வழி நடத்த -பின்பு அஹஸ்சையும்-ஸூ க்ல பஷ அபிமாநியையும் –
உத்தரான அபிமாநியையும் -சம்வத்சர அபிமாநியையும் -வாயுவையும் கிட்டி -அவர்கள் வழி நடத்த –
பிரவிச்ய ச சஹஸ்ராம் ஸூம் -என்றும் -மண்ணும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் -என்கிறபடியே –
ஹிரண்ய மயமாய் -கால சக்ர ப்ரவர்த்தகமான -தேரார் நிறை கதிரோன் மண்டத்திலே எதிர் விழிக்க ஒண்ணாத படி
நிரவதிக தேஜஸ்ஸோடே எதிரே ஒரு ஆதித்யன் செல்லுமா போலே சென்று
அவன் மண்டலத்தைக் கீண்டு புக்கு அவ்வருகே போய் -க்ரமாச்சந்த்ரமசம் ப்ராப்ய -என்கிறபடியே -க்ரஹ நஷாத்ரா தாரகா நிர்வாஹகனாய் –
அம்ருதாத்மகனாய் இருந்துள்ள சந்த்ரனைக் கிட்டி -அவன் சத்கரிக்க அவ்வருகே போய் அமானவனைக் கிட்டி அவன் வழி நடத்த
சர்வாப்யாயகனான வருணனும் த்ரை லோக்ய பாலகனான இந்த்ரனும் -முக்தராயோ போகுமவர்களை சர்வ பிரகாரத்தாலும் மிகவும் ஸ்லாகிக்கக் கடவர்களாய்-
ஸூராஸூர கந்தர்வ யஷ ராஷஸ நிர்வாஹகனான பிரஜாபதியையும் சென்று கிட்டி -அவர்கள் லோகங்களையும் கடந்து அண்டத்தையும் –
தசோத்தரமான ஆவரண சப்தகத்தையும் -முடிவில் பெரும் பாழான மூல பிரக்ருதியையும் கடந்து -முன்பு சம்சாரியான நாளில் அந்தகாராவ்ருதமாய்
நீரும் நிழலும் இன்றிக்கே பீதோச்ம்யஹம் மஹா தேவ ஸ்ருத்வா மார்க்கச்ய விஸ்தரம் -என்கிறபடியே
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான கொடிய வழியிலே யமபடர் பாசங்களாலும் புத்திர தார மாயா பாசங்களாலும் கட்டுண்டு யம தூதராலே இழுப்புண்டு
தொடை வழி நாய்கள் கவர சக்தி சங்கு தோமர சாயக ஸூலாதி களாலே நோவு பட்டு -வயாக்ரா கிங்கரரான ராஷசர் முகங்களுக்கு இரையாய்
உடம்பு எங்கும் சீயும் ரக்தமும் வடிய -பசியும் தாகமும் மேலிட்டு தூதரைச் சோறும் தண்ணீரும் வேண்டி மூக்கும் முகமும் உதடும் பல்லும் தகர்ந்து
கையும் காலும் ஒடிந்து கூப்பிட்டுப் போன இழவு தீர –

ஸூ கோத்தரமான மார்க்கத்தாலே இவ்வெல்லை கடந்த போதே தொடங்கிக் கண்டார் அடைய சத்கரிக்க தனக்கு உபாயமான
பாரளந்த பாத போது போலேயும் -அந்தரம் ஏழினூடு செல உய்த்து பாதம் போலேயும் கடு நடையிட்டுப் போய் சப்த ஸ்பர்சாதிகள் ஆகிற
சிம்ஹ வ்யாக்ராதிகளைத் தப்பி சம்சாரம் ஆகிற பெரும் தூற்றினின்றும் புறப்பட்டு தாப த்ரயம் ஆகிற காட்டுத் தீயில் அகப்பட்டுப் பட்ட க்லேசம் எல்லாம் தீர
ததஸ்து விரஜா தீர பிரதேசம் -என்றும் -ச கச்சதி விரஜாம் நதீம் -என்கிறபடியே அம்ருத வாஹினியாய் -வைதரணிக்கு எதிர்தட்டான விரஜையை சென்று கிட்டி –
வன் சேற்று அள்ளலையும்-வாசனா ரேணுவையும் கழுவி மேகாவ்ருதமான ஆதித்ய மண்டலம் போலேயும் -ராஹூ க்ரச்தமான சந்திர மண்டலம் போலேயும்
-சேற்றில் அழுந்தின மாணிக்கம் போலேயும் -அழுக்கு உடம்பிலே யாக்ப்பட்டுத் திரோஹித ஸ்வரூபனான இவன் அதுக்கு நிவ்ருத்தமாய் –

தத்தோயஸ் பர்ஸ மாத்ரேண -என்கிறபடியே விரஜா ஜல ஸ்பர்சத்தாலே திரோதாயகமான ஸூ ஷ்ம சரீரமும் கழியப் பெறுகையாலே
ஸூ ர்ய கோடி ப்ரதீகாச -என்கிறபடியே -அநேகம் ஆயிரம் ஆதித்யர்கள் சேர விதித்தால் போலே கண் கொண்டு காண ஒண்ணாத படி நிரவதிக தேஜஸ் சை யுடையனாய் –
அமா நவம் சமாசாத்ய -என்கிறபடியே சதுர்புஜனாய் -சங்க சக்ர கதா தரனாய் விரஜைக் கரையிலே எழுந்து அருளி இருக்கிற அமா நவனைச் சென்று கிட்டி
அவன் திருக்கைகளால் ஸ்பர்சிக்க பின்பு லாவண்ய சௌந்தர்யாதி கல்யாண குண கரமாய் ஸூ த்த சத்வமயமாய் -பகவத் அனுபவ ஏக பரிகரமான விக்ரஹத்தைப் பெற்று –
இந்த்ராதி பதங்கள் போலே கர்ம சாத்யமாய் -நஸ்வரமாய்-குணத்ரயாத்மகமாய் இருக்கை யன்றிக்கே -பகவத் ப்ரீதி சாத்யமாய் நித்தியமாய் ஸூ த்த சத்வாத்மகமாய்
இல்லை கண்டீர் இன்பம் -என்கிறதுக்கு எதிர்த்தட்டாக -நலமிந்தம் இல்லாதோர் நாடாய்-இருள் தருமா ஞாலத்துக்கு எதிர்தட்டாக –
தெளி விசும்பு திருநாடு -என்கிறபடியே -தெளிதாகிய சேணவிசும்பாய் -சநகாதிகள் நெஞ்சுக்கும் நிலம் அன்றிக்கே
பகவத் அனுகூல்ய ஏக போகரான நித்ய சித்தராலே நெருங்கி
அவர்களாலும் அளவிட ஒண்ணாத அளவையும் -ஐஸ்வர்யத்தையும் ஸ்வபாவமாக யுடைத்தான திவ்ய தேசத்தைக் -கண்கள் ஆர அளவும் நின்று கண்டு –
விண்ணைத் தொழுது -என்கிறபடியே தொழுது அமாநவ பரிசரத்திலே சங்க காஹள பேரிகளினுடைய முழக்கத்தைக் கேட்டு

ஓடுவார் -விழுவார் உகந்து ஆலிப்பார் -நாடுவார் நம்பிரான் எங்குற்றார் என்பார் -என்றும் –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்பராய்க் கொண்டு
பெரிய ஆர்ப்பரத்தைப் பண்ணித் திரள் திரளாகப் புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய ஆனந்த களகளத்தைக்கண்டு அனுபவித்துக் கொண்டு –
பெருய ப்ரீதியோடு போகிற வளவிலே
தம் பஞ்சச தான்ய பிரசரசாம் பிரதிதாவந்தி -என்றும் -தத்ராகத்ய ச தேவாஸ் சாத்யாஸ்ஸ விமலாசயா-என்கிறபடியே
திவ்யமால்யம் -திவ்ய அஜ்ஞனம் -திவ்ய சூர்ணம் -திவ்ய வஸ்த்ரம் -திவ்ய ஆபரணம் -தொடக்கமான வற்றைத் தரித்துக் கொண்டு
ஐந்நூறு திவ்ய அப்சரஸ் ஸூ க்களும் நித்ய ஸூரிகளும் எதிரே வந்து –
ப்ரஹ்ம அலங்காரேண -என்றும் -ப்ரஹ்ம அலங்க்ரியா -என்றும் சொல்லுகிற படியே அலங்கரித்து –
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை –சூடிக்களைந்த திவ்ய மால்யம் -திவ்ய ஆபரணங்கள் -திவ்ய அங்க ராகங்கள் தொடக்கமான வற்றாலே
அலங்க்ருதனாய் இருக்கிற படியைக் கண்டு
புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக் கணிப்பும் –நினையும் நீர்மையதன்று -என்று விச்மிதராய்க் கொண்டாட
பின்பு அநேகம் ஆயிரம் கொடிகளாலும் முத்துத் தாமங்களாலும் மேல் கட்டிகளாலும் அலங்க்ருதமாய்-திவ்ய ஸ்திரீ பரிவ்ருதமாய்
பகவத் சங்கல்ப கல்பிதமாய் இருப்பதொரு திவ்ய விமானத்தைப் பெரிய திருவடி கொண்டு வர -அதிலே இவனை ஏற்றி ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு
திவ்ய காந்தாரத் தளவிலே சென்றவாறே -நாநாவிதமான உபஹாரங்களை ஏந்திக் கொண்டு –

வேறே சில திவ்ய அப்சரஸ் ஸூ க்கள் எதிர் எதிரே சத்கரிக்க பின்பு திவ்ய கந்தம் ப்ரஹ்ம கந்தம் தொடக்கமான அப்ராக்ருத கந்தங்களை ஆக்ராணம் பண்ணி
சர்வ கந்தனாய்-கொடியணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -என்கிறபடியே த்வஜ பதாகாதிகளாலே அலங்க்ருதமான திவ்ய கோபுரத்தைக் கிட்டி –
திருவாசல் காக்கும் முதலிகள் வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுது -என்கிறபடியே பெரிய ஆதாரத்தோடு சத்கரிக்க –
சமதீத்ய ஜ நாகுலம் -என்றும் -கவாடம் கடந்து புக்கு -என்கிறபடியே நெஞ்சையும் கண்ணையும் மீட்டுக் கொண்டு
அயோத்யை என்றும் அபராஜிதை என்றும் சொல்லப்படுகிற -ஏர் கொள் வைகுண்ட மா நகரத்திலே -ஒரு வண்ணம் சென்று புக்கு
-ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம-என்று கண்ணன் விண்ணூரைத் தொழுது –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் கடலில் நீர் சஹ்யத்திலே ஏறக் கொழித்தால் போலே -சம்சாரஸ்தனான இவன் இத்தேசத்திலே வரப் பெறுவதே என்று
விச்மிதராய்க் கொண்டாட -பின்பு

கோயில் கொள் தெய்வங்களான பெரிய திருவடி ஸ்ரீ சேநாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் தந்தாம் திருமாளிகைகளிலே கொண்டு புக்கு
இவனை ஆசனத்திலே உயர வைத்து தாங்கள் தரையிலே இருந்து -தங்கள் மஹிஷிகள் நீர் வார்க்க -ஸ்ரீ பாதம் விளக்கி
தங்கள் மகிஷிகளுக்கு -தேவர் வைகல் தீர்த்தங்களே என்று இவன் ப்ரபாவத்தைச் சொல்லி -சத்கரிக்கும் க்ரமத்திலே சத்கரிக்க –
பின்பு ஸ்ரீ சடகோபனும் -திவ்ய சூர்ணங்களும் -பூர்ண கும்பங்களும் -மங்கள தீபங்களும் -ஏந்திக் கொண்டு –
தேசாந்தர கதனாய் வந்த புத்ரனைக் கண்ட தாய்மாரைப் போலே குளிர்ந்த முகத்தை யுடைய மதிமுக மடந்தையர் வந்து எதிர் கொள்ள
பெரும் தெருவாலே உள்ளே புக்கு திவ்ய ஆவரண சதா சஹாஸ்ராவ்ருதமான -செம்பொன் செய் கோயிலைக் கிட்டி –
ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமா நாயா நம -என்று தண்டனிட்டு ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே தன்னுடைய வரவாலே
தளிர்த்துச் செருத்தி இலையும் மரமும் தெரியாதபடி -பஹூ விதமான நிறத்தையும் கந்தத்தையும் உடைய அப்ராக்ருத புஷ்பங்களாலே நெருங்கித்
தேன் வெள்ளம் இடுகிற கற்பகச் சோலைகளாலும் -நாநாவிதமான பூக்களாலும் -ரத்னங்களாலும் சமைத்த லீலா மண்டபங்களாலும் –
அபூர்வவத் விஸ்மய ஜனகங்களான க்ரீடா சைலங்களாலும் -ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் லீலா பரிகரங்களாய்-
செவிகள் அடைய மயிர்க் கூச்சிடும் படி இனிய பேச்சுக்கள் உடைய ஸூ க சாரிகா மயூர கோகிலாதிகளாலும்
ஆகுலங்களாய் -மாணிக்கம் முத்து பவளம் தொடக்கமானவற்றாலே சமைந்த படிகளை யுடைத்தாய் -நித்ய முக்தர்கள் உடைய
திரு உள்ளங்கள் போலே குளிர்ந்து -தெளிந்து அம்ருத ரசங்கலளான திவ்ய ஜலங்களாலே நிறைந்து நாநாவித பஷி சங்க சமாகீர்ணமாய்
துளும்பி எங்கும் சொரிகிற தேன் வெள்ளத்தை யுடைத்தாய் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் -என்கிறபடியே
மதிமுக மடந்தையர் உடைய திரு முகங்களுக்கும் திருக் கண்களுக்கும் போலியான தாமரை செங்கழுநீர் தொடக்கமான
அப்ராக்ருத புஷ்பங்களை யுடைய ஓத நெடும் தடங்களாலும் நாநாவிதமான பூம் படுக்கைகளாலும் பரிமளம் போலே பூக்களிலே படிந்து
மது வெள்ளத்திலே முழுகிப் பாட்டுக்களாலே அனுமேயங்களான -தெய்வ வண்டுகளின் உடைய திவ்ய காநத்தாலும் –
கிட்டினாரைப் பிச்சேற்றுகிற திவ்ய உத்யான சத சஹஸ்ரங்களாலும் சூழப்பட்டு -நாநா ரத்னங்களாலே சமைந்த ஸ்தலங்களையும் யுடைத்தாய் –
அநேகமாயிரம் ரத்ன ஸ்தம்பங்களாலே அலங்க்ருதமாய் -உபய விபூதியில் உள்ளாறும் ஒரு மூலையிலே அடங்கும் படி இடமுடைத்தாய்
தாமரை செங்கழு நீர் சந்தனம் அகில் கர்ப்பூரம் தொடக்கமானவற்றை அமைந்து வருகிற மந்த மாருதனாலே சேவ்யமானமாய்-
நிரதிசய ஆனந்த மயமான திருமா மணி மண்டபத்தைச் சென்று கிட்டி –

ஆனந்த மயாய மண்டப ரத்நாய நம -என்று தண்டனிட்டு -அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை எப்போதும் ஒக்கப் பருகுகையாலே இளகிப் பதித்து
வைகுந்தக் குட்டனொடு சாம்யா பன்னராய்-அனுபவ ஜனிதமான ஹர்ஷா பிரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு சாமகானம் பண்ணுவார் –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் -என்று இன்பவாற்றிலே சீல குணம் ஆகிற ஆழம் காலிலே
கொண்டைக் கோல் நாட்டுவார் -ஸ்வா ஆசார்யனைக் குறித்து -இழை கொள் சோதிச் செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டிகீர் -என்பார்
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் ஈதே வேண்டுவது எந்தாய் -என்பார்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானைச் –சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் -என்பார்
நமோ நாராயணாய என்பார் -என்கிறபடியே –

ஓவாது உரைக்கும் உரையான பெரிய திரு மந்த்ரத்தைச் சொல்லி தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதி -என்று
ஆத்மா சமர்ப்பணம் பண்ணுவார் –
உருகுமாலில் ஆழ்வார் பட்டது பட்டு -வல்வினை யேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -என்று அம்பு பாடரைப் போலே உழைப்பார் –
மேலைத் தொண்டு களித்து-என்கிறபடியே தாஸ்ய ரசம் தலை மண்டியிட்டு-நம இத்யேவ வாதி ந -என்றும் -நமாஸ் சப்தம் பிரயுஞ்ஜதே -என்கிறபடியே
அந்தி தொழும் சொல்லைச் சொல்லுவாராய்க் கொண்டு -இப்படி பிரளய ஜலதியிலே அலைவாரைப் போலே ஆனந்த சாகரத்திலே அலைந்து –
நித்யர் முக்தர் சொல்லுகிற செவிக்கு இனிய செஞ்சொல் களாலே வெஞ்சொலாளர் களுடைய கடும் சொல்லைக் கேட்ட
இழவு தீரச் செவிக்கு இறையிட்டுக் கொண்டு போய் –திவ்ய ஸ்தானத்தைக் கிட்டி -அப்பேர் ஒலக்கத்தின் நடுவே
தம்தாம் திருமுடிகளிலே திவ்யாயுதங்களைத் தரித்துக் கொண்டு -கூப்பின கைகளும் தாங்களுமாய் இருக்கிற அஸ்த்ர சஸ்த்ராக்யரான
திவ்ய புருஷர்களும் தம்முடைய சங்கல்பத்தாலே சகல ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரன்களைப் பண்ணக் கடவ
சேனை முதலியார் தொடக்கமான திவ்ய புருஷர்களும் வரிசை யடைவே சேவித்து இருக்க —

—————————————————————————————-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply