திருப்பாவை -ஓங்கி உலகளந்த — வியாக்யானம் .தொகுப்பு –

அவதாரிகை –
இவர்கள் முதலிலே தொடங்கி நாராயணன் என்று உபய விபூதி யோகத்தை சொல்லி–பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று
திருவவதார அர்த்தமாக பள்ளி கொண்டருளின படியைச் சொல்லி–அங்கு நின்றும் போந்து அவதரித்த அளவும் வர–அடி ஒற்றுகிறார்கள்-
இப்பாட்டில் தங்கள் நோன்புக்கு அனுமதி தானம் பண்ணினாருக்கு வரக்கடவ–த்ருஷ்ட பலத்தை சொல்லுகிறார்கள்-
பல சுருதி இரண்டு பாசுரங்கள் ஓங்கி உலகு அளந்த -வங்க கடல் கடைந்த -பாசுரங்கள் -கண்ணாடி அறை உத்சவ கந்தம் போலே திருப்பாற்கடல் அவதார கந்தம்
ஏஷ நாராயான ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுரா புரிம்-
வாமனன் அழகு நினைவில் இருக்க திரிவிக்ரமன் அப்புறம் வாமன சொல்கிறோம் த்வாதச நாமாவளியில் –

ஓங்கி –
ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம்–பண்ணப் பெறாமையாலே பனிப்பட்டு சாய்ந்த மூங்கில்
போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –
பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் —உவந்த உள்ளத்தனாய் -என்னக் கடவது இ றே
பனி பட்ட மூங்கில்  போலே பாற்கடல் பைய துயின்ற பரமன்-ஆர்த்த த்வனியால் ஓங்கினான்–குணங்களால் ஓங்கி–
வியாபித்து -சத்தை கொடுக்க-தத் ஸ்ருஷ்ட்வா அனுபிரவேசித்து -அளந்தது -வேற காரணம் -தனக்கு சத்தை பெறவாம்-தாய் குழைந்தை முதுகில் அணைத்து
தளிர் புரையும் -திருவடி என் தலை மேலேவே-கண்கள் சிவந்து -வாயும் சிவந்து கனிந்து வெண் பல் இலகு -மகர குண்டலத்தன் -கொண்டல் வண்ணன்-அந்தாமத்து அன்பு செய்து –ஆரம் உள
அங்கன் இன்றிக்கே
இரப்பு பெறுவதற்கு முன்பு வாமனன் ஆனவன் இரப்பு–வாய்ந்த ப்ரீதியாலே வளர்ந்த படி ஆகவுமாம் -கையிலே நீர் விழுந்த பின்பு வளர்ந்த கடுமை-ப்ரஹ்மா திருவடிகள் விளக்கின நீரும் கூட விழுந்த படி-தாரா ஜலமும் ஸ்ரீ பாத தீர்த்தமும் கூட விழும்படியான வேகம் சொல்லிற்று
ஓங்கி-சம்சார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக பரம பதத்தின் நின்றும் திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்
ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே–சத்வ உத்ரேகம் பிறந்து–அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று
ரஷக அபேஷை பிறந்தவாறே-அதுவே விளைநீராக அபிவிருத்தனாய்

உலகு அளந்த
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி —வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்
வ்யாப்திக்கு கருத்து இவற்றின் உடைய சத்தியை உண்டாக்குகைகாக –இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இ றே நினைத்து இருப்பது
இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்–உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே-இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இ றே
வரையாமையும் —அதி மானுஷ சேஷ்டிதங்களும்-வடிவு அழகும்-கிருஷ்ணாவதாரத்தொடு ஒத்து இருக்கையாலே-ஸ்ரீ வாமன அவதாரத்தை அனுபவிக்கிறார்கள்
உலகு அளந்த-ஆபிமுக்யம் உடைய சேதனனை மாதரம் அன்றிக்கே–எமர் –கீழ் மேல் – ஏழ் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் என்கிறபடியே-அவனோடு சம்பந்தம் உடைய அனைவரையும் தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷமாக்கிக் கொண்ட
இத்தால்–அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை–மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்–தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது
நாங்கள் நம் பாவைக்கு –தீர்த்தன் உலகு அளந்த –பூம் தாமம் -சேர்ந்ததே -தீர்த்தன் உலகு அளந்த சேவை -முன் நடந்தது
-குறை கொண்டு நான் முகன் குண்டிகை -மனசில் குறை பிள்ளை பற்றி -சென்னி ஏறக் கழுவினான் –
பாதுகை தங்கை கங்கை –அவையே -சஜாதீய புஷ்பங்கள் இல்லை -சேர்த்த புஷ்பங்களையே அடையாளம் செய்து இட்ட புஷ்பங்கள்
சிவன் முடி மேல் தான் கண்டு தானே கண்டு -பார்த்தன் தெளிந்தான்
உலகு அளந்த உத்தமன் -சாஸ்திரம் விரித்த கீதாசார்யன்
திருக்கோவலூர்-அருளிச் செயல் அவதாரம் -இத்தால் சிறந்தது என்றதாம்

உத்தமன் –
இத்தை இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினான் ஆக அன்றிக்கே தன் பேறாக நினைத்து இருக்கிறபடி
பிறரை ஹிம்சித்து தான் வாழ வேண்டும் என்று இருக்குமவன் அதமன்
பிறரும் ஜீவிக்க வேணும் தானும் ஜீவிக்க வேணும் என்று இருக்குமவன் மத்யமன்
தன்னை அழிய மாறி யாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னுமவன் உத்தமன் —
மகாபலி அதமன்–இந்த்ரன் மத்யமன்–இவன் அழிய மாறி உத்தமன்
என்னையும் என் உடைமையும் நேர்ந்தாகிலும் ரஷிப்பேன் -பெருமாள் தண்டகாரண்யம்
அன்று கரு மாணியாய்–சந்தான சொத்து —ஆச்சார்ய ஹிருதயம் மணவாள மா முனி ஓலைச் சுவடி —நோவு நோவு எழுதினாராம்
பேரனுக்கும் கொள்ளுப் பேரனுக்கும் எழுதி வைத்தேன் என்றாராம்–பிரமாணித்தார் பெற்ற பேறு–விஸ்வசித்து இருப்பார்களுக்கு செய்து அருளின உத்தமன்
உத்தமன் -உலகளந்தான் -உத் -உத்தர உத்தமன் ஒத்தார் மிக்கார் இல்லாதவன் -விச்வச நீயன் –தன்னை அழித்துக் கொண்டு ரஷிப்பார்
-தன் பேறாக-செய்பவன் நின்னது ஓர் பாதம் நிலம் புதைப்ப -நீண்டதோர் தோள் சென்று அளந்தது திசை அளப்ப -அன்று
-கரு மாணியாய் இரந்த கள்வனே -உன்னை பிரமாணித்தார் பெற்ற பேறு -விஸ்வசித்தார் பெற்ற பேறு என்றவாறு –
கொண்டானை அல்லால் கொடுத்தானை யார் பழிப்பார் –கொண்டான் -தன்னது அல்லாததை தனதாக கொடுத்தவன் தண்ணீர் விட்டுக் கொடுக்க
இவன் வாங்கிக் கொண்டு -தூது நடந்தது-தேர் ஒட்டியாது — இத்யாதி கண்ணன் -உகவாதார் இடம் உத்தமன் -திருவடி வைத்தால்
-உகந்தார் தலையில் வைக்கச் சொல்ல வேணுமோ –உலகமாக தொட்டது –அது ஊராகத் தொட்டது இது –
மரம் -இரண்டு பறவைகள் -த்வா ஸ்பர்ணா சமானம் வருஷம் -சரீரம் -தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாது-அனச்னன் அந்ய -ஒளியுடன் இருக்க -அந்தர்யாமித்வம்
உத்தமன் -அகர்மவச்யன் –தானே திருவடி வைத்து -அளந்து -உத்தமன் -மணல் வெளியில் நம்பெருமாள் நம்மை நோக்கி வந்து உத்தமன் -அணைக்கும் படி –
விச்வச நீயன் -உத்தமனைப் பற்றி உத்தம தேசம் போக -அதமார்கள் இருக்கும் இடம் வந்து -சேவை சாதித்து –
உத்தம ஷேத்ரம் சீர்காழி -பாடலிக வனம் -இடது திருவடி மேலே தூக்கி –தாடாளன் -காழிச் சீராம விண்ணகரம் —
புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் -வியாதி துர்பிஷை தத்கரா -வியாதி பஞ்சம் திருட்டு

பேர் பாடி –
இக்குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பூர்வகமாக பாடி –
பேர் பாடி திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை
உத்தமன் பேர் என்கிறது -அவனுடைய வாத்சல்ய பிரகாசகமான-திருமந்த்ரத்தை –அத்தை ஸ்வயம் புருஷார்தமாகப் பாடி
–முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்–இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான–த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும்–திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –
திருமங்கை ஆழ்வார் மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி அனந்தரத்தில் —அதில் உக்தமான வ்யாப்த்திக்கு பிஜ்ஞ்ஞாகரமான
த்ரைவிக்ரம அபதானத்தை–அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இ றே

உத்தமன் பேர் –
அவன் தனக்கும் அல்லாதாருக்கும் உண்டான வாசி போரும்–அவனுக்கும் திரு நாமத்துக்கும்–கட்டிப் பொன் போலே அவன்
பணிப் பொன் -ஆபரண பொன் -போலே திருநாமம் —அவன் தன்னை இல்லை செய்கிறவர்களும் திரு நாமத்தை–கொண்டு கார்யம் கொள்ளா நிற்பர்
அதாவது வியாதி பரிகார அர்த்தமாக திரு நாம சங்கீ ர்தனத்தை விதித்தால்–அத்தை அப்போதே செய்யா நிற்பர்கள்
இனி– மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் அம்மே -என்ன பிராப்தி உண்டாம் போலே–திரு நாமம் சொல்லுகைக்கு எல்லாருக்கும் பிராப்தி
உண்டாய் இருக்கும் -திரு நாமம் சொல்லுகைக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா–இது தானே யோக்யதையை பண்ணிக் கொடுக்க வற்று
ஊத்தை பல்லாலும் சொல்லாலும் —கங்கையில் நீராட போவான் உவர் குழியில் நீராடி விட்டு போக வேண்டுமா
சங்கல்பம் செய்ய சுத்தி வேண்டுமே–சமுத்ரம் நீராட குளித்து விட்டு தான் போக வேண்டும்–யோக்யன் -யோக்யதை விட வேண்டாம்
பெருமாள் -சரண் -திருநாமம் உள்ளீட்டு விஷயம்–வேல் வெட்டிப் பிள்ளை வார்த்தை–கிழக்கு நோக்கி வீற்று இருந்து–குடி பிறப்பால் வந்த ஆசாரம்
விபீஷணன் கடலில் ஒரு முழுக்கு கூட போட வில்லையே–திருவாராதன க்ரமம் பட்டர் -சொக்க தேவரை எழுந்து அருள சொல்லி கை காட்டி
உனக்கு அதுவும் போராது எனக்கு அதுவும் வேண்டாம்
பாடி -மடி கோலாதே-இதுவே பிரயோஜனம்-பாடி நெய் உண்ணோம்–இன்று அமுது செய்திடல் ஓன்று நூறு ஆயிரமாக கொடுப்பேன்
என்னையும் என் உடைமையும் கொடுத்தல்
நாம சங்கீர்த்தனம் -எல்லா பலன்களும் கொடுக்கும்–ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி –
ஜனகன் கர்ம யோகி –ஜடவரதர் ஞான யோகி -பிரகலாதன் பக்தி யோகி – ஆழ்வார் ஆசார்யர்கள் பிரபன்னர் —சரவணம் கீர்த்தனம் நான்கு பேருக்கும் –
பக்தர் கோஷ்டியில் பெருமாளை காணலாம் சததாம் கீர்த்யந்த-

திரு நாமத்தை வாயால் சொல்லா விடில் தரிக்க மாட்டாத நாங்கள்–நெஞ்சு காவல் இடுகிற ஊரிலே இது நமக்கு சித்திப்பதே என்று ப்ரீதைகளாய்-தங்களை ஸ்லாக்கிக்கிறார்கள் என்னவுமாம்

நம் பாவைக்கு
ப்ராபகதயா வன்றிக்கே பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் செய்கிற நோன்புக்கு

பாவைக்கு சாற்றி நீராடினால் –
நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் -கீழே சொல்லி -நம் பாவைக்கு -சாற்றி நீராடினால் -இங்கே —
நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய–விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால் -என்றுமாம்
சாற்றி –த்வய உச்சாரணம் -நீராடி -உபாயம் உபேயம் ஒரே பதம் -மந்த்ரங்கள் தம்மாலும் மற்று உள்ள உரையாலும் -அருளிச் செயல்களாலும் -ஆசார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டு -மேலே பலம் -விவரணம் -உபாய ஸ்வரூபம் -பலத்துக்கு சாதனம் -அவாந்தர பலன் இங்கு ஆழி மழைக் கண்ணா -மேலே பலம் –

பேர் பாடி -நீராடினால் –
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக–கிருஷ்ண சம்ச்லேஷம் பண்ணினால்–பலமும்–பல பிரதாதாவான உலகு அளந்தவன் படியாகை
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி
அநந்ய உபாயரான நாங்கள்–ஸ்வயம் பிரயோஜனமான நோன்பை–உத்தேசித்து வ்யாஜ்யமாக்கி–நீராடினால்–பகவத் அனுபவத்தைப் பண்ணினால்

தீங்கின்றி நாடெல்லாம்
நாட்டில் வியாதி துர்பிஷ்யாதி அமங்களங்கள் எல்லாம் போய் சம்ருதமாய்–தம்தாமுடைய ஸூக்ருதம் அனுபவிக்கில் இ றே அவ்வளவில் நன்மை யாவது
தம்தாமுடைய புண்ய அனுகுணமாக வன்றிக்கே–பெருமாள் உடைய பாக்யத்தாலே என்று ராஜ்ஜியம் சென்றாப் போலே-தேகாத்மா அபிமானாதி தோஷங்கள் ஒன்றும் இன்றிக்கே–இவ் ஊரே அன்றிக்கே இவ் ஊருடன் சம்பாத்தித நாடெல்லாம் மங்களம் ஆகை

திங்கள் மும்மாரி பெய்து –
வெள்ளக்கேடும் வறட்சி கேடும் இன்றிக்கே ஊர் வெண்ணெய் விட்டாப் போலே இருக்கை —ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையுமாய்
அபேஷித்த காலத்தில் உண்டாய் இருக்கை–சத்வோத்தரமான காலத்திலே–அனன்யார்ஹ சேஷத்வ–அநந்ய சரணத்வ–அநந்ய போக்யத்வங்கள் ஆகிற
ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்–அத்தாலே அபிவிருதங்களாய்–ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே
தத் சம்பந்திகளாய்த்த தேக தாரகரான ஆத்மவர்க்கங்கள்–களிப்பிலே துள்ளா நிற்க

ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள –
கீழ் சொன்ன திரு உலகு அளந்த சர்வேஸ்வரனோடு ஒத்து இருக்கை —விடுவோரை நட்டு நாயிறு பட்டபோது வந்து பார்த்தால்-கை கவித்துப் பார்க்க வேண்டும்படி இருக்கை
மாரீசன் பெருமாளை -சீதா ராம பிரபாபாவம் சொன்னால் போலே ஆயிற்று–இவர்களுக்கும் வாமன நிமித்தமாக இருக்கிறபடி

ஓங்கு பெரும் செந்நெல்
ஒரு முதலே ஒரு செய்யை விளாக்குலை கொண்டு அங்கன்–ஒரு வரம்பு இல்லாமையாலே–ஆகாச அவகாசம் உள்ள அளவும் வளர்ந்து இருக்கை

ஊடு கயல் உகள –
செருக்காலே யானைக் கன்று போலே வளர்ந்த கயல்கள் ஆனவை செந்நெல் களின் உள்ளே புக்கு-போக இடம் பொறாமையாலே துள்ளா நிற்கும்
விழுக்காடு அறியாமே அகப்பட்ட படி திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரனை கண்ட அனுகூலர் பட்டது-படா நிற்குமாய்த்து இவை

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப
பூத்த குவளை -என்னுதல்–காலத்திலே என்னுதல்–தர்ச நீயமான குவளைப் பூவிலே என்னுதல் –பொறி வண்டு கண் படுப்ப –மது பானத்தாலும்–அன்யோன்ய சம்ச்லேஷத்தாலும்–பிறந்த புகரை உடைய வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கிற வண்டுகள்-தன்னில் தான் ஒரு மகா பாரதத்தைப் பாரித்துக் கொண்டு புக்கு–புஷ்பத்திலே ஸ்பர்ச சௌக்யத்தாலே–நஞ்சு உண்டாரைப் போலே கிடந்தது உறங்கி உணர்ந்து-எழுந்து இருக்கும் பொழுது–என்னை நீ எழுப்பிற்று இல்லை என்னை நீ எழுப்பிற்று இல்லை–என்று ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு என்னா நிற்கும்
பள்ளிக் கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி –நள்ளி ஊடும் -என்னக் கடவது இ றே-பகுவாய் அலவன் -பெரிய வாயை உடைய புருஷ நண்டு–நள்ளி பெண் நண்டு

ஊடு கயல் உகள –பூம் குவளைப் போதில் பொறி வண்டு
குவளைப் பூவிலே வண்டு–மது பானம் பண்ண என்று படிந்த தசையிலே–கயல் ஊடே உகள–செந்நெலும் குவளையும் ஒக்க அசைந்து-தூங்கு மெத்தையில் உறங்கும் ராஜ புத்ரர்கள் போலே–வாயில் மதுவோடு வண்டுகள் கண் படுப்ப -என்றபடி

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்-பரஞ் ஜோதிஸ் ஸானசர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-சுகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––இது சேதன சம்ருத்தி–இனி சைதன்ய சம்ருதியைச் சொல்லுகிறது-இது சிஷ்ய சம்ருதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-

இது வயலின் சம்ருத்தி–இனி ஊரில் சம்ருத்தி இருக்கும்படி சொல்லுகிறது ஆகவுமாம்-
தேங்காதே புக்கிருந்து –
எத்தனையேனும் முன்கை யுரவியராய் இருப்பார்–இழிய வேணும் யாய்த்து பசு கறக்கப் புகும் போது-இதுக்கு அடி —பால் மாறாமையாலே எழுந்து இருக்கப் போகாது–இத்தால் பால் போரும் பெருமையை அனுசந்தித்த வாறே-கறக்க ஒருப்படுவார் இல்லை–திருவடி சமுத்ரம் கடக்க ஒருப்பட்டாப் போலே–ஒருப்பட்டுக் கொண்டு இழிய வேண்டும்படி யாய்த்து இருப்பது

இருந்து –
பால் மாறில் இ றே எழுந்து இருக்கலாவது–ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து-பிற்காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து–சூச்திரனாய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு பரம பத நாதனோடு–பரம சாம்யா-பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்–பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க-
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண–ஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்–சிஷ்ய விதேயராய்–நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய–அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –

சீர்த்த முலை
விரலிட்டு சுற்றிப் பிடிக்க ஒண்ணாது-இரண்டு கையாலும் அணைத்து கறக்க வேண்டும்படி கனத்து இருக்கை

பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் –
வாங்குகை -வலிக்கையாய்–பற்றிக் கறக்க குடம் நிறைக்கும் என்னுதல்–முலையைப் பற்றி கை வாங்க தானே நின்று பால் சொரியும் என்னுதல்-
இட்ட குடங்கள் வாங்க வாங்க நிறைக்கும் என்னுதல்–குடமிடாதார் இழக்கிறது பசுவின் குற்றம் அன்றே–இச்சை உடையார் ஈஸ்வரனைப் பற்றி க்ருதக்ருத்யராம் போலே யாய்த்து இவையும்

வள்ளல் –
கீழே பால் போரும் பெருமையை சொல்லிற்று ஆகில்–இனி வள்ளல் தனமாவது என் என்னில்–கிருஷ்ணன் படி இவற்றுக்கும் உண்டாய் இருக்கை-
ஆரேனும் இவன் கழுத்தில் ஓலை கட்டி தூது போ என்றால்–போமாப் போலே யாய்த்து இவையும்–சிறு பிரஜைகளும் கூட கட்டவும் அடிக்கவும் ஆம்படி
தன்னைக் கொடுத்துக் கொண்டு நிற்கை

பெரும் பசுக்கள்
புல்லும் தண்ணீரும் தாரகமாக வளர்ந்தவை அன்றிக்கே–கிருஷ்ண ஸ்பர்சமே தாரகமாக வளர்ந்தவை ஆகையாலே
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே யாய்த்து இருப்பது-கண்ணன் புல்லாங்குழல் நாதம் கேட்டு வளர்ந்த பசுக்கள் -செவிகள் ஆட்டகில்லா
எம்பெருமான் நியமனம் ஒரு முலை–சிஷ்யர் பிரார்த்தனை சமித் பாணி ஒரு முலை —துர்கதி கண்டு வருந்தியாவது -காருண்யத்தால் -தரித்து இருந்தேன் ஆகவே -நான்காவது முலை-வள்ளல் பெரும் பசுக்கள்–பசுக்கள்–பெரும் பசுக்கள்–வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்து
அழிவில்லாத சம்பத்து நிரவதிமாம்படி–சேதனர் உடைய புண்ய பாப அனுரூபமாக படிவிடும்–சர்வேஸ்வரன் அடியாக வந்த சம்பத்தாகில் இ றே
அளவு பட்டு இருப்பது–பகவத் ஸ்பர்சத்தால் வந்த சம்பத் ஊற்று உடைத்தாய் இருக்கும் இ றே–ஆகையால் நீங்காத செல்வம் -என்கிறது-

நீங்காத செல்வம் -பிரபன்ன குடி செல்வம் கைங்கர்ய செல்வம் குலம் தரும் செல்வம் தரும்-வாசிக காயிக மானச கைங்கர்யம் -எம்மா வீட்டில் எம்மா அனுபவம் –
திருக்குறுங்குடி பதிகம் -பலம் வைஷ்ண்யம் -அருளி–ருசி ஜனக விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம்–சுந்தர பரிபூர்ணன்-
வடிவு அழகிய நம்பி வடுக நம்பியாக போனதால் வைஷ்ணவ சித்தி -நீங்காத செல்வம் பாகவத கைங்கர்யம் –

தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி-வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்-நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
பிற்காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து
சூச்திரனாய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு பரம பத நாதனோடு
பரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்
பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண-ஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்
சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய-அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –

– ஓங்கி உலகளந்த உத்தமன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா —அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினேரே –
ஞானம் கனிந்த நலம் கொண்டு -இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
எம்பெருமானை விட ஓங்கி அதிசயித்து -தம் கருணையால் தாமே சென்று அருளி உத்தமர் -உலகத்தை எல்லாம் ஸ்வ அதீனமாக ஆக்கிக் கொண்ட உத்தமர் அன்றோ –
ஓராண்முன்னோர் – வழியாய் உபதேசித்தார் –ஆசை உடையார்க்கு உபதேசிக்க -வரம்பு அறுத்த உத்தமர் அன்றோ –
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் -நற்றவர் போற்றும் இராமானுசன் அன்றோ –

செல்வ மாலை -சாத்துகிறாள் -ஞானம்பக்தி செல்வம்வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் -நான்கு முலைக் கண்கள்-சீர்த்த முலை பற்றி வாங்க
பகவத் ஆஞ்ஞா பரிபாலனம் -பிறந்ததே சிஷ்யர் உஜ்ஜீவனதுக்கு என்னும் நினைவு–சிஷ்யர்கள் வருந்தி கேட்க வர்ஷிதல்
கேட்காவிடினும் துர்கதி கண்டு சஹியாமை–வாய் விட்டு சொல்லாமல் தரிக்க மாட்டாமை
கீதாசார்யன் -அர்ஜுனன்–நாரதர் -வால்மீகி–பராசர பகவான் -மைத்ரேயர்
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்பட நீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப்பட நின்று மழை பொழியும்- குடம் -பாத்ரம் -ஆச்சார்யதயாபாத்ரம்
புள்ளு பாஷ்யகாரர் பிள்ளை நாம் -வேதாந்தங்கள் அநந்தம்-நமக்கு தேடிக் கொடுத்து –
பசுக்கள் -பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் -குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
-தேங்கு -இடையவர்கள் பால் கறக்க தயங்குவார்கள்-தேங்காதே – புக்கு -இருந்து –ஸ்திரமாக இருந்து ––
தீங்கு -தேஹாத்மா சவ தந்திர அந்ய சேஷத்வ பிரமங்கள் -இல்லாமல் -ஆசார்யர் இடம் -ஜ்ஞானம் -கிரியாம்சம் விட ஜ்ஞானாம்சம்–இதுவும் பலத்தின் ஏகாம்சம்-மும்மாரி -தத்வ ஹித புருஷார்த்த ஜ்ஞானங்கள் -தத்வ த்ரய ஜ்ஞானங்கள்
பெரும் செந்நெல் -சரணாக தர்கள் – வரம்புற்ற கதிர் செந்நெல் -தலை சாய்த்து -தாள் சாய்க்கும் தென்னரங்கம் -உரம் பெற்ற மலர்க்கமலம்-உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -சரணா கதி இங்கும் நடக்கிறது-அனுபவ கைங்கர்ய நிஷ்டர்கள் இருக்கும் நிலை -வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வார்-எம்பெருமானார் போல்வார்-நித்யர் கைங்கர்யங்கள் முறையும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஆஜ்ஞ்ஞைப்படி –
தேக யாத்ரை தானே நடக்கும் – குவளை புஷ்பம் தாமரை தஹார புண்டரீகம் -ஆத்மா யாத்ரை சித்தம்-தேக யாத்ரை தானே நடக்கும் – குவளை புஷ்பம் தாமரை தஹார புண்டரீகம் -ஆத்மா யாத்ரை சித்தம்-தேக யாத்ரைக்கு கரைய வேண்டாம் கரைந்தால் நாஸ்திகன்-ஆத்மா யாத்ரைக்கும் கரைய வேண்டா கரைந்தான் ஆகில் சரணாகதன் ஆகான்
பொறி வண்டு -தெய்வ வண்டு –
தேங்காதே -ஆசார்யர் இடம் புக்கு -இருந்து -சீர்த்த முலை-சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள்-குடம் தயா பாத்ரம் -நிறைக்கும் ஆத்ம குணங்களால் -தன்னைப் போலே ஆக்கும் ஆசார்யர் -இது தான் நீங்காத செல்வம்
பாவை -பிரபத்தி ச்வாபதேசம் –இருக்கும் காலம் -ப்ரீதி கார்ய பகவத் அனுபவ கைங்கர்ய –பூம் குவளை போது-தஹர்ரம் புண்டரீகம் -ஹார்த்தன் -அந்தர்யாமி –நின்று அங்குஷ்ட -காத்து இருந்து-மத்யே வாமனம் ஆசீனம் -விச்வே தேவா -மனச் இந்த்ரியங்கள் -தேவ சப்தம் இந்த்ரியங்கள் -ஆசார்ய அனுக்ரஹத்தால் -கண் வளருவான்–நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே -மூன்று ஸ்ருதிகள் -கொண்டே-ஜ்ஞான அனுஷ்டான ஔதார்யம் காருண்யம் -வள்ளல் பெரும் பசுக்கள் -கிருபாமாத்ரா பிரசன்னாசார்யர்கள் –
ஓங்கி -சரம ச்லோகார்த்தம் -விபவம் -வாமனன் -அடுத்து அந்தர்யாமி அர்ச்சா -இப்படி ஐந்தும்
மார்கழி வையத்து ஓங்கி –பக்தி யோக பிரபத்தி -ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபதிக்கு ஐந்து அங்கங்கள் -பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் -ஸ்வஸ்தி வாக்ய வேத மந்த்ரம் போலே ஓங்கி உலகு அளந்த –
ஐயமும் பிச்சை -வாமனன் தொடர்பு -தர்ப்பம் -சக்கரத் தம்சம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சக்கரம் கையிலே –
மேகங்கள் திரை –காலில் –நஷ்த்ரங்கள் கழுத்துக்கு –காலுக்கு தண்டை -தேக ளீ ஸ்துதி -வளரும் பொழுது -கனை ஆழி -சாஸ்திரம் -அறிந்து ஹனுமான் பிராட்டி எடுத்துக் கொள்ளும் படி கொடுத்த -சுமத்ரை உத்தம ஸ்திரீ –
பத்தர் பாந்தம் உள்ளவர் -புருஷன் உத் புருஷன் உத்தர புருஷன் உத்தம புருஷன் பத்த முத்க்த நித்யர் விட புருஷோத்தமன் –
மூன்றாவது அடி -மகா பலி -அஹங்காரம் -அழித்து
நாமும் நம் பாவைக்கு -நாங்கள் நம் பாவைக்கு இங்கு மரியாதை மிக்கு
வேதம் வல்ல ஆனந்தர்நுக்கு ஒரு மழை நீது நெறி தவறாத மன்னருக்கு ஓர் மழை மாதர் மங்கையர் கற்பினுக்கு ஓர் மழை–கற்பு நடமாடக் கண்டேன் -திருவடி -பொறை-கற்பு –
பாரோர் -புகழப் படிந்து –உய்யுமாறு உகந்து -நீங்காத செல்வம் நிறைந்து -மங்கள சொற்கள் நிறைந்த -மார்கழி வையம்-ஓங்கி -திருப்பாவை ஏற்றம்

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading