சர்வே வேதாந்த ஆரப்யந்தே இதி யதாப்யாஹூ ததனா தரணீயம்
அசேஷ -என்று ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்
அசேஷ விசெஷணங்கள்-ஜ்ஞாத்ரு ஜ்ஞேயம் -முதலியவைகள் –
விஜாதீய -சஜாதீய -ஸ்வகத பேதங்கள் –
நிர்விசெஷத்வம் -சூன்யத்தை உண்டாக கூடாது என்று சின் மாத்ரம் –
ப்ரஹ்மைவ -ஏவ குணத்தால் சகுணத்வம் வ்யாவர்தம்
எல்லாவற்றுக்கும் மித்யாத்வம்
அதாத ஆதேசோ நேதி நேதி –
நேஹ நாநாசதி
சதேவ -விஜாதீய பேதம் -விலக்கி
ஏகமேவ -சஜாதீய பேதம் -விலக்கி
அத்விதீயம் -பாவ அபாவ ரூபமான பேதம் விலக்கி –
பூதயோநிமா-அதரேச்யம்-அகராஹ்யம் -அகோதரம் -அவர்ணம்-
அசஷூஸ் ஸ்ரோதரமபாணி பாதம் –
நித்யம் -விபு -ஸூ சூஷ்மம் –
நிஷ்களம்-அவயவங்கள் இல்லை
ஊர்மிகள்-பசி தாஹம் மோகம் சோகம் முஹம மூப்பு மரணம் -இல்லாமல் –
நிரவத்யம் –நிரஞ்சனம் -கர்ம சம்பந்தம் கர்ம பலம் –இல்லாதது –
இதம் சர்வம் யதயமாத்மா
நேஹ நா நாஸ்தி கிஞ்சன –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -சோயக வாக்கியம் சோதித்து காட்டும் –
————————————————————————————————
எது சத்தா மாத்ரமாய் பேதம் இல்லாததோ
வசனங்களுக்கு அகோசமோ
ஸ்வயம் பிரகாசமா -அந்த ஜ்ஞானம் ப்ரஹ்மம் என்று பெயர் உள்ளது
ஜ்ஞான ஸ்வரூபனாயும் -அத்யந்த நிர்மலனாயும் பரமார்த்த பூதனாயும்
பிராந்தி ஜ்ஞாநத்தால் பிரபஞ்ச ரூபமாக பார்க்கப் பட்டவனாயும்
இருக்கிற அவனையே -விஷ்ணுவையே -நமஸ்கரித்து –
ஜகத்பதியே-நீ ஒருவனே பரமார்தமாக இருப்பவன் வேறு ஒருவன் இல்லை –
மூர்த்தமாக -கிரியைக்கு -ஆதாரமான வஸ்து -எது காணப் படுகிறதோ –
இது ஜ்ஞான ஸ்வரூபியான உன்னுடையதே –
இதை யோக ஜ்ஞானம் இல்லாதவர்கள் பிராந்தி ஜ்ஞாநத்தால்
ஜகத் ரூபமாக காண்கிறார்கள் –
ஜ்ஞான ஸ்வரூபமாக இருக்கிற இந்த சமஸ்த ஜகத்தையும்
புத்தி இல்லாதவர்கள் ஜடா ஸ்வரூபமாக பாரா நின்று கொண்டு
மோஹம் ஆகிற வெள்ளத்தில் சுழலுகின்றார்கள்
ஹே பரமேஸ்வரா -எவர்கள் ஜ்ஞான ஸ்வரூபமான ஆத்மாவை அறிந்தவர்களாயும்
சுத்த மனஸ் உள்ளவர்களாயும் இருக்கிறார்களோ
அவர்கள் உலகம் அனைத்தையும் ஜ்ஞாநாத்மகமான உன்னுடைய
உருவமாகக் காண்கிறார்கள் –
தன தேகத்திலும் பிறர் தேகங்களிலும் நிலை பெற்று இரா நின்ற போதிலும் கூட
அந்த ப்ரஹ்மத்தின் உடைய ஏகமயமாய் இருக்கிற யாதொரு விஞ்ஞானம் உண்டு அது அன்றோ பரமார்த்தம் –
தவதை பாவனை உள்ளவர்கள் உண்மை அறியாதவர்கள் –
ஹே வேந்தர்களுக்குள் சிறந்தவனே என்னைக் காட்டிலும் வேறு ஆகாரம் உள்ளவனாக
மற்று ஒருவன் இருப்பானே யாகில் அப்போது இது நான் இது மற்றவன்
என்று இவ்வண்ணம் சொல்வதற்காவது பொருத்தம் உண்டு
பேதம் இன்றி எங்கும் வியாபித்து இருக்கின்ற காற்றுக்கு
புல்லாங்குழல் முதலியவற்றின் த்வார பேதத்தினால்
எவ்வாறு ஷட்ஜம் முதலிய நாம பேதங்கள் ஏற்படுகின்றனவோ
அவ்வண்ணமே பரமாத்மாவுக்கு பேதம் ஏற்படுகின்றது –
அப்படிப் பட்ட நானும் நீ அவன் இவை அனைத்தும் ஆத்மா ஸ்வரூபம்
பேத மயக்கத்தை விட்டு விடு –
இவ்வண்ணம் அவரால் -பரத ரிஷியால் -சொல்லப் பட்ட அந்த ராஜ ஸ்ரேஷ்டன்
பரமார்த்த திருஷ்டி உள்ளவனாக பேதத்தை இழந்தான் –
பேத ஜனகமான அஞ்ஞானம் முற்றிலும் நாசம் அடைந்த பின்பு
ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்திற்கும்
வாஸ்தவமாய் இல்லாத பேதத்தை எவன் உண்டு பண்ணப் போகிறான் –
ஹே ஆலச்யம் அற்றவனே -அர்ஜுனா -வ்யாபன சீலனான நான் எல்லா பிராணிகளின் உள்ளத்தில் நிலை பெற்று இருக்கிறேன்
ஹே பரத குலத்தில் உதித்தவனே -எல்லா தேகங்களில் இருக்கும் ஜீவாத்மாகவே என்னை அறிவாயாக
சராசர ரூபமான பூத வர்க்கங்களுக்குள் நான் இல்லாமல் எது இருக்குமோ அது இல்லை –
என்கிற இது முதலான வஸ்து ஸ்வரூப உபதேச பரங்களான
சாஸ்த்ரங்களால்
நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மமே சத்யம் –
மற்று அனைத்தும் மித்யை-என்று சொல்லுவதால் –
——————————————————————————————–
மித்யாத்வம் ஆவது
முற்பட தோற்றத்திற்கு விஷயமாக இருந்து உள்ளபடி இருக்கிற வஸ்து ஜ்ஞாநத்தால் நிவ்ருத்திக்க தக்க தன்மை உள்ளது –
எவ்வாறு ரஜ்ஜூ முதலியவைகளை அதிஷ்டானமாக கொண்ட சர்ப்பம் முதலியவைகளோ-அவை போலே –
தோஷ வசத்தால் அன்றோ அந்த அதிஷ்டானத்தில் அந்த வஸ்துவின் கலபனம் சம்பவிக்கிறது –
இவ்வண்ணம் சின் மாதரத்தை சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்மத்தின் இடத்தில்
தோஷத்தால் கல்பிக்கப் பட்டு இருக்கிற இந்த தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் ஆதி பேதங்கள் உள்ள உலகம் அனைத்தும்
யதாவசிதமான ப்ரஹ்ம ஸ்வரூப ஜ்ஞாநத்தால் பாதிக்கத் தக்கது ஆதலால் மித்யா ரூபமாக இருக்கிறது -தோஷமோ -என்னில் –
ஸ்வரூபத்தை மறைக்கிறதும்
பற்பல விசித்ர விஷேபத்தை உண்டு பண்ணுகிறதும்
சத் என்றும் அசத் என்றும் நிர்வசனம் செய்யத் தகாததுமான அநாதியான அவித்யை
அவித்யையினால் அன்றோ -வைபரீதயத்தை அடைவிக்கப் பட்டு இருக்கிறது –
சத்யங்களான அவைகளுக்கு அனருதம -அவித்யை -ஆபரணமாக -இருக்கிறது –
அப்பொழுது -சிருஷ்டிக்கு முன்பு –அசத்தும் இல்லை சத்தும் இல்லை -தமஸ் இருந்தது –
பூர்வம் தமஸினால் ஜ்ஞானம் மறை பட்டு இருந்தது –
மாயை யை பிரகிருதி என்றும் மகேஸ்வரனை மாயையை உடையவன் என்றும் அறிய வேண்டும் –
இந்த்ரன் -பரமாத்மா -மாயையினால் அநேக உருவங்களை எடுக்கிறான் –
என்னுடைய மாயை எவ்விதத்தினிலும் தாண்ட முடியாது –
அநாதியான மாயையினால் உறங்குகிற ஜீவன் எப்பொழுது விழித்துக் கொள்கிறானோ –
இவை முதலியவைகளால் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மமே
சத் என்றும் அசத் என்றும்
நிரூபிக்கத் தகாத அநாதியான அவித்யையினால் ஸ்வரூப பந்தி திரோதானத்தை பெற்று
நாநாவத்தை தான் அடைந்து இருப்பதாக காண்கிறது என்று அறியப் படுகிறது
இந்த விஷயத்தில் பிரமாணம் கூறப் பட்டு இருக்கிறது
எதனால் சமஸ்த ஷேத்ரஞ்ச ரூபியாய் இருக்கிற அந்த பகவானுக்கு ஜஞானமே ஸ்வபாவிகமான ரூபமோ
தேவ மனுஷ்யாதி வஸ்துக்கள் ஸ்வரூபம் அன்று அன்றோ
அதினாலேயே மலை சமுத்ரம் பூமி முதலிய வஸ்து பேதங்களை
அந்த ஜ்ஞானை ஏக ஆகாரமாக இருக்கிற ப்ரஹ்மத்தின் வைவித்ய அனுசந்தான மூலங்கள் என்று அறிவாயாக
அவித்யா சம்பந்தம் அற்றதாயும் -பேத தர்சனம் இல்லாததாயும் –
அவைகளுக்கு நிமித்தங்களான எல்லா கருமங்களும் நாசம் அடைந்த பின்
ராகாதி தோஷங்களின் நின்றும் அகன்று -ஜ்ஞானம் எப்பொழுது உள்ளதோ அப்பொழுது அன்றோ
சங்கல்பம் ஆகிற -அவித்யை என்கிற மரத்தின் பழங்களான ஆகார பேதங்கள்
தரமி பூதங்களான பதார்த்தங்களில் உண்டாவது இல்லை –
ப்ராஹ்மணா ஆதலால் – விஞ்ஞான ரூபியான ப்ரஹ்மத்தை தவிர்ந்த வேறு ஒரு யாதொரு வஸ்துவும்
எவ்விடத்தில் ஆவது எக்காலத்தில் ஆவது இருந்தது இல்லை –
விஞ்ஞானம ஒன்றே தம் தம் கர்ம பேதங்களால் பலவகைப் பட்டு இருக்கிற சித்த வருத்தி உடன் கூடியவர்களால்
பலவாறாக ஏற்றுக் கொள்ளப் பட்டு இருக்கிறது –
சுத்த ஸ்வரூபியாயும்-மலமற்றதாயும் -சோகம் அற்றதாயும் -லோபம் முதலிய சமஸ்தமான
மனோமலங்களின் சம்பந்தம் இல்லாதாயும்
ஒன்றாயும் பிறப்பு வளர்ச்சி முதலியது இல்லாதாயும்
யாதொரு விஞ்ஞானம் உண்டோ அதுவே தனக்கு மேல்பட்டவன் இல்லாதவனும்
ப்ரஹ்மாதிகளுக்கும் கூட நியந்தாவான வாசுதேவன்
அவனை விட வேறு ஒரு வஸ்துவும் இல்லை
எவ்வாறு ஞானம் ஒன்றே சத்யம் மற்றது அசத்யமோ
இவ்வாறாக சத்பாவமானது என்னால் உனக்கு உரைக்கப் பட்டது ஆகிறது –
ஞானஏக ஆகாரமாக இருப்பதால் சமமாய் இருக்கிற யாதொரு இந்த ப்ரஹ்ம ஸ்வரூபம் ஆனது
உலகத்தை ஆச்ரயித்து தேவ மனுஷ்யாதி ரூபமாக நன்கு வ்யவஹரிக்கத் தக்க
பேதம் உள்ளதாக இருக்கிறதோ அதற்கும் அவித்தையே ஹேது என்று உனக்கு உரைக்கப் பட்டது
நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மாத்மைகத்வ விஞ்ஞானத்தால்
இவ் அவித்யைக்கும் நிவ்ருத்தியை
மேலே உதாஹரிக்கப் போகிற ஸ்ருதிகள் கூறுகின்றன –
அந்த ப்ரஹ்மத்தை எவன் ஓன்று என்று பார்க்கிறானோ அவன் மீண்டும் மிருத்யுவை -அவித்யயை -அடைவது இல்லை –
அதைப் பார்ப்பவன் அவித்யையைப் பாரான்
பிரத்யஷாதிகளுக்கு விஷயம் ஆகாததும் -சரீரம் இல்லாததும் –
இப்படிப் பட்ட ஸ்வ பாவம் உள்ளது என்று நிர்வசனம் செய்யத் தகாததும்
ஆதாரம் அற்றதுமான இப் ப்ரஹ்மத்தின் இடத்து எப்போது இவன் அபயார்த்தமாக நிலை பெறுதலை அடைகிறானோ
அதன் பிறகு அபயத்தை அடைந்தவன் ஆகிறான் –
பராவர வஸ்துவாகிய அந்த ப்ரஹ்மம் ஆனது சாஷாத் கரிக்கப் பட்ட உடன்
ஹிருதயத்தில் உள்ள முடிச்சு -அவித்யை -பிளக்கப் படுகிறது –
எல்லா சம்சயங்களும் அறுக்கப் படுகின்றன –
இவனுடைய கர்மங்கள் எல்லாம் நாசம் அடைகின்றன –
ப்ரஹ்மத்தை அறிகிறவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான் –
அப் பரம புருஷனை இவ் வண்ணம் அறிந்தவன் அவித்யையைக் கடக்கிறான் -வேறு வழி கிடையாது –
இது முதலான சுருதிகள் –
அஷரம் தமசீ லீயதே
விஞ்ஞான -விவிதம் ஜ்ஞாயதே அநேன –
————————————————————————————————
இவ்விடத்தில் மிருத்யு சப்தத்தால் அவித்யை கூறப்படுகிறது
இந்த விஷயத்தில் பிரமாணம் சனத் ஸூ ஜாத வசனம் -பிரமாதத்தையே மிருத்யு என்று நான் சொல்லுகிறேன்
எப்போதும் அபிரமாதத்தை -ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிதலை -மோஷம் என்று சொல்லுகிறேன் –
ப்ரஹ்மம் ஆனது அசத்தியத்தின் நின்றும் ஜடத்தின் நின்றும்
தேச காலங்களால் பரிச்சின்னமான வஸ்துவின் நின்றும் வ்யாவ்ருத்தம் ஆனது –
விஞ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –இது முதலிய வாக்யங்களால்
நிச்சயிக்கத் தக்க
நிர்விசேஷ ஸ்வரூப ப்ரஹ்மாத்மைகத்வ விஞ்ஞானமும்
பின்பு அது வேறு நான் வேறாக இருக்கிறேன் என்று எண்ணி எவன் தேவதையை
தன்னிலும் வேறாக உபாசிக்கிறேனோ அவன் அந்த ப்ரஹ்மத்தை அறிகிறான் இல்லை –
இவன் அபூர்ணன் அன்றோ -தான் என்றே உபாசிக்கக் கடவன் –
நீ அந்த ப்ரஹ்மமாகவெ இருக்கிறாய்
ஹே பகவன் தேவதையே நான் தான் நீ ஆகிறாய்
ஆகையால் நான் என்பவன் யாரோ அவன் தான் அந்த பரமாத்மா
எவன் அந்த பரமாத்மாவோ அவன் தான் நான் ஆகிறேன்
என்கிற இது முதலிய வாக்யங்களால் சித்தம் –
இதையே சூத்திர காரரும் கூறப் போகிறார் –
ஆத்மேதி தூபகச சந்தி க்ராஹயந்திச -தான் என்றே உபாசிக்க வேண்டும் –
அவ்வண்ணம் அல்லவோ முமுஷூக்கள் உபாசிக்கிறார்கள் –
அவ்வாறே சாஸ்திரங்களும் உபதேசிக்கின்றன என்று
அப்படியே வாக்ய காரரும் -ஆதமேதயே வது க்ருஹ்ணீயாத் சர்வச்ய தன்நிஷ்பததே –
ஆத்மா வென்றே கிரஹிக்க வேண்டும் -எல்லாம் அங்கே கல்பிதமாக இருப்பதால் -என்று
இந்த ப்ரஹ்மாத்மைகத்வ விஞ்ஞானத்தால்
மித்யா ரூபமானதும்
காரணத்துடன் கூடியதுமான பந்தத்துக்கு நிவ்ருத்தி உக்தம் ஆனதே-
பிரமாதம் -உள்ளபடி வஸ்துவை அறியாமை —
————————————————————————————————
ஐயா பிரத்யஷ விருத்தமான சகல பேத நிவ்ருத்தி யானது
எவ்வாறு சாஸ்திர ஜன்ய ஜ்ஞாநத்தினால் உண்டு பண்ணப் படும்
இது பழுதை பாம்பு அல்ல என்கிற ஜ்ஞாநத்தினால் பிரத்யஷ விருத்தையான சர்ப்ப நிவ்ருத்தி எவ்வாறு செய்யப் படலாம் –
அங்கு இரண்டு பிரத்யஷங்களுக்கு விரோதம் –
இங்கேயோ பிரத்யஷ மூலமான சாச்த்ரத்துக்கும் பிரத்யஷத்திற்கும் விரோதம் என்றால்
துல்யங்களான இரண்டுக்கும் விரோதம் வரின்யெவ்வாரு பாத்ய பாதக பாவம் –
பூர்வ உத்தரங்கள் இரண்டுக்கும் துஷ்ட காரண ஜன்யத்வமும்
தத் பாவமும் ஆகிற இவைகளால்
என்று கூறப் படுமே யானால் சாஸ்திரம் பிரத்யஷம் இவை இரண்டுக்கும் இந்த நியாயம் சமானம் –
————————————————————————————————
இது சொல்லப் பட்டது ஆகிறது –
பாவய பாவக பாத்தில் துல்யத்வம் -சாபேஷ்த்வம் -நிரபேஷத்வம் -முதலியது காரணம் அன்று –
ஜ்வாலபேத அனுமானத்தால் –
பிரத்யஷத்துக்கு பாவய பத்வம் ஆனது உண்டாகாமல் போக வேண்டி இருப்பதால்
அவ்விடத்திலோ என்னில் பிரத்யஷத்தால் ஜ்வாலை ஓன்று என்று அறியப் படுகிறது –
ஆனது பற்றி இரண்டு பிரமாணங்களில் விரோதம் வரின்
எது சம்பவிக்கக் கூடிய அந்யதா சித்தி உடன் கூடியதோ அது பாவ்யம்
அனந்யதா சித்தமாயும் அவகாசம் இல்லாதாகவுமாய் இருக்கிற மற்றது பாவகம் என்று
எல்லா இடத்திலும் பாவய பாவக பாவ நிர்ணயம் –
ஜ்வாலை திருஷ்டாந்தம் -மூல மூலி-கார்யம் காரண பாவம் –
விளம்ப அவிளம்பங்களும்-உண்டு
த்வயா -யத்சம்ஹாவ்யமா அனந்யதா சித்தம் – இதி சர்வத்ர –
ஆதலால் ஆதியும் அந்தமும் இல்லாததும் தொடர்ச்சி யாகவும் இருந்து வருகிற சம்ப்ரதாயம் உள்ளதும்
தோஷ கந்தம் இல்லாததும் அவகாசம் அற்றதுமான சாஸ்த்ரத்தினால் உண்டாகக் கூடிய
நிர்விசேஷ நித்ய சுத்த முக்த புத்த ஸ்வ பிரகாச சின் மாத்ர
ப்ரஹ்மாத்ம பாவ ஜ்ஞாநத்தினாலே
சம்பாவ்யமான தோஷத்துடன் கூடியதும் சாவகாசமாகவுமாய் இருக்கிற
பிரத்யஷாதி சித்தமான பற்பல விகல்ப ரூபமான பந்தம் நிவ்ருத்தி யாவது உக்தமே –
பற்பல விகல்பம் பேதம் உள்ள பிரபஞ்ச ராஹியான பிரத்யஷதிற்கு
அநாதி பேத வாசனாதி ரூபமான அவித்யை என்கிற பெயர் உள்ள தோஷமானது சம்பவிக்கக் கூடியதே –
அநாதி நிதான விச்சின்ன சம்ப்ரதாய -அநாதி நிதானம் ப்ரஹ்ம
நிர்விசேஷ -நித்யம் –சுத்தம் -முக்த – ஸ்வ பிரகாச -ப்ரஹ்மாத்மபாவா –
ஐயா -ஆதி அந்தம் இல்லாமல் அவிச்சின்ன சம்ப்ரதாயதுடன் கூடி இருப்பதால் தோஷம் இல்லாமல் இருந்த போதிலும்
ஜயோதிஷ்டோமேன ஸ்வர்க காமோ யஜதே –என்கிற இது முதலான பேதத்தை அவலம்பித்து இருக்கிற
சாஸ்தரத்துக்கு பாத்யத்வம் பிரசங்கிக்குமே எனில் -உண்மை தான்
பூர்வாபரா பச்சேததில் பூர்வ சாஸ்த்ரத்தை போலே மோஷ சாஸ்தரத்துக்கு அவகாசம் இல்லாமையால்
அந்த மோஷ சாஸ்த்ரத்தினால் பேத அவலம்பியான சாஸ்திரம் -பாதிக்கவே படுகிறது –
வேதாந்த வாக்யங்களிலும் பர ப்ரஹ்மம் நிர்குண மாக இருப்பதால்
சகுண ப்ரஹ்ம உபாசன சாஸ்த்ரங்களுக்கு இதுவே நியாயம் –
ஐயா -யஸ் சர்வஞ்ஞ்-சர்வவித
பராஸ்ய சக்திர் விவியைவ ஸ்ருயதே ச்வாஹாவி கீஜ்ஞான
சபலகிரியாசா
சத்யகாம சத்ய சங்கல்ப –
எவன் எல்லாவற்றையும் சாமான ஆகாரத்தாலும் அறிகிறானோ
எல்லாவற்றையும் விசேஷித்து அறிகிறானோ
இவனுக்கு -பர ப்ரஹ்மதிற்கு -சிறந்த சக்தியானது பற்பல விதமாக ஸ்ருதியினால் கூறப் படுகிறது
ஜ்ஞானம் பலம் கிரியை இவைகள் எல்லாம் ஸ்வ பாவ சித்தமாக இருக்கிறது –
சத்யமான காமம் உள்ளவன் -சத்யமான சங்கல்பம் உள்ளவன் –
இது முதலிய ப்ரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபிக்கும் நோக்கு உடைய சாஸ்திரங்கள்
எவ்வாறு சாதிக்கத் தக்கதாகும்
நிர்குண வாக்யங்கள் உடைய சாமர்த்தியத்தால் -என்று சொல்லுகிறோம் –
இது சொல்லப் பட்டதாகிறது
அஸ்தூலம் அநணு அஹரச்வம் அதீர்க்கம் –
பொருத்தமாக இராததும் அணுவாக இல்லாததும் குட்டையாக இல்லாததும் நீண்டும் இராததும் ப்ரஹ்ம
சத்யம் ஜ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம
அசத்திய ஜடமாய் இருக்கும் வஸ்துகளின் நின்று வ்யாவ்ருத்தம் தேசக கால வஸ்துக்களால் அபரிச்சின்னமாயும்
நிர்குணம் நிரஞ்ஜனம் –
குணா சூன்யமாயும் கர்ம சம்பந்தம் இல்லாதாயும் இருக்கும்
இது முதலான வாக்யங்கள்
ப்ரஹ்மத்தை எல்லா விசெஷனங்களில் நின்றும் விடுபட்டதாகவும்
கூடஸ்தமாயும் -ஸ்திரமாயும் –
நித்தியமாயும் இருக்கிற சைதன்யம் என்று பிரதிபாதிக்கின்றன
மற்றவைகளோ சகுண ப்ரஹ்மத்தை பிரதிபாதிக்கின்றன –
இரண்டு வித வாக்யங்களுக்கும் விரோதம் வரின்
அந்த அபச்சேத நியாயத்தாலே
நிர்குண வாக்யங்கள் குணங்களை அபேஷித்து இருப்பது பற்றி பிற்பட்டவையாய் இருப்பதால்
அதிக பலம் உள்ளது -ஆதலால் ஒரு குறைவும் இல்லை –
ஐயா சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்கிற இடத்தில் சத்யம் ஜ்ஞாநாதி குணங்கள் ஆரியப் படுகின்றன
மறுமொழி -அல்ல என்று கூறப் படுகிறது
சாமாநாதி கரண்யத்தினால் ஏகாரத்த தத்வம் அறியப் படுவதால் – –
அநேக குணங்கள் உடன் கூடிய வஸ்துவை சொன்ன போதிலும்
ஏகார்த்தம் விருத்தம் அன்று என்று சொல்லப் படுமே யானால்
அபிதானத்தை-சப்த சுத்தியை – அறியாத நீ -அஜம் தான்
ஏகார்த்தம் ஆவது எல்லா பதங்களுக்கும் அர்த்த ஐக்யம் –
விசிஷ்ட பதார்த்தை சொல்லும் இடத்தில் விசேஷண பேதத்தால் பதங்களுக்கு அர்த்த பேதம் விடத் தக்கது அன்று –
ஆகவே ஏகார்த்தம் சித்தியாது
இங்கனம் ஆகில் விசேஷம் இன்றி ஒரு அர்த்தத்தையே உணர்த்துவதால்
எல்லா பதங்களும் பர்யாயங்களாக ஆகட்டும்
ஒரு அர்த்தத்தை உணர்த்துவதாக இருந்த போதிலும்
அபர்யாயத்வத்தை கவனம் உள்ள மனத்துடன் கேள்
ஏகத்வ தாத்பர்யம் நிச்சயம் இருப்பதால் ஒரு அர்த்ததிற்கே அந்த அந்த பதார்த்த விரோதிகளுக்கு
பிரத்யநீகதையில் -விரோதியாய் இருத்தலில் -நோக்கு இருப்பதால்
எல்லா பதங்களுக்கும் அர்த்தத்வமும் ஏகார்த்வமும் அபர்யாயத்வமும் சித்திக்கிறது
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானா மேக்ஸ் மின்னர்த்தே
வ்ருத்திஸ் சாமாநாதி கரண்யம்
– நடதூர் அம்மாள் பிரமேய மாலை –
இது சொல்லப் பட்டது ஆகிறது –
இலக்கணத்தால் அறியத் தக்க ப்ரஹ்மம் ஆனது இதர பதார்த்தங்கள் எல்லா வற்றுக்கும் விரோதி ரூபமாய் இருக்கிறது
அந்த ப்ரஹ்ம விரோதிகளான வஸ்துக்களின் ரூபங்கள் அனைத்தும்
இம் மூன்று பதங்களால் பலித்த அர்த்தத்தால் நிரசிக்கப் படுகிறது –
அவற்றுள் -சத் பதமானது -விகாராஸ்பதமாக இருப்பதால் அசத்திய வஸ்துவைக் காட்டிலும்
வ்யாவ்ருதமான ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது
ஜ்ஞான பதமும் அந்யாதீன பிரகாசமான ஜட ரூப வஸ்துவைக் காட்டிலும் வேறாக இருக்கிற ப்ரஹ்மத்தை பிரதிபாதிக்கிறது –
அநந்த பதமும் தேசத்தாலும் காலத்தாலும் வச்துவாலும் பரிச்சின்ன வஸ்துக்களைக் காட்டிலும்
வ்யாவருதமான வஸ்துவை பிரதிபாதிப்பதில் நோக்கு உள்ளது –
வ்யாவிருத்தி யானது பாவ ரூபமாகவோ அபாவ ரூபமாகவோ இருக்கிற தர்மம் அல்ல –
பின்னையோ என்னில் சகலமான இதர வஸ்துக்களுக்கு விரோதியாய் இருக்கிற ப்ரஹ்மமே –
எவ்வாறு வெண்மை முதலியவற்றுக்கு கருமை முதலிய நிரன்கைன் வ்யாவ்ருதி யானது அந்த பதார்த்த ஸ்வரூபமே தானோ
வேறு தர்மம் அல்லவோ -இவ்வாறே இம் மூன்று பதங்களும் ஒரு வஸ்துவுக்கே சகல இதர விரோதியான ஆகாரத்தை அறிவித்து
நிரம்ப பிரயோஜனம் உடையதாகவும் –
இது சொல்லப் பட்டது ஆகிறது –
இலக்கணத்தால் அறியத் தக்க ப்ரஹ்மம் ஆனது இதர பதார்த்தங்கள் எல்லா வற்றுக்கும் விரோதி ரூபமாய் இருக்கிறது
அந்த ப்ரஹ்ம விரோதிகளான வஸ்துக்களின் ரூபங்கள் அனைத்தும்
இம் மூன்று பதங்களால் பலித்த அர்த்தத்தால் நிரசிக்கப் படுகிறது –
அவற்றுள் -சத் பதமானது -விகாராஸ்பதமாக இருப்பதால் அசத்திய வஸ்துவைக் காட்டிலும்
வ்யாவ்ருதமான ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது
ஜ்ஞான பதமும் அந்யாதீன பிரகாசமான ஜட ரூப வஸ்துவைக் காட்டிலும் வேறாக இருக்கிற ப்ரஹ்மத்தை பிரதிபாதிக்கிறது –
அநந்த பதமும் தேசத்தாலும் காலத்தாலும் வச்துவாலும் பரிச்சின்ன வஸ்துக்களைக் காட்டிலும்
வ்யாவருதமான வஸ்துவை பிரதிபாதிப்பதில் நோக்கு உள்ளது –
வ்யாவிருத்தி யானது பாவ ரூபமாகவோ அபாவ ரூபமாகவோ இருக்கிற தர்மம் அல்ல –
பின்னையோ என்னில்
சகலமான இதர வஸ்துக்களுக்கு விரோதியாய் இருக்கிற ப்ரஹ்மமே ஏகார்த்தங்கள் ஆகவும்
அபர்யாயங்கள் ஆகவும் இருக்கின்றன –
ஆகையால் ப்ரஹ்மம் ஒன்றே ஸுயம் ஜ்யோதிஸ் ஆகவும்
சகல விசேஷங்கள் அற்றதாயும்
இருக்கிறது என்று சொல்லப் பட்டது ஆகிறது –
இவ்வண்ணமாக வாக்யார்த்த பிரதிபாதனம் இருந்தால் தான்
சதேவ சோம்யே –ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
இவை முதலியவைகளோடு ஒரு ஐகார்த்த்யம் சித்திக்கும் –
யதோவா இமானி பூதானி ஜாயந்தே –
சதேவ சோம்யே –ஆஸீத் –
ஆத்மாவா இதமேக ஏவாக்ர ஆஸீத் -இவை முதலியவைகளால் –
ஜகத் காரணமாக உப லஷிக்கப் பட்டு இருக்கிற ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இது என்று கூறப் படுகிறது –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்று
அதில் சர்வசாகா பிரத்யய நியாயத்தாலே காரண வாக்யங்கள் எல்ல வற்றிலும்
சஜாதீய விஜாதீய வ்யாவிருதமாயும்
அத்விதீயமாகவும் ப்ரஹ்மம் அறியப் பட்டு இருக்கிறது –
ஜகத் காரணமாக உப லஷிக்கப் பட்டதும் -அத்விதீயாமாயும்
இங்கு பிரதிபாதிக்கப் பட வேண்டிய ப்ரஹ்ம ஸ்வரூபம் ஆனது
முற்கூறிய அந்த லஷணதிற்கு விரோதம் இன்றி சொல்லத் தக்கது –
அத்விதீயத்வ சுருதியானது குணங்களாலும் சத்விதீய தையை சஹிக்கிறது இல்லை –
அப்படி இல்லா விடில் நிரஞ்ஜனம் நிர்குணம் -இவை முதலியவைகளோடு விரோதம் சம்பவிக்கும் –
அதனாலும் இந்த லஷண வாக்கியம் ஆனது -அகண்டைக ஸ்வ பாவத்தையே பிரதி பாதிக்கிறது –
————————————————————————————————-
காரண வாக்யங்கள் –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித்
யஸ்ய ஜ்ஞான மயம் சுப
தஸ்மாத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே
தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் –
சகாரணம் கரணாதி பாதிப –
————————————————————————————
இன்னும் ஐயா
சத்ய ஜ்ஞான பதங்கள் -தன அர்த்தத்தை இழந்து -ஸ்வார்த்த விரோதிகளின் நின்று வேறு பட்டு இருக்கிற வஸ்து ஸ்வரூபத்தை
உணர்த்துவதில் நோக்கு உள்ளவைகளாக ஆகின்றன என்று சொன்னால் லஷணை ஏற்படுமே -எனில் -உத்தரம் –
இது தோஷம் அல்ல -அபிதாந விருததியை விட தாத்பர்ய விருத்தியானது அதிக பலம் உள்ளதாக இருப்பதால் –
சாமாநாதி கரண்யதிற்கு ஐக்யத்திலே தாத்பர்யம் எனபது எல்லார்க்கும் சம்மதம்
ஐயா எல்லா பதங்களுக்கும் லஷணை யானது எங்கும் காணப் பட்டு இருக்க வில்லையே என்றால்-அதனால் என்ன –
வாக்ய தாத்பர்யத்துக்கு விரோதம் இல்லா விடில் ஒரு பத்துக்கும் கூட லஷணை காணப் பட்டது இல்லை –
சேர்ந்து பிரயோகிக்கப் பட்டு இருக்கிற பதங்களின் சமுதாயத்துக்கு இது தாத்பர்யம் என்று
நிச்சயிக்கப் பட்டு விட்டால் அந்த தாத்பர்யதிற்கு விரோதம் இல்லாமல் இருப்பதற்காக
இரண்டு பதங்களுக்கோ மூன்று பதங்களுக்கோ எல்லா பதங்களுக்குமோ ஏதாயினும்
ஒரு பதத்தைப் போலே லஷனையை கற்பிப்பது தோஷத்தின் பொருட்டு ஆகாது –
அவ்வண்ணமே சாஸ்த்ரத்தில் நிலை பெற்றவர்களால் ஒப்புக் கொள்ளப் படுகிறது –
கார்யரூப வாக்யார்த்த வாதிகளால் லௌகிக வாக்யங்களில் எல்லா பதங்களுக்கும் லஷணை ஆஸ்ரயிக்கப் படுகிறது –
ஏன் எனில் அபூர்வமான கார்யத்தை லிங் முதலியவைகளே
முக்கிய விருத்தியினால் பிரதிபாதிப்பதால்
லிங் முதலியவைக ளால் க்ரியா கார்யம் லஷனையினால் பிரதிபாதிகப் படுகிறது –
கார்யதுடன் அன்வயித்து ச்வார்த்தத்தை சொல்லுகிற மற்ற பதங்களுக்கும் அபூர்வ கார்யாந்விதமே முக்யார்த்தம் ஆதலால்
க்ரியா கார்ய அந்விதா பிரதிபாதனம் லாஷணிகமே
ஆகையால் வாக்ய தத்பர்யத்தின் விரோதம் வாராமல் இருப்பதற்காக
எல்லா பதங்களுக்கும் லஷணை கல்ப்பிப்பதும் தோஷம் ஆகாது
ஆதலால் இந்த அர்த்த சமூஹத்தையே பிரதிபாதனம் செய்கின்ற வேதாந்தங்கள் பிரமாணம் –
———————————————————————————————–
ஐயா பிரத்யஷம் முதலிய வற்றோடு விரோதம் வரின் சாஸ்தரத்துக்கு பிராபல்யம் உரைக்கப் பட்டது
விரோதம் வந்தால் அன்றோ பிராபல்யம் சொல்லத் தக்கது –
விரோதமே காணப் படவில்லை -பிரத்யஷதிற்கு நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தை கிரஹிக்கும் தன்மை வைந்து இருப்பதால் –
அய்யா -குடம் உள்ளது -வஸ்த்ரம் உள்ளது -என்று நாநாவித வஸ்துக்களை விஷயமாக கொண்ட
பிரத்யஷம் ஆனது எவ்வாறு சின்மாத்திர க்ராஹி என்று சொல்லப் படுகிறது –
பேத வஸ்துக்களை கிரஹணம் இல்லா விடில் எல்லா ஜ்ஞானங்களுக்கும் விஷயம் ஒன்றாக இருப்பதால்
யாராவாஹிக விஞ்ஞானம் -போலே ஒரே வ்யவாஹரத்திற்கு ஹெதுத்வமே இருக்க வேண்டியதாக ஆகுமே
சரிதான் -அப்படியே இங்கே விவேசனம் செய்யப் படுகிறது –
குடம் உள்ளது என்ற இடத்தில் அஸ்தித்வமும் இருப்பும் –
அதின் வேற்றுமையும் வியவஹரிகப் படுகிறது –
இரண்டு வ்யவஹாரங்களுக்கும் பிரத்யஷ மூலத்வம் சம்பவியாது –
அவை இரண்டும் பின்ன காலங்களில் உண்டாகிற ஜ்ஞானங்களுக்கு பலனாக இருப்பதால்
ஏன் எனில் பிரத்யஷ ஜ்ஞானம் ஆனது ஒரு ஷணமே நிலை பெற்று இருப்பதால் –
அந்த ஏக ஷன வர்த்தி ஜ்ஞானத்தில் ஸ்வரூபமோ அல்லது பேதமோ பிரத்யஷதிற்கு விஷயம் என்று பகுத்து அறியத் தக்கது –
பேத க்ரஹனம் ஆனது ஸ்வரூப க்ரஹனத்தையும் அதனுடன் அதன் பிரதியோகி ஸ்மரணததையும்
அபேஷித்து இருப்பதனாலேயே ஸ்வரூப விஷயத்வம் அவசியம் ஆஸ்ரயிக்கத் தக்கது ஆதலால்
பேதம் பிரத்யஷத்தால் கிரஹிக்கப் படுகிறது இல்லை –
ஆகையால் பேத வ்யவஹாரம் பிராந்தி மூலமே –
—————————————————————————————————-
மேலும் பேதம் என்கிற ஒரு பதார்த்தம் ஆனது நியாயத்தை அறிந்தவர்களால் நிரூபிப்பதற்கு சகயம் ஆகாது –
பேதமானது வஸ்து ஸ்வரூபம் அன்று
வஸ்து ஸ்வரூபம் கிரஹிக்கப் பட்டால் ஸ்வரூப வ்யவஹாரம் போல்
எல்லா வற்றைக் காட்டிலும் பேதம் என்கிற வியவஹாரம் பிரசங்கிக்க வேண்டியது ஆகும்
ஸ்வரூபம் கிரஹிக்கப் பட்டு இருந்த போதிலும் -பின்ன -என்கிற வ்யவஹாரம் எத்தைக் காட்டிலும் வேறு பட்டு இருக்கிறது என்று
பிரத்யோகியின் ஸ்மரண்த்தை அபெஷிது இருப்பதால் அந்த பிரதியோகிபதார்த்தத்தின் ஸ்மரணம் இல்லாமையாலே
அப்பொழுதே பேத வ்யவஹாரம் உண்டாகிறது இல்லை என்று சொல்லத் தக்கது இல்லை –
ஏன் எனில் ஸ்வரூபம் மாதரத்தை பேதமாக சொல்லுமவனுக்கு பிரதியோகியின் அபேஷையானது
உத்ப்ரேஷிக்கத் தக்கது அன்று –
ஸ்வரூபம் பேதம் இரண்டுக்கும் ஸ்வரூபத்வம் விசேஷம் இன்றி இருப்பதால்
எவ்வாறு ஸ்வரூப வ்யவஹாரம் பிரதியொகியை அபெஷிக்கிரது இல்லையோ –
பேத வ்யவஹாரமும் அப்படியே ஆகும் –
ஹஸ்த கர -எனபது போலே கட பின்ன -என்கிற இரண்டும் பர்யாயங்களாக வேண்டி வரும் –
அந்த பேதம் தர்மமும் அன்று
தர்மமாக ஒப்புக் கொண்டால் அதற்கு ஸ்வரூபத்தைக் காட்டிலும் பேதம் -வேறுபாடு -அவசியம் ஒத்துக் கொள்ளத் தக்கது –
அப்படி இல்லா விட்டாலும் ஸ்வரூபம் ஆகவே ஆகும் –
அந்த தர்மத்திற்கு ஸ்வரூபத்தை அபேஷித்து பேதம் ஒத்துக் கொள்ளப் பட்டால்
அதற்கும் ஸ்வரூபதிற்கும் உள்ள பேதம் அதனுடைய தர்மம் என்று அனவஸ்தை ஏற்படும்
மேலும் ஜாத்யாதி விசிஷ்ட வஸ்து கிரஹணம் வரின் -பேத கிரஹணம்
பேத கிரஹணம் வரின் ஜாத்யாதி விசிஷ்ட வஸ்து கிரஹணம் என்று
அந்யோந்ய ஆச்ரயண தோஷம் சம்பவிக்கும்
ஆதலால் பேதம் எவ்விதத்திலும் நிரூபிக்க முடியாது ஆதலால்
பிரத்யஷம் சன்மாத்ரதிற்கே பிரகாசகம் –
———————————————————————————————–
மேலும்
கடம் இருக்கிறது படம் இருக்கிறது கடம் அனுபவிக்கப் படுகிறது படம் அனுபவிக்கப் படுகிறது
என்கிற வ்யவஹாரங்களில் எல்லா பதார்த்தங்களும்
சத்தை அநுபூதி -இவைகளோடு கூடியவைகளாகவே காணப் படுகின்றன –
இங்கு எல்லா பிரதிபத்திகளிலும் சன்மாத்ரம் அனுவர்தமாக காணப் படுகிறது ஆதலால் அதுவே பரமார்த்தம்
விசேஷங்களோ விலகுவது ஆதலால் அபரமார்த்தங்கள் –
ராஜாஜ்வாதிகளைப் போலேயும் சர்ப்பாதிகளைப் போலேயும் –
ரஜ்ஜு வானது அதிஷ்டானமாக இருப்பதால் தொடர்ந்து வந்து கொண்டு பரமார்த்தமாய் இருக்கிறது –
வ்யாவர்த்த மானங்களான-சர்ப்பம் பூமியின் பிளப்பு -ஜலதாரை முதலியவைகள் அபரமார்த்தங்கள் —
ஐயா ரஜ்ஜு சர்ப்பம் முதலியதில் இது ரஜ்ஜு சர்ப்பம் அல்ல இது முதலிய ரஜ்வாதி அதிஷ்டானங்களில்
யாதார்த்த ஜ்ஞானத்தால் பாதிதம் ஆதலால்
சர்ப்பாதிகளுக்கு அபரமார்த்தமே ஒழிய வ்யவர்த்தமானத்வத்தால் அல்ல
ராஜ்வாதிகளுக்கும் பாரமார்த்யம் ஆனது -அனுவர்த்தமானத்வத்தால் அல்ல
பின்னையோ அபாதிபத்வத்தால் தான்
இவ்விடத்திலோ அபாதிதங்களானகடாதிகளுக்கு அபாரமார்த்யம் எங்கனம் -உத்தரம் சொல்லப் படுகிறது –
கடம் முதலியவற்றில் வயாவிருததியானது காணப் பட்டு இருக்கிறது அது எவ்விதமான ஸ்வரூபம் உள்ளது என்று விவேசனம் செய்யத் தக்கது –
கடோச்தி -என்கிற இடத்தில் படாதிகளின் அபாவம் இருக்குமே ஆகில் அபொழுது
கடோச்தி என்கிற இந்த வ்யவாஹரத்தால் படாதிகளுக்கு பாதித்வம் சித்தம் –
ஆதலால் பல பூதையான விஷய நிவ்ருத்தி தான் வ்யாவ்ருத்தி
அது வ்யாவர்த்த மானங்களுக்கு அபாரமார்த்யத்தை சாதிக்கிறது
ரஜ்ஜு போலே சன்மாத்ரம் அபாதிதமாக அனுவர்த்திக்கிறது
ஆதலால் சத் ஒன்றை தவிர்த்து அதிகமாக இருக்கிறவை எல்லாம் அபரமார்த்தம்
பிரயோகம் இருக்கிறது -பிரயோகம் -பஷம் -சாத்தியம் ஹேது-மூன்றுடன் கூடிய அனுமானம்
சத் -பரமார்த்தம் – நீங்காமல் இருப்பதால் -ரஜ்ஜூ சர்ப்பாதிகளில் ரஜ்ஜூ முதலியது போலே
கடாதிகள் அபரமார்தங்கள் -விலகுவனவாக இருப்பதால்
ராஜசூவாதிகளை அதிஷ்டானமாக உடைய சர்ப்பாதிகளைப் போலே-என்று
இங்கனம் அனுவர்த்தமான அனுபூதயே பரமார்த்தம்
அதுவே சத்பதார்தம்
—————————————————————————————————-
மேலும்
சன்மாத்ரம் அனுபூதிக்கு விஷயமாக இருப்பதால் -அதைக் காட்டிலும் வேறானது என்றால் -இப்படி அல்ல பேதம் ஆனது
பிரத்யஷதுக்கு விஷயமாக இல்லாமையாலும்
எவ்விதத்திலும் நிரூபிப்பதற்கு முடியாமையாலும்
முன்பே நிரசிக்கப் பட்டு விட்டது –
அதனாலேயே சத்துக்கு அநுபூதி விஷயத்வமும் கூட பிரமாண மார்க்கத்தை அனுசரிக்கிறது இல்லை —
ஆதலால் சத் எனபது அனுபூதியே –அதுவும் சவதஸ் சித்தமாய் உள்ளது -அனுபூதியாக இருப்பதால்
மற்று ஒன்றால் சித்திக்கும் பஷத்தில் கடம் முதலிய வஸ்துக்களைப் போலே அனநுபூதித்வம் பிரசங்கி க்கும்
மேலும் தன இருப்பினாலேயே பிரகாசிக்கும் தன்மை உடையது ஆகையால்
அனுபூதிக்கு இதை கிரஹிப்பதற்கு சாதனமாக மற்று ஒரு அனுபவ அபேஷையும் கல்பிப்பதற்கு சக்யம் ஆகாது –
அனுபவம் ஆனது தான் இருக்கும் பொழுது ஜடமான கடம் வஸ்துக்களை அப்ரகாசமாக காணப் படுகிறது இல்லை அல்லவா
தான் இருக்கும் பொழுது எப்பொழுதாவது பிரகாசியாமல் இருந்தால் அல்லவோ
கடம் முதலிய ஜட வஸ்துக்களைப் போலே பராதீன பிரகாசம் என்று சொல்லக் கூடும்
பூர்வபஷ அனுவாதம் –
பிறகு இங்கனம் எண்ணுகிறாயோ
அநுபூதி உண்டானாலும் -இது கடம் -என்ற விஷயம் மாதரம் பிரகாசிக்கிறது –
இது கடம் -என்று அறிகிறவன் ஒருவனாவது -அப்போதே கடம் அனுபவிக்கப் படுகிறது -என்று விஷயம் ஆகாததும்
இது என்று சொல்லக் கூடாததுமான அனுபூதியையும் அனுபவிக்கிறான் இல்லை அன்றோ
ஆதலால் கடம் முதலிய வஸ்துக்களின் பிரகாச நிஷ்பத்தியில் கண் முதலிய இந்த்ரியங்களின் உடைய சந்நிகர்ஷம் ஹேதுவாய் இருக்குமா போலே –
அனுபூதியின் இருப்பே ஹேது
அதற்குப் பிறகு அர்த்தங்களை அடைந்துள்ள ஏதோ ஒரு சமயத்தில் சம்பவிக்கின்ற
பிரகாச அதிசய ரூபமான அடையாளத்தினால் அனுபூதியானது அனுமிக்கப்படுகிறது –
இங்கன் ஆகில் ஜடம் அல்லாத அனுபூதிக்கு அர்த்தங்களைப் போலே ஜடத்வமும் ஏற்பட வேண்டியது ஆகும் என்றால்
அஜடத்வம் ஆவது என்ன –
ஸ்வ சத்தையினுடைய தவறாத பிரகாசம் எனபது அல்ல –
சுகம் முதலியவற்றில் கூட அது சம்பவிப்பதால் சுகாதிகளில்
இருந்து கொண்டு இருக்கும் பொழுது
ஒரு சமயத்தில் ஆவது அறியப்படாமல் இருக்கிறது அல்லை அன்றோ
ஆதலால் அனுபூதியானது தன்னாலேயே அனுபவிக்கப் படுகிறது இல்லை
வேறு பதார்த்தத்தைத் தொடுகிற விரல் நுனிக்குத் தன்னை தொடுவது அசக்யமாய் இருப்பது போலே -என்று
அவிஷய பூதாம் அநிதம் பாவம்
அங்குள்யக்ரம் யதாத்மானம் நாத்மனா ஸப்ரஷ்டும் அர்ஹதி
ஸவாம்சேன ஜ்ஞானப்யேவம் நாத்மானம் ஜ்ஞாதும் அர்ஹதி-
விரல் நுனியானது எப்படி ஒரு அம்சத்தாலே தன்னைத் தானே தொட முடியாதோ
அப்படியே ஜ்ஞானமும் தன்னைத் தானாகவே அறிந்து கொள்வதற்கு தகுதி உள்ளது ஆகாது -என்றபடி
இங்கனம் ஜடத்வ பிரசங்க ரூபமான தாகதற்க்கு விபர்யயத்தில்
பர்யவசானம் இன்மையும்
வ்யாப்தியின் இன்மையும்
இஷ்ட பிரசங்கத்வமும்
வ்யாகாத ஸ்வரூபமான பிரதி தர்சனத்தால் அடி படுதலும் காண்பிக்கப் பட்டது –
இத்யதைவம் மநுஷே -என்று முந்தியதோடு அந்வயம் –
இவைகள் எல்லாம் அனுபவவிதத்தை ஆலோசியாமல் இருப்பவனது ஸ்வ புத்தியின் விஜ்ரும்பணம் -விகாசம் –
அனுபூதியைக் காட்டிலும் வேரையும்
விஷய தர்மமுமாய் இருக்கிற பிரகாசத்துக்கு ரூபாதிகளைப் போலே
உபலப்தி இல்லாமையால் –
இரு திறத்தார்களாலும் ஒப்புக் கொள்ளப் பட்டு இருக்கிற அனுபூதியினாலேயே ஓன்று ஒழியாமல்
எல்லா வ்யவஹாரங்களுக்கும் உபபத்தி வருவதாக இருக்க
பிரகாசம் என்கிற பெயர் உள்ள தர்மத்தை கல்ப்பிப்பது உபபன்னம் ஆகாதது ஆதலாலும்
ஆகையால் அனுபூதியானது அனுமிக்கப் படுகிறது இல்லை
வேறு ஜ்ஞானத்தாலும் சித்திப்பதும் அன்று
பின்னையோ எல்லாவற்றையும் சாதிக்கிற அனுபூதியானது தானாகவே சித்திக்கிறது –
அனுமானமும் இருக்கிறது
அது எவ்விதம் என்னில் கூறுகிறார்
அது பலமானது -மற்று ஒன்றை அபேஷிக்காமையாலே
தன்னுடைய தர்மமும் வ்யவஹாரமும் உள்ளது
வேறு பதார்தங்களில் தன் சம்பந்தத்தால் அந்த தர்மத்திற்கும்
அந்த வ்யவஹாரதிற்கும் ஹேதுவாக இருப்பதால்
எது தன சம்பந்தினால் அர்த்தாந்தரத்தில் எந்த தர்மத்திற்கும்
எந்த வ்யவஹாரதிற்கும் ஹேதுவோ
அது அந்த அந்த தர்ம வ்யாவஹாரங்களில் தன விஷயத்தில்
அநந்ய அதீனமாக காணப் பட்டு இருக்கிறது
ரூபம் முதலிய சஷூஸ் சத்வம் முதலியது போலே
ரூபம் முதலியது பிர்த்வீ முதலியதில் தன சம்பந்தத்தாலெ
சஷூஷத்வம் முதலிய தை உண்டு பண்ணா நின்று கொண்டு
தான் புலப்படுவது முதலியதில் வேறு
ரூபாதிகளை அபேஷிக்கிறது இல்லை –
ஆகையால் அனுபூதியானது தன்னுடைய பிரகாச மானத்வ தர்மத்திலும் பிரகாசிக்கிறது
என்கிற வ்யவஹாரத்திலும் தானே ஹேது
அப்படிப்பட்ட இந்த ஸ்வயம் பிரகாச அனுபூதியானது நித்யை-ஏன் எனில்
ப்ராகபாவம் முதலியவை இல்லாமையால் –
அந்த முன் இல்லாமையின் அபாவமும் ச்வத சித்தமாக இருத்தலாயே-
ஸ்வ சித்தையான அனுபூதிக்கு ப்ராகபாவம் ஆனது தன்னால் ஆவது மற்று ஒன்றினால் ஆவது அறிவதற்கு சக்யம் ஆகாது அன்றோ –
அனுபூதியானது தன்னுடைய அபாவத்தை தெரிவிக்கிறதாக இருக்குமே யாகில்
நிச்சயமாக தான் இருந்து கொண்டு தெரிவிக்க முடியாது –
அது இருக்குமே ஆகில் அது இல்லை என்றால் விரோதம் வரும் ஆகையாலே அதற்கு அபாவம் இல்லை –
ஆதலால் எவ்வாறு அந்த அனுபூதியானது தன்னுடைய அபாவத்தை அறிவிக்கும்
இவ்வாறே அநுபூதி இல்லாமல் இருந்தாலும் தன்னுடைய அபாவத்தை அறிவிக்காது –
அனுபூதியானது தானே இல்லாமல் இருக்கையில் தன்னுடைய அபாவத்தில் எவ்வாறு பிரமாணம் ஆகும்
வேறு ஒன்றினால் அறிவதற்கு சக்யம் அன்று -அநு பூதியானது வேறு ஒன்றுக்கு விஷயமாக இல்லாமையால்
இதன் பிரகாபாவத்தை சாதிக்கிற பிரமாணம் ஆனது -இது அநுபூதி -என்று அனுபூதியை விஷயீ கரித்து
அதன் அபாவத்தை சாதிக்க வேண்டும்
அது சுவதஸ் சித்தம் ஆதலால் -ஐயம் -என்று விஷயீ கரிப்பதற்கு அநர்ஹமாய் இருப்பது பற்றி
அதின் பிராகபாவம் ஆனது வேறு ஒன்றினால் அறிய சக்யம் ஆகாது
ஆகையால் இதற்கு பராக பாவம் இல்லாமையால் உத்பத்தி பாவம் சொல்வதற்கு
அசக்யமாய் இருப்பது பற்றி உத்பத்தியை ஒட்டி வரும் மற்ற விகாரங்களும் அதற்கு இல்லை –
அபாவங்கள் நான்கு விதம்
பிராக பாவம் -உத்பதிக்கு முன் இல்லாத நிலை
ப்ரத்வம்சாபாவம்
அன்யோன்யாபவம்
அத்யந்தாபாவம்
உத்பத்தி இல்லாத இந்த அனுபூதியானது தன இடத்தில் பேதத்தையும் சஹிக்கிறது இல்லை
நானாத்வ வ்யாப்தமான உத்பத்திக்கு விருத்தமான அனுத்பத்தி அறியப் படுவதால் –
அனுத்பன்னமான வஸ்துவானது நானாபூதமாக காணப் படவில்லை
பேதம் முதலியவைகளுக்கு அனுபாவ்யத்வம் இருப்பதாலும்
ரூபம முதலியவற்றுக்கு போல் அநுபூதி தர்மத்வம் சம்பவியாது
ஆதலால் அனுபூதியானது அனுபவ ஸ்வரூபமாக இருப்பதினாலேயே அனுபாவ்யமான வேறு ஒரு தர்மமும் இதற்கு இல்லை –
எக் காரணத்தினால் இந்த சம்வித்தானது எல்லா பேதங்களையும் நிரசிக்கும் ஸ்வபாவம் உள்ளதோ
அதனாலேயே இந்த சம்வித்தின் ஸ்வரூபத்தைக் காட்டிலும்
வேறான ஆஸ்ரயனான ஜ்ஞாதாவன் ஒருவன் இல்லை –
ஆகையால் ஸ்வ பிரகாச ரூபையான அந்த சம்வித்தே ஆத்மா
அஜடமாக இருப்பதாலும் அநாத்மத்வ வியாபகமான ஜடத்வமானது
சம்வித்தில் இல்லாமல் இருந்து கொண்டு
அநாத்மத்வத்தையும் கூட சம்வித்தில் இருந்து விலக்குகிறது –
———————————————————————————————
அய்யா -அஹம் ஜாநாமி-என்று ஜ்ஞாத்ருத்வம் அனுபவ சித்தம் அல்லவா –
உத்தரம் இவ்வண்ணம் அல்ல -அது பிராந்தியால் தோற்றுவது -சிப்பித் துண்டுக்கு ரஜததை போலே –
அனுபூதிக்கு தனக்கு உள்ளேயே தன்னைக் குறித்து கர்த்ருத்வம் பொருந்தாது ஆகையால் –
ஆதலால் மனுஷ்யோஹம் என்று ஆத்மாவுக்கு அத்யந்தம் வெளிப்பட்ட மனுஷ்யத்வம் முதலிய
தர்மங்களுடன் கூடியதான
தேகத்தில் ஆத்மா என்றும் அபிமானம் போலே ஜ்க்னாத்ருத்வமும் சம்விதத்தில் அத்யஸ்தமாக இருக்கிறது –
ஜ்ஞாத்ருத்வம் ஆவது ஜ்ஞான கிரியை செய்தல் –
விகாரம் அடைவதாயும் -ஜடமாயும் -விகாரத்தை அடையும் த்ரவ்யமான அஹங்கார முடிச்சுக்கு உள்ளே இருப்பதையும் உள்ள அந்த ஜ்ஞாத்ருத்வமாவது
விகார சூன்யமாயும் தான் சம்பந்தப் படாமல் பார்த்துக் கொண்டு இருக்கும் சாஷியாயும் இருக்கிற சின்மாத்திர ஸ்வரூபியான ஆத்மா விடத்தில் எவ்வாறு சம்பவிக்கும் –
ரூபம முதலியது போலே -கர்த்ருத்வம் முதலியதும் அனுபவ அதீனமான
சித்தி உள்ளதாக இருப்பதினாலேயே ஆத்மாவின் தர்மம் அல்ல –
தூக்கம் மூர்ச்சை முதலிய அவஸ்தைகளில் அஹம் ப்ரத்யயம் முற்றிலும் இல்லாமல் போய் இருந்த போதிலும்
ஆத்மா அனுபவத்தை காண்பதால்
ஆத்மாவுக்கு அஹம் பிரத்யகோசரத்வம் கிடையாது –
ஆத்மாவுக்கு கர்த்ருத்வமும் அஹம் பிரத்யகோசரத்வமும்
ஒப்புக் கொள்ளப்படுமோ யாகில்
தேகத்தைப் போலே ஜடத்வம் பராக்த்வம் -அயலாருக்கு பிரகாசிப்பது -தனக்குத் தானே பிரகாசிக்காமல் —
அநாத்மதவம் முதளியாற்றின் பிரசங்கம் யெவ்விதத்தாலும் பரிஹரிக்க முடியாது –
அஹம் பிரத்யஷதிற்கு கோசரமாயும்
கர்த்தா வென்று பிரசித்தி பெற்று இருக்கிறதுமான
தேகத்தை காட்டிலும்
அதன் செய்கையின் பலனான ஸ்வர்க்கம் முதலியவற்றை அனுபவிக்கிற ஆத்மாவுக்கு
அந்யத்வம் ஆவது ப்ராமாணிகர்களுக்கு பிரசித்தமே
அவ்வாறே சாஷியான பிரத்யகாத்மா அஹமர்த்தாவான ஜ்க்னாதாவைக் காட்டிலும் விலஷணன் என்று அறியத் தக்கது –
இவ்வண்ணம் விகாரம் இல்லாத அனுபவ ஸவரூபதிற்கே
அபிவ்யஞ்சகமாக இருக்கிற அஹங்காரமானது ஜடமாக இருந்த போதிலும்
தன்னிடத்தில் இருப்பதாக அதை அபி வ்யஞ்சனம் செய்கிறது –
அபி வ்யவ்யங்களான வஸ்துக்களை தன்னிடத்தில் இருப்பதாக காட்டுவது அபி வியஞ்ஜகங்களுக்கு ஸ்வபாவம்
கண்ணாடி ஜலம் -கண்டம் -கொம்பு முறிந்த காளை -முதலியவைகள்
முகம் சந்திர பிம்பம் கோத்வம் முதலியவற்றை தன்னிடத்தில் இருப்பதாக காட்டுகின்றன –
அஹம் ஜாநாமி -என்கிற இந்த பரமம் ஆனது அதனால் உண்டு பண்ணப் பட்டு இருக்கிறது –
ஸ்வ பிரகாசையான அனுபூதைக்கு எவ்வாறு தன்னால் அபிவ்யங்கமாயும் ஜட ரூபமாயும் இருக்கிற அஹங்காரத்தால்
அபி வ்யன்க்யத்வம் கூடும் என்று ஆஷேபியாதே –
சூர்யன் உடைய கிரண சமூஹங்களால் அபிவ்யன்க்யமான
கரதலத்துக்கு
சூர்யா கிரண அபி வ்யஞ்சகத்வம் காணப் படுவதால்
ஜன்னலின் சந்து வழியே வருகின்ற சூர்யா கிரணங்களுக்கு அவைகளால் அபி வ்யன்க்யமான கர தலத்திலேயும்
ஸ்புடதர பிரகாசம் காணப் பட்டு இருக்கிறது அன்றோ
யாதொரு காரணத்தினால் -அஹம் ஜாநாமி -என்கிற ப்ரதீதியிலே ஜ்ஞாதாவான இந்த அஹம் அர்த்தமானது
சின் மாத்ர ஆத்மாவுக்கு பாரமார்த்தாக தர்மம் அன்றோ –
அக் காரணத்தினாலேயே ஸூ ஷுப்தி முக்திகலில் அன்வயிகிறது இல்லை –
அந்த ஸூ ஷுப்தி முக்திகளில் அஹம் என்கிற ஆகாரம் இல்லாமல் ஆத்மாவானது
ஸ்வா பாவிகமான அனுபவ மாத்ர ரூபமாக தோற்றுகிறது –
அதனாலேயே தூங்கி எழுந்து இருந்தவன் -சில வேளையில் என்னையும் நான் அறிந்திலேன் -என்று சொல்லுகிறான்
ஆகையால் உண்மையாகவே சமஸ்த பேத விகலபங்கள் அற்றதான
நிர்விசேஷ சின் மாதரைக ரசகூடஸ்த நித்ய ஜ்ஞானமே
பிராந்தியினால்
ஜ்ஞாத்ரு ஞேய ஜ்ஞான ரூபமான பற்பல விசித்திர பேதங்கள் உள்ளதாக திறிந்து தோற்றுதலால்
அதற்க்கு மூல பூதமான அவித்யையைப் போக்குவதற்காக
நித்ய சுத்த புத்த முக்த ஸ்வ பாவ ப்ரஹ்மாத்மைகத்வ
வித்யையை அறிவிக்கும் பொருட்டு
எல்லா வேதாந்தங்களும் ஆரம்பிக்கப் படுகின்றன –
நாஹ கல்வயமேவம் சம்ப்ரத்யாத்மானம் ஜானாத்யயம் அஹம் அஸ்மி–தூக்க விஷயமான சுருதி
அஹங்காரம் பலம் தர்பம் காமம் குரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மலஸ் சாந்தோ ப்ரஹ்ம பூயாய கலப்பதே -முக்தி விஷயமான சுருதி
புத்தம் -ஸ்வயம் பிரகாசம் முக்தம் –
உபாயம் ஆத்மைகத்வ விஞ்ஞானம்
உபேயம் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம்
நிவர்த்த்யம் மித்யா பூதம் –
என இம் மூன்றும் கர்ம விசாரத்தை அபேஷியாது என்று முன்பு
சவிஸ்தாரமாக உபபாதிக்கப் பட்டதை நிகமன கிரந்தத்தால் சுருங்க சொல்லப் பட்டதாக ஆகிறது
மகா பூர்வ பஷம் முற்றிற்று
———————————————————————————————
.கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply