ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –
அரவணையாய் ஆயர் ஏறே
நந்தகோபன் அணி சிறுவா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே
திரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே
ஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்
காலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
சீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்
தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே
யூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா –
காடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்
போன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்
யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –தென் புதுவை விட்டு சித்தன் சொல் கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கண்ணன் கழல் இணை காண்பர்களே
சுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்
ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே
இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை
ஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற
கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –
ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை
பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை
ஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்
ஆயர் தம் கொழுந்தே
கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது
ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –
————————————————————————————————————
ஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –
ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே
கற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை
ஆயர் கோவாய் நின்றான்
தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா
தாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –
கற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே
மற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –
—————————————————————————————————————————–
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
அயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே
ஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே
இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –
நிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
அங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே
ஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
ஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து
——————————————————————————————————————
நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
சேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்
ஊரா நிரை மேய்த்து ஊலகெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்
——————————————————————————————————-
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –
அரவணையாய் ஆயர் ஏறே
நந்தகோபன் அணி சிறுவா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே
திரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
சீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்
-காடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –
சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்
யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –
சுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்
ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே
இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை
ஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற
ஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்
காலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே
யூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா
நீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்
போன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்
கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –
ஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
பெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –
கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை
பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை
ஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்
ஆயர் தம் கொழுந்தே
கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது
ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –
ஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –
ஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே
கற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை
ஆயர் கோவாய் நின்றான்
தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா
தாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –
கற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே
மற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே
வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே
அயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
ஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே
ஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே
இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –
நிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே
அங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே
ஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ
கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி
நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –
ஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து
நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
சேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்
ஊரா நிரை மேய்த்து ஊலகெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்
——————————————————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
July 27, 2015 at 7:41 am |
ஸ்ரீ க்ருஷ்ணர் (பாசுரப்படி) படிக்க முயற்சித்தேன். இது பாசுரங்களின் தொகுப்பா. அல்லது பொருளுடனா. சரியாகப் பத்தி பிரித்து படிக்கத் தூண்டும் அளவு இருந்தால் ஒரு ஆர்வம் இருக்கும். படித்து முடிக்கலாம்.
அடியேன் ஸ்ரீராமாநுஜ தாஸன்.