ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –4—பால சேஷ்டிதங்கள—– மா மருதம் இறுத்த விருத்தாந்தம் அருளிச் செயல்கள் —

பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இறுத்த விப்பிள்ளை குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே –
ஒருங்கு ஒத்த விணை மருதம் உன்னிய வந்தவரை
மாய மருதும் இறுத்தவன் -காயா மலர் வண்ணன்
கள்ளச் சகடு மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே
பொய்ம்மாய மருதாண வசுரரைப் பொன்று வித்தின்று நீ வந்தாய் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் அம்மா வுன்னை யறிந்து கொண்டேன் –
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்று –
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிளம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் வுடைய விட்டோசை கேட்டான்
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்
மருப்பு ஒசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத் தலத்தே ஏறிக் குடி கொண்டு

————————————————————————————————————————————————————

எண்டிசை யோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு திண் திரல் பாட வருவான்
மருதிற நடந்து —
இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
மருதம் சாய்த்த மாலதிடம் —புள்ளம் பூதம் குடி தானே
இணை மலி மருதினொடு எருதிற இகல் செய்து —
மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே –
மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து –

——————————————————————————————————————————————————————-

பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான்
வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே –
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
மருதிடை போய் முதல் சாய்த்து –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
மருதிடை போயினாய்–என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –

——————————————————————————————————————————————————

புணர் மருதினூடு போய்ப் –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
நீ யன்றே மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து –
பகடுந்தி கீளா மருதிடை போய் –மாதுகந்த மார்வ ர்
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய்–உகந்தான் பண்டு –

———————————————————————————————————————————————–

ஒருங்கு ஒத்த விணை மருதம் உன்னிய விப்பிள்ளை குருமா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே
மாய மருதும் இறுத்தவன் -காயா மலர் வண்ணன் –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –
கள்ளச் சகடு மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன் -இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிளம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் வுடைய விட்டோசை கேட்டான்
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்
-மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து -மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே
புணர் மருதினூடு போய்ப் –சூழ் அரவப் பொங்கணையான் தோள்
நீ யன்றே மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்கா புரம் எரித்தான் எய்து –
பகடுந்தி கீளா மருதிடை போய் –மாதுகந்த மார்வ ர்
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய்–உகந்தான் பண்டு –

மருதிடை போய் முதல் சாய்த்து –தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
மருதிடை போயினாய்–என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு –என் வாசக் குழலி இழந்தது மாண்பே
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –

பொய்ம்மாய மருதாண வசுரரைப் பொன்று வித்தின்று நீ வந்தாய் -இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் அம்மா வுன்னை யறிந்து கொண்டேன் –
பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான்
வாசகமாலை கொண்டு உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே –
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத் தலத்தே ஏறிக் குடி கொண்டு வெண் சங்கே
மருப்பு ஒசித்த மாதவன் தன வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி –

—————————————————————————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading